Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 24 September 2016

தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்படும் அரசுப்பள்ளி !!!

தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்படும் அரசு பள்ளிக்கு பெற்றோர்கள் வாகனங்கள் ஏற்பாடு செய்து குழந்தைகளை அனுப்பி வருகின்றனர்.நாமக்கல் அருகே என்.புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள மேலப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நான்கு வகுப்பறைகள் மற்றும் 3 ஆசிரியர்களுடன் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் 50 மாணவிகள் உள்ளிட்ட 95 பேர் பயின்று வருகின்றனர்.மேலப்பட்டி கிராமத்தின் குழந்தைகள் எண்ணிக்கை சுமார் 30 மட்டுமே. இப்பள்ளியின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்ட லத்துவாடி மற்றும் புதுப்பட்டி கிராமத்தினர் ஒரு வாகனம் ஏற்பாடு செய்து தங்கள் குழந்தைகளை இப்பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.

இதற்கான காரணம் குறித்து தலைமை ஆசிரியர் அண்ணாதுரையிடம் கேட்ட போது, பாடத்திட்டத்திற்கு அப்பால் பொது அறிவை வளர்க்க வேண்டும் என தமிழ் மற்றும் ஆங்கிலம் செய்தித் தாள்கள் வாங்கி மாணவ, மாணவிகளை வாசிக்கச் செய்கிறோம். தமிழ், ஆங்கிலம் பேசவும், எழுதவும் சிறப்பு பயிற்சிகள் வழங்குகிறோம். பொது அறிவை வளர்த்துக் கொள்ள தாழ்வார நூலகம் அமைத்துள்ளோம். சுய சேவை நியாய விலைக்கடை ஒன்றும் வகுப்பறையில் செயல்படுகிறது. மாணவர்கள் தங்களுக்குத் தேவையான எழுது பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு அதற்குண்டான பணத்தைப் போட்டு வைக்கின்றனர்.

தபால் நிலையம் இங்கு செயல்படுகிறது. சக மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் தங்கள் கருத்துக்களை கடிதம் மூலம் அனுப்பி வருகின்றனர். மாணவர்களின் படைப்பாற்றலை வெளியில் கொண்டு வரும் வகையில் குதூகலம் என்ற மாதாந்திர கையெழுத்துப்பிரதி நடத்தப்படுகிறது. 16 பக்கங்கள் கொண்ட இவ்விதழில் சிறுகதை, பழமொழி, விடுகதை, தலைவர்கள் வரலாறு, முக்கிய தினங்கள் இடம் பெறும். இதன் ஆசிரியரும். படைப்பாளிகளும் மாணவ, மாணவிகளே. இதனை ரூ.10 சந்தா செலுத்தி அருகிலுள்ள பள்ளியினரும் வாங்கிச் செல்கின்றனர்.

மேலும், பெற்றோர் ஆசிரியர் கழக உதவியுடன் ஓவியம், நடனம், யோகா பயிற்சிக்கு இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ஒரு டிரஸ்டின் உதவியுடன் தினமும் மாலையில் பால் மற்றும் பிஸ்கட், பயறு வகைகள் வழங்குகிறோம்.வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை பள்ளி சட்ட மன்றம் கூடும், சபாநாயகர், முதல்வர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாணவ, மாணவிகளே. அரசுப் பள்ளியின் இதுபோன்ற செயல்பாடுகளால் பயிலும் மாணவ, மாணவிகள் உற்சாகமாகப் பள்ளிக்கு வந்து பயில்வதோடு, அருகிலுள்ள சற்று வசதியான பெற்றோர்களும் தனியார் பள்ளியிலிருந்து இப்பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்துள்ளனர் என்றால் மிகையல்ல.

BHARATHIDASAN UNIVERSITY B.Ed Admission !!!

*BHARATHIDASAN UNIVERSITY*

Centre for Distance Education

B.Ed Admission Notification for the Calendar Year 2017 (2 years)

*Application form will be  issued from 26.09.2016

*Eligibility - 10+2+3 or 11+1+3

*Cost of Application - Rs.500/-

*Fees - Rs.25,000 Per Annum

*Last date for receipt and filled-in application forms - 25.10.2016

www.bdu.ac.in

ஊராட்சிகளில் போட்டியிடுவோர் எவ்வளவு செலவிடலாம்

சென்னை: ஊராட்சிகளில் போட்டியிடும், வேட்பாளர்களின் செலவு உச்சவரம்பு விபரம் வெளியிடப்பட்டு உள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 1.70 லட்சம் ரூபாய்; ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், 85 ஆயிரம் ரூபாய் செலவு செய்யலாம். 

