Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 25 August 2016

முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் நன்றி

மலேசியா போல் தமிழகத்திலும் கணினிக் கல்வி மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு கணினி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் வேண்டுகோள்

மலேசியா போல் தமிழகத்திலும் கணினிக் கல்வி மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு கணினி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் எங்களின் பணிவான வேண்டுகோள்......

அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்! -பிரதமர்
கோலாலம்பூர்,

கணினி சிந்தனை மற்றும் கணிணி அறிவியல் ஆகிய பாடங்கள், அடுத்த ஜனவரி தொடங்கி பள்ளிகளின் அதிகாரப்பூர்வப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் பின் ரசாக் தெரிவித்தார்.

ஆரம்பப் பள்ளி (KSSR) மற்றும் இடைநிலைப்பள்ளி (KSSM) ஆகியவற்றின் பாடத்திட்டங்களில் அவை கட்டம் கட்டமாக இணைக்கப்ப டும் என்று இன்று பிரதமர் அறிவித்தார்.

இந்த முயற்சி, நாடு தழுவிய அளவிலுள்ள 10,173 பள்ளிகளில் பயிலும் 12 லட்சம் மாணவர்களுக்குப் பயன்தரும். அடுத்த ஆண்டு ஜனவரியில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் தொடங்கப்படும். இடைநிலைப்பள்ளிகளில் முதலாம் படிவம் தொடங்கி நான்காம் படிவம் வரையில் அடுத்த ஆண்டில் அடிப்படைக் கணினி அறிவியல் பாடம் ஆரம்பிக்கப்படும்.

இத்தகைய பாடத்திட்டம் ஏற்கெனவே பல நாடுகளில் ஆரம்பமாகி விட்டது. அதைத்தான் நாம் அறிமுகப்படுத்துகிறோம். அமெரிக்கா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கணினி அறிவியல் அவர்களின் பள்ளிப் பாடத்திட்டத்தில் இணை க்கப்பட்டு விட்டது என்று பிரதமர் நஜிப் தெரிவித்தார்.

தென் கிழக்காசியாவில் அத்தகைய பாடத்தை கல்வித் திட்டத்தில் இணைப்பதில் மலேசியா முதல் நாடாக விளங்கவிருக்கிறது என்றார் அவர்.

இதே போல் இந்தியாவிலே தமிழகத்திலும் கணினிக் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்க
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் அனைத்து அரசு பள்ளிகளிலும் கணினிக் கல்வியை கொண்டவர வேண்டும் இதனால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் பயன்பெறுவர்கள்...

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.

பள்ளிக்கல்வி - ஊக்க ஊதிய உயர்வு - அனைத்து வகை ஆசிரியர்கள் (தொழிற்கல்வி ஆசிரியர்கள் தவிர) ஊக்க ஊதியம் வழங்குவது சார்பான இயக்குனரின் தெளிவுரை3 ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ., நல்லாசிரியர் விருது

தமிழகத்தில், மூன்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் உட்பட, 34 பேருக்கு, சி.பி.எஸ்.இ., நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

 முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டி, செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்நாளில், சிறந்த ஆசிரியர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக விருதுகள் அறிவிக்கின்றன.

 இதில், சி.பி.எஸ்.இ., விருது கள், நேற்று அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும், 34 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில், சென்னை, அடையாறு இந்து சீனியர் செகண்டரி பள்ளி துணை முதல்வர் ஏ.காசி விஸ்வநாதன்; ஈரோடு மாவட்டம், திண்டல், வேளாளர் வித்யாலயா முதல்வர் ஏ.வி.புவனேஸ்வரி; சேலம் மாவட்டம், ஜாகிரம்மா பாளையம், செந்தில் பப்ளிக் பள்ளி முதல்வர் சி.சீனிவாசன் ஆகியோர், விருது பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

ரிலையன்ஸ் -ஜியோ இன்று வரை,. முழூநீளப்பதிவு. இலவச சிம்மை பெற முழுவதுமாக படியுங்கள் ..அறிமுகம் 4ஜி VO-LTE

அறிமுகம் 4ஜி VO-LTE
4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளது. ஏர்டெல் வோடபோன் போன்ற நிறுவனங்களும் இந்த LTE தொழில்நுட்பத்தில்தான் சேவைகளை வழங்குகின்றன. 
ஆனால் LTE ன் குறை என்னவெனில் வாய்ஸ் சப்போர்ட் இல்லாதது, எனவே 4G டேட்டாவுக்கும். வாய்ஸ் சப்போர்ட்க்கு 3G தொழில்நுட்பத்தையும் அந்த நிறுவனங்கள் பயன்படுத்தின. எனவே ரிலையன்ஸ் நிறுவனம் VO- LTE அதாவது Voice Over Long Term Evaluation தொழில்நுட்பத்தை கையில் எடுத்தது. இதில் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் பேச முடியும்,

