Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 12 September 2016

கணினி அறிவியலுக்கு அங்கீகாரம் இல்லை:குளறுபடியால் பட்டதாரிகள் கண்ணீர்

'ஆன்லைன்' வகுப்புகள் அதிகரிக்கும் நிலையில், கணினி ஆசிரியர்களை நியமிக்கா மலும், கணினி அறிவியல் பட்டத்திற்கு அங்கீகாரம் வழங்காமலும் பள்ளிக் கல்வியில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. 

தமிழக அரசு பள்ளிகளில், 1992 முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், கணினி அறிவியல் படிப்பு அறிமுகமானது. கணினி பற்றிய அடிப் படை தகவல்களை மட்டும் அறிந்தோர், பட்டப் படிப்பு படிக்காவிட்டாலும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பின், கணினி படிப்பு முடிக்காதோர், 2008ல் நீக்கப்பட்டனர்.

பல்கலைகளில், 1992 முதல், கணினி அறிவியல் பாடத்தில், பி.எஸ்சி., 
பிறகு பி.எட்., படிப்புகள் துவங்கப்பட்டன. இது வரை, 40 ஆயிரம் பேர், கணினி அறிவியலில் பி.எஸ்சி., - பி.எட்., பட்டமும்; 20 ஆயிரம் பேர், எம்.எஸ்சி., - எம்.எட்., பட்டமும் முடித்துள்ளனர். இவர்களுக்கு, தமிழகபள்ளிகளில் பல ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருந்தும் பணி வாய்ப்புகள் வழங்கவில்லை.

வேலை வாய்ப்புக்கு ஆட்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், கணினி அறிவியல் படிப்பை இன்னும் அங்கீகரிக்க வில்லை. பள்ளிக்கல்வி துறையினர், மெத்தன மாக உள்ளனர். 

ஆன்லைன் படிப்புக்கும், ஐ.சி.டி., எனப்படும் கணினி வழி தொழில்நுட்பக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க, தமிழக அரசுக்கு, மத்திய அரசு அறிவுறுத்த உள்ளது. 

தமிழக அதிகாரிகள், மெத்தனத்தால், ஐ.சி.டி., கல்விபடிப்பில் தமிழகம் பின்னடைவை சந்திக்கும் அபாயம் உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் கம்யூ., சயின்ஸ் பாடத்தை, கணிதம், வணிகவியல் பாடங்களுடன் இணைத்து, புதிய பாடப்பிரிவுகளும் துவக்கப்பட்டு உள்ளன; அவற்றுக்கு சரியான ஆசியர்கள் இல்லை. இந்த முரண்பாடுகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை கடும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

இதுகுறித்து, வேலையில்லாத கணினி பட்ட தாரி ஆசிரியர் சங்க மாநில துணை அமைப் பாளர் ஏ.முத்துவடிவேல் கூறுகையில், ''மற்ற மாநிலங்களில், ஆசிரியர் தகுதித் தேர்விலும், ஆசிரியர் நியமனத்தில் கணினி அறிவியல் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டுமே கணினி அறிவியல் பாடத்தை புறக்கணித்திருப்பது வேதனையாக உள்ளது,'' என்றார்.
- நமது நிருபர்

கிடைத்த பரிசுத்தொகையில் தான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சம் நிதி

ரியோ பாராலிம்பிக்கில் தங்க பதக்கம்வென்ற மாரியப்பன் வரும் 22ம் தேதி சேலம்திரும்புகிறார். 

 மத்திய, மாநில அரசுகள்அறிவித்துள்ள பரிசு தொகையில் இருந்து,தான் படித்த அரசு பள்ளிக்கு நிதியுதவிசெய்ய அவர் முடிவு செய்திருப்பதாக அவரதுபயிற்சியாளர் தெரிவித்துள்ளார். பிரேசில்

நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில்,மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்போட்டிகள் நடந்து வருகிறது. இதில், சேலம்மாவட்டம் ஓமலூர் தீவட்டிப்பட்டி அடுத்தபெரியவடகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன்,உயரம் தாண்டுதல் போட்டியில், 1.89 மீட்டர்தாண்டி தங்க பதக்கம் வென்று சாதனைபடைத்தார். அவருக்கு தமிழக அரசு ரூ.2கோடியும், மத்திய விளையாட்டு அமைச்சகம்ரூ.75 லட்சமும் பரிசு அறிவித்துள்ளன.மாரியப்பன் பெரியவடகம்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளியில் படித்தவர். ஆரம்பகாலத்தில், மாரியப்பனுக்கு பயிற்சிஅளித்தவரான அந்த பள்ளியின் உடற்கல்விஆசிரியர் ராஜேந்திரன் கூறியது:

வரும் 22ம் தேதி மாரியப்பன் தங்கவேலுசேலம் திரும்புகிறார். அவர் சொந்த ஊர்திரும்புகையில் சிறப்பான வரவேற்புஅளிக்க முடிவு செய்துள்ளோம். மாரியப்பன்தங்கவேலுவுக்கு மத்திய, மாநில அரசுகள்பரிசுகள் அறிவித்திருப்பதுமகிழ்ச்சியளிக்கிறது. இதுதொடர்பாகஅவரிடம் பேசினேன். பரிசு பணத்தில் ரூ.20முதல் ரூ.30 லட்சம் வரை, அவர் படித்தபெரியவடகம்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்குஅளிக்க முடிவு செய்துள்ளார். பள்ளியின்தரத்தை உயர்த்தவும், விளையாட்டுமைதானத்தை மேம்படுத்தவும் இந்த நிதிசெலவிடப்படும் என்றார். சொந்த ஊரில்சொந்த வீடு: மாரியப்பன் தங்கவேலுவின்தாய் சரோஜா கூறுகையில், நாங்கள் மிகவும்சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்.பரிசாக கிடைத்துள்ள பணத்தில், இதேகிராமத்தில் சொந்த வீடு ஒன்றை கட்ட முடிவுசெய்துள்ளோம் என்றார்.

கிராம வங்கிகளில் 16615 அதிகாரி பணி: ஐபீபிஎஸ் பொது தேர்வு அறிவிப்பு.

கிராம வங்கிகளில் 16,651 அலுவலக உதவியாளர், அதிகாரி பணிக்கான பொது எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை ஐபீபிஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகள் மற்றும் கிராமிய வங்கிகளுக்கான கிளார்க், புரபெசனரி அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு இந்த அமைப்பு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வை ஐபீபிஎஸ் என அழைக்கப்படும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் அமைப்பு.
தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கிறது. அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த தேர்வை அனுமதிக்கும் வங்கிகளின் பணியிடங்களில் பணி நியமனம் பெறலாம்.

மொத்த காலியிடங்கள்: 16,615

பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Office Assistant (Multipurpose) - 8824
சம்பளம்: மாதம் ரூ.7,200 - 19,300

பணி: Officer Scale- I - 5539
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,700

பணி: Officer Scale- II (General Banking Officer/Specialist Officers) - 521
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றறு இரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,400 - 28,100
பணி: Officer Scale- III - 198

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.14,500 - 25,700

வயதுவரம்பு: 01.09.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: பொது ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: சென்னை, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பிக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600
மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.
விண்ணப்பிப்பிக்க தொடங்கும் தேதி: 14.09.2016

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ibps.in/wp-content/uploads/Detailed_Advt_for_Recruitment_of_CWE_RRBs_V.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தமிழக மீன்வளத்துறையில் உதவி மேலாளர் பணி

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மீன்ழளர்ச்சித் துறையில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: DR/AM-10/2016

பணி: Assistant Manager - 10

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Fisheries Science, Fisheries Technology துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Zoology, Fisheries Science, Marine Fisheries பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இதனை The Managing Director, TNFDC Ltd., Chennai என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும் .