மேலும், ஊராட்சி தலைவர், 34 ஆயிரம்; ஊராட்சி வார்டு உறுப்பினர், 9,000 ரூபாய் வரை செலவு செய்யலாம். இதை, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 : ஒரு இடத்துக்கு 291 பேர் போட்டி!!!

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு 5,451 காலியிடங்களுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு பணியிடத்துக்கு 291 பேர் போட்டியிடுகின்றனர்.

வாட்ஸ் அப்: தனி உரிமை பாதுகாப்பு-உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாட்ஸ் அப் ஃபேஸ்புக்குடன் இணைந்த பிறகு, வாட்ஸ் அப்பை பயன்படுத்துபவர்களின் தகவல்கள், ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளலாம். பகிர்ந்துகொள்ள விரும்பாதவர்கள் வெளியேற செப்டம்பர் 25ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. புதிய தனிநபர் கொள்கையை எதிர்த்து

டெல்லி உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் கர்மன்யா சிங் சரீன், ஷ்ரேயா சேதி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

உள்ளாட்சி பதவிக்கு போட்டியிட வேண்டிய தகுதிகள் !

 ஊராட்சி தலைவர் பதவியிடத்திற்கோ, உறுப்பினர் பதவியிடத்திற்கோ,
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கோ, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்
பதவியிடத்திற்கோ போட்டியிடுவதற்கு கீழ்க்கண்ட  தகுதிகளை பெற்றிருக்க
வேண்டும் மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள  தகுதியின்மை எதனையும் பெற்றிருக்க
கூடாது.


 தகுதி
 (அ) நீங்கள் எந்த ஊராட்சி அமைப்பின் உறுப்பினராக அல்லது தலைவராக போட்டியிட
விரும்புகின்றீர்களோ, அந்த ஊராட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்
பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக, கிராம ஊராட்சி வார்டின் உறுப்பினர் பதவியிடத்திற்கு
நீங்கள் போட்டியிட்டால், அந்த கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் எந்த
ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று நீங்கள் ஊராட்சி ஒன்றிய
வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு போட்டியிட்டால், உங்கள் பெயர் தொடர்புடைய ஊராட்சி
ஒன்றியத்தின் வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோன்று நீங்கள் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு போட்டியிட்டால்,
உங்கள் பெயர் அந்த மாவட்ட ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வார்டிலாவது
இடம் பெற்றிருக்க வேண்டும்.
வேட்பாளர் கையேடு 3
 (ஆ) வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று நீங்கள் 21 வயது நிரம்பியவராக
இருக்க வேண்டும்.
 (இ) ஒதுக்கீடு செய்யப்பட்ட தலைவர் பதவியிடத்திற்கோ அல்லது உறுப்பினர்
பதவியிடத்திற்கோ நீங்கள் போட்டியிட்டால் அந்த பதவியிடம் எந்த பிரிவினருக்கு (வகுப்பினர்
அல்லது பெண்களுக்கு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ அந்த பிரிவினைச் சார்ந்தவராகவோ
அல்லது அந்த வகுப்பினைச் சார்ந்தவராகவோ அல்லது அப்பிரிவின் பெண்ணாகவோ
இருத்தல் வேண்டும். உதாரணமாக, ஒரு இடம் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த
பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் நீங்கள் ஆதி திராவிடர் வகுப்பினரைச்
சேர்ந்தவராகவும், பெண்ணாகவும் இருக்க வேண்டும். அதே போன்று பழங்குடியினர்
வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவ்வகுப்பைச் சேர்ந்த
பெண்கள்தான் போட்டியிட இயலும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பொது
(பெண்கள்) என ஒதுக்கப்பட்ட இடத்தில் பெண்கள் (அனைத்து வகுப்பைச் சார்ந்த பெண்களும்)
மட்டுமே போட்டியிடலாம்.

