Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 14 October 2016

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு !


இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர்,  ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.பிறப்பு: அக்டோபர் 15, 1931

மரணம்: ஜூலை 27, 2015

இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

இளமைப் பருவம்:

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:  

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:  

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

மரணம்:

அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.

விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-II பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 –  சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

அக்னி சிறகுகள்இந்தியா 2020எழுச்சி தீபங்கள்அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

CCE 2nd TERM WEEKLY SYLLABUS - I std to VIII STD

CLICK HERE TO DOWNLOAD CCE II TERM SYLLABUS FOR I TO VIII STD

100 சதவிகித தேர்ச்சி – அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசு!

கடந்த மார்ச் மாதம் நடந்த, பிளஸ்-2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், ஒவ்வொரு பாடத்திலும் 100 சதவிகிதம் தேர்ச்சி அளித்த அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கவுரவிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி

விகிதத்தை அதிகரிக்க, 2004ஆம் ஆண்டு முதல் பல்வேறு ஊக்கப்பரிசு திட்டங்களை பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, நுாறு சதவிகித தேர்ச்சி இலக்கினை எட்டிய நகர்ப்புற அரசு பள்ளிகளுக்கும், 90 சதவிகிதம் தேர்ச்சி அளித்த கிராமப்புற பள்ளிகளுக்கும் ரூபாய் ஒரு லட்சம் பரிசு அளிக்கப்படுகிறது. அத்துடன், ஒவ்வொரு பாடத்திலும் 100 சதவிகித தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு, ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள கேடயம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. இத்திட்டம், 2011ஆம் ஆண்டு முதல் கிடப்பில் போடப்பட்டது. தங்கள் பாடத்தில் நூறு சதவிகிதம் தேர்ச்சி அளித்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்படவில்லை. ஆசிரியர்கள் மத்தியில் இது பெரும் குறையாக இருந்து வந்தது. ஆனால், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் குமார் மேற்கொண்ட முயற்சி காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த பொதுத்தேர்வில் நூறு சதவிகித தேர்ச்சி அளித்த 3,935 ஆசிரியர்கள், சில மாதங்களுக்கு முன் கவுரவிக்கப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத்தேர்வில் தங்கள் பாடத்தில் ‘சென்டம்’ தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்படாமல் இருந்தனர். தற்போது, கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடம் வாரியாக சென்டம் தேர்ச்சி கொடுத்த, அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 775 ஆசிரியர்களைக் கவுரப்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கடந்த காலங்களில் ஆசிரியர்களை கவுரப்படுத்தும் விதமாக, ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள ஒரு நினைவுப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இது, ஆசிரியர் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அதையடுத்து, தற்போது கவுரவிக்கப்படும் ஆசிரியர்களுக்கு பரிசாக, 92 சதவிகித துாய்மை கொண்ட வெள்ளி நாணயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த வெள்ளி நாணயங்களைத் தயாரித்து வழங்க, பள்ளிக் கல்வித்துறை நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் கோரி உள்ளது. நவம்பர் 3ஆம் தேதி, டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாசிப்பின் மூலம் நேசிப்பை உருவாக்கும் ‘தி இந்து’: உடுமலை அரசுப் பள்ளி மாணவிகள் நெகிழ்ச்சி


உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘தி இந்து’ நாளிதழுடன் மாணவிகள் மற்றும் விழாவில் பங்கேற்றோர். | படம்: எம்.நாகராஜன்

வாசிப்பதன் மூலம் நேசிப்பை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் உருவாக்கு வதாகவும், இந்த நாளிதழை பொக்கிஷமாக பாதுகாக்க இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர் உடுமலை அரசுப் பள்ளி மாணவிகள்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, தளி சாலையில் செயல்பட்டு வருகிறது பாரதியார் நூற்றாண்டு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி. 2 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.

உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் சார்பில் இப்பள்ளி மேம் பாட்டுக்காக நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ‘நாப்கின்’ இயந்திரமும், பயன்படுத் திய நாப்கினை சுகாதாரமான முறையில் எரியூட்டி அகற்றும் இயந்திரமும் அண்மையில் இப் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

மேலும், இப்பள்ளி மாணவி களிடையே செய்தித்தாள் வாசிக் கும் பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், தேர்ந்தெடுக்கப் பட்ட 100 மாணவிகளுக்கு, 6 மாதங் களுக்கு ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் வழங்க இச்சங்கத்தினர் முடிவு செய்து, அதற்கான விழாவுக்கு ஏற்பாடு செய்தனர்.

