Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 20 October 2016

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவித்திடுக! அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

தமிழக அரசுஊழியர் மற்றும்
ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்குவது நடைமுறையாகும். 

மத்திய அரசுஊழியர்களுக்கு திருத்தப்பட்ட ஊதிய விகிதம் 1.7.2016-ல அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஊதிய விகிதம்அமல்படுத்தப்பட்ட சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படிஉயர்வு வழங்குவதற்கான பணிகள்நடைபெற்று வருகிறது.

ஆனால், தமிழகத்தில் புதிய ஊதியவிகிதம்வழங்கப்படாத நிலையில்நாளது வரை அகவிலைப்படிஉயர்வுவழங்காமல் இருப்பதுஏற்புடையதல்ல. இது அரசுஊழியர்களிடம்மிகுந்தவேதனையையும், அதிருப்தியையும்உருவாக்கியுள்ளது. தீபாவளிக்குமுன்பு அரசுஊழியர்களுக்குஅகவிலைப்படிஉயர்வு நிலுவைத்தொகைவழங்குவது என்பது பலஆண்டுகால நடைமுறையாகும்.

எனவே, மத்திய அரசின்அறிவிப்புக்குக்காத்திருக்காமல்தமிழக அரசுஊழியர்களுக்குஅகவிலைப்படிஉயர்வை 1.7.2016 முதல்வழங்குவதற்கானஅறிவிப்பைவெளியிட்டுதீபாவளிக்கு முன்பு அத்தொகைரொக்கமாக அரசுஊழியர்களுக்கு கிடைக்கவழிவகைசெய்ய தமிழகஅரசைக்கேட்டுக்கொள்கிறோம்.

இந்த ஆண்டு அக்டோபர்மாதஇறுதியில் 29-ஆம் தேதிதீபாவளிப்பண்டிகை வருகிறது.மாத இறுதி நாளாகஇருப்பதால்பொருளாதார நெருக்கடியுடனும்,மனச்சுமையுடனும் தீபாவளிப்பண்டிகையை கொண்டாடவேண்டிய சூழ்நிலைஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இதுபோன்றசூழ்நிலைகளில் பண்டிகைக்குமுன்பு மாத ஊதியத்தைஅரசுஊழியர்களுக்கு தமிழக அரசுவழங்கியுள்ளது. தற்போதுபுதுச்சேரி அரசு, தீபாவளிக்குமுன்புஅக்டோபர் மாத ஊதியம்

வழங்கஉத்தரவிட்டுள்ளது.

ஆகவே, தமிழக அரசுஊழியர்களும்தீபாவளிப்பண்டிகையை சிறப்பாகக்கொண்டாடும் வகையில் அக்டோபர்மாதஊதியத்தை முன்னதாகவழங்க வேண்டும்.

மேலும், தமிழக அரசில்பணியாற்றும் பெண்அரசுஊழியர்களுக்கு தற்போதுவழங்கப்பட்டு வரும்மகப்பேறுவிடுப்பு ஆறு மாதம் என்பதுஒன்பதுமாதமாக உயர்த்தப்படும்என்றுதமிழக முதல்வர் கடந்தசட்டமன்றக் கூட்டத்தொடரின்போதுஅறிவித்தார். முதலமைச்சரின்மேற்கண்ட அறிவிப்பின்அடிப்படையில் மகப்பேறு விடுப்பைஒன்பது மாதமாகஉயர்த்தியதற்கானஅரசாணைநாளது வரைவெளியிடப்படாமல்உள்ளது.

எனவே, முதலமைச்சர்சட்டமன்றத்தில் அறிவித்தபடிமகப்பேறு விடுப்பை ஆறுமாதத்திலிருந்து ஒன்பதுமாதமாகஉயர்த்தி அரசாணையைஉடனடியாக வெளியிடவேண்டும்என வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறோம்.

அண்ணாமலை பல்கலை கழக (DDE) தேர்வு முடிவுகள் 2016

CLICK HERE

TNTET:ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு அக்டோபர் 25 ஆம் தேதி அன்று முதல் வழக்காக விசாரணைக்கு வருகிறது.

ADVANCE LIST FOR Tuesday 25th October 2016

Sr. No.Case No.PartyPetitioner AdvocatesRespondent Advocates
1.SLP(C) No. 29245/2014V. LAVANYA & ORS.
Vs.
THE STATE OF TAMIL NADU & ORS.MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
MR. SUMIT KUMAR
MR. V. RAMASUBRAMANIAN
  
0615
WITH
 SLP(C) No. 29353-29354/2014K CHANDRASEKARAN AND ORS
Vs.

STATE OF TAMIL NADU & ORS.MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
 SLP(C) No. 29634/2014P.K.KARTHI AND ORS
Vs.

STATE OF TAMILNADU AND ORSMR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
 SLP(C) No. 29715/2014I SASIKALA
Vs.

STATE OF TAMIL NADU & ORS.MR. ANANDH KANNAN N.MR. M. YOGESH KANNA
 SLP(C) No. 32238-32239/2014P RADHA & ORS.
Vs.

STATE OF TAMIL NADU & ORS.MR. ANANDH KANNAN N.
 SLP(C) No. 32240/2014N.SETHURAMAN AND ORS
Vs.

STATE OF TAMILNADU AND ORSMR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
 SLP(C) No. 32241/2014K. VENKADESAN & ORS.
Vs.

STATE OF TAMIL NADU & ORS.MR. L. K. PANDEYMR. M. YOGESH KANNA
 SLP(C) No. 34978/2014R SIVAPRIYA AND ORS
Vs.

STATE OF TAMIL NADU AND ORSMR. N. RAJARAMAN
 SLP(C) No. 32160/2014N. KAYALVIZHI & ORS.
Vs.

THE STATE OF TAMIL NADU & ORS.MR. N. RAJARAMAN
 SLP(C) No. 34568/2014A. CHITHRA AND ORS
Vs.

SECRETARY. TO GOVT. SCHOOL EDUCATION.(TRB) DEPARTMENT., CHENNAI AND ORSMR. SATYA MITRA GARGMR. M. YOGESH KANNA
MR. R. NEDUMARAN
 SLP(C) No. 33127-33130/2014N. VANMATHI AND ORS. ETC.
Vs.

THE STATE OF TAMIL NADU AND ORS. ETC.MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
 SLP(C) No. 6543/2015K.V. PARAMANANTHAM AND ORS.
Vs.

STATE OF TAMIL NADU AND ORS.MR. ANANDH KANNAN N.
 SLP(C) No. 26461-26463/2015S. VIJAYAN & ETC. ETC.,
Vs.

THE STATE OF TAMIL NADU & ETC., ETC.,G.SIVABALAMURUGAN
MR. L. K. PANDEY
 SLP(C) No. 26464/2015P. SELVI & ORS.,
Vs.

THE STATE OF TAMIL NADU & ORS.,G.SIVABALAMURUGAN
MR. L. K. PANDEY
 SLP(C) No. 26256-26257/2015STATE OF TAMIL NADU, REP. BY ITS SECRETARY TO GOVT., SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT AND ORS.
Vs.

S. VINCENT AND ORSMR. M. YOGESH KANNAG.SIVABALAMURUGAN

 SLP(C) No. 31629-31642/2014P. MEKALA & ORS. ETC. ETC.
Vs.

THE STATE OF TAMIL NADU & ORS. ETC. ETC.

8ம் வகுப்புக்கு தனித்தேர்வு கட்டாயம்..கல்விக்குழு பரிந்துரை.

8ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு கட்டாயம் என்றும் ஆல் பாஸ் செய்யக் கூடாது என்றும் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய துணைக் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வதற்கு கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய துணைக் குழு ஒன்றை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியது. இந்தக் குழுவிற்கு பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் தல்ஜித் சிங் சீமா தலைமை ஏற்றுள்ளார்.இந்தக் குழு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் 189 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

கல்வியின் தரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட இந்த குழு, சில பரிந்துரைகளை அதில் அளித்துள்ளது.8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்க கூடாது என்று இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் தனித் தேர்வை அறிமுகம் செய்து நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.கல்விக்கான நிதி ஒதுக்கீடு மற்ற நாடுகளில் உள்ளது போன்று, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் ஆரம்ப பள்ளி மற்றும்துவக்கப் பள்ளிகளுக்கான செலவை அதிகரிக்க வேண்டும் என்றும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளன.மேலும், கிராமங்களில் உள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பை அதிகரிப்பதும், கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை போக்குவதும் மிக அவசியம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

32 லட்சம் DEBIT CARD PIN NO. களவு - உடனடியாக உங்கள் ATM. PIN நம்பரை மாற்றுங்கள்? வங்கிகளின் #HighAlert!

சில சமயங்களில் வங்கிகளிடம் இருந்து உங்கள் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். உங்கள் ஏ.டி.எம் பின்கோட் எண்ணை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இந்த செய்தி பாதுகாப்பை மேம்படுத்த மட்டுமே என வந்திருக்கும். 
நம்மில் பலர் அந்த செய்தியை ''ஜஸ்ட் லைக் தட்''  கடந்து செல்வதையே வாடிக்கையாக வைத்திருப்போம். ஆனால் அதன் விளைவு எவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறது தெரியுமா? 32 லட்சம் டெபிட் கார்டுகளின் பின் நம்பர்கள் களவு போய்யுள்ளதாகவும், இதில் பெருமபாலான கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகள் பின் நம்பரை மாற்ற சொல்வது ஏன்?
இந்தியாவில் 32 லட்சம் டெபிட் கார்டுகளை மாற்றித் தரவோ அல்லது  வாடிக்கையாளர்களை பின் நம்பரை மாற்றவோ சொல்ல வங்கிகள் முடிவெடுத்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் சீனாவில் அங்கீகாரமற்ற முறையில் இந்த எண்கள் பயன்படுத்தப்பட்டு கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படுகிற‌து என்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.  இந்த பரிமாற்றங்கள் சீனாவில் ஏ.டி.எம், பொருட்களை பர்சேஸ் செய்யும் இடம் போன்ற இடங்களில் பதிவாகியுள்ளது.

வாடிக்கையாளரின் தகவல்கள் திருடப்பட்டு அதே போன்ற கார்டுகள் க்ளோனிங் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. மொத்தமுள்ள 32 லட்சம் கார்டுகளில் 26 லட்சம் கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டு வகைகளை சேர்ந்தது என்றும், மீதமுள்ள 6 லட்சம் கார்டுகள் ரூ-பே கார்டுகள் என்றும் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான  கார்டுகள் எஸ்.பி.ஐ மற்றும் ஹச்.டி.எஃப்.சி வங்கிகளைச் சேர்ந்த கார்டுகளாக உள்ளன.
எஸ்.பி,ஐ 6 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இந்த விஷயம் தொடர்பாக புதிய கார்டுகளை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறுகிறது. வங்கிகள் எண்களை மாற்ற சொல்கிறது என்பதை சாதாரண விஷயமாக கருதாமல் அதனைக் கொஞ்சம் சீரியசாக அணுகுங்கள். வங்கிகள் அடிக்கடி பின் நம்பரை மாற்றுவது நினைவில் வைத்துக் கொள்ள கடினமாக தான் இருக்கும் ஆனால் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்றிவிடுங்கள் என்கின்றன வங்கிகள்.
உங்கள் எண்கள் இந்த 32 லட்சம் எண்களில் இருக்கறதோ? இல்லையோ? பாதுகாப்புக்காக உங்கள் ஏ.டி.எம்  பின் நம்பரை உடனடியாக மாற்றி விடுங்கள்.
தகவல்கள் எப்படி திருடப்படுகின்றன?
நமக்கு மட்டுமே தெரிந்த நமது பின் நம்பர், கார்டு எண்கள் எப்படி திருடப்படுகின்றன. அதுவும் சீனாவில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்றால் அதற்கு பின்வரும் காரணங்கள் முக்கியமானவையாக கூறப்படுகின்றன.
1. பர்சேஸ் செய்ய ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தும் இடத்தில் ''ஸ்கிம்மர்கள்'' எனும் கருவி ஸ்வைப் செய்யும் கருவியுடன் இணைக்கப்பட்டு மொத்த தகவலும் எடுக்கப்படலாம்.
2. ஏ.டி.எம் நிலையங்களிலேயே ஸ்கிம்மர்கள் பொருத்தப்பட்டு அனுமதியற்ற முறையில் தகவல்கள் திருடப்படலாம்.
3. போலியான இணையதளங்களில் பணப்பரிவர்த்தனை செய்வது முறையற்ற முறையில் ஸ்க்ரீன் கேப்சர் செய்யப்படுவது.
4. அதிகாரபூர்வமற்ற வங்கி ஆப்ஸ்கள் மூலமாகவும் தகவல்கள் திருடப்படுகிறது.
இப்படியெல்லாம் திரட்டப்படும் தகவல்கள் குறிப்பிட்ட பெரிய தொகைக்கு  விற்கப்படுகிறது. இப்படித் தான் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு பணம் திருடுபோகிறது.

என்ன செய்ய வேண்டும்?
1. வங்கிகளின் இணையதளங்களை நீங்களே டைப் செய்து செல்லுங்கள். இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்-ல் வரும் லின்க்களை க்ளிக் செய்யாதீர்கள்.
2.வங்கிகளின் முறையான ஆப்ஸை மட்டுமே பயன்படுத்துங்கள்.
3. பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் இங்கெல்லாம் டெபிட் கார்டை பயன்படுத்தும்போது அந்த கருவிகளில் வித்தியாசமாக ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள்.
4. ஆன்லைன் ஆர்டர்களை கூடியமட்டில் கேஷ் ஆன் டெலிவரியாக செய்யுங்கள்
5. ப்ரெளசிங் சென்டர்களில் பணப்பரிவர்த்தனை செய்வதை தவிருங்கள்.

வெற்றிக்கு தேவை 5 ‘சி’!

வெற்றி பெற விரும்புகிறவர்கள், அதற்கு மூலாதாரமாக விளங்கும் 5‘சி’களை வளர்த்துக் கொண்டு, அவற்றைச் செதுக்கிச் செம்மை படுத்திக் கொண்டால் நொடிதோறும் வெல்லலாம். வாழ்க்கையை வரலாறாக்கி சாதனைச் சரித்திரத்தில் நிரந்தர இடம் பிடிக்கலாம்.

அது என்ன 5‘சி’ என்றுதானே கேட்கிறீர்கள். இதோ

1. ஒழுங்கு நெறிமுறைகள் - Character

திறமை இருந்தால் ஒருவனால் வெற்றி சிகரத்தை அடைய முடியும்; ஆனால் ஒழுக்கம் இல்லை என்றால் அங்கு நிலைத்து நிற்கமுடியாது. ஆகவே எல்லாவற்றுக்கும் நன்னடத்தையே அஸ்திவாரம்.

2. துணிச்சல் - Courage

நன்னடத்தையுடன் தொடர்ந்து நடந்து கொள்வதற்கு நெஞ்சில் துணிச்சல் வேண்டும். சூழ்நிலைகளுக்குள்ளாக கரைந்து போகாமல், தனது ஒழுக்க நெறியில் நின்று, நேர்மையான முறையில் செயல்படுவதற்கும், அப்பளுக்கற்ற நெறியில் செல்வதற்கும் துணிச்சலே துணை நிற்கிறது.

3. அறிவாக்கத்திறன் - Compentency

இனிப்பு இருந்தால் தான் அது கரும்பு; இல்லாவிட்டால் அது மூங்கலின் தம்பி! காரம்  இருந்தால் தான் அது மிளகாய் இல்லாவிட்டால் அது வெறும் குப்பை! அதுபோல தான் அறிவாக்கத் திறன் இருந்தால் தான் ஒருவனால் செயல் வீரனாக முடியும். அறிவு மட்டும் போதாது, அந்த அறிவைச் செயலாக்கும் திறனும் வேண்டும். இதை தான் அறிவாக்கத் திறன் என்று சொல்கிறார்கள்.

4. உள்ளார்ந்த செயலுறுதி - Commitment

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதும், எடுத்த காரியத்தை முடித்துக் காட்டுவதும் திட்டமிட்டவாறு செயலாற்றி வெற்றிக் கனியைப் பறிப்பதற்கு நெஞ்சில் உறுதி இருக்க வேண்டும்.

5. படைப்பாற்றல் திறன் - Creativity

எந்தச் செயலையும் மேன்மையாகவும், சுலபமாகவும், சிக்கனமாகவும் செய்ய உதவுவது தான் படைப்பாற்றல் திறன். எதையும் வித்தியாசமாச் சிந்தித்து கற்பனை நளத்துடன் உயர்வாகச் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். எதையும் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற தீவிர எண்ணமே படைப்பாற்றலைத் தோற்றுவிக்கிறது.

-முனைவர் கவிதாசன்.

மின்வாரியம் நடத்திய 750 பணி இடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு.

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலி யாக உள்ள 750 பதவிகளுக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக இருக்கும் 750 பல்வேறு பதவிகளுக்கு அண்ணா பல்கலை கழகம் வாயிலாக கடந்த ஜூன் 19 மற்றும் ஆகஸ்ட் 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடத்தப்பட்ட எழுத்து தேர்வின் முடிவு நேற்று (19-ம் தேதி) வெளியிடப்பட்டுள்ளது. 
தேர்வர்கள் அவர்களுடைய மதிப் பெண்களை www.tangedcodirect recruitment.in என்றஇணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள இடைக்கால தடை உத்தரவு நீக்கம் செய்யப்பட்ட பிறகு 525 (500 மின்னியல் + 25 இயந்திரவியல்) தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் 900 கள உதவியாளர்கள் பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப் படும்.தமிழக அரசால் நிர்ணயம் செய் யப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 1:5 என்ற விகிதத் தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நவம் பர் 2-ம் தேதி முதல் நேர்காணல் நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது. நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தேதி, இடம் மற்றும் நேரம் தொடர்பான விவரங்கள் இணையதளம் வாயிலாக பின்னர் தெரிவிக்கப் படும்.

நேர்முக தேர்வுக்கு பிறகு, எழுத்துத் தேர்வுக்கு 85 சதவீதமும், நேர்முக தேர்வுக்கு 15 சதவீதமும் (10 மதிப்பெண் நேர்காணலுக்கும், 5 மதிப்பெண் கல்வித் தகுதிக்கும்) கணக்கீடு செய்து இறுதியாக இட சுழற்சி முறையை பின்பற்றி நியமனம் செய்யப்படுவார்கள். 21 நபர்களின் தேர்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.எழுத்துத் தேர்வு மதிப்பெண் குறித்த விவரங்களுக்கு தொலைபேசி எண். 044-22358311 மற்றும் 044-22358312மூலமாக (காலை 10.30 மணி முதல் மதியம் 5.30 மணி வரை) தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MINORITY SCHOLARSHIP விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - விண்ணப்பிக்கும் வழிமுறைகள், அறிவுரைகள் - செயல்முறைகள்


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!