Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 28 August 2016

ஐந்தாம் வகுப்பு செய்யுள் 'திருவடி தொழுகின்றோம்' பாடல்

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான கணிதம் கற்பித்தல் கற்றல் உபகரணப் பெட்டி பயிற்சி கையேடு பவர் பாய்ண்ட் வடிவில்...

பணிநிரவல் கலந்தாய்வில் குளறுபடி: மாவட்டக் கல்வி அதிகாரியை பட்டதாரி ஆசிரியர்கள் முற்றுகை

விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வில் குளறுபடி உள்ளதாகக் கூறி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு, விருதுநகரில் உள்ள கே.வி.எஸ். மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்றது. 
இதற்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. புகழேந்தி தலைமை வகித்தார்.இதில், காலிப் பணியிடங்களான தமிழாசிரியர் 9, ஆங்கில ஆசிரியர் 7, சமூக அறிவியல் ஆசிரியர் 5-க்கு கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில், விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள் 30 பேர் கலந்துகொண்டனர்.அப்போது, காலியிடங்கள் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் எனக் கூறி, பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. புகழேந்தியை முற்றுகையிட்டனர்.

இதைத் தொடர்ந்து, கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, மீண்டும் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்றது. இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து, பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டப் பொறுப்பாளர் சுப்பிரமணியம் கூறுகையில், பணிநிரவல் என்ற பெயரில் தமிழாசிரியர்கள் இடம் மாற்றப்படுகிறார்கள். பணிநிரவல் முறையில் ஒருமுறை அடுத்த பள்ளிக்குச் சென்றுவிட்டால், அவர் இளநிலையாளராகவே கருதப்படுகிறார். இதனால், அடுத்தடுத்த பணிநிரவல் கலந்தாய்வுகளிலும் அவரே இடமாற்றம் செய்யப்படுகிறார்.சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். எனவே, பள்ளிக் கல்வித் துறை இந்த நடைமுறையை கைவிட வேண்டும் என்றார்..

வளரத் துடிப்போருக்கு வாய்ப்பளிக்கும் கடன் திட்டங்கள்

இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி

ஐ.டி.பி.ஐ. என்று மக்களால் அழைக்கப்படும் இவ்வங்கி மறு நிதி உதவிகளை மட்டும் வழங்கி வந்தது. ஆனால், சமீபகாலமாக ஏராளமான கிளைகள், ஏ.டி.எம். மையங்கள், பிராந்திய அலுவலகங்களைத் தொடங்கி கடனுதவி கொடுப்பதிலும், வங்கி வர்த்தகத்திலும் இறங்கியுள்ளது. சிறுதொழில்/ வர்த்தகம் / விவசாயம் / மருத்துவம் / போக்குவரத்து எனப் புதிய கடனுதவித் திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்துகிறது.

தொடர்பு கொள்ள: இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி (Industrial Development Bank of India - IDBI) மண்டல அலுவலகம், No.44/86, 4th Avenue, Near R3 Police Station, Ashok Nagar, Chennai-600083. Phone number: 044-28258116. வலைத்தளம்: www.idbi.com

சிறுதொழில்களுக்கான வளர்ச்சி வங்கி

மத்திய அரசின் சிறுதொழில்களுக்கான கடன் உத்திரவாத திட்டம் (Credit Guarantee Fund Scheme) பழைய / புதிய சிறு தொழில்களுக்கு, குறுந்தொழில்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது. இதை ‘சிட்பி’ என அழைக்கப்படும் இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி  நடைமுறைப்படுத்துகிறது. இதர வங்கிகள் மூலம் வழங்கப்படும் இயந்திரக் கடன்/நடைமுறை
மூலதனக் கடன் என ரூ.1 கோடி வரை இத்திட்டத்தில் வழங்கப்படும். முழு விவரம், விண்ணப்பம் பெற www.cgtsi.org.in  என்ற வலைதளத்தைப் பார்க்கலாம். சிறுதொழில் வளர்ச்சி வங்கிக் கிளைகளின் முழு விவரத்தை www.sidbi.org எனும் வலைதளத்தில் பெறலாம்.

