Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 1 September 2016

மகப்பேறு விடுப்பு 9 மாதங்களாக உயர்வு- செய்தி அறிக்கை


Flash News:அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை 9 மாதமாக உயர்வு: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
மேலும் சென்னையில் கூடுதலாக 100 சிற்றுந்துகளை இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக இந்த அறிவிப்பு இன்று சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது.

ரிலையன்ஸ் ஜியோ சேவையில் "டேட்டா" அல்லது"வாய்ஸ் கால்" இரண்டில் ஒன்றிற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய முறை அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ சேவை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்தியாவில் செல்லிடப்பேசி மூலம் இணைய சேவை பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த மார்ச் 31ஆம் தேதிநிலவரப்படி சுமார் 32 கோடி. இந்தியாவில் இந்த மொபைல் இன்டர்நெட் சேவையை மொத்தம் 138 நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. 
அதில் பார்தி ஏர்டெல் 9.5 கோடி வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. வோடஃபோன் நிறுவனம் 6.7 கோடி, ஐடியா நிறுவனம் 4.4 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் 3.9 கோடி, பி.எஸ்.என்.எல். 3.4 கோடி, ஏர்செல் 2.2 கோடி, டாடா 2.1 கோடி, டெலிநார் 1.3 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளன. எம்டிஎஸ், எம்டிஎன்எல்,விடியோகான் ஆகிய நிறுவனங்கள் கிட்டத்தட்ட 20 லட்சம் வரையிலான வாடிக்கையாளர்களையும், பிற நிறுவனங்கள் 10 லட்சத்துக்கும் குறைவான வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளன.

இவற்றில் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் 4ஜிசேவையை வழங்கி வரும் நிலையில், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் 4ஜி சேவையை வழங்குவதற்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் களத்தில் குதித்துள்ளது."டேட்டா" அல்லது "வாய்ஸ் கால்" இரண்டில் ஒன்றிற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய முறையை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்துவதாக முகேஷ் அம்பானி மும்பையில் அறிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில்:- தற்போது வாழ்க்கை டிஜிட்டல் மயமாக மாறிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில் இந்தியாவும், இந்தியர்களும் டிஜிட்டல் பயன்பாட்டில் பின்தங்கிவிடக்கூடாது. இந்தியாவின் டிஜிட்டல் தரவரிசையை உயர்த்தும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமாகியுள்ளது. இன்றைக்கு மொபைல் இண்டர்நெட் என்பது உயிர்மூச்சாக மாறிவிட்டது. ஜியோ என்பது வர்த்தகத்தை தாண்டிய ஒன்றாகும். ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதை எங்களது இலக்காக கொண்டுள்ளோம்.தற்போது ரிலையன்ஸில் ஒரு நிமிடத்திற்கு கால் கட்டணம் 65 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முற்றிலும் இலவசமாக்கப்படும் என்றும், அதற்கு பதிலாக 1GB-4G டேட்டா -விற்கு ரூ.50 என்ற வீதத்தில் கட்டணம் செலுத்தினால் போதுமானதாகும். இது உலகிலேயே மிகக் குறைந்த டேட்டா கட்டணம் என்று கூறியுள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோ  கட்டண விவரம்:-ரூ.149, ரூ.499, ரூ.999, ரூ.1,499, ரூ.2,499, ரூ.3,999 மற்றும் ரூ.4,999 என விலைகளின் அடிப்படையில் 7 திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்துகிறது.

முக்கிய அறிவிப்பு :பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு செல்வோர் கவனத்திற்கு...

அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி  பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 04.09.2016 அன்று   மாறுதல் கோரியுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. 
விண்ணப்பம் சமர்ப்பித்துள்ள ஆசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவலரிடம் 2 மாறுதல் விண்ணப்பங்களில் 02.09.2016 மாலைக்குள்  கையொப்பம்  பெற்று மாறுதல் கோரியுள்ள மாவட்டத்தில்  04.09.2016 அன்று  கலந்தாய்வில்  கலந்துகொள்ள வேண்டும் .

