Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 6 September 2016

ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஏற்ப கட்டணங்கள் மாற்றப்படும்: பிஎஸ்என்எல் அறிவிப்பு


ரிலையன்ஸ் ஜியோ வருகையால் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் சவாலான காலகட்டத்தில் உள்ளன. இருந்தாலும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஏற்ப கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

போட்டி நிறைந்த சந்தையில் நிலைப்பதற்கு ஏற்ப கட்டணங்கள் மாற்றப்பட வேண்டும். இதில் சந்தேகம் இல்லை. வாடிக்கையாளர்களுக்கு இந்த போட்டி நல்லது. இதன் மூலம் அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவைகள் கிடைக்கும் என்றார். குரல் அழைப்புகளை இலவசமாக்கும் சூழல் இருக்கிறதா என்று கேட்டதற்கு, தற்போது அது குறித்து பரிசீலித்து வருகிறோம். இரண்டு மூன்று மாதங்கள் சந்தையில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்தே முடிவெடுக்க முடியும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் நெட்வொர்க் இருக்கிறது. குரல் அழைப்புகள் இலவசமாக கொடுக்க முடியும். ஆனால் மாதந்திர கட்டணம் வசூலிக்க வேண்டி இருக்கும். இது குறித்து பரிசீலிப்போம் என்றார்.

இரவு 9 மணி முதல் காலை ஏழு மணி வரை இந்தியா முழுவதும் இலவசமாக பேசிக்கொள்ளும் வசதி பிஎஸ்என்எல்-ல் இருக்கிறது. சமீபத்தில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து மொபைல் மற்றும் லேண்ட் லைன் இணைப்புகளுக்கும் இலவசமாக பேசிக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

DA from July 2016 will be 3% - NC JCM Secretary writes to Finance Secretary

DA from July 2016 will be 3% - NC JCM Secretary writes to Finance Secretary
Future computation of Dearness Allowance and adoption base index figure to Revised Minimum Wage – Regarding
“The next instalment of DA, which has become due as on 1.07.2016 if computed on the above basis of 260.46, shall work out to 3.28%. On ignoring the faction, the DA with effect from 01.07.2016 shall be 3%. We, request you to kindly take the above into account and issue orders for grant of 3% DA w.e.f. 01.07.2016.”
Shiva Gopal Mishra
Secretary
Ph:23382286
National council (Staff Side)
Joint Consulative Machinery for Central Government Employees
13-C, Ferozshah Road, New Delhi-110001
E-Mail : nc.jcm.np@gmail.com
No.NC/JCM/2016
Dated: September 6, 2016
The Secretary(Expenditure),
Ministry of Finance,
(Government of India),
North Block, New Delhi-110 001
Dear Sir,
Sub: Future computation of Dearness Allowance and adoption base index figure to Revised Minimum Wage – Regarding
The revised pay structure, as recommended by the 7th CPC, was given effect as on 01.01.2016 as per the Government’s Notification. The Dearness Allowance, which was computed at 125% ( i.e 125.75 fraction of 0.75 being ignored), got merged with Pay as on that date. The 7th CPC has not indicated as to what base figure of AICPI(IW) the Revised Wages will relate to hereafter wards. As you are aware, the actual DA that was due as on 01.01.2016 was 125.75. It is only due to the practice of ignoring fraction; the DA was determined at 125%. No doubt, the said practice had not been impacting very much except for the postponement of the benefit by six months. It is, therefore, necessary that, Revised Wages are related to a base index figure equivalent to actual Dearness Allowance percentage of 125 that stands merged as on 01.01.2016. This is more so due to the fact that there is no possibility of the ignored fraction of 0.75 being reckoned for any computation in future.
We, therefore, request that, 12 monthly average, which stood at 261.33 as on 31.12.2015, may be taken at 260.46, which would provide the exact percentage of DA at 125. The future percentage increase in DA in other words may be computed with the base figure of 260.46. The next instalment of DA, which has become due as on 1.07.2016 if computed on the above basis of 260.46, shall work out to 3.28%. On ignoring the faction, the DA with effect from 01.07.2016 shall be 3%. We, request you to kindly take the above into account and issue orders for grant of 3% DA w.e.f. 01.07.2016.
Comradely yours,
sd/-
(Shiva Gopal Mishra)
Secretary (staff side)
NC/JCM & Convener
Source: www.ncjcmstaffside.com

