Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 20 September 2016

Whatsapp messenger

Hey, I just downloaded WhatsApp Messenger on my Android. It is a smartphone messenger which replaces SMS. This app even lets me send pictures, video and other multimedia! WhatsApp Messenger is available for Android, iPhone, Nokia, Windows Phone and BlackBerry and there is no PIN or username to remember - it works just like SMS and uses your internet data plan. Get it now from https://www.whatsapp.com/download/ and say good-bye to SMS!

டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் - பள்ளி வளாகங்களில் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் !

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் நகரங்கள் சேர்ப்பு !

மூன்றாவது கட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு தஞ்சை, மதுரை, வேலூர், சேலம் உள்ளிட்ட நான்கு நகரங்கள் தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ளன.

பிரதமர் மோடி நாடு முழுவதும் ‘100 ஸ்மார்ட் சிட்டி’க்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார். நாடு முழுவதுமிருந்து
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களில் உலகத்தரத்திற்கு இணையான 
உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். இதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஏற்கனவே இரண்டு கட்டமாக நாடு முழுவதுமிருந்து 33 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் 3-வது கட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலை நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி வெங்கையா நாயுடு இன்று வெளியிட்டார்.

இந்த பட்டியல் குறித்து மந்திரி வெங்கையா நாயுடு கூறுகையில் ''3-வது ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு இந்தியா முழுவதுமிருந்து 63 நகரங்கள் போட்டியிட்டதில் 27 நகரங்கள் தேர்வாகியுள்ளன.

தமிழகத்திலிருந்து வேலூர், மதுரை, சேலம், தஞ்சாவூர் ஆகிய நான்கு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 27 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற ரூ.66,833 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது'' என்றார்.

தானே, நாசிக், நாக்பூர், அவுரங்காபாத், ஆக்ரா, அஜ்மீர், அமிர்தசரஸ், மங்களூர், வதோதரா, வாரணாசி, திருப்பதி, மங்களூர், அமிர்தசரஸ் நகரங்களும் ஸ்மார்ட் சிட்டி பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன.

நீங்களும் வங்கி அதிகாரி ஆகலாம், கிராம வங்கிகளில் 16,615 காலிப் பணியிடங்கள்

தற்போது அரசு வங்கிகள், எழுத்தர், அதிகாரி பணியிடங்களுக்குத் தேவைப்படும் பணியாளர்களைப் போட்டிபோட்டுக்கொண்டு தேர்வுசெய்து வருகின்றன. நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி நீங்கலாக மற்ற அனைத்துப் பொதுத்துறை வங்கிகளுக்கும் தேவைப்படும் பணியாளர்களும் அலுவலர்களும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection-IBPS) என்ற தேர்வாணையம் நடத்துகின்ற போட்டித் தேர்வு மூலமாகவே தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அதேபோல், நாடு முழுவதும் இயங்கி வரும் மண்டலக் கிராம வங்கிகளுக்கான (Regional Rural Banks) பணியாளர்களும் ஐ.பி.பி.எஸ். தேர்வு மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, புதுச்சேரியில் புதுவை பாரதியார் கிராம வங்கி ஆகியவைகிராம வங்கிகளாகச் செயல்படுகின்றன. கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்டவை இவை. இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் உள்ள கிராம வங்கிகளில் அலுவலக உதவியாளர், அதிகாரி, சிறப்பு அதிகாரி நிலைகளில் 16,615 காலிப்பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

தேவையான தகுதி

இதற்காக நடத்தப்படும் போட்டித்தேர்வில் முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு (அதிகாரி பணிக்கு மட்டும் கூடுதலாக நேர்முகத்தேர்வு) என இரு தேர்வுகள்இடம்பெற்றிருக்கும். அலுவலக உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தால் போதும். அடிப்படைக் கணினி அறிவு இருப்பது விரும்பத்தக்க தகுதி ஆகும். வயது 18 முதல் 28-க்குள்இருக்க வேண்டும். அதிகாரி நிலையிலான பணிகளில் பொதுவான பதவிகளைப் பொருத்தவரையில், பட்டப் படிப்புதான் கல்வித் தகுதி என்ற போதிலும் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம்.தொழில்நுட்பப் பதவிகளான சிறப்பு அதிகாரி பணிகளுக்குப் பணியின் தன்மைக்கேற்பக் கல்வித் தகுதி மாறுபடும். வயது 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். ஒரு சில பணிகளுக்கு வயது வரம்பு 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

என்ன செய்யலாம்?