2.2. தகுதியின்மை தகுதியின்மை தகுதியின்மை

 கிராம நிர்வாக அலுவலராகவோ அல்லது கிராமப் பணியாளராகவோ மற்றும் எந்த ஒரு
ஊரக அல்லது நகர்ப்புற அல்லது தொழில் நகரங்கள் அல்லது பாளையம் (கண்டோன்மென்ட்)
ஆகிய உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்த அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ அல்லது
அரசு சார்புடைய நிறுவன பணியாளராகவோ அல்லது அலுவலராகவோ அல்லது மத்திய, மாநில
அரசு அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ இருக்கக்கூடாது.
 இந்திய அரசில் அல்லது ஏதேனும் மாநில அரசில் பதவி வகித்திருந்து லஞ்சம் அல்லது
அரசுக்கு துரோகம் இழைத்ததற்காக பணியறவு (னுளைஅளைளயட) செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து
ஆண்டுகளுக்கு போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.
 1955-ம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (ஞசடிவநஉவiடிn டிக ஊiஎடை சுiபாவள ஹஉவ,
1955) தண்டனை பெற்றவராக இருக்கக்கூடாது.
 மேலும், வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளன்று 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு
ஊராட்சிகள் சட்டம், பிரிவு 37 (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு சட்டங்களின் கீழ், ஒருவர்
4 ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் – 2016
நீதிமன்றத்தால் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டிருப்பின் அத்தகைய தண்டனை / தீர்ப்பு
ஆனது –
(அ) அபராதம் மட்டுமிருப்பின் - குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு வருட
காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.
(ஆ) அத்தகைய தீர்ப்பு சிறை தண்டனையாக இருப்பின், தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்தும்
மற்றும் சிறைத் தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு
ஆண்டுகளுக்கு தொடர்ந்து தகுதியற்றவர் ஆவார்.
 மேற்படி சட்டப்பிரிவு 37 (1)-ன்படி தெரிவிக்கப்பட்ட குற்ற செயல்களை தவிர வேறு
ஏதேனும் குற்ற செயலுக்காக குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு
குறையாத சிறைத் தண்டனை அடைந்தவர், அவ்வாறு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட
நாளிலிருந்தும் மற்றும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு
ஆண்டுகளுக்கு தகுதியற்றவர் ஆவார்.
 மேலும், பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட
பதவியிடங்களில் அவ்வகுப்பைச்சாராதவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேற்படி சட்டப்பிரிவு
38 (3) (ந)-ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் அவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்ட
நாளிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு போட்டியிடத் தகுதியற்றவர் ஆவார்.
மேலும்,
(அ) மனநலம் குன்றியவராக இருக்கக்கூடாது.
(ஆ) பெற்ற கடனை தீர்க்க வகையற்றவர் என மனு செய்துள்ளவராகவோ அல்லது உரிய
நீதிமன்றத்தில் அவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பவராகவோ இருக்கக் கூடாது.
 (இ) நீங்கள் எந்த ஊராட்சி யில் உறுப்பினராக அல்லது தலைவராகப் போட்டியிட
விரும்புகிறீர்களோ அந்த ஊராட்சியுடன் மற்றும் எந்த ஒரு ஊராட்சியுடனும் எந்த ஒரு
வேலைக்கான அல்லது பொருட்கள் வழங்குவதற்கான ஒப்பந்ததாரராக இருக்கக்கூடாது.

ஊராட்சி என¦பது கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன¦றியம் மற¦றும் மாவட்ட ஊராட்சியினை குறிக்கும்.
வேட்பாளர் கையேடு 5
(ஈ) ஊராட்சியின் சம்பளம் பெறும் சட்ட தொழில் ஆற்றுநராகவோ அல்லது ஊராட்சிக்கு
எதிராக வழக்கு நடத்தும் சட்ட தொழில் ஆற்றுநராகவோ பணியமர்த்தப்பட்டிருக்கக்
கூடாது.
(உ) முந்தைய ஆண்டு வரை ஊராட்சிக்கு கொடுக்க வேண்டிய எந்த வகையான நிலுவையும்
வைத்திருக்கக் கூடாது.
(ஊ) தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ன் எந்த ஒரு பிரிவின் கீழும் மற்றும்
விதிகளின்படியும் தகுதி அற்றவராக நீங்கள் இருக்கக்கூடாது.
(எ) தேர்தல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டிருக்கக் கூடாது.

 உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டதற்கான தேர்தல் செலவினக் கணக்குகளை உரிய
காலத்திற்குள் தாக்கல் செய்யாததால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தலில்
போட்டியிட மூன்று ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பின், அத்தகைய தகுதி நீக்க
ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிடத் தகுதியற்றவர்
ஆவார்.
மேற்கண்ட இனங்களுக்கு மாறாக தேர்தலில் போட்டியிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி
வகிப்பது பின்னர் அறியவரின், அவர் மீது 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்,
பிரிவு 41-ன்கீழ் தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக்
கவனத்தில் கொள்ள வேண்டும்.