ALL DISTRICT ELEMENTARY DEEO'S CONTACT PHONE NUMBERS

HOW TO GET VOTER ID THROUGH ONLINE

*வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை*

📫 _ஆன் லைனில் அனைத்தும்_

👉🏼 http://www.elections.tn.gov.in/

*புதிதாக வாக்களர் அட்டை பெற*

👉🏼 http://104.211.231.134/ereg/

*வாக்களர் அட்டை திருத்தம் செய்ய*

👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8.aspx

*வாக்களர் அட்டை முகவரி மாற்றம் செய்ய*

👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8A.aspx

*உங்கள் போன் நம்பரை இனைத்திட*

👉🏼 http://electoralservicessearch.azurewebsites.net/searchbyna…

*உங்கள் மனு பற்றிய தகவல் நிலை அறிந்திட*

👉🏼 http://104.211.229.179/AppTracking/Tracking.aspx

*உங்கள் வாக்குசாவடி பற்றி அறிய*

👉🏼 http://104.211.231.197/electoralservices/

👆🏼மேல் கூறிப்பிட்டுள்ள அனைத்தும் உங்கள் மொபைல் போன் மூலமே நீங்கள் *இருந்த இடத்தில் இருந்தே* செய்து கொள்ளலாம். 

ரிசர்வ்வங்கி ஆளுநராக உர்ஜித்படேல் பொறுப்பேற்பு.

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரான உர்ஜித் படேல், நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில் அதிகாரபூர்வமாக பொறுப்பேற்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தொடக்க கல்வியில் இந்தியா 50 ஆண்டுகள் பின்தங்கும் ‘யுனெஸ்கோ’ ஆய்வறிக்கையில் தகவல்

‘யுனெஸ்கோ’ அமைப்பின் உலகளாவிய கல்வி கண்காணிப்பு பிரிவின் புதிய ஆய்வறிக்கை அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.

TET COURT NEWS:-வருகின்ற 13.09.2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் விசாரணைக்கு வருகிறது...


CPS - ACCOUNT STATEMENT, ALLOTMENT LETTER, MISSING CREDIT, NOMINEE DETAILS PUBLISHED ONLINE

ALL DISTRICT CEO OFFICE PHONE NUMBERS

1. CHENNAI 0442432735

2. COIMBATORE 04222391849

3.CUDDALORE 04142 286038

4.DHARMAPURI 04342 260085,261872

5. DINDIGUL 0451 2426947

  6. ERODE 0424 2256499,9442205805

7. KANCHEEPURAM 044 27222128

8. KANYAKUMARI 04652 227275

9. KARUR 04324 241805

10. KRISHNAGIRI 04343 239249

11. MADURAI 0452 2530651

12. NAGAPATTINAM 04365 243354

13. NAMAKKAL 04286 232094

14. PERAMBALUR 04328 224020

15. PUDUKOTTAI 04322 222180

16. RAMNAD 04567 220666

17. SALEM 0427 2450254

18. SIVAGANGAI 04575 240408

19. TANJORE 04362 237096

20. NILGIRIS 0423 2443845

21. THENI 04546 250315

22. THIRUVANNAMALAI 04175 224379

23. TIRUVARUR 04366 225903

24. TRICHY 0431 2708900

25. TIRUNELVELI 0462 2500702

26. TUTICORIN 0461 2326281

27. VELLORE 0416 22526690

28. VILLUPURAM 04146 220402

29. VIRUDHANAGAR 04562 252702

TNPSC:குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (செப். 8) கடைசி நாளாகும்.
இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் உள்ள 5,451 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) ஆகஸ்ட் 9-இல் வெளியிட்டது.