இந்த புதிய நுட்பத்தை வெகு எளிதாக தனது பழைய CDMA டவர்களை எல்லாம் Volte க்கு மாற்றியது ரிலையன்ஸ். 800 MHz, 1800 MHz, 2300 Mhz என்ற அலைவரிசைகளில் இந்தியா முழுவதும் 22 சர்க்கிள்களில் லைசென்ஸ் பெற்றுள்ளது, எனவே 95 % கவரேஜ் கிடைக்க வாய்ப்புள்ளது. ரிலையன்ஸ் தனது ஜியோ 4ஜி சேவைகளை கடந்த டிசம்பர் 2015 ல் தொடங்கியது. ஆரம்பத்தில் தனது நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் வீடியோ கால்களுடன் மொபைலை வழங்கியது.

சோதனை ஓட்டம் Beta Testing
கடந்த ஜூலை மாதம் முதல் சாம்சங் உயர்வகை போன்களுக்கு(எ.கா) s6,s7) இலவச சிம்கார்டை 3 மாத அன்லிமிடெட் டேட்டா ,வீடியோ, வாய்ஸ் கால்களுடன் வழங்கியது ஜியோ நிறுவனம்.

LYF Mobile Volte சப்போர்ட்
ஜியோ நிறுவனம் LYF VOLTE மொபைல்களை ரூ. 3000 முதல் வழங்குகிறது, வாங்குபவர்களுக்கு 3 மாத அன்லிமிடெட் டேட்டா , வாய்ஸ் வீடியோ கால்கள் இலவசமாக கிடைக்கிறது.

JIofi2 மோடம்
ஜூலை மாதம் முதல் HP வாடிக்கையாளர்களுக்கு ரூ,2899 ல் Jio modem வழங்கப்பட்டது , இந்த மோடம் ஒரு Wifi Hotspot போல செயல்படும். ஒரே நேரத்தில் 32 Device களை இணைக்க முடியும், இதில் 6 மணிநேரம் செயல்படும் பேட்டரி உள்ளது, சிறியதாக உள்ளதால் நாம் பாக்கெட்டில் எளிதாக எடுத்து செல்லலாம்.

இந்த மோடம் ஆகஸ்டு 1 முதல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது, இதற்கும் 3மாத அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் மற்றும் வீடியோ கால் இலவசம், வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்ய JioJoin என்ற App ஐ Download செய்து அதிலிருந்து பயன்படுத்தலாம்.

இலவச சிம் எப்படி பெறுவது?
கடந்த ஆகஸ்ட் 20 முதல் Samsung J series, A series , Micromax, LG, ASUS, Panasonic, Yu, TCL & Alcatel போன்ற மொபைல்களுக்கும் இலவச சிம்கார்டு வழங்கப்படுகிறது .
சிம்கார்டை இலவசமாக பெற உங்கள் மொபைல் , 2 போட்டோ, ID Proof ஆகியவற்றை எடுத்துக்கொண்டு உங்கள் மொபைலில் MyJio என்ற Appஐ Download செய்து அதில் Get Jio sim என்ற லிங்கை க்ளிக் செய்து உங்கள் பெயர் மற்றும் போன் நம்பர் , ஊர் ஆகியவற்றை பதிவு செய்யுங்கள் , உங்கள் மொபைலுக்கு வரும் OTP ஐ பதிவு செய்யுங்கள், Coupon Code என்று ஒரு எண்ணை காட்டும் . பிறகு அந்த Coupon Code ஐ அருகிலுள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் காட்டி சிம்கார்டு வாங்கிகொள்ள வேண்டும் . ஆக்டிவேசன் ஆக 4 நாட்கள் வரை ஆகலாம்.