விண்ணப்பிக்கும் முறை: http://www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Managing Director, Tamil Nadu Fisheries Development Cor poration Limited, No.167, Poonamallee High Road, Chetpet Eco Park Campus, Kilpauk, Chennai - 600 010.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

புதிய கல்வி கொள்கையில் முடிவெடுக்கஆசிரியர் சங்கத்திடம் அரசு கருத்து கேட்பு

ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு, புதிய கல்விக் கொள்கை குறித்து முடிவு எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்குமான புதிய கல்விக் கொள்கை உருவாக்கி உள்ளது. அதன் வரைவு அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்,
http://mhrd.gov.in/nep-new என்ற, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.பொதுமக்கள், மாநில அரசுகள், கல்வியாளர்களின் கருத்துக்களை, nep.edu@gov.in என்ற இணையதளத்தில், செப்., 30க்குள் அனுப்பலாம். புதிய கல்விக் கொள்கைக்கு, ஒரு தரப்பில் ஆதரவும், ஒரு தரப்பில் எதிர்ப்பும் உள்ளது.இதில், தமிழக அரசு எந்த மாதிரியான நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து, உயர்மட்ட ஆலோசனையில் வல்லுனர்களின் கருத்துகளை பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வியில், ஆசிரியர் சங்கங்களின் கருத்துகளை கேட்க, அரசு முடிவு செய்துள்ளது. 'கருத்துகளை மனுக்களாக வழங்கலாம்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார். ஆசிரியர் சங்க நிர்வாகிகள், அமைச்சரை நேரில் சந்தித்து, மனு அளித்து வருகின்றனர்.

TET GENUINENESS : ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மைகோரும் படிவம்

வெளிநாட்டில் படிக்கும் மாணவரா நீங்கள்?அப்ப முதல்ல இதை செய்யுங்க..!

வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு அவசர கால உதவி தேவைப்பட்டால் என்ன செய்வது? யாரைத் தொடர்புகொள்வது? என பல குழப்பங்கள் இருக்கும். இந்த குழப்பங்களுக்க தீர்வாக புதிய வசதியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்கம் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து வருட வருடம் மாணவ- மாணவிகள் பலர் வெளிநாடுகளுக்கு உயர்கல்வி பயிலச் செல்கின்றனர். ஆனால், இப்போது வரை இந்திய மாணவர்கள் எத்தனை பேர் வெளிநாடுகளில் படித்து வருகின்றனர் என்கிற தரவு கூட மத்திய அரசிடம் இல்லை. இதனால் இந்திய மாணவர்கள் ஏதேனும் வழக்கில் அல்லது பிரச்சனைகளில் சிக்கினால் அவர்களுக்கு உடனடி உதவிக்கு வழி இல்லாமல் இருந்தது. (www.seithiula.blogspot.in)இந்நிலையில், 'தூதரக குறைதீர்ப்பு கண்காணிப்பு அமைப்பு(MADAD)' இணையதளத்தில் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் தங்களை பற்றிய தகவல்களையும், குறைகளையும் பதிவு செய்யும் வசதியினை மத்திய வெளியுறவுத்துறை உருவாக்கியுள்ளது. இதனால், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவி தேவைப்படும் போது இந்திய அரசு மிக எளிதில் உதவ முடியும். இதுவரை 1085 மாணவ- மாணவிகள் தங்களை பற்றிய முழு தகவல்களையுல் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.MADAD இணையதளம் இந்திய அரசால் 2015-ம் ஆண்டு துவக்கப்பட்டது.

வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களுக்கு நீதிமன்ற வழக்கு, இழப்பீடு, உள்நாட்டு உதவி, சம்பள பாக்கி, தாயகம் திரும்ப உதவி போன்ற இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்க்க இந்த இணையதளம் உதவியுள்ளது. கிட்டத்தட்ட 13.206 குறைகள் இந்த இணையளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், இதுவரை 8233 குறைகளுக்கு மத்திய அரசு தீர்த்துள்ளது.

ரேஷன் கார்டில் ஆதார் எண்களை நாமே நமது ஸ்மார்ட் போன் மூலம் மிக எளிதாக பதிவு செய்யலாம்.

அரசு நியாய விலை கடைகளில் (ரேசன் கடைகளில்) ஆதார் எண்ணை நம் குடும்ப அட்டை எண்ணோடு இணைக்கப்பட்டு வருகின்றது.

அதை செய்யாதவர்கள், ரேஷன் கடைக்கு சென்று  வரிசையில் நிற்க முடியாதவர்கள் நிறைய உள்ளனர்.

