Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 26 September 2016

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆணை வெளியீடுபள்ளிக்கல்விதுறை இணை இயக்குனர் கள் மாற்றம் மற்றும் பதவி உயர்வு

 திரு/திருமதி 

லதா- JD HR
சசிகலா- JD Admin DEE
சுகன்யா-JD Aided DEE
சேதுராமவர்மா- JD p
செல்வகுமார்- JD non formal

*Promotion*

Pon kumar- JD Kallar
Anandhi-JD  Ssa
(Trichy ceo)

சிறுமிக்கு சிறுநீரகம் அளித்த ஆசிரியை!

இறந்தப் பின்னும் உடலுறுப்புகளை தானம் அளிக்க மறுக்கும் இந்த உலகில் தன் வகுப்பில் பயிலும் சிறுமிக்காக சிறுநீரகத்தைத் தானமாக அளிக்க முன்வந்த ஆசிரியரின் செயல் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லயலா என்ற அமெரிக்காவை சேர்ந்த நான்கு வயது சிறுமி, மைக்ரோஸ்கோப்

பாலியான்கிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறுமிக்கு சிறுநீரகம் செயலிழந்து 12 மணி நேரத்துக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்ய வேண்டி இருந்தது. குழந்தை மிகவும் சோர்வுற்று காணப்பட்டாள். மேலும், சிறுமிக்கு வேறு சிறுநீரகம் பொருத்த வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் விளம்பரமும் செய்யப்பட்டது.

இந்நிலையில் லயலா படித்த பள்ளியின் ஆசிரியை படிஸ்டா என்பவர் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்துள்ளார். இதுகுறித்து ஆசிரியை படிஸ்டா கூறியதாவது, “லயலா உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உடனே நான் மருத்துவரிடம் சென்று என்னை பரிசோதனை செய்து, எனது சிறுநீரகத்தை சிறுமிக்குத் தானமாக கொடுத்தேன்” என்று கூறியுள்ளார்.

இந்த ஆசிரியரின் மிக அற்புதமான செயலையடுத்து நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுமி உடல்நலம் தேறி வருகிறார்.

சென்டாக் கவுன்சிலிங் தேதி மாற்றம் !

இறுதி கட்ட சென்டாக் கவுன்சிலிங் 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், நர்சிங், பி.பி.டி., படிப்புகளுக்கான இறுதி கட்ட சென்டாக் கவுன்சிலிங் 26, 27 ஆகிய தேதிகளில் நடக்கும் என, 
அறிவிக்கப்பட்டிருந்தது. பெற்றோர், மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று தற்போது இது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 26ம் தேதிக்கு பதிலாக 28ம் தேதி கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.பார்ம் கவுன்சிலிங்:

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ கவுன்சிலிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளதையடுத்து 28ம் தேதி நடக்க இருந்த பி.பார்ம் கவுன்சிலிங் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று 26ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மதர்தெரஸா கல்லுாரியில் மொத்தம் 17 பி.பார்ம் இடங்கள் உள்ளன.

காலியிட விபரம்:

புதுச்சேரி: ஓ.பி.சி.,-1, முஸ்லிம்-1, எஸ்.சி.,-6

காரைக்கால்: பொது-1, ஓ.பி.சி.,-1, எம்.பி.சி.,-2 எஸ்.சி.,-1, மாகி:ஓ.பி.சி.,-1, ஏனாம்: எஸ்.சி.,-1,

மேலும் விபரங்களை www.centaconline.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

மத்திய அரசில் வேலை செய்ய விருப்பமா?

மத்திய அரசில் நிரப்பப்பட உள்ள மூத்த ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் மூத்த தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு காலியாக இடங்களை நிரப்புவதற்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 12

பணி: மூத்த ஆராய்ச்சி உதவியாளர்

பணியிடங்கள்: 09

கல்வித் தகுதி: வேதியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800

பணி: மூத்த தொழில்நுட்ப உதவியாளர்

பணியிடங்கள்: 03

தகுதி: விவசாயப் பொருளியல், தாவரவியல், மரபியல் ஆகியவற்றில் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100/- எஸ்சி,எஸ்டி,மாற்றுத்திறனாளிகள் கட்டணம் இல்லை..

கடைசித் தேதி: 03.10.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://sscsr.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி35 ராக்கெட்: ஸ்காட்சாட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 8 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி35 ராக்கெட் திங்கள்கிழமை காலை 9.12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்காட்சாட்டை தொடர்ந்து மற்ற 7 செயற்கோள்களும் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி35 ராக்கெட் ஏவப்பட்டது.

