Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 7 October 2016

அகஇ - நவம்பர் மாதம் --- தொடக்க மற்றும் உயர்தொடக்க வகுப்பு CRC


தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் விடுமுறையில் பணியிடை பயிற்சி நட்த்துவதை கண்டித்து பத்திரிக்கைக்கு அனுப்பபட்ட செய்தி

7th pay: அரசு ஊழியர்களுக்கு கட்டாய 3 கட்ட பதவி உயர்வு;7வது சம்பள கமி‌ஷன் சிபாரிசுக்கு ஒப்புதல்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமி‌ஷன் சிபாரிசின் ஒரு சில
அம்சங்களுக்கு மட்டும் மத்தியஅரசு ஒப்புதல் அளித்து அமலுக்கு வந்துள்ளது.  மற்ற அம்சங்களை அமல்படுத்துவது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து
வருகின்றன.

இந்த நிலையில் 7-வது சம்பள கமி‌ஷனில் அனைத்து ஊழியர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாய பதவி உயர்வு வழங்க வேண்டும், ஒரு ஊழியர் 30ஆண்டு பணியாற்றி இருந்தால் அவருக்கு 3 பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதற்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறிப்பிட்ட காலம் தாண்டினால் அடுத்த கட்ட பதவி உயர்வுக்கான சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. இதனால் ஒரு ஊழியர் ஒரே பணியில் பல ஆண்டுகள் இருக்கும் நிலை இருந்தது.

இப்போது 7-வது சம்பள கமி‌ஷன் சிபாரிசின்படி 10 ஆண்டுகள் ஆனாலே அவருக்கு அடுத்த கட்ட பதவி உயர்வு கிடைத்து விடும். இந்த சிபாரிசை ஏற்றுக் கொள்வதா?இல்லையா? என்பது பற்றி மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டது. இதை தொடர்ந்து இப்போது காலகட்ட பதவி உயர்வு வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. ஹர்ஷ சரிதம் இயற்றிய ஆசிரியர் - பாணர்
2. குப்தர்கள் காலத்தில் இந்தியா வந்த சீன யாத்திரிகள் - பாகியான்
3. ஹர்ஷர் காலத்தில் வருகை புரிந்த சீன யாத்தீரிகர் - யுவான்சுவாங்
4. சமுத்திரகுப்தரை அறிய உதவும் கல்வெட்டு - அலகபாத் கல்தூண் கல்வெட்டு