பெண் தொழில் முனைவோர்கள் சிறப்புக் கடன் திட்டம்

தமிழ்நாடு அரசு பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்க இந்தச்சிறப்புத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.10 லட்சம் வரை தயாரிப்பு / சிறுதொழில் / ரிப்பேரிங்  சர்வீஸ் / வியாபாரம் போன்ற  தொழில் தொடங்க கடன் அளிக்கப்படுகிறது.வலைத்தளம்: www.tn.gov.in

தமிழ்நாடு மரபுசாரா மின்சார முகமை மூலம் கடனுதவித் திட்டங்கள் 

பெரிய தொழில் முனைவோர், ஊராட்சிகள், நிதி நிறுவனங்கள், தனியார் என எவரும் ‘காற்றாலை மின்சாரம்’ தயாரிக்க காற்றாலை நிறுவலாம். காற்றாலை மின்சார நிலையம் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கிறது.அதேபோல் சூரிய சக்தி மின்சாரம் எடுக்க அரசு மானியம்,  கடனுதவி அளிக்கிறது. சூரிய சக்தி அடுப்புகள் நிறுவ 30% மானியம் அளிக்கப்படுகிறது.

கழிவுகளில் இருந்து மின்சாரம் எடுக்க, கரும்பாலைக் கழிவில் இருந்து மின்சாரம் எடுக்க மானியத்துடன் கடன் அளிக்கப்படுகிறது. இதுபோல் கிடைக்கும் சலுகைகளை தொழில் முனைவோர் பயன்படுத்தி முன்னேறலாம்.தொடர்பு கொள்ள: தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை, தமிழ்நாடு அரசு, 5வது மாடி, ஈ.வெ.கி. சம்பத் மாளிகை, கல்லூரி சாலை, சென்னை - 6. தொலைபேசி: 044- 28224830, மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் (மரபு சாரா எரிசக்தித் துறை) தலைமை பொறியாளர், எண்: 800, அண்ணாசாலை, சென்னை-2. தொலைபேசி: 044-28520167.  www.tn.gov.in. இந்திய அரசின் மரபுசாரா எரிசக்தி ஏஜன்சி, (Indian Renewable Energy Development Agency Ltd) Govt. of India. India  Habital Centre Complex, Core - 41, Eastcourt, 1st Floor, Lodi Road, New Delhi -3) Phone : 011-24682214

மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு அரசின் கடனுதவித் திட்டங்கள்

ஒவ்வொருவருக்கும் ஒரு தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படும். காலால் இயக்க முடியாதவர்களுக்கும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படும். வியாபாரம் செய்ய விரும்புவோருக்குப் பெட்டிக் கடைகள் வைக்க உதவி செய்யப்படும். தொழில் தொடங்க மானியக்கடன் வழங்கப்படும். தொடர்புகொள்ள: இயக்குநர், மாற்றுத்திறனாளிகள், மறுவாழ்வுத் துறை தமிழ்நாடு அரசு, 15/1, மாடல் பள்ளிச் சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வலைத்தளம்: www.tn.gov.in

முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு சுயதொழில் கடனுதவி

முன்னாள் ராணுவ வீரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் இலவச சுயதொழில் பயிற்சி வழங்கப்பட்டு, அவர்கள் தேர்ந்தெடுத்த தொழில்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. அதற்கு கீழே உள்ள இயக்குநர் அல்லது மாவட்டத் தலைநகரங்களில் உள்ள உதவி இயக்குநர்களையோ அணுகலாம்.தொடர்பு கொள்ள: இயக்குநர், முன்னாள் ராணுவ வீரர் நலத்துறை, தமிழ்நாடு அரசு, 22, ராஜா முத்தையா சாலை, சென்னை-3. தொலைபேசி: 044-25322487 வலைதளம்: www.tn.gov.in