10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு விரைவில் புதிய தமிழ் 'சாப்ட்வேர்'

சென்னை: ''தமிழில் இலக்கண பிழையின்றி எழுத உதவும், புதிய மென்பொருள், முதல் கட்டமாக, 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படும்,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

அசாம் மாநிலம், கவுகாத்தி பல்கலையில், தமிழை விருப்பப் பாடமாக பயிலும், ஆறு மாணவர்களுக்கு, 1.39 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஒன்று, மொரீஷியஸ்; அங்குள்ள தமிழர்களுக்கு, ஆண்டுதோறும், ஏழு லட்சம் ரூபாய் செலவில், தமிழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்

பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் நடக்கும் பேச்சு போட்டிகளில், முதல் மற்றும் இரண்டாம் பரிசு வழங்கப்படுகிறது; இனி, மூன்றாவது பரிசாக, 5,000 ரூபாய் வழங்கப்படும்; இதற்கு, 9.6 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகும்

கம்ப்யூட்டரில், ஆங்கில மொழியில் பிழை திருத்தும் வசதி இருப்பதைப் போல், தமிழிலும், இலக்கணப் பிழையை சுட்டிக்காட்டி திருத்தும், புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது; 300 ரூபாய் விலையுடைய அது, முதல் கட்டமாக, 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

TNPSC - DEPARTMENTAL EXAMINATIONS DECEMBER-2016 - NOTIFICATIONதமிழகத்தில் 250 அரசுப் பள்ளிகளில் மனித உரிமை மாணவர் மன்றம்: பள்ளிக் கல்வித்துறை புதிய ஏற்பாடு.

மாணவர்கள், குழந்தைப் பருவத்திலேயே மனித உரிமைகளைத் தெரிந்துகொள்ளும் நோக்கில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் உள்ள 250 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மனித உரிமை மாணவர் மன்றங்கள் அமைக்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது.
குழந்தைப் பருவத்திலேயே மனித உரிமைகளைக் கலாச் சாரமாக வளர்த்தெடுக்கும் நோக்கில், தமிழக அரசும், மனித உரிமைக் கல்வி நிறுவனமும் இணைந்து கடந்த ஆண்டு 6 மாவட்டங்களில் உள்ள 120 அரசுப் பள்ளிகளில் முதற்கட்டமாக மனித உரிமை மாணவர் மன்றங்களைப் பரிசோதனை முறையில் தொடங்கி இருந்தன.தற்போது 2015-16 கல்வியாண்டில் 15 மாவட்டங்களில் கூடுதலாக 250 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்மனித உரிமைக் கல்வி மற்றும் மனித உரிமை மாணவர் மன்றங்களைத் தொடங்க பள்ளிக்கல்வி இயக்குநர் அனுமதி வழங்கி உள்ளார்.

இதுகுறித்து மனித உரிமைக் கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் கூறியதாவது: நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்றால் மனித உரிமை கல்வி அவசியம். வசதியானவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அதனால், தற்போது பரம ஏழைகள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தரமானவர்கள். அவர்கள் வழங்கும் கல்வியும் தரமானதே. ஏதாவது ஒரு கல்வியாளர், கல்வியில் நிபுணத்துவம் பெற்றவர்கள், தனியார் பள்ளிகள் நடத்துவோர் ஒரு காலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள், ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்களாகவே உள்ளனர்.தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சரியான கல்வி கொடுத்து, அவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதும், மாணவர்களைத் தக்கவைப்பதும் ஆசிரியர்களுக்குச் சவாலாகவேஇருக்கிறது. எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆங்கிலம், அறிவியல், கணிதம் சார்ந்த கல்விகள், தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மாணவர்கள் ஓய்வில்லாமல் பெற்றோர், ஆசிரியர்கள் ஆசையை நிறைவேற்றும் இயந்திரமாக மாறிவிட்டனர். அதனால், குழந்தைகளின் கனவுகள் நிறைவேறும் இடமாக தற்போது பள்ளிகள் இல்லை. நேசிக்க வேண்டிய ஆசிரியர்களையே மாணவர்கள் எதிரிகளாகப் பார்க்கும் நிலை உள்ளது.

