Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 2 September 2016

மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை நடைபெறும் பள்ளி தேர்வுகளை நடத்தும் பொறுப்பு மேல்நிலை உதவி தலைமையாசிரியரே -தகவல் அறியும் உரிமைச் சட்ட தகவல்

SSA - HOW TO UTILIZE SG / MG GRANTS REGARDING PROCEEDING....

அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பதவி உயர்வுக்கான துறைத்தேர்வுகள் ஆண்டுக்கு 2 தடவை (மே, டிசம்பர்) டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்பட்டு வருகின்றன. 
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 2-வது துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்துள்ளார்.

G.O.Ms.No.241 Dt: August 24, 2016 MEDICAL AID -New Health Insurance Scheme 2016 for employees – New Health Insurance Scheme 2014 for Pensioners / Family Pensioners – Grievances Redressal Mechanism– Orders - Issued.ஆசிரியர்கள் பேட்டி அளிக்க தடை

அரசு பள்ளி ஆசிரியர்கள் பேட்டி அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள், பல செயல்முறை பயிற்சிகளை வழங்குகின்றனர்.

03.09.2016 அன்று நடக்கும் மாவட்ட கலந்தாய்வு - வேலூர் மாவட்ட அட்டவணை


பணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் சட்டசபையில் மசோதா தாக்கல்

அரசுப் பணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் கொண்ட சட்டமசோதாவை நிதி, பணியாளர் மற்றும்நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார்.

அதன் விவரம் வருமாறு:
அரசுப் பணிகள் மற்றும் பதவிகளுக்கு பணியமர்த்தப்படும் நபர் களின் நியமனம் மற்றும் பணி வரன்முறை ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன.தற்போது சட்டமன்றத்தின் சட்டம் ஒன்றினால் அத்தகைய பணிகள் மற்றும் பதவிகளுக்கு பணியமர்த்தப்படும் நபர் களின் நியமனம், பணி வரன்முறையை ஒழுங்குமுறைப்படுத்தும் வகைமுறை களைச் செய்வது என்று அரசு முடிவு செய்திருக்கிறது. அதனுடன் செயல்படும் வகையில் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகள் விதிகளின் பகுதி-1, பகுதி-2 ன் வகைமுறைகளை உள்ளடக்கும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதென அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் அரசால் வகுத்துரைக்கப் பட்டுள்ள சுழற்சி முறையிலான தெரிவுக்கிணங்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது பிற நியமன முகமைகள் அல்லது பதவி யமர்த்தும் அதிகார அமைப்புகளால் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பணிமூப்புக்காக வகை செய்யும் பொருட்டு, ஒரு பணியில் பதவியமர்த்தம் செய்யப்பட்டதற்கான நபர்களின் பணிமூப்புக்கென தனியாக சட்டம் கொண்டு வருவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.பிரிவு அல்லது இனம் அல்லது தரம் ஒதுக்கீட்டின் விதி மற்றும் சுழற்சிமுறை ஆணைப்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது பிற நியமன முகமைகள் அல்லதுபதவியமர்த்தும் அதிகார அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட பட்டியலில் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வரிசையிடத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண் டும் என்று சட்டமசோதாவில் குறிப் பிடப்பட்டுள்ளது.

11வது புத்தகக் கண்காட்சி மதுரையில் இன்று துவக்கம் : செப்.12 வரை நடக்கிறது

மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில், 11வது புத்தகக் கண்காட்சி இன்று (செப்., 2) துவங்கி, 12ம் தேதி வரை தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது. 

 

            மொத்தம், 250 ஸ்டால்களில் ஐந்து லட்சம் தலைப்புகளில், புத்தகங்கள் இடம் பெறுகின்றன. நாடு முழுவதும் உள்ள பதிப்பாளர்களின் புத்தகங்கள் மற்றும் மாணவர், சிறுவர்களுக்கான புத்தகங்கள் கிடைக்கும். தினமும் மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கண்காட்சி, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கும்; அனுமதி இலவசம்.