 
 அவர்கள் ஸ்மார்ட்போனில் Google Play App Store ல் TNEPDS என்ற இலவச செயலியை (APP) பதிவிறக்கம் செய்தால் அது நமது ஸ்மார்ட் போன் ஸ்க்ரீனில் வந்துவிடும்.

பின் அதற்குள் செல்ல   ஏற்கனவே ரேஷன் கடையில் பதிவு செய்யப்பட்டுள்ள  குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்தால் உடனே ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய OTP (One Time Password)  SMS நமது தொலைபேசிக்கு வரும். அந்த எண்களை  செயலியில் இட்டவுடன் செயலி திறக்கப்படும்.

அதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் இடத்தை தொட்டவுடன் ஸ்கேன் செய்ய ஏதுவாக கேமரா திறக்கும்.  பின் நமது ஸ்மார்ட் போன் கேமரா முன்பு நம் ஆதார் அட்டையில்  உள்ள QR CODE (கருப்பு புள்ளிகள் நிறைந்த பெட்டி போன்ற படத்தை) காட்டினால் QR code ஸ்கேன் செய்யப்பட்டு  நமது ஆதார் எண் திரையில் தோன்றும்.

உடனே நாம் "சமர்ப்பி"  என்ற பட்டனை அழுத்தினால் நமது ஆதார் எண் பதிவாகிவிடும். பதிவான ஆதார் எண் அதில் தோன்றும்.

 முதலில் குடும்ப தலைவர் ஆதார் அட்டையும், அதன்பின்  ரேசன் கார்டில் உள்ள வரிசைப்படி  குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளையும் வரிசையாக  பதிவு செய்யவேண்டும். இது மிக எளிதான செயல். விரைவாக பதியப்பட்டு விடும்.

மேலும்  இந்த செயலியின் மூலம் நமது ரேஷன் கார்டுக்குரிய பல்வேறு செயல்களை வீட்டில் இருந்தே நாம் கண்காணிக்கலாம்.

விவரம் தெரிந்தவர்கள்  தாமும் பயன் பெற்று மற்றவர்களுக்கும்  பதிவு செய்து கொடுக்கலாம்.

CPS:புதிய ஓய்வூதிய திட்ட முரண்பாடுகள்: அரசு குழுவிடம் ஆசிரியர்கள் மனு.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட முரண்பாடுகளை நீக்க வேண்டும்' என, அரசு சிறப்புக் குழுவிடம், ஆசிரியர்கள் முறையிட்டுள்ளனர்.புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஆசிரியர் சங்கங்கள், பல போராட்டங்களை நடத்தின.
இதையடுத்து, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்ய, தமிழக அரசின் சார்பில், முதல்வரின் தனிப்பிரிவு செயலரும், திட்டக் குழு முன்னாள் தலைவருமான, சாந்தஷீலாநாயர் தலைமையில், நான்கு பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.வழங்குவது குறித்துஇந்த குழுவுக்கு, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் மனு அனுப்பியுள்ளார்.

அதன் விபரம் வருமாறு:புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், பல குறைகள்உள்ளன. மாநில அரசு விரும்பினால் மட்டும், இத்திட்டத்தை அமல்படுத்தலாம் என, ஏற்கனவே மத்திய அரசுதெரிவித்துள்ளது; எனவே, முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.புதிய திட்டத்தில், ஓய்வூதியம் எவ்வளவு என்பது சரியாககுறிப்பிடப்படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பிடிக்கப்பட்ட தொகையை, மத்திய அரசின் ஆணையத்திற்கு, தமிழக அரசு இன்னும் செலுத்தவில்லை. குடும்ப உறுப்பினர்களுக்கு, ஓய்வூதியம் வழங்குவது குறித்து, எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