ஆக்டிவேசன்
ஆக்டிவேசனின் போது உங்கள் alternative Mobile எண்ணுக்கு Your Sim is Ready for Tele Verification என்று மெசேஸ் வந்தவுடன் உங்கள் சிம்மை போனில் போடலாம். உங்கள் Network Setting ல் LTE/3G/2G Auto connect அல்லது LTE only என்று வைக்க வேண்டும். Jio 4g என்று டவர் கிடைக்கும், இப்போது உங்கள் மொபைலில் இருந்து 1977க்கு கால் செய்யுங்கள். கால் போகாவிட்டால் உங்கள் மொபைல் True 4G Support இல்லை என்று அர்த்தம். எனவே Wifi மூலமாக இன்டர்நெட் Connect செய்து Jio join என்ற Appஐ Download செய்யவும். அது ஒரு Dialer & Sms App, அதிலிருந்து நீங்கள் 1977க்கு கால் செய்யலாம், உங்கள் Id proof ன் கடைசி 4 இலக்கங்களை டயல் செய்யுங்கள், ஆக்டிவேசன் முடிந்தது, Jio Join Download செய்தவர்கள் கால் செய்ய எப்போதும் அதையே உபயோகப்படுத்துங்கள்.

My jio App ல் உள்ள எல்லா Appகளையும் download செய்து கொள்ளுங்கள் . Live tv, video in demand , Magazines, Security போன்ற சேவைகளையும் 3 மாதம் இலவசமாக பெறலாம், Speed test .net என்ற ஆப் மூலம் உங்கள் ஏரியாவில் என்ன ஸ்பீடு என்பதை தெரிந்து கொள்ளலாம். எங்கள் கறம்பக்குடியில் 23 MBPS.

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம், 3 மாதத்திற்கு பிறகு என்னவாகும் என்று. 1GBக்கு தற்போது 255 வரை செலவாகும் நிலையில் ஜியோ நிறுவனம் 10 ஜிபி டேட்டாவை 97 க்கு வழங்க இருக்கிறது. எனவே கவலை வேண்டாம்.

முடிந்தவரை எவ்வளவு டேட்டா வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். எவ்வளவு வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் இலவசமாக தற்போது பேசிக்கொள்ளலாம்.

தகுதியான போன்கள்
Free sim Samsung Devices
Grand Prime 4G, Galaxy J1, Galaxy J2, Galaxy J7, Galaxy J5, Galaxy S5 Plus, Galaxy A5, Galaxy A7, Galaxy Core Prime 4G, Gal

மத்திய அரசுத் துறைகளில் பல்வேறு பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) தற்போது பல்வேறு அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 146

பணி - காலியிடங்கள் விவரம்:

குடும்ப நலத் துறையில் பேராசிரியர் (ஸ்பெஷலிஸ்ட்– அனஸ்தீசியா) - 75மெடிசின் ஸ்பெஷலிஸ்ட் - 30இதேபோன்று வேளாண்மைத்துறை, வர்த்தகத்துறை, பாதுகாப்புத் துறை, மனிதவளத் துறை, மருத்துவகல்லூரி மருத்துவமனைகளிலும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அனஸ்தீசியா, மருந்து, பார்மகாலஜி, பிசியாலஜி, ரேடியோ டயக்னாசிஸ் போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பை முடித்தவர்களும், பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், கெமிக்கல், மெட்டலர்ஜிகல், ஐ.டி., டெக்ஸ்டைல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

REPCO வங்கியில் கிளார்க் & அதிகாரிப் பணி

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கியில் 75 ஜூனியர் அசிஸ்டன்ட், கிளார்க் மற்றும் புரபெசனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயதுவரம்பு: 01.08.2016-ஆம் தேதியின்படி 21 - 28,30க்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.repcobank.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வகுப்பில் மாட்ட மாதிரி CCE கல்வி நாள்காட்டி
கட்டாய இடமாற்றம்: ஆசிரியர்கள் பதற்றம்

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், முக்கிய காலியிடங்கள் மறைக்கப்படாமல், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

வரும், 27 முதல், 29ம் தேதி வரை, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பணி நிரவல் எனப்படும், கட்டாய இடமாற்றம் செய்யப்படுகிறது.

அதிக அளவில்... : ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, இத்தனை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விகிதாச்சாரம் உள்ளது. அதையும் மீறி, சில மாவட்டங்களில், அதிகளவில் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களை கணக்கெடுத்து, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றுவதே, பணி நிரவல் கலந்தாய்வு என, கூறப்படுகிறது.

அதன்படி, பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ள பட்டியலில், 3,000 ஆசிரியர்கள் வரை, சில மாவட்டங்களில், கூடுதலாக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. எனவே, கூடுதல் ஆசிரியர் இடங்களை, ஆசிரியர் தேவைப்படும் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில், காலியிடங்கள் அதிகமாக உள்ளன. எனவே, தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், வரும், 27ம் தேதி முதல், எந்த மாவட்டத்திற்கும் அதிரடியாக மாற்றப்படலாம்.