இதற்காக www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர்.
18 வயது பூர்த்தியந்தவர்கள் தேர்வை எழுதலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் 35 வயதுக்குள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயதுக்குள்ளும், பிற வகுப்பைச் சேர்ந்தோர் 30 வயதுக்குள்ளும் இருந்தால் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி அவசியம்: குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியாகும். அதில், தட்டச்சர் பதவிக்கு தமிழ்-ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழ் முதுநிலை-ஆங்கிலம் இளநிலை அல்லது ஆங்கிலம் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு விவரம்: எழுத்துத் தேர்வானது நவம்பர் 6-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். மொத்த மதிப்பெண்கள் 300. தேர்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்புத் தரத்தில் கேள்விகள் கேட்கப்படும். அதில், பொது அறிவுப் பிரிவில் 75 கேள்விகளும், திறனறிவு பிரிவில் 25 கேள்விகளும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பிரிவில் 200 கேள்விகளும் கேட்கப்படும். தேர்வு பாடங்களுக்கான பாடத்திட்டம், தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 லட்சத்துக்கும் அதிகம்: தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் வியாழக்கிழமையாகும் (செப். 8). மேலும், வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணத்தைச் செலுத்த செப். 11 கடைசியாகும். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
"இன்னும் மூன்று நாள்கள் வரை அவகாசம் இருப்பதால் தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஏழாவது ஊதியக் குழு அறிவிப்பு போன்ற அரசின் நடவடிக்கைகளால் அதிக ஆர்வம் உள்ளதால், விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொடும்' என டி.என்.பி.எஸ்.சி. அலுவலர்கள் தெரிவித்தனர்.

அக். 1 முதல் ஆதார் எண் வழங்கும் அரசு கேபிள் நிறுவனம்!

ஆதார் எண் வழங்கும் பணியை அக்டோபர் 1 முதல் தமிழக அரசின் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்திடம் அளிக்கப்பட உள்ளது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் மேற்கொண்ட கணக்கெடுப்பு விவரங்களை பாரத மிகு மின் நிறுவனம் கணினியில் சேகரித்து வருகிறது.
இந்த நிலையில், பாரத மிகு மின் நிறுவனத்திடம் இருந்து ஆதார் எண் வழங்கும் பணியை தமிழக அரசின் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதன்படி, அக்டோபர் 1 முதல் 400-க்கும் மேற்பட்ட இ. சேவை மையங்களில் ஆதார் எண் வழங்கப்பட உள்ளன.
ஆதார் எண் கிடைக்கப் பெற்றவர்களுக்கு பிளாஸ்டிக் வடிவிலான அடையாள அட்டைகளை அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்கெனவே வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

அரசின் கொள்கைகளில் எது சரி, எது மாற்ற வேண்டும் என்பதில் ஆசிரியர்கள் கருத்து சொல்ல வேண்டும்

அரசின்  கொள்கைகளில்  எது சரி, எது மாற்ற வேண்டும் என்பதில்  ஆசிரியர்கள் கருத்து சொல்ல வேண்டும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.  பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 379 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது.

சாந்ேதாம் செயின்ட் பீட்ஸ் பள்ளியில் நடந்த இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தலைமையுரையாற்றினார். 379 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:

தமிழக பள்ளிகளில் பணியாற்றும் 5 லட்சத்து 58 ஆயிரம் ஆசிரியர்களில் விருது பெறும் 379 ஆசிரியர்கள் தான் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். ஆசிரியர்கள் மன நிலையில் இருந்து இப்போது நான் பேசப்போகிறேன். ஆசிரியர்கள் எண்ணம் எப்படி இருக்கும் என்ற நிலையில் நான் பேசப் போகிறேன். ஆசிரியர் தொழில் மகிமைப்படுத்தப்பட்டது என்றால் அவர்கள் செய்த பணி சாதனை மிக்கது.ஆனால் ஆசிரியர்கள் முன்னால் 17 சவால்கள் இருக்கின்றன. இந்த சவால்களை வெற்றிகொள்ள ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியம். நாம் வாழும் உலகம் மாறிவிட்டது. பல நாடுகளில் எல்லைக் கோடுகள் மாறியுள்ளன.வகுப்பறைகள் மாறிவிட்டன. இதன் காரணமாக ஆசிரியர்களுக்குமரியாதை என்பதும் குறைந்துவிட்டது. அதனால் ஆசிரியர்கள்தங்கள் மரியாதையை தக்க வைத்துக் கொள்ள மாணவர்களுக்கு என்ன தர வேண்டும்.  என்ன செய்தால் தொழிலை தக்க வைக்க முடியும். ஆசிரியர்களிடத்தில் மாணவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் உற்று நோக்க வேண்டும்.

