Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 13 September 2016

உடனடியாக பாஸ்போர்ட் பெற புதிய போலீஸ் ஆப்!

பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்கள் உடனே பாஸ்போர்ட் பெறுவதற்கு புதிதாக மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் கூறியுள்ளார்.

இதுபற்றி பாலமுருகன் கூறியதாவது: இனிமேல் புதிதாக
விண்ணப்பிப்பவர்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்ட், ஆகிய மூன்று ஆவணங்களுடன் ஐ-அநெக்ஸ்ச்சர் (I-Annexure) இணைத்திருந்தால் பாஸ்போர்ட் விரைவில் கிடைக்கும். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் போலீஸ் விசாரணையை விரைவாக முடிக்க மொபைல் ’போலீஸ் ஆப்’ என்ற புதிய செயலி அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த செயலின் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் உடனே சான்றொப்பம் கொடுக்கும் வகையில் இந்த ஆப் செயல்படும்.

இந்த புதிய திட்டம் கடலூர், விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள 230 காவல் நிலையங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 280 இ-சேவா மையங்களில் இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற ரூ.155 செலுத்த வேண்டும். பாஸ்போர்ட் விண்ணப்பத்தாரர்களின் சான்றிதழ் சரி பார்ப்பதற்கான நாட்கள் 19 நாட்களிலிருந்து இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நான்கு நாட்களுக்குள் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம்” என்றார். இதற்கிடையில் சென்னை மண்டலத்தின் புதிய பாஸ்போர்ட் அதிகாரியாக அசோக் பாபு பொறுப்பேற்றுள்ளார். பாஸ்போர்ட் பெறுவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் அலைய வேண்டியுள்ள சூழ்நிலையில் இந்த போலீஸ் ஆப் அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ வருகையால், அரசு கேபிள், 'டிவி இண்டர்நெட் கட்டணம் குறைப்பு !

ரிலையன்ஸ் ஜியோ வருகையால், அரசு கேபிள், 'டிவி' நிறுவனமும், 'இன்டர்நெட்' கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. 'குறைந்த கட்டணத்தில், இன்டர்நெட் சேவை வழங்கப்படும்' என, பிப்ரவரியில் அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் அறிவித்தது. இதற்காக, 2 எம்.பி.பி.எஸ்., பதிவிறக்க வேகத்தில், 'ஆம்பல், மகிழம், முல்லை, குறிஞ்சி' ஆகிய, நான்கு திட்டங்களும்; 4
எம்.பி.பி.எஸ்., பதிவிறக்க வேகத்தில், 'வாகை, செங்காந்தள்' ஆகிய, இரண்டு திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.முதற்கட்டமாக, சிறிய மாவட்டங்களில், 10 இணைப்புகள்; பெரிய மாவட்டங்களில், 25 இணைப்புகள் வழங்கப்பட்டன. சட்டசபை தேர்தலால் இணைப்பு வழங்குவது நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இன்டர்நெட் சேவையை அரசு கேபிள், 'டிவி'

விரிவுபடுத்தி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ 4 'ஜி' வருகையால், இன்டர்நெட் சேவையில், 249 ரூபாய்க்கு, 300 ஜி.பி., அளிப்பதாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்திடம், இன்டர்நெட் இணைப்பு பெற வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, அந்த நிறுவனமும் கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இதை கேபிள், 'டிவி' நிறுவன அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

எம்.டி., சித்தா படிப்புக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது !

சென்னை மற்றும் நெல்லையில், சித்த மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன; இங்கு, எம்.டி., படிப்புக்கு, 94 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு, 373 பேர் விண்ணப்பித்து இருந்தனர்; இவர்களுக்கான நுழைவுத்தேர்வு, செப்., 11ல் நடந்தது. கலந்தாய்வில் பங்கேற்க

, நான்கு பேர் தவிர, 369 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 'இதன் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்; கலந்தாய்வு தேதி, பின் அறிவிக்கப்படும்' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி

நாளை விடுமுறையுள்ள மாவட்டங்கள் !

கோவை,திருப்பூர்,நீலகிரி, சென்னை,
கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு செப் 14 ஓணம் விடுமுறை.

சிபிஎஸ்இ மாணாக்கரின் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி

உங்கள் பிள்ளைகள் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கிறார்களா? அவர்களது படிப்பை விட, ப்ராஜெக்ட்டுகளுக்காக ஏராளமான பணம் செலவழித்து சோர்ந்து விட்டீர்களா? ஆம் எனில் இனி நீங்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம்.

