Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 22 September 2016

பள்ளிக்கல்வி - வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - தலைமையாசிரியர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - இயக்குனர் செயல்முறைகள்

DA from July 2016 in 7th pay Commission is 2% or 3%

DA from July 2016 in 7th pay Commission is 2% or 3% is yet to be confirmed

It seems that the DA from July 2016 in 7th Pay Commission is not yet finalized by Central Government.

 There is confusion persists on the rate of Dearness Allowance to be paid from 1st July 2016 in revised Pay .
The AICPIN average for the year 2015 to be taken as Base Index for calculation of DA in 7th CPC as the DA has beenneutralized to arrive the revised Pay.The actual AICPIN Average for 2015 is 261.33.

As per this AICPIN average, the DA to be paid at the rate of 2% from July 2016 in 7th CPC . But the NCJCM has contended that it should be paid at the rate of 3%.The NCJCM staff side said that as per the practice of fraction is being ignored, 0.75 is ignored from actual DA 125.75 as on 1st January 2016.

 Since the 125% DA was merged to revise the 7th CPC pay, Accordingly, the AICPIN average of 2015 has to be revised to 260.46 from 261.33 to arrive the exact rate of DA of 125% .It is obvious that the NCJCM Staff Sides claim has sufficient merits to be considered favorably by the Government. In that case, the DA to be paid from July 2016 will be 3%.The NCJCM Staff Side should be appreciated for this timely intervention and effort.

The central Government need to take decision inthis regard soon, as it has been passed third week of September. Usually the announcement of DA for July every year will be made in the firstor second week of September.

3000 ஆசிரியர்களுக்கு கட்டாய 'டிரான்ஸ்பர்' விரைவில் வருகிறது பணி நிரவல்..

வாக்குச்சாவடி அலுவலர் நியமனம் : ஒரே துறை பணியாளர்களுக்கு தடை

ஒரே வாக்குச்சாவடியில், ஒரே துறையைச் சேர்ந்த பணியாளர்களை வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்ககூடாது என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் சில விதிமுறைகளை கடைபிடிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் நிலை 1 ல் மாநில அரசு பணியில் உதவியாளர் தகுதி அல்லது அவர்கள் சம்பள விகிதத்திற்கு குறையாத பணியாளர்களை நியமிக்க 
வேண்டும்.வாக்குப்பதிவு அலுவலர் நிலை 2,6ல் அலுவலக உதவியாளர் தகுதி அல்லது அவர்கள் சம்பள விகிதத்திற்கு குறையாத பணியாளர்கள், வாக்குப்பதிவு அலுவலர் நிலை 3,4,5ல் இளநிலை உதவியாளர் தகுதி அல்லது அவர்கள் சம்பள விகிதத்திற்கு குறையாத பணியாளர்களை நியமிக்க வேண்டும். போலீஸ், மருத்துவம், மின்சாரம், குடிநீர் வழங்கல், பால்பண்ணை போன்ற துறை பணியாளர்களை நியமிக்க கூடாது. அரசியல் சார்புடையவர் என அறியப்பட்டவர், முந்தைய தேர்தல்களில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர், வேட்பாளரின் உறவினர் ஆகியோரை பணியமர்த்த கூடாது. அதிக வாக்காளர்கள் அல்லது பர்தா அணிந்த இஸ்லாமிய பெண்கள் நிறைந்த பெண் வாக்குச்சாவடிகளில், அடையாளம் காண்பதற்காக ஒன்று அல்லது 2 பெண் வாக்குப்பதிவு அலுவலர்களை நியமிக்க வேண்டும். மேலும் ஒரே வாக்குச்சாவடியில் ஒரே துறைச் சேர்ந்த பணியாளர்கள் நியமித்தால் கூட்டுச் சேர வாய்ப்புள்ளது. இதனால் வெவ்வேறு துறை பணியாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். இவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

3 வயதுக்கு உட்பட்ட காதுகேளாத குழந்தைகளை பேச வைக்கலாம்: சென்னை பாலவித்யாலயா பள்ளியில் இலவச பயிற்சி.