வகுப்பில் கடைசி வரிசையில் உள்ள மாணவர்களுக்கு என்ன திறமைகள் உள்ளன என்பதை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும். அவற்றை வெளியில் கொண்டுவரும்  உந்துதல் சக்தி ஆசிரியர்களிடம் உள்ளதா என்றும் கவனிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள். அதை கற்க விரும்புகிறார்களா, வாழ்வாதார திறன், வாழ்வியல் திறன், கற்றுக் கொள்ளும் திறன்  ஆகியவற்றை மாணவர்களுக்கு தருவதற்கு ஆசிரியர்களிடம் திறமை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆசிரியர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிகரமாக இருக்க வேண்டுமே தவிர, ஒருவருக்கு ஒருவர் கோள் சொல்லக்கூடாது.  அரசின் கொள்கைகளாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

என்ன கொள்கைகளை அரசு உருவாக்க வேண்டும், என்ன செய்தால் நன்றாக இருக்கும், எது சரி, எதை மாற்ற வேண்டும்என்று ஆசிரியர்கள் அரசுக்கு சொல்ல வேண்டும். ஆசிரியர்கள் குரல்களுக்கு இந்த அரசு மதிப்பளிக்கும். தரமான, பேரளவிலான கல்வியை கொண்டு வருவது எப்படி,  அதற்கேற்ப பாடத்திட்டத்தை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்பதில் ஆசிரியர்கள் கருத்து சொல்வதுடன் சாதக பாதகங்களை எடுத்து சொல்ல வேண்டும்.மாணவர்களுக்கு தொழில்முனைப்புடன் கூடிய கல்வியை தர வேண்டும்.

தொழில் கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இயற்கையாகவே மாணவர்களிடம் அந்த உணர்வை உருவாக்குவது ஆசிரியர்கள்தான். இந்த சவால்கள் முக்கியமானவை. அதற்காக அரசுடன் ஆசிரியர்கள் இணைந்து செயல்படுத்திக் காட்ட வேண்டும். இன்னும் பல மைல்கள் நாம் பயணிக்க வேண்டியுள்ளது. அடுத்த தலை முறை ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. கனவுகளுக்கு வடிவம் கொடுக்க கூடிய திறமை ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.

கல்வித்தரத்தை உயர்த்த காத்திருக்கும் சவால்கள் : ஆசிரியர் தின விழாவில் பட்டியலிட்ட அமைச்சர்

கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான சவால்களை ஆசிரியர்கள் எப்படி சமாளிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், 14 கட்டளைகளை பிறப்பித்தார். ஆசிரியர் தின விழாவில் அவரது பேச்சு, அதிகாரிகளை அசர வைத்தது.

தமிழக அரசின் சார்பில், ஆசிரியர் தின விழா நேற்று, சென்னை, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், 379 ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின விருதுகளை வழங்கி பேசியதாவது:

இந்தியாவில், தமிழகம் மட்டுமே கல்வித்துறையில் அதிக சாதனைகளை படைத்துள்ளது. அமெரிக்காவை விட அதிக விகிதத்தில், தமிழக மாணவர்கள் கல்லுாரி கல்வியில் சேர்கின்றனர். பள்ளிக்கல்வியை சர்வதேச அளவில் தரம் உயர்த்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி, போட்டித் தேர்வுகள் போன்றவற்றை சமாளிக்க சவால்கள் காத்திருக்கின்றன.