எப்படியாவது... : அதேநேரம், பள்ளிக் கல்வித் துறையில் அதிகமாக பணியாற்றும் தென் மாவட்ட ஆசிரியர்கள், எப்படியாவது, சொந்த மாவட்டம் அல்லது அதையொட்டிய பகுதிகளுக்கு செல்ல, அதிகாரிகளை அணுகியுள்ளனர். ஆனால், சிபாரிசு கூடாது என, அரசிடமிருந்து கண்டிப்பான உத்தரவு உள்ளதால், அதிகாரிகளுக்கு நெருக்கடியான நிலையும், ஆசிரியர்கள் மத்தியில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது.

'சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது' - வழக்கு முழு விபரம்

'தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே, ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற உத்தரவு, சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில், அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 

இந்த நியமனங்களுக்கு, அரசின் ஒப்புதல் கோரி, சிறுபான்மை பள்ளி நிர்வாகங்கள் விண்ணப்பித்தன. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாததால், அந்த விண்ணப்பங்களை, அரசு நிராகரித்தது. ஆசிரியர்கள் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், அரசு உத்தரவை ரத்து செய்யவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கத்தின் செயலர், அருளப்பன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 

பள்ளி கல்வித்துறை, 2011 நவம்பரில் பிறப்பித்த உத்தரவில், 'ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டுமே, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை பள்ளிகளைப் பொறுத்தவரை, இந்த சட்டம் பொருந்தாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, பள்ளி கல்வித் துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆசிரியர்கள் சிலரது நியமனங்களுக்கு, தற்காலிக ஒப்புதல் வழங்கி, சம்பளம் வழங்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து, அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை, நீதிபதிகள் ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. சிறுபான்மை பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் சேவியர் அருள்ராஜ், அஜ்மல் கான், வழக்கறிஞர்கள் அருள்மேரி, காட்சன் சாமிநாதன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற அரசின் கொள்கை முடிவில், குற்றம் காண முடியாது. தரமான கல்வியை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவே, இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாணை வருவதற்கு முன், அரசு உதவி பெறும், உதவி பெறாத சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல ஆண்டுகள் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால், அவர்கள் பணியில் நீடிக்க முடியாமல் போய் விடும். 

2012, 2013ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைவு. பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் பயிற்சி வகுப்பு, டிப்ளமோ படிப்பு முடித்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும். தகுதியானவர்கள் என தெரிந்த பின் தான், ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். நியமித்த பின், தேர்வு எழுதி, தகுதி பெற வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.

எனவே, அரசாணை பிறப்பித்த தேதியில் இருந்து, தகுதித் தேர்வை அமல்படுத்தலாமா என்பதை, தேசிய ஆசிரியர் கல்விக் குழுவிடம், தமிழக அரசு விளக்கம் பெற வேண்டும். அரசாணைக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, புத்தாக்க பயிற்சி வகுப்புகளை நடத்த, சிறுபான்மை பள்ளிகள் பரிசீலிக்கலாம். கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் வகுக்கப்பட்ட விதிகளை பின்பற்றும்படி, சிறுபான்மை கல்வி நிறுவனங்களை, அரசு கட்டாயப்படுத்த முடியாது. அதனால், 2011 நவம்பரில், பள்ளி கல்வித் துறை பிறப்பித்த உத்தரவு, சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது.

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இரண்டு மாதங்களில், ஆசிரியர்களுக்கான சம்பளத்தை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2வுக்கு செப்டம்பர், 8ல் காலாண்டு தேர்வு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி பொதுத் தேர்வை போல, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை, அனைவருக்கும் பொதுவான வினாத்தாளுடன் நடத்த, பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்., 8ல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு துவங்குகிறது.

பிளஸ் 2வுக்கு, செப்., 8 முதல், 12 வரை, மொழி பாடங்களுக்கும்; மற்ற தேர்வுகள், செப்., 14 முதல், 23 வரையிலும் நடத்தப்பட உள்ளன. பத்தாம் வகுப்புக்கு, செப்., 8 முதல், 14 வரை மொழி பாட தேர்வுகளும்; மற்ற தேர்வுகள், செப்., 15 முதல், 23 வரையிலும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 3 தேர்வு: பட்டதாரிகள் குழப்பம்

உயர் நீதிமன்றம், மின் வாரியம் மற்றும் தொழில்நுட்ப துறை தேர்வு என, ஒரே நாளில் மூன்று தேர்வுகள் நடக்கின்றன. இதனால், மூன்றுக்கும் விண்ணப்பித்தவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மின் வாரியம் சார்பில் இளநிலை உதவியாளர், கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு, வரும், 27 மற்றும், 28ம் தேதிகளில் நடக்க உள்ளது.

