Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 23 September 2016

TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.
1. உலர் செல்லில் பயன்படும் வேதிப்பொருள் - அம்மோனியம் குளோரைட்
2. மிக இலேசான மூலகம் - நீர்ம வாயு
3. பால்வீதி மண்டலத்தின் சேர்க்கை என்பது - கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்
4. பொதுவாக குழந்தைகளை தாக்கும் நோய் - மேக நோய்

5. அயோடின் கரைசல் எவ்வகை உணவிலிருந்து கிடைக்கப் பெறுகிறது - ஸ்டார்ச்
6. செல் கோட்பாட்டில் விதிவிலக்கானது - வைரஸ்
7. வெற்றிடத்தில் ஒலி அலைகள் - செல்லாது
8. சூரியனிடமிருந்து வெப்பம் பூமியின் மேல் - கதிர்வீசலினால் பெறப்படுகிறது.
9. ஹைட்ரஜன் அணுவின் முக்கியத்துவம் எதனைச் சார்ந்தது - அணுவை உருகச் செய்தல்
10. ஒரு பெரிய சன்னல் கண்ணாடி முன் ஒரு மனிதன் நிற்கும் போது அவர் உருவம் பெரிதாக தோன்றுகிறது. ஜன்னல் கண்ணாடியில் இருப்பது - குழிலென்சு
11. ஒரு நாளின் மிக வெப்பமான நேரம் என்பது - 1.00 மணி
12. கடல் நீரில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதற்கு காரணம் - பேரலைகள்
13. உறைந்து இருக்கும் கடல் - ஆர்க்டிக் பெருங்கடல்
14. காற்று உயர் அழுத்தப் பகுதியிலிருந்து குறைந்த அழுத்தப் பகுதிகயை நோக்கி வீசுவது - எதிர்காற்று
15. பரந்த உஷ்ணமான வாயு நிறைந்த பொருள் - சூரியன்
16. பூமியை இரு சமபாகங்களாகப் பிரிக்கும் சிறந்த கற்பனை வட்டத்தின் பெயர் - பூமத்திய ரேகை
17. சூயஸ் கால்வாயுடன் இணையும் கடல் - செங்கடல், மத்தியக் கடல்
18. கண்ணில் புகும் ஒளியின் அளவினை சரி செய்வது - கருவிழி
19. வயிற்றிலுள்ள இரைப்பையில் சுரக்கும் என்சைம் - பெப்சின்
20. நீரழிவு நோய் எதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது - இன்சுலின்
21. நிலநடுக்க அலைகள் வேகமாக பாய்வது - பாறைக்கட்டி
22. சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர் எதனால் கிரகிக்கப்படுகிறது - ஒசோனஸ்பியர்
23. DPT தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு எந்த நோயிக்கு பாதுகாப்பு அளிக்கிறது - இளம்பிள்ளை வாதம்
24. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் - கோபி
25. இந்தியாவின் "சிவப்பு ரோஜா நகரம்" என்று கூறுவது - ஜெய்பூர்
26. மதிவண்டியை கண்டுபிடித்தவர் - மாக்மில்லன்
27. மிக உயரமான விலங்கு - ஒட்டகச்சிவங்கி
28. பரிணாமக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர் - டார்வின்
29. ஆண்டார்டிகாவின் முதன்முதலில் பயணம் செய்து புதிய பகுதிகளை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ்குக்
30. மிகப்பெரிய பூங்காவான "பெல்ட்டா தேசிய பூங்கா" அமைந்துள்ள மாநிலம் - பீகார்
31. கிழக்கின் அரிஸ்டாட்டில் எனப்படுபவர் - நாகார் ஜூனர்
32. சந்திரன் பூமியை சுற்றி வருவதற்கு எத்தனை நாட்கள் எடுக்கிறது - 271/3 நாட்கள்
33. வில்லியம் ஹார்வியின் கண்டுபிடிப்பு - இரத்த ஒட்டம்
34. இயற்கையில் மனிதன் ஒரு அரசியல் மிருகம் என்று கூறியவர் - அரிஸ்டாட்டில்
35. உலக எயிட்ஸ் தினம் கொண்டாடப்படும் நாள் - டிசம்பர்.1
36. உபய்துல்லாகான் தங்கக்கோப்பை எதனுடன் தொடர்புடையது - ஹாக்கி
37. ராமஜென்ம பூமி என்ற சர்ச்சைக்குரிய இடம் - அயோத்தியா
38. ஐ.நா. அமைப்பின் சர்வதேச டிரிபியூனலின் நீதிபதி - பவட்ரோஸ் காலி
39. கச்சா எண்ணெய் கிடைக்கும் மாநிலம் - அஸ்ஸாம்
40. மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி மையம் இருப்பது - காரைக்குடி
41. 1998-இல் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்ற இடம் - பாங்காங்
42. ஆபிரகாம் செய்த சீர்திருத்தம் - அடிமைத்தன ஒழிப்பு
43. சைஜ மதத்தினைத் தோற்றுவித்தவர் - மகாவீரர்
44. ஜான் நேப்பியர் கண்டுபிடித்தது - லாகர்தம்
45. முருகப்பா தங்க கோப்பை தொடர்புடையது - ஹாக்கி
46. ஈபிள் கோபுரத்தின் உயரம் - 300 மீட்டர்
47. ஜவ்வாது மலை எந்த மாவட்டத்தில் உள்ளது - வடஆற்காடு
48. அமெரிக்காவின் அடிமைத்தனத்தை நீக்கியவர் - ஆபிரகாம் லிங்கன்
49. அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் - எட்வர்ட் வொயிட்
50. தமிழ்நாட்டின் அரசு மரம் - பனை மரம்
                                                                                                                                             தொடரும்...