● இணையதளத்திலும் மாறி வரும் தொழில்நுட்பம் அடிப்படையிலும், ஆசிரியர்கள் தங்களை தரம் உயர்த்திக் கொள்ள, உயர் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும்

● மதிநுட்பம் மிகுந்துள்ள மாணவர்கள், வெறும் மாணவர்களாக அல்லாமல் நண்பர்களாக கற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றனர்; அதற்கேற்ப, ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க தயாராக வேண்டும்

● கடைசி பெஞ்ச் மாணவர்களையும் முன்னேற்றும் அளவுக்கு, திட்டமிட்டு கற்றுக்கொடுக்க வேண்டும்

● அரசின் கொள்கைகளை, திட்டங்களை, செயல்பாடுகளை எப்படி அணுகுவது; எதிர்ப்புகளை குறைத்து கொள்வது; அரசுடன் இணைந்து செயல்படுவது என மாற வேண்டும்

● ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் சண்டை, சச்சரவு, பொறாமை போன்ற எண்ணங்களை வளர்க்காமல், ஒருவருக்கொருவர் குறை சொல்லாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்

● புதிய கல்விக்கொள்கை வந்துள்ளது; அதை எப்படி அணுகுவது என, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியும். அதேநேரம், தங்கள் கருத்துகளை அரசுக்கு தெரிவித்து, நாட்டின் உயர்வுடன் இணைந்து செயல்பட வேண்டும்

●  மாணவர்களின் படைப்புத்திறனை மதித்து வழி நடத்த வேண்டும். போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் போன்ற சவால்களை சமாளிக்க, பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வர உதவ வேண்டும்

● தொழிற்கல்வியில், திறன் வளர்ப்பு பயிற்சிகளில் மாணவர்களை சிறப்பாக உருவாக்க வேண்டும்.

இந்த சவால்களை படிக்கட்டுகளாக மாற்றி, முதல்வரின் கனவுப்படி, தமிழக பள்ளிக்கல்வியை சர்வதேச அளவில் உயர்ந்த தரத்திற்கு மாற்ற, ஆசிரியர்களும், நிர்வாகத்தினரும் முன் வாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ஆங்கிலமும், தமிழும் கலந்த அமைச்சரின் பேச்சு, ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அசர வைத்தது.

பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி மற்றும் பாடநுால் கழக மேலாண் இயக்குனர் மைதிலி ராஜேந்திரனும், அமைச்சரின் பேச்சை கண் இமைக்காமல் கவனித்தனர்.

ஒவ்வொரு மாணவனுக்கும் கிடைத்த நல்ல நண்பர், ஆசிரியர்!

நாம் அனைவரும் பள்ளி கல்லூரி படிப்பை கடந்து வந்தவர்கள். அங்கு நமக்கு கிடைத்த ஒரு அரிய புதையல் ஆசிரியர்கள். குழந்தைகள் தன் பள்ளி பருவத்திலும் சரி கல்லூரி பருவத்திலும் சரி பெற்றோரை விட ஆசிரியர்களிடமே அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே ஒரு நல்ல புரிதல் இருக்க வேண்டும். 

நம் அனைவருடைய மனத்திலும் ஆசிரியர் என்றால் படம் நடத்தி குழந்தையை மாநிலத்தில் முதல் மாணவனாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பதிந்துவிட்டது. ஆனால், ஆசிரியர்களுக்கு அது தவிர பல விளக்கங்கள் உள்ளன. ஆனால் ஒரு ஆசிரியர் அப்படி இருந்தால் நம் மனம் அவரை ஏற்க மறுக்கிறது. ஏன் என்றால் மதிப்பெண் என்ற இலக்கை நோக்கி நாம் விரட்டப்படுகிறோம். ஆனால் இன்றளவிலும் பல ஆசிரியர்கள் தங்கள் கடமையை சரியாக செய்து வருகின்றனர். அப்படி ஆசிரியர் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? தெரிந்துகொல்லுங்கள்!

கற்பிப்பதில் ஆர்வம்!