அதாவது, பள்ளி மாணாக்கருக்கு, வீட்டில் செய்து கொண்டு வர வேண்டும் என்று எந்த ப்ராஜெக்டுகளையும் இனி கொடுக்கக் கூடாது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

அதற்கு பதிலாக, பள்ளிகளிலேயே, வகுப்பு நேரத்திலேயே ப்ராஜெக்ட்டுகளை செய்ய வைப்பதால், மாணவர்களுக்கும் அதன் மீது ஆர்வம் ஏற்படும், அதோடு, பெற்றோர் ஏற்கனவே தயாரித்து விற்பனைக்கு வைக்கும் ப்ராஜெக்டுகளை வாங்கி பள்ளிக்கு எடுத்து வரும் நடைமுறையும் தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ இயக்குநர் கே.கே. சௌத்ரி இது குறித்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இனி ப்ராஜெக்ட்டுகள் அனைத்தும் பள்ளி வகுப்பு நேரத்தில் மாணவர்கள் குழுவாக சேர்ந்து செய்யும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்ப விருது வென்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர் தர்மராஜ்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஓர் குதுப்பினார் ( QUTUB MINAR )

புனித பக்ரித் பண்டிகை முன்னிட்டு குடியாத்தம் R.வெங்கடாபுரம் அரசு ஆதிந ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் புதுடெல்லியில் உள்ள முகலாயர்களின் படைப்பான குதுப்பினார் கோபுரம் டெல்லி சுல்தானியரான குத்புதின் ஐபக் அவர்களால் உருவாக்கப்பட்டு அவரது மகன்களால் சீரமைக்கப்பட்ட இப்படைப்பு இன்று யுனெஸ்கோ - வால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப் பட்டு நமது இந்தியாவிற்கு பெருமை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சிறந்த படைப்பை எம் மாணவர்கள் அவர்களின் கைவண்ணத்தில் நேற்று  வரைந்து உள்ளார்கள்.

இந்தச் செயல்பாடு இம்மாணவர்களின் மேல்நிலை வகுப்பு வரலாற்றுபாடப் பகுதியில் ஆர்வமாக பயில உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

நன்றியுடன்
ஜானகிராமன் தேவராசன்

கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: பள்ளிகளில் திடீர் ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவு.

மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் பள்ளி களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள கண்காணிப்புக் குழுக்களை அமைக்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிக ளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது:
ஊராட்சி ஒன்றியம் மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் பள்ளிகளில் ஆண்டு ஆய்வு மேற்கொள்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, பள்ளிகளை முன்ன றிவிப்பின்றி திடீர் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், தங்கள் மாவட்டத்தில்உள்ள உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோரை குழுக்களாக ஒருங்கி ணைக்க வேண்டும். ஒரு குழு வுக்கு 2 பேர் வீதம் குழுக்களை பிரித்துக்கொண்டு எவ்விதமுன்ன றிவிப்பும் இன்றி பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க புதிய அமைப்பு!!!

ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.எம்., போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க ‛உயர்கல்வி நிதியுதவி அமைப்பு' என்ற புதிய அமைப்பை மத்திய அரசு விரைவில் துவக்கவுள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி.,போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் உலகத் தரத்தில் ஆய்வுக் கூடங்கள் ஏற்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு நிதியுதவி அளிக்க, புதிதாக உருவாக்கப்படவுள்ள ‛உயர்கல்வி நிதியுதவி அமைப்பு' பொதுத் துறை வங்கி அல்லது அரசால் நிர்வகிக்கப்படும். வங்கிசாராத நிதியுதவி அளிக்கும் அமைப்பு போல செயல்படும். இந்த அமைப்பு, பங்குகளை வெளியிட்டு ரூ.20 ஆயிரம் கோடி மூலதனம் திரட்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை : அரசாணை மட்டும் உண்டு.

சத்துணவு ஊழியர்களுக்கு அரசாணை இருந்தும், பல மாவட்டங்களில், ஆண்டு ஊதிய உயர்வு, கூடுதல் படி வழங்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், 43 ஆயிரம் சத்துணவு மையங்களில், 42 ஆயிரத்து, 423 அமைப்பாளர்; 42 ஆயிரத்து , 855 சமையலர்; ஒரு லட்சத்து, 28 ஆயிரத்து, 130 உதவியாளர் பணியிடங்கள் உள்ளன.
இதில் பல ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு அமைப்பாளர் இரண்டுக்கும் மேற்பட்டமையங்களை கவனிக்கிறார்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில், ஒரு அமைப்பாளர், ஏழு மையங்களை கவனிக்கிறார். பல மையங்களில், ஒரு சமையலர் அல்லது உதவியாளர் மட்டுமே உள்ளனர்.