JACTTA NEWS- CPS வல்லுந‌ர் குழுவிடம் ஜாக்டா அளித்த மனு

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 31 இந்தியக் கல்வியகங்கள்!

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில், இதுவரை இல்லாத வகையில் 31 இந்தியக் கல்வி நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் பிரிட்டனைச் சேர்ந்த "டைம் ஹையர் எஜுகேஷன்' பத்திரிகை, 2016-17-ஆம் ஆண்டுக்கான அந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், தெற்காசியாவிலிருந்து மொத்தம் 39 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இதுவரை இல்லாத சாதனை அளவாக 31 இந்தியக் கல்வி நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
முதல் இடத்தில் பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், 5 முறை முதலிடம் பிடித்த கலிபோர்னியா தொழில் நுட்ப பல்கலைக்கழகம் 2-வது இடத்திலும், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் 3-வது இடத்திலும் உள்ளன.
முதல் 200 இடங்களில் எந்த இந்தியக் கல்வியகத்தின் பெயரும் இடம் பெறாத நிலையில், பெங்களூரைச் சேர்ந்த இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.ஸி), 251-லிருந்து 300-க்குள்ளான இடத்தைப் பிடித்துள்ளது.
351-லிருந்து 400-க்குள்ளான இடப் பிரிவில் மும்பையைச் சேர்ந்த இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி.) இடம் பிடித்துள்ளது.
401-500 இடப் பிரிவில் சென்னை ஐ.ஐ.டி., தில்லி ஐ.ஐ.டி., கான்பூர் ஐ.ஐ.டி. ஆகியவை இடம் பெற்றுள்ளன.
கரக்பூர், ரூர்கீ ஆகிய நகரங்களின் ஐ.ஐ.டி.க்கள், 501-600 இடப் பிரிவில் இடம் பிடித்துள்ளன.
பட்டியலில் இடம் பெறும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 800-லிருந்து 980-ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், முதல் 800 இடங்களில் 19 இந்தியக் கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. இது கடந்த ஆண்டைவிட இரண்டு கூடுதலாகும்.

இந்தியாவிலிருந்து 14 கல்வி நிறுவனங்கள் இப்பட்டியலில் முதன்முறையாக இடம்பிடித்துள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த அம்ரிதா பல்கலைக்கழம், சாஸ்த்ரா பல்கலைக்கழகம், சத்யபாமா பல்கலைக்கழகம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், வேலூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ABL வகுப்பறையில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் விபரம் - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்.

CRC NEWS:​Primary CRC 15.10.16​​ | Upper primary 22.10.16​|Topic : ​கையெழுத்து மற்றும் ஓவியத் திறன் மேம்படுத்துதல்​நீதிமன்ற ஆணை படி 2001 முதல் அரசு ஊதியம் பெறும் அரசு நிதி உதவி பெரும் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் ஒருவருக்கு pf புதிய எண் பெற படிவம்...

தமிழ்க் கடல் - பகுதி - 1 ஓரெழுத்தொருமொழி

1.    அ - 'அந்த' என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்.

2.    ஆ - மாடு.

3.    இ - 'இந்த' என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்.