பட்டு வளர்த்தல், நூற்றல், உற்பத்தி மற்றும் சிறப்புக் கடன் திட்டங்கள்

இந்திய அரசின் மத்திய பட்டு வாரியமும், தமிழ்நாடு அரசின் பட்டு வளர்ச்சித்துறையும் ‘பட்டு நெய்தல்’ துறைக்குப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன. பட்டுப் புழு வளர்ப்பு, அதற்குரிய மானிய உதவிகள் ‘சில்க் ரீலிங்’ எனப்படும் பட்டு நூல் நெய்து நூலாக்குதல், பட்டு நெசவு, அதற்கான பயிற்சி மற்றும் தயாரிப்புக்குப் பின் விற்பனைக்கு ஆலோசனை எனப் பல வகைகளில் உதவுகின்றனர்.தொடர்பு கொள்ள: இயக்குநர், பட்டு வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு, போல்க் காம்பவுண்டு, அணைமேடு, ேசலம்-1, தொலைபேசி:
0427-2296831. வலைத்தளம்: www.tnsericulture.gov.in 

தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆஃப்ரேட்டர் பணி

தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CMFRI) நிரப்பப்பட உள்ள 75 டேட்டா என்ட்ரி ஆஃப்ரேட்டர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 75பணி: Data Entry Operator (DEO)தகுதி: +2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.வயதுவரம்பு: 35 - 40க்குள் இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறை: http://www.cmfri.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பிதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அசல் சான்றிதழ் மற்றும் நகல்களும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.நேர்முகத் தேர்வு நடைபறும் இடம்: ASRB Online Examination Centre, Central Marine Fisheries Research Institute, Behind Highcourt of Kerala, P.B No-1603, Cochin-682018நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 01.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cmfri.org.in/uploads/jobs/scan0002.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பேஸ்புக் உங்களை பற்றி தெரிந்து வைத்திருக்கும் 98 விஷயங்கள்!!!

சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது...

இத்தகைய பேஸ்புக் நம்மால் கற்பனை செய்ய இயலாத பல விஷயங்களை ஆட்கொண்டுள்ளது என்றே கூறலாம். நமக்கே தெரியாத 98 விஷயங்கள் பேஸ்புக்கில் புதைந்துள்ளது. பேஸ்புக்கில் ஒருவர் நம் நண்பர் ஆவதற்கு முன் அவரை இத்தனை விஷயங்களை பற்றி நம் அறியலாம்..! இதை இப்புகைப்படங்களின் மூலம் அறிந்து கொள்வமா?
TNPL RECRUITMENT 2016 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

புதிய கல்விக்கொள்கை பற்றிய அறிக்கையை தமிழில் அறியலாம்.அனைவரும் தங்கள் கருத்தை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அளியுங்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்