கல்வி சுமை இல்லை... சுவையாக்கும் புதிய திட்டம்!

எதிர்பார்ப்பு பள்ளிக்கல்வி வாழ்க்கைக்குச் சிறிதும் பயன்படுவதில்லை என்கிற குறைபாடு நம்மிடம் நீண்ட நாட்களாக உள்ளது. அதன் விளைவாகத் தோன்றியதுதான் 'ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது' என்ற பழமொழி. 


பாடநூலில் உள்ள கருத்துகளை குருட்டு மனப்பாடம் செய்து தேர்வில் வாந்தியெடுப்பது என்ற மரபான முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அனைவரும் நினைக்கிறோம். ஆனால் அது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்றாகவே உள்ளது.


படிக்கின்ற பாடத்தை நடைமுறை வாழ்வில் பயன்படுத்தினால், கல்வி என்பது அர்த்தமுள்ளதாகும். அதற்காகப் பல தன்னார்வக் குழுக்கள் நீண்ட நாட்களாகச் செயல்பட்டுவருகின்றன.


இதன் தொடர்ச்சியாகத்தான் தேசிய அறிவியல் இயக்கம், மாணவர்களிடையே புதைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்திட ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தி, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஆர்வத்தைத் தூண்டி வருகிறது. அப்படிப் புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்கியவர்களுக்குக் 'குழந்தை விஞ்ஞானி' என்று விருது வழங்கி அவர்களைச் சிறப்பிக்கிறது. இது அரசு செய்யவேண்டிய பணி என்பதை இப்போதுதான் உணர்ந்திருக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள்.

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணக்கு, ஆங்கிலம் ஆகிய பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறது நம் மத்திய அரசு. ராஷ்ட்ரிய அவிஷ்கார் அபியான் என்னும் செயல் திட்டம்தான் அது. இதனைச் சுருக்கமாக RAA எனக் குறிப்பிடுகின்றனர். தமிழில் 'தேசிய கண்டுபிடிப்பு இயக்கம்' என்று வேண்டுமானால் குறிப்பிடலாம்.

இந்தச் செயல் திட்டம் கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாம் அவர்கள் தொடங்கி வைத்தார். தற்போது ஒரு மாவட்டத்திற்குப் பத்துப் பள்ளிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக அனைத்துப் பள்ளிகளிலும் இது நடைமுறைக்கு வரும் என்று திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் முக்கிய நோக்கமே, பள்ளி மாணவர்கள் கணக்கையும் அறிவியலையும் கற்பதை மகிழ்வானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குவதாகும். மேலும் பள்ளி சார்ந்த அறிவைப் பள்ளிக்கு வெளியே உள்ள வாழ்வோடு இணைப்பதும் ஆகும். உதாரணமாக, கணக்குப் பாடத்தில் வடிவியல் படிக்கின்றனர். இந்த வடிவியல் அன்றாட வாழ்க்கையில் எங்கே எப்படிப் பயன்படுகிறது என்பதை மாணவர்களுக்கு நேரடியாக உணர்த்துவதாகும் இது.

பாலங்கள், கட்டடங்கள் கட்டும்போது அவை உறுதியாகவும் அழகாகவும் அமைய எப்படி வடிவியல் பயன்படுகிறது என்பதை நேரடியாகக் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்கே சென்று தெரிந்துகொள்ளுதல்; அல்லது பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு விளக்கம் அளித்தல் போன்ற செயல்பாடுகள் வாயிலாக மாணவர்களுக்குப் புரிய வைப்பது. இப்படிச் செய்வதன் மூலம் கற்றல் என்பது அன்றாட வாழ்வோடு தொடர்புடைய ஒன்று என்பதை உணரும் மாணவர்களுக்குக் கற்றலில் ஆர்வமும் ஏற்படும். கல்வி சுமையானதாக இல்லாமல் சுவையானதாகும்.

இத்திட்டத்தில் ஆங்கிலத்திற்கு ELCOM - என்ற பெயரிலும் (English Language Communication), அறிவியலுக்கு STEM என்ற பெயரிலும் (Science Technology Engineering Mathematics), கணக்கிற்கு (ARIAL) என்ற பெயரிலும் (Arithmatic Algibra) செயல் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களை செயல்படுத்திட உயர்கல்வி நிறுவனங்களோடு பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளன.