இப்பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து மாணவர்கள்,ஆசிரியர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தி கல்வி, ஒழுக்கத்தில் மாணவர்களைச் சிறந்தவர்களாக் கவும், அவர்களுக்கான மனித உரிமைகளை அறிந்துகொள்ளவும் இந்த மனித உரிமை மாணவர் மன்றம் செயல்படுத்தப்படுகிறது. இதனால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சமத்துவம், தங்கள் உரிமைகளை அறிதல், மற்றவர்களை அறிதல், ஒற்றுமை, பாலினம் போன்றவற்றை அறியும் வாய்ப்பை பெறுகின்றனர் என்றார்.சமத்துவம், தங்கள் உரிமைகளை அறிதல், மற்றவர்களை அறிதல், ஒற்றுமை, பாலினம் போன்றவற்றை அறியும் வாய்ப்பை பெறுகின்றனர்.

நூற்றுக்கு நூறு எடுத்தால் பரிசு : அமைச்சர் வளர்மதி அறிவிப்பு.

''பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்விடுதிகளில், தங்கி படிக்கும் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுக்கும் பாடங்களுக்கு, தலா, 1,000 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்,'' என, இத்துறை அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.சட்டசபையில், நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், 290 கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், இரண்டு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும்; இரண்டு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும், ஒரு கோடி ரூபாய் செலவில், நிலை உயர்த்தப்படும்

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக, 1,338 விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில், 1,112 பள்ளி விடுதிகள்; 226 கல்லுாரி விடுதிகள். இவற்றில் தங்கி, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி, எட்டு லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்

கல்லுாரி விடுதிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின், ஆங்கிலப் பேச்சாற்றல் மற்றும் தனித்திறனை வளர்க்க, இரண்டு கோடி ரூபாய் செலவில், பயிற்சி அளிக்கப்படும்

விடுதிகளில் புதிதாக சேரும் மாணவ, மாணவியருக்கு, பாய்களுக்கு பதிலாக, 25 லட்சம் ரூபாய் செலவில், ஜமக்காளம் வழங்கப்படும்

விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவியருக்கு, ஒவ்வொருபாடப்பிரிவிற்கும், தலா, 1,000 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

TNPSC:குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் ஆறரை லட்சம் பேர் விண்ணப்பம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்.8 கடைசி நாள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண் ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

5,451 காலியிடங்கள்

தமிழக அரசின் பல்வேறு துறை களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) மற்றும் வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டிருந்தது. இதற்கான ஆன்லைன் விண்ணப் பம் கடந்த ஆகஸ்டு 9-ம் தேதி தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி, 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரி வித்தார்.ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும். இன்னும் 8 நாள்கள் காலஅவகாசம் இருப்பதால் சுமார் 11 லட்சம் பேர் விண்ணப்பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வுக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணச் சலுகை

குரூப்-4 தேர்வுக்கு கட்டணமாக ரூ.75 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிரந்தரப் பதிவுக்கென ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தைப் பொருத்த வரையில், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் தேர்வுக் கட்டணம்ஏதும் செலுத்தத் தேவையில்லை. பிசி, பிசி (முஸ்லிம்) எம்பிசி, டிஎன்சி வகுப்பினர் பட்டதாரியாக இருப்பின் 3 முறை மட்டும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

நவம்பர் 6-ம் தேதி

3 முறை தேர்வுக் கட்டணச் சலுகையை அனுபவித்தவர்கள் அதன்பிறகு கண்டிப்பாக தேர்வுக் கட்டணம் செலுத்தித்தான்தேர் வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 3 முறை என்ற நிபந்தனையைத் தாண்டி தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் விண்ணப்பித்து ஒருவேளை பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அத்தகைய விண்ணப்பதாரர்கள் பிரச்சி னையை எதிர்கொள்ள நேரிடும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். எனவே, கட்டணச்சலுகை வாய்ப்பு பெற்றிருப்பவர்கள், எத்தனை முறை கட்டணச்சலுகையை பயன் படுத்தியுள்ளோம் என்பதை உறுதி செய்துவிட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.