புதிய கல்விக்கொள்கை பற்றிய மத்திய அரசின் அறிக்கையை இணையதளத்தில் தமிழில் படிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார். இதுகுறித்து  மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-
கல்வியில் பல்வேறு சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு ஒவ்வொரு நாடும் கடுமையாக பாடுபடுகின்றன. அதோடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் கல்வியை மறுஆய்வும் செய்து வருகின்றன. சுதந்திரத்துக்குப்பிறகு நாமும் பெரிய முயற்சிகளை மேற்கொண்டோம். இதற்காக முதலில் முதலியார் கமிஷனும், அடுத்ததாக கோத்தாரி கமிஷனும் நியமிக்கப்பட்டன. கல்விக்கான தேசியக்கொள்கை, 1986-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டு, 1992-ம் ஆண்டில் மாற்றம் செய்யப்பட்டது. அன்றில் இருந்து இப்போது 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள், தரமானகல்விக்கான நோக்கம், மாறிவரும் மக்கள் தொகையின் தேவைகள்ஆகியவற்றுக்காக தேசிய கல்விக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு தொடர் முயற்சிதான். கருப்பொருட்கள் பள்ளிக் கல்விக்காக 13 கருப்பொருட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில், குழந்தைகள் நலன், ஆசிரியப் பணி, மொழி போன்றவை அடக்கம். இவற்றை அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல்ஒவ்வொருவரும் கருப்பொருள்கள் குறித்து யோசனை தெரிவிக்கலாம். உயர் கல்விக்காக 20 கருப்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய நிறுவனங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், திறன் மேம்பாடு, திறந்த நிலை பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி, புதிய அறிவு போன்றவை இதில்அடக்கம். மேலும் பல கருப்பொருட்கள் பற்றி ஆலோசிக்கப்படுகிறது. விவாதம் கடந்த 26.1.16 அன்றிலிருந்து www.My-G-ov.in என்ற இணையதளம் மூலமாக விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதில் மக்களுக்காக சில யோசனைகள் கூறப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் மக்களின் ஆலோசனை மற்றும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. 31.10.15-க்குள் 29ஆயிரம் பதில்கள் பெறப்பட்டன. கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம், அடிப்படையளவிலான கலந்தாலோசனை தொடங்கியது. அதன்படி, ஒரு லட்சத்து 10 ஆயிரம் கிராமங்கள், 3 ஆயிரத்து15 வட்டாரங்கள், 406 மாவட்டங்கள், 962 உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய பகுதிகளில், பல்வேறு கல்விக் குழுக்களின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் கருப்பொருட்கள் குறித்து விவாதித்து ஆலோசனை அளித்துள்ளனர். டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு பள்ளிக் கல்வி, உயர் கல்வி பற்றி 21 மாநிலங்கள் தங்கள் கருத்துகளை அளித்துள்ளன. அந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு, கடந்த 2015-ம் ஆண்டின் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 6 மண்டல கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் கலந்துகொண்ட மாநிலங்கள், தங்கள் கருத்தை கொடுத்துள்ளன. மேலும் பல மாநிலங்களின் கல்வி அமைச்சர்களும் அந்த மண்டல கூட்டங்களில் பங்கேற்றனர். விரிவாக பேசப்பட்ட பிறகு பெறப்பட்ட கருத்துகள் அனைத்தும் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்டுள்ளன. அந்த கருத்துகளை ஒருங்கிணைத்து வகைப்படுத்துவதற்காக டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு அமைக்கப்பட்டது. ஆனால், புது கல்விக் கொள்கைக்கான வரைவை தயார் செய்வதற்காக அந்தக் குழு அமைக்கப்பட்டதாக சிலர் புரிந்துகொண்டனர்.

இந்தக் குழுவும் பல அமைப்புகளுடன் கூட்டம் நடத்தியது. 99 அமைப்புகளுடன் தனியாக 5 மண்டல கூட்டங்கள் நடத்தி 120 கருத்துகளைப்பெற்றது. அதன்பிறகு, தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவை தயாரிக்க பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அந்தக் குழு வழங்கியது. வரைவு அறிக்கை இந்தக் குழு வழங்கியிருப்பது, பரிந்துரைகள்தான், அது புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அல்ல. ஏனென்றால், அது அமைச்சரவையின் பார்வைக்கும் வைக்கப்படவில்லை. அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கவில்லை. அதாவது, புதிய வரைவு கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை உருவாக்குவதற்கான அடிப்படையாக அமைந்துள்ளது. இந்தியா சந்திக்கும் சவால்களை அணுகுவதற்கும், அனைவருக்கும் கல்வி வாய்ப்பை வழங்குவதற்கும் இந்த புதிய கல்விக்கொள்கை ஐந்து தூண்களைக் கொண்டதாக இருக்கும். அணுகக்கூடியதாகவும், தரமுள்ளதாகவும், எளிதானதாகவும், சமபங்களிப்பதாகவும், பொறுப்புள்ளதாகவும், அதாவது இந்த 5 தூண்கள் அமைந்ததாக இருக்கவேண்டும். உண்மையான சவால் கடந்த 70 ஆண்டுகளாக வீடு வீடாக கல்வியை கொண்டுசென்றோம். ஆனால் இன்று கல்வியின் தரம் என்பதும் ஒரு சவாலாக உள்ளது. தொடக்கக் கல்வியில் இருந்து உயர் கல்வி வரை அதை மேம்படுத்தியாகவேண்டும். புதிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம் தரம்தான். கல்வியின் தரத்தை மேம்படுத்தவேண்டும், அதை அனைத்து தரப்பினரிடமும் கொண்டுசெல்லவேண்டும் என்பதுதான் உண்மையான சவாலாக உள்ளது. எனவே, இதற்கு ஏற்ற கருத்துகளை அனைவருமே தரவேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.