உரிய கல்வித்தகுதியும் வயது வரம்புத் தகுதியும் கொண்ட பட்டதாரிகள் ஐ.பி.பி.எஸ். இணையதளத்தைப் (www.ibps.in) பயன்படுத்தி செப்டம்பர் 30-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழியிலான முதல்நிலைத் தேர்வு நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டை அதிகாரி நிலையிலான தேர்வுக்கு அக்டோபர் மாதத்திலும், அலுவலக உதவியாளர் தேர்வுக்கு நவம்பர் மாதத்திலும் ஐ.பி.பி.எஸ். இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தேர்வு முறை, பாடத்திட்டம், எந்தெந்த கிராம வங்கிகளில் எவ்வளவு காலியிடங்கள் என்ற விவரம் போன்றவற்றை ஐ.பி.பி.எஸ். இணையதளத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 7

1. காப்பி, தேநீரில் உள்ள ஊக்கம் தரும் பொருள் - காபின்
2. இதயத்திலிருந்து ரத்தத்தை வெளியே கொண்டு செல்லும் ரத்தக்குழாய்கள் - தமனிகள்
3. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாக தேவைப்படுவது - இரும்பு
4. மாலுமிகளின் திசைக்காட்டியில் பயன்படுவது - காந்தமாக்கப்பட்ட இரும்பு

5. மிகப் பிரகாசமான கிரகம் - சுக்கிரன் (Venus)
6. நிக்கோடின் என்ற விஷப்பொருள் எதில் உள்ளது - புகையிலை
7. ஹீலியம் - உலோகமற்றப் பொருள்
8. கிட்டப்பார்வையை நிவர்த்தி செய்ய - குழி ஆடி பயன்படுத்தப்படுகிறது.
9. கண்ணுக்குள் செல்லும் ஒளி அளவை ஒழுங்குப்படுத்துவது - ஐரிஸ்
10. இடம் பெயர்தலை (Law of Motion) எத்தனை விதிகளில் நியூட்டன் தந்திருக்கிறார் - மூன்று விதிகளில்
11. ஸ்ட்ரெப்டோமைசினைக் கண்டுபிடித்தவர் - வாக்ஸ்மான்
12. திட கார்பன்-டை-ஆக்சைடு என்பது - உலர்ந்த ஐஸ்
13. பைசென்டினெரி என்பது - 200 ஆண்டு
14. பாம்பிற்கு காணப்படாதது - புற உறுப்புகள்
15. ஒரு குரோஸ் என்பது - 144 எண்ணிக்கை
16. திமிங்கலம் ஒரு - பாலூட்டி
17. டாலமைட் - மக்னீசியத்தின்  தாதுப்பொருள்
18. ஒலியைப் பரப்ப டேப்ரிகார்டரில் பயன்படுவது - மாக்னெடிக் நாடா
19. இரும்பு ஆணி எதில் மிதக்கிறது - பாதரசம்
20. கொய்னா எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது - சின்கோனா
21. காற்றில் தீப்பற்றக் கூடிய மூலகப் பொருள் - வெண்பாஸ்பரம்
22. எந்தச் செடி உணவை தண்டில் சேமிக்கிறது - இஞ்சி
23. வண்ணப்படுத்த பயன்படும் அமிலம் - அசிடிக் அமிலம்
24. பட்டுத் துணி எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது - ககூன்
25. இரு ஐஸ் கட்டிகள் ஒன்றோடொன்று அழுத்தப்படும் போது ஐஸில் - ஐஸின் உருகுநிலை அழுத்தம் மாறும்போது குறைகிறது.
26. வீட்டில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் சக்தியை எப்படி கண்க்கிடப்படுதல் வேண்டும் - கிலோவாட் மணிக்கு
27. வெங்காயத்தில் உண்ணக்கூடிய பகுதி - வேர்
28. வைட்டமின் கண்டுபிடித்தவர் - பங்ஸ் (Funks)
29. உடலில் உஷ்ணம் காண கிளினிகல் தர்மா மீட்டரில் கண்க்கிடுவது - சென்டிகிரேட்
30. காயம் நீல நிறமாக இருக்க காரணம் - காற்றின் மூலக்கூறுகள் சூரிய ஒளியைப் பரப்புகின்றன.
31. நம் கண்கள் - நிறங்களுக்கு மிகவும் நுட்பமாக உணவூட்டத் தக்கது. - சிகப்பு
32. ஒலியின் வேகம் மிக நீளமுடையது - காற்றில்
33. ஒரு லிட்டர் என்பது - 1000 மி.லி
34. ஹார்டுவேர் என்பது - கம்ப்யூட்டருடன் தொடர்புடையது
35. B.C.G எதனைத் தடுக்க உதவுகிறது - காசநோய்
36. மணலின் ரசாயனப் பெயர் - சிலிகன்-டை-ஆக்ஸைட்
37. சோனார் - நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டறிய பயன்படுகிறது.
38. உடல் வளர்ச்சிக்கு அதிக சக்தியை தருவது - புரதம்
39. பூச்சிகளைத் தின்னும் தாவரம் - ட்ரோசரா
40. பாலூட்டும் பிராணி எது - வெளவால்
41. இசைகள் பசுமையாக இருக்க காரணம் - பச்சையம்
42. வயிற்றில் சுரக்கும் இரப்பை நீரில் அடங்கியது - அமிலம்
43. வளிமண்டல தோற்றத்தைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் அறிவியலின் பிரிவு - வானிலை ஆராய்ச்சி
44. நரம்பியலைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் அறிவியல் பிரிவு - நியூராலஜி
45. மிக எளிதில் பற்றாத வாயு - நைட்ரஜன்
46. நிக்ரோமிலும் ஜெர்மன் வெள்ளியிலும் பொதுவாக உள்ள மூலப்பொருள் - குரோமியம்
47. மந்த வாயுக்களை கண்டுபிடித்தவர் - ராம்சே
48. மனித உடலின் சராசரி வெப்பநிலை - 36.9 சி
49. உடல் வெப்பநிலை எதனால் சரி செய்யப்படுகிறது - மூளையின் ஒரு பகுதி.
50. வெடி மருந்தைக் கண்டுபிடித்தவர் - நோபல்