'பபாசி' செயலர் புகழேந்தி கூறியதாவது: கடந்த புத்தகக் கண் காட்சியை 10 லட்சம் பேர்

பார்வையிட்டனர். இந்த ஆண்டு கூடுதலாக பார்வையாளர்கள் வரலாம். கடந்த முறை மூன்று கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்றன. இந்த ஆண்டும் கூடுதலாக விற்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் திறமையை வெளிக்கொணர பேச்சு, கட்டுரைப் போட்டி நடத்தி பரிசு வழங்கப்படும்.புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடியில் வழங்கப்படும். மாணவர்கள் பார்வையிட, கல்வி அதிகாரிகளை கேட்டு உள்ளோம். சிட்டி யூனியன் வங்கியின் தானியங்கி பணம் எடுக்கும் வசதி, குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறையினரிடம் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது. ஈரோடு, கோவை என அடுத்தடுத்து கண்காட்சி நடத்திய போதும், வாசகர்களின் எண்ணிக்கை குறையவில்லை. சென்னை, கோவை, மதுரையில் 'பபாசி' சார்பிலும், மற்ற இடங்களில் தனியாருடன் இணைந்தும் புத்தகக் கண்காட்சி நடத்தப்

படுகிறது என்றார். சர்வோதய இலக்கியப் பண்ணை நிர்வாகி புருசோத்தமன், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

எட்டாம் வகுப்பு 'ரிசல்ட்'

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள், வரும், 6ல் வெளியாகிறது. எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, ஏப்., மாதம், பொதுத் தேர்வு நடந்தது. 

 

      இதன் முடிவு, வரும், 6ல் வெளியாகிறது. ''தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, செப்., 6 முதல், 10 வரை, அவரவர் தேர்வு எழுதிய மையங்களில், பெற்றுக் கொள்ளலாம்,'' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.

வேதாரண்யம்: நட்புக்கு மரியாதை செலுத்திய மாணவர்கள்

மனிதநேயம் இன்னும் மரித்துப் போகவில்லை என்பதை உலகுக்கு உரத்துச் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது வேதாரண்யம் அருகே நடந்துள்ள இரு நிகழ்வுகள். தாங்களே எளிய, வறுமை நிலையில் இருந்தாலும் சக மாணவர், மாணவியின் துயரம் உணர்ந்து உதவிசெய்து நட்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர் பள்ளி மாணவர்கள் சிலர்.

நண்பனுக்காக கழிவறை…

வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடி தெற்கு எஸ்.கே. அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சக மாணவருக்கு அதேபள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் கழிவறை கட்டித் தந்துள்ளனர். எஸ்.கே. அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் அகத்தியன். அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுவதால், அகத்தியன் பள்ளிக்கு சரியாக வராததையடுத்து அதேவகுப்பில் படிக்கும் ஹரிஷ், ராகுல், வசிகரன், நவீன்ராஜ் ஆகியோர் அகத்தியனின் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர்.

அகத்தியனின் வீட்டில் கழிவறை இல்லாததால் திறந்தவெளியில் காலைக் கடன்களை கழிப்பதும், அதனால் உடல்நிலை பாதிப்புக்குள்ளாவதும் தெரியவந்ததையடுத்து, இந்த நிலை குறித்து மற்றவர்களிடம் தெரிவித்த மாணவர்கள் நால்வரும் சக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் ரூ.5,000 நிதி திரட்டினர்.

பள்ளி சென்ற நேரம் போக மீதி நேரத்தில், ஒரு கொத்தனார் உதவியுடன் தாங்களே சித்தாள் வேலையைச் செய்து 3 நாட்களில் கழிவறையை கட்டி முடித்த மாணவர்கள் நால்வரும் அதனை அகத்தியன் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

மாணவி சிகிச்சைக்கு உதவி…

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி திவ்யா, உப்பு நீர் நோயால் பாதிக்கப்பட்டு திருத்துறைப்பூண்டி, தஞ்சை, சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திவ்யாவின் தந்தை செல்வம் இறந்துவிட்டார். தாய் விஜயலட்சுமி, 100 நாள் வேலைக்குச் சென்று, மகள் திவ்யா, மகன் தினேஷ் ஆகியோரைக் காப்பாற்றி வருகிறார்.

உப்பு நீரால் பாதிக்கப்பட்ட திவ்யா, சிகிச்சைக்குப் பணமில்லாத நிலையில் கடந்த வாரம் பள்ளிக்கு வருவதைக்கூட நிறுத்திக்கொண்டுவிட்டார். இதையறிந்த, அப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் தந்தையை இழந்த மாணவர்கள் மாரீஸ்வரன், அருண்ராஜ் ஆகிய இருவரும் திவ்யாவுக்கு மருத்துவ செலவுக்கு உதவ நினைத்தனர்.