தமிழிலும் காணலாம்

கருத்துக்களை அனுப்பும் தேதியை செப்டம்பர் 30-ந் தேதிவரை நீட்டித்துள்ளோம். (mh-rd.gov.in/sites/upl-o-ad_fi-les/mh-rd/fi-les/ nep/tam-il.pdf ) என்ற இணையதளத்தில் 99 பக்க புதிய கல்விக்கொள்கைக்கான தமிழ் வரைவு அறிக்கையை காணலாம். இதற்கிடையே புதிய கல்விக் கொள்கையில் அரசியல் விளையாட்டை நடத்த சிலர் முற்படுகின்றனர். இது நடந்துவிடக்கூடாது என்று அச்சம் கொண்டுள்ளேன். ஏனென்றால், அது ஒரு கட்சியின் கோட்பாடு அல்ல. கல்வி என்பது தேசிய கோட்பாட்டைக் கொண்டதாகும். எனவே, இதில் தவறான கருத்துகளை பரப்புவது, உள்நோக்கத்தோடுசந்தேகங்களை கிளப்புவது போன்றவை தேவையற்றது. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு அரசியல் சாசனத்தின் 29 மற்றும் 30ம் ஷரத்துகள் அளிக்கும் உரிமையை நசுக்குவதாக போராட்டம் நடத்துவதாக அறிகிறேன். அரசியல் சாசனம் தந்துள்ள எந்த உரிமையும் நசுக்கப்படமாட்டாது என்பதையும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், சமுதாயத்தில் பின்தங்கிய அனைவருக்கும் கல்வியில் சமமானவாய்ப்பு அளிக்கப்படும் என்பதையும் இதன்மூலம் உறுதி அளிக்கிறேன்.

வலுவான கொள்கை

இதில் பிரதமர் நரேந்திர மோடி மிகத்தெளிவாக இருக்கிறார். 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடந்த மாநிலங்களுக்கு இடையேயான கூட்டத்தில் பேசப்பட்ட 4 தலைப்புகளில் கல்வியின் தரமும் அடங்கும். நானும் அதில் கலந்துகொண்டேன். இதுபற்றி அனைத்து முதல்-மந்திரிகள் கூறிய கருத்தும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தரமான கல்விக்காக தேவை பற்றி அவர்கள் உரையாற்றினர். அது ஒரு நல்ல தொடக்கமாக உணர்ந்தேன். அனைவரும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் புதிய கல்விக்கொள்கை பற்றிய கருத்துகளை தெரிவிக்கும்படி மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். நமது வாரிசுகள், சவால்களை எதிர்கொள்ளவும், இந்தியாவின் எதிர்காலத்தை ஒளி மிகுந்ததாக கொண்டுசெல்வதற்கான ஒரு வலுவான கல்விக்கொள்கையாக அது அமையவேண்டும்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் பணியிடத்திற்கு 2016-ஆம் ஆண்டிற்கான 55 உதவிப் பேராசிரியர், இளநிலை உதவியாளர், ஸ்டெனோவின், கிளார்க், தொழில்நுட்ப அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 55