டிசம்பர்-2016 துறை தேர்வுகள் அறிவிப்பு வெளியீடு : ஒரு நினைவூட்டல்.

பட்டதாாி மற்றும் முதுகலை பட்டதாாி ஆசிரியர்கள்

1.Account test for Executive officer(or)
2.Account test for Subordinate off part-Iமற்றும்
3.Tamil Nadu Office Manual

இடைநிலை ஆசிாியா்கள் மேற்கண்டவற்றுடன்

4) Deputy Ins Part-1
5) Deputy Ins Part-II
6) Educational Statistics
ஆகிய தேர்வுகள் எழுதவேண்டும்.

2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம்  மூலமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண் 447

அறிவிக்கை நாள் : 01.09.2016

விண்ணபிக்க கடைசி தேதி : 30.09.2016 நேரம் 5.45 பி.ப. வரை

தேர்வு தேதிகள் : 23.12.2016 முதல் 31.12.2016 வரை.

தேனா வங்கி பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

தேனா வங்கியின் மும்பை கிளையில் விண்ணப்பதாரர்களுக்கான 15 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தினமாகும்.

நிறுவனம்: தேனா வங்கி

மொத்த காலியிடங்கள்: 15

பணியிடம்: மும்பை

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பட்டம் கபடி, டேபிள் டென்னிஸ் விளையாட்டுத் துறைகளில் தகுதி பெற்றுள்ள இருபாலரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 - 26க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.denabank.com/uploads/files/1472876163773-rec-sports-ad-details.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 6

1. நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் - பிட்டியூட்டரி
2. சிறுநீரகத்தின் செயல் அலகு - நெப்ரான்
3. இனப்பெருக்க செல் - ஜீன்
4. மூளையில்லுள்ள சவ்வுகளின் இடையில் காணப்படும் திரவம் - மூளை தண்டுவட திரவம்

