Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 18 September 2016

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.எட்.பயில்வது குறித்து RTI - மூலமாக பெறப்பட்ட தகவல்.. 

Minorities Welfare Department - Announcement of New Schemes by the Honble Chief Minister

நீதி போதனை வகுப்பு இல்லாததால் பள்ளிகளில் மாணவர்களின் ஒழுக்கம் கேள்விக்குறி!!

University of Madras-Institute of Distance Education

December 2016 - UG/PG/DIPLOMA Courses Examinations Online Registration

*LAST DATE FOR ONLINE EXAMINATION REGISTRATION IS
14-10-2016 (WITHOUT PENALTY )

*21-10-2016 (WITH PENALTY )

www.ideunom.ac.in

IGNOU- DATE SHEET FOR TERM END EXAMINATION DECEMBER - 2016 !

FIRST & SECOND YEAR

.
08.12.16-  THU - ES-331
09.12.16-   FRI-   ES-332
10.12.16-   SAT-  ES-333
12.12.16-  MON- ES-341
14.12.16-  WED-  ES-342
15.12.16-   THU-  ES-343
16.12.16-    FRI-   ES-344

19.12.16-   MON- ES-345
2012.16-    TUE-   ES- 334
22.12.16-   THU-   ES-335
23.12.16-    FRI-    BESE-065
24.12.16-    SAT-   ES-361
26.12.16-    MON- BESE-066
27.12.16-    TUE-   ES-362
28.12.16-    WED-  ES-363
29.12.16-    THU-   ES-364

பாடப்புத்தகங்களை நகல் எடுப்பது தவறல்ல: உயர்நீதிமன்றம்!

டெல்லி உயர்நீதிமன்றம், சர்வதேச புத்தகப் பதிப்பாளர்கள் தொடுத்த வழக்கினை தள்ளுபடி செய்திருக்கிறது. நகல் எடுக்கப்பட்ட புத்தகங்களை விற்பனை செய்வதற்கு எதிராக தொடுக்கப்பட்ட இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது, இந்திய காப்புரிமை சட்டத்தின் மேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

போட்டோகாப்பியர் கியோஸ்க், சர்வதேச பதிப்பாளர்கள் வெளியிட்ட பாடப்புத்தகத்தினை நகலெடுத்து மாணவர்களுக்கு விற்பனை செய்ததற்காக விதிக்கப்பட்ட தடையினை, நீதிபதி ராஜீவ் சஹாய் நீக்க உத்தரவிட்டார். 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம், டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அருகே உள்ள ராமேஸ்வரி போட்டோகாப்பி சர்வீஸஸுக்கு, இதே போன்ற காரணத்துக்காக தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாடப்புத்தகங்களை நகல் எடுத்துக் கொடுப்பது தங்களுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதாக யுனிவர்சிட்டி பிரஸ், கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ் மற்றும் டெய்லர் அண்ட் பிரான்சிஸ் சர்வதேச புத்தகப் பதிப்பாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், டெல்லி பல்கலைக்கழகம், மாணவர்கள் பாடப்புத்தகங்களை நகல் எடுப்பது கல்வித்தேவைக்காக தான், இதனை அத்துமீறலான விஷயமாக கருதக்கூடாது என்று தெரிவித்திருக்கின்றனர். புத்தகங்களின் விலை அதிகமாக இருப்பதால் மாணவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். காப்புரிமைச் சட்டம் 1957-ஐ முன்வைத்து, பல்கலைக்கழகத்தினர் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். மாணவர்கள் தங்கள் படிப்பு சார்ந்த விஷயங்களுக்கு நகல்களை பயன்படுத்துகிறார்கள், விற்பனை நோக்கத்திற்காக யாரும் நகல் எடுப்பதில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் போட்டோகாப்பியர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அறிவுசார் சொத்து நிபுணர்கள் இந்தத் தீர்ப்பினை பாராட்டியிருக்கிறார்கள். நீதிமன்றம் இந்தத் தீர்ப்பில், “நகல் எடுப்பது தெய்வீகமான விஷயமல்ல. ஆனால், கற்றல் என்பது முக்கியமான சமூக தேவையாகும். இது முக்கியமான தருணம் என்பதை மனதில் கொண்டே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

எலக்ட்ரானிக் சிப்' பொருத்தியஏ.டி.எம்., கார்டு: ரிசர்வ் வங்கி கெடு

பாதுகாப்பு அம்சம் உள்ள, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்திய, 'ஏ.டி.எம்., கார்டு' வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. 