5. பாராந்தகச் சோழரை அறிய  உதவும் கல்வெட்டு - உத்திரமேரூர் கல்வெட்டு
6. ரோமானியர் வழங்கிய மாபெரும் நன்கொடை - குடியரசு தத்துவம்
7. தட்சசீலம் எதற்கு எடுத்துக்காட்டு - காந்தரக் கலை
8. மராட்டிய பேரரசின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் - நிர்வாக குறைபாடு
9. பாபரின் படையெடுப்புகளை கால வரிசைப்படி குறிப்பிடுக - முதல் பானிபட் போர், கான்வா போர், சந்தேரிப் போர், கோக்ரா போர்
10. கந்தர்வ வேதத்தை இயற்றியவர் - பரத முனிவர்
11. சாணக்கியர் எழுதிய நூல் - அர்த்த சாஸ்திரம்
12. மவுரியர்களின் ஆட்சியை அறியத் தரும் நூல் - அர்த்த சாஸ்திரம்
13. காஷ்மீர் வரலாற்றை அறிய உதவும் நூல் - ராஜதரங்கினி
14. ராஜதரங்கிணியை இயற்றிய ஆசிரியர் - கல்ஹாணர்
15. சந்திர குப்த மவுரியர் காலத்தில் இந்தியா வந்த அயல்நாட்டு யாத்திரிகர் - மெகஸ்தனிஸ்
16. கிமு.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய அரசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன - மகாஜனபதங்கள்
17. ரோமபுரிக்கும் தமிழகத்திற்கும் வாணிகத் தொடர்பு இருந்தமையை உணர்த்தும் நாணயம் - அரிக்மேட்டில் கிடைத்த நாணயம்
18. ஆரியர்களின் பூர்வீகம் - மத்திய ஆசியா
19. இந்தியா மீது படையெடுத்து வந்த கிரேக்க வீரன் - மாவீரன் அலெக்சாண்டர்
20. அலெக்சாண்டரை எதிர்த்த இந்திய மன்னன் - புருஷோத்தமன்
21. விந்தியமலைக்குத் தெற்கில் அமைந்துள்ள பகுதி - சாத்பூரா மலைகள்
22. வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவை பிரிக்கும் மலை - விந்தியமலை
23. தக்காண பீடபூமிக்குத் தெற்கில் உள்ள பகுதி - தமிழகம்
24. அரேபியர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் - யவனர்
25. இந்தியாவில் பூர்வீகமானவர்கள் - திராவிடர்
26. சிந்து சமவெளி நாகரீகத்தை அறிய உதவும் அகழ்வாராய்ச்சி - மொகஞ்சாதாரோ - ஹரப்பா ஆராய்ச்சி
27. தென்னக வரலாற்றை அறிய உகவும் அகழ்வாராய்ச்சி - அரிக்கமேடு ஆராய்ச்சி
28. கைபர்- போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த வெளிநாட்டவர் - ஆரியர்கள்
29. இந்தியாவில் வடமேற்கு பகுதியில் உள்ள கணவாய் - கைபர் - போலன் கணவாய்
30. இந்தியா ஒரு - தீபகற்பம்
31. மூவேந்தர்களுடன் தமிழகத்தை ஆண்ட மற்றொரு வேந்தன் - பல்லவர்கள்
32. இந்தியாவின் இயற்கை அரண் - இமயமலை
33. புத்தர் எங்கு மறைந்தார் - குசி நகரம்
34. அமிர்தசரஸ் நகரை நிறுவியவர் - குரு ராம்தாஸ்
35. ராஷ்டிரகூடர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டு - சிவபெருமானின் நடன உருவம்
36. ராஷ்டிரகூடர் தலைநகர் மான்யகேதாவில் கட்டிய ஆலயம் - உலகேஸ்வரன், தசாவதாரக் கோவில்கள்
37. ராஷ்டிரகூட இளவரசியை மணந்த சோழ அரசன் - ஆதித்தியன்
38. ராஷ்டிரகூடர்களின் கடைசி அரசர் - இரண்டாம் கரகர்
39.ராஷ்டிரகூடர்களின் ஆட்சி எந்த ஆண்டு முடிவுற்றது - 973-ல்
40. ராஷ்டிரகூட  வேந்தன் இரண்டாம் கரகரைத் தோற்கடித்த சாளுக்கிய வேந்தர் - இரண்டாம் தைலா
41. ராஷ்டிரகூடர்களின் தலைநகர் - மான்யகேதம்
42. ராஷ்டிரகூடர்களின் முதல் அரசன் - தந்திதுர்க்கன்
43. தந்திதுர்க்கனின் மாமன் - முதலாம் கிருஷ்ணன்.
44. தந்திதுர்க்கன் தோற்கடித்த சாளுக்கிய அரசன் - கீர்த்திவர்மன்
45. தந்திதுர்க்கன் முதலில் எத்தகைய பணியாற்றினார் - வேலைக்காரர்
46. தந்திதுர்க்கனுக்குப்பின் அரச பொறுப்பை ஏற்றவர் - மாமன்
47. முதலாம் கிருஷ்ணன் கட்டிடக்கலைக்கு நல்ல சான்று - எல்லோரா - கைலாசநாதர் கோவில்
48. முதலாம் கிருஷ்ணன் தோற்கடித்த மன்னன் - இரண்டாம் கீர்த்திவர்மன்
49. முதலாம் கிருஷ்ணன் காலம் - 757 - 775
50. இரண்டாம் கோவிந்தன் திறமையற்றவராக விளங்கியதால் ஆட்சியைக் கைப்பற்றியவர் - சகோதரர் - துருவன்

CPS:ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிக்கை: ஆணையரக அதிகாரிகள் ஆலோசனை

கடந்த 2003 ஏப்ரல் முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில்,
அரசு ஊழி யர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்து வதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய, முதல்வர் அலு வலக சிறப்பு பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் தலைமை யில் நிபுணர் குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்தார். இக்குழுவினர் அரசு பணியாளர் சங்கங்களை அழைத்து கருத்துகளை கேட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்பு, தங்கள் கருத்துகளையும் கேட்க வேண்டும் என ஓய்வூதிய ஆணையரகம் தெரிவித்திருந்தது. இதன்படி, நிபுணர் குழுவினரை ஓய்வூதிய ஆணையரக அதிகாரிகள்நேற்று சந்தித்தனர்.ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிக்கையை நிபுணர் குழுவினர் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தசரா: உயர்நீதிமன்றத்துக்கு ஒன்பது நாட்கள் விடுமுறை!!!

தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்துக்கு வரும் அக்டோபர் 8ஆம் தேதி முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் என்.சதீஷ்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வரும் அக்டோபர் 8ஆம் தேதி முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களில் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க விடுமுறை கால நீதிபதிகளை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி அக்டோபர் 14ஆம் தேதி ஒருநாள் செயல்படும் விடுமுறை கால நீதிமன்றத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ராஜேந்திரன், என்.ஆதிநாதன் ஆகியோரும், மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.விமலா, கே.கல்யாணசுந்தரம் ஆகியோரும் வழக்குகளை விசாரிப்பர். இதற்காக அக்டோபர் 13ஆம் தேதி பதிவுத்துறை முழுமையாக செயல்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் !


புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை முதல்வர் வி.நாராயணசாமி அறிவித்துள்ளார்.

கடந்த 4-ம் தேதி முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் தீபாவளி போனஸ் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அதாவது பிரிவு சி மற்றும் டி மறறும் பிரிவு பி யைச் சேர்ந்த அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு போனஸாக அவர்களுக்கு ரூ.6908 வழங்கப்படும்.

மேலும் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.1184 போனஸ் வழங்கப்படும். ஓராண்டு பணிநிறைவு செய்த மற்றும் 3 ஆண்டுகளுக்குள் பணி செய்த தற்காலிக பகுதி நேர மற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.1000 தரப்படும்.

மேலும் உற்பத்தி சார்ந்த போனஸாக அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.11 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஒரே அளவு சீருடை - புலம்பும் பெற்றோர்

ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, ஒரே அளவு இலவச சீருடை வழங்கப்பட்டுள்ளதால்,பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில், அனைத்து பள்ளிகளும் காலாண்டு தேர்வுக்கு விடுமுறைக்கு பின் கடந்த, 3ம் தேதி துவங்கின.

 அப்போது மாணவ,மாணவியருக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது. 

மேலும், அவர்களுக்கு இலவச சீருடையும் வழங்கப்பட்டன. வழக்கமாக, ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு ஒரு அளவிலும், மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு ஒரு அளவிலும், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு அளவிலும், 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு ஒரே அளவிலான சுடிதார் மற்றும் பேன்ட் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. 

இந்த ஆண்டுக்கான இரண்டு செட் சீருடைகள், முதல் பருவத்திலேயே வழங்கப்பட்டன. இரண்டாம் பருவம் துவங்கிய நிலையில், மூன்றாவது செட் சீருடை வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள சீருடைகள் அனைத்தும்,ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான அளவில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து மாணவ, மாணவியரின் பெற்றோர் கூறியதாவது: இவற்றை மாணவர்களால் அணிய முடியாது. அனைத்து சீருடையும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் அளவிலேயே உள்ளது. இதே போல தான் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் காலணிகளும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 

பல்வேறு அளவுகளில் இவற்றை தயார் செய்து வினியோகம் செய்ய வேண்டும் அல்லது மாவட்டம் தோறும் சீருடை தைப்பதற்கான மையங்களை ஏற்படுத்தி மாணவ, மாணவியரின் அளவுக்கு ஏற்ப சீருடைகளை தைத்து வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாடக்குறிப்பு பதிவேடு பராமரிக்க அரசாணை இல்லை..அனைவருக்கும் கல்வி இயக்கம் விளக்கம்.