5. போட்டோ மீட்டர் கருவிகளால் அறியபவை - வெவ்வேறு ஒளி மூலங்களை ஒப்பிட
6. ஒரு லென்சின் திறன் (Power of a Lens)  அலகு -  டயாப்டர்
7. மென் ஏடு வண்ணமாகத் தோன்றுவதன் காரணம் - ஒளிவிலகல்
8. நிறையும் திசைவேகமும் இரு மடங்காகும்போது இயக்க ஆற்றல் - 8 மடங்கு ஆகும்
9. செரித்தலுக்கு உதவுபவை - நொதித்தல்
10. நரம்பு மண்டலம் - நியூரான் செல்களால் ஆக்கப்பட்டிருக்கிறது.
11. எலக்ட்ரோ-கார்டியோகிராம் என்ற கருவி - இருதயத்தின் வேலைத்திறனை பதிவு செய்ய பயன்படுகிறது.
12. பிட்யூட்டரி சுரக்கும் ஹோர்மோன் - வளர்ச்சி ஹார்மோன்
13. ஒரு மைக்ரான் என்பது - 1/1000 செ.மீ
14. ஒளிச்சேர்க்கையின் முதல் நிலையான விளைபொருள் - சர்க்கரை
15. சவ்வூடுபரவல் என்பது - விரவிப்பரவுதலை ஒத்துள்ளது.
16. தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான மூன்று முக்கிய ஊட்டப்பொருள்கள் - ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், கார்பன்
17. தாவரங்கள் நீரை கிரகிப்பது நிகழும் காலம் - சூரியன் ஒளி விடும்போது
18. தாவரங்களின் சாறேற்றம் பற்றிய தங்களின் கொள்கையை டிக்ஸன் மற்றும் ஜாலி எந்த கொள்கையின் அடிப்படையில் விளக்கினார் - நீர் மூலக்கூறுகளின் பிணைப்பு சக்தி
19. ப்ளோயம் திசுக்களில் - சல்லடை தட்டுகள் உள்ளன.
20. தாவரங்களினால் உறிஞ்சப்படும் நீர் எதன் வழியாக நகர்கிறது - ஸைலம் தொகுப்பு
21. தாவரங்களிலிருந்து வெளியேற்றும் தண்ணீரின் அளவை அளக்க உதவுவது - கானங்கின் போட்டோ மீட்டர்
22. புறத்தோல் அடுக்கிலிருந்து - பிலபெரஸ் அடுக்கு உண்டாகிறது
23. சொர்கம் செடியின் தண்டில் - பேசிக்குலார் கேம்பியம் உள்ளது.
24. வறண்ட நிலத்தாவரம் அல்லாத ஒரு தாவரம் - யூபோர்பியா டிருக்கள்ளி
25. இரத்தம் உறைய தேவையான தாது - கால்சியம்
26. திசுக்களுக்கு ஆக்ஸிஜன் எடுத்துச் செல்வது - இரத்த சிவப்பணுக்கள்
27. ஒசோன் போர்வையை உண்டாக்குவது - வாகனங்களிலிருந்து வெளியேறும் வாயுக்கள்
28. உலோகங்களை இணைக்க உபயோகப்படும் வாயு - அசிட்டிலின்
29. மார்ஷ் வாயு என்பது - மீத்தேன்
30. உலர்ந்த தலவை செய்ய உபயோகப்படுவது - நாப்தா
31. மனித மார்பில்லுள்ள விலா எலும்புகளின் எண்ணிக்கை - 24
32. இரும்புத் துண்டு எதில் மிதப்பவை - பாதரசத்தில்
33. விவசாயிகளின் நண்பன் - மண்புழு
34. சாதாரணக் கண்ணாடி எதில் செய்யப்படுகிறது - சோடியம் சிலிகேட்
35. சலவைத்தூளில் அடங்கியுள்ளது - குளோரின்
36. ஹார்மோன்கள் சேகரிக்கப்படுவது - நாளமில்லாச் சுரப்பிகள்.
37. ராக்கெட்டுகள் எந்த விதியைச் சார்ந்தது - நியூட்டனின் மூன்றாம் விதி
38. முட்டை பொரிக்க பயன்படுத்தப்படும் சாதனம் - இன்குபேட்டர்.
39. சாரயமும் தண்ணீரும் கலந்த கலவையை பிரிக்கும் முறை - சுத்தப்படுத்துதல்
40. கப்பல் மிதப்பதின் அடிப்படை - ஆர்கிமிடிஸ் தத்துவம்
41. மின்காந்தம் உபயோகப்படுத்துவது - மின்மாற்றியில்
42. தாவரங்கள் கார்போஹைட்ரேட்டை உற்பத்தி செய்வது - கரியமில வாயு நீர்
43. எகாலஜிலினைப்பற்றிய ஆராய்ச்சி - வாழும் உயிரினங்கள்
44. மகரந்தப் பையில் அடங்கியது - மகரந்தத் தூள்கள்
45. பாலின் அடர்த்தியை காண பயன்படுவது - வாக்டா மீட்டர்
46. "வின்னி பெங்" ஏரி எங்குள்ளது - கனடா
47. பிராணிகள் செயலற்றிருத்தல் எந்த காலத்தில் நடைபெறும் - குளிர் காலம்
48. கைத்துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர் - கோல்
49. நீரின் மேல் சேகரிக்கப்படும் வாயு - ஹைட்ரஜன்
50. இலவங்கம் (கிராம்பு) ஒரு - பூ மொட்டு
                                                                                                                   தொடரும்....