 வாடிக்கையாளர்களுக்கு, 'மேக்னடிக் ஸ்டிரைப்' என்ற, காந்தப் பட்டையுடன் கூடிய, ஏ.டி.எம்., கார்டுகளை, வங்கிகள் வினியோகித்துள்ளன. வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு கருதியும், 'கிரெடிட்' மற்றும், 'டெபிட் கார்டு' மோசடிகளை தடுப்பதற்காகவும், அந்த கார்டுகளுக்கு பதிலாக, சிறிய, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்தப்பட்ட, பாதுகாப்பான கார்டுகளை, வங்கிகள் வழங்க வேண்டும் என, 2015 மே மாதத்தில், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. 

           பல தனியார் வங்கிகள், இத்தகைய கார்டுகளை, வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உள்ளன. தேசிய வங்கிகள், சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக, காலக்கெடுவை நீட்டிக்க கோரின; ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. வரும், 30ல் கெடு முடியும் நிலையில், அதை மேலும் நீட்டிக்க வங்கிகள் கோரின; அதை ஏற்க மறுத்து, ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள அறிக்கை:

பாதுகாப்பு அம்சம் பொருந்திய, ஏ.டி.எம்., கார்டுகளை வழங்குவதற்கான காலக்கெடு இம்மாதம் வரை நீட்டிக்கப்பட்டது; இனியும் நீட்டிக்கப்பட மாட்டாது. அதனால், ஏற்கனவே கூறியபடி, 2018 துவக்கத்தில், 'சிப்' பொருந்திய ஏ.டி.எம்., கார்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்க வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் லஞ்சமா: புகார் செய்யலாம்...

கல்வி உதவித்தொகை, பள்ளி அங்கீகாரத்திற்கு லஞ்சம் கேட்டால், உடனே புகார் செய்ய வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளதாவது:சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பள்ளிகளுக்கு, 'ஆன்லைன்' மூலம் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்த இணைப்பை பெற, இடைத்தரகர்களை அணுக வேண்டாம்.

மாணவர் கல்வி உதவித்தொகை வழங்கவும், அங்கீகாரம் வழங்கவும் யாராவது லஞ்சம் கேட்டால், உடனே புகார் செய்ய வேண்டும். இதுகுறித்த புகார்களை, சி.பி.எஸ்.இ., தலைவருக்கு, chmn-cbse@nic.in என்ற இ - மெயில் முகவரிக்கும், தலைமை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிக்கு, srana.cbse@gmail.com என்ற முகவரிக்கும் அனுப்பலாம். இவ்வாறு வாரியம் தெரிவித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அதிகாரிகள் பேசாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தி.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பேசாமல், புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து மட்டும், அரசு குழு பேசியது, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 2003க்கு பின், அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது; இதில், குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்பது உட்பட, பல்வேறு பாதகமான அம்சங்கள் உள்ளன.எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தன.கடந்த, 2011 மற்றும், 2016 சட்டசபை தேர்தலின் போது, 'பழைய ஓய்வூதியதிட்டம் அமல்படுத்தப்படும்' என, ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்; எனவே, அதுகுறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிசாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.இக்குழுவினர்,இரு தினங்களுக்கு முன், ஒன்பது அரசு ஊழியர் சங்கங்கள்,ஆசிரியர் சங்கங்களை சந்தித்து பேசினர். நேற்று முன்தினம், அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில சங்கம், அரசு ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் உட்பட, ஒன்பது சங்கங்களின் நிர்வாகிகள், குழுவினரை சந்தித்து பேசினர்.அனைத்து தரப்பினரும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஆனால், அரசு குழுவினர், 'புதிய திட்டத்தில், மாற்றங்கள் செய்தால் போதாதா?' என கேட்டுள்ளனர்; அரசின் நிதி நெருக்கடியை எடுத்துரைத்துள்ளனர்.இதன் காரணமாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை, அரசு செயல்படுத்துமா என்ற சந்தேகம், சங்க நிர்வாகிகளிடம் ஏற்பட்டு உள்ளது. அரசு குழுவினர், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேசாமல், புதிய திட்டத்தின்அம்சங்களையே பேசியதால், கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தினர், அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது:அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில சங்கம்:அரசின் நிதி நிலைமையை எடுத்துரைத்தனர். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில், என்ன மாற்றம் செய்யலாம் எனக் கேட்டனர். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, எந்தவித பாதுகாப்பும் இல்லை என்பதை, ஆதாரங்களுடன் எடுத்துரைத்தோம். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.பி.ஆரோக்கியதாஸ், ஒருங்கிணைப்பாளர்,

'டேக்டோ' கூட்டுக் குழு: மத்திய அரசின் திட்டத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவிக்கவில்லை. லோக்சபாவில், அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் கோரிக்கை ஏற்கப்படாமலேயே, புதிய ஓய்வூதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும். மேலும் இது, லஞ்சத்திற்கு வழி வகுக்கும். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர, குழுவிடம் கூறினோம்.