இதுதான் முதல், கற்பிப்பதில் ஆர்வம் மிக்கவராக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் ஒருவர் அந்த ஆர்வத்தை தானகவே வெளிப்படுத்துவார். அப்படி ஆர்வம் உள்ளவரை நாம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அந்த ஆர்வம் இருக்கும் ஒருவர் தன் வகுப்பில் எளிதாக பாடத்தை புரியவைத்துவிடுவார். இந்த ஆர்வம் மிக்க ஆசிரியர் தன் மாணவர்களை மதிப்பெண் என்ற இலக்கை நோக்கி ஓடவிடாமல் அறிவு என்ற பாதைக்கு அழைத்துச்செல்வார்.

மாணவர்களிடம் அன்பு!

    ஒவ்வொரு ஆசிரியரும் தன் மாணவர்களிடத்தில் அன்பு வைத்தவர்களாக இருக்க வேண்டும். அப்படி அன்பு செலுத்தும் ஆசிரியரிடத்தில் மாணவர்களும் அன்பு செலுத்தலாம். ஒவ்வொரு ஆசிரியரும் இந்த அன்பை உணர்ந்திருப்பீர்கள். இந்த விதமான ஆசிரியர் வகுப்பிற்குள் வந்தாலே மாணவர்கள் தனிப் புத்துணர்வு அடைவார்கள். அவர் எடுக்கும் பாடத்திலும் கவனம் செலுத்துவார்கள். ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் இதை அடுத்தவர்களுக்கு கொடுக்கலாம் என்றால் அது அன்பு தான்.

பாடத்துறையின் மீது காதல்!

    தான் கற்பிக்கும் பாடத்துறையின் மீது காதல் கொண்ட ஒரு ஆசிரியர் அந்த பாடத்தை மாணவர்கள் விரும்பும் வகையில் கற்பிப்பார். தான்  விரும்பும் பாடத்தை பிறர் விரும்பும் வகையில், ஆர்வத்தை தூண்டும் வகையில் மாணவர்களுக்கு அளிப்பது மிகவும் அருமையாக இருக்கும். மாணவர்களுக்கும் அந்த பாடத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்ப்படும்.

பள்ளியின் பொருள்!

    ஒரு ஆசிரியர் பள்ளி எதற்கானது என்பது அறிந்திருக்க வேண்டும். பள்ளி என்பது மாணவன் வந்து குறிப்பிட்ட மணிநேரத்தில் குறிப்பிட்ட வகுப்புகளில் 100 மதிப்பெண்களுக்கான‌ பாடங்களை கற்றிருக்க வேண்டும் என்று கூறும் இடம் அல்ல. இது மாணவனின் வாழ்க்கையின் ஒரு பொன்னான காலம்தான் பள்ளி படிப்பு. இந்த பருவத்தில் அவன் வளர்ச்சி பெற்று, அவனுடைய அடையாளத்தை அறிந்து அவனுக்கு எது செய்தால் மகிழ்ச்சி அளிக்கும் என்பதை உணர்ந்து அதனை இலக்காக வைத்து ஓட வேண்டிய பருவம். ஆசிரியர்கள் அந்த மாணவனின் திரமையை கண்டறிய ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவன் திறமை வகுப்பறையில் வெளிப்படலாம் அல்லது விளையாட்டு மைதானத்தில் வெளிப்படலாம். இதை கண்டறிந்து அந்த மாணவனை ஊக்குவிக்கவேண்டியது ஆசிரியரின் கடமை.

 விருப்பத்திற்கான மாற்றம்!

    இது ஒரு சிறந்த ஆசிரியருக்கான ஒரு சிறந்த பன்பு. இந்த பன்பு உடைய ஆசிரியர் சிறப்பின் உச்சியில் உள்ளார் என்றே கூறலாம். ஆசிரியர் எப்போதும் தன் கற்ப்பித்தல் மூலமாக மாணவர்களை மற்றலாம் என்று எண்ணக்கூடாது. மாணவர்களுடன் கலந்துரையாடும்போது மாண‌வர்களுக்கு ஏற்ப தன்னை மற்றிக்கொள்ளவும் முன்வர வேண்டும். இது ஆசிரியர்களுக்கு ஒரு கடினமான காரியம் அல்ல. அப்படி தன்னை மற்றிக்கொள்ளும் மனம் ஆசிரியருக்கு வந்துவிட்டால் ஆசிரியர் மாணவரிடையே ஒரு சிறந்த உறவு உருவாகும்.

தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்!

    எத்தனை வருடம் இந்த ஆசிரியர் பணியில் இருந்தாலும் நாம் கற்றது கை மண் அளவே. நாம் கற்க வேண்டியது ஏறாலம் என்பது ஒவ்வொரு ஆசிரியரும் அறிந்த ஒன்று. நமக்கு தெரிந்ததுடன் நிருத்தாமல் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்றலுக்கு முடிவில்லை. ஆசிரியர்கள் தினம் தினம் புதுப்புது சவால்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். மேலும் அந்த சவால்களுக்கு திறமையுடன் உழைத்து நல்ல தீர்வுகளையும் கண்டறிய வேண்டும்

    இது மட்டும் அல்ல.இன்னும் பல உள்ளன. கற்றல் என்பது ஒரு குழு முயற்சி. அங்கு ஆசிரியர் மாணவர் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. அனைவருமே கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். மாணவர்களுடன் உரையாடும் போது ஆசிரியர் ஒரு சக மாணவனாக அந்த மாணவனுடன் பேசிப் பழகவேண்டும். பொறுப்பு, கருணை, ஒத்துழைப்பு, படைப்பு,அர்ப்பணிப்பு, உறுதி, முன்மாதிரி, ஈடுபாடு, உத்வேகம், பறந்தமனம் போன்றவையும் ஆசிரியரின் உயரிய பண்புகளே.

    மாபெரும் எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு மாபெரும் சக்தி ஆசிரியர்கள். அத்தகைய ஆசிரியர்களை பெருமைப்படுத்த தான் இந்த ஆசிரியர் தின விழா. அத்தகைய பெருமை மிக்க ஆசிரியர்களுக்கு என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

முரளி.சு

மாணாவப் பத்திரிகையாளர்

ஒரே ஒரு ஆசிரியர் பள்ளிகள் எத்தனை

முன்னாள் இந்திய ஜனாதிபதி மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்., 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நேற்று ஆசிரியர் தினம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் இந்தியாவில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரியும் பள்ளிகள் இன்னும் செயல்படுகின்றன. அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் இருந்தால் அங்கு தரமான கல்வி எப்படி மாணவர்களுக்கு கிடைக்கும். இந்நிலை வருத்தத்துக்குரியது தான்.

ஓராசிரியர் பள்ளிகளில் ஆசிரியர் தான் அனைத்துமே கிளர்க், வார்டன், உதவியாளர் என அனைத்து பணிகளையும் ஆசிரியரே செய்ய வேண்டும்.2014 - 15 கல்வி ஆண்டு கணக்கின் படி இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,05,630 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன்
செயல்படுகின்றன என பார்லிமென்ட்டில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓராசிரியர் பள்ளிகள் அதிகமுள்ள மாநிலங்களில் முதலிடத்தில் மத்திய பிரதேசம் உள்ளது. இங்கு 17, 874 பள்ளிகள் ஓராசிரியருடன் செயல்படுகின்றன.

மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் யூனியன் பிரதேசங்கள் சிறப்பாக உள்ளன. டாமன் மற்றும் டையூ, புதுச்சேரி, சண்டிகார், லட்சத்தீவு ஆகிய 4 யூனியன் பிரதேசங்களில் ஓராசிரியர் பள்ளிகளே இல்லை.

அனைவருக்கும் கட்டாய மற்றும் இலவசக் கல்வி சட்டத்தின் படி, இந்தியாவில் 30 - 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

ரிலையன்ஸ் 'ஜியோ' அறிமுகத்தால் பரபரப்பு : மொபைல் போன் கட்டணம் அதிரடியாக வீழ்ச்சி


ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள, 'ஜியோ' மொபைல் போன் சேவையில், அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளதால், போட்டி நிறுவனங்கள் கலங்கிப் போய், விலை குறைப்பு நடவடிக்கையை துவங்கி உள்ளன. 'ஜியோ' இணைப்புகளை வாங்க, வாடிக்கையாளர்கள் முட்டி மோதுகின்றனர்.