கிடப்புக்கு போன 'செட்' தேர்வு முடிவு.

தமிழகத்தில் பேராசிரியர் பணியில் சேர, மாநில அளவிலான, 'செட்' தகுதித்தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். அகில் இந்திய அளவில் நடத்தப்படும், 'நெட்' தேர்வில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டும் வினாத்தாள் இருக்கும்; அதனால், தமிழில் வினாத்தாள் வழங்கும், செட் தேர்வையே பலரும் எழுதுகின்றனர். தமிழகத்தில், பிப்., 20ல் செட் தேர்வு நடந்தது; 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரிகள் பங்கேற்றனர்.
ஆனால், ஏழு மாதங்களாகியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால், வேலைவாய்ப்புகள் இருந்தும், அவற்றுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பலர் உள்ளனர். குறிப்பாக, சமீபத்தில், இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பதவிக்கு, 192 இடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியானது. பள்ளிக்கல்வித் துறையின், ஆசிரியர் பயிற்சி நிறுவன கல்லுாரிகளுக்கு, 272 விரிவுரையாளர்களுக்கு, சமீபத்தில் தேர்வு நடந்தது.

மனோன்மணியம், பாரதியார் பல்கலைகளில், 150 இடங்களை நிரப்ப அறிவிப்புவெளியாகியது. செட் தேர்வு முடிவு வெளியாகாததால், இந்த பணிகளுக்கு, முதுநிலை பட்டதாரிகளால் விண்ணப்பிக்க முடியாமல் போய் விட்டது.

ஜிமெயில் முகவரிகளில் கூடுதல் வசதிகள்

 ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கூகுள், தன் ஜிமெயில் மூலம் யாஹூ மற்றும் ஹாட் மெயில் போன்றவற்றுக்குச் சவாலாய் களம் இறங்கியது. இன்று, பயனாளர்களின், மின் அஞ்சல் பயன்பாட்டில், முதல் தேர்வாய் ஜிமெயில் உள்ளது. நூறு கோடி பேருக்கு மேல் இதனைப் பயன்படுத்துவதால் தான், நீங்களும் நானும், ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்தி வருகிறோம். 

           ஜிமெயில் அஞ்சல் பயன்பாட்டில், அது தரும் அனைத்து வசதிகளையும் நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள் என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை. ஜிமெயில் உலகில் பல வசதிகளை நாம் இன்னும் பயன்படுத்தாமல் தான் இருக்கிறோம். ஏன்? கிடைத்தவரை போதும் என்று நினைக்கிறோம். இங்கு அது போல நாம் விட்டுவிட்ட சில வசதிகளைக் காணலாம்.ஒரே அஞ்சல் பெட்டிக்கான துணை முகவரிகள் ஜிமெயில் அஞ்சல் கணக்கில் நாம் ஆளுக்கொரு முகவரியினைக் கொண்டுள்ளோம். 

ஒவ்வொரு முகவரிக்கும் ஒரு இன்பாக்ஸ் நமக்கு உள்ளது. அந்த முகவரிக்கு அனுப்பப்படும் அனைத்து மெயில்களும், இந்த பாக்ஸில் நமக்குக் கிடைக்கிறது. இந்த முகவரிக்கு இன்னும் சில துணை முகவரிகளை நாம் உருவாக்கலாம். அனைத்தும் அந்த முகவரிக்குச் சொந்தக்காரருக்கான கூடுதல் முகவரிகளாக மாறும்.