உண்மைத்தன்மை சான்றிதழுக்கு இழுத்தடிக்கும் காமராஜ் பல்கலை : விரக்தியில் ஆசிரியர்கள்

மதுரை காமராஜ் பல்கலையில், கல்லுாரி ஆசிரியர்கள் பட்டச் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை (ஜெனுானஸ்) சான்று வழங்குவதில் இழுத்தடிக்கப்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு கல்லுாரிகளில் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், தங்கள் கல்வித் தகுதிக்கான பட்டச் சான்றுகளை கல்லுரிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இதன்பின், சம்பந்தப்பட்ட பல்கலைக்கு அச்சான்றுகள் அனுப்பி வைக்கப்பட்டு, அவற்றின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்படும்.சான்றிதழ்களை அனுப்பி வைக்கும்போது, சம்பந்தப்பட்ட கல்லுாரி முதல்வர் சார்பில் அதற்கான கட்டணமும் காசோலையாக அனுப்பி வைக்கப்படும். அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் உண்மைத்தன்மைக்கான சான்று சம்பந்தப்பட்ட கல்லுாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் மதுரை காமராஜ் பல்கலையில், இப்பணிகள் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது என கல்லுாரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து சிவகங்கை அரசு கல்லுாரி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:இக்கல்லுாரியில் பணியாற்றும் 43 பேரின் இளங்கலை, முதுகலை, எம்.பில்., பி.எச்டி., பட்டச் சான்றுகள் உண்மை தன்மைக்காக காமராஜ் பல்கலைக்கு 30.9.2015ல் அனுப்பி வைக்கப்பட்டது. உடன் 64,500 ரூபாய்க்கான காசோலையும் இணைக்கப்பட்டது. ஆனால் இதுவரை யாருக்கும் சான்றிதழ் அனுப்பி வைக்கவில்லை.

ஆனால் இதே கல்லுாரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, பாரதிதாசன் போன்ற பல்கலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உடன் அதற்கான உண்மை தன்மை சான்று கிடைத்து விட்டது.ஆனால் காமராஜ் பல்கலையில் மட்டும் இன்னும் கிடைத்தபாடில்லை. சான்றிதழ் பிரிவில் கேட்டால் 'அதுபோன்ற சான்றிதழ்களே வரவில்லை,' என பதில் கூறுகின்றனர். ஆனால்அரசியல், அதிகாரிகள் சிபாரிசில் சில ஆசிரியர்களுக்கு மட்டும் உண்மை தன்மை சான்று அளிக்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம். பல்கலை பதிவாளர் இப்பிரச்னை குறித்து விசாரித்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

பள்ளி மாணவருக்கு தூய தமிழ் அகராதிகள்: பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு.

பள்ளி மாணவர்களுக்குத் தூய தமிழ் அகராதிகள் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அறிவித்தார்.சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு புதன்கிழமை பதிலளித்து அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்:
மாணவர்களின் மனதில் நல்ல தமிழ்ச் சொற்களைப் பதிய வைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக வழக்கிழந்து வரும் தூய தமிழ்ச் சொற்களைப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதற்கு உதவிட நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, பட விளக்கத்துடன் கூடிய அகராதியைத் தொகுத்து வகுப்பு வாரியாக கல்வித துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

கலைக் கழகம்:

 தமிழ்மொழியை காக்கும் நோக்கில் அன்றாடம் பயன்பாட்டுக்கு வரும் பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைத் தரப்படுத்தி ஊடகங்களுக்கும், அறிவியாளர்களுக்கும், மொழியியலாளர்களுக்கும் வழங்கும் நோக்கில் அகர முதலி இயக்ககத்தில் தமிழ் கலைக் கழகம் ஏற்படுத்தப்படும்.தமிழ்ச் சொற்களைப் பகுத்தறிந்து அறிவியல் நோக்கில் ஆய்வு செய்து, புதிய கலைச் சொற்களை உருவாக்க விரும்புவோருக்கு உதவிடவும், தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளின் தமிழ்ப் பாடத் தேர்வர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் வகையிலும் தமிழ்ச் சொற்களின் சரியான வேர்ச் சொற்களைத் தொகுதித்து வேர்ச் சொல் சுவடி எனும் நூல் அச்சிட்டு வெளியிடப்படும்.