பள்ளித் தலைமையாசிரியர் வசந்தியை அணுகி, திவ்யாவின் நிலைமையை எடுத்துக் கூறினர். அதனையடுத்து தலைமையாசிரியை ரூ.500 வழங்கினார்.

மற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிக ளிடம் நிதிதிரட்டினர். வசூலான மொத்த தொகை ரூ.10,565-ஐ மாணவர்கள் இருவரும் திவ்யாவின் மருத்துவ செலவுக்காக வழங்கினர்.

சக மாணவியின் மருத்துவ செலவுக்காக உதவிய மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மனதாரப் பாராட்டினர். எனினும், மாணவி திவ்யா தொடர் சிகிச்சை பெறவேண்டிய நிலையில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பாசிரியர்: ஹேமாவதி- மாணவியர் நலம் காக்கும் அறிவியல் ஆசிரியர்!

புன்சிரிப்புடன் அன்பாசிரியர் ஹேமாவதி

36 வருட கற்பித்தல் அனுபவம், 1989- 1992 வரை அறிவொளி இயக்க பெண் ஒருங்கிணைப்பாளர், மத்திய கல்வி ஆலோசனை வாரிய உறுப்பினர் (2010-13), தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுவின் (NCERT) செயற்குழு உறுப்பினர், அனைவரும் படிப்பதற்கான உரிமை (RTE) சட்ட உருவாக்கத்தில் பங்கு, தொழிற்கல்வி வரைவுகள் உருவாக்கம், தொடக்கப்பள்ளிகளின் துணை ஆய்வாளராக நான்கு வருடங்கள், தொடர்ந்து அறிவியல் காட்சிகளை நடத்தும் திறம், பெண் கல்வி, சுகாதாரம், மனநலம் பேணும் பாங்கு உள்ளிட்ட பன்முகங்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார் புதுச்சேரி சவராயலு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேமாவதி. அவரின் அனுபவப் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்...

''ஆசிரியப் பணியின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்ததால், 1980-ல் ஆசிரியராக என்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினேன். 2010-ல் புதுச்சேரி இரண்டாவது மண்டல தொடக்கப்பள்ளிகள் துணை ஆய்வாளர் பதவி கிடைத்தது. இதில் 35 அரசுத் தொடக்கப்பள்ளிகளும், 30 தனியார் பள்ளிகளும் அடக்கம். தினமும் ஒரு பள்ளிக்குச் செல்வேன். பள்ளி மாணவர் வருகை, ஆசிரியர் பாடம் எடுக்கும் விதம், மாணவரின் ஒழுங்கு, சுகாதாரம் உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

அதிக கவனம் தேவைப்படும் குழந்தைகள், சிறப்பு கவனிப்புக்கு உட்படுத்தப்பட்டார்கள். பாடங்கள் வழியாக கல்வி கற்காதவர்களுக்கு பாட்டு, விளையாட்டு வழியாகக் கல்வி கற்பிக்கப்பட்டன. கற்பித்தல் முறைகள் அதிகரிக்கப்பட்டன. மண்டல அளவில் நிறைய கண்காட்சிகளை நடத்தினோம். ஒளி, ஒலி, வெப்பம் உள்ளிட்ட தலைப்புகளில் கண்காட்சிகள் நடத்தப்பட்டன.

நீர்த்திருவிழா

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அதைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையிலும் நீர்த்திருவிழா நடத்தினோம். அப்போதைய புதுவை முதல்வர் அதைத் திறந்து வைத்தார். இதில் இரண்டாவது மண்டலத்தில் இருக்கும் 65 தொடக்கப்பள்ளிகளும் கலந்துகொண்டன. 3, 4, 5-ம் வகுப்பு மாணவர்கள் இதில் பங்கேற்றனர். நீர் சார்ந்த ஒவ்வோர் ஆய்வும், மற்றவையோடு சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடாது என்பது மட்டும் விதிமுறை. 3 * 65 பள்ளிகள் சேர்த்து மொத்தம் 195 வெவ்வேறான செய்முறை ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. தண்ணீரின் தோற்றம் குறித்த கதைகள் மாணவர்களுக்குச் சொல்லப்பட்டன. 3 நாட்கள் நடைபெற்ற கண்காட்சியை முறையாக சிடியில் பதிவு செய்து அவற்றை மற்ற மண்டலப் பள்ளிகளுக்குக் கொடுத்தோம். இன்றளவிலும் அவை பயன்பாட்டில் இருக்கின்றன.