மூன்று வயதுக்கு உட்பட்ட காதுகேளாத குழந்தைகளைப் பேச வைப்பதற்கான சிறப்புப் பயிற்சி சென்னையில் உள்ள பாலவித்யா லயா காதுகேளாதோர் பள்ளியில் இலவசமாக அளிக்கப்படுகிறது.சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் இயங்குகிறது பாலவித் யாலயா காது கேளாதோர் பள்ளி. இங்கு, காதுகேளாத குழந்தைகள்சேர்க்கப்பட்டு அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து அப்பள்ளியின் கவுரவ இயக்குநர் சரஸ்வதி நாராயணசாமி, முதல்வர் வள்ளி அண்ணாமலை, துணை முதல்வர் மீரா சுரேஷ் ஆகியோர் கூறிய தாவது:

பெரும்பாலும் குழந்தைகள் 3-வது மாதம் முதல் 4-வது மாதத்தில் குப்புறப் படுக்க ஆரம் பிக்கும். தலையைத் தூக்கி இங்கும் அங்கும் பார்க்கும். எப்போது நாம் அதன் பெயரை அழைக்கிறோமோ அப்போது அது ஆசையுடன் சத்தம் வரும் திசையை நோக்கி எட்டிப் பார்க்கும். முதலில் சத்தத்தை உணர்ந்து கொள்ள முயற்சிக்கும். அதன்பிறகு அந்தச் சத்தம்எங் கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிக்கும்.பின்னர் சத்தத்தை வேறுபடுத்திப் பார்த்து, அதில் இருந்து ஓர் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும். அதைத்தொடர்ந்து தானாக பேசும் கலையை குழந்தையே வளர்த்துக் கொள்ளும்.

ஆனால் இந்த திறமை அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை. பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தை காதுகேளாக் குறைபாடுடன் பிறக் கிறது. காது கேளாத காரணத் தால் பேசும் திறன் அந்தக் குழந் தைக்கு இருக்காது. இதை நாம் சிறுவயதிலேயே கண்டுபிடிக்க முடியும். குழந்தைப் பிறந்த உடன் பரிசோதித்துப் பார்க்கும்போது காது கேட்கிறதா என்பதை கண்டு பிடிக்கலாம். மேலும், போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்போதும் தெளிவாக உணர முடியும்.குழந்தைக்குக் காது கேட்கவில்லை என்பதை நாம் உணர்ந்த வுடன் கேட்கும் திறனைப் பரிசோதிக் கும் ஆடியோ வல்லுநர்களிடம் பரிசோதனைக்குக் கொண்டு செல்லவேண்டும்.

குழந்தைப் பிறந்து 3 முதல் 4 மாதங்களில் ஒரு தாய் தனது குழந்தையைக் கூப்பிடும்போது அது சத்தம் வரும் திசையை நோக்கி பார்க்கிறதா? அல்லது பார்க்காமல் இருக்கிறதா? என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும். அப்படி பார்க்கவில்லை என்றால் உடனடியாக குழந்தையை காது மூக்கு தொண்டை மருத்துவர் அல்லது ஆடியோ நிபுணர்களிடம் கொண்டு செல்லவேண்டும். 3 வயதுக்குள் கண்டுபிடித்துவிட்டால் குழந்தை மிக விரைவிலேயே பேசும் திறனையும் கேட்கும் திறனையும் கற்றுக்கொண்டு மற்ற குழந்தை கள் போன்று இயல்புநிலையை அடைந்து இதர குழந்தைகளுடன் சேர்ந்துகொள்ளும்.காதுகேளாத குழந்தைக்கு காது கேட்கும் கருவியை பொருத்துவது மூலமாக அது சத்தத்தை உணர்ந்து கொள்ளும். ஆனால், குழந்தை தானாக பேசுவதற்குக் கற்றுக் கொள்ள தனியாக பயிற்சி அளிக்க வேண்டும்.