'சிம்' கார்டுகள் : ரிலையன்ஸ் நிறுவனத்தின், 'ஜியோ' மொபைல் போன் சேவை, நாடு முழுவதும் வர்த்தக ரீதியாக நேற்று துவங்கியது. முன்னதாக, அந்நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில், 'சிம் கார்டுகள்' தரப்பட்டன. பின், ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு மொபைல் போன்களை வாங்குவோருக்கு, டிசம்பர் வரையிலான அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., மற்றும் 'இன்டர்நெட் டேட்டா' சேவைகள், இலவசம் என அறிவிக்கப்பட்டது.

சேவை பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை, செப்., 1ல், முகேஷ் அம்பானி வெளியிட்டதும், ஒரே நாளில் போட்டி நிறுவனங்களின் பங்கு மதிப்பு, 5,000 கோடி ரூபாய்க்கும் மேல் வீழ்ச்சி அடைந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போட்டி நிறுவனங்கள், 'டிராய்' அமைப்பிடம் புகார் தெரிவித்தன. டிசம்பர், 31 வரை அழைப்புகள் இலவசம் என, அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த காலம் முடிந்ததும், 'எஸ்.டி.டி., லேண்ட் லைன், மொபைல்போன் உள்ளிட்ட அனைத்து அழைப்புகளும் எப்போதும் இலவசம். 

நெட்டுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதனால், 'ஜியோ'வின் இலவச, 'சிம்'களுக்கு, வாடிக்கையாளர்களிடையே கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதை வாங்க, வாடிக்கையாளர்கள் முட்டி மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதைப் பார்த்து சுதாரித்த,'ஏர்டெல்' நிறுவனம், 'பிரீ -பெய்டு, இன்டர்நெட் டேட்டா' விலையை அதிரடியாக குறைத்துள்ளது. 'ஒரு ஜி.பி.,டேட்டா'வை, 265 ரூபாய்க்கு, 28 நாள் வேலிடிட்டியுடன் தந்த ஏர்டெல் நிறுவனம், நேற்று முதல், ஒரு ஜி.பி., '3ஜி, 4ஜி' டேட்டா'வை, 193 ரூபாய்க்கு தர துவங்கி உள்ளது. '2 ஜி.பி., பகல் மற்றும் இரவு டேட்டா பேக்கேஜின்' விலையை, 295 ரூபாயில் இருந்து, 228 ரூபாயாக குறைத்துள்ளது.

புதிய சலுகை : பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., ஒரு படி மேலே போய், மாதம், 300 ஜி.பி., வரை பயன்படுத்தும், 'பிராட்பேண்ட் இன்டர்நெட்' வாடிக்கையாளர்களுக்கு, 'ஒரு ஜி.பி.,' ஒரு ரூபாய்க்கு குறைவாக இருக்கும் வகையில், புதிய சலுகையை, வரும், 9ம் தேதி முதல் அளிக்க உள்ளது. இது வெறும் ஆரம்பம் தான்; இதுபோன்ற பல சலுகைகளை மற்ற நிறுவனங்களும் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை குறைப்பு சாத்தியமா? :பொதுவாக, இன்டர்நெட் டேட்டாவுக்கு, 'பேக்கெட் சுவிட்ச்' மற்றும் குரல் அழைப்புகளுக்கு, 'சர்க்கியூட் சுவிட்ச்' என்ற தொழில்நுட்பங்களை, மொபைல் போன் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. ஆனால், 'ஜியோ'வில், அவை இரண்டிற்கும், 'பேக்கெட் சுவிட்ச்' என்ற தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது.

'வி.ஓ.எல்.டி.இ., என்ற நவீன தொழில்நுட்பம் காரணமாக, ஒரு யூனிட் டேட்டா மூலம் கிடைக்கும் பயன், மற்ற நிறுவனங்களை விட அதிகமாக இருக்கும். இதற்கான கட்டமைப்பை பிரம்மாண்டமாக அமைத்துள்ளதால் விலை குறைவாக தர முடிகிறது. எதிர்காலத்தில், '5ஜி, 6ஜி' என, விரிவு படுத்துவதும் எளிதாகும்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!