நீர்த்திருவிழாவைத் தொடர்ந்து, ஆற்றல், காற்று, ஒளி, ஒலி குறித்த ஆய்வுகளும் நிகழ்த்தப்பட்டன. கற்றலின் திறனை மேம்படுத்தும் பொருட்டு பாடங்கள் கடினப்பகுதிகள், எளிமையான பகுதிகள் என்று பிரிக்கப்பட்டன. அவை ஆசிரியர்களால் கற்றல் கற்பித்தல் உபகரணங்களைக் கொண்டு, சீரிய முறையில் கற்பிக்கப்பட்டன. இதையும் கண்காட்சியாக்கினோம். ஒரு விஷயத்தை நேரடியாக, செயல் வடிவத்தில், திரும்பத் திரும்பப் பார்த்தால் புரிதல் திறன் அதிகரிக்கும் என்னும் நோக்கில் கண்காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

கற்றல் திறன் உயர்த்துவோம்

2014-ல் 'கற்றல் திறன் உயர்த்துவோம்' நிகழ்வில், 3, 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களில் யாருக்கு என்ன திறன் என்று அலசப்பட்டது. 4 பிரிவுகள் உருவாக்கப்பட்டு எழுத்தைப் படிக்க சிரமம் உடையவர்கள் முதல் பிரிவிலும், சொல்லில் சிரமம் உடையவர்கள் இரண்டாம் பிரிவிலும், வாக்கியத்தில் சிரமமுடையவர்கள் மூன்றாம் பிரிவிலும் சேர்க்கப்பட்டனர். நன்கு படிக்கமுடிபவர்களுக்கு நான்காம் பிரிவு. இவை தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு மொழிகளுக்காக உருவாக்கப்பட்டன. (கணிதம் - எண், ஒற்றை இலக்கம், இலக்கங்கள், கூட்டல் கழித்தல் வகைப் பிரிவுகள்)

இந்த முறையை முன்மதிய வேளைகளில் மட்டும் பின்பற்றினோம். பின்மதியத்தில் வழக்கமான வகுப்புகள் நடந்தன. ஆச்சரியப்படும் விதமாக எல்லோரும் ஒரே மாதத்தில் அடுத்தடுத்த பிரிவுகளுக்குச் செல்லும் வகையில் முன்னேற்றம் அடைந்தார்கள். கடைசியாக 1, 2, 3-ம் பிரிவுகளே இல்லாத நிலை உருவாகியது. இதைப் பின்னர் பல பள்ளிகள் பின்பற்ற ஆரம்பித்தன.

இப்போது சவராயலு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், எல்லோரும் பிழையில்லாமல் எழுதப் படிக்கவேண்டும் என்ற இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மாணவிகளில் பெரும்பாலானோரின் பெற்றோர் அமைப்புசாராத் தொழிலாளர்கள். அவர்களின் வாழ்க்கையைக் கல்வி ஒன்றே மாற்றும் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அறிவியலைப் படித்தால் உலகத்தையே புரிந்துகொள்ள முடியும். கடுகு ஏன் எண்ணெயில் போட்டால் மட்டும் வெடிக்கிறது, ஏன் சமையலுக்கு எண்ணெயைப் பயன்படுத்துகிறோம் ஆகிய அடிப்படை விஷயங்களில்கூட அறிவியல் ஒளிந்திருக்கிறது. அதனால் அண்டம், வானம், சூரிய கிரகணம், சந்திய கிரகணம் ஆகியவை குறித்த ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்துகிறோம்.

கணிதம் மற்றும் அறிவியலுக்கென ஆக்டிவிட்டி அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காகிதங்களில் ஓரிகாமி கலையின் மூலம் எல்லா வடிவக் கோணங்களையும் செய்கிறோம். சமூக அறிவியலில் அவர்களைக் கையாலேயே இந்தியாவின் வரைபடத்தை வரையச் சொல்வோம். இதன்மூலம் அவர்களின் சமூகப்பார்வை விரியும். இதைத்தவிர அடிக்கடி விடுமுறை எடுப்பவர்களின் வீட்டுக்கு நேரில் போய்ப் பேசியிருக்கிறோம். பள்ளி இடைநிற்றலைத் தடுக்க பெரும்பங்கு ஆற்றியிருக்கிறோம்.