இந்தச் சிறப்புப் பயிற்சியால், காதுகேளாத குழந்தை மற்றவர்கள் பேசுவதைப் போல் பேச கற்றுக்கொள்ளும். எங்கள் பள்ளியில் காதுகேளாத குழந்தைகளுக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் இலவசமாக அளிக்கிறோம். பொது வாக, காதுகேளாத குழந்தை களுக்குப் பயிற்சி அளிக்கும் அனைத்துப் பள்ளிகளும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைத்தான் சேர்த்துக்கொள்கின்றன. ஆனால் எங்கள் பள்ளியில், பிறந்தது முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை சேர்த்துக் கொள்கிறோம். இங்கு சேர குழந்தைகளுக்குக் குறைந்தபட்ச வயது வரம்பு ஏதும் கிடையாது. பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகள் கூட சேர்த்துக் கொள்கிறோம்.

பெரியவர்கள் பேசுவதைக் கேட்கவும் பின்னர் அதற்கு ஏற்ப பதில் அளிக்கவும் இளம் பரு வத்தில் இருந்தே இந்தக் குழந்தை களுக்குப் பயிற்சி அளிக்க ‘தவானி’ என்ற முறையைப்பின் பற்றுகிறோம். இங்கு 3 முதல் 4 ஆண்டுகள் அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சிகள் மூலம் குழந் தைகள் வாசிக்கவும் எழுதவும் எண்கள் அடங்கிய கணக்குகளைப் போடவும் கற்றுக் கொள்கிறார்கள். இதனால் அவர்கள் 5 முதல்6 வயதுக்குள் இந்தப் பள்ளியில் இருந்து வெளியே வந்து பொது வான பள்ளிகளில் சேர்ந்துவிடலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Cumulative Register From 1St STD To 8th STD மாணவர் திரள் பதிவேடு

நன்றி:- திரு. சுரேஷ் பாபு ஆசிரியர்

தமிழக அரசில் துணை ஆய்வாளர், ஃபோர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அரசின் மீன்வளத்துறையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள துணை ஆய்வாளர், ஃபோர்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: துணை ஆய்வாளர் (Fisheries Department)
காலியிடங்கள்: 12
தகுதி: Fishery Science  படிப்பில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும் அல்லது விலங்கியல் படிப்பை முக்கியப் பாடமாகக் கொண்ட பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.3,900-34,800
பணி: ஃபோர்மேன்
காலியிடங்கள்: 04
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.3,900-34,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்க்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் இதர பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி,மாற்றுத் திறனாளிகள், கணவரை இழந்த ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை:http://tnpscexams.net என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.tnpsc.gov.in/notifications/2016_18_not_eng_si_of_fisheries.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

3 வயதுக்கு உட்பட்ட காதுகேளாத குழந்தைகளை பேச வைக்கலாம்: சென்னை பாலவித்யாலயா பள்ளியில் இலவச பயிற்சி.

மூன்று வயதுக்கு உட்பட்ட காதுகேளாத குழந்தைகளைப் பேச வைப்பதற்கான சிறப்புப் பயிற்சி சென்னையில் உள்ள பாலவித்யா லயா காதுகேளாதோர் பள்ளியில் இலவசமாக அளிக்கப்படுகிறது.சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் இயங்குகிறது பாலவித் யாலயா காது கேளாதோர் பள்ளி. இங்கு, காதுகேளாத குழந்தைகள்சேர்க்கப்பட்டு அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து அப்பள்ளியின் கவுரவ இயக்குநர் சரஸ்வதி நாராயணசாமி, முதல்வர் வள்ளி அண்ணாமலை, துணை முதல்வர் மீரா சுரேஷ் ஆகியோர் கூறிய தாவது:

பெரும்பாலும் குழந்தைகள் 3-வது மாதம் முதல் 4-வது மாதத்தில் குப்புறப் படுக்க ஆரம் பிக்கும். தலையைத் தூக்கி இங்கும் அங்கும் பார்க்கும். எப்போது நாம் அதன் பெயரை அழைக்கிறோமோ அப்போது அது ஆசையுடன் சத்தம் வரும் திசையை நோக்கி எட்டிப் பார்க்கும். முதலில் சத்தத்தை உணர்ந்து கொள்ள முயற்சிக்கும். அதன்பிறகு அந்தச் சத்தம்எங் கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிக்கும்.பின்னர் சத்தத்தை வேறுபடுத்திப் பார்த்து, அதில் இருந்து ஓர் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும். அதைத்தொடர்ந்து தானாக பேசும் கலையை குழந்தையே வளர்த்துக் கொள்ளும்.