கல்லூரிகள், IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவனங்களுக்கு மாணவர்களை அழைத்துச்சென்று அங்குள்ள வசதிகளைப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்க உள்ளனர். அங்குள்ள பேராசிரியர்களைப் பள்ளிக்கு அழைத்து ஆசிரியர், மாணவர்களின் சந்தேகங்களைப் போக்கும் விதமாகவும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடத்தையும் இயன்ற வரை செயல்வழியாக செய்து பார்த்துப் புரிந்துகொள்வது, கணித மன்றங்கள், அறிவியல் மன்றங்கள் போன்ற மன்றச் செயல்பாடுகளில் மாணவர்களை முழுமையாக ஈடுபடுத்துவது போன்ற பல குறிப்பிடத்தக்க குறிக்கோள்களை இத்திட்டம் கொண்டுள்ளது. '6 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களே இத்திட்டத்திற்கான இலக்கு' என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேசிய அளவில் பள்ளிக்கல்வித்துறை செயலர் உயர்கல்வித்துறை செயலர் இணைந்த குழுவும் மாநில அளவில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி அனைவருக்கும் கல்வி இயக்கத்திலிருந்தும் தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்திலிருந்தும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல், கணக்கு ஆகிய பாடங்களில் புதுமைச் செயல்பாடுகளை நிகழ்த்துவதற்காக 33 கோடி ரூபாயும், ஆசிரியர்களுக்கான பயிற்சிக்காக 98 கோடி ரூபாயும், கற்றல் கற்பித்தல் உபகரணங்களுக்காக 6.5 கோடி ரூபாயும் மேலும் RMSA (ராஷ்ட்ரிய மத்யமிக் சர்வசிக்ஷ அபியான்- தேசிய இடைநிலைக் கல்வித்திட்டம்) மூலம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க 125 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் அறிவியல் மாநாடு, ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு, கணித மேளா போன்றவற்றைக் கல்வித்துறையே முன்னின்று நடத்துவது போன்ற முக்கிய அம்சங்களும் இத்திட்டத்தில் உள்ளன.

ஆசிரியர்கள் - அதிலும் குறிப்பாக அறிவியல், கணக்குப் பாட ஆசிரியர்களின் முக்கியமான பணி, அனைத்துவிதமான கற்றல் கருவிகளையும் இயன்றவரை தலைமை ஆசிரியர் உதவியோடு முழுமையாகப் பயன்படுத்தி மாணவர்களின் ஆர்வத்தைக் கணக்கிலும் அறிவியலிலும் ஈர்ப்பதாகும். ஆசிரியர்கள் மாதம் ஒரு செயல்திட்டத்தை அறிவியலிலும் கணக்கிலும் மாணவர்களைக் கொண்டு செயல்படுத்த வேண்டும். அதன் வாயிலாக மேற்கண்ட பாடங்களில் மிகவும் ஆர்வமாகவும் துடிப்பாகவும் செயல்படும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவருவது இதன் நோக்கமாகும்.

இந்தத் திட்டங்களை எல்லாம் அறிக்கைகளாக மட்டும் விட்டுவிடாமல் நடைமுறையில் முறையாக செயல்படுத்தினால் மாணவர்களை கேள்விக்கு பதில் எழுதுபவர்களாக இல்லாமல் கேள்விகளைக் கேட்பவர்களாக மாற்றிடமுடியும். இதனை கடமைக்கு செய்யாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு செய்தால் கல்வித்துறையில் மாபெரும் புரட்சி ஏற்படும் என்பது உறுதி. 

விழா முன்பணம் கோரும் விண்ணப்பம்


ELECTION - மாற்று திறனாளி ஆசிரியர்களுக்காக- மாற்று திறனாளி ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்ல விதி விலக்கு உள்ளது... பயன்படுத்தி கொள்ளுங்கள்.