பணி: உதவி பேராசிரியர்

1. Business Law - 02
2. Constitutional Law & Human Rights - 02
3. Intellectual Property Laws - 02
4. International Law & Organisation - 02
5. Environmental Law & Legal Order - 02
6. Criminal Law & Criminal Justice Administration - 02
7. Labour Law & Administrative Law - 02
8. Human Rights & Duties Education - 02
9. Inter-disciplinary Studies:i. Business Administration - 03ii. Computer Applications - 04iii. Commerce - 02vi. English - 01v. History - 01
10. Dept. of Distance Educations:i. Master of Laws - 04

நிர்வாகம் சார்ந்த பணியிடங்கள் விவரம்:

11. Plumber - 02
12. Record Clerk - 05
13. Junior Assistant - 10
14. Technical Assistant - 03
15. Stenographer - 02
16. Technical Officer (Library) - 01
17. Technical Officer - 01

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500.

இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் 'The Registrar, Tamil Nadu Dr.Ambedkar Law University" என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "The Registrar, The Tamil Nadu Dr.Ambedkar Law University,"Poompozhil", No.5, Dr. D.G.S. Dhinakaran Salai, Chennai-28"

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  http://tndalu.ac.in/pdf/Teaching%20Staff%20Posts%20.pdf, http://tndalu.ac.in/pdf/Administrative%20Posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

நோயால் சுருண்டு கிடந்த நண்பனுக்கு மாணவர்களே கட்டிய கழிப்பறை! - மலைக்க வைத்த மனிதநேயம்

பள்ளிக்கே வராமல் நோயால் சுருண்டு கிடந்த நண்பனுக்கு கழிப்பறை கட்டித் தந்துள்ளனர் நாகப்பட்டினம் மாணவர்கள். ' கழிப்பறை இல்லாததே நோய் வருவதற்குக் காரணம் என்பதை உணர்ந்ததால், சக மாணவர்களிடம் வசூல் செய்து கழிப்பறை கட்டும் பணியை முடித்தோம்' என உற்சாகமாகப் பேசுகின்றனர் மாணவர்கள்.


தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம், தேசத்தின் தூய்மை பற்றிய பிரசாரத்தை முன்னெடுக்கிறது மத்திய அரசு. ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறையின் தேவை பற்றிய விழிப்பு உணர்வு பிரசாரங்கள் வேகமெடுத்துள்ளன. ' கழிப்பறை இல்லாததால் மணமகனை மணக்காத மணப்பெண்' என்பன போன்ற செய்திகள் எல்லாம் வடஇந்தியாவில் சாதாரணம். தமிழ்நாட்டிலும், ஏழை எளிய மாணவனின் வீட்டிற்கு கழிப்பறைக் கட்டிக் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் மாணவர்கள். மாணவர்களின் அசாதாரண முன்னெடுப்பை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள் நாகப்பட்டினம் மக்கள். 

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில் உள்ள எஸ்.கே.அரசு உயர் நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் மாணவர் அகத்தியன். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்த அகத்தியன், அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளார். சக நண்பர்களான வசீகரன், ராகுல், நவீன்ராஜ், ஹரிஷ் ஆகியோர், ' ஏன் பள்ளிக்கு வருவதில்லை?' என விசாரித்துள்ளனர். 

அவர்களிடம், தன் காலில் இருந்து தோல் நோயைக் காட்டி அழுதிருக்கிறார் அகத்தியன். ' அடிக்கடி விஷக் காய்ச்சலும் வந்துவிடுகிறது. சரியான டாய்லெட் இல்லாததுதான் காரணம்' என அழுதிருக்கிறார். ' திறந்தவெளியில் மலம் கழித்ததால்தான் அடிக்கடி தொற்றுநோய்க்கு ஆளாகிறார்' என்பதை உணர்ந்த நண்பர்கள், ' நாமே ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு, கழிப்பறை கட்டினால் என்ன?' என்ற முடிவுக்கு வந்து, பள்ளி ஆசிரியர் வீரமணியிடம் கூறியுள்ளனர். அவரும், 'மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இந்தத் திட்டம் அமையும். உடனே தொடங்குங்கள்' என உற்சாகப்படுத்தினர். 