அவை அனைத்திற்கும் அனுப்பப்படும் மெயில்கள் அனைத்தும், அதே மெயில் பாக்ஸில் வந்து விழும். இது எப்படி அமைக்கலாம்? உங்கள் மின் அஞ்சல் முகவரியினை அடுத்து ஒரு '+' அடையாளம் அமைக்கவும். அதன் பின், நீங்கள் விரும்பும் வகையில் சொற்களையோ, எண்களையோ அமைத்துக் கொள்ளுங்கள்.

ஒரே இன்பாக்ஸுக்கான, உங்களுக்கே சொந்தமான மின் அஞ்சல் முகவரிகளாக இவை இருக்கும். எடுத்துக்காட்டாக, உங்களின் தற்போதைய முகவரி aarumugam@gmail.com என இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதனை, நீங்கள் aarumugam+manager@gmail.com, aarumugam+relatives@gmail.com எனக் கூடுதலாக முகவரிகளை அமைத்து, உங்கள் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு முதலில் உள்ளதையும், அடுத்து உள்ளதை, உங்கள் உறவினர்களுக்கும் வழங்கலாம். இந்த இரண்டு முகவரிகளுக்கும் அனுப்பப்படும் மின் அஞ்சல்கள் அனைத்தும், உங்களின் அடிப்படை முகவரியான aarumugam@gmail.com என்ற முகவரிக்கான அஞ்சல் பெட்டிக்கே வந்து சேரும்.

தனித்தனியாக ஜிமெயில் திறந்து பார்க்க வேண்டியதில்லை. இந்த வசதி மூலம், புதியதாக எந்தவித அடிப்படை மாற்றமும் இல்லாமல், கூடுதல் முகவரிகளை நம் வசதிக்கேற்ப அமைத்துப் பயன்படுத்தலாம். இவ்வாறு எத்தனை முகவரிகளை அமைத்துக் கொள்ளலாம் என்று கேட்கிறீர்களா? எத்தனை வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.இதனால், நீங்கள் பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிற்குத் தரும் மின் அஞ்சல் முகவரிகளையும் அவற்றிற்கேற்றார்போல் மாற்றிக் கொள்ளலாம்.

எடுத்துக் காட்டாக, aarumugam+faceook@gmail.com அல்லது aarumugam+twitter@gmail.com என அமைத்துக் கொள்ளலாம். நீங்கள் உங்கள் இன் பாக்ஸில் அஞ்சலைப் பார்க்கும் போதே, அது எந்த குழுவில் இருந்து வந்தது எனப் புரிந்து கொள்ளலாம். முதன்மை முகவரியின் துணை முகவரிகள்உங்களுடைய ஜிமெயில் முகவரியில், புள்ளி (.) ஒன்றை எந்த இடத்தில் வேண்டுமானாலும் இடைச் செருகி, முதன்மை முகவரியின் துணை முகவரிகளை அமைக்கலாம். ஏனென்றால், ஜிமெயில், அதற்கான மின் அஞ்சல் முகவரிகளில், புள்ளிகள் இருந்தால், அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாது.

ஆனால், நீங்கள் உங்கள் முகவரியில் வெவ்வேறு இடங்களில் புள்ளியிட்டு, வெவ்வேறு நபர்களுக்கு வழங்கலாம். எடுத்துக் காட்டாக, maduraikumaresan@gmail.com என்ற முகவரியிலிருந்து கூடுதலாக, madu.raikumaresan@gmail.com, madurai.kumaresan@gmail.com மற்றும் maduraikumare.san@gmail.com என முகவரிக்ளை அமைக்கலாம். இவை அனைத்திற்கான ஜிமெயில் அஞ்சல்களும், முதன்மை முகவரிக்கான இன் பாக்ஸிற்கே வரும். நம் நண்பர்கள், இந்த புள்ளியைத் தவறாக டைப் செய்து முகவரியை அமைத்தாலும், ஜிமெயில் அதைக் கணக்கில் கொள்ளாமல், முதன்மை மின் அஞ்சல் முகவரிக்கே அனுப்பும்.

