எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!





Saturday, 8 October 2016
OCTOBER & NOVEMBER TRAINING SCHEDULE
22-10-16 CRC for Primary & Upper Primary
24-10-16--BRC Level Tamil Training for Upper Primary Teachers only
05-11-16-- Primary CRC
07-11-16 & 08-11-16 2days BRC level Science Training for Primary Teachers only
12-11-16 -- CRC for Upper Primary
அரசு ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 908 போனஸ் வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு.
தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையை சேர்ந்த அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையை சேர்ந்த அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கப்படும். இதன் மூலம் 3 லட்சத்து 21 ஆயிரத்து 421 ரேசன் கார்டுதாரர்கள் பயன் பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2 கோடியே 56 லட்சம் செலவாகும்.
இதேபோல் அரசு ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 908 போனஸ் வழங்கப்படும். இதன் மூலம் 26 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள். மேலும் தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.1184 போனசாக வழங்கப்படும். இதனால் 5 ஆயிரம் தினக்கூலி ஊழியர்கள் பயன் பெறுவார்கள். பகுதி நேர ஊழியர்களுக்கு ரூ. 1000-ம் போனசாக வழங்கப்படும். இது போல் அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு ரூ.11 ஆயிரம் வரை போனஸ் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை: அக்.31-க்குள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
11-ம் வகுப்பு முதல், முதுகலை பட்டம் வரை பயிலும் தொழிலாளர் களின் குழந்தைகளுக்கு புத்தகங் கள் வாங்குவதற்கு, நிதியுதவி அளிக்கப்படும்.பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய படிப்புகளில் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பயில்வோர், பட்டயப் படிப்பு பயில்வோர், தொழிற்பயிற்சி கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி பயில்வோருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.மேலும், 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர் வில்கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, முதல் 10 இடங் களை பிடித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படும்.
இந்த நிதியுதவிகளை பெறு வதற்காக விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 31. விண்ணப் பங்களைப் பெற “செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்.718, தேனாம் பேட்டை, சென்னை-6” என்ற முகவரிக்கு சுயவிலாசமிட்ட அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையுடன் தொடர்புகொள்ள வேண்டும்.மேலும் விவரங்களுக்கு 044 24321542 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டும், www.labour.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்தும் தெரிந்துகொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டதால் உள்ளாட்சி பிரதிநிதிகள் 24-ம் தேதி வரை பதவியில் நீடிக்கலாம்.
தேர்தல் அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டதால், உள்ளாட்சி பிரதிநிதிகள் வருகிற 24-ம் தேதி வரை பதவியில் நீடிக்க உள்ளனர். தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து வெளியே சென்றவர்கள் தற்போது மீண்டும் உள்ளே வந்துள்ளனர்.கடந்த உள்ளாட்சித் தேர்தல் 2011-ம் ஆண்டு அக்டோபரில் நடை பெற்றது. தேர்தல் முடிந்து தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள் அக்டோபர் 25-ம் தேதி காலையில் பதவி ஏற்றனர்.
இதனால் இவர்களின் 5 ஆண்டு பதவிக் காலம் அக்டோபர் 24 மாலை வரை உள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 25-ம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வந்ததையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.உள்ளாட்சி பிரதிநிதிகளான மேயர், நகராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியத் தலைவர், பேரூராட்சித்தலைவர் என அவர்கள் பயன் படுத்திய அரசு வாகனங்கள் திரும் பப் பெறப்பட்டன. இவர்கள் பயன் படுத்திய அரசு அலுவலக அறை களுக்கும் சீல் வைக்கப்பட்டது.இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உயர் நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தேர்தல் ஆணையம் முறை யீடு செய்துள்ள வழக்கு நிலு வையில் உள்ளது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை உள் ளாட்சித் தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையம் விலக்கிக் கொண்டுள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி பிரதி நிதிகளின் நிலை என்ன என்பது குறித்து பலருக்கு குழப்பம் ஏற்பட் டுள்ளது. தங்கள் பதவிக்காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டது என்ற எண்ணத்தில் பலர் இருந்தனர்.இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதா வது:கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி காலையில்தான் தற்போது உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்றனர். இவர் களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் உள்ள நிலையில் 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி மாலையில் தான் முடிவடைகிறது.மேயர், ஒன்றியத் தலைவர்கள், நகராட்சித் தலைவர் அவர்களின்வழக்கமான பணியைத் தொடர லாம். இதில் எந்த மாற்றமும் இருக்காது.