தமிழாய்வு அரங்கம்:

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் அயல்நாட்டறிஞர் அழைக்கப்பட்டு தமிழாய்வு அரங்கம் நடத்தப் பெறும். இந்த அரங்கம் நடத்தப்படுவதால் தமிழுக்கு புதிய ஆய்வு நூல் கிடைப்பதோடு தமிழாய்வு மேலும் செம்மையுறும்.தமிழியல் ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறும் வகையில், தமிழ் இலக்கியம் தடம் பதித்த 116 ஆண்டுகள் என்ற தலைப்பின் கீழ், 1900 முதல் 2016 வரை வெளிவந்த இலக்கிய நூல்களின் விவர அட்டவணை தமிழ், ஆங்கில மொழிகளில் வெளியிடப்படும்.கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு நூலகம் சீராக்கி பராமரிக்கப்படும். மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் புதிதாக மூன்றாம் பரிசு வழங்கப்படும். இந்தப் பரிசு ரூ.5 ஆயிரம் கொண்டதாக இருக்கும்.

மென்தமிழ்ச் சொல்லாளர் மென்பொருள்:

 கணினியில் ஆங்கிலமொழிக்கென சொல் திருத்தம் செய்யும் வசதி இருக்கிறது.இதே போன்று தமிழில் ஒற்றுப்பிழை, சந்தி, மயங்கொலி உள்ளிட்ட இலக்கணப் பிழைகள் ஏதுமின்றி எழுதத்தக்க வகையிலும், தவறுகளைத் தானே சுட்டிக் காட்டித் திருத்திக் கொள்ளும் வகையிலும் ரூ.300 மதிப்பில்"அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர்' மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் முதல் கட்டமாக 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்குப் பெற்று வழங்கப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தார்.குவாஹாட்டி பல்கலை.யில் தமிழ் பயில உதவித்தொகைஅசாம் மாநிலம் குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் தமிழை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்:அசாம் மாநிலத்தில் உள்ள குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் தமிழை விருப்பப் பாடமாகப் பயிலும் 6 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.1.39 லட்சம் வழங்கப்படும். மேலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை அளிக்கப்படும்.21-ஆம் நூற்றாண்டில் அயலகத் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் 5 அயலக நாடுகள் ஒவ்வொன்றில் இருந்தும் தகுதி வாய்ந்த 5 தமிழ்ப் படைப்பாளர்களிடம் இருந்து கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை போன்ற தரமான படைப்புகளைப் பெற்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நூல்களாக வெளியிடப்படும்.

மோரீஷஸில் தமிழ்:

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஒன்றான மோரீஷஸ் நாட்டில் தமிழர்களுக்குத் தமிழ் மொழியை எழுதவும், பேசவும் பயிற்சி அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று ராமச்சந்திரன் அறிவித்தார்.

தேசிய ஆசிரியர் விருதுகள் அறிவிப்பு : சென்னையில் ஒருவர் கூட இல்லை

தமிழகத்தில், சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சென்னையில் ஒரு அரசு பள்ளி கூட இடம்பெறவில்லை.

           செப்., 5 ஆசிரியர் தினத்தையொட்டி, மாநில அளவில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள், பணித்திறன் அடிப்படையில், தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படுவர்.

        இந்த ஆண்டு, தமிழகத்தில், 23 பேருக்கு, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பஞ்சாயத்து ஒன்றிய துவக்க பள்ளிகளை சேர்ந்த, 10 பேர் இடம்பெற்றுள்ளனர். மேலும், நீலகிரி மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் அரசு பள்ளி ஆசிரியர், அரசு பள்ளிகளை சேர்ந்த நான்கு பேர், தனியார் பள்ளிகளை சேர்ந்த, 10 பேர் என, மொத்தம், 23 பேர், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகையை கொண்ட, சென்னை மற்றும் அதையொட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஒரு அரசு பள்ளி ஆசிரியர் கூட விருதுக்கு தேர்வாகவில்லை. சென்னை மயிலாப்பூர் பி.எஸ்., பள்ளி மற்றும் தாம்பரம் சி.எஸ்.ஐ., கார்லி பள்ளி என, இரண்டு தனியார் பள்ளி ஆசிரியர்கள், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆதிதிராவிட பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி

 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும்,'' என, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி அறிவித்தார்.

சட்டசபையில், அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:

மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சதுரங்க விளையாட்டின் விதிமுறைகள்

முதல் வகுப்பு தமிழ் "வா மழையே வா " பாடல் வீடியோ

இந்த மாதம் தொழில் வரி !