சவராயலு பெண்கள் மேல்நிலைப்பள்ளி

ரூ. 1க்கு நாப்கின்

பள்ளியின் சுத்தத்தைப் பேணிக்காப்பதில் கவனத்துடன் இருக்கிறோம். தூய்மையான குடிநீரையே பயன்படுத்தி வருகிறோம். பள்ளியில் மாணவிகள் சிலர் மாதவிடாயின்போது துணியைப் பயன்படுத்தி வந்தனர். கையிலிருந்த நன்கொடைப் பணம் மூவாயிரத்துக்கு சானிட்டரி நாப்கின்கள் வாங்கினோம். துணியைப் பயன்படுத்தும் ஏழை மாணவிகளுக்கு 1 ரூபாய்க்கு நாப்கின்கள் வழங்கிவருகிறோம்.

மாதவிடாயின்போது மாணவிகள் வருத்தத்துடனும் சிடுசிடுப்பாகவும் இருந்ததைக் கவனித்தோம். சில நேரங்களில் அவர்களின் தாயும் அதற்குக் காரணமாக இருந்தார். அதனால் இருவருக்கும் ஒரேநேரத்தில் ஆலோசனை அளிக்கப்பட்டது. இந்த தருணத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. இனிப்புகள் வழங்கினோம். இந்த நிகழ்வு இல்லையெனில் உலகமே இருந்திருக்காது என்பதைப் புரியவைத்தோம்.

மருத்துவ ஆலோசனை

பாலின ஈர்ப்பு, உடல் வளர்ச்சி, செயல்பாடுகள் குறித்து வருடத்துக்கு குறைந்தது 2 முறை மருத்துவர்களை அழைத்து வந்து முறையான ஆலோசனை வழங்குகிறோம். அதில் கேள்வி நேரமும் உண்டு. மாணவிகள் தங்களின் சந்தேகங்கள், கேள்விகளை அவர்களிடமே நேரடியாகக் கேட்கலாம். இந்த ஆலோசனையை தொடர்ந்து வழங்குவதால் கடந்த சில ஆண்டுகளாக எங்கள் மாணவிகள் சரியான புரிதலுடன் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். மாணவர்களை சக தோழர்களாகப் பார்க்கும் பார்வையை மாணவிகளிடத்தில் வளர்த்தெடுத்து வருகிறோம்.

பெண்கள் பள்ளி என்பதால் மாலை பள்ளிக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு உண்டு. மாணவிகள் அடையாளம் தெரியாத நபர்களோடு பழகுவது தெரியவந்தால், கண்டிக்காமல் எடுத்துக் கூறுகிறோம். அவை எல்லாவற்றையும் எல்லாருக்கும் சொல்லாமல் பாதுகாக்கிறோம். அதை ஒரு விபத்தாகப் பார்க்காமல் சம்பவமாகவே பார்க்கச் சொல்லி ஆசிரியர்களை அறிவுறுத்துகிறோம். இளைய தலைமுறையை உணர்ச்சிபூர்வ சமூகத்திலிருந்து, அறிவியல் சார்ந்த அறிவுச் சமூகமாக மாற்றவேண்டும் என்பதே என் ஆசை'' என்கிறார் அன்பாசிரியர் ஹேமாவதி.

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

இலவச அழைப்புகள், ரோமிங் கட்டணம் ரத்து, 4ஜி சலுகை: ரிலையன்ஸ் ஜியோ அதிரடி


ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஆகாஷ் அம்பனி, நீடா அம்பானி, முகேஷ் அம்பானி | படம்: விவேக் பிந்த்ரா

இலவச அழைப்புகள், ரோமிங் கட்டண ரத்து, குறைந்த கட்டணத்தில் 4ஜி என பல்வேறு சலுகைகளை ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது ஜியோ 4ஜி சேவையில் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஆண்டு பொதுக் கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ 4ஜி மொபைல் சேவை குறித்த முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பேசிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, குறைந்த நேரத்தில் வாடிக்கையாளர்களை எட்டுவதே நோக்கம் என்றும், மேலும் இந்தியாவின் 18,000 நகரங்கள், 2 லட்சம் கிராமங்கள் என 90 சதவித மக்களை (1.25 பில்லியன்) மார்ச் 2017க்குள் சென்றடைவதே ரிலையன்ஸ் ஜியோவின் குறிக்கோள் என்றும் அறிவித்தார்.