ஆனால் இந்த திறமை அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை. பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தை காதுகேளாக் குறைபாடுடன் பிறக் கிறது. காது கேளாத காரணத் தால் பேசும் திறன் அந்தக் குழந் தைக்கு இருக்காது. இதை நாம் சிறுவயதிலேயே கண்டுபிடிக்க முடியும். குழந்தைப் பிறந்த உடன் பரிசோதித்துப் பார்க்கும்போது காது கேட்கிறதா என்பதை கண்டு பிடிக்கலாம். மேலும், போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்போதும் தெளிவாக உணர முடியும்.குழந்தைக்குக் காது கேட்கவில்லை என்பதை நாம் உணர்ந்த வுடன் கேட்கும் திறனைப் பரிசோதிக் கும் ஆடியோ வல்லுநர்களிடம் பரிசோதனைக்குக் கொண்டு செல்லவேண்டும்.

குழந்தைப் பிறந்து 3 முதல் 4 மாதங்களில் ஒரு தாய் தனது குழந்தையைக் கூப்பிடும்போது அது சத்தம் வரும் திசையை நோக்கி பார்க்கிறதா? அல்லது பார்க்காமல் இருக்கிறதா? என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும். அப்படி பார்க்கவில்லை என்றால் உடனடியாக குழந்தையை காது மூக்கு தொண்டை மருத்துவர் அல்லது ஆடியோ நிபுணர்களிடம் கொண்டு செல்லவேண்டும். 3 வயதுக்குள் கண்டுபிடித்துவிட்டால் குழந்தை மிக விரைவிலேயே பேசும் திறனையும் கேட்கும் திறனையும் கற்றுக்கொண்டு மற்ற குழந்தை கள் போன்று இயல்புநிலையை அடைந்து இதர குழந்தைகளுடன் சேர்ந்துகொள்ளும்.காதுகேளாத குழந்தைக்கு காது கேட்கும் கருவியை பொருத்துவது மூலமாக அது சத்தத்தை உணர்ந்து கொள்ளும். ஆனால், குழந்தை தானாக பேசுவதற்குக் கற்றுக் கொள்ள தனியாக பயிற்சி அளிக்க வேண்டும்.

இந்தச் சிறப்புப் பயிற்சியால், காதுகேளாத குழந்தை மற்றவர்கள் பேசுவதைப் போல் பேச கற்றுக்கொள்ளும். எங்கள் பள்ளியில் காதுகேளாத குழந்தைகளுக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் இலவசமாக அளிக்கிறோம். பொது வாக, காதுகேளாத குழந்தை களுக்குப் பயிற்சி அளிக்கும் அனைத்துப் பள்ளிகளும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைத்தான் சேர்த்துக்கொள்கின்றன. ஆனால் எங்கள் பள்ளியில், பிறந்தது முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை சேர்த்துக் கொள்கிறோம். இங்கு சேர குழந்தைகளுக்குக் குறைந்தபட்ச வயது வரம்பு ஏதும் கிடையாது. பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகள் கூட சேர்த்துக் கொள்கிறோம்.

