Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 29 September 2016

ரூ.40 லட்சம் திரட்டி அரசு பள்ளியின் தரம் உயர்த்திய தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன்


மாணவர்களுடன் அன்பாசிரியர் செல்வக்கண்ணன்.

சர்வதேசப் பள்ளி என்ற அங்கீகாரத்தில் கரூர் மாவட்டம் பரமத்தி வேலூர் அரசு ஆரம்பப் பள்ளி கம்பீரத்துடன் இயங்கி வருகிறது. ஸ்போக்கன் இங்கிலீஷ், இந்தி, கராத்தே, யோகா, ஓவியம், இசை, நடனம், பாட்டு ஆகிய பயிற்சிகள் இங்கு இலவசமாகக் கற்பிக்கப்படுகின்றன.

ஊர் மக்களின் ஆதரவோடு சுமார் ரூ.40 லட்சம் திரட்டப்பட்டு பள்ளிக்கு தேவையான சுற்றுச்சுவர், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள், தண்ணீர்க்குழாய்கள், கழிப்பறை, நூலகம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

பள்ளி மற்றும் மாணவர்களின் செயல்பாடுகளால் பள்ளிக்கு, சர்வதேச தரச்சான்று ISO 9001:2015 கிடைத்துள்ளது. இவை அனைத்துக்கும் பின்னால் அமைதியாக, அதேசமயத்தில் ஆற்றலுடன் இயங்கி வருகிறார் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன்.

அவரின் அளப்பரிய பணி குறித்த பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியர் தொடரில்...

"பிடித்தது கிடைக்காதபோது, கிடைத்ததைப் பிடித்தமாக்கிக் கொள்வது என்னுடைய கொள்கை. மருத்துவராக ஆசைப்பட்டேன்; மதிப்பெண்கள் போதவில்லை. வேதியியல் படித்தேன்; முதுகலையில் இடம் கிடைக்கவில்லை. என்னுடைய ஆசிரியரின் அறிவுரைப்படி ஆசிரியர் பயிற்சியில் இணைந்தேன். அங்கும் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கவில்லை. விசைத்தறி தொழிலில் ஈடுபட்ட்டேன். 5 வருடங்கள் கழித்து 1995-ல் ஆசிரியர் பணி கிடைத்தது.

ஆசிரியர் பயிற்சி ஒரு திருப்புமுனையாக இருந்தது. வேலைக்குச் சேர்ந்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றோர் ஆசானாக அமைந்தார். அங்கே வேலைபார்த்த 5 வருடங்களில் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். பொதுவாக பள்ளிகளில் தலைமையாசிரியர் பெரிய வகுப்புகளையும், உதவி ஆசிரியர்கள் சிறிய வகுப்புகளையும் கவனித்துக்கொள்வர். நான் புதிது என்பதால் சிறிய குழந்தைகளைக் கையாளத் தடுமாறினேன். அதனால் அவர் 1, 2 வகுப்புகளைக் கவனித்துக்கொள்ள, நான் 3,4,5 வகுப்புகளுக்குக் கற்பித்தேன். இதையே நான் தலைமையாசிரியர் ஆனபிறகும் கடைபிடித்து வருகிறேன்.

2002-ல் குஞ்சாம்பட்டி தொடக்கப்பள்ளிக்குத் தலைமையாசிரியராக பதவி உயர்வு கிடைத்தது. அங்கு 6 மாணவர்களே இருந்தார்கள். பக்கத்து கிராமங்களில் இருந்து எங்கள் பள்ளிக்கு மாணவர்களை வரவழைக்க முடிவுசெய்தோம். கிராமத்து சிற்றுந்து உரிமையாளரிடம் பேசி, 3 ரூ.ஆக இருந்த பயணக்கட்டணத்தைப் பாதியாகக் குறைத்தோம். திரும்ப ஊர்த்தலைவரிடம் பேச, அவர் மீதி 1.50 ரூபாயைக் கொடுத்துவிட்டதால் மாணவர்கள் கட்டணமில்லாமலே பள்ளிக்கு சிற்றுந்தில் வந்தார்கள்.

ஒரே மாதத்தில் 6 பேராக இருந்த எண்ணிக்கை, 23 மாணவர்களாக அதிகரித்தது. ஒரு பள்ளிச்சீருடை, காலணி, சாக்ஸ், பெல்ட், அடையாள அட்டை ஆகியவற்றை சொந்த செலவில் மாணவர்களுக்கு வாங்கிக்கொடுத்தேன். தொண்டு நிறுவனங்களிடம் இருந்து மேசை, நாற்காலிகளைப் பெற்றோம். சுவர்களுக்கு வண்ணம் பூசினோம். அரசு ஒதுக்கிய நிதியின் மூலம் ஒரு பக்க சுற்றுச்சுவரைக் கட்டி, மற்றொரு பக்கத்தை என்னுடைய பணத்தில் கட்டி முடித்தேன்.

படித்த பள்ளிக்கே தலைமை ஆசிரியர்

அடுத்ததாக நான் படித்த பள்ளிக்கே தலைமையாசிரியராக மாற்றம் செய்யப்பட்டேன். அடிப்படை வசதிகளைச் செய்து முடித்து, தனியார் நிறுவனங்களிடம் இருந்து கணிப்பொறிகளை வாங்கினோம். அரசு ஒதுக்கிய 2 கணிப்பொறி சேர்ந்து 10 கணிப்பொறிகளையும் கொண்டு ஆய்வகத்தை நிறுவினோம். ஒரு வருடத்திலேயே 2006-ல் சிறந்த கணினிவழிக்கற்றல் மையத்துக்கான விருது கிடைத்தது.

வெளியே மண் தரையாக இருந்ததால் கணிப்பொறி அறைகளில் புழுதி புகுந்து அவை அடிக்கடி பழுதாகின. அதனால் பள்ளி வளாகம் முழுக்க ரூ.1 லட்சம் செலவில் சிமெண்ட் கல் நட்டோம். நன்கொடையாக ரூ.40 ஆயிரம் கிடைத்தது. மீதியை என் பணத்திலேயே சமாளித்துவிட்டேன். என் இரு மகள்களும் அரசுப் பள்ளியிலேயே படித்ததால் என் பள்ளிக்கு நிறைய செய்ய முடிந்தது. மூத்த மகள் இப்போது மருத்துவம் படிக்கிறார்.

தனியார் பள்ளிகளின் படையெடுப்பால் பரமத்தி ஒன்றியத்தின் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த நிலையை அரசுப் பள்ளிகளே மாற்ற வேண்டும். எங்கள் தொடக்கப்பள்ளிக்கு இதுவரை சுமார் ரூ.40 லட்சம் நன்கொடை பெற்றிருக்கிறோம். பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறை, ஸ்மார்ட் வகுப்பறை, ரூ.1.5 லட்சத்துக்கு புது கணினிகள் உள்ளன.

கல்விச்சீர் வழங்கும் விழா

புதுக்கோட்டை ஆசிரிய நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, கல்விச்சீர் பற்றிக் கேள்விப்பட்டேன். அதை எங்கள் பள்ளியிலும் செயல்படுத்த முடிவு செய்தோம். இதில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்கிவந்து சீர்வரிசையாக வழங்கலாம். இதன்படி சாக்பீஸ், ஃபினாயில், தரைவிரிப்புகள், துடைப்பங்கள், காகிதக்கட்டுகள், குப்பைக்கூடைகள், மின்விசிறி போன்ற பொருட்களை பெற்றோர்கள் சீர்வரிசை வழங்குவது போல் ஊர்வலமாக எடுத்துவந்து வழங்கினர்.

பள்ளிக்குத் தேவையான கணினிகள், 3 கிலோவாட் யூ.பி.எஸ்., 10 மின் விசிறிகள், 25 ஸ்டூல்கள், மர அலமாரிகள், சிறிய மேசை நாற்காலிகள், நகல் எடுக்கும் இயந்திரம் என ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் விழாவில் பெறப்பட்டன.

குரல் தகவல் மூலம் பள்ளி செய்திகள் பெற்றோர்களுக்கு அறிவிப்பு

பள்ளி நிகழ்வுகளை பெற்றோர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வாய்ஸ் கால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு ஒவ்வொரு நாளும் காலை 10 மணி வரை பள்ளிக்கு வராத மாணவர்கள் பற்றிய அறிவிப்பு பெற்றோர்களைச் சென்றடைகிறது. மாணவர்களின் பிறந்த நாள், பெற்றோர் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றுக்கு பள்ளியின் சார்பில் வாழ்த்துச்செய்தியும் அனுப்பப்படுகிறது.

இடப் பற்றாக்குறை காரணமாக பொதுமக்களே பள்ளிக்கு அருகில் 5 சென்ட் இடத்தை ரூ.7 லட்சத்துக்கு வாங்கிக் கொடுத்துள்ளனர். இன்னும் வகுப்பறைகள் கட்ட ஆசை. படிப்பை வைத்து மட்டுமே எல்லோராலும் மிளிரமுடியாது என்பதால், மற்ற பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். எங்கள் மாணவர்கள், சிறந்த மாணவர் என்று பெயர்பெறுவதை விட சிறந்த மனிதராக உருவெடுப்பதையே என்னுடைய ஆசிரியப் பணிக்கான அங்கீகாரமாகக் கருதுகிறேன்" என்று உறுதியோடு சொல்கிறார் அன்பாசிரியர் செல்வக்கண்ணன்.

அன்பாசிரியர் செல்வக்கண்ணன். தொடர்பு எண்- 9894666765

விண்ணப்பித்தவர்கள் எதிர்பார்ப்பு... "மை' வைக்க முடியுமா? பட்டியலில் இடம் பெற வாய்ப்பு !

வாக்காளர் சேர்க்கை விண்ணப்பம் அளித்தவர்களின், விவரங்களை, கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பட்டியலில் சேர்க்க வாய்ப்புள்ளதாக, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில், ஒன்பது லட்சத்து,

75 ஆயிரத்து, 781 ஆண்கள்; ஒன்பது லட்சத்து, 69 ஆயிரத்து, 272 பெண்கள்; 192 திருநங்கையர் என, 19 லட்சத்து, 45 ஆயிரத்து, 245 வாக்காளர் உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில் பயன்படுத்தி வாக்காளர் பட்டியல் அடிப் படையில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அதன்பின், 1ம் தேதி வெளியான வரைவு பட்டியலில் புதிய வாக் காளர்களுக்கு, இணைப்பு பட்டியல்-1 தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் கமிஷன் நடத்தி வரும், வாக்காளர் சிறப்பு முகாம் வாயிலாக, இதுவரை, 55 ஆயிரத்துக்

கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில், 18 வயது பூர்த்தியாகதவர் நீங்கலாக, மற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்

பளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழக்கமாக, உள் ளாட்சி தேர்தல் அறிவித்தால், வேட்புமனு தாக்கல் முடியும்வரை, பெயர் சேர்க்க வாய்ப்பு வழங்கப்படும். இம்முறை தெளிவான அறிவிப்பு இல்லா ததால், வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளனர். இச்சூழலில், 1ம் தேதி முதல், 23 வரை, பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளவர் விவரத்தை பெற்று, தகுதியானவர் பெயர்களை இணைத்து, உள்ளாட்சி தேர்தலுக்கான துணை பட்டியல் தயாரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, 23ம் தேதி வரை விண்ணப்பித்தவர் பெயர்களை, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி, இரவு, பகலாக நடந்து வருகிறது. இந்திய தேர்தல் கமிஷனில் இருந்து உத்தரவு கிடைத்ததும், தகுதியான வாக்காளர் விவரம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒப்படைக்கப்பட்டு, துணை பட்டியல்-2 தயாரிக்கப்படும்.

இதுவரை, 23ம் தேதி வரை விண்ணப்பித்தோர் விவரங்களை தயார்படுத்த மட்டும் உத்தரவு வெளியாகியுள்ளது. துணை பட்டியல் தயாரிப்பு குறித்து முறையான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. இது குறித்து உள்ளாட்சி அமைப்புகளின், தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டபோது, "18வயது பூர்த்தியான, இடமாறிய வாக் காளரை பெயர் சேர்ப்பது குறித்து இறுதியான உத் தரவு கிடைக்கவில்லை.

இருப்பினும், இந்திய தேர்தல் கமிஷன், 23ம் தேதி வரை விண்ணப்பித்தோர் விவரத்தை தொகுத்துள்ளதால், புதிய வாக்காளரை இணைக்க அதிக வாய்ப்புள்ளது. வாக்காளர் பதிவு அலு வலர், அவ்விவரத்தை வழங்கினால், ஒரே நாளில் உள்ளாட்சி தேர்தலுக்கான துணை பட்டியல்-2 தயாரிக்க முடியும்,' என்றனர்

INSPIRE AWARD - INSPIRE AWARD NOMINATIONS FOR THE YEAR 2016-2017

CLICK HERE TO - APPLY...

கல்வியாளர்கள் சங்கமம் - ஆசிரியர் திருவிழா!!


நம்மால் ஒரு மாற்றத்தை விதைக்கமுடியும் என்றால் .... அந்த மாற்றத்தை எல்லோரிடத்திலும் ஏற்படுத்திட ஒரு வாய்ப்பை நாம் ஏற்படுத்தினால் என்ன? என்னும் வினாவின் விடையே *கல்வியாளர்கள் சங்கமம்*

முதலாக நாம் காரைக்குடியில் நடத்திட்ட மாநில அளவிலான பயிலரங்கம் எதிர்பார்ப்பிற்கும் விஞ்சி வெற்றி பெற்றதில் உங்களின் பங்களிப்பும் பங்கேற்பும் மிகமுக்கியமானது.

இச்சங்கமத்தின் மூலம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஏதேனும் ஒரு வகையில் நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் *கரூரில் நடக்கும் ஆசிரியர் திருவிழாவும்* இன்னும் ஒரு பொன்னான சூழலை நமக்கும் நம் மாணவர்களுக்கும் உருவாக்கித் தரும் என்னும் உள்ளார்ந்த நம்பிக்கையுடன் வரவேற்க காத்திருக்கிறேன்...

அக்டோபர் 1 மற்றும் 2 ( சனி , ஞாயிறு) இந்த நாட்கள் இனிய நாட்களாக அமையட்டும்....

கையெழுத்து ,ஓவியத்திறன் மேம்படுத்தும் பயிற்சி

அரசு உதவி பெரும் பள்ளியில் பணிபுரிந்து பணி முறிவின்றி புதிய பள்ளியில் சேர்ந்தால் -முன்னர் பணிபுரிந்த காலத்தையும் சேர்த்து தேர்வு நிலை பெறலாம்

 

வந்துவிட்டது ஏர்செல் ’RC 333’ ஆஃபர்.

ஜியோவுடன் போட்டிப் போட களத்தில் இறங்கியுள்ள ஏர்செல், ’RC 333' எனும் அசத்தல் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேக்கில் 28 நாட்கள் செல்லுபடியாகும் 5 ஜிபி 3ஜி டேட்டா வழங்கப்பட்டுள்ளது.
கூடவே வரம்பற்ற வாய்ஸ் கால் வசதியுடன் ‘ஜோடி சிம்’ ஆஃபரையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகைகள் தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் விரைவில் தமிழகத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை


1.    சூரிய மண்டலத்திலுள்ள வெப்பமான கோள் - சுக்கிரன் (வீனஸ்)
2.    இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் செய்தித்தாள் எந்த மொழியில் வெளிவருகிறது - ஹிந்தி
3.    இந்தியாவின் இரண்டாவது ராணுவ பீல்டு மார்ஷல் - கே.எம்.கரியப்பா
4.    பல்வர்கால ஓவியம் உள்ள இடம் - சித்தனவாசல்

5.    உலகின் முதல் விண்வெளி வீரர் - யூரி ககாரின்
6.    தாவரங்களை வகைப்படுத்துவதில் இயற்கை முறையை முன்மொழிந்தவர்கள் - பெந்தம் மற்றும் ஹூக்கர்கள்
7.    தோட்டப்பயிர் என்பது - மிளகு
8.    சத்தான்களின் வேதம் - இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தகம்
9.    மெண்டல் தோட்டப் பட்டணிச் செடியில் கண்டறிந்த வேறுபாடு - மலரின் நிறம்
10.    கனிஷ்கர் அவையிலிருந்து புத்தபிட்சு - அஸ்வகோஷர்
11.    கோனார்க் சூரிய கோவில் அமைந்துள்ள இடம் - ஒரிசா
12.    இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் - புதுதில்லி
13.    ஆசியாவிலேயே பெரிய வானியல் தொலைநோக்கி இருக்கும் இடம் - காவனூர்
14.    உலகின் முதல்மிதக்கும் அணுமின் நிலையம் எங்கு உருவாக்கப்பட்டுள்ளது - ரஷ்யா
15.    இந்திய வானியற்பியல் நிறுவனம் எங்குள்ளது -  பெங்களூரு
16.    சாதாரண கண்களுக்கு தெரியக்கூடிய அருகில் உள்ள நட்சத்திரம் - ப்ராக்சிமா செஞ்சுரி
17.    சந்திரயான்-I ஐ ஏவிய செலுத்து வாகனம் - PSLV
18.    கார்பட் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம் - உத்ராஞ்சல்
19.    பைன் மரம் - ஊசியிலை மர வகையைச் சார்ந்தது.
20.    ஹம்பியின் பாழடைந்த சின்னங்கள் எக்கால சின்னங்களாக உள்ளன - விஜயநகரப் பேரரசு
21.    உலகிலேயே வேகமாகச் செல்லும் ஏவுகணைக் கப்பல் - INS பிரகார்
22.    உலக வானிலை தினம் - மார்ச் 23
23.    உலகின் முதல் போர்ட்டபிள் கம்ப்யூட்டரை உருவாக்கியவர் - ஆடம் ஒஸ்போர்ன்
24.    உலகின் முதல் விமானப்படை எங்கே உருவாக்கப்பட்டது - பிரிட்டனம்
25.    மலேசிய சுதந்திரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் - அப்துல் ரகுமான் துங்கு
26.    இந்தியாவின் முதல் குளிர்சாதன இரட்டை அடுக்கு சகாப்தி ரயில் எந்த மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளது - மும்பை - கோவா
27.    இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை உள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்
28.    கணிப்பொறி கண்டுபிடிப்புடன் தொடர்புடையவர் - சார்லஸ் பாபேஜ்
29.    தமிழகத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட ரயில் நிலையம் - ராயபுரம்
30.    தட்டச்சுப் பொறிடை கண்டுபிடித்தவர் - ஷோல்ஸ்
31.    ஏவுகணைகளில் எது கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையைச் சார்ந்தது - அக்னி-V
32.    இயற்கை இல்லாத பூச்சி - மூட்டைப்பூச்சி
33.    எழுத்தில் உச்சரிப்புக்கலைப் பற்றி சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் - ஐசக்பிட்மன்
34.    தேனிக்களால் பார்க்க இயலாத வண்ணம் - சிவப்பு
35.    போலியோ தடுப்பிற்கு மருந்தினைக் கண்டுபிடித்தவர் -ஆல்பர்ட்சிபின்
36.    ஒரு தேனியால் எத்தனை முறை கொட்ட முடியும் - 1 முறை
37.    வர்ஜீனியா ஸ்லிம்ஸ் தொடர்புடைய விளையாட்டு - டென்னிஸ்
38.    பூஞ்சைகள் பற்றிய தாவரவியல் பிரிவு - மைக்காலஜி
39.    சைக்ளோட்ரான் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் - லாரன்ஸ்
40.    நீரில் தோல் மூலம் சுவாசிக்கும் உயிரினம் - தவளை
41.    தென்னிந்தியாவில் பனாரஸ் என அழைக்கப்படுவது - ராமேஸ்வரம்
42.    ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட உயிரி  - மண்புழு
43.    ஆக்டோபஸ் எத்தனை இதயங்களைக் கொண்டுள்ளது -  நான்கு
44.    தொலைபேசியில் முதலில் "ஹலோ" என்ற வார்த்தையை உபயோகித்தவர் - அலெக்சாண்டர் கிரகாம் பெல்
45.    மரபணு சோதனைக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் பூச்சி - பழப்பூச்சி
46.    மத்திய பல்கலைக்கழகம் - பனராஸ் இந்து பல்கலைக்கழகம்
47.    இரத்தம் இல்லாமல் சுவாசிக்கும் உயிரி - ஹைட்ரா
48.    புற உண்ணிக்கு எடுத்துக்காட்டு - ஹிருடினேரியா
49.    "ஜெய்ஜவான், ஜெய்கிசான்" - லால்பகதூர் சாஸ்திரி
50.    ரவீந்திரநாத் தாகூரை அழைப்பது - குருதேவ்
                                                                                                               தொடரும்....

டிஎன்பிஎஸ்சி | குரூப்-IV தேர்வு | மாதிரி வினா-விடை : அறிவியல்

அறிவியல்

132. பொருத்துக

a) இராமன் விளைவு - 1. காந்தப்புலம்

b) ஜீமன் விளைவு - 2. ஒளி சிதறல்

c) ஸ்டார்க் விளைவு-3. ஒப்பீட்டு திசைவேகம்

d) டாப்ளர் விளைவு - 4. மின்புலம்

A B C D

a) 3 1 2 4

b) 4 3 2 1

c) 2 4 3 1

d) 2 1 4 3

133. ஹூக்ஸ் விதி எதனுடன் தொடர்புடையது

a.நெகிழ்ச்சி b.மின்சாரம்

c.பாகுநிலை d.மின்கடத்து திறன்

134. பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது?

1. காற்றில் வெப்ப நிலை அதிகரிக்க ஒலியின் வேகம் அதிகரிக்கும்

2. உயரே செல்ல செல்ல ஒலியின் வேகம் குறையும்

a. 1 மட்டும் b. 2 மட்டும்

c. இரண்டும் d. மேற்கண்ட எதுவும் இல்லை

135. பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது?

1. இயந்திர அலைகள் பரவ எந்த ஊடகமும் தேவை இல்லை.

2. மின் காந்த அலைகள் பரவ ஊடகம் தேவை

a.1 மட்டும் b.2 மட்டும்

c.இரண்டும் d.மேற்கண்ட எதுவும் இல்லை

136. திரிபு-ன் அலகு

a. நியூட்டன் b. மீட்டர்

c. அலகில்லை d. கெல்வின்

137. செவ்வாய் கிரகத்துக்கு இந்தியாவால் அனுப்பப்பட்ட விண்வெளிகலன்

a.கியூரீயாஸிட்டி b.மங்கள்யான்

c.ஜூனோ d.மேவன்

138. ஒரு பொருளின் தொடக்கத் திசைவேகம் 1 எனில் அப்பொருளின் இறுதி திசைவேகம்

a.u b.1 + at c.at d.0

139. இரண்டு மின்னூட்டங்களுக்கிடையேயான இடைவெளி கூடும் போது அவ்விரு மின்னூட்டங்களுக்கிடையே உருவாகும் விசை

a.அதிகரிக்கும் b.குறையும்

c.எந்த மாற்றமும் இருக்காது

d.மேற்கண்ட எதுவும் இல்லை

140. ப்ளீச்சிங் பவுடரின் வேதியியல் குறியீடு

a.CaO b.CaCl2 c.CaOCl2 d.Ca (OH)2

141. பின்வருவனவற்றுள் ஹேலைடு தாதுவுக்கான உதாரணம்

a.எப்சம் உப்பு b.ராக் சால்ட்

c.மோர் உப்பு d.பாக்சைட்

142. அம்மோனியா எதற்கான உதாரணம்

a.தனிமம் b.சேர்மம்

c.கலவை d.மேற்கண்ட எதுவும் இல்லை

143. பிரம்மோஸ் ஏவுகணை எவ்வளவு தொலைவு உள்ள இலக்கினை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது

a.1000 km b.300 km c.3000 km d.5000 km

144. சூப்பர் சோனிக் ஏவுகணையின் வேகம்

a. 0.8 mach b. 3 mach c. 5 mach d. 7 mach

145. 25 ஓம் (Ohm) கொண்ட இரு மின் தடைகள் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டிருந்தால் தொகுபயன் மின் தடை எவ்வளவு?

a.12.5 b.50 c.25 d.100

146. 25C கூலும் கொண்ட இரண்டு மின்சுமைகளின் தொகுபயன் மின்சுமை

a.50 C b.25 C c.10 C d.15 C

147. மின்புல அடர்த்தியின் அலகு

a.டெஸ்லா b.ஓம் c.kg/m3 d.m3

148. பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது?

1. யானைக்கால் ஒரு ஒட்டுண்ணி நோய்.

2. யானைக்கால் கொசுக்கள் மூலம் பரவும்.

a. 1 மட்டும் b. 2 மட்டும்

c. இரண்டும் d. எதுவும் இல்லை

149. 1 முதல் 4 வயதுடைய குழந்தைகளில் நுண்ணூட்டச்சத்து குறைபாடு குறைவாக உள்ள மாநிலம்

a.ஆந்திரா b.கேரளா c.பீகார் d.தமிழ்நாடு

150. பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது?

1. பூஞ்சையில் பச்சையம் இல்லை

2. பூஞ்சையின் உடல் மைசிலியம் எனப்படும்

a.1 மட்டும் b. 2 மட்டும்

c. இரண்டும் d. எதுவும் இல்லை

151. வெப்ப நிலையின் SI அலகு

a.கெல்வின் b.டிகிரி செல்சியஸ்

c.டிகிரி பாரன்ஹீட் d.எதுவுமில்லை

152. 1 A என்பது

a.10–12 b.10–10 c.10–8 d.10-6

153. திண்ம கோணத்தின் SI அலகு

a.ரேடியன் b.மீட்டர் c.ஸ்டிரேடியன் d.டிகிரி

154. மிகக்குறைந்த அளவுள்ள மின்னோட்டத்தையும் அளவிடப் பயன்படும் கருவி

a.அம்மீட்டர் b.வோல்ட் மீட்டர்

c.கால்வனா மீட்டர் d.எதுவுமில்லை

155. சேர்மத்துக்கு உதாரணம்

a.மெர்குரி b.சோடியம் குளோரைடு

c.ஹீலியம் d.வளிமண்டல காற்று

156. திரவ நிலையில் உள்ள தனிமம்

a.புரோமின் b.ஹைட்ரஜன்

c.ஹீலியம் d.நைட்ரஜன்

157. ஆவர்தன அட்டவனையில் உள்ள தனிமங்களின் எண்ணிக்கை

a.112 b.92 c.118 d.72

158. வெள்ளை துத்தம் என்பது

a.ZnSo4.7H2O b.CuSo4.5H2O

c.FeSo4. 7H2O d. H2So4

விடைகள்: 132.d 133.a 134.c 135.d 136.c

137.b 138.b 139.b 140.c 141.b 142.b

143.b 144.c 145.b 146.a 147.a 148.c

149.b 150.c 151.a 152.b 153.c 154.c

155.b 156.a 157.c 158.a

நடப்பு நிகழ்வுகள்

1. பிலிப்பைன்சின் 16-வது அதிபர்?

a) ரொட்ரிகோ டூடர்ட்டி b) பெனிக்னோ அகூய்னோ

c) ஜோசப் எஸ்ட்ராடா d) குளோரியா

2. பாராக் 8, நடுத்தர நில வான் ஏவுகணை எந்த நாட்டுடனான கூட்டு தொழில்நுட்பம்?

a) இஸ்ரேல் b) ரஷ்யா c) பிரான்ஸ் d) ஜப்பான்

3. உலக லாஜிஸ்டிக்ஸ் செயல்திறன் பட்டியலில் 2016 - ல் இந்தியாவின் நிலை

a) 12 b) 102 c) 42 d) 35

4. சமீபத்தில் மின் சிகரெட்டை செய்த அரசு?

a) பஞ்சாப் b) கேரளா c) மகாராஷ்டிரா d) மணிப்பூர்

5. சாகர் மாலா திட்டம் என்பது

a) கடல் துறைமுகங்கள் நவீனமயமாக்கல்

b) நீர்வழிகள் அபிவிருத்தி

c) பசுமை நெடுஞ்சாலைகள்

d) மெட்ரோ ரயில் இணைப்பு

6. ஜூனோ விண்கலம் யாரால் செலுத்தப்பட்டது?

a) அமெரிக்கா b) சீனா c) ரஷ்யா d) இந்தியா

7. சமீபத்தில் மனிதவள மேம்பாடு அமைச்சரானவர்?

a) பிரகாஷ் ஜவடேகர் b) ஸ்மிருதி இராணி

c) அனில் மாதவ் டேவ் d) ரவி சங்கர் பிரசாத்

8. “நமாமி கங்கா” கீழ், நாடு முழுவதும் தொடங்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை?

a) 120 b) 182 c) 231 d) 254

9. துரித உணவு மீது "கொழுப்பு வரி" விதித்தது?

a) கேரளா b) தமிழ்நாடு c) பீகார் d) கர்நாடகா

10. பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா (PMKVY) எதனுடன் தொடர்புடையது?

a) திறன் மேம்பாடு b) ஆரம்பக் கல்வி

c) பயிர் காப்பீடு d) சிறுபான்மையினர் நலன்

11. எந்த ஆண்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது?

a) 1947 b) 1949 c) 1955 d) 1958

12. கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மொத்த மின் உற்பத்தி திறன் எவ்வளவு?

a) 1000 மெகாவாட் b) 1500 மெகாவாட்

c) 2000 மெகாவாட் d) 3000 மெகாவாட்

13. கூடங்குளம் அணுமின் நிலைய மின்சாரம் எந்தெந்த மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது

a) தமிழ்நாடு b) கேரளா c) கர்நாடகா d) அனைத்தும்

14. 2016 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் சாம்பியன்

a) ஜோகோவிக் b) மீலொஸ் ராவ்னிக்

c) ரோஜர் பெடரர் d) ஆண்டி முர்ரே

15. 2016 விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் சாம்பியன்

a) வீனஸ் வில்லியம்ஸ் b) செரீனா வில்லியம்ஸ்

c) ஆங்கலிக் கேர்பர் d) திமியா பாபோஸ்

16. 2015-ல் ஞானபீட விருதினை பெற்றவர்?

a) கல்யாண் சிங் b) ராகுவீர் சௌதரி

c) பத்மநாப ஆச்சார்யா d) பல்சந்திர வானஜி

17. நேபாளின் முதல் பெண் தலைமை நீதிபதி?

a) சுசீலா கார்கீ b) அனுராதா கொய்ராலா

c) குந்தி மோக்தான் d) சக்தி பண்டாரி

18. 2016ல் உலக மக்கள் தொகை தினம்

எப்போது அனுசரிக்கப்பட்டது?

a) ஜூலை 11 b) ஜூலை 12

c) ஜூலை 13 d) ஜூலை 14

19. தேசிய விளையாட்டு தினம்?

a) ஆகஸ்ட் 27 b) ஆகஸ்ட் 28

c) ஆகஸ்ட் 29 d) ஆகஸ்ட் 30

20. எந்த நாட்டுடன் சமீபத்தில் முதல் நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டது?

a) நேபாளம் b) வங்காளம் c) மியான்மர் d) திபெத்

21. 12 இலக்க ஆதார் எண்ணை வழங்குபவர்

a) UIDAI b) உள்துறை அமைச்சகம்

c) பதிவாளர் ஜெனரல் மற்றும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர்

d) டிராய்

22. சமீபத்தில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதமரானவர்?

a) மார்கரெட் தாட்சர் b) தெரேசா மே

c) இரண்டாம் எலிசபெத் d) ஹிலாரி வில்லியம்ஸ்

23. மத்யஸ்தத்துக்கான நிரந்தர நீதிமன்றம்

(PCA) அமைந்துள்ள இடம்

a) ஹேக் b) மணிலா c) சீனா d) நியூயார்க்

24. எந்த நாட்டிலிருந்து நமது குடிமக்களை வெளியேற்றுவதற்காக சங்கத் மோட்சான் எனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது?

a) ஈரான் b) ஈராக் c) தெற்கு சூடான் d) சிரியா

25. உலக இளையோர் திறன் தினம்?

a) ஜூலை 13 b) ஜூலை 14

c) ஜூலை 15 d) ஜூலை 16

26. சமீபத்தில் மகிழ்ச்சி துறை என்னும் புதிய துறையை முதல் முதலாக தொடங்கிய அரசு?

a) மத்தியப் பிரதேசம் b) உத்தர பிரதேசம்

c) ஆந்திரப் பிரதேசம் d) பீகார்

27. முதல் முதலாக மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)

குறியீட்டினை அறிமுகப்படுத்திய நாடு?

a) நேபாள் b) பூட்டான்

c) இந்தோனேஷியா d) சிங்கப்பூர்

28. தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு (Courage & commitment) என்ற சுயசரிதை யாருடையது

a) மார்கரெட் ஆல்வா b) சானியா மிர்சா

c) நரேந்திர மோடி d) மன்மோகன் சிங்

29. அருணாச்சல பிரதேசத்தின் 10 வது முதல்வர்?

a) தாதகா ராய் b) பேமா கந்து

c) சவுனா மெயின் d) கலிகொ புல்

30. ஸ்வயம் பிரபா திட்டம் எதனுடன் தொடர்புடையது?

a) கல்வி b) தொலைக்காட்சி ஒளிபரப்பு

c) ஆரோக்கியம் d) சுகாதாரம்

31. யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் யார்?

a) பான் கீ மூன் b) எரினா போகாவா

c) மார்கரெட் d) தாமஸ் காஸ்

விடைகள்: 1.a 2.a 3.d 4.b 5.a 6.a 7.a 8.c 9.a 10.a 11.d 12.a 13.d 14.d 15.b 16.b 17.a 18.a 19.c 20.a 21.a 22.b 23.a 24.c 25.c 26.a 27.b 28.a 29.b 30.a 31.b

கணேச சுப்ரமணியன், கணேஷ் ஐஏஎஸ் அகாடமி

அண்ணா நகர், சென்னை. ganiasacademy@gmail.com போன்: 044-26191661

தீபாவளிக்காக 8 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: நாளை முன்பதிவு தொடங்குகிறது

வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவு நாளை (30-ம் தேதி) தொடங்கவுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை எழும்பூரில் இருந்து அடுத்த மாதம் 28-ம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82601) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். திருநெல்வேலியில் இருந்து அடுத்த மாதம் 30-ம் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82602) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து அடுத்த மாதம் 27-ம் தேதி இரவு 8.15 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82605) எழும்பூர் வழியாக மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இதேபோல், திருநெல்வேலியில் இருந்து அடுத்த மாதம் 28-ம் தேதி மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06006) மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

சென்னை சென்ட்ரல் இருந்து அடுத்த மாதம் 28-ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் அதி விரைவு சுவிதா சிறப்பு ரயில் (82621) மறுநாள் காலை 10.55 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இதேபோல், எர்ணாகுளத்தில் இருந்து அடுத்த மாதம் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சுவிதா சிறப்பு ரயில் (82622) மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

எர்ணாகுளத்தில் இருந்து அடுத்த மாதம் 27-ம் தேதி இரவு 8.15 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06016) மறுநாள் காலை 9.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். இதேபோல், வேளாங்கண்ணியில் இருந்து அடுத்த மாதம் 28-ம் தேதி மதியம் 2.20 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06015) மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வரும் 30-ம் தேதி (நாளை) தொடங்கவுள்ளது.

விடுமுறை தின சிறப்பு ரயில்

விடுமுறை தினத்தையொட்டி 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து அடுத்த மாதம் 21-ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06033) மறுநாள் காலை 10.55 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இதேபோல், எர்ணாகுளத்தில் இருந்து அடுத்த மாதம் 23-ம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06034) மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 29-ம் தேதி (இன்று) தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

2-வது கட்ட பட்டியல்?

தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘முதல்கட்டமாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சி, மதுரை போன்ற இடங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களின் பட்டியலை தயாரித்து வருகிறோம். 3 அல்லது 4 சிறப்பு ரயில்கள் இதில் இடம் பெறும். அடுத்த ஓரிரு வாரங்களில் இந்த அறிவிப்பு வெளியாகும்’’என்றார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!