CPS MISSING CREDIT FORMAT - 2016 DOWNLOAD

அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1935
2. ஸ்பினிக்ஸ் எனும் பெண்தலையும், சிங்க உடலும் கொண்ட சிலை உள்ள நாடு - எகிப்து
3. ஏழு குன்றுகளின் நகரம் என்றழைக்கப்படுவது - ரோம்
4. காற்று நகரம் எனப்படுவது - சிகாகோ

5. இந்தியாவில் முதல் பின்கோடு பெற்றுள்ள மாநிலம் - புதுதில்லி
6. இந்தியாவில் நூலகம் (தேசிய) இருக்குமிடம் -  கொல்கத்தா
7. இந்தியாவில் உடன்கட்டை(sati) ஏறும் வழக்கத்தை ஒழித்தவர் - வில்லியம் பெண்டிங் பிரபு
8. இந்தியாவின் புரதான சின்னங்களை பாதுகாத்தவர் - கர்சன் பிரபு
9. இந்திய தேசியக் கொடியில் இருக்கும் ஆரங்களின் எண்ணிக்கை - 24
10. ஐ.நா தினம் கொண்டாடப்படும் நாள் - அக்டோபர் 24
11. அதிக பரப்பளவு கொண்ட நாடு - சீனா
12. ஐ.நா.வின் (UNO) சின்னம் - ஆலிவ் கிளை
13. தாமரை சின்னம் குறிப்பது - கலாச்சாரம், நாகரீகம்
14. பஞ்சாபின் நாட்டிய நாடகம் - பங்காரா
15. ஐ.நா. சபையில் தற்போதுள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை - 185
16. நளவெண்பாவின் ஆசிரியரான புகழேந்தி வாழ்ந்தது - சோழர்காலம்
17. சைவசித்தாந்த வேதத்தின் விரிவுரையாளர் - மெய்கண்ட தேவர்
18. ஒரு மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தும் அரசியல் சட்டம் - 356 ஷரத்து
19. ஒரு சாதி, ஒரு மதம், ஒரு கடவுள் என்று பிரச்சாரம் செய்தவர் - நாராயணகுமார்
20. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு அடிகோடிட்டவர் - விக்ரம் சாராபாய்
21. உலகிலேயே ஒரே ஒரு இந்து மத நாடு - நேபாளம்
22. உலகின் மிகப்பெரிய வைரச்சுரங்கம் - கிம்பர்லி
23. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் - அரேபியா
24. சூயஸ் கால்வாய் திட்டத்தை உருவாக்கியவர் - பெர்டினாஸ்ட் லெஸ்ஸப்ஸ்
25. நீண்ட காலமாக மத்திய காபினெட் அமைச்சராக இருந்த பெருமை பெற்றவர் - ஜெகஜீவன்ராம்
26. அமெரிக்க சுதந்திரப் போரின் தலைவர் - ஜார்ஜ் வாஷிங்டன்
27. பாகிஸ்தானின் முதல் பிரதமர் - லியாகத் அலிகான்
28. ஆஸ்திரேலியா நாணயத்தின் பெயர் - டாலர்
29. சாந்தி வனம் யாருடைய சமாதி - நேருஜி
30. கல்பாக்கத்தில் அணுமின் நிலையத்தில் குளிர்ப்பதனமாக ரியாக்டரில் பயன்படுவது - கனநீர்
31. 1946-ல் ஏற்படுத்திய காபினட் குழு எந்த நிபந்தனையில் ஏற்படுத்தப்பட்டது - டொமினியன் அந்தஸ்து தர
32. பலவகை இரத்த பிரிவுகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானி - கார்லஸ் லான்ட்ஸ்டின்
33. மிகக் கனமான மூளை உள்ள மிருகம் - பன்றி
34. தென்மேற்கு ஆப்பிரிக்காவின் புதிய பெயர் - நமீபியா
35. ரொடிசியா நாட்டின் பிதிய பெயர் - ஜிம்பாவே
36. ஜமின்தார் முறையை அறிமுகப்படுத்தியவர் - காரன்வாலிஸ் பிரபு
இந்திய பாராளுமன்றம் குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகிறது - இரு முறை
37. மாக் நம்பர் (Mach Number) எதனுடன் தொடர்புடையது - விமானங்கள்
38. டென்மார்க்கில் பேசப்படும் மொழி - டேனிஷ்
39. ஆரோவில்லுள்ள இடம் - புதுச்சேரி
40. உத்தர பிரதேசத்தின் அணுசக்திநிலையம் உள்ள இடம் - நரோரா
41. சுயஸ் கால்வாய் கட்டிமுடிக்க எத்தனை ஆண்டுகள் ஆனது - 10.1/2 ஆண்டுகள்
42. ஹைதராபாத் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது - மூசி நதிக்கரையில்
43. பழங்குடி மக்களாகிய தோடர்கள் வசிக்கும் இடம் - நீலகிரி
44. இந்தியாவின் இரண்டாவது விண்வெளிக்கோள் - பாஸ்கரா
45. "வைக்கம் வீரர்" எனப் போற்றப்படுபவர் - ஈ.வே.ராமசாமி
46. நெப்போலியனோடு தொடர்புடைய இடம் - கார்சிகா
47. கொரியப்போர் எந்த ஆண்டு மூண்டது - 1951
48. மோனிகா செலஸ் தொடர்புடைய விளையாட்டு - சென்னிஸ்
49. கயாவுடன் தொடர்புடையவர் - புத்தர்
50. டயரின் வியாபாரப் பெயர் - டன்லப்
                                                                                                                                 தொடரும்...