கூடுதல் மையங்களை கவனிக்கும் அமைப்பாளர்களுக்கு தினமும் கூடுதல் படியாக, 20 ரூபாய் வழங்க வேண்டும். அதேபோல், ஆண்டு ஊதிய உயர்வு, 3 சதவீதம் வழங்க வேண்டும்.இதற்கான அரசாணை இருந்தும் பல ஒன்றியங்களில் வழங்கவில்லை. சிவகங்கை நகராட்சியில், பொங்கல் போனஸ் கூட இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் சத்துணவு ஊழியர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.

சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ' எங்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளும் பல இடங்களில் மறுக்கப்பட்டுள்ளன. கலெக்டர்கள் வேளை பளுவால் எங்கள் பிரச்னையை கண்டுகொள்வதில்லை. தனியாக துறை அதிகாரிகளை நியமித்தால் தான் எங்கள் பிரச்னை தீரும்' என்றார்.

பல்கலைகளில் பேராசிரியர் தேர்வு : திடீர் ரத்தால் பட்டதாரிகள் அதிர்ச்சி.

கோவை பாரதியார், நெல்லை மனோன்மணியம் பல்கலைகளில், நேற்று நடக்க இருந்த பேராசிரியர் நியமன தேர்வு, திடீரென ரத்து செய்யப்பட்டதால், பட்டதாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நேர்முகத் தேர்வு :
கோவை பாரதியார் பல்கலையில் காலியாக உள்ள, 72 உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் இடங்களையும், 20 ஆசிரியர் இல்லாத பணி இடங்களையும் நிரப்ப, ஆக., மாதம் அறிவிப்பு வெளியானது.நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையிலும், 54 உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பும் அறிவிப்பும் வெளியானது. இந்த பணிகளுக்கு, 'நெட், செட்' தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற, பல ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.

நேற்று, நேர்முகத் தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. பல ஆயிரம் பேர், இரண்டு பல்கலைகளுக்கும் விரைந்தனர்; நேர்முகத்தேர்வு நடக்காததால், கடும் அதிருப்தி அடைந்தனர். இரண்டு பல்கலைகளும், 'தவிர்க்க இயலாத காரணங்களால் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது; புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என, விண்ணப்பதார்களுக்கு, நேற்று முன்தினம் இரவு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பின.நெல்லை மனோன்மணியம் பல்கலையில், நேர்முகத் தேர்வு குழுவில் இடம்பெற்ற உறுப்பினர் வர முடியாததாலும்; நேர்முகத் தேர்வுக்கான அரசு தரப்பு உறுப்பினர் நியமிக்காததானாலும், பாரதியார் பல்கலையில், தேர்வு ரத்து செய்யப் பட்டதாக கூறப்படுகிறது.

பிரச்னை வராமல் : இந்த பதவிகளுக்கு, இடைத்தரகர்கள் நடத்திய பேரம் காரணமாகவே, நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டதாக, உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயர் கல்வியில், பல பதவிகள் நியமனத்தில் ஏற்கனவே பிரச்னை உள்ள நிலையில், மீண்டும்பிரச்னை வராமல் இருக்கவே நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பாராலிம்பிக்: தீபா மலிக் வெள்ளி வென்றார்

நடைபெற்று வரும் ரியோ பாராலிம்பிக் போட்டிகளில் குண்டு எறிதல் மகளிர் பிரிவில் பங்குபெற்ற இந்திய வீராங்கணை தீபா மலிக் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 
அவர் 4.61 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை தட்டி வந்துள்ளார். இந்தியாவுக்கு இந்த பாராலிம்பிக்கில் இது 3-வது பதக்கம்.