அக்டோபர் முதல் வெள்ளி உலகப் புன்னகை தினம் (World Smile Day)

அக்டோபர் முதல் வெள்ளி

உலகப் புன்னகை தினம்

(World Smile Day)

புன்னகை என்பது மனிதனோடு கூடப்பிறந்த ஒரு உணர்வின் வெளிப்பாடு. ஆரோக்கியமான மனிதனிடமிருந்து வெளிப்படும். இது மனிதனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. ஹார்வே பால் (Harvey Ball) என்பவர் 1963இல் புன்னகை முகம் என்பதை அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து உலகப் புன்னகை தினம் 1999ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. பின்னர் இது ஆண்டுதோறும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 08.10.2016 அன்று வேலை நாளாக அறிவித்த உத்தரவு ரத்து

தருமபுரி அரசுப்பள்ளியில் பெற்றோருக்கு குரல் குறுஞ்செய்தி அனுப்பும் புதிய திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் முதல்முறையாக இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் பெற்றோரின்  கைப்பேசிக்க  குரல் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி  முதன்முறையாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி யில் பெற்றோர்களின் கைப்பேசிக்கு குரல் எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பும் வசதியை தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கூறியதாவது,தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதன் முறையாக  இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வசதி மூலம் மாணவ, மாண வி க ளின் நட வ டிக் கை கள், பள்ளி விடு முறை நாட் கள், மாணவர்கள் வருகை, பெற்றோர் ஆசிரியர் கூட் டங்கள் ஆகியன குறித்து பெற்றோர்களுக்கு பதிவு செய்யப் பட்ட குரல் மூலம் தக வல் அனுப் பப் ப டும்.

இதன் மூலம் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்படுகிறது. இந்த நடை முறை படிப்படியாக மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன், நேர்முக உத வியாளர் கோவிந்தசாமி, இலக்கியம்பட்டிஅரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசியர் பொன்முடி  ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள் ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

வரும் சனிக்கிழமை (08.10.2016) விழுப்புரம் மாவட்டத்திற்கு வேலைநாட்கள் என அறிவிக்கப்பட்டது இரத்து செய்ய செய்து உத்தரவு !!!( 08.10.2016 அன்று விடுமுறை )

Madurai Kamaraj University. Notification & Application for 50th Annual Convocation–2016

CLICK HERE - TO DOWNLOAD..

அகஇ - உயர் தொடக்கநிலை தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு வளர்த்தல் பயிற்சி மாவட்ட அளவில் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்..

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. மவுரியப் பேரரசின் முக்கிய வரி - நிலவரி
2. மவுரியர் கால கல் தூண் - சாரநாத் கல்தூண்
3. மவுரியர் கலை வளர்ச்சியினால் எழுந்த ஸ்தூபி - சாஞ்சி ஸ்தூபி
4. மவுரியர் கலையை வெளிப்படுத்தும் குகைக்கோவில் - பராபர் குகைக் கோவில்