தமிழக தொழில்நுட்ப கல்வித்துறையின் சார்பில் தட்டச்சு தேர்வும், 27 மற்றும், 28ல் நடக்கிறது. அதே நாட்களில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கும் தேர்வு நடக்கிறது.

இந்த மூன்று தேர்வுகளுக்கும், பலர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், எந்த தேர்வை எழுதுவது என தெரியாமல், தேர்வர்கள் தவிக்கின்றனர்.

இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது: மின் வாரிய தேர்வு பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வித்துறை தேர்வும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு தான் மிக குறுகிய காலத்தில் அறிவித்து நடத்தப்படுகிறது.

டி.என்.பி.எஸ்.சி.,யை பொறுத்தவரை, மற்ற துறைகளின் தேர்வுகளை கணக்கிடாமல், தேர்வு தேதியை குழப்பமாக அறிவிப்பது தொடர்கிறது. சில குறிப்பிட்ட துறைகள் தேர்வை அறிவித்து விட்ட நிலையில், அதேநாளில் டி.என்.பி.எஸ்.சி.,யும் தேர்வை அறிவிக்காமல் தவிர்த்தால், அது தேர்வர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பி.ஏ.பி.எட்., - பி.எஸ்சி.பி.எட்., புதிய பாடப்பிரிவு : கல்வியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அறிமுகம்

''தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால், ஒருங்கிணைந்த நான்காண்டு படிப்பாக, பி.ஏ.பி.எட்., மற்றும் பி.எஸ்சி.பி.எட்., பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல், கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டசபையில், 110 விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

● பொறியியல் மாணவர்கள், இந்திய பொறியியல் பணித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக, சென்னை, தர்மபுரி, கோவை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிற்சி மையங்கள் நிறுவப்படும்

● ஆண்டுதோறும், 10 அரசு பொறியியல் கல்லுாரிகளில் படிக்கும், 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெற, வெளிநாட்டில் உள்ள பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்; இத்திட்டம், 1.50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்

● உலகப் புகழ் பெற்ற உயர்கல்வி ஆசிரியர்களின் சிறப்பு விரிவுரைகள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள சிறந்த நிபுணர்களின் உரைகளை, மாணவர்கள் கேட்டு பயன் பெற, 'வீடியோ கான்பரன்ஸ்' ஒலி ஒளியக மையம், சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில், 75 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்

● மதுரையில் உள்ள, தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுாரியில், பொருள் சேதமில்லா தரச்சோதனை பயிற்சி மையம், 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்; இங்கு, ஆண்டுக்கு, 100 பேருக்கு, செய்முறை பயிற்சி அளிக்கப்படும்

● கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்; காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் ஆகிய இடங்களில், தலா, 8 கோடி ரூபாய் செலவில், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்கப்படும்

● அனைத்து பல்கலை மற்றும் இணைவுக் கல்லுாரிகள், மேகக் கணினியத்தில் இணைக்கப்பட்டு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு சேவை வழங்கும் மையம், 160 கோடி ரூபாய் செலவில், அண்ணா பல் கலையில் நிறுவப்படும்; இத்திட்டம், 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்

● அண்ணா பல்கலையில், 50 கோடி ரூபாய் செலவில், மோட்டார் வாகன தொழில்நுட்ப மையம், மோட்டார் வாகன தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நிறுவப்படும். மேலும், 5,000 பேர் அமரும் வசதி கொண்ட, ஒரு பெருங்கூட்டரங்கமும், 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்

● அண்ணா பல்கலையில், சர்வதேச ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் பயிற்சி மையம், 50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்

● தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையின் மண்டல மையங்கள், விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், 12.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்

● தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால், நான்காண்டு ஒருங்கிணைந்த பி.ஏ.பி.எட்., மற்றும் பி.எஸ்சி.பி.எட்., பாடப்பிரிவுகள், இந்த ஆண்டு கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும்

● மதுரை காமராஜர் பல்கலையில், நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் கூடிய, ஒரு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். மாணவர்கள் நலன் கருதி, 7 கோடி ரூபாய் செலவில், உள் விளையாட்டரங்கம், நுாலகம் கட்டப்படும்.

சூரிய மின் ஒளி, நிலத்தடி நீர் சேமிப்பு திட்டம், 'வைபை' வசதி, 5 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். விடுதி மேம்பாட்டு பணிகள், 1 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு முதல்வர்

அறிவித்தார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!