'குரூப் - 4' தேர்வு விண்ணப்பம் விண்ணப்பிக்க நாளை கடைசி

அரசுத் துறையில், 5,451 காலியிடங்களுக்கான, 'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். தமிழக அரசுத் துறையில், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் போன்ற, ஏழு வகையான, 'குரூப் - 4' பதவிகளுக்கு, 5,451 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, செப்., 8 கடைசி நாளாக, அறிவிக்கப்பட்டு இருந்தது. கடைசி இரண்டு நாட்களில், இணையதளத்தில் பிரச்னை ஏற்பட்டதால், விண்ணப்ப பதிவுக்கான காலக்கெடு, செப்., 14 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலக்கெடு, நாளை முடிகிறது. விண்ணப்பதாரர்கள், கடைசி நேரம் வரை காத்திருக்காமல், விரைந்து விண்ணப்பிக்குமாறு, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழக மின் வாரியத்தில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

'தமிழக மின் வாரியத்தில், 'ஹெல்பர், போர்மேன்' உதவிபொறியாளர் என, 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, பொறியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

 துாத்துக்குடியில், தமிழக மின் பொறியாளர்கள் குழுமத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார்.செயலாளர் கந்தகுமார் வரவேற்றார். பொருளாளர் அனந்தநாராயணன் அறிக்கை சமர்ப்பித்தார். மாநில பொதுச்செயலாளர் ராஜ்குமார் பேசியதாவது: தமிழகத்தில், சீரான மின் உற்பத்தி, சீரான மின் வினியோகத்திற்கு மின் வாரிய பணியாளர்கள் திறம்படபணியாற்றி வருகின்றனர். அத்தியாவசிய தேவையான மின்சாரம் மக்களுக்கு கிடைக்க அக்கறையுடன் பணியாற்றுகின்றனர். மின் வாரிய பணியாளர்கள் தங்களுக்கான சலுகைகள், உரிமைகளுக்காக கோர்ட்டில் போராடி போராடி பெற வேண்டிய நிலை உள்ளது. தமிழக மின் வாரியத்தில், 'ஹெல்பர், போர்மேன்' உதவி பொறியாளர் உட்பட, 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநில துணைத்தலைவர்

கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.--

English Spelling Rules ! (எளிதான ஆங்கிலம்)

விண்ணப்பித்த 4 நாளில் பாஸ்போர்ட் : சென்னை மண்டல அதிகாரி அறிவிப்பு

மத்திய அரசு  அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் கூறியதாவது: 

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான்கார்டு ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்துக்  கொடுத்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும். பாஸ்போர்ட் கிடைத்ததும் போலீஸ் துறையின் சான்றாய்வு செய்யப்படும் என்ற திட்டத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. தட்கல் என்னும்  துரித பாஸ்போர்ட் திட்டத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு போலீசார் விரைவாக சான்றாய்வு பெற வசதியாக மொபைல் ‘போலீஸ்-ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 3 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்திலும் அறிமுகம் செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. போலீஸ் ஆப் மூலம்  போலீஸ் சான்றொப்பம் கிடைப்பதற்கான நேரம் வெகுவாக குறையும். இந்த திட்டத்தை சென்னை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு மாதத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்ய உள்ளோம். தமிழகத்தில் உள்ள 280 இ-சேவா மையங்களில் இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. 

கிராமங்களில் வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெற இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் ரூ.155 செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 3 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் கேட்டு வி்ண்ணப்பிக்கும் நபர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கான கால அளவு 19 நாளில் இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் கொடுத்த மறுநாளே அவர்கள் சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு மண்டல அதிகாரி பாலமுருகன் தெரிவித்தார். 

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

அக்டோபரில் நடக்கும், பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு, வரும், 15, 16ம் தேதிகளில், தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

'அக்டோபரில் நடக்க உள்ள, பிளஸ் 2 துணைத்தேர்வில் பங்கேற்க, சிறப்பு அனுமதியுள்ள, தத்கல் திட்டத்தில், செப்., 14, 15ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டது. 14ம் தேதி, ஓணம் பண்டிகைக்காக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், செப்., 15, 16ம் தேதிகளில், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்; மாவட்டந்தோறும் உள்ள, அரசு தேர்வுகள் சேவை மையத்திற்கு, நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

பாராலிம்பிக்: தீபா மலிக் வெள்ளி வென்றார்

நடைபெற்று வரும் ரியோ பாராலிம்பிக் போட்டிகளில் குண்டு எறிதல் மகளிர் பிரிவில் பங்குபெற்ற இந்திய வீராங்கணை தீபா மலிக் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 
அவர் 4.61 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை தட்டி வந்துள்ளார். இந்தியாவுக்கு இந்த பாராலிம்பிக்கில் இது 3-வது பதக்கம்.

