Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 16 September 2016

மின்னணு கழிவில் கம்ப்யூட்டர் மாணவன் சாதனை!!

மும்பை: சாதனைக்கு வயதும், கல்வியும் தடையல்ல என்பதை, மின்னணு குப்பையில் இருந்து கம்ப்யூட்டர் தயாரித்து, 9ம் வகுப்பில் பெயிலான மாணவன் நிரூபித்துள்ளான்.

மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மும்பை, காட்கோபரில் வசிக்கும் ரவீந்திரா என்பவர், பள்ளி, கல்லுாரி மற்றும் அலுவலகங்களில் இருந்து, மின்னணு கழிவுகளை சேகரித்து, சிலவற்றை மறுசுழற்சி செய்தும், மற்றவற்றை விற்பனை செய்தும் வருகிறார். ஒன்பதாம் வகுப்பில் தோல்வியடைந்த இவரது மகன், ஜெயந்துக்கு படிப்பை தொடர்வதில் ஆர்வமில்லை.

இந்நிலையில், தந்தையிடம் கழிவாக வந்த லேப்டாப் ஒன்றை, ஜெயந்த் சரி செய்து, இயக்கி காட்டினான். அதன் பின், கழிவுப் பொருட்களில் இருந்து கம்ப்யூட்டர் தயாரிப்பதில் ஜெயந்துக்கு ஆர்வம் அதிகரித்தது.

தந்தை கொண்டு வரும் மின்னணு கழிவுகளில் இருந்து கம்ப்யூட்டர் தயாரிக்க தேவையான பாகங்களை சேகரித்து, அவற்றை பயன்படுத்தி, மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யும்போது நோயாளியின் நிலையை கண்காணிக்கும் கம்ப்யூட்டரை உருவாக்கினான்.

மும்பையில் மட்டும், 90 லட்சம் கிலோவுக்கும் மேற்பட்ட மின்னணு கழிவுகள் உள்ளன. அவற்றில், 35 லட்சம் கிலோ வரையுள்ள பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியும் என்று கூறிய ஜெயந்த், தற்போது, தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில், செயின்ட் தெரசா பள்ளியில், 10ம் வகுப்பில் சேர்ந்துள்ளான்

ஜெர்மன் செல்லும் திருப்பூர் மாணவர்கள்!!

திருப்பூர்: புதிய டிசைன் உருவாக்கும் திறனை மேம்படுத்துவதற்காக, நிப்ட்-டீ கல்லூரி மாணவர்கள், ஜெர்மனி செல்கின்றனர்.

திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரி, மாணவர் பரிமாற்றத்துக்காக, ஜெர்மனியின் நெர்ன்பெர்க் டிசைன் கல்லூரியுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறது. அதற்காக, மாணவர் பரிமாற்றம் துவக்க விழா, நிப்ட்-டீ கல்லூரியில், நேற்று நடைபெற்றது.

கல்லூரியின் முதன்மை ஆலோசகர் ராஜாசண்முகம் தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் முருகானந்தன், துணை தலைவர் (நிதி) மோகன், அட்மிஷன் கமிட்டி தலைவர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.நெர்ன்பெர்க் கல்லூரி பிரதிநிதி ஜூடித் பேசுகையில், ஜெர்மன் மாணவர்கள், திருப்பூர் வருவதால், ஆடை உற்பத்தி சார்ந்த அனைத்து நுட்பங்களையும் அறிந்து கொள்ளலாம்.

திருப்பூர் மாணவர்களுக்கு, புதிய டிசைன் உருவாக்கம், பையர் எதிர்பார்ப்பு உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள, ஜெர்மனியில் பயிற்சி அளிக்கப்படும். விரைவில், இரு கல்லூரிகளுக்கு இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும், என்றார்.

நிப்ட்-டீ கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் சீனிவாசன், மோகன்குமார் கூறுகையில், திருப்பூர் மாணவர்கள் ஜெர்மன் சென்று, புதிய டிசைன் உருவாக்கும் திறனை வளர்த்துக் கொள்வர். முதல் கட்டமாக, வரும் மே மாதம், ஆறு மாணவர்கள், இரண்டு பேராசிரியர்கள், ஜெர்மன் சென்று, 20 நாட்கள் தங்கி, டிசைன் உருவாக்கம் சார்ந்த கல்வி பயில்வர்.