4.     - ஒரு வகைப் பூச்சி, அழிவு.

5.    உ - 'உந்த' என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்.

6.    ஊ - ஊன், இறைச்சி.

7.    எ - 'எந்த' என்ற பொருள்படும் கேள்விப்பெயர்.

8.    ஏ - ஏவுதல், அம்பு.

9.    ஐ - நுட்பம், அழகு.

10.  ஓ - சென்று தங்குதல், மதகு நீர் தங்கும் பலகை.

11.  க - நெருப்பு.

12.  கா - சோலை.

13.  கு - பூமி.

14.  கூ - கூப்பிடு.

15.  கை - கரம்.

16.  கோ - அரசன்.

17.  கௌ - 'கௌவு' என்று ஏவுதல்.

18.  சா - இறத்தல், 'சாவு' என்று ஏவுதல்.

19.  சே - சிவப்பு.

20.  சோ - மதில்.

21.  தா - 'கொடு' என்று ஏவுதல்.

22.  தீ - நெருப்பு.

23.  து - உண் என்னும் ஏவல். துக் கொற்றா

24.  தூ - தூய்மை.

25.  தை - தையல் எனப்படும் பெண், 'தை' என்று ஏவுதல்.

26.  ந - சிறப்பு.

27.  நா - நாக்கு.

28.  நீ - முன்னிலை ஒருமைப் பெயர்

29.  நூ - எள்.

30.  நே - நேசம்.

31.  நை - நைதல்.

32.  நொ - மென்மை.

33.  நோ - வலி.

34.  நௌ - மரக்கலம், கப்பல்.

35.  பா - பாடல்.

36.  பி - அழகு.

37.  பீ - கழிவு.

38.  பூ - மலர்.

39.  பே - அச்சம்.

40.  பை - பசுமை.

41.  போ - 'செல்' என்று ஏவுதல்.

42.  மா - ஒரு வகை மரம்.

43.  மீ - மிகுதியானது.

44.  மூ - மூன்று.

45.  மே - மேன்மை.

46.  மை - மசி (ink).

47.  மோ - மொள்ளுதல்.

48.  யா - 'யாவை' என்ற பொருள்படும் கேள்விப்பெயர்.

49.  வா - 'வா' என்று அழைத்தல்.

50.  வி - விசை.

51.  வீ - பறவை.

52.  வை - 'வை' என்று ஏவுதல்.

மத்திய அரசில் மூத்த ஆராய்ச்சி உதவியாளர் பணி

மத்திய அரசில் நிரப்பப்பட உள்ள மூத்த ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Research Assistant
காலியிடங்கள்: 09
தகுதி: வேதியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
பணியிடம்: தமிழகம் பணி: Senior Technical Assistant
காலியிடங்கள்: 03
தகுதி: Agronomy, Plant Breedings, Genetics முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி,மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: http://sscsr.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://sscsr.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முதுநிலை டிப்ளமோ, பல் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது என்பிஇ

முதுநிலை டிப்ளமோ, முதுநிலை பல் மருத்துவம் (எம்டிஎஸ்) ஆகிய படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வினை (நீட்) தேசிய மருத்துவ தேர்வு வாரியம் (என்பிஇ) நடத்தவுள்ளது.

இதுதொடர்பாக, அந்த வாரியம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
2017-ஆம் ஆண்டுக்கான முதுநிலை டிப்ளமோ மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள், நாடு முழுவதும் 41 நகரங்களில் உள்ள 86 தேர்வு மையங்களில், வரும் டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
கணினி வாயிலாக நடைபெறும் இந்தத் தேர்வுகளில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் பாடத்திட்டத்தில் இருந்து 300 கேள்விகள் இடம்பெறும். இதேபோல், முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான (எம்டிஎஸ்) நுழைவுத் தேர்வுகள், அதே மையங்களில், வரும் நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கு நாடு தழுவிய அளவில் ஒரே பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதுதவிர, மாநில அளவிலோ அல்லது கல்லூரி அளவிலோ நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் செல்லாது என அறிவிக்கப்படுகிறது.
முதுநிலை பல் மருத்துவம், முதுநிலை டிப்ளமோ ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுத விரும்புவோர், வரும் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, சண்டீகரில் உள்ள பிஜிமர் மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, தேசிய மனநல கல்வி நிறுவனம் ஆகிய கல்லூரிகள், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வரம்பில் வராது.
இதேபோல், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, தில்லி பல் மருத்துவக் கல்வி நிறுவனம் ஆகியவை முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு வரம்பில் வராது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த முகேஷ் அம்பானி

புதுதில்லி: இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ரூ.15 லட்சம் கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அதில், ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.15 லட்சம் கோடி என்றும் அவர் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் சொத்து ரூ.12 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 12 மாதங்களில் அவரது சொத்து 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவரைத்தொடர்ந்து இந்தியாவின் மருந்து பொருட்கள் உற்பத்தி துறையில் சாதனை படைத்து வரும் திலிப் சங்வி 2-வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து ரூ.11 லட்சம் கோடி.

அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளவர்களின் பட்டியல் விவரம்: 

3. இந்துஜா சகோதர்கள் (ரூ.10.1 லட்சம் கோடி)

4. அசிம் பிரேம்ஜி (ரூ.10 லட்சம் கோடி)

5. பல்லோன்ஜி பிஸ்திரி (ரூ.9.31 லட்சம் கோடி)

6. லட்சுமி மிட்டல் (ரூ.8.37 லட்சம் கோடி)

7. கோத்ராஜ் குடும்பம் (ரூ.8.31 லட்சம் கோடி)

8. ஷிவ் நாடார் (ரூ.7.64 லட்சம் கோடி)

9. குமார் பிர்லா (ரூ.5.89 லட்சம் கோடி)

10. சைரஸ் பூனவாலா (ரூ.5.76 லட்சம் கோடி

எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். கலந்தாய்வு: காலியிடங்கள் - 1,331

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட கலந்தாய்வில் வியாழக்கிழமை முடிவில் 1,331 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

கூடுதல் 593 இடங்கள்: 2 புதிய மருத்துவக் கல்லூரிகளும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் 5 கல்லூரிகளுக்கு நிகழ் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி கிடைத்துள்ளதால் அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக 593 எம்.பி.பி.எஸ். இடங்கள் கலந்தாய்வு அட்டவணையில் புதன்கிழமை இணைக்கப்பட்டன.

இந்த நிலையில் வியாழக்கிழமை கலந்தாய்வில் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரி ஒன்றிலிருந்து 30 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதனால் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்த அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 1,305-ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆம் நாள் கலந்தாய்வில் பங்கேற்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

முடிவில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5 இடங்களும், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 3 இடங்களும் காலியாக உள்ளன. அதே போன்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 164 அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 1,159 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 1,331 இடங்கள் காலியாக உள்ளன. தொடர்ந்து செப்டம்பர் 24-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

வங்கி விடுமுறை காரணமாக... காலியாக உள்ள இடங்களுக்கு தொடர்ந்து சனிக்கிழமை (செப்.24) வரை கலந்தாய்வு நடைபெறும். இந்நிலையில் மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "செப்டம்பர் 24-ஆம் தேதி 4-ஆவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறையாகும். எனவே, அன்றைய தினம் கலந்தாய்வில் பங்கேற்க இருப்போர் வெள்ளிக்கிழமையே (செப்.23) வங்கிகளில் வரைவோலையை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் ஜி.செல்வராஜன் கூறுகையில், "வரைவோலை எடுக்க முடியாததற்கு நியாயமான காரணங்கள் இருக்கும்பட்சத்தில், அந்த மாணவர்களிடம் வரைவோலைக்கான பணத்தை நேரடியாகப் பெற்றுக் கொண்டு ரசீது அளிக்கப்படும்' என்றார்.

B.LIT பெற்று நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றபின் B.ED தேர்ச்சிக்கு ஊக்க ஊதியம் (INCENTIVE) அளிக்க கூடாது - தொடக்கக்கல்வி இயக்குனர் தெளிவுரை

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா?

ஓய்வூதிய திட்டம் குறித்து முடிவு எடுப்பதற்காக, அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, மூன்றாவது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்., 1ல், அமல்படுத்தப்பட்டது. இதற்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என, அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான நிபுணர் குழுவை, தமிழக அரசு அமைத்தது. இக்குழு, தலைமைச் செயலகத்தில், இம்மாதம், 15, 16ல், கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. நேற்று மூன்றாவது நாளாக, கருத்து கேட்பு கூட்டம் தொடர்ந்தது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, ஜாக்டா, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம் உட்பட, பல சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, நிபுணர் குழுவிடம் மனுவும் அளித்தனர்.