வேலைவாய்ப்பைக் கொட்டிக் குவிக்கும் நிதித்துறை படிப்பு!

காப்பீட்டு கணிப்பு அறிவியல் (Actuarial Science), பலரும் பரவலாக அறியாத, ஆனால் எக்கச்சக்க டிமாண்ட் உள்ள கோர்ஸ். இத்துறை குறித்த தகவல்களைப் பகிர்கிறார் திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியின் காப்பீட்டு கணிப்பு அறிவியல் துறைத் தலைவர் முனைவர் மாரியப்பன்.

'காப்பீட்டு கணிப்பு அறிவியல் என்றால் என்ன?

கணிதம்(Mathematics), புள்ளியியல் (Statistics) ஆகியவற்றின் துணையோடு காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தை போன்ற துறைகளின் எதிர்காலச் செயல்பாடுகளைக் கணித்துச் சொல்வதுதான் இந்தத் துறை.

விண்ணப்பம்

பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதம் - இயற்பியல் - வேதியியல் அல்லது காமர்ஸ் வித் பிஸினஸ் மேத்தமெடிக்ஸ் எடுத்துப் படித்தவர்கள், காப்பீட்டு கணித அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

கல்லூரிகள்

தமிழ்நாட்டில் இளங்கலை பி.எஸ்சி., காப்பீட்டு கணிப்பு அறிவியல் படிப்பு திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியில் மட்டுமே உள்ளது. முதுகலைப் படிப்பான எம்.எஸ்சி,, ஆக்‌சுவாரியல் சயின்ஸ் பிஷப் ஹீபர் கல்லூரி, மெட்ராஸ் யுனிவர்சிட்டி, பி. எஸ். அப்துர் ரஹ்மான் யுனிவர்ஸிட்டி ஆகியவற்றில் வழங்கப்படுகிறது. மேலும், பெங்களூரு க்ரிஸ்ட் யுனிவர்ஸிட்டி, கேரளா எம்.ஏ காலேஜ், மும்மை யுனிவர்ஸிட்டி ஆகியவற்றிலும் வழங்கப்படுகிறது.

இளங்கலை படிப்பில் கணிதம் மற்றும் புள்ளியியல் ஆகியவற்றை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் மற்றும் இவற்றை அலைட் சப்ஜெக்ட்டாக(Allied subject) எடுத்துப் படித்தவர்கள் எம்.எஸ்சி., ஆக்சுவாரியல் சயின்ஸ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, ஒரு வருட டிப்ளமோ(PGDCA) கோர்ஸாகவும் காப்பீட்டு கணிப்பு அறிவியல் படிக்கலாம்.


சிலபஸ்

நிதி மேலாண்மை, காப்பீட்டு அறிவியல், ரிஸ்க் மேனேஜ்மென்ட், ஃபினான்ஷியல் மேத்தமெட்டிக்ஸ், பிசினஸ் எக்கனாமிக்ஸ் உள்ளிட்ட பாடங்களை, காப்பீட்டு கணிப்பு அறிவியல் கோர்ஸில் மாணவர்கள் கற்பார்கள்.

வேலைவாய்ப்பு

ஆக்சுவாரியல் சயின்ஸ் படித்தவர்களை காப்பீட்டுத் துறை நிறுவனங்கள் ரெட் கார்ப்பட் விரித்து வெல்கம் செய்கிறார்கள். CT(Core Technical paper) சீரிஸ் எனப்படும் 16 பேப்பர்களை உள்ளடக்கிய தேர்வை க்ளீயர் செய்தால், அவர்கள் Actuari என்றழைப்படுவார்கள். இந்தத் தேர்வுகள் மும்பையில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆக்சுவாரீஸ் ஆஃப் இண்டியாவால்(Institute of Actuaries of India (IAI)) நடத்தப்படுகிறது. இந்த CT பேப்பர்களை எழுத ACET(Actuaries Common Entrance Test) எனப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ப்ளஸ் டூ முடித்தவர்கள் இந்த நுழைவுத்தேர்வை எழுதலாம்.

வெளிநாட்டு நிதி நிறுவனங்கள், பேங்கிங் செக்டார் போன்றவற்றில் ஆக்சுவாரிஸ்களுக்கான(Actuaries)தேவை அதிகளவில் உள்ளது. ACCENTRUE, AON, EXIDE, LIC, SWISS RE போன்ற நிறுவனங்களில் இவர்கள் பிரகாசமான எதிர்காலம் பெறலாம்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!