இதன் தொடக்க விழா, பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தலைமையாசிரியை சி.விஜய லட்சுமி தலைமை வகித்தார். தேஜஸ் ரோட்டரி சங்கத் தலைவர் பி.கே.குமரன் வரவேற்றார். சங்கத்தின் பொருளாளர் டாக்டர் எஸ்.சுந்தர்ராஜன், பள்ளி ஆசிரியர் ஆர்.பழனிச்சாமி ஆகியோர் வாசிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.

ரோட்டரி சங்க இயக்குநர்கள் எஸ்.சக்ரபாணி, ஜி.கணேஷ்குமார், எஸ்.நாகராஜன், சத்யம் பாபு, மணிகண்டன், உதவி தலைமை ஆசிரியர் சி.சிவக்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

இதில், கருத்துரை வழங்கிய பலரும் ‘‘தி இந்து தமிழ் நாளி தழ் மாறுபட்ட தன்மையுடன், அனைவரும் விரும்பிப் படிக்கும் நாளிதழாக உள்ளது.

படிக்க மட்டுமின்றி பாதுகாக்க வேண்டிய இதழ் இது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களுக்கு மிக வும் பயனுள்ளதாக உள்ளது’’ என்றனர்.

‘தி இந்து’ பொக்கிஷம்

இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, ‘‘6 மாதங்களுக்கான சந்தா தொகையை செலுத்தி ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் எங்க ளுக்கு கிடைக்கச் செய்த தேஜஸ் ரோட்டரி சங்கத்தினருக்கு மன மார்ந்த நன்றி. இதனை வாசிக் கும்போது ஏற்படும் நேசிப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை. ‘தி இந்து’ எங்களுக்குக் கிடைத்த பொக்கிஷமாகவே கருதுகிறோம். ‘உங்கள் குரல்’ பகுதி மூலம் இனி எங்கள் குரலும் தொடர்ந்து ஒலிக்கும். தொடர்ந்து வாசிப்ப தோடு, பலருக்கும் வாசிக்கக் கொடுப்போம்’’ என்றனர்.

வேலூர் மாவட்ட DEEO அலுவலக தகவல்..

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க/நடுநிலைப்பள்ளிகளுக்கு 15-10-2016 சனிக்கிழமை தொடக்கக்கல்வி இயக்குநர் உத்திரவின்படி பள்ளி வேலைநாள் ஆகும். 
அனைத்து பள்ளிகளிலும் "இளைஞர் எழுச்சி நாள்" கொண்டாடப்பட வேண்டும்

TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. கடைசி சந்தல அரசனை தோற்கடித்தவர் - குத்புதீன் ஐபக்
2. ராஜபுத்திரர்களின் சமுதாய அமைப்பு எதன் அடிப்படையில் இருந்தது - நிலமானிய முறை
3. ராஜபுத்திர பெண்கள் பின்பற்றிய பழக்கம் - ஜவ்ஹர் முறை
4. ஜவ்ஹர் முறை என்பது - போரின் தோல்வியெனில் தீக்குளித்தல்

5. ராஜபுத்திரர்கள் எந்த இடத்தில் சமணர் கோவிலை கட்டினர் - தில்வாரா
6. முகமது கஜினியன் காலம் - கி.பி.990 - 1030
7. இந்தியாவின் மீது பலமுறை படையெடுத்து வந்த மன்னன் - முகமது கஜினி
8. முகமது கஜினியின் தந்தை - சபக்திஜின்
 9. முகமது கஜினியின் தலைநகரம் - இன்றைய ஆப்கானில் உள்ள கஜினி
10. முகமது கஜினி பஞ்சாப் மீது படையெடுத்தது எப்போது - 1001
11. பெஷாவாரில் நடந்த போரில் முகமது கஜினியிடம் தோல்வி கண்ட மன்னன் - ஜெயபாலன்
12. முகமது கஜினி மீண்டும் பஞ்சாப் மீது படையெடுத்த ஆண்டு - 1008
13. முகமது கஜினியின் சோமநாதபுரம் படையெடுப்பு நடைபெற்றது எப்போது - 1025
14. முகமது கஜினியின் இந்தியாவின் மீது எத்தனை முறை படையெடுத்தார் - 17
15. முகமது கஜினி படையெடுப்பின் நோக்கம் - விலை மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடிப்பதற்கு
16. முகமது கோரியின் காலம் - 1173 - 1206
17. குத்புதீன் ஐபக் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு - 1206
18. குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் - குத்புதீன் ஐபக்
19. குத்புதீன் ஐபக்கை அடுத்து ஆட்சிக்கு வந்தவர் - இல்டுமிஷ்
20. குதுப்மினாரைக் கட்டி முடித்தவர் - இல்டுமிஷ்
21. இல்டுமிஷ் காலத்தில் சீனாவைத் கைப்பற்றியவர் - செங்கிஸ்கான்
22. இல்டுமிஷ் மறைவிற்குப்பின் ஆட்சிக்கு வந்தவர் - மகள் ரசியா
23. செங்கிஸ்கான் யார் - மங்கோலியத் தலைவன்
24. தில்லி சுல்தானிய அரசின் முதல் பெண் அரசி - ரசியா
25. ரசியாவைச் சிறைப்பிடித்தவர் - பாடிண்டா பகுதி ஆளுநர் அல்தூனியா
26. ரசியாவை மனழம் புரிந்தவர் - சிறை எடுத்த அல்தூனியா
27. அல்துனியா - ரசியா இருவரும் (கணவன்-மனைவி) தில்லி மீது படையெடுத்த ஆண்டு - 1240
28. ரசியாவின் தில்லி படையெடுப்பில் நிகழந்தது என்ன - கணவன்-மனைவி இருவரும் கொல்லப்பட்டனர்
29. அடிமை வம்சத்தில் மிக முக்கியமான அரசன் - பால்பன்
30. பால்பன் யாருக்குப்பின் ஆட்சிப் பொறுப்பேற்றார் - நாசிர் உத்தின் முகமது
31. பால்பன் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு - 1266
32. வங்காளக் கலகம் ஒடுக்கப்பட்ட ஆண்டு - 1279
33. இப்ராஹிம் லோடி பானிபட்போரில் யாரிடம் தோற்றார் - பாபர்
34. பால்பன் வைத்திருந்த வலிமை வாய்ந்த படை - ஒற்றர் படை
35. பால்பனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர் - ஜலாலுதீன் கில்ஜி
36. கில்ஜி வம்சத்தின் காலம் - 1290 - 1320
37. ஜலாலுதீன் கில்ஜி எத்தனை ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார் - 6 ஆண்டுகள்
38. அலாவுதீன் கில்ஜி யார் - ஜலாலுதீன் கில்ஜியின் மருமகன்
39. அலாவுதீன் கில்ஜி பெரும் பொருள் குவித்த படையெடுப்பு - தேவகிரி படையெடுப்பு
40. அலாவுதீன் கில்ஜி தம் மாமன் ஜலாலுதீன் கில்ஜியை எவ்வாறு கொன்றார் - வெற்றிக்கு வாழ்த்து கூற வந்தபோது
41. அலாவுதீன் கில்ஜி சிற்றூரை முற்றுகையிட்டு தோற்கடித்த ராஜபுத்திர அரசன் - ராணா ரத்தன் சிங்
42. ராணாரத்தன் சிங் கொல்லப்பட்டதால் தீக்குளித்து இறந்த அவனது மனைவி - ராணி பத்மினி
43. மங்கோலியர்களை அடக்கிய வேந்தன் - அலாவுதீன் கில்ஜி
44. தக்காணப் பகுதியை முதன் முதலில் வென்ற அரசன் - அலாவுதீன் கில்ஜி
45. மாலிக்காபூர் படையெடுத்தால் அலாவுதீனுக்குக் கப்பம் கட்ட ஒத்துக்கொண்ட தேவகிரி அரசன் - ராமச்சந்திர யாதவ்
46. அலாவுதீன் கில்ஜியின் காலம் - மகிழ்ச்சி இல்லாத காலம்
47. அலாவுதீன் கில்ஜிப் பேரரசு முடிவுற்ற காலம் - 1350
48. கில்ஜிப் பேரரசின் கடைசி வேந்தன் யாரால் கொல்லப்பட்டார் - ஜியாசுதீன்துக்ளக்
49. அலாவுதீன் கில்ஜி இறந்தது - 1315
50. மாலிக்காபூர் வெற்றி கண்ட வாரங்கல் காகதீய மன்னன் - பிரதாப ருத்திரன்

10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்களுக்கு தென் மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு.

தென் மத்திய ரயில்வேயில் அதலெடிக்ஸ், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், ஹேண்ட் பால், கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள், விளையாட்டு தகுதி மற்றும் காலியிடங்கள் எண்ணிக்கை விவரம்:

1. Athletics (Men): 100M/ 200M/ Triple Jump, Pole Vault - 4 இடங்கள்.

2. Athletics (Women): 100M/ Triple Jump/ Heptation, High Jump - 4 இடங்கள்.

3. Badminton (Men): Singles - 1 இடம்.

4. Basketball (Women) : Point Guard, Forward - 2 இடங்கள்.

5. Boxing (Men): Welter Weight (69 Kgs), Light Heavy Weight (81 Kgs), Heavy Weight (91 kgs) - 3 இடங்கள்.

6. Cricket (Women): Batswoman-Cum-Medium Pacer, Medium Pacer - 2 இடங்கள்.

7. Handball (Women): Centre Position - 1 இடம்.

8. Kabaddi (Women): All Rounder- 2 இடங்கள்.

9. Volley Ball (Women): All Rounder, Attacker - 2 இடங்கள்.

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900 அல்லது ரூ.2,000. 

வயது: 

1.1.2017 அன்று 18 முதல் 25க்குள். 

கல்வித்தகுதி: 

10ம் வகுப்பு/ பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவுகளில் மாநில/ தேசிய/ பல்கலைக்கழக/ சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று குறைந்தது 3வது நிலை பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதி, விளையாட்டு தகுதி, கல்வித்தகுதி, பொது அறிவு போன்ற தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விளையாட்டு திறன் பரிசோதனை, நேர்முகதேர்வு நடத்தப்படும்.

விண்ணப்ப கட்டணம்: 

ரூ.100. இதை Financial Advisor & Chief Accounts Officer, South Central Railway என்ற பெயரில் செகந்திராபாத்தில் மாற்றத்தக்க வகையில் கிராஸ் செய்யப்பட்ட டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும். பெண்கள், எஸ்சி/ எஸ்டி/ சிறுபான்மையினர்/ பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்பட்டோர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. 

தகுதியானவர்கள் www.scr.indianrailways.gov.in என்ற இணையதள முகவரியில் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்த பின்னர் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Assistant Personnel Officer (Rectt., & HQ),

Room No: 416, 

Office of the Chief Personnel Officer, 

4th Floor,

Rail Nilayam,

Secunderabad- 500 071.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.10.2016.

PAY CONTINUATION ORDER FOR 900 PGPOSTS

மாணவர்களுக்கான "2020 - கலாமின் கனவுகள்!" பற்றி கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிக்கான செய்திகள்

அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையை வெளிநாடுகள் தான் தருகின்றன என்று கூறி, விமானம் ஏறுகிறவர்கள் உள்ள காலத்தில், தாய்நாட்டு சேவைக்காகவே உறுதியுடன் இருந்து இந்தியாவிலேயே திறமையை வளர்த்துக் கொண்டு உலகத்தரத்துக்கு இந்தியா உயர்வதற்கு வழிகாட்டியவர், டாக்டர் அப்துல்கலாம்.
அவர் ஜனாதிபதியாவதற்கு முன்பே, வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து கலாம் பணிபுரியும் விதத்தை பார்க்க நேர்ந்த பலர், ஏன் வெளிநாடு போனோம் என்று வெட்கித் தலைகுனிந்தோம் என்று கூறக் கேட்டிருக்கிறோம்.
1987-88ம் ஆண்டுகளில் கனடாவிலிருந்து இந்தியா வந்த வெளிநாடு வாழ் இந்திய விஞ்ஞானி, எம். வித்யாசாகர், தான் பார்த்த விதத்தை இப்படி பதிவு செய்துள்ளார், அப்துல் கலாம் தலைமையின் கீழ் பணிபுரிந்தவர்களைப் பார்க்கும் போது, வழக்கமான அரசு ஊழியர்களுக்கான எந்த அம்சத்தையும் காணோம்.

வேலை நேரம் முடிந்த பின்னரும், வார விடுமுறைகளிலும் பணிபுரிந்தார்கள். வேறு எங்கும் இதைக் காண முடியாது&' என்று வியந்து கூறினார். அப்போது அப்துல் கலாம்,இந்திய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.,) இயக்குனராக இருந்தார். நீங்கள் வேலை செய்வது புதிய ஸ்டைலாக&' இருக்கிறதோ என்று கேட்டபோது, நான் எனக்கு என்று எந்த ஸ்டைலையும் வைத்துக் கொள்ளவில்லை.
வேலை பார்க்கும் இடத்தில் தவறு செய்கிறவர்கள், தவறை ஒப்புக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும். அதே சமயம் அந்த தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
அறிவியல் ஆசான்
ஏவுகணைகளின் தந்தை என்று இவர் அழைக்கப்படுவதற்கு காரணம் அன்றைய அவரது கடின உழைப்பும் அதைத் தொடர்ந்து கிடைத்த வெற்றிகளும் தான். அவருடன் பணியாற்றியவர் எந்த பதவியில் இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்தவராகஇருந்தாலும், எந்த குணத்தைக் கொண்டிருப்பவரானாலும் சமமாக பழகியவர், அவர்களுடைய விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்தவர்.

விருதுகள்

தேசிய வடிவமைப்பு விருதுகள், டாக்டர் பிரேன் ராய் விண்வெளி விருது; ம.பி. அரசின் தேசிய நேரு விருது, 1994ல் இந்திய வானியல் சங்கம் வழங்கிய ஆர்யப்பட்டா விருது. 1996ல் பேராசிரியர் ஒய்.நாயுடம்மா நினைவு தங்கப்பதக்கம், ஜி.எம்.மோடி அறிவியல் விருது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உன்னதத்துக்கான எச்.கே.பிரோடியா விருது உட்பட பற்பல விருதுகளை அப்துல்கலாம் பெற்றுள்ளார்.
1981ல் பத்மபூஷன் விருதும், 1996ல் பத்ம விபூஷன் விருதும் பெற்ற அப்துல்கலாம் 1997 டிசம்பரில் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றார். இந்திய வானியல் சங்கத்தின் துணைத் தலைவராகவும், இந்திய தேசிய பொறியியல் அகாடமி பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் அகாடமி, மின்னணு மற்றும் தொலைத் தகவல் தொடர் புக் கழகத்தின் ஆய்வாளராகவும் அப்துல் கலாம் திகழ்ந்தார்.

எழுதிய நுால்கள்

இந்தியா 2020, பொற்காலத்தை நோக்கி ஒரு பார்வை என்ற புத்தகத்தை இஸ்ரோவின் செயல் இயக்குனர் வி.எஸ்.ராஜனுடன் இணைந்து எழுதினார். இவரது சுயசரிதையை அக்னி சிறகுகள் என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
இரண்டுமே ஆங்கிலத்தில் வெளி வந்தவை. 2002 ஜூலை 25ம் தேதி இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பதவியேற்றார். 2007 ஜூலை 25 வரை அப்பதவியில் இருந்தார். அவரது பதவிக்காலத்தில் மக்களின் ஜனாதிபதி என அழைக்கப்பட்டார்.
மாணவர்களுக்கு அடிக்கடி கனவு காணுங்கள் என அறிவுறுத்துவார். ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்பும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவர் மறையும் வரை இந்த தேசத்துக்காக உழைத்துக் கொண்டே இருந்தார்.
கனவு காணுங்கள்

அப்துல் கலாமின் சில பொன் மொழிகள்:

கனவு காணுங்கள். அவற்றை நனவாக்ககடுமையாக உழைக்க வேண்டும். என்னால் முடியும்... நம்மால் முடியும்.. இந்தியாவால் முடியும் என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.
முதல் வெற்றியுடன் ஓய்வு எடுத்து விடாதீர். ஏனெனில் இரண்டாவது முயற்சியில் தோல்வி அடைந்தால், முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால்வந்தது என விமர்சிப்பர்.
மழை வந்தால் பறவைகள் எல்லாம் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையும். ஆனால் கழுகு மட்டும் வித்தியாசமாக சிந்தித்து,மேகத்துக்கு மேலே பறந்து மழையில் இருந்து தப்பிக்கும்.
அனைவருக்கும் ஒரே மாதிரியான திறமை கிடையாது. ஆனால், திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்புகிடைக்கிறது.
திருக்குறளில் ஈடுபாடு
திருக்குறளை அவர் தனது உரைகளில் மேற்கோளாக காட்டுவார். வேத, உபநிஷத்துக்களையும், மகாபாரதம், மனுஸ்மிருதி போன்றவற்றிலும் ஈடுபாடு காட்டியவர். 2002ம் ஆண்டில் பதவியிலிருந்த பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசு, இவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த போது, அரசியல் பேதமின்றி பெரும்பாலான கட்சிகளால் அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் கனவை, இளைய சமுதாயத்தின் கனவாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தில் பதவியேற்ற பின் அவர் அதைவலியுறுத்தினார்.
இந்தியா சூப்பர்பவர் நாடாக வேண்டும் என்றும் அதற்கான செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்பதிலும் நாட்டம் காட்டினார்.
வல்லரசு நாடாக வேண்டுமானால் ஒவ்வொரு துறையும் செய்ய வேண்டியது என்ன என்பதை சுட்டிக் காட்டினார். தினமும் காலை 5.30 க்கு எழும் அவர், இரவு 1 அல்லது 2 மணிக்குத்தான் துாங்கச்செல்லும வழக்கத்தை வைத்திருந்தார்.
சேதமடைந்த திசுக்களுக்குப் பதிலாக உயிரிபதியன் முறை மூலம் மாற்ற அவர் யோசனை கூறி வருகிறார். இதன் மூலம் இதய வால்வு உள்ளிட்ட நோயால் இழந்த உடல்பாகங்களை பெற்றுக் கொள்ள முடியும். நேனோ டெக்னாலஜி துறையில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்றும் கூறிவந்தார்.
அதேபோல், காப்புரிமைகள் கோராத பொதுவான சாப்ட்வேர் வெளியிட்டு தகவல் தொழில்நுட்பம் எல்லோரையும் சென்று அடைய வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். அறிவியல் மூலம் எல்லாவற்றுக்கு தீர்வு காண முடியும் என்பது அவரது நம்பிக்கை. மக்களிடம் அறிவியல் மனப்பான்மை வளர வேண்டும் என்றும் விரும்பினார்.
40 டாக்டர் பட்டங்கள்
ஒரு டாக்டர் பட்டம் பெறுவதே அரிதானகாரியம். ஆனால், அப்துல் கலாமின் உயரிய பணிகளை பாராட்டி உலகம் முழுவதும் இருந்து 40 பல்கலை., சார்பில் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன.
தேசத்தின் மீது நேசம்
ஜனாதிபதி, விஞ்ஞானி என பன்முகமனிதராக இருந்த அப்துல் கலாம், தேசப்பற்றுமிக்கவராக இருந்தார். இந்தியாவின் மிகப் பெரும் விஞ்ஞானி விக்ரம் சாராபாயை தனது ரோல்மாடலாக கொண்டு செயல்பட்டார்.

உள்ளாட்சி அமைப்புகள் தனி அலுவலர்களிடம்... கைமாறுகிறது!மொத்த அதிகாரமும் மாவட்ட ஆட்சியர் வசம் செல்கிறது!!!

உள்ளாட்சி அமைப்புகளில், 24ம் தேதிக்கு பிறகு, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதால், அனைத்து அதிகாரங்கள், மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து, தனி அலுவலர்களிடம் வழங்கப்படவுள்ளது. இதனால், உள்ளாட்சி அமைப்பின் ஒட்டுமொத்த கண்காணிப்பும் மாவட்ட ஆட்சியர் வசம் செல்கிறது.

உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக் காலம், இன்னும் சில நாட்கள் மட்டுமே, உள்ள நிலையில், அவர்கள் விரக்தியில் உள்ளனர்.கடந்த, 1996ம் ஆண்டிற்கு முந்தைய ஆண்டுகளில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டது போல், இந்த ஆண்டிலும் நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், 13 ஒன்றியங்களும், 17 பேரூராட்சிகளும், ஒன்பது நகராட்சிகளும், ஒரு மாவட்ட ஊராட்சியும் செயல்பட்டு

வருகிறது.

ஒன்றியங்களுக்கு வட்டார வளர்ச்சி அதிகாரியும், நகராட்சிகளுக்கு அந்தந்த கமிஷனர்களும், பேரூராட்சிகளுக்கு செயல்அலுவலர்களும், மாவட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட ஊராட்சி

செயலரும் நியமிக்கப்படுவர். ஆனால், அனைத்து தனி அதிகாரிகளின் செயல்பாடுகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் கீழ் கொண்டு வரப்படும். இதனால், மாவட்ட

ஆட்சியரின் கட்டுப்பாட்டில், மொத்த திட்டங்களும், உள்ளாட்சியின் பணிகள் இயங்கும்.

தனி அதிகாரிகளின் பணி

ஊராட்சி தலைவரிடம் உள்ள, காசோலை எழுதும் அதிகாரம், தனி அதிகாரியிடம் வழங்கப்படும்

பேரூராட்சி மற்றும் நகராட்சி போன்ற அமைப்புகளில், அடிப்படை பணிகளை தனி அதிகாரிகளே மேற்கொள்வர்

நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில், மக்கள் பிரதிநிதிகளின் தீர்மானங்களின்றி, அடிப்படை திட்டங்கள் மேற்கொள்ளப்படும்

வெள்ளத்தடுப்பு, பாதாள சாக்கடை, மின் விளக்கு, குடிநீர் ஆகிய பிரச்னைகளை, தனி அதிகாரிகளே கவனிப்பர்

மக்கள் பிரதிநிதிகளின் கையொப்பம் இன்றி, இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு திட்டம் மற்றும் பசுமை வீடு திட்டம், ஆகியவை தனி அலுவலர்களே, பயனாளிகளிடம் வழங்குவர்

மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு மட்டுமே, வளர்ச்சி பணிகளை தனி அலுவலர்கள் மேற்கொள்வர்

உள்ளாட்சி பிரதிநிதிகளே இல்லாததால், தீர்மானங்கள் இன்றி, அனைத்து பணிகளையும், தனி அலுவலர்கள் செய்வர்

மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சி பணிகளை, மக்கள் பிரதிநிதிகளின், 'கமிஷன்' பிரச்னையின்றி, நடத்தப்பட வாய்ப்பு உள்ளது

மருத்துவ மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள்!

அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கான, மாணவர் சேர்க்கையும் இத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

தகுதிகள்: இந்திய மருத்துவக் கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* நீட் - எம்.டி.எஸ்.,: மாஸ்டர் ஆப் டென்டல் சயின்ஸ் (எம்.டி.எஸ்.,) எனும் பல் மருத்துவ மேற்படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு தான் நீட் - எம்.டி.எஸ்.,!

அகில இந்திய அளவில் 50 சதவீத பல் மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த பொது நுழைவுத்தேர்வில், பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பி.டி.எஸ்., படிப்பில் சேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* சி.இ.டி. - எஸ்.எஸ்.,: மெடிக்கல், சர்ஜிகல், மற்றும் பீடியாட்ரிக்ஸ் ஆகிய பிரிவுகளில், சிறப்பு பட்டம் பெற, அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வு தான், சி.இ.டி. - எஸ்.எஸ்., எனும், ‘சென்டர்லைஸ்டு எண்டரன்ஸ் டெஸ்ட் - சூப்பர் ஸ்பேஷாலிட்டி’ தேர்வு!

தகுதிகள்: இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் டிசம்பர் 12, 2016ம் தேதி நிலவரப்படி எம்.எஸ்., / எம்.டி., படிப்பில் பயிற்சியை நிறைவு செய்திருத்தல் அவசியம்.

* பி.டி.சி.இ.டி.,: பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, உடலியல், மனநலம், மயக்கவியல், ரேடியோ தெரபி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு தான், ‘போஸ்டு டிப்ளமோ சென்டர்லைஸ்டு எண்டரன்ஸ் டெஸ்ட்’!

தகுதிகள்: ஏதேனும் ஒரு மருத்துவ துறை பிரிவில், ‘போஸ்டு கிராஜூவேட் டிப்ளமோ’ படிப்பில் தேர்ச்சி பெற்று, 2 ஆண்டு பயிற்சியையும் நிறைவு செய்திருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:அனைத்து தேர்வுகளுக்கும் அக்டோபர் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:www.nbe.edu.in

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!