திட்டத்தில் இல்லை:அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றாலோ, பணியின்போது மரணம் அடைந்தாலோ, அவர்களுக்கு, மூன்று விதபணிக்கொடைகள் உண்டு; புதிய திட்டத்தில், இந்த அம்சம் இல்லை. பழைய திட்டத்தில் உள்ளது போன்று, அகவிலைப்படி உயரும்போது, ஓய்வூதியமும் உயரும் என்ற பலன், புதிய திட்டத்தில் இல்லை. இப்படி பல முரண்பாடுகள் உள்ளதால், திட்டம் குறித்து, ஆசிரியர்களிடம் கருத்து கேட்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ் உச்சரிப்பு பிழைகளைதிருத்த 'போனடிக்' வீடியோ

தமிழ் எழுத்து, உச்சரிப்பு பிழைகளை தவிர்க்க, பள்ளிக் கல்வித் துறை, 'போனடிக்' வீடியோ பாடலை வெளியிடுகிறது.தமிழகத்தில், அரசு தொடக்கப் பள்ளிகளை விட, தனியார் தொடக்கப் பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் அதிகரித்துள்ளன.
இவற்றில் பெரும்பாலும், ஆங்கில வழியிலேயே பாடம் கற்றுத் தரப்படுவதால், ஆங்கிலவழி மாணவர்களுக்கு, தமிழில் பேசும் போதும், எழுதும் போதும், பிழை ஏற்படுகிறது. அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கும், இதே போன்று உச்சரிப்பு பிழைகள் ஏற்படுகின்றன.தேர்வுகளில், சரியான விடை எழுதினாலும், எழுத்துப் பிழைகளால், தேர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித் துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், தமிழ் எழுத்து உச்சரிப்பு பாடல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. போனடிக் முறையில், இந்த பாடல்களுக்கு, வீடியோ படங்கள் வெளியிடப்பட உள்ளன.

பள்ளிக்கு இனி 'கட்' அடிக்க முடியாது; பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., பறக்கும்.

நாடு முழுவதும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால், பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் நடைமுறைஅறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இணையதளம் துவக்கம்:
டில்லியில் நேற்று, உயரதிகாரிகள் கூறியதாவது:கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் சிலர், ஏதாவதொரு காரணத்துக்காக, பள்ளிக்கு வராமல், 'கட்' அடிப்பதாக புகார்கள் வருகின்றன. பல சந்தர்ப்பங்களில், தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகள் பற்றி, பெற்றோருக்கு எதுவும் தெரியாமல் போகிறது. ஆசிரியர்களுடன் நேரடியாக பேசும்போது மட்டுமே, குழந்தைகள் பற்றி, பெற்றோருக்கு தெரிய வருகிறது.இதற்கு தீர்வாக, மாணவர்களின் வருகைப்பதிவு, வீட்டுப்பாடம், வகுப்பு தேர்வு முடிவுகள், உடல் நலன் தொடர்பான தகவல்கள், தேர்வு அட்டவணை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை, இணையம் மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம், பெற்றோருக்கு தெரிவிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 'ஷால தர்பண்' என்ற பெயரில் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் நுழைவதற்கான, 'லாக்இன்' குறியீடும், 'பாஸ்வேர்ட்'டும், மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்பப்பட்டு வருகிறது.எஸ்.எம்.எஸ்., அனுப்பும் பணிகள், அடுத்த மாதம் முதல் துவங்கும். காலையில் பள்ளிக்கு வராத மாணவர் பற்றிய தகவல், பெற்றோருக்கு அன்றைய தினமே, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும். கேந்திரிய வித்யாலயாவின் புதிய இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி என்பதை, மின்னணுவியல் முறையில் விளக்கும், 'இ - டுடோரியல்ஸ்' வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

'டிஜிட்டல்'மயமாகிறது:

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த தகவல்கள், 'டிஜிட்டல்' முறையில் மாற்றும் பணிகள் ஏற்கனவே முடிந்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகளால், தனியார் பள்ளிகளை தவிர்த்து, அரசு பள்ளிகளில், குழந்தைகளை சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

12 லட்சம் மாணவர்கள்

நாடு முழுவதும், 1,100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை,மத்திய அரசு நடத்தி வருகிறது. இவற்றில், 12 லட்சம் பேர் படிக்கின்றனர். பல மாணவர்கள், பள்ளிகளுக்கு வராமல், அடிக்கடி, 'கட்' அடிப்பது, பெரும் பிரச்னையாக உள்ளது. இதைத் தடுக்கும் நோக்கில், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

பயிற்சி பெற முடியாமல் தவிக்கும் விளையாட்டு வீரர்கள் 76 அரசு கலைக்கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநர்கள் இல்லை.