5. குஷானர்கள் இந்தியாவைக் கைப்பற்றிய காலம் - கி.மு.200 முதல் கி.மு.100
6. குஷானர்களின் இனம் - யூச்சி
7. குஷானர்களின் தலைநகரம் - புருஷபுரம்
8. குஷானர்களின் வீழ்ச்சிக்குப் பின் வந்த பேரரசு - குப்தப் பேரரசு
9. கனிஷ்கர் சார்ந்திருந்த சமயம் - புத்தம்
10. கனிஷ்கர் அரியணை ஏறிய ஆண்டு - கி.பி. 78
11. கனிஷ்கர் சார்ந்திருந்த சமயம் - மகாயான புத்த சமயம்
12. கனிஷ்கர் அவையிலிருந்த புத்த சமய அறிஞர் - அசுவ கோசர்
13. புத்த மதத்தில் மகாயானம் -ஹீனயானம் என இரு பிரிவுகள் தோன்றியது - கனிஷ்கர் காலத்தில்
14. கனிஷ்கர் கட்டிய புத்த சமய மாநாடு - நான்காம் புத்த மாநாடு
15. கனிஷ்கர் காலத்தில் தோன்றிய சிற்பக்கலை - காந்தார சிற்பக்கலை
16. புத்தரைக் கடவுளாக வழிபட்ட சமயம் - மகாயானம்
17. காந்தார சிற்பக்கலை என்பது - இந்திய-கிரேக்க கலை இணைந்தது.
18. முதலாம் சந்திரகுப்தரைத் திருமணம் செய்து கொண்ட இளவரசி - லிச்சாவி நாட்டு இளவரசி
19. சமுத்திர குப்தர் யாருடைய புதல்வர் - முதலாம் சந்திர குப்தர்
20. சமுத்திர குப்தரின் வெற்றியைத் குறிப்பிடும் கல்வெட்டு - அலகாபாத் கல்வெட்டு
21. இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர் - சமுத்திர குப்தர்
22. விக்கிரமாதித்தர் என அழைக்கப்பட்டவர் - இரண்டாம் சந்திரகுப்தர்
23. இரண்டாண் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியா வந்த சீனப் பயணி - பாஹியான்
24. இந்தியாவில் பாஹியான் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார் - 9 ஆண்டுகள்
25. இரண்டாம் சந்திரகுப்தர் அவையை அலங்கரித்த அறிஞர்கள் - நவரத்தினங்கள்
26. நவரத்தினங்களில் முதன்மையானவர் - காளிதாசர்
27. குப்தர்கள் காலத்தில் அமைந்த குகைகோவில் எங்குள்ளது - உதயகிரி
28. குப்தர்கள் கால கட்டிடக்கலைக்கு நல்லசான்று - தியோகரின் தசாவராக் கோவில்
29. குப்தர்கள் கால ஒவியக் கலைக்குச் சான்று - அஜந்தா குகை ஒவியம்
30. குப்தர் காலத்தில் இருந்த வானியல், கணிதம், ஜோதிடம் ஆகியவற்றின் அறிஞர் - தன்வந்திரி
31. குப்தர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட புகழ்பெற்ற பல்கலைக்கழகம் - நாளந்தா பல்கலைக்கழகம்
32. குப்தர்கள் காலத்தில் இருந்த சிறந்த வானியல் அறிஞர் - ஆரியப்பட்டா
33. ரகுவம்சம் என்னும் காவியத்தைப் படைத்தவர் - காளிதாசன்
34. குப்தர்கள் காலம் இயற்றிய வரலாற்றில் - பொற்காலம்
35. வர்த்தமானங்களில் தலை சிறந்தவர் - ஹர்ஷவர்த்தனர்
36. ஹர்ஷவர்த்தனரின் ஆட்சிக்காலம் - கி.பி. 606 முதல் 647 வரை
37. ஹர்ஷவர்த்தினரின் தந்தை - பிரபாகர வர்த்தனர்
38. ஹர்ஷவர்த்தினரின் தமையன் - ராஜ்யவர்த்தனர்
39. ஹர்ஷவர்த்தனரின் சகோதரி - ராஜ்ஸ்ரீ
40. ஹர்ஷவர்த்தனரின் தமையன் ராஜ்யவர்த்தனைத் தந்திரமாகக் கொன்றவன் - தேவகுப்தன்
41. ஹர்ஷவர்த்தனர் அரியணை ஏறும் பொழுது அவருக்க வயது - 16
42. ஹர்ஷர் தம் தலைநகரை எங்கிருந்து எங்கு மாற்றினார் - தானேஸ்வரம் - கன்னோசி
43. ஹர்ஷரின் தக்காணப்படையெடுப்பில் அவருடன் போரிட்ட மன்னர் - இரண்டாம் புலிகேசி
44. ராஜ்ஸ்ரீயை மண முடித்தவர் - மவுகாரி மன்னர் கிரகவர்மன்
45. கிரகவர்மனைக் கொன்று ராஜ்ஸ்ரீயைச் சிறைப்பிடித்தவர் - தேவகுப்தன் - சகாங்கன்
46. யுவான்சுவாங்கின்ன பயணக்குறிப்புகளின் பெயர் - சியூக்கி
47. இந்திய அரசின் சின்னமான நான்முகச் சிங்கம் எதில் அமைந்துள்ளது - சாரநாத் கல்தூண்
48. தேசியக் கொடியில் அமைந்துள்ள சக்கரம் - அசோகர் தர்மச்சக்கரம்
49. நான்காவது பவுத்த மாநாட்டை கட்டியவர் - கனிஷ்கர்
50. ஹர்ஷரைபர் பற்றி அறிய உதவும் நூல் - ஹர்ச சரிதம்

உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து நன்னடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுகிறது. நன்னடத்தை விதிகள் தளர்த்திக் கொள்ளப்படுவதாக தமிழக தேர்தல் ஆணையர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என்று கூறி திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து நீதிபதி கிருபாகரன்  உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, இன்று பிற்பகலில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ஜி. ரமேஷ், பார்த்திபன் ஆகியோர் கொண்ட அமர்வு, உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறி உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் அறிவித்தனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!