அனுப்பிய ஜிமெயிலைத் தடுத்திடுஅனுப்பிய ஜிமெயிலை, அனுப்ப வேண்டாம் என சில விநாடிகளில் நம்மால் தடுக்க முடியும். பலர், கோபத்தில், உணர்ச்சி வேகத்தில், மின் அஞ்சல் ஒன்றை எழுதி உடனே Send பட்டனை அழுத்திவிடுவார்கள். அழுத்திய பின்னரே, உடனே, அதை அனுப்பியிருக்க வேண்டாமே எண்ணுவார்கள். அல்லது, அனுப்பிய மின் அஞ்சலில் வேறு சில மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கலாமே என்று எண்ணலாம்.

இப்படிப்பட்ட வழக்கமுடையவர்கள், கவலைப்பட வேண்டாம். "Send" பட்டன் அழுத்தியவுடன் இந்த எண்ணம் ஏற்பட்டால், உடனே மெயில் அனுப்பப்படுவதனை நிறுத்தலாம்.இதற்கு, செட்டிங்ஸ் பக்கத்தில் கீழ்க்குறித்தவாறு அமைப்புகளை அமைக்க வேண்டும். உங்களுடைய் இன்பாக்ஸ் பக்கத்தில் உள்ள 'கியர்' ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், 'Settings' என்பதில் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் Settings பக்கத்தில், Undo Send என இடது பக்கம் காட்டப்பட்டிருக்கும் இடத்திற்குச் செல்லவும். இங்கு "Enale Undo Send" என உள்ள இடத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். கீழாக, Send cancellation period எனக் காட்டப்பட்டு, அருகே கீழ் நோக்கிய அம்புக்குறி அடையாளம் இருக்கும். இதில் கிளிக் செய்தால், 5, 20, 30 என மூன்று கால அவகாசம் காட்டப்படும்.

இது எத்தனை விநாடிகளில், அனுப்பிய மெயிலை, அனுப்பாமல் இருக்க நிறுத்தலாம் என்பதை வரையறை செய்திடும் இடம். நீங்கள் விரும்பும் காலத்தினைத் தேர்ந்தெடுத்து, செட்டிங்ஸ் பக்கத்தின் இறுதியில் சென்று, Save பட்டன் அழுத்தி வெளியேறவும். இனி, அஞ்சல் எழுதி முடித்து, Send பட்டனை அழுத்திய பின்னர், "Your message has een sent. Undo View message எனத் தலைப்பாக மேல் பக்கத்தில் காட்டப்படும்.

இதில் Undo பட்டனில் அழுத்தினால், நீங்கள் அனுப்பிய அஞ்சல் அனுப்பப்படாமல் வைக்கப்படும். "Sending has een undone" என அஞ்சல் மீண்டும் பெறப்பட்ட செய்தி காட்டப்படும். நீங்கள் அதனை அனுப்பாமல் ரத்து செய்திடலாம். அல்லது தேவைப்படும் திருத்தங்களை மேற்கொண்டு, அதன் பின்னர் அனுப்பலாம்.போனஸ் குறிப்புஇன்னொரு குறிப்பு ஒன்றினைக் கூடுதலாகச் சொல்கிறேன்.

மின் அஞ்சல் கடிதத்தில், (ஆங்கிலத்தில்), ஒரு டாகுமெண்ட், போட்டோ அல்லது விடியோ பைல் என எதையாவது, attach செய்வதாக எழுதிவிட்டு, பின் அதனை இணைக்காமல், அஞ்சலை அனுப்ப முயன்றால், உடனே, கீழ்க்காணும் செய்தி கொண்ட கட்டம் காட்டப்படும். Mail.google.com says / It seems like you forgot to attach a file. You wrote "is attached" in your message. But there are no files attached.

Send anyway? என செய்தி தரப்படும். அனுப்புவதை நிறுத்தி விட்டு, பைலை இணைத்து பின் Send பட்டனை அழுத்தலாம். மேலே காட்டப்பட்டுள்ள குறிப்புகள், நிச்சயம் பல ஜிமெயில் பயனாளர்களுக்குப் புதியவையாக இருக்கும்.

இவற்றைப் பயன்படுத்தி நீங்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்தலாம்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!