Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 23 October 2016

வரலாற்றின் பின்னணி சொல்லும் பண்டைக்கால நாணயங்களை மாணவர்களுக்கு காட்சிப்படுத்தும் ஆசிரியர் சுரேஷ்

10,000 primary schools in Kerala to get free WiFi !!

Thiruvananthapuram, Oct 23 As many as 10,000 lower primary and upper primary government schools in Kerala will start getting 2Mbps Wi-Fi broadband internet powered by BSNL from November 1 -- the state's Foundation Day, official said on Sunday.

The IT@School Project has been providing broadband internet connection to close to 5,000 high schools, higher secondary schools and educational offices from 2007 onwards, said K. Anvar Sadath, Director of the project by the state government.

'With the addition of broadband internet to primary section also, the state's school broadband internet network will cover over 15,000 connections and this would be the largest and first of its kind in the country,' Sadath added

இனி ஆளுநரை " மாண்புமிகு " என்று அழைக்க வேண்டும் !!

வாட்சாப்பில் வாய்ஸ் மெஸேஜ் !

Whats appல் வலது பக்கம் மேலே 📎 இந்த அடையாளத்தில் click செய்து Audio வில் click செய்து
Record with whatsapp என்றதில் click 
செய்தால் அமர்த்தி பிடிக்காமலேயே  hands free ஆக Recording செய்யலாம். தேவைப்பட்டால் play செய்து கேட்ட பிறகு Send செய்யலாம், இல்லை cancel லும் செய்யலாம். குறைந்த KB மட்டுமே file வரும்.

விடைபெற்றது 'சஞ்சாயிகா' : கேள்விக்குறியானது மாணவர்களின் சேமிப்பு பழக்கம் !

பள்ளிக்கூடத்துக்கு போக மறுத்து அடம்பிடித்தால் போதும், வழக்கமான பாக்கெட் மணியை விட, 50 பைசா கூடுதலாகவே கொடுத்து அனுப்புவார் அப்பா. வகுப்பறைக்குள் நுழைவதற்குள்ளே, மிட்டாய் வாங்குவதிலும், பயாஸ்கோப் வாங்குவதிலும் பாக்கெட் மணி கரைந்து விடும். சில குழந்தைகள் மட்டுமே அதை மண் உண்டியலில் சேமித்து வைப்பார்கள்.

அலமாரியில் துவங்கி அக்காவின் ஜியாமெட்ரி பாக்ஸ் வரை, கிடைக்கும் சிறுசிறு தொகையை, சேமிப்பதற்கென்றே பள்ளிகளில், 'சஞ்சாயிகா' திட்டம் இருந்தது. கையில் காசு கிடைக்கும் போதெல்லாம், ஆசிரியரிடம் கொடுத்து, தங்கள் பெயரில் வரவு வைத்துக் கொள்வார்கள். இதில், மாணவர்களுக்கு பாஸ்புக் வசதி வேறு.

இதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர், தினமும் சேரும் தொகையை, அருகிலுள்ள தபால்நிலையத்தில் மாணவர்கள் பெயரில் செலுத்தி விடுவார். சேமிப்புப் பணத்தை, ஆண்டு இறுதியிலோ அல்லது தேவைப்படும்போதோ எடுத்துக்கொள்ளலாம். இதற்கு, 3 சதவீத வட்டி கிடைக்கும். மாணவர்களால் மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்த இத்திட்டத்தினால், சிக்கனம், சேமிப்போடு சேர்ந்து நிர்வாகத் திறமையையும் மாணவர்களிடையே வளர்ந்தது.

ஆனால் இன்று, ஆறாம் வகுப்பு படிக்கும் பையனுக்கு, 'சேவிங்ஸ் அக்கவுன்ட்' இருக்கிறதோ இல்லையோ, பேஸ்புக் அக்கவுன்ட் துவங்கியாகிவிட்டது.

இப்படியொரு சூழலில், குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை விதைத்த, 'சஞ்சாயிகா' திட்டம், வேரோடு பிடுங்கி எறியப்பட்டு விட்டது.