சேலம் : தமிழக உயர்கல்வித்துறையின் கீழ், 89 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்லூரிகளில் விளையாட்டு திறனை மேம்படுத்த, விளையாட்டு படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் உடற்கல்வி இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக, விளையாட்டு உதவியாளரும் (குறியீட்டாளர்) பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது, 13 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மட்டுமே உடற்கல்வி இயக்குநர்கள் உள்ளனர். மீதி 76 கல்லூரிகளில் இயக்குநர் பணியிடம் காலியாக உள்ளது. 20க்கும் மேற்பட்ட பயிற்சியாளர் பணியிடமும், 70க்கும் மேற்பட்ட கல்லூரிகளில், உதவியாளர் பணியிடமும் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் கல்லூரிகளில் விளையாட்டில் திறமை வாய்ந்த மாணவர்களை கண்டறிந்து தொடர் பயிற்சி வழங்கமுடியாத நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து அரசு கல்லூரி பேராசிரியர்கள் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகள் மட்டுமின்றி, பெரும்பாலான அரசு பொறியியல் கல்லூரிகளிலும் விளையாட்டு துறை இயக்குநர்கள், பயிற்றுநர்கள் மற்றும்உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. உடற்கல்வி இயக்குநர்களை டிஎன்பிஎஸ்சி அல்லது டிஆர்பி தேர்வுகள்மூலமாகவோ, பணிமூப்பு அடிப்படையிலோ நியமனம் செய்வது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், கடந்த 1999ம் ஆண்டுக்கு பிறகு உடற்கல்வி இயக்குநர்கள் புதிதாக நியமனம் செய்யப்படவில்லை. இவ்வழக்கை முடிக்கவோ, புதியஉடற்கல்வி இயக்குநர்களை நியமிக்கவோ மாநில அரசு எந்தவித நடவடிக்ைகயும் எடுக்கவில்லை. கல்லூரி கல்வி இயக்குநரின் அனுமதி பெற்று, அந்தந்த கல்லூரி முதல்வர்களே நியமனம் செய்ய வேண்டிய பயிற்சியாளர் பணியிடமும் காலியாக இருப்பது வேதனையளிக்கிறது.இதனால் திறமை, ஆர்வம் இருந்தும் அரசு கல்லூரி மாணவர்கள் முடக்கப்படுகின்றனர். அரசு கல்லூரிகளை சார்ந்துள்ள கிராமப்புற வீரர், வீராங்கனைகள் உரிய பயிற்சி கிடைக்காமல் அவதியடைகின்றனர்.இதன் காரணமாகவே தனியார் கல்லூரிகளுக்கு இணையாக, அரசு கல்லூரி மாணவர்கள் சாதிக்க முடிவதில்லை. விளையாட்டு வீரர்களுக்கு போதிய நிதி ஆதாரம் கிடைக்காததும், அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை படைக்க ஒரு தடையாக உள்ளது. அரசு கல்லூரிகள் விளையாட்டு துறைக்கென, ஆண்டுதோறும் ரூ.100 கட்டணமாக ஒவ்வொரு மாணவர்களிடம் வசூலிக்கிறது.

இந்த தொகையை வைத்து, விளையாட்டு உபகரணங்கள் வாங்குதல்மற்றும் பராமரிப்பு செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், கூடுதல் செலவுகள் செய்ய முடிவதில்ைல. தற்போது மாநிலம் முழுவதும் பணியில் உள்ள13 உடற்கல்வி இயக்குநர்கள் அடுத்து வரும் ஓரிரு ஆண்டுகளில் ஓய்வுபெறவுள்ளனர். இதனால், காலியிடங்களின்எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குநர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப, அரசு நடவடிக்ைக எடுக்க வேண்டும். இவ்வாறு பேராசிரியர்கள் தெரிவித்தனர்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!