அரசு உதவியுடன், திருப்பூரில் டிசைன் ஸ்டுடியோ அமைக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது. இதை, வெற்றிகரமாக செயல்படுத்தி, திருப்பூர் தொழில் துறையை, அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அழைத்து செல்ல முடியும் என்றனர்

பட்ட மேற்படிப்பு படிக்க சேர்க்கைக்கான காலம் நீட்டிப்பு!!

சேலம்: நாச்சியப்பா கூட்டுறவு மேலாண் நிலையத்தில், கோவை பாரதியார் பல்கலையுடன் இணைந்து பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து, துணைப்பதிவாளர் தமிழ்நங்கை கூறியதாவது: கோவை பாரதியார் பல்கலையுடன் இணைந்து, சேலம் அம்மாபேட்டையில் இயங்கி வரும் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், சிபிபி முறையில், பி.காம்., எம்.காம்., எம்.பி.ஏ., போன்ற பட்ட/ பட்ட மேற்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை, 1ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன.

வேலைக்கு செல்வோர், எவ்வித இடையூறுமின்றி பட்ட / பட்ட மேற்படிப்புகளை படித்து பயன்பெறலாம். ஒரே நேரத்தில், இரண்டு பட்ட/பட்ட மேற்படிப்புகள் படிக்க வாய்ப்புள்ளது. விண்ணப்பங்களை, 100 ரூபாய் செலுத்தி, நேரில் பெற்றுக் கொள்ளலாம். வரும், 23ம் தேதி சேர்க்கைக்கான கடைசி தேதி.

மேலும் தகவல் பெற, நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம், காமராஜ் நகர் காலனி, அம்மாபேட்டை, சேலம்- 1 என்ற முகவரியிலோ அல்லது 0427 2240944 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இளைஞர்களை ஈர்க்கும் டி.என்.பி.எஸ்.சி.,!!!

தற்போதும் மாநில அரசின் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான தேர்வுகளை எழுதுவதற்கு இளைஞர்கள் இவ்வாணையத்தின் அறிவிப்புகளையே சார்ந்துள்ளனர். பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் இத்தேர்வுகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதைக் காணலாம்.

என்னென்ன தேர்வுகள் உள்ளன?

* குரூப் - 1 மற்றும்  குரூப் - 2
1.முதல் நிலைத் தேர்வு
2. முதன்மைத் தேர்வு
3. நேர்முகத் தேர்வு

* குரூப் 2ஏ தொடங்கி குரூப்-4, குரூப்-8 வரையிலான தேர்வுகளுக்கு நேர்காணலின்றி எழுத்து தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது.

* கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,)

* நூலக ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் மற்றும் இதர பணியிடங்களுக்கான தேர்வுகள் இவ்வாணையத்தால் நடத்தப்படுகிறது.

யார் விண்ணப்பிக்கலாம்?
குரூப் 1 மற்றும் 2 தேர்வுகளுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்களும், குரூப் 4, 8 கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை உண்டு. மேலும் பிற தகுதிகள் மற்றும் தேர்வு பற்றிய அறிவிப்புகளுக்கு  http://www.tnpsc.gov.in/ எனும் இணையதளத்தைக் காணலாம்.

அணுகுமுறையில் மாற்றம்:
முந்தைய வருடங்களில் மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு நினைவு கூறும் திறனே அடிப்படையாக இருந்தது. ஆனால், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக, எல்லாவிதமான பாடத்திட்டங்களையும் படித்த பிறகு அதனை பகுத்தாய்வு செய்து விடையளிக்கும் முறையே பிரதானமாக உள்ளது.

குரூப் 1, 2 தேர்வுகளில் வெற்றி பெறுவோர், மாவட்ட துணை ஆட்சியாளர், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித் துறை துணை ஆணையர், துணைப்பதிவாளர் போன்ற தமிழகத்தின் உயரிய அரசுப் பணிகளில் சேர தகுதி பெறுகின்றனர்.

இது தவிர குரூப் 4, 7, 8 போன்றவற்றில் தகுதி பெறுவோர், அறநிலைத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை மற்றும் இதர துறைகளில் பணியமர்த்தப்படலாம். மேலும், கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் பணியிடங்களைப் பெறலாம். நிரந்தர வருமானம் மட்டுமன்றி அரசாங்கத்தின் துறைகளில் வேலைவாய்ப்பு என்பது ஒரு சமூக அந்தஸ்தையும் தருவதால், இளைஞர்கள் இவற்றை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர்!

டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளுக்கு தயாராவது எப்படி? என்பதை அடுத்தவாரம் பார்க்கலாம்..

தி.மலை கிராமத்தில் தொடக்கப் பள்ளிக்காக ரூ.30 லட்சம் மதிப்பு நிலத்தை கொடுத்த தலைமை ஆசிரியர்


திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட துளுவ புஷ்பகிரி கிராமத்தில் அரசு நிதி உதவிபெறும் தொடக்கப் பள்ளி உள்ளது.

35 ஆண்டுகளுக்கு முன்பு, அரசிடம் இந்தப் பள்ளியை ஒப்படைத்தது

நிர்வாகம். அதன் பிறகு, பள்ளிக் கல்வித் துறையின் நேரடி கண்காணிப்பில் இயங்குகி றது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 48 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்களை வழி நடத்தும் பணியில் 2 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, இடவசதி தடையாக இருந்தது. அங்குள்ள தனக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை பள்ளிக்கு எழுதிக் கொடுத்தார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி. சந்தை மதிப்பில் தற்போது அந்த இடம் ரூ.30 லட்சமாகும்.

சில தடைகளைத் தாண்டி, பள்ளிக் கட்டிடம் எழுந்துள்ளது. கொடிக் கம்பம் அருகே திருவள்ளுவர் சிலை நிறுவப்படுகிறது. மாநில நிதிக் குழுத் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு சுற்றுச் சுவரை கட்டிக் கொடுத்துள் ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட் சித் துறை. பள்ளிக் கட்டிடம் கட்டும் பணியை கட்டிடக் குழு மேற் பார்வை செய்து வருகிறது.

இது குறித்து கட்டிடக் குழுவில் உள்ளவர்கள் கூறும்போது, “கல்வி ஆர்வலர்களின் நிதி உதவியால் சுமார் ரூ.12 லட்சம் வரை செலவிடப் பட்டு பணி நடைபெற்றது. மேலும், ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. அந்த நிதிக்காக காத்திருக்கிறோம். நவீன கணினி வழிக் கல்வி, யோகாசனம் மற்றும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செயதுள்ளோம். எங்கள் இலக்கு நிறைவேற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி கூறும்போது, “அந்தப் பள்ளியில் படித்தவன் நான். ஆரம்பக் கல்வியை தொடங்கி, ஆசிரியராக உயர்ந்து நிற்கிறேன். அதற்கு அடித்தளமிட்டது, நான் படித்த இந்தப் பள்ளியாகும். அந்த பள்ளிக்கு இடம் தேவைப்படுகிறது என்பதை அறிந்தேன். சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயிலவேண்டும் என்ற நோக்கத்தில், எனது 20 சென்ட் நிலத்தை எழுதித் கொடுத்துள்ளேன் ” என்றார்.

வருவாய் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கும் இந்த காலத்தில், ஏழை மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளிக்காக 30 லட்சம் மதிப்புள்ள தனது நிலத்தை தானமாக கொடுத்த தலைமை ஆசிரியர் கோவிந்தசாமியின் நடவடிக்கையை அனைத்துத் தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.

TNTET: 14.09.2016 அன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு குறித்த supreme court Details ...


பள்ளிக்கல்வி - அனைத்து மாணவர்களுக்கும் 20.09.2016 குள் "ஆதார்" - இயக்குனர் உத்தரவு

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் சேவை மறுப்பு.. '52 கோடி' அழைப்புகளை துண்டித்த ஏர்டெல், ஐடியா, வோடபோன்..!

இந்திய டெலிகாம் சந்தையில் புதிதாகக் களமிறங்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் 52 கோடி வாய்ஸ் கால்-களை ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் துண்டித்துள்ளது. 