ஆறுமாத வருமான அடிப்படையில் இந்த தொழில் வரி ஏப்ரல் முதல்  செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல்  மார்ச் வரை மாநில அரசுக்கு செலுத்தப்படுகிறது.

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு:நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (செப்.2) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

ரோசய்யா பதவிக் காலம் நிறைவு: தமிழக ஆளுநராக வித்யாசாகர் ராவுக்கு கூடுதல் பொறுப்பு


தமிழக ஆளுநராக சென்னமனேனி வித்யாசாகர் ராவை நியமித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

தேசிய அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வேலூர் அரசுப் பள்ளி மாணவர்கள்


விருத்தாச்சலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டியில் வடுகந்தாங்கல் அரசுப் பள்ளி மாணவர்கள் கயிறு இழுக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றனர்.
மத்திய அரசு சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஊரக விளையாட்டுப் போட்டி கடந்த 27 மற்றும் 28-ம் தேதிகளில் விருதாச் சலத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.

அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 42 % உயர்வு ???

ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளை அடையாளம் காண உதவும் ஐ பாட் விளையாட்டு!

ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளை அவர்களை  ஐ பாட்டில் விளையாட்டுகளை விளையாடச் செய்வதன் மூலம் கண்டறிய முடியும் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ மாகாணாத்தில் உள்ளது ஸ்ட்ராத்க்ளைட் பல்கலைக்கழகம். இதன் குழந்தைகள் வளர்ப்பு மற்றும் முன்னேற்ற பிரிவின் மூத்த பேராசிரியர் ஜொனாதன் பட். இவர் போலந்து நாட்டைச் சேர்ந்த 'ஹரிமட்டா' எனும் நிறுவனத்துடன் சேர்ந்து இது தொடர்பான ஆய்வை  மேற்கொண்டுள்ளார். இதன் முடிவுகள் லண்டனில் இருந்து வெளிவரும் 'சைன்டிபிக் ரிப்போர்ட்ஸ்' என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் முடிவுகள் பற்றி தலைமை ஆய்வாளர் ஜோனாதன்  பட் தெரிவித்துள்ளதாவது:

ஆட்டிசம் என்பது குழந்தை பருவத்தில் ஏற்படும் ஒரு நரம்பு மண்டல வளர்ச்சி தொடர்பான  குறைபாடாகும். இதன் மூலம் குழந்தைகள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளுதல் மற்றும் உரையாடுவதில் பிரச்சினைகள்  உண்டாகும்.

இதன் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இதை சரி செய்வதற்கான பல்வேறு சேவைகளை பெற வாய்ப்பு ஏற்படும்.

இந்த ஆராய்ச்சியை பொறுத்த வரை மூன்று முதல் ஆறு வரையுள்ள ஆட்டிச பாதிப்புக்குள்ளான  37 சிறுவர்களை திரட்ட ப்பட்டனர். பின்பு அவர்களிடம் 'மூவ்மெண்ட் சென்சார்கள்' பொருத்தப்பட்ட ஐபாட் உள்ளிட்ட டேப்லெட்டுகளில் விளையாட்டுகளை  விளையாடுமாறு பணிக்கப்பட்டனர்.

பின்னர் அவர்களை கையசைவுகளை ஆய்வு செய்த பொழுது, அவர்கள் டேப்லெட்டுகளை அதிக விசையுடன் பயன்படுத்துவதும், அவர்களின் கை  நகர்த்தல் முறைகளில், ஒரு குறிப்பிட்ட முறையில் விசையின் பயன்பாடு இருப்பதையும் கண்டறிந்தனர்.

இதை ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு என்று கூறலாம்,. ஏனென்றால் இதன் மூலம் கடுமையான மற்றும் அதிக செலவு பிடிக்கும் சிகிச்சை முறைகளை நாட வேண்டிய அவசியம் இருக்காது.

ஆனால் இது தொடர்பாக இன்னும் பல ஆய்வுகளை செய்ய வேண்டி உள்ளது. மேலும் இதன் எல்லைகள் என்ன என்பது குறித்தும் விரிவான விளக்கங்கள் தேவைப்படுகிறது.

இவ்வாறு ஜோனாதன் தெரிவித்தார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!