பெரியவர்கள் பேசுவதைக் கேட்கவும் பின்னர் அதற்கு ஏற்ப பதில் அளிக்கவும் இளம் பரு வத்தில் இருந்தே இந்தக் குழந்தை களுக்குப் பயிற்சி அளிக்க ‘தவானி’ என்ற முறையைப்பின் பற்றுகிறோம். இங்கு 3 முதல் 4 ஆண்டுகள் அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சிகள் மூலம் குழந் தைகள் வாசிக்கவும் எழுதவும் எண்கள் அடங்கிய கணக்குகளைப் போடவும் கற்றுக் கொள்கிறார்கள். இதனால் அவர்கள் 5 முதல்6 வயதுக்குள் இந்தப் பள்ளியில் இருந்து வெளியே வந்து பொது வான பள்ளிகளில் சேர்ந்துவிடலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல் ஆசிரியர் கூட்டமைப்பு முதல்வருக்கு நன்றி

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, புதிய சம்பளம் வழங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு, புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள்கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.கூட்டமைப்பு தலைவர் துளசி வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்தசம்பளம் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. 
புதுச்சேரியில் நிதி நிலைமை சீரமைத்த பிறகு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.இந்நிலையில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை சிறப்பு அறிவிப்பு மூலம், பட்ஜெட் கூட்டம் முடிவதற்குள் சட்டசபையில்அறிவிக்க வேண்டும் என, புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. அதனை ஏற்ற முதல்வர் நாராயணசாமி, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் செப்., மாதத்தில் பதிய சம்பளம் வழங்கப்படும் என அறிவித்தார்.இதற்காக, கூட்டமைப்பு சார்பில், கவர்னர் மற்றும் முதல்வர் நாராயணசாமி, கல்வி அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வனத்துறை தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2-வது பட்டியல் வெளியீடு.

தமிழ்நாடு வனத்துறை தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்கான2-வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில், வனவர் மற்றும் கள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் கட்- ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் முதல் பட்டியல் வெளியிடப்பட்டு, அவர்களுக்கு கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட்மாதம் வேளச்சேரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

எழுத்துத் தேர்வு மதிப்பெண் மற்றும் நியமன இடஒதுக்கீடு அடிப்படையில் 2-வது பட்டியல் தயார் செய்யப்பட்டு, வனத்துறை இணையதளமான www.forests.tn.nic.in ல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே நடைபெற்ற சான்றிதழ் சரி பார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து அசல் சான்றுகளின் நகல் களையும், வரும் 30-ம் தேதிக்குள் தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழும உறுப்பினர் செயல ருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொலைநிலைக் கல்வி மைய தேர்வு ரத்து உயர்நீதிமன்றத்தில் பல்கலை தகவல்.

மதுரை, மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியின் கீழ், தர்மபுரி கல்வி மையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், 400 மாணவர்கள் சேர்க்கை, தேர்வை ரத்து செய்யபல்கலை நிர்வாகம் பரிந்துரைத்தது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், தர்மபுரி குளோபல் அகாடமி பார் மேனேஜ்மென்ட் ஒருங்கிணைப்பாளர் நவீன்குமார் தாக்கல் செய்த மனுஎங்கள் கல்வி மையம், மதுரை காமராஜ் பல்கலையால் பதிவு செய்யப்பட்டது. தொலை நிலைக் கல்வி மையம் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த 2013ல், பல்கலையுடன் ஒப்பந்தம் செய்தோம். 2015----16 கல்வி ஆண்டில் எங்கள் மையம்மூலம், 400 மாணவர்கள் தொலை நிலைக் கல்வியின் கீழ் படித்தனர்.வேலுார் மாவட்டம் திருப்பத்துாரில் ஒரு பள்ளியில், 2015 மே 17 ல் தேர்வு நடந்தது.

ஓராண்டிற்கு மேலாகியும், விடைத்தாளை மதிப்பீடு செய்யவில்லை; தேர்வு முடிவு வெளியாகவில்லை. விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, தேர்வு முடிவை வெளியிட உத்தரவிட வேண்டும், என மனு செய்திருந்தார்.நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார்.பல்கலை தேர்வு, ஒழுங்குமற்றும் மாணவர்கள் நலக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, பல்கலை வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.அதன் விபரம்: தேர்வு 2015 மே 16 முதல் ஜூன் 5 வரை நடந்தது. தர்மபுரி மையத்தைச் சேர்ந்த 400 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. தேர்வு எழுதியதாக கூறுவதில், முறைகேடு நடந்துள்ளதாக முடிவுக்கு வருகிறோம். ஆகையால், 400 மாணவர்களின் தேர்வு மற்றும் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும். அவர்களை மீண்டும் பல்கலையில் எந்த படிப்பிலும் சேர அனுமதிக்கக் கூடாது. தர்மபுரி மையத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என பரிந்துரைக்கிறோம்.இவ்வாறு குறிப்பிடப்பட்டது.