இதனால் அவர்களிடம் கார்கள், அலுவலக சாவி ஆகிய வற்றை திரும்ப வழங்கியுள்ளோம்.இதை அவர்கள் அக்டோபர் 24 மாலை வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் பின்பே தனி அதிகாரிகளை அரசு நியமிக்கும். அவர்களுக்கு உள்ளாட்சிப் பிரதி நிதிகளின் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளாட்சிப் பணிகளும் தொடரும் என்றார்.
உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் ஊதியம்...கிடைக்குமா?
தேர்தல் பணியை மேற்கொண்ட ஊழியர்கள் எதிர்பார்ப்பு.
உள்ளாட்சித் தேர்தலை ஐகோர்ட் ரத்து செய்துள்ளதால், கடந்த 26ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், ஊதியம் கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர்.சட்டசபை, லோக்சபா தேர்தல்களின்போது ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் அட்டை சரிபார்ப்பு, விரலில் மை வைப்பது போன்ற பணிகளிலும்; உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர், பஞ்., தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்களிடம் மனுக்கள் பெறுவது, பரிசீலனை, தள்ளுபடி, சின்னம் ஒதுக்குவது உள்ளிட்ட பணியிலும் கல்வித்துறை ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.
அதன்படி, 17 மற்றும் 19ம் தேதிகளில் நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு, கடந்த மாதம் 26ம் தேதி முதல் 3ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.இப்பணியில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு டி.இ.ஓ., மற்றும் உதவி செயற்பொறியாளர் கிரேடு அதிகாரிகள் வேட்புமனுக்கள் பெற்றனர். ஒன்றிய கவுன்சிலர் மற்றும் பஞ்., தலைவர் பதவிகளுக்கு ஏ.இ.ஓ., துணை பி.டி.ஓ.,க்கள்; வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆசிரியர்களும் வேட்பு மனுக்கள் பெற்றனர்.வேட்பு மனுக்கள் பெற்று, 4ம் தேதி மனுக்கள் பரிசீலனையில் இருந்தபோது, உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, வேட்பாளர்களிடம் பெறப்பட்ட மனுக்கள், கட்டணம் ஆகியவற்றை அந்தந்த பி.டி.ஓ., அலுவலகங்களில் ஒப்படைக்கும் பணி, நேற்று (7ம் தேதி) நடந்தது.பொதுவாக தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பணித் தகுதி, ஊதியம் ஆகியவற்றுக்கு தகுந்தாற்போல், தேர்தல் கால பணி ஊதியம் (மதிப்பூதியம்) வழங்கப்படும். தற்போது,உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், கடந்த 26 முதல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு மதிப்பூதியம் எப்போது கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து கல்வித்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், 'உள்ளாட்சித் தேர்தலில் மனுக்கள் பெறுவது, பரிசீலனை, தள்ளுபடி, சின்னம் ஒதுக்குவது மட்டுமல்லாது தேர்தல் முடிந்து, பதவிப் பிரமாணம் செய்வது வரை தற்போது பணியில் ஈடுபடுவோரின் வேலையாகும்.கடந்த 26 முதல் 4ம் தேதி வரை பணியில் ஈடுபட்டோம். முதல்பருவ (காலாண்டுத் தேர்வு) விடுமுறையில் தேர்தல் பணியில் ஈடுபட்டோம். அதில், 3 மற்றும் 4ம் தேதி பள்ளி வேலை நாட்கள்.நேற்று (7ம் தேதி) வேட்பாளர்களிடம் பெறப்பட்ட மனுக்கள், கட்டணத்தை அந்தந்த பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டியிருந்தது.எனவே, 3, 4 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்கள் பள்ளி வேலை நாட்களாகும்.
இதன் மூலம், கடந்த 26ம் தேதி முதல் 7ம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் பணிபுரிந்தோம். எங்களைப்போல, நகராட்சி, ஊரக வளர்ச்சி, வருவாய் மற்றும் வேளாண்துறை போன்ற துறை ஊழியர்களும் பணிபுரிந்துள்ளனர்.தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், கடந்த 10 நாட்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கான ஊதியம் கிடைக்குமா அல்லது மீண்டும் தேர்தல் நடக்கும்போது, இதற்கான ஊதியம் சேர்த்து வழங்கப்படுமா என தெரியவில்லை' என்றார்.