இதனால், ஜியோ வாடிக்கையாளர்கள் ஏர்டெல், வோடபோன், ஐடியா 
நிறுவனங்களின் டெலிகாம் சேவை பயன்படுத்துபவர்களை  தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாய்ஸ் கால் இணைப்பிற்காக ஜியோ-விடம் கூடுதல் கட்டணங்கள் கோரிய ஏர்டெல் நிறுவனத்திற்கு டிராய் அமைப்பு மறுப்பு தெரிவித்தது.  
இந்தியாவில் முழுமையாக நெட்வொர்க் இல்லாமல் ரிலையன்ஸ் ஜியோ சேவை துவங்கப்பட்டது தவறாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவையை டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வழங்க வேண்டும். ஆனால் லாப கணக்குகளைப் பாரத்து நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஜியோ வாடிக்கையாளர்களின் சுமார் 52 கோடி வாய்ஸ் கால்களை துண்டித்துள்ளது. 
ஜியோவிடம் முழுமையான நெட்வொர்க் இல்லாத காரணத்தால் இரு வழி இணைப்பும் ஏர்டெல் மூலம் செய்யப்படுகிறது. ஜியோ சேவை அறிமுகம் செய்யப்பட்டுச் சில வாரங்கள் ஆன நிலையில், டெலிகாம் நிறுவனங்களின் கோரிக்கைக்கு டிராய் மறுப்பு தெரிவித்துள்ளது. 
இதனால் ஏர்டெல், ஐடியா, வோடபோன் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கு டிராய் ஆணைக்கு இணங்க நிலையான சேவை அளிக்கும் வகையில் இண்டர்கனெக்ட் பாயின்ட் வழங்க முடிவு செய்துள்ளது. 
கடந்த வாரம் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ வின் 100 வாய்ஸ் கால்களுக்கு 75 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மறுமுனையில் ஜியோ வாடிக்கையாளர்களுக்குப் பிற நெட்வொர்க் வாடிக்கையாளர் சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு 2 கால் செய்யப்படுவதாக ஆய்வுகள் கூறப்படுகிறது. 
இந்த வார இறுதியில் பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செல்லூலார் ஆகிய நிறுவனங்கள் ஜியோ இன்போகாம் உடன் முக்கிய ஆலோசனையை நடத்த உள்ளது.
டிராய் அமைப்பு மூலம் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்த டெலிகாம் நிறுவனங்கள் ஒரு கால் இணைப்பிற்கு 14 பைசா கூடுதல் கட்டணத்தை ஜியோவிடம் நேரடியாக வலியுறுத்த உள்ளது. 
தற்போதைய நிலையில் இந்தியா முழுவதிலும் ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களிடம் சுமார் 7,000 இண்டர்கனெக்டிங் பாயின்ட் உடனடி தேவையாக ஜியோ முன்வைக்க உள்ளது.

ரூ.500-க்கு 600 GB - ரிலையன்ஸ் ஜியோவின் இரண்டாவது அதிரடி?!

கடந்த செப்டம்பர் 01, 2016 அன்று தான், ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி ஆஃபர்கள்ளை அறிவித்து, மற்ற நிறுவனங்கள் தொழில் இருக்கலாமா வேண்டாமா என்கிற ரேஞ்சில்நடுங்க வைத்தது.

இந்த ஒரு அறிவிப்பால சுமார் 20,000 கோடி ரூபாய் வரை மற்ற டெலிகம்யூனிகேஷன் நிறுவன பங்குகள் விலை சரிந்தன. இப்போது வரை அந்த அதிர்ச்சியில் இருந்து மற்ற நிறுவனங்கள் மீண்டதா என்று தெரியவில்லை. அதற்குள் ஜப்பான் மீது இரண்டாவது அணு குண்டை வீசியது போல, அடுத்த ஆஃபர் குண்டுகளை பொழியத் தொடங்கி இருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ.

பயன்படுத்தும் இணையத்தின் வேகம், பயன்படுத்தும் அளவு, விலை ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு பல திட்டங்களை அறிவித்து அலறவிட்டிருக்கிறது. இந்த அணு குண்டை 3 வகையாக பிரிக்கலாம்.

1. விலையை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் திட்டங்கள் :
உதாரணமாக 500 ரூபாய் செலுத்தினால், 600 ஜிபி நெட்டை, 15 எம்.பி.பி.எஸ் வேகத்தில், அடுத்த 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இது போல மற்ற திட்டங்களை கீழே பாருங்களேன்.
இப்படி 500 ரூபாயில் தொடங்கும் திட்டம் அதிகபட்சமாக 1000 ரூபாய் வரை இருக்கிறது.


2. Mbps அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் :
இந்த திட்டத்தில் 50 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்றால், 2000 ஜிபி இணையத்தை, 1500 ரூபாய் செலுத்தி, அடுத்த 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வகையான திட்டங்களில் எம்பிபிஎஸ் வேகம் அதிகரிக்க அதிகரிக்க இணைய டேட்டா அளவு குறையும், விலையும் அதிகரிக்கும். ஆனால் வேலிடிட்டி நாட்கள் குறையாது.


3. வால்யூம்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் :
இதில்  நாள் ஒன்றுக்கு பயன்படுத்தும் டேட்டாக்களை ஜிபியில் கணக்கிட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கிறன.  நாள் ஒன்றுக்கு 5 ஜிபி தொடங்கி 60 ஜிபி வரை திட்டங்கள் இருக்கின்றன. இதில் ஒரு குறை என்ன என்றால் எவ்வளவு வேகத்தில் இணையம் கிடைக்கும் என்பதை சொல்லவில்லை. அதே போல் விலையும் சற்று புரியாத வகையிலேயே இருக்கிறது.


மிக முக்கியமான விஷயம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் எந்த அதிகாரிகளாலும் இதுவரை இந்த தகவல்கள் உறுதிபடுத்தப்பட வில்லை. ஆனால் இந்த அளவுக்கு இணையத்தில் புதிய அணு குண்டுகளை கட்டாயமாக வீசும் என்பதை மட்டும் அனலிஸ்டுகளும், டெலிகம்யூனிகேஷன் வல்லுநர்களும் கணித்திருக்கிறார்கள்.

அப்புறம் என்ன, சும்மாவே யூடிப்ல படம் பாப்போம், இனிமே ஒன்லி ஹெச்டி தானே. வாங் போய் படம் பாப்போம் பாஸ். 

தமிழகத்தில் புதிதாக ஐந்து வருவாய் வட்டங்கள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு


தமிழகத்தில் கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் வட்டங்களை பிரித்து ஜமீன் கயத்தார் உட்பட 5 வருவாய் வட்டங்களை உருவாக்கி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழகத்தில் புதிதாக ஐந்து வருவாய் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் பிரித்து ஜமீன் கயத்தார், காட்டுமன்னார்கோயில் பிரித்து ஸ்ரீமுஷ்ணம், திருப்பத்தூர் பிரித்து சிங்கம்புணரி, உடையார்பாளையம் பிரித்து ஆண்டிமடம், நீடாமங்கலம் பிரித்து கூத்தாநல்லூர் ஆகிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தேசிய திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்!!!

பத்தாம் வகுப்பு மாணவர்கள் எதிர்கொள்ளவிருக்கும், தேசிய திறனாய்வு தேர்வு தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களில் திறன்மிக்கவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மத்திய அரசு, பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, மாதந்தோறும், கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது. மாநில, தேசிய அளவில் இரண்டு கட்டங்களாக நடக்கும், நடப்பு ஆண்டுக்கான மாநில தேர்வு, நவ., 6ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் நவ., 6 ல் தமிழகத்தில் நடக்க இருந்த தேசிய திறனாய்வு தேர்வு தேதி மட்டும் ஒரு நாள் முன்கூட்டியே, நவ., 5ல் நடத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வி அதிகாரிகளிடம் விசாரித்த போது, தமிழக அரசு சார்பில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் 4 தேர்வு, நவ., 6ல் நடக்கிறது; தேசிய திறனாய்வு தேர்வுக்கான தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, என்றனர்.

’செட்’ தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர நிபந்தனை!!!

செட் தேர்வை, 2002க்கு பின் முடித்தோர், அந்தந்த மாநில கல்லுாரிகளில் மட்டுமே பணியாற்ற முடியும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

கல்லுாரிகளில் உதவி பேராசிரியராக சேரவும், மத்திய அரசின் உதவித்தொகை பெற்று, இளநிலை ஆராய்ச்சி மாணவராக படிக்கவும், மத்திய அரசின், நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் இத்தேர்வு நடக்கும். மாநில மொழிகளில் எழுதுவோருக்கு, மாநில அளவில், செட் என்ற தகுதித்தேர்வு நடந்தப்படுகிறது.

செட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், பிற மாநிலங்களில் பணியாற்ற விண்ணப்பித்து வரும் நிலையில், சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பு: பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்ற, உதவி பேராசிரியர் பணிக்கான, செட் தேர்வில், 2002 ஜூன், 1ம் தேதிக்கு முன், தேர்ச்சி பெற்றோர், நாடு முழுவதும், அனைத்து பல்கலை, கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு செல்லலாம்; நெட் தேர்வு தேர்ச்சி அவசியம் இல்லை.

அதன்பின் நடந்த, செட் தேர்வில் தேர்ச்சி பெற்றோர், செட் தேர்வை நடத்திய, மாநில அரசு களின் பல்கலை மற்றும் கல்லுாரிகளில் மட்டுமே உதவி பேராசிரியர்களாக பணியாற்ற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

10ம் வகுப்பு துணைத்தேர்வு; அறிவியல் செயல்முறை தேர்வு அறிவிப்பு!!

நடைபெறவிருக்கும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வில் அறிவியல் பாடத்திற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள்  அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுத அறிவிக்கப்படுகிறார்கள்.

தேர்வுக்கு  விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி  அலுவலர்களால் 23.09.2016, 24.09.2016 மற்றும்  26.09.2016 ஆகிய மூன்று தேதிகளில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொண்டு செய்முறைத் தேர்வெழுதலாம்.

ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி தோல்வியுற்ற தேர்வர்கள் தற்போது அறிவியல் பாட செய்முறைத் தேர்வை மீள எழுத வேண்டும். இத்தேர்வர்கள் கருத்தியல் தேர்வில் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருப்பினும் செய்முறைத் தேர்வு எழுதிய பின்பு கட்டாயமாக மீள கருத்தியல் தேர்வெழுத வேண்டும்.

அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி பெற்று ஆனால் செய்முறை தேர்வெழுதாமல் விடுபட்ட தனித்தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

நேரடித் தனித்தேர்வர்களை பொறுத்தவரை (Fresh Candidate - first time applied for all subjects) அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதிய பின்னரே, அறிவியல் பாட கருத்தியல் தேர்வு உட்பட ஏனைய பாடங்களில் தேர்வெழுத இயலும் என்பதால், இத்தேர்வர்கள் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்றிருப்பின் அவர்களும் மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் செய்முறைத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதிய பின்னர் செப்டம்பர்/அக்டோபர் 2016 தேர்வெழுதலாம்.

எஸ்.எஸ்.எல்.சி மார்ச் 2017 தேர்விற்கு அறிவியல் பாட கருத்தியல் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள தனித்தேர்வர்கள் ஜூன் 2016 அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பெயர்களை  பதிவு செய்திருப்பர். அத்தகைய தேர்வர்கள் செப்டம்பர்/அக்டோபர்  2016 செய்முறை தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும் செய்முறைத் தேர்வு நடத்தப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

இணையதளம் பயன்படுத்துவோர் இந்தியாவில் 50 கோடி

இந்தியாவில், 2020ம் ஆண்டிற்குள், இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 50 கோடியாக அதிகரிக்கும் என, 'கூகுள்' நிறுவனம் மதிப்பிட்டு உள்ளது.

ம.பி., மாநிலம், போபாலில் உள்ள ராஜீவ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூகுள் நிறுவனத்தின், ஆசிய - பசிபிக் மொழிகளுக்கான தலைவர், ரிச்சா சிங்
பேசியதாவது:

குறைந்த விலையிலான, ஆண்ட்ராய்டு போன்கள் வருகைக்கு பின், இந்தியாவில்
இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஹிந்தி, தமிழ், கன்னடம் போன்ற மொழிகள் மட்டுமே தெரிந்தவர்கள், அதிக அளவில்
இணைய தளத்தை பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் தற்போது, 35 கோடி பேர் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்; இந்த
எண்ணிக்கை, 2020ம் ஆண்டில், 50 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.இணைய
தளத்தை பயன்படுத்தும் புதியவர்களில், கணிசமானவர்கள், ஆங்கிலம் அல்லாத பிற மொழிகள் மட்டுமே தெரிந்தவர்களாக இருப்பர்; எனவே, இணையதளத்தில் பிற மொழிகளில் தகவல்களை அதிகளவில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக, கூகுள் நிறுவனம் தனி கவனம் கொடுத்து செயல்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!