இதையடுத்து, சுதந்திரதினவிழா அன்று கழிப்பறை கட்டுவது குறித்து விழிப்பு உணர்வு பேரணியை நடத்தினர். கூடவே, சக மாணவர்களிடம் கையேந்தி காசு வசூல் செய்தனர். ஒருவழியாக கழிப்பறை கட்டுவதற்கான தொகை சேர்ந்துவிட்டது. இதையடுத்து, அகத்தியனின் நண்பர்களே முன்னின்று கழிப்பறையைக் கட்டும் பணியை நிறைவு செய்தனர். 

கொளுத்தும் வெயிலில் சக மாணவனுக்காக கழிப்பறை கட்டும் பணியில் மாணவர்கள் இறங்கியதை ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர் சுற்றுவட்டார பொதுமக்கள். மாணவர்களின் செயலைக் கேள்விப்பட்டு கல்வி அதிகாரிகள், அவர்களை நேரில் வரவழைத்துப் பாராட்டினர்.

'உயிர் காப்பான் தோழன்' என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளனர் இந்த மாணவர்கள். இந்த மாணவர்களுக்கு நாமும் வைப்போம் ஒரு ராயல் சல்யூட்!

அரசு பள்ளிகளில் சூட்டப்பட்ட ஜாதி பெயரை நீக்க கோரி வழக்கு

அரசு பள்ளிகளுக்கு ஜாதி பெயர் சூட்டப்பட்டிருந்தால், அதுபற்றி அரசு துறையிடம் மனு அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.சரவணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  சாதிகள் இல்லாத சமத்துவ சமுதாயம் படைக்க வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம்.

அதைத்தான் பாரதியார் முதல் பல்வேறு தமிழ் அறிஞர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனால் பள்ளிகள், கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியருக்கு சாதி, சமுதாயத்தைக் குறிப்பிடச் சொல்லித்தான் சேர்க்கை வழங்கப்படுகிறது.இதை ஒதுக்க முடியவில்லை என்றாலும் கூட, அரசுப் பள்ளிகள், கல்லூரிகளின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது சமுதாயத்தின் பெயர்களைக் குறிக்கும் வகையில் உள்ளது.இந்த கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் அந்த கல்வி நிலையங்களைக் குறிப்பிடும் போது அதிலும் சாதியம் பூசப்படுகிறது. எனவே சாதி அல்லது சமுதாயங்களின் பெயர்களில் உள்ள கல்வி நிலையங்களின் பெயர்களை உடனடியாக நீக்கி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது அரசு தரப்பு வழக்குரைஞர் ஆஜராகி, சிறுபான்மையின கல்லூரிகளில் தான் சாதி அல்லது சமுதாயப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அந்தக் கல்லூரிகளின் பெயர்கள் மற்றும் நிர்வாகத்தில் தேவையின்றி, தமிழக அரசு தலையிட முடியாது. 

ஏனெனில் அவை தனியார் கல்லூரிகள் நிர்வாகச் சட்டம் 1976-ன் கீழ் செயல்படுபவை.மனுதாரர் குறிப்பிடுவது போல அரசு கல்லூரிகள், பள்ளிகளில் எதுவும் அதுபோன்ற சாதிப் பெயர்களில் இல்லை என்றார்.அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், சாதி, சமுதாயப் பெயர்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்தார்.இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இதுதொடர்பாக மனுதாரர் தன்னிடம் உள்ள சாதி அல்லது சமுதாயத்தை குறிப்பிடும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை மனுதாரர் குறிப்பிடுவது போல அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பெயர்கள் இருந்தால் அதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!