திறந்தநிலை பல்கலையில் பி.எட்., சேர்க்கை துவக்கம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. பட்டப்படிப்பு, டிப்ளமோ பயிற்சி முடித்து, ஆசிரியர்களாக பணியாற்றுவோர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பில் சேரலாம்.
இதற்கான விண்ணப்ப வினியோகத்தை, பல்கலை துணைவேந்தர், பாஸ்கரன் துவங்கி வைத்தார். பி.இ., - பி.டெக்., படிப்பில், அறிவியல் மற்றும் கணிதம் படித் தோரும், பி.எட்., சேரலாம். விண்ணப்பங்கள் மற்றும் விபர புத்தகங்களை, பல்கலையின், மண்டல மையங்களில் பெறலாம்; பல்கலையின், www.tnou.ac.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.
பி.எட்., படிப்பில் மீண்டும் மாற்றம் : கருத்து கேட்கிறது கல்வி கவுன்சில்
ஆசிரியர் பணிக்கான, பி.எட்., படிப்பில், இரு ஆண்டுகளுக்கு முன் தான், மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் மாற்றம் கொண்டு வர, கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது.கடந்த கல்வி ஆண்டு வரை, பி.எட்., படிப்பு, ஓராண்டாக இருந்தது. 2014ல் அமலான புதிய விதிமுறைகள்படி, இரு ஆண்டாக மாற்றப்பட்டது.
அதன்படி, தமிழகத்திலுள்ள, 690 கல்லுாரிகளும், பி.எட்., படிப்பை நடத்துகின்றன. இந்த கல்லுாரிகள், மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் அங்கீகாரத்தை பெற வேண்டும்; பின், தமிழகத்தில் உள்ள, ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், இணைப்பு அந்தஸ்து பெற வேண்டும். இந்த நடைமுறையிலும், பாடத்திட்டம் வரையறை செய்வதிலும் பிரச்னைகள் உள்ளதாக, மத்திய அரசுக்கு, கல்வியாளர்கள் தரப்பில் மனுக்கள் அனுப்பப்பட்டன.
இதை தொடர்ந்து, பி.எட்., விதிகளில், மீண்டும் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, கல்வியாளர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், தங்கள் கருத்துக்களை, அக்., 30க்குள் அனுப்ப வேண்டும் என, டில்லி ஆசிரியர் கல்வி கவுன்சில் தெரிவித்து உள்ளது.
தொலைநிலை கல்வி: யு.ஜி.சி., கிடுக்கிப்பிடி
தொலைநிலை கல்வி வழங்கும் பல்கலைகள், படிப்பு மற்றும் அங்கீகார விபரத்தை, இணையதளத்தில் வெளியிட, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவு பிறப்பித்துள்ளது.யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்று, பல்கலைகள் தொலைநிலை படிப்புகளை நடத்துகின்றன.
அரசு பல்கலைகள், சம்பந்தப்பட்ட மாநிலத்தை தாண்டியும், தனியார் நிகர்நிலை பல்கலைகள், தங்கள் வளாகத்திற்கு வெளியிலும், கல்வி மையங்கள் அமைக்க கூடாது. ஆனால், பல பல்கலைகள் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும், கல்வி மையங்களை திறந்துள்ளன.
சில பல்கலைகள், தனியார் மூலம் மையங்கள் நடத்துகின்றன; இதற்கு, யு.ஜி.சி., அனுமதி அளிக்கவில்லை. தமிழகத்தில், நடப்பு ஆண்டில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை, தஞ்சை தமிழ் பல்கலை மற்றும் ஹிந்தி பிரசார சபாவுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பல பல்கலைகள், தொலைநிலை கல்வியில் மாணவர் சேர்க்கையை துவக்கியுள்ளன.
எனவே, மாணவர்கள் ஏமாறாமல் இருக்க, யு.ஜி.சி., கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், 'அனைத்து பல்கலைகளும், தங்களின் படிப்பு விபரங்கள் மற்றும் அதற்கான அங்கீகார கடிதத்தை, பல்கலையின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதை பார்த்து உறுதி செய்த பின், மாணவர்கள், அந்த பல்கலையில் சேரலாம்' என, தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் ஆர்.டி.ஐ., தகவல் வெளியிட மத்திய அரசு உத்தரவு
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் குறித்த விபரங்களை, ஆன்லைனில் வெளியிடுமாறு, அனைத்து அரசுத் துறைகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பொதுமக்கள் அரசுத் துறை செயல்பாட்டை அறிந்து கொள்ள முடியும். இந்த சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு, குறிப்பிட்ட நாட்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது. எனினும், சில அரசுத் துறை அதிகாரிகள், ஆர்.டி.ஐ., மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கு, சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் குறித்த தகவல்களை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். எனினும், ஆர்.டி.ஐ., மூலம் தகவல் பெறுபவர் மற்றும் பெறப்படுபவரின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடக் கூடாது. அனைத்து மத்திய அரசுத் துறைகளும் இதை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பயணிகளின் மொபைல் போனுக்கு இன்சூரன்ஸ் : ரயில்வே அதிரடி தொடர்கிறது
ரயிலில், முன்பதிவு செய்து, பயணம் செய்பவர்களுக்கு, 92 பைசாவில், 10 லட்சம் ரூபாய் பயணக் காப்பீடு வழங்கும் திட்டம் பெரும் வரவேற்பு பெற்றதால், பயணிகளின் மொபைல் போன் மற்றும் லேப் - டாப்களுக்கு, இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை, விரைவில் அறிமுகம் செய்ய, ரயில்வே தீர்மானித்துள்ளது.
பயண காப்பீடு :
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, ரயில் களில் பயணிப்போருக்காக, 92 பைசாவில் பயணக் காப்பீடு வழங்கும் திட்டம், செப்., 1ல், அமலுக்கு வந்தது. இதன்படி, ஆன்லைன் டிக் கெட் முன்பதிவில், விருப்பத் தேர்வாக இருக்கும். இந்த பயணக் காப்பீடுதிட்டத்தில், கட்டணத்துடன் கூடுதலாக, 92 பைசா செலுத்தி, பயணக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம்.
ரயில் விபத்து அல்லது பயங்கரவாத தாக்குத லில் பயணக் காப்பீடு எடுத்துள்ள பயணிகள்,
பலியானாலோ அல்லது முழுமையாக செயல் படாத அளவுக்கு ஊனமடைந்தாலோ, அவர் களின் குடும்பத்தினருக்கு, 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும்.
இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, ரயில்பயணத்தின் போது, பயணிகள் எடுத்துச் செல்லும் மொபைல் போன், லேப் - டாப் போன்ற வற்றுக்கும், இன்சூரன்ஸ் வழங்குவது குறித்து, ரயில்வே பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக, இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன், ரயில்வேயின் சார்பு நிறுவன மான, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் நிர்வாக இயக்குனர், ஏ.கே.மனோச்சா ஆலோசனை நடத்தினார்.
மக்கள் ஆதரவு :
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பயண இன்சூரன்ஸ் திட்டத்தில், இதுவரை, ஒரு கோடி பயணிகள், இணைந்துள்ளனர். இந்த வெற்றியை தொடர்ந்து, ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் கொண்டு செல்லும், மொபைல் போன், லேப் - டாப்போன்றவற்றுக்கு இன்சூரன்ஸ் வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்;
இதன்படி, விபத்து அல்லது கொள்ளை போனால் இழப்பீடு வழங்கப்படும். இது தொடர் பாக, இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் பேசியுள் ளோம்; அப்போது, போலியாக பலர், இழப்பீடு கோரும் ஆபத்து இருப்பதாக, இன்சூ ரன்ஸ் நிறுவனங்கள்
கவலை தெரிவித்தன. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் கிரெடிட் கார்டுவைத்திருக்கும் ரயில் பயணிகளுக்கு, முதல் கட்ட மாக, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்; பின், மற்ற பயணி களுக்கும் விரிவுபடுத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
தீபாவளி சலுகை :
தீபாவளி பண்டிகையை ஒட்டி, அதிரடி, 'ஆபர்' ஆக, ரயில் பயணிகளுக்கான பயண இன்சூ ரன்ஸ் பிரீமியம், 92 பைசாவில் இருந்து, ஒரு பைசாவாக குறைக்கப்படுகிறது; அக்டோபர், 7 முதல், 31 வரை மட்டும், இச்சலுகை வழங்கப் படும். அதிகமான ரயில் பயணிகளை ஈர்க்கவே, இச்சலுகை வழங்கப்படுவதாக ரயில்வே கூறியுள்ளது.