ரிலையன்ஸ் ஜியோவின் முக்கிய அம்சங்கள்:

# நாடு முழுவதும் இலவச மொபைல் அழைப்புகள்

# ரோமிங்க் கட்டணம் ரத்து

# 4ஜி இணையத்தில் 1 ஜிபி பயன்பாட்டுக்கு ரூ. 50 கட்டணம்

# மாணவர்களுக்கு கூடுதலாக 25 சதவித இணைய பயன்பாடு இலவசம்

# முதல் 4 மாதங்களுக்கு மட்டும் இலவச இணைய பயன்பாடு

# ரூ. 19-ல் இருந்து மொபைல் திட்டங்கள்

# குறைவாக பயன்படுத்துவோருக்கு அடிப்படை திட்டம் மாதத்துக்கு ரூ. 149, அதிக அளவு இணையம் உபயோகிப்போருக்கு மாதத்துக்கு ரூ. 4,999 வரை.

# ரிலையன்ஸின் 'லைஃப்' பிராண்ட் மொபைல்கள் ரூ.2,999-ல் இருந்து விற்பனையாகும்

ரிலைய்ன்ஸ் ஜியோ செப்டம் 5-ம் தேதி முதல் சந்தைக்கு வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்புகள் மற்ற மொபைல் வாடிக்கையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட மற்ற முன்னணி மொபைல் சேவை நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோவின் போட்டி சிம்ம சொப்பனமாகவே இருக்கும் என துறை வல்லுநர்கள் இப்போதே கணித்து வருகின்றனர்

டெங்கு பரவாமல் தடுப்பது பற்றி பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்!3,970 காலி இடங்கள்: தேர்தல் நடத்துவது எப்படி?

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது . உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபரில் நடக்க உள்ளது. அதற்கான தேதி, ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. 
ஆனால், கிட்டதட்ட 3,970 பணியிடங்கள் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ளன. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை எப்படி அரசு நடத்த போகிறது என்னும் விதமாக கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்கள். கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது அவர், “கருஊரக வளர்ச்சித்துறையில் உதவியாளர்கள் 5,563 பேர்; இளநிலை உதவியாளர்கள் 3,137 பேர்; சுருக்கெழுத்து தட்டச்சர் 182 பேர்; தட்டச்சர் 1,042 பேர் மொத்தம் 9,924 பேர். இவர்களில் 3,970 பணி இடங்கள் காலியாக இருக்கிறதாம். இந்த ஆட்சியில் எந்த துறையில்தான் காலிப்பணி இடங்கள் இல்லாமல் இருக்கின்றன? 9,924 பணியிடங்களில் 3,970 பணியிடங்களை காலியாக வைத்துக்கொண்டு உள்ளாட்சித் தேர்தலை எப்படி நடத்துவது .

04-09-2016 அன்று நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு இணையதளம் வழியாக (ஆன்லைனில்) நடைபெறும்- பள்ளிக்கல்வி இயக்குநர் !


இரண்டாம் வகுப்பு "வடமொழி ஒலிப்புக்கான எழுத்துக்கள்' பாடல் வீடியோ

DSE:புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது மின்னணு மேலாண்மை மூலம் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக...CPS Annual Accounts Statement for the year 2015-2016 released

click here login id is your CPS NO ...
PASSWORD IS YOUR DATE OF BIRTH....

துப்புரவு பணியாளர் ஊதியம் குறித்த CM Cell Letter

CPS MISSING CREDITS*

*நண்பர்களே Cps பிடித்த தொகையில் missing credit வருகிறது எனில் விடுபட்ட தொகையை சரி செய்ய வேண்டும் எனில் கீழ்கண்ட Missing credit form-ல்* *விடுபட்டமாதங்களின் தொகையை பதிவு செய்து தங்களது DDO/AEEO சமர்ப்பிக்க வேண்டும் அவர்கள் பதிவு செய்து;FORWARD செய்து MISSING CREDIT சரிசெய்யப்படும்*

Directorate of Government Examinations SSLC Supplementary Examinations, September / October 2016 Time Table


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!