இது குறித்து, ஜாக்டா ஒருங்கிணைப்பாளர் இளமாறன் கூறியதாவது:

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பின், இதுவரை, ஓய்வூதியம் வழங்க விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்திற்கும் உத்தரவாதம் இல்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மன உளைச்சல் இன்றி வாழ, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என, மனு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்திற்கு கூடுதலாக 1,000 எம்.பி.பி.எஸ்., இடம்

தமிழகத்தில், ஏழு சுய நிதி கல்லுாரிகளில், 1,000 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது. 

தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளின் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான, மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூனில் நடந்தது. அரசு கல்லுாரிகளில், 2,379 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; அரசு பல் மருத்துவக் கல்லுாரிகளில், 85; சுயநிதி கல்லுாரிகளில், 470 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின.

ஒதுக்கீடு பெற்ற, 143 பேர், இன்ஜினியரிங் உட்பட, பிற படிப்புகளில் சேர்ந்ததால், அந்த இடங்கள் காலி இடங்களாக மாறின. அவற்றுக்கும், சுயநிதி கல்லுாரிகளின், 970 பி.டி.எஸ்., இடங்களுக்கும் சேர்த்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, ஏழு சுயநிதி கல்லுாரிகளில், 1,000 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது; இதில், மாநில அரசின் ஒதுக்கீட்டிற்கு, 593 இடங்கள் கிடைத்துள்ளன. மேலும், மூன்று சுயநிதி கல்லுாரிகளில், பி.டி.எஸ்., படிப்புக்கு அனுமதி கிடைத்துள்ளதால், மாநில ஒதுக்கீட்டிற்கு, 275 பி.டி.எஸ்., இடங்களும் கிடைத்துள்ளன. இதையடுத்து, கலந்தாய்வில் கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன; வரும், 24ம் தேதி வரை கலந்தாய்வு நடக்க உள்ளது. கூடுதலாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் கிடைத்துள்ளது, காத்திருந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சியை

அளித்துள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை

* மாணவர்கள் உணவு உண்ணும் முன், இரு கைகளையும் சோப்பால் சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.

* வகுப்பறை மற்றும் கழிவறையை சுற்றியோ, பள்ளி வளாகத்திலோ நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்; குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்

* கொசு உற்பத்தியாகும் குப்பை, பொருட்களை சேர்க்காமல், பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

* மாணவர்கள், காய்ச்சி வடிகட்டிய குடிநீரையே பருக அறிவுறுத்த வேண்டும்

* காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தாவுடன், ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்து, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

புத்தகப் பையால் ஆபத்து: சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

மாணவர்கள் தோளில் தொங்கும்படி, புத்தகப் பைகளை கொண்டு சென்றால், முதுகு பகுதியில் பாதிப்பு ஏற்படும்' என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவுரை:

அதிக சுமை உள்ள பள்ளி புத்தகப் பைகளை, நீண்டகாலம் மாணவர்கள் சுமப்பது, அவர்களின் உடல் நலனில் எதிர் விளைவை ஏற்படுத்தும். இளம் குழந்தைகள் வளர வேண்டிய நிலையில், அவர்களுக்கு, முதுகு தண்டுவடத்தில் வலி, தசை வலி, தோள் வலி, மயக்கம் உட்பட, பல பிரச்னைகளை ஏற்படுத்தும் முடிந்த அளவுக்கு அன்றைய வகுப்புக்கான, பாடப் புத்தகங்களை மட்டுமே மாணவர்கள் கொண்டு செல்ல வேண்டும்.

பள்ளி பயன்பாட்டு புத்தகம் மற்றும் நோட்டுகளை, பள்ளியிலேயே வைத்துக் கொள்வது நல்லது பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு எடை குறைந்த, இரு தோள்களிலும் மாட்டக்கூடிய, பெல்ட் உடைய பைகளையே வாங்க வேண்டும்

பள்ளிக் குழந்தைகள், தங்களின் புத்தகப் பைகளில், விளையாட்டு பொருட்கள் மற்றும் தாங்கள் விரும்பும் பல பொருட்களை வைத்துக் கொள்வது வழக்கம். அதனால், எடை கூடும் என்பதால், பெற்றோர், தினமும் சோதிக்க வேண்டும்

குழந்தைகளின் தோளில், பைகள் இறுக்கமாக இருக்க வேண்டும்; அங்கும், இங்கும் தொங்கினால், தோள்களை பாதிக்கும்.இவ்வாறு அறிவுரையில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!