அரசு பள்ளிகள், கல்லூரிகளில் WIFI - முதல்வர்ஜெயலலிதா மாணவர்களுக்கு இணைய வசதி


மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு கட்டணமில்லாத இணையதள வசதி செய்து தரப்படும் என்ற வாக்குறுதியும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, முதல் கட்டமாக 50 பள்ளிகளில் ரூ.10 கோடியில் நிறுவப்படும்என்றும் இந்தச் சேவையை தொடர்ந்து வழங்குவதற்காக ஆண்டுதோறும் ரூ.1.5 கோடி அளிக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 50 இடங்களில் கம்பியில்லாத இணைய வசதி (வைஃபை) ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், அரசு சேவைகளை செல்லிடப்பேசி செயலிகள் மூலம் பெறுவதற்கான புதிய திட்டத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் களில் வைஃபை எனப்படும் கம்பியில்லாத இணையதள வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்று சட்டப் பேரவைத் தேர்தலின்போது, அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், 50 இடங்களில் அம்மா வைஃபை மண்டலம் ஏற்படுத்தி கட்டணமில்லாத இணைய வசதி ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.அம்மா இ-சேவை: தமிழக அரசின் சேவைகளை செல்லிடப்பேசி செயலியில் பெறும் வகையில், அம்மா இ-சேவை என்ற திட்டத்தைச் செயல்படுத்தவும், முதல் கட்டமாக 25 முக்கிய சேவைகள் அளிக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

எல்கோ-சிறப்பு மண்டலம்:

சென்னையைஅடுத்த சோழிங்கநல்லூரில் எல்கோ சிறப்புப் பொருளாதார மண்டலத்தை தமிழ்நாடு மின்னணு நிறுவனம் நிறுவியுள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதன் ஏற்றுமதி மதிப்பு ரூ.16 ஆயிரத்து 536 கோடி ஆகும். இது, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதியில் 25 சதவீதமாகும்.சிறு-குறு தொழில்முனைவோர் தகவல் தொழில் நுட்பவியல்-அது சார்ந்த வணிகத்தை சென்னையில் தொடங்க வழி செய்யப்படும். அதன்படி, சென்னை சோழிங்கநல்லூரில் எல்கோ சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம் ரூ.80 கோடியில் கட்டப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் பணிபுரிந்த அலுவலர்களுக்கு மதிப்பூதியம் ஒப்பளிக்கப்பட்டு அரசாணை வெளியீடு. அரசாணை (நிலை) எண். 784. பொது (தேர்தல்கள்-3) துறை நாள். 21.09.2016

பேரிடர் மேலாண்மை பள்ளிகளில் போட்டி

பேரிடர் மேலாண்மை தொடர்பாக, பள்ளிகளில் போட்டிகள் நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 
பேரிடர் மேலாண்மை குறித்து, அனைத்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்;அதற்காக பள்ளிகளில், பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்த வேண்டும். அக்., 17 முதல், 26 வரை, பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்; இறுதியில், மாநில போட்டிகள் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TRB EXAM:வினாத்தாள் 'லீக்' - பெண் மீது வழக்கு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியான சம்பவத்தில், தேனியைச் சேர்ந்த பெண் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர்களுக்கான போட்டித் தேர்வு, செப்., 16ல், மதுரை உட்பட, ஐந்து மாவட்ட மையங்களில் நடந்தது. 
மதுரை தனியார் பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய, தேனியைச் சேர்ந்த பெண், வினாத்தாள் பக்கங்களை மொபைலில் படம் எடுத்து, வாட்ஸ் ஆப்பில்அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வு அறை கண்காணிப்பாளர் புகாரை அடுத்து, அப்பெண் மீது, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், போலீசார் நேற்று வழக்குபதிவு செய்தனர். மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில், அப்பெண்ணிடம், மூன்று மணி நேரம் விசாரணை நடந்தது.