'ஜேக்டோ' கூட்டுக் குழுஒருங்கிணைப்பாளர்: 'புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் குறைகளை நீக்கி, எப்படி தொடரலாம்...' என, குழுவினர் ஆலோசனை கேட்டனர். ஆனால், 'புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டமே தேவையில்லை; அதில்,எத்தனை திருத்தம் செய்தாலும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு எந்த பலனும் கிடையாது.'எனவே, பழைய பென்ஷன் திட்டம் தான் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தேவை' என்பதை, உறுதியாக கூறிவிட்டோம்.

எஸ்.என்.ஜனார்த்தனன், மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்:தமிழக அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் பல ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசின், பி.எப்., ஆணையத்தில் செலுத்த வேண்டும். அந்த தொகையை மீண்டும் பெற, தமிழக ஊழியர்கள் பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.இதில், யாருக்கு எவ்வளவு ஓய்வூதியம்கிடைக்கும் என்ற விகிதாச்சாரம் கூட கூறப்படவில்லை. ஊழியர்களின் தொகை, பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், அதன் வருமானம் நிரந்தரமாக இருக்காது. ஊழியர்களுக்கு எப்போது நிதி கிடைக்கும் என்ற உறுதியானதகவல்கள் இல்லை. எனவே, புதிய பங்களிப்பு திட்டமே வேண்டாம் என, கூறி விட்டோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொது தேர்வில் கணினி விடைத்தாள்: தேர்வு துறை திட்டம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு, கணினி விடைத்தாள் வழங்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம், விடை திருத்தும் நாட்கள் குறையும் என,எதிர்பார்க்கப்படுகிறது. 
அரசு தேர்வுத்துறை சார்பில்,10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுகள்நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும், மார்ச் மாதம் நடைபெறும் இந்தத் தேர்வுகளில், இரண்டு வகுப்புகளிலும்சேர்த்து, 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்; இவர்களின் விடைத்தாள்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிஆசிரியர்களால் திருத்தப்படுகின்றன.இந்தத் தேர்வில், கணினி அறிவியல் பாடத்திற்கு மட்டும்,'பார் கோடு' உடைய விடைத்தாள்கள் வழங்கப்படுகின்றன; மாணவர்கள், சரியான விடையை தேர்வு செய்து குறியிட வேண்டும்.இந்த விடைத்தாள்கள், கணினி முறையில் திருத்தம் செய்யப்படுகின்றன; அதனால், வினாத்தாளை சரியாக திருத்தம் செய்யவில்லை என்ற பிரச்னை எழாது. மேலும், விடைத்தாளை திருத்த ஆசிரியர்களும் தேவையில்லை; அதிக நேர விரயமும் இருக்காது.

இந்த முறையை, அனைத்து பாடங்களுக்கும் அமல்படுத்துவது குறித்து, அரசு தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது. அதன்படி, 2017 மார்ச்சில் நடைபெற உள்ள, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில், ஒரு மதிப்பெண் கொள்குறி வகை வினாக்களுக்கு, கணினி விடைத்தாள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது; அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததும், இந்த திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.

80 அரசு கல்லூரிகளில் 51 முதல்வர் பணியிடம் காலி

51 அரசு கல்லுாரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக இருப்பதால், அடிப்படை பணிகள் பாதிக்கப்படுவதாக அரசு கல்லுாரி ஆசிரியர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது.தமிழகத்தில் 80 அரசு கலைக்கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் 51 கல்லுாரிகளில் முதல்வர் இல்லாததால், பொறுப்பு முதல்வர்கள் உள்ளனர். 
இவர்களால் கொள்கை முடிவுகளை எடுக்க முடிவதில்லை. காலியிடங்கள் அதிகரித்து வருவதால் நிர்வாக பணிகளில் மட்டுமின்றி மாணவர்களின் கல்வி நலன் சார்ந்த உதவிகள் பெறுவதிலும் தொய்வு நிலை நீடிக்கிறது.புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் வெளிநாட்டு பல்கலை, ஆசிரியர்களை அனுமதிக்க கூடாது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, காரைக்குடி அழகப்பா அரசு கலைகல்லுாரியில் அனைத்து கல்லுாரி ஆசிரியர் மன்ற மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.மாநில தலைவர் லோகநாதன், பொது செயலாளர் சிவராமன் கூறியதாவது: முதல்வர் காலிப்பணியிடத்தால் கொள்கை முடிவுகள் எடுப்பதில் சிக்கல் நிலவுகிறது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர், துப்புரவு பணியாளர், அலுவலக உதவியாளர் காலியிடங்கள் உள்ளன. 10 ஆண்டுக்கு முன்பு அடிப்படை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு நியமிக்கப்படவில்லை.