ஸ்காட்சாட் நிலைநிறுத்தம்:

பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட்டில் பருவநிலை தொடர்பான ஆய்வுக்காக 371 கிலோ எடையுள்ள ‘ஸ்காட்சாட்-1’ என்ற செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது. வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவல்களை இந்த செயற்கைக்கோள் மூலம் பெற இயலும். இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 720 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டது. துருவ சூரிய ஒத்தியங்கு சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.

மற்ற 7 செயற்கைக் கோள்களும்..

இதுதவிர அல்ஜீரியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தயா ரித்துள்ள 5 செயற்கைக் கோள்கள், மும்பை ஐஐடி உருவாக்கியுள்ள ‘பிரதம்’, பெங்களூரு பிஇஎஸ் பல் கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘பிசாட்’ ஆகிய செயற்கைக் கோள்களும் அனுப்பப்பட்டன.

இந்த 7 செயற்கைக்கோள்கள் துருவ வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்படுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 8 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 675 கிலோ.

இதுவே முதல்முறை:

இந்திய ராக்கெட் மூலமாக ஒரே பயணத்தின்போது, இருவிதமான சுற்றுப்பாதைகளில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்துவது இதுவே முதல்முறை.

பிரதமர் மோடி வாழ்த்து:

பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட்டை 8 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக ஏவிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விஞ்ஞானிகளுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இத்தருணம் பெருமகிழ்ச்சி மற்றும் பெருமையைத் தருகிறது. நம் விஞ்ஞானிகள் தொடர்ந்து வரலாறு படைத்து வருகின்றனர். கண்டுபிடிப்பில் அவர்களின் பேரார்வம், 125 கோடி இந்தியர்களின் மனதைத் தொட்டிருக்கிறது. இந்தியாவை உலக அளவில் பெருமை கொள்ளச் செய்திருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்

அக்டோபரில் வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை: பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும்

அக்டோபர் மாதம் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், வங்கி பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 10-ம் தேதி திங்கள்கிழமை ஆயுதபூஜை பண்டிகையும், 11-ம் தேதி விஜயதசமியும், 12-ம் தேதி மொகரம் பண்டிகையும் கொண் டாடப்படுகிறது. இதனால் 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8-ம் தேதி இரண்டாவது சனிக் கிழமை என்பதாலும், மறுநாள் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு விடுமுறை தினமாகும். இதனால் வங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாள் தொடர் விடுமுறை வருகிறது.

இதனால் வங்கிப் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஏடிஎம் மையங்களிலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும்.

இதுகுறித்து, வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வங்கிகளுக்கு ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் மொகரம் பண்டிகைக்கு 3 நாள்தான் விடுமுறை. ஆனால், அதற்கு முன்பாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை வருவதால் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், விடுமுறை நாட்களில் வாடிக்கை யாளர்கள் பாதிக்காத வகையில் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் போதிய அளவு பணம் இருப்பில் வைக்கப்படும்.

மேலும், தற்போது பெரும் பாலான வங்கிகளின் வெளியே பணம் செலுத்துவதற்கும், பாஸ் புத்தகத்தை பதிவு செய்வதற்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் எளிதாக பணத்தை செலுத்தலாம். அத்துடன், வங்கி விடுமுறை நாட்களில் ஆன்-லைன் சேவை செயல்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இனிமேல் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த முடியும் 

பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் உட்பட 14 திறந்தநிலை பல்கலைக்கழகங் களுக்கு மட்டும் அந்தந்த மாநிலம் முழுவதும் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிக்கு சென்று படிக்க இயலாதவர் களுக்கும் பணியில் இருந்துகொண்டு படிப்பை தொடர விரும்புவோருக்கும் கைகொடுப்பது தொலைதூரக்கல்வி படிப்பு கள்தான் (அஞ்சல்வழி கல்வி திட்டம்), தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்தி வருகின்றன. இவற்றில் லட்சக்கணக்கானோர் சேர்ந்து படித்தும் வருகின்றனர். தொழில் நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம்கூட தொலைதூரக்கல்வி திட்டத்தில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளை வழங்கு கிறது. பிஎட் படிப்பும் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் அஞ்சல் வழியில் வழங்கப்படுகிறது.

அதிகார எல்லை

                              ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் குறிப்பிட்ட அதிகார எல்லை (Territorial Jurisdiction) வரையறுக்கப்பட்டுள்ளது. உதார ணத்துக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் அதிகார எல்லை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களை உள் ளடக்கியது. இந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று செயல்படு கின்றன. அதேபோல், தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் அதிகார எல்லை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.

தற்போது பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லையை தாண்டி தொலைதூரக்கல்வி படிப்புகளை வழங்கி வருகின்றன. தேர்வு மையங் களையும் நிறுவி வருகின்றன. எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரும் எந்த பல்கலைக்கழகத்திலும் தொலைதூரக்கல்வி திட்டத்தில் படிக்கும் நிலை தற்போது இருந்து வருகிறது.

யுஜிசி உத்தரவு

                       இந்த நிலையில், பல்கலைக் கழகங்கள் தங்கள் அதிகார எல்லையை தாண்டி தொலைதூரக்கல்வி படிப்புகள் நடத்துவதற்கும் தேர்வு மையங்கள் அமைப் பதற்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தடை விதித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் அதிகார எல்லையை தாண்டி தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்தக்கூடாது என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், திறந்தநிலை பல்கலைக் கழகங்கள் தங்கள் மாநிலம் முழுவதும் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்தவும், தேர்வு மையங்களை நிறுவவும் யுஜிசி அனுமதி அளித்துள்ளது.

யுஜிசி-யின் இந்த உத்தரவின்படி, இனிமேல் தமிழக பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில்தான் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த முடியும். தேர்வு மையங் களையும் அமைக்க முடியும் உதாரணத்துக்கு சென்னை பல்கலைக்கழகம் இனிமேல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த இயலும். அங்கு மட்டுமே தேர்வு மையங்களையும் அமைக்க முடியும்.

தமிழகத்தில் உள்ள ஒரே திறந்த நிலை பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு மாநிலம் முழுவதும் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த யுஜிசி அனுமதி அளித்திருப்பதாக அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.பாஸ்கரன் ‘தி இந்து’விடம் தெரிவித்தார். மேலும், கடந்த 2014-ம் ஆண்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்த எம்.பில், பிஎச்.டி. படிப்புகளை மீண்டும் ரெகுலர் முறையில் நடத்துவதற்கு யுஜிசி அனுமதி அளித்திருப்பதாகவும் அப்படிப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

யுஜிசி உத்தரவுக்கு தடை

                                      இதற்கிடையே, யுஜிசியின் உத்தரவுக்கு சென்னை பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற்றிருக்கின்றன. எனவே, அப்பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தொலைதூரக் கல்வி படிப்புகளை நடத்தி வருகின்றன. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகரிடம் கேட்டபோது, “யுஜிசி உத்தரவுக்கு இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தடை ஆணை பெற்றிருக்கிறோம். எனவே, வழக்கம்போல் தொலை தூரக்கல்வி படிப்புகள் அனைத்து இடங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன. எங்களைப் போன்று பல பல்கலைக்கழகங்களும் இது போன்று தடை ஆணை பெற்றிருக்கக் கூடும்” என்றார்

தமிழக அரசில் துணை ஆய்வாளர், ஃபோர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசின் மீன்வளத்துறையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள துணை ஆய்வாளர், ஃபோர்மேன்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: துணை ஆய்வாளர் (Fisheries Department)
காலியிடங்கள்: 12
தகுதி: 

    Fishery Science  படிப்பில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும் அல்லது விலங்கியல் படிப்பை முக்கியப் பாடமாகக் கொண்ட பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:

               18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 

                மாதம் ரூ.3,900-34,800
பணி:                 ஃபோர்மேன்

காலியிடங்கள்:          04

தகுதி: 

            பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 

                18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.3,900-34,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்க்கள்.
விண்ணப்பக் கட்டணம்: 

                   பொது மற்றும் இதர பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி,மாற்றுத் திறனாளிகள், கணவரை இழந்த ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும்முறை: 

            http://tnpscexams.net என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய

http://www.tnpsc.gov.in/notifications/2016_18_not_eng_si_of_fisheries.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

30 கால்பந்து மைதான அளவு கொண்டது உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது, சீனா!!

பீஜிங்30 கால்பந்து மைதான அளவிலானதும், உலகின் மிகப்பெரியதுமான ரேடியோ தொலைநோக்கி ஒன்றை சீனா நேற்று செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.ரேடியோ தொலைநோக்கி

விண்வெளித்துறையில், ஆராய்ச்சி ரீதியில் உலக நாடுகளுடன் சீனா போட்டியிட்டு வருகிறது. இதற்காக பல்லாயிரம் கோடி செலவில் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது.இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று சீன அரசிடம் 1994–ம் ஆண்டு வானியல் வல்லுனர்கள் யோசனை தெரிவித்தனர். இந்த யோசனை வந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையில், தென்மேற்கு சீனாவில், கிஸோ மாகாணத்தில் இந்த ரேடியோ தொலைநோக்கியை நிறுவ சீனா முடிவு எடுத்தது.ரூ.1,200 கோடி திட்டம்

இதற்காக அந்தப் பகுதியில் வசித்து வந்த 8 ஆயிரம் பேரை இடம் பெயர வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்காக 2 குடியிருப்பு தொகுப்புகளாக 600 அடுக்கு மாடி வீடுகள் கட்டித்தரப்பட்டன.அந்தப் பகுதியில் 2011–ம் ஆண்டு, ரேடியோ தொலைநோக்கியை நிறுவும் பணி தொடங்கியது. இந்தப் பணியில் ஏராளமான விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.இந்த திட்டத்துக்காக 180 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.1200 கோடி) சீனா முதலீடு செய்தது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த பணி நடந்து இப்போது முடிந்துள்ளது.30 கால்பந்து மைதான அளவு கொண்டது

இந்த ரேடியோ தொலைநோக்கி 500 மீட்டர் விட்டம் (குறுக்களவு) கொண்டது. கிட்டத்தட்ட அது 30 கால்பந்து மைதானங்களை ஒன்றாக பார்ப்பதுபோன்ற பிரமாண்டத்தை தருகிறது. ‘பாஸ்ட்’ என்றழைக்கப்படுகிற இந்த ரேடியோ தொலைநோக்கி, உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலை நோக்கி என்ற பெயரை தட்டிச்செல்கிறது.இந்த ரேடியோ தொலைநோக்கியை சீனா நேற்று முறைப்படி தொடங்கி வைத்து, செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான வானியல் வல்லுனர்களும், ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.நோக்கம் என்ன?

இந்த ரேடியோ தொலைநோக்கி அமைக்கப்பட்டிருப்பதின் நோக்கம் என்ன என்று கேட்டால் அது குறித்து சீனாவின் தேசிய வானியல் ஆராய்ச்சி அறிவியல் அகாடமியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் கியான் லெய் கூறும்போது, ‘‘பிரபஞ்ச வளர்ச்சி விதிகளை கண்டறிவதுதான் இதன் நோக்கம்’’ என்றார். அதாவது, பிரபஞ்சம் தோன்றிய விதத்தை புரிந்துகொள்வதற்கு இந்த ரேடியோ தொலை நோக்கி உதவும் என்கிறார்கள்.வேற்று கிரக வாழ்க்கை

மேலும் நட்சத்திரங்கள், கோள்கள் என பிரபஞ்சம் முழுவதும் சிக்னல்களை பெற இந்த ரேடியோ தொலைநோக்கி உதவும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.இந்த தொலைநோக்கியின் மிக முக்கிய அம்சம், இது வேற்றுக்கிரக வாழ்க்கை பற்றிய உலகளாவிய ஆராய்ச்சிக்கு ஊக்கமாக அமையும் என்பதுதான்.மேலும் ஈர்ப்பு அலைகள் தேடல், நட்சத்திரங்கள், கோள்களில் இருந்து ரேடியோ உமிழ்வுகளை கண்டறிதல், வேற்றுக்கிரக வாழ்வு பற்றிய அறிகுறிகளை கவனித்தல் போன்றவற்றிற்கும் இந்த ரேடியோ தொலைநோக்கி உதவும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.மொத்தத்தில் இந்த ரேடியோ தொலைநோக்கி இன்னும் 10, 20 ஆண்டுகளுக்கு உலகத்தின் தலைவர் போன்று திகழும் என்பது சீனாவின் தேசிய வானியல் ஆராய்ச்சி அறிவியல் அகாடமியின் துணைத்தலைவர் ஜெங் ஸியானியனின் கருத்தாக அமைந்துள்ளது.

கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க காலக்கெடு!!!

 'தொழிலாளர் நல வாரியம் வழங்கும் கல்வி உதவித்தொகை பெற விரும்புவோர், அக்., 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு, தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிளஸ் 1 முதல், முதுகலை பட்டம் வரை படிக்கும் மாணவர்களுக்கு, புத்தகங்கள் வாங்குவதற்கான நிதியுதவி அளிக்கப்படுகிறது. பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், ஆசிரியர் பட்ட படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அரசு பொதுத் தேர்வில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிப்பில், மாவட்ட அளவில் முதல், 10 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, அவர்கள் மேல்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்களை, 'செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்.718, தேனாம்பேட்டை, சென்னை' என்ற முகவரியில், அக்., 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, 044 - 2432 1542 என்ற எண்ணிலும், www.labour.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

91 மருத்துவ 'சீட்'களுக்கு இன்று கலந்தாய்வு

சென்னை:மாநிலத்திற்கு திரும்ப கிடைத்த, 91 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று நடக்கிறது.

இ.எஸ்.ஐ., கல்லுாரிமருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறியதாவது:

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத, 91 இடங்கள், மாநில ஒதுக்கீட்டிற்கு திரும்ப கிடைத்து
உள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 82 இடங்களும்; கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில், ஒன்பது இடங்களும் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது.

முதலில், கல்லுாரிகளுக்குள் ஒதுக்கீடும், அதன்பின், காலி இடங்களுக்கான கலந்தாய்வும் நடக்கும். இதன் காரணமாக, இன்று நடக்க இருந்த, பாரா மெடிக்கல் படிப்புகளுக்கான கலந்தாய்வு, நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள ஒரு சுயநிதி கல்லுாரியில் இருந்து, மாநிலத்திற்கு, 75 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைக்கின்றன.

செப்டம்பர் 28ல்
இந்த இடங்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரம்பாத, சுயநிதி கல்லுாரியில் உள்ள, 64 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 440 பி.டி.எஸ்., இடங்களுக்கும் சேர்த்து, செப்., 28ல், கலந்தாய்வு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்

Central Government has a proposal to Pay 1% DA from July 2016 as an interim Measure

Central Government has a proposal to Pay 1% DA from July 2016 as an interim MeasureThe Sources Close to the Ministry of finance informed that there is proposal to Pay 1% DA from July as an interim Measure.It is said that the Central Government has not yet decided about the DA rates in Revised Pay scale.
Sources close to Finance Ministry told that the initial installment of DA to central government employees on the revised pay structure w.e.f 1.7.2016 is under consideration. Mean time there is a proposal to pay the DA from July 2016at the rate of 1% to all CG Staffs. It will be a shocking news for CG Staff, since they are already expecting 2 to 3% DA from July 2016.

PRU is asked to submit Financial Implication of 1% DA

But the fact is the Department of Expenditure has directed the PRU of the Finance Ministry to furnish the details of additional Financial Implications for 1% increase of DA with effect from 1.7.2016 on the revised Pay Structure.Further the Pay Research Unit has been requested to furnish financial implications for the Period of July 2016 to February 2017 on account of granting 1% DA from July 2016 to all central government employees including Armed Forces and UT Employees.

According to the above information, it is believed that announcement of 1% DA for July installment may be made any time soon.

அங்கீகாரமற்ற படிப்புகளை நடத்துகிறதா இந்தியமருத்துவ சங்கம்:மாணவர்கள் அதிர்ச்சி

இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி அங்கீகாரமற்ற சான்றிதழ் படிப்புகளை பயிற்று விப்பதாகஇந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.) மீது புகார் எழுந்துள்ளன.இந்திய மருத்துவ கவுன்சில் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களின் தரத்தை பரிசோதித்து அவற்றுக்கு அனுமதி அளிக்கிறது. 
கல்வி நிறுவனங்களில் கற்றுக்கொடுக்கப்படும்  ஒவ்வொரு பாடப் பிரிவுகளுக்கும் அனுமதி பெற வேண்டும். அனுமதி இன்றி இயங்கும் கல்வி நிறுவனங்கள் மீதும், அங்கீகாரமற்ற சான்றிதழ் படிப்புகளை கற்றுக் கொடுக்கும் நிறுவனங்களின் மீதும் இந்திய மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்கிறது.இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை, மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி அங்கீகாரமற்ற சான்றிதழ் படிப்புகளை பயிற்றுவிப்பதாக புகார் எழுந்துள்ளன. இதனால், ஏற்கனவே ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும், தற்போதுபயின்று வருவோரும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.டாக்டர் ஒருவர் கூறியதாவது: சங்கம் சார்பில் நடத்தப்படும் பாராமெடிக்கல் பட்டய படிப்புகள், டாக்டர்களுக்கான 'ஸ்பெஷாலிட்டி' படிப்புகள் உள்ளிட்டவை அங்கீகாரமற்றவை. அரசு வேலைகளுக்கும் இவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. சில டாக்டர்கள், 'ஸ்பெஷாலிட்டி' சான்றிதழை வைத்துக்கொண்டு அது சம்பந்தப்பட்ட சிகிச்சையில் ஈடுபடுகின்றனர்.சான்றிதழ் படிப்புகளாக நடத்த அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும். அவ்வப்போது முளைக்கும் போலி கல்வி நிறுவனங்கள் மீது மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுப்பது வழக்கம். ஆனால் இந்திய மருத்துவ சங்கமே, அங்கீகாரமற்ற படிப்புகளை நடத்தி வருவது டாக்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.

ஸ்பெஷலிஸ்ட்கள் மீது நடவடிக்கை

இந்திய மருத்துவ சங்க மாநில செயலர் முத்துராஜன் கூறியதாவது: டாக்டர்களுக்கு 'பெல்லோஷிப்' எனப்படும் பயிற்சியை மட்டுமே அளிக்கிறோம். படிப்பில் சேரும் முன்பே, இது தமிழக அரசு மற்றும் மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பட்ட படிப்பு அல்ல என்ற விஷயத்தை அவர்களிடம் தெரிவிக்கிறோம். அதனை பயன்படுத்தி தங்களை 'ஸ்பெஷலிஸ்டாக' அறிவித்துக் கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.செவிலியர் உள்ளிட்ட பணிகளின் தேவையை கருத்தில் கொண்டே சில பாராமெடிக்கல் பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. படிப்பிற்குப் பின் அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்யலாம், என்றார்..

அசத்தல் காதுகளை காக்க களம் இறங்கிய மாணவர்கள் அரசு பள்ளியின் கள ஆய்வு தந்த விழிப்புணர்வு.

காதுகளில் குடைச்சலை ஏற்படுத்தும் வாகனங்களின் இரைச்சலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என களஆய்வு மூலம் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர், மதுரை ஒத்தக்கடை அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள்.
இப்பள்ளி மேலுார் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளதால் வாகன இரைச்சல் ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு பெரும் குடைச்சலாகி வருகிறது. இதற்கு ஏதாவது தீர்வுஏற்படுத்த வேண்டும் என தலைமை யாசிரியர் தென்னவன் தலைமையில் 15 மாணவர்கள் குழு களஆய்வில் ஈடுபட்டது.முதற்கட்டமாக, எவ்வகை வாகனங்கள் இந்த ரோட்டில் அதிகம்செல்கின்றன. எந்த வாகனங்களில் ஒலி மாசு ஏற்படும் வகையில் சத்தம் காதை கிழிக்கிறது போன்ற விஷயங்களை சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் களஆய்வில் மாணவர்கள் ஈடுபட்டனர்.இதில் ஒவ்வொரு வாகனங்களில் இருந்து வெளியாகும் ஒலியின் டெசிபல் அளவு கணக்கிடப்பட்டது.பெரும்பாலான தனியார் பஸ்கள், வேன்களில் தான் ஹாரன் சத்தம் அங்கீகரிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தது.

டூவீலர்களில் காதுகளை குடையும் வகையிலும் விதவித ஹாரன் கருவிகள் பொருத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.தலைமையாசிரியர் தென்னவன் கூறியதாவது: எங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை அடிப்படையில் இக்கள ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ரோடுகளில் செல்லும் வாகனங்களில் 80 முதல் 100 டெசிபல் உள்ளதால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது. இதில் அதிகபட்ச ஒலி மாசை குறைக்கும் வகையில் ஊராட்சி நிர்வாகத்திற்கு சில பரிந்துரைகளை தெரிவித்துள்ளோம்.

அதில், அதிக மரங்களை நடுவது, சத்தத்தை கட்டுப்படுத்தும் தாவரங்களை வளர்ப்பது, ஒலித்தடை ஏற்படுத்தும் கட்டமைப்பு, அருகில் செல்லும் இடங்களுக்கு வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது, பள்ளி வேலை நாட்களில் ஊராட்சிக்குள் ஒலித்தடை ஏற்படுத்துவது போன்றவற்றை வலியுறுத்தியுள்ளோம். மக்களிடையே இதுகுறித்து மாணவர்கள் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம், என்றார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!