புதிய கல்வி கொள்கை 7 நாள் மட்டுமே அவகாசம்

மத்திய அரசின், புதிய கல்வி கொள்கை குறித்த கருத்துக்களை அனுப்ப, ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. கடந்த, 1968ல் உருவாக்கப்பட்ட கல்வி கொள்கைக்கு பதிலாக, மத்திய அரசு, புதிய கல்வி கொள்கையைஅமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில், ஐந்து பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கமிட்டி பரிந்துரைப்படி, புதிய வரைவு கல்வி கொள்கையை, மத்திய அரசு உருவாக்கி, ஜூனில் வெளியிட்டது.

அதன் முக்கிய அம்சங்கள் குறித்து கருத்து கூற, ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது; பல தரப்பிலும் கூடுதல் அவகாசம் கேட்டதால், செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளதால், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், nep.edu.@gov.in என்ற இ- மெயில் முகவரிக்கு, கருத்துக்களை அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

நுழைவு தேர்வுகளுக்கு தனி ஆணையம்?

'இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்த, தனி ஆணையம் அமைக்கலாம்' என, மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ., ஆலோசனை தெரிவித்துஉள்ளது.
உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜி., படிப்பில் சேர, ஜே.இ.இ., என்ற, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு, மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, பேராசிரியர் பணிக்கான, யு.ஜி.சி.,யின், 'நெட்' தேர்வு உட்பட, பல தேர்வுகளை சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.'இது, கூடுதல் பணிச்சுமையாக உள்ளதால், நுழைவுத்தேர்வுகளை நடத்த, தனி ஆணையம் ஏற்படுத்தலாம்' என, மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ., ஆலோசனை தெரிவித்து, கடிதம் அனுப்பி உள்ளது. எனவே, நுழைவுத்தேர்வுகளை நடத்த, அடுத்த ஆண்டில், தனி ஆணையம் அமைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு

அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய மக்கள் தொகை பதிவு ஆவணத்தில் இருந்து பெறப்படும் குடிமக்களின் பயோ-மெட்ரிக் தகவலுடன் கூடிய தனிநபர் பற்றிய தகவல் தொகுப்போடு ஆதார் எண்களை ஒருங்கிணைத்து மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆதார் பதிவுகளை மேற்கொள்ளும் பதிவாளாராக தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையை இந்திய பொது அடையாள எண் ஆணையகம் அங்கீகரித்துள்ளது.

குடிமக்களுக்கும், அரசுத் துறைகளுக்கும் சிறந்த சேவைகளை அளித்திட ஏதுவாக, ஆதார் பதிவுகளை மேற்கொள்ளவும், மாநில மக்கள் தொகை பதிவேட்டினை பராமரிக்கவும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, மாநிலம் முழுவதும் 60 நிரந்தர பதிவு மையங்கள் அமைக்கப்படும்.இந்த நிரந்தரப் பதிவு மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவை பராமரிக்கும்.முதல் கட்டமாக இந்த நிரந்தர பதிவு மையங்கள், சென்னை மாநகராட்சி, அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தாலும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், சென்னை நீங்கலாக இதர மாநகராட்சிகளில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் அரசு இணைய சேவை மையங்களில் நிறுவப்பட்டு ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்படும்.ஆதார் அடிப்படையிலான பல்வேறு வகையான அட்டைகள் வழங்கும் பணியும் இந்த மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.

புதிய கட்டடங்கள்: தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களில் தொழில்முனைவோர் மையங்கள் ஏற்படுத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு கோவையில் உள்ள டைடல் பூங்காவில், வாடகைக் கட்டடத்தில் தொழில் முனைவோர் மையம் அமைக்கப்படும். இந்த மையத்துக்கு நாஸ்காம் நிறுவனம் அறிவுசார் பங்குதாரராக செயல்படும்.மின் ஆளுமை இயக்குநரகம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆகியன சென்னை ஆழ்வார்பேட்டையிலும், அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் எழும்பூர், நுங்கம்பாக்கத்திலும் வாடகைக் கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன.இந்த நிறுவனங்களுக்கு கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழக இடத்தில் கூடுதல் கட்டடம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கல்வியாளர்கள் சங்கமத்தின் "ஆசிரியர் திருவிழா"

Festival advance form Pdf format !!!

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!