பல்கலை வழக்கறிஞர், ''குழுவின் பரிந்துரை, நடவடிக்கைக்காக உயர்கல்வித்துறை செயலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது,'' என்றார்.நீதிபதி செப்.,29 க்கு ஒத்திவைத்தார்.

பள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு.

கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறை அடைந்துள்ள வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கட்டிடத்தில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர், தேர்வுத்துறை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து செயலாளர் சபிதா விளக்கினார்.

மேலும், தற்போது நடக்கும் காலாண்டுத் தேர்வுகள் முடிந்த பின் அறிவிக்கப்படும் விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவ மாணவியருக்கும் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன் நாபார்டு திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டத்திலும் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டும் பணியை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார்.

CCE GRADE CALCULATOR

ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள் பட்டியல் விவரம் வருமாறு !

தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என 4 வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ந்தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.

தற்போது இந்த அமைப்புகளின் 5 ஆண்டு பதவி காலம் அடுத்த மாதம் (அக்டோபர்) 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டபடி நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தேர்தல் செலவுக்கான நிதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பெண்களுக்கு ஒதுக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளை கண்டறியும் பணி தீவிரமாக நடந்தது. இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் பட்டியல் அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்ட நகராட்சிகள் பட்டியல் விவரம் வருமாறு:-

எஸ்.சி. (பொது):- நெல்லிக் குப்பம், அரக்கோணம், நெல்லியாலம், ஆத்தூர், திருவேற்காடு, நரசிங்கபுரம், கூத்தாநல்லூர், மறைமலைநகர்.

எஸ்.சி. பெண்கள்:- ராணிப்பேட்டை, சீர்காழி, திருத்துறைப்பூண்டி, வால்பாறை, ஊட்டி, சங்கரன்கோவில், பேரணாம்பட்டு, குன்னூர், பெரம்பலூர்.

பெண்கள் (பொது):- ஆம்பூர், குடியாத்தம், திருவத்திபுரம், வந்தவாசி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம், அறந்தாங்கி, ஜெயங்கொண்டம், தேவக்கோட்டை, காரைக்குடி, கீழக்கரை, தாராபுரம், உடுமலைபேட்டை, கடையநல்லூர், தென்காசி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கோவில்பட்டி, காயல்பட்டினம், குழித்துறை, நாகர்கோவில், பத்மநாபபுரம், சாத்தூர், விருதுநகர், திருத்தாங்கல், ராசிபுரம், திருவாரூர், செங்கோட்டை, துறையூர்.

வாலாஜாபேட்டை, கடலூர், பழனி, வாணியம்பாடி, மேட்டுப்பாளையம், செங்கல்பட்டு, மதுராந்தகம், போடிநாயக்கனூர், குளித்தலை, மேட்டூர், கிருஷ்ணகிரி, அரியலூர், ராஜபாளையம், ஆற்காடு, அருப்புக்கோட்டை, திருமங்கலம், பெரியகுளம், தர்மபுரி, பொள்ளாச்சி, விழுப்புரம், கம்பம்.

பொது:- தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், காஞ்சீபுரம்.

பெண்கள்:- செங்கல்பட்டு, மதுராந்தகம்.

பொது:- திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், சிவகங்கை, கன்னியாகுமரி.

எஸ்.டி. பெண்கள்:- நாமக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி.

எஸ்.டி. (பொது):- நீலகிரி, தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், ராமநாதபுரம்.

பெண்கள் (பொது):- காஞ்சீபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தூத்துக்குடி

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!