மாணவர்களே வகுப்பறை, வளாகங்களை சுத்தம் செய்து வருகின்றனர்.1998-ல் பணி உயர்வு பெற்றோர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தற்போது 5 ஆயிரம் ஆசிரியர்கள் பணி மூப்பை எதிர்நோக்கியுள்ளனர். பணிமூப்பு பட்டியல் வெளியிடாததால், துறை தலைவர்கள் நியமனத்தில் குழப்பம் ஏற்படுகிறது. 3200-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கல்லுாரிகளில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி பணி வரன்முறை படுத்த வேண்டும், என்றனர்.

ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வுவிண்ணப்பங்கள் வரவேற்பு

அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில், ஐ.ஏ.எஸ்., முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி பெறவிரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலையில், காஞ்சி வளாகத்தில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம் உள்ளது. இங்கு, 2016ம் ஆண்டிற்கான, மத்திய தேர்வாணையக் குழுவின், முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், முதன்மைத் தேர்வு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள், மூன்று வேலை நாட்களில் வழங்கப்படும்.இப்பயிற்சி மையத்தில் படித்தவர்களும், தனியே தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றவர்களும் என, மொத்தம் 225 மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவர்.பயிற்சிக் காலத்தில், கட்டணமில்லா விடுதி வசதி உண்டு; மாதம், 3,000 ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படும்

ஆதார் எண்ணுடன் மாணவர் சான்றிதழ் பதிவு: பல்கலைகளுக்கு மத்திய அரசு புது உத்தரவு.

அனைத்து பல்கலைகளும், கல்லுாரிகளும், மாணவர்களின் பட்ட சான்றிதழ்களை, ஆதார் எண்ணுடன், மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், மாநில பல்கலை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், சமீபத்தில், டில்லியில் நடந்தது.
இதில், தமிழகம் உட்பட அனைத்து மாநில பல்கலைகளுக்கும், மத்திய அரசு கட்டாய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அனைத்து பல்கலைகள், கல்லுாரிகள், மாணவர்களின் பட்ட சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்களை, மத்திய அரசின், 'தேசிய அகாடமிக் டெபாசிட்டரி' அமைப்பின், இணையதளத்தில், பதிய வேண்டும். மாணவர்களின் ஆதார் எண்ணும் அதில் இடம்பெற வேண்டும். சான்றிதழ்களிலும், ஆதார் எண்ணை குறிப்பிட முயற்சிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

பதிவு செய்யும் பல்கலைகள், கல்லுாரிகள் மற்றும் மாணவர்களுக்கு தனித்தனியே, ஒருங்கிணைந்த பதிவு எண் வழங்கப்பட உள்ளது. இந்த எண்ணை பயன்படுத்தி, மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும், டிஜிட்டல் சான்றிதழ் பெறலாம்.இந்த முயற்சியால், வேலைவாய்ப்பு நிறுவனங்கள், போட்டி தேர்வு நடத்தும் அரசுத்துறைகள், வங்கிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சான்றிதழ்களை, ஆன்லைனில் சரிபார்க்க முடியும். போலி சான்றிதழ் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

Learn Multiplication Table from 1 to 12, easy and fun. Math game for your kids.

பழைய நம்பரை மாற்றாமலேயே ஜியோ சேவைப் பெறுவது எப்படி.??

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கப்பட்டு விட்டன, இருந்தும் ஜியோ சிம் கார்டு கிடைக்கவில்லை என்ற புலம்பல் இருந்து வருகின்றது.

ரிலையன்ஸ் அல்லாது பல்வேறு 4ஜி கருவிகளுக்கும் ஜியோ 4ஜி சேவை நீட்டிக்கப்பட்டிருப்பதால் இதற்கானஎதிர்பார்ப்பு மற்றும் தேவைஅதிகரித்திருக்கின்றது.

ஜியோ சிம் வாங்க முடியவில்லை என்றாலும் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி (Mobile Number Portability-MNP) ஆப்ஷன் மூலம் ஜியோ சேவையை பெற முடியும். இந்த அம்சம் ஜூலை 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றது.