ஒரு சில பள்ளிகளில் மட்டுமே நடைமுறையில் இருந்த இத்திட்டத்தை, அக்.,1 முதல் முழுவதுமாக நிறுத்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பை தபால்துறை வெளியிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற தபால்துறை அலுவலர் ஹரிஹரன் கூறியதாவது:

அப்போது எல்லாம், 10 பைசா, 25 பைசாவுக்கு 'சேவிங்ஸ் ஸ்டாம்ப்' கிடைக்கும். அந்த ஸ்டாம்புகளை சேகரித்து அட்டையில் ஒட்டி, தபால்

நிலையங்களில் கொடுத்து கணிசமான தொகையை மாணவர்கள் சேமித்து வந்தனர். பின், 1970ல் மத்திய அரசின் தேசிய சேமிப்பு நிறுவனம் மூலம் பள்ளிகளில் 'சஞ்சாயிகா' திட்டம் துவங்கப்பட்டது.

சேமிப்புக்கான அடிப்படையை மாணவர்கள் வளரும் பருவத்திலே கற்றுக்கொள்ள இத்திட்டம் அரிய வாய்ப்பாகவே இருந்தது. ஆனால், பல்வேறு கவர்ச்சிகர திட்டங்களால், 'சஞ்சாயிகா' திட்டம் அடியோடு முடங்கிவிட்டது. இந்த நுாற்றாண்டு துவக்கத்திலிருந்தே ஓரிரு பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளிகளில் இத்திட்டம் செயலிழந்து விட்டது என்பதே உண்மை.

இவ்வாறு அவர், கூறினார்.

கோவைபேரூர் தமிழ்க்கல்லுாரி, பேராசிரியர் ஞானப்பூங்கோதை கூறுகையில், ''உறவினர்கள் ஊர் திரும்பும்பொழுது, ஊர்க் காசு கொடுத்துச் செல்லும் பழக்கம் இருந்தது. மொத்தமாக சேரும் தொகையை, 'சஞ்சாயிகா' அட்டையில் வரவு வைக்கும் வரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.

சேமிப்பு தொகையை வைத்தே, சைக்கிளுக்கு காற்றடிப்பது, பஞ்சர் பார்ப்பது என்று அனைத்து தேவைகளையும் பூர்த்தியாகிவிடும். இன்று என் வீட்டு பட்ஜெட்டை திறமையாக கையாளுகிறேன் என்றால், அன்று கிடைத்த சேமிப்பு பழக்கமே முக்கிய காரணம். 'சஞ்சாயிகா'வின் இழப்பு இன்றைய தலைமுறையினருக்கு பேரிழப்பாகும்,'' என்றார்.
மாணவன் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''தற்போது, பிளஸ் 2 படிக்கிறேன். ஒன்றாம் வகுப்பு முதல், 'சஞ்சாயிகா' சேமிப்பு திட்டத்தில் சேகரித்து வருகிறேன். தினமும், அப்பா கொடுக்கும் பத்து ரூபாயை, உண்டியலில் சேர்த்து வைத்து, அதை அப்படியே எண்ணிப்பார்க்காமல் பள்ளியில் செலுத்தி விடுவேன். பள்ளியிலிருந்து வெளியேறும்போது கணக்கு முடிக்கலாம் என்றிருந்தேன். அதற்கான வாய்ப்பை தபால்துறையே ஏற்படுத்தியதால், வேதனையாக உள்ளது,'' என்றார்.

குழந்தை ஆங்கிலம் பேசத் தயங்குகிறதா? கூச்சம் போக்கும் 10 டிப்ஸ்!

ஒரு குழந்தையை ஐந்து, ஆறு வயதுவரை தாய்மொழியிலேயே பேசிப் பழக்கும்போது, அது மனதில் ஆழமாக தங்கிவிடும். அதன்பின் எளிதாக பேசுவார்கள். அதன்பிறகு, இன்னொரு மொழியையும் கற்றுக்கொள்வதும் அவசியமாகிறது. அதில் பலரின் தேர்வு ஆங்கிலமாவே இருக்கிறது.

தங்கள் பிள்ளைகள், அழகாகவும் சரியாகவும் ஆங்கிலம் பேசவேண்டும் என்று ஆசைப்படாத பெற்றோர்களே இல்லை என்றே சொல்லலாம். அதற்காக ஸ்போக்கன் இங்கிலிஸ் புக்ஸ் வாங்கித் தருவது கிளாஸ்க்கு அனுப்புவது என பலவித முயற்சிகளையும் எடுப்பார்கள். ஆனாலும் பல பிள்ளைகள் ஆங்கிலத்தில் உரையாடத் திணறுவதைப் பார்க்க முடியும். அதற்கு முதல் காரணம் தவறாக பேசிவிடுவமோ என்கிற பயமே. தவறு என்பது சரியாக செய்ய உதவும் நண்பன் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கே இருக்கிறது. அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என, ஆங்கில ஆசிரியர் ஶ்ரீ.திலிப் கூறும் டிப்ஸ்கள் இதோ:

1. குழந்தைகள் ஆங்கிலத்திலேயே வாக்கியங்களை அமைத்து பேசுவது தொடக்க நிலையில், சிரமமான ஒன்று. அதனால், அவர்கள் தமிழில் பேசுகின்ற வாக்கியங்களுக்கு, இணையான ஆங்கில வாக்கியங்களைப் பேசப் பழக்குங்கள்.

உதாரணமாக: "அம்மா! இங்கே வா!" என்பதை "Mother come here" என்று சொல்ல வைக்கலாம்.

2. வீட்டில் பேசும்போது, சின்னச் சின்ன வாக்கியங்களைப் பேச பழக்கப்படுத்துங்கள். காலையில் டிபன் சாப்பிடும்போது, உங்கள் மகன்/மகள் பூரியை விரும்பி சாப்பிடுகிறார் என்றால், I like puri.. என்று சொல்ல வைத்து, 'நீ எதையெல்லாம் விரும்புகிறாயோ அதையெல்லாம் 'பூரி' என்ற சொல்லை எடுத்துவிட்டு பேசு' எனச் சொல்லுங்கள். ஏதேனும் தவறாக சொன்னால் மாற்றிச் சொல்லப் பழக்குங்கள்.

3.காலையில் எழுந்ததும் 'Good morning' என்று வீட்டில் உள்ள அனைவருக்கும் சொல்வதை வழக்கமாக்குங்கள். நீங்கள் சொல்வதைப் பார்க்கும் பிள்ளைகள் அதேபோல பேசத் தொடங்குவார்கள். பிறகு, Have a nice day" போன்ற வாழ்த்துகளும், பிறந்த நாள் வீட்டுக்குச் செல்லும்போது ஆங்கிலத்தில் வாழ்த்துகள் சொல்ல, வீட்டிலேயே சின்னதாக ஒத்திகைப் பார்த்துவிட்டுச் செல்லலாம். உங்கள் அலுவலகத்தில் ஏதேனும் முக்கியமான மீட்டிங்க்கில் கலந்துகொள்ளப் போகிறீர்கள் என்றால் அதை உங்கள் பிள்ளையிடம் கூறி, ஆங்கிலத்தில் வாழ்த்தச் சொல்லுங்கள்.

4. கேள்விக்கு பதில் சொல்வது என்பதை மாற்றி, பதிலை நீங்கள் கூறி இதற்கு என்ன கேள்வி கேட்கப்பட்டிருக்கும் என யூகிக்கச் செய்யுங்கள். அதையும் எளிமையான உதாரணங்களிலிருந்தே தொடங்குங்கள்.

"I am 40 years old" என்ற பதிலை இன்று நான் ஒருவரிடம் சொன்னேன். அப்படியென்றால் என்னிடம் என்ன கேட்டிருப்பார்கள் எனக் கேட்கலாம்.

5. பிள்ளைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது அங்கு பார்க்கும் பொருட்களுக்கான ஆங்கிலப் பெயர்களைக் கூறுங்கள். காய்கறி கடைக்குச் சென்றால் ஒவ்வொரு காய்கறியின் ஆங்கிலப் பெயரையும் சொல்லுங்கள். வீடு திரும்பும்போது என்னவெல்லாம் வாங்கினோம் என்பதை செக் பண்ணும் விதமாக, காய்கறியின் பெயரை நீங்கள் தமிழில் சொல்ல, பிள்ளை ஆங்கிலத்தில் சொல்லுமாறு விளையாட்டைப் போல செய்யுங்கள். இது அவர்களின் ஆங்கிலச் சொல் வங்கியை அதிகரிக்கும். ஆங்கிலத்தில் பேசுவதற்கு இது மிகவும் முக்கியம்.

6. பிள்ளைகளின் பழக்கங்களை வைத்து ஒரு பட்டியல் தயாரிக்கலாம். தன்னால் எதெல்லாம் முடியும் என்பதை சொல்ல வைக்கலாம்.

I can ..........

பிள்ளைகள் தங்களால் முடியும் என நினைக்கிற விஷயங்களால் நிரப்ப வேண்டும்.

7. இரவில் தூங்கும்முன் கதைகள் கேட்கும் பழக்கம் பல குழந்தைகளுக்கும் இருக்கும். அந்த நேரத்தில், ஆங்கிலத்தில் Bed time stories சொல்லலாம்.  கதையின் வழியாக ஆங்கிலச் சொற்களைக் கேட்கும்போது, அதற்கான அர்த்தங்களை எளிதாக புரிந்துகொள்வார்கள். உரையாடும் தன்மையும் அதிகரிக்கும்.

8. Bed time stories கேட்டுப் பழகிய குழந்தைகளுக்கு சின்னச் சின்ன கதைகள் கொண்ட புத்தகங்களைப் படிக்க வைக்கலாம். இது வாசிப்பு பழக்கத்தையும் அதிகரிக்கும். நீங்களும் அந்தக் கதையைப் படித்து, கதையில் இருக்கும் கதாபாத்திரங்களாக பேசிப் பழகலாம். உதாரணமாக... கதையில் யானை காட்டுக்குள் தன் குட்டியைத் தேடி, பல விலங்குகளிடம் கேட்டுக் கண்டுபிடிக்கும் கதை எனக் கொண்டால், யானையாக உங்கள் பிள்ளையும் சந்திக்கும் விலங்குகளாக நீங்களும் உரையாடலாம்.

9. டிக்‌ஷனரி விளையாட்டு ஆடலாம். உங்கள் குழந்தைக்கென்று தனியான ஆங்கில டிக்‌ஷனரி ஒன்றை வாங்கி கொடுத்துவிடுங்கள். உங்களுக்கு என ஒன்று இருக்கிறதுதானே. காலையில் செய்தித்தாள் வந்ததும், இரண்டு டிக்‌ஷனரிகளையும் தயாராக வைத்திருங்கள். பிறகு, குழந்தையைக் கண்ணை மூடிக்கொண்டு ஒரு வார்த்தையைத் தொடச் சொல்லுங்கள். அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை உங்களில் யார் முதலில் டிக்‌ஷனரிய
பார்த்துக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை ஒரு விளையாட்டாக ஆடுங்கள். பிறகு அந்த வார்த்தையைக் கொண்டு வாக்கியங்களை உருவாக்குங்கள்.

10. இறுதியானதுதான் மிக முக்கியமானது. தவறு என்பது எல்லோருமே செய்யக் கூடியதுதான். அதிலும் கற்றல் நிலையில் இருப்பவர்கள் பல தவறுகளைச் செய்வார்கள். உங்கள் குழந்தையும் ஆங்கிலத்தில் பேசும்போது தவறாக பேசிவிட்டால், கிண்டல் செய்வதுபோல சிரித்துவிடாதீர்கள். மேலும் 'இதுகூட தெரியவில்லையா' என்றோ, 'இதுவே சொல்லத் தெரியவில்லை என்றால் இன்னும் எவ்வளவு இருக்கிறது அதையெல்லாம் எப்படித்தான் பேசப் போகிறாயோ' என 'நெகட்டிவ்' வார்த்தைகளைத் தவறியும் சொல்லிவிடாதீர்கள். அப்படிச் சொல்லவிட்டால் அதுவே ஆங்கில உரையாடலை பெரிய அளவில் பாதிக்கும்.

அனைத்து மாவட்ட மாணவர்கள் விபரங்களை STUDENT POOLலிருந்து எளிதில் விபரங்களை ஈர்க்க பள்ளிகளின் பட்டியல் WITH UDISE CODE

குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம் பரிசு- தனியாரிடம் இருந்து அரசுப்பள்ளிக்கு மாறும் குழந்தைகள்!

தஞ்சாவூர் மாவட்டம். பட்டுக்கோட்டை நோக்கி பேருந்து விரைகிறது. காகங்களின் கரைதலில் கரைந்துக்கொண்டிருக்கிறது அதிகாலை இருட்டு. வாய்க்காலில் சிறுவர்கள் பாய்கிறார்கள். எங்கும் பசுமை. நெற்பயிர்கள் முளைவிட்டிருக்கின்றன. பெருகுமோ, கருகுமோ தெரியவில்லை. காவிரித் தாயை நம்பிக் காத்திருக்கிறார்கள் விவசாயிகள். ஒரு மணி நேரம் கடந்திருக்கும். படிப்படியாகக் குறைகிறது பசுமை. வயல்களில் முளைத்திருக்கின்றன திடீர் கட்டிடங்கள். குளங்கள் காய்ந்துக்கிடக்கின்றன. குளம் ஒன்றில் கழிவு நீர் பாய்கிறது. குப்பைகள் குவிந்துக்கிடக்கின்றன. பன்றிகள் மேய்கின்றன. பரபரப்பாக இயங்குகிறது பட்டுக்கோட்டை நகரம். இங்கிருந்து அரைமணி நேரப் பயணம். தென்னை மரங்கள் சூழ வரவேற்கிறது வேப்பங்குளம் பஞ்சாயத்து!

“வாங்க மைடியர், வாங்க...” ஓடி வந்து கட்டியணைத்து வரவேற்கிறார் சிங்கதுரை. வேப்பங்குளம் பஞ்சாயத்துத் தலைவர். உடல்மொழியில் ஊற்றெடுக்கிறது உற்சாகம். துள்ளல் நடை. வழியில் பெண்மணி ஒருவர் வேனில் அரசுப் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டிருந்த காட்சி வித்தியாசமாக இருக்கிறது. குழந்தையாக மாறிய சிங்கதுரை, ‘ஹாய் மைடியர்ஸ்... ஹாய் மைடியர்ஸ்...’ என்று குழந்தைகளின் கன்னம் வருடி அனுப்புகிறார். “நம்ம கிராமப் பஞ்சாயத்தைப் பத்தி நான் சொல்ல மாட்டேன் மைடியர். நிறையோ, குறையோ மத்தவங்கதான் சொல்லணும். நீங்க பத்திரிகையாளர்தானே, உங்கக் கடமையை நீங்க செய்யுங்க. ஊருக்குள்ள நீங்களே விசாரிச்சி தெரிஞ்சிக்கோங்க... என்ன சொல்றாங்களோ அதை எழுதுங்க” என்கிறார்.

ஊரில் இருந்து கொஞ்சம் தள்ளியிருக்கிறது வேப்பங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. காலை மணியடிக்கிறது. உற்சாகமாக ஓடுகிறார்கள் குழந்தைகள். தனது குழந்தையை அழைத்து வந்திருந்தார் வடிவழகி. அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம். “எனக்கு மூணு குழந்தைங்க. மூணு பேரும் தனியார் பள்ளியில்தான் படிச்சாங்க. இவளும் அங்கேதான் படிச்சா. சிங்கதுரை அய்யாதான் எங்கள்ட்ட பேசி அங்கிருந்து இவளை இந்த அரசுப் பள்ளியில் சேர்த்தார். கூடவே, குழந்தை பேருல அஞ்சாயிரம் ரூபாய் டெபாசிட் பண்ணியிருக்காரு...” என்கிறார். ஆச்சர்யமாக இருந்தது. பள்ளிக்குள் நுழைகிறோம்.

தனது குழந்தை ஹாசினியுடன் வடிவழகி

என்ன இல்லை எங்கள் பள்ளியில்?

“1944-ம் வருஷம் தொடங்குன பாரம்பரியம் மிக்க பள்ளிக்கூடம்ங்க இது. ஒருகாலத்துல இங்கிட்டு ஆயிரம் பேரு படிச்சாங்க. அப்ப எல்லாம் தனியார் பள்ளிகள் கெடையாது. எல்லாரும் இங்கிட்டுதான் படிக்கணும். சுத்து வட்டாரத்துலேயே பிரபலமாக இருந்துச்சு இந்தப் பள்ளிக்கூடம். 2000-களின் தொடக் கத்துலதான் பள்ளிக்கு ஆபத்து முளைச்சது. சுத்துவட்டாரத்துல அங்கிட்டும் இங்கிட்டுமா தனியார் பள்ளிகளைத் தொடங்குனாங்க.

ஊரெல்லாம் ‘இங்கிலீஷ் மீடியம்’னு போஸ்டர் ஒட்டுனாங்க. எங்க பள்ளியில் படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை குறைய தொடங்குனது. இப்போ சுத்துவட்டாரத்துல சுமார் 20 தனியார் பள்ளிகள் இருக்குது. பத்து வருஷத்துக்கு முன்னாடி 600 பேரு படிச்ச இந்த பள்ளியில் கடந்த வருஷம் மாணவர் எண்ணிக்கை 40-க்கும் கீழே போயிருச்சு. நெருக்கியடிச்சு உட்கார்ந்த வகுப்பறைகள் எல்லாம் வெறிச்சோடியிருச்சு.

நாங்க பல வருஷமா அர்ப்பணிப்பு உணர்வோடு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்திருப்போம். செயல்வழி கற்றலில் ஆடிப் பாடி சொல்லித் தந்திருக்கோம். ஆனால், ஒவ்வொரு முறையும் பெற்றோர் டி.சி-யைக் கேட்டு வரும்போதெல்லாம் எங்களுக்கு அழுