Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 5 October 2016

மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய 3 கட்ட பதவி உயர்வு; 7வது சம்பள கமி‌ஷன் சிபாரிசுக்கு ஒப்புதல் !

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமி‌ஷன் சிபாரிசின் ஒரு சில அம்சங்களுக்கு மட்டும் மத்திய அரசு ஒப்புதல் அளித்து அமலுக்கு வந்துள்ளது. மற்ற அம்சங்களை அமல்படுத்துவது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.

           இந்த நிலையில் 7-வது சம்பள கமி‌ஷனில் அனைத்து ஊழியர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாய பதவி உயர்வு வழங்க வேண்டும், ஒரு ஊழியர் 30 ஆண்டு 
பணியாற்றி இருந்தால் அவருக்கு 3 பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.இதற்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறிப்பிட்ட காலம் தாண்டினால் அடுத்த கட்ட பதவி உயர்வுக்கான சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. இதனால் ஒரு ஊழியர் ஒரே பணியில் பல ஆண்டுகள் இருக்கும் நிலை இருந்தது.இப்போது 7-வது சம்பள கமி‌ஷன் சிபாரிசின்படி 10 ஆண்டுகள் ஆனாலே அவருக்கு அடுத்த கட்ட பதவி உயர்வு கிடைத்து விடும்.

இந்த சிபாரிசை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்பது பற்றி மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டது.
 இதை தொடர்ந்து இப்போது காலகட்ட பதவி உயர்வு வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

வேதியியல் நோபல் பரிசு: 3 பேருக்கு அறிவிப்பு !

2016ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.@sutitle@3 பேருக்கு நோபல் பரிசு :@@sutitle@@ வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜான் பெர்ரி, அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரேசர், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் ஃபிரிஞ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மூலக்கூறுகள் பற்றிய கண்டுபிடிப்பிற்காக இவர்கள் 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகம் பாரதி புத்தகாலயம் அதிரடி அறிவிப்பு..

அக்.2 முதல் நவம்பர் 14 வரை..

குழந்தைகளுக்கான புத்தகங்கள் 50% கழிவில் வழங்கப்படும்..

வாங்கி.. வாசியுங்கள்...

பகிர்ந்து பரப்புங்கள் நண்பர்களே... தோழர்களே...

தேவைக்கு அழையுங்கள்...
9498002424
044- 24332924, 24332424, 24356935

பிளஸ்2 விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறையை அடுத்த ஆண்டு முதல் கைவிட சிபிஎஸ்இ முடிவு !

சிபிஎஸ்இ அதிகாரிகள் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த 2014ம் ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் 10 பாடங்களில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு வந்தது.  இதற்கு 1.8 சதவீத மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கின்றனர். ஆனால் இதில் பயனடைவர்கள் மிகவும் குறைவு.

இதனால் விடைத்தாள் மறுமதிப்பீடு முறையை கைவிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. உண்மையான சில பேரின் குறைகளை தீர்க்க சில நடைமுறைகள் மட்டும் அமலில் இருக்கும்’’ என்றார்.

 இதுகுறித்து சிபிஎஸ்இ தலைவர் ஆர்.கே.சதுர்வேதி கூறியதாவது:  ஆசிரியர் தகுதி தேர்வை(சிடிஇடி) ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளோம். பள்ளி சான்றிதழ்களை ஆன்லைன் மூலமே சரிபார்க்கும் வகையில் டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. மாணவர்கள் விரைவில் டிஜிட்டல் சான்றிதழ்களை பெறுவர். பல பள்ளிகளின் ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றனர். அது சம்பந்தமான தகவல்களை அவர்களின் பள்ளி வெப்சைட்களில் வெளியிட கேட்டுக் கொண்டுள்ளோம். மாணவர்களுக்கு பாடங்கள் சம்பந்தமான ஆடியோ-வீடியோ தகவல்கள் ஆன்லைன் மூலமே கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்

SSA-- உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 1 நாட்கள் தமிழ் இலக்கணம் கற்பித்தல் BRC அளவில் பயிற்சி - - இயக்குனர் செயல்முறைகள்

CLICK HERE-ONE DAY TAMIL GRAMMAR TRAINING TO UPPER PRIMARY TEACHERS

வேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படி அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்.

புதுச்சேரி
வேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படியும், மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி பட்டியல்படியும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், ஷாஜஹான், தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா, பல்வேறு துறை செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள் குறித்து முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தொடர்ந்து வலியுருத்தும்.  மழைக்காலத்திற்கு முன்பாக  வெள்ளத்தடுப்பு குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் குடிநீர் மற்றும் புதை சாக்கடை திட்டத்திற்காக பிரான்ஸ் நாட்டு நிதியுதவியுடன் மத்திய அரசு ரூ.2400 கோடி வழங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.

இதில் ரூ.1400 கோடியை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 20 ஆண்டுகளுக்கு கடனாக பெறுவது என்றும் மத்திய உள்துறை மூலம் பெறப்படும் மீதமுள்ள ரூ.900 கோடியை மாணியமாக பெற மத்திய அரசை வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு செய்வதில் மத்திய அரசு ஆசிரியர்ர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தரவரிசை பட்டியல்படியும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையிலும் தான் இனிமேல் தேர்வு செய்யப்படும் என்ற கொள்கை முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகைக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய போனஸ் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம்  அமைக்க வேண்டி உச்சநீதி மன்றத்தில் புதுச்சேரி அரசு தொடர்ந்து வலியுருத்தும் என்றார் நாராயணசாமி.

மறுபடியும் முதல்ல இருந்தா... அதிகாரிகள் 'டென்ஷன்' !

உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதையடுத்து, 'மறுபடியும் முதலில் இருந்து தேர்தல் பணியா' என, தேர்தல் அதிகாரிகள் புலம்ப துவங்கியுள்ளனர்.உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளில், ஒரு மாதத்திற்கு மேலாக, அரசு இயந்திரம் ஈடுபட்டு வந்தது. இதில், செப்., 25ல் தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் நடத்தை விதிமுறைகள்

பின்பற்றப்பட்டு வந்தன.

டிச., 31க்குள் : தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை வரை, முடிந்துவிட்டது. இதற்காக, 10 நாட்களாக, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு, கடுமையான பணிச்சுமை இருந்தது. தேர்தல் பணிகளுக்காக, செலவும் அதிகமாக செய்யப்பட்டுள்ளது.

வேட்புமனு பரிசீலனை முடிந்தாலே, பாதி தேர்தல் பணிகள் நிறைவு பெற்றது போல் அதிகாரிகள் கருதினர். ஆனால், நேற்று மாலை உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, சென்னை ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டது. மேலும், முறையான அறிவிப்பு வெளியிட்டு, மீண்டும், டிச., 31க்குள் தேர்தல் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் செலவு செய்துள்ள வேட்பாளர்கள் மட்டுமின்றி, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். தேர்தல் பணி அதிகாரிகள், 'மீண்டும் நாங்கள் முதல்ல இருந்து வேலை செய்யணுமா' என, புலம்பி தவிக்கின்றனர்.

இது குறித்து தேர்தல் பணி அதிகாரி ஒருவர் கூறியதாவது: வருவாய் துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும், ஒரு மாதத்திற்கு மேலாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அனைத்து பகுதி களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இரவு, பகலாக பணியாற்றி வந்தனர்.

அனைத்தும் வீண் தான் : மறுதேர்தல் அறிவிப்பால், மீண்டும் புதிய நடைமுறைகளை ஆரம்பத்தில் இருந்து, பின்பற்ற வேண்டியிருக்கும். தற்போது வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதா, இல்லையா என, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமோ, மாவட்ட தேர்தல் அதிகாரிகளோ, எந்த தொடர் உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

ஒருவேளை மேல்முறையீடு : எதுவும் செய்து, கோர்ட் உத்தரவு ரத்தானால் மட்டுமே, தற்போதைய நடைமுறை தொடரும்; இல்லாதபட்சத்தில் இதுவரை செய்த தேர்தல் பணிகள் அனைத்து வீண் தான்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

பிஎச்.டி., படிப்பு : அக்., 24 வரை அவகாசம் !

இந்திய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, சென்னை, ஐ.ஐ.டி.,யில், பிஎச்.டி., படிக்க, அக்., 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கலை, அறிவியல் படிப்பில், முதுநிலை முடித்தால் மட்டுமே, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிக்க முடியும். இன்ஜி., 
படிப்பில், இளநிலை படிப்பான, பி.இ., - பி.டெக்., முடித்தால், சென்னை, ஐ.ஐ.டி.,யில் நேரடியாக, எம்.எஸ்., மற்றும் பிஎச்.டி., ஒருங்கிணைந்த படிப்பில் சேரலாம்.இந்த படிப்பிற்கு, ஜனவரியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் சேர விரும்புவோர், அக்., 24க்குள் விண்ணப்பிக்கலாம் என, சென்னை, ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.

ரயிலில் அவசர இட ஒதுக்கீடு : புதிய 'பேக்ஸ்' எண் அறிவிப்பு !

பாதுகாப்பு துறையைச் சேர்ந்தவர்கள், ரயிலில், அவசர இட ஒதுக்கீடு பெற, புதிய, 'பேக்ஸ்' எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு துறையில் பணியாற்றுவோர், ரயிலில், அவசர இட ஒதுக்கீட்டில் பயணம் செய்யும் திட்டத்தை, வலுப்படுத்துவது குறித்த 
ஆலோசனை கூட்டம், தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது. தெற்கு ரயில்வே தலைமை வர்த்த பிரிவு மேலாளர், அஜீத் சக்சேனா உட்பட, பலர் பங்கேற்றனர்.

கூட்ட முடிவில், பாதுகாப்பு துறையினர், ரயிலில், அவசர இட ஒதுக்கீட்டு வசதியை விரைவாக பெற, 'பேக்ஸ்' எண் வழியே, கோரிக்கை அனுப்பும் சேவை துவக்க முடிவு செய்யப்பட்டது.

'பாதுகாப்பு துறையினர், 044 - 2535 3148 என்ற, 'பேக்ஸ்' எண்ணுக்கு, காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, தகவல்களை அனுப்பலாம்' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலன் விருது அக்., 28க்குள் விண்ணப்பிக்கலாம் !!

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, சிறப்பான பணிபுரிந்தோருக்கான, தமிழக அரசின் விருதுக்கு, வரும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, பணியாற்றிய தனிநபர், ஆசிரியர், சமூக பணியாளர், தொண்டு நிறுவனம், வேலைவாய்ப்பு அளித்த நிறுவனம் உட்பட, 15 பேருக்கு, 
மாற்றுத்திறனாளிகள் தினமான, டிச., 3ல், விருதுகளை வழங்க உள்ளது; விருதில், 10 கிராம் தங்க பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த விருதுகளுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பரிந்துரையுடன், மாற்றுத்திறனாளிகள் மாநில கமிஷனருக்கு, அக்., 28க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, www.scd.tn.gov.in இணைய தளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்; சென்னை, கே.கே.நகரில் உள்ள, மாநில மாற்றுத்திறனாளிகள் நல கமிஷனர் அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

அக்டோபர் - 5 உலக ஆசிரியர்கள் தினம் (World Teacher’s Day)!!!

ஒரு சிறந்த சமூகத்தை திறமையான ஆசிரியரால் உருவாக்க முடியும். உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்காக சர்வதேச ஆசிரியர் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க யுனெஸ்கோ 1994ஆம் ஆண்டில் அக்டோபர் 5 ஐ உலக ஆசிரியர் தினமாக அறிவித்தது. ஒரு நல்ல சமூகத்தை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

TNTET:ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: காலி இடங்கள் பட்டியலை இன்று தாக்கல் செய்ய உத்தரவு.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை புதன்கிழமை (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வாகாத விண்ணப்பதாரர்களில் ஒரு பிரிவினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிவ கீர்த்திசிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி, நளினி சிதம்பரம், அஜ்மல் கான் ஆகியோர் ஆஜராகி, "தமிழகத்தில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் 2013-இல் நடந்தது. அதன் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் வழங்கப்படுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட இரு அரசாணைகள் நியமன விதிகளுக்கு எதிரானது' என்று வாதிட்டனர்.ஆனால், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவ், "அனைத்து சட்ட நடைமுறைகளின்படியே தமிழக அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன' என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் கூறியது: தமிழக அரசு வெளியிட்ட இரு அரசாணைகளால் மனுதாரர்களுக்கு ஆசிரியர் பணியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என பலர் முறையிட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே, தற்போதைய சூழலில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை தமிழக அரசும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மனுதாரர்கள் தரப்பும் நீதிமன்றத்தில் புதன்கிழமை (அக்டோபர் 5) தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து புதன்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பின்னணி:

 தமிழக அரசு சார்பில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) நடத்தப்பட்டது. இதில் குறைந்த நபர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, இடஒதுக்கீடு முறையின்படி தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் சலுகை அளிக்க ஓர் அரசாணையையும், பிளஸ்-2, பட்டப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மற்றொரு அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து, ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெறாமல் பாதிக்கப்பட்டதாகக் கூறி சுமார் 600 பேர் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளைத் தொடுத்தனர். இதில் இரு நீதிமன்றங்களும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கின. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

7வது ஊதியக்குழு : ஆசிரியர் சங்கம் மனு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, ஏழாவது ஊதிய குழு அமைக்க வேண்டும்' என, அரசு பள்ளிதலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர், சாமி சத்தியமூர்த்தி, முதல்வர் தனிப்பிரிவுக்கு அளித்துள்ள மனு:
தற்போதுள்ள ஊதிய முரண்பாடுகளை களைந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அதற்காக, ஏழாவது ஊதியக் குழு அமைக்க வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும், பழைய பொது ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஆராய கல்வியாளர் மற்றும்ஆசிரியர்களை கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டாக புதுப்பிக்கப்படாத வினா வங்கி: 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மூன்று ஆண்டுகளாக, வினா வங்கி புதுப்பிக்கப்படவில்லை. இந்த ஆண்டாவது, கூடுதல் வினாக்கள் இடம்பெறுமா என, மாணவர்கள்எதிர்பார்த்து உள்ளனர்.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள், மேல்படிப்பு, உயர் கல்விக்கு முக்கியம் என்பதால், அதிக மதிப்பெண் எடுப்பது, மாணவர்களின் லட்சியமாக உள்ளது.இதற்காக, பெற்றோர் தரப்பில் பல பயிற்சிகள் தரப்படுகின்றன. மாணவர் நலன் கருதி, அரசு தேர்வுத்துறை,வினா வங்கி தயாரிக்கிறது. இது, தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படுவதோடு, பெற்றோர், ஆசிரியர் கழகத்திற்கு வழங்கப்பட்டு, புத்தகமாக விற்கப்படுகிறது.மூன்று ஆண்டுகளின் பொதுத் தேர்வு வினாத்தாள்கள், வினா வங்கியில் சேர்க்கப்படவில்லை. பெற்றோர், ஆசிரியர் கழக புத்தகம் மற்றும் தேர்வுத்துறை இணையதளத்திலும், 2013 வரையே, வினாத்தாள்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது: முந்தைய ஆண்டு, வினா தாள்களில் உள்ள முக்கிய வினாக்கள், அடுத்தடுத்த ஆண்டுகளின் பொதுத்தேர்வில் இடம் பெறும். வினா வங்கியில் உள்ள வினாக்களை, மாணவர்கள் படிப்பது வழக்கம்.மூன்று ஆண்டுகளாக, வினா வங்கி புதுப்பிக்கப்படாததால், அரசு பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்கள், தேர்வில் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது.தனியார் பள்ளிகள், தாங்களாகவே, முந்தைய ஆண்டு வினாத்தாள்களை தயாரித்து வைத்துக் கொள்வதால், அங்கு படிக்கும் மாணவர்களுக்கு, இந்த பிரச்னை இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'இன்ஸ்பையர்' விருது பெறுவதில் தமிழக அரசு பள்ளிகள் முன்னிலை

இன்ஸ்பையர்' விருதுக்கு, தமிழக கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர், பி.அய்யம் பெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை நிதி உதவியுடன், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மூலம், 'இன்ஸ்பையர்' விருதுக்கான, புத்தாக்க அறிவியல் ஆய்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை, 73 ஆயிரத்து,856 பேருக்கு, அறிவியல் ஆய்வு விருதும், தலா, 5,000 ரூபாய் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.இந்த கல்வி ஆண்டில், போட்டிக்கு, மாணவர்களின் பெயர்களை, செப்., 30க்குள் பதிவு செய்ய, பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. பதிவு செய்யும் முறையும், அச்சடித்து வழங்கப்பட்டது.

இன்ஸ்பையர் விருதுப் படி, ஒரு ஐந்தாண்டு திட்டத்தில், ஒரு பள்ளிக்கு இரண்டு விருதுகள் மட்டுமே வழங்கப்படும். ஒரு ஐந்தாண்டு திட்டத்தில், இரண்டு விருது கள் பெற்ற பள்ளிகள், அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் தான், விண்ணப்பிக்க முடியும். தேசிய அளவிலான அறிவியல் விருது போட்டிக்கு, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள், அதிக அளவில் தேர்வாகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இன்று முதல் 374 இடங்களில் மீண்டும் 'ஆதார்' பணி

தமிழகத்தில், இன்று முதல், 374 மையங்களில், 'ஆதார் அட்டை' வழங்கும் பணிகள் மீண்டும் துவங்குகின்றன. தமிழகத்தில், செப்., 30 வரை, ஆதார் அட்டை வழங்கும் பணியை, மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. அக்., 1 முதல், அப்பொறுப்பு, தமிழக அரசின், தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள, 
அரசு கேபிள், 'டிவி' மற்றும் மின்னணு கழகமான, 'எல்காட்' வசம் வந்துள்ளது. சில தொழில்நுட்ப மாற்றங்களை செய்ததால், சில நாட்களாக, ஆதார் பணிகள் பாதிக்கப்பட்டன. இன்று முதல், 374 மையங்களிலும், பணிகள் முழுவீச்சில் துவங்குகின்றன.

இது குறித்து, அரசு கேபிள், 'டிவி' அதிகாரிகள் கூறியதாவது: தொழில்நுட்ப பிரச்னை கள் சரி செய்யப்பட்டு, நேற்று மதியம் முதல், பல மையங்களில், ஆதார் அட்டைக்கு புகைப்படம் மற்றும் கைரேகை பதியும் பணிகள் துவங்கின. இன்று முதல், தலைமை செயலகம், ரிப்பன் மாளிகை, எழிலகம், கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், தாலுகாஅலுவலகங்கள் உட்பட, சென்னையில், 63 இடங்களில், இப்பணிகள் நடைபெறும்.மாநிலம் முழுவதும், 275 தாலுகா அலுவலகங்கள், 32 மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் உட்பட, மொத்தம், 374 இடங்களில், மக்கள், ஆதார் அட்டைக்கு மனு செய்யலாம். அடுத்த வாரத்தில் இருந்து, தமிழகத்தில் உள்ள, இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் என, 600 மையங்களும், முழுவீச்சில் செயல்படும்; மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்தெரிவித்தனர்.

இனி மூன்று படிவம்

● ஆதார் அட்டை வழங்க இனி, மூன்று படிவங்கள் தரப்படும்; அவை தமிழில் இருக்கும்
● ரேஷன் கார்டு உள்ளிட்ட, ஏதேனும் ஒரு இருப்பிட சான்று; தனி நபர் சான்றுக்காக, வங்கி புத்தகம், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, அஞ்சலகம் வழங்கும் முகவரி சான்றில், ஏதேனும் ஒன்றை எடுத்து செல்ல வேண்டும்
● தனி நபர் சான்று ஆவணங்கள் இல்லாதோர், கிராம நிர்வாகஅலுவலரிடம், இருப்பிடச் சான்று பெற்று வரலாம்; இதுவரை இருந்த, 'டோக்கன்' முறை இனி இருக்காது.

வங்கிகள் தொடர்ந்து 5 நாள் விடுமுறை

வங்கிகளுக்கு வரும் அக்டோபர் 8-ஆம் தேதி (சனிக்கிழமை)முதல் வரும் 12-ஆம் தேதி வரை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் 8 (இரண்டாவது சனிக்கிழமை), அக்டோபர் 9 (ஞாயிற்றுக்கிழமை), அக்டோபர் 10 (திங்கள்கிழமை-ஆயுதபூஜை), அக்டோபர் 11 (செவ்வாய்க்கிழமை-விஜயதசமி),அக்டோபர் 12 (புதன்கிழமை-மொஹரம்) ஆகியவை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து 5 நாள் விடுமுறை வருவதால் பண பரிவர்த்தனையைவாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளலாம் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆன்லைன்' புத்தக விற்பனையில் குளறுபடி

தமிழ்நாடு பாடநுால் கழகத்தில், 'ஆன்லைன்' புத்தக விற்பனையில் தொடர்ந்து குளறுபடி நிலவுவதால், புத்தகத்திற்கு பதிவு செய்த மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.தமிழ்நாடு பாடநுால் மற்றும் சேவை பணிகள் கழகம், சமச்சீர் கல்வி புத்தகங்களை அச்சிட்டு வழங்குகிறது.
இவை, அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கட்டணத்திற்கும் வழங்கப்படுகின்றன.இதில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்களை நேரடியாக விற்க, ஆன்லைன் பதிவு துவங்கப்பட்டு உள்ளது. ஆன்லைனில் புத்தகங்களை ஆர்டர் செய்வதற்கு, இணையதள வங்கி கணக்கு அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதும், புத்தகம் பதிவு செய்வோரின் இ - மெயில் முகவரிக்கு ரசீது வந்துவிடும்; இரண்டு நாட்களில், உரியமுகவரிக்கு புத்தகம் வந்து சேரும்.முதலில் சுறுசுறுப்பாக செயல்பட்ட இத்திட்டத்தில் தற்போது, சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பதிவு செய்தால், புத்தகங்கள் கிடைக்க ஒரு வாரம் வரை ஆகிறது. இது, மாணவர்கள் மத்தியில்அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. புத்தகம் பதிவு செய்தோர், தங்களுக்கு வர வேண்டிய புத்தகத்தின் நிலையை அறிய, பாடநுால் கழகத்தில் விசாரிக்க, விற்பனை பிரிவு உதவி இயக்குனர், 044 - 2821 5351; புத்தக பதிவு ரசீதில் உள்ள, 044 - 2827 5851 உள்ளிட்ட பல எண்கள் தரப்பட்டுள்ளன.இந்த எண்களை தொடர்பு கொண்டாலும், யாரும் பதில் தராததால் மாணவர்கள்தவிக்கின்றனர்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!