மொபைல் நம்பர் போர்டபிலிட்டி ஆப்ஷன் மூலம் ஏற்கனவே பயன்படுத்தும் நம்பர் கொண்டு மற்ற நெட்வர்க்களுக்கு மாறிக் கொள்ள முடியும். இந்தியா முழுக்க சுமார் 200,000 விற்பனை நிலையங்களில் ஜியோ சிம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ சேவையை உங்களது மொபைல் போன் நம்பரை மாற்றாமலேயே பெறுவது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்..

போர்ட்
முதலில் ‘PORT' என டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்யும் போது வேறு நெட்வர்க் மாறச் செய்யும் கோரிக்கை உங்களது சார்பில் வைக்கப்பட்டு விடும்.

செயலி
பின் ‘MyJio' செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து ஆஃபர் கோடினை பெற வேண்டும்.

ரிலையன்ஸ்
4ஜி ஸ்மார்ட்போன், ஆஃபர் கோடு மற்றும் போர்ட் அவுட் கோடு போன்றவற்றை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர், டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி போன்ற விற்பனை நிலையங்களுக்குச் செல்ல வேண்டும்.

சான்று
உங்களது அடையாள சான்று, இருப்பிட சான்று மற்றும் புகைப்படம் போன்றவற்றை வழங்கி புதிய சிம் கார்டினை பெற்றுக் கொள்ள முடியும். புதிய சிம் கார்டு ஆக்டிவேட் ஆக 7 நாட்கள் ஆகும் என்பதோடு ரூ.19 வரை கட்டணம் செலுத்த நேரிடும்.

புதிய சிம்
பின் உங்களது பழைய நெட்வர்க் சிம் கார்டில் ‘No Service' தகவல் கிடைக்கும். இனி உங்களது புதிய சிம் கார்டினை பொருத்தி அதனினை பயன்படுத்தத் துவங்கலாம்.

மலிவு விலை
ஒரு முறை போர்ட் செய்த பின் அடுத்த மூன்று மாதங்களுக்கு உங்களால் வேறு நிறுவனங்களுக்கு போடர்ட் செய்ய இயலாது. ஜியோ சேவையில் அன்-லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் மலிவு விலை 4ஜி இண்டர்நெட் வழங்கப்படுகின்றது.

இந்­தி­யாவில் ‘டிஜிட்டல்’ புரட்சி:அமெ­ரிக்க நிறு­வ­னங்கள் பாராட்டு!!!

அமெ­ரிக்க தலை­நகர் வாஷிங்­டனில், பல்­வேறு தொழில் நிறு­வ­னங்­களை உள்­ள­டக்­கிய, ‘டை’ கூட்­ட­மைப்பின் கூட்டம் நடை­பெற்­றது. அதில், கூட்­ட­மைப்பின் மத்­திய கிழக்கு பிரிவு தலை­வரும், பிசோபிட் நிறு­வ­ன­ரு­மான, பாலா பல­மடய் பேசு­கையில்,‘இந்­தியா, தற்­போது, புது­மை­யான கண்­டு­பி­டிப்­புகள் மற்றும் டிஜிட்டல் செயல்­பா­டு­களின் மைய­மாக, உலக நாடு­களால் பார்க்­கப்­ப­டு­கி­றது’ என்றார்.

சிகா­கோவின் இந்­திய துணை துாதர், அவுசப் சயீத் கூறு­கையில்,‘‘பொரு­ளா­தார வளர்ச்­சிக்கும், தொழில் முனை­வோரை ஊக்­கு­விக்­கவும், பிர­தமர் மோடி அறி­வித்த, ‘டிஜிட்டல் இந்­தியா, ஸ்டார்ட் அப்’ இந்­தியா திட்­டங்கள், சிறப்­பான பலனை அளிக்கத் துவங்­கி­யுள்­ளன. ஏரா­ள­மான தொழில் முனை­வோரை, ஸ்டார்ட் அப் திட்டம் உரு­வாக்­கி­யுள்­ளது. அதி­க­மான ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்கள் உள்ள நாடு­களில், இந்­தியா மூன்­றா­வது இடத்தை பிடித்­துள்­ளது,’’ என்றார். கூட்­டத்தில் பங்­கேற்ற தொழில் அதி­பர்கள், ‘இந்­தி­யாவில் டிஜிட்டல் புரட்சி நடை­பெற்று வரு­கி­றது’ என, பாராட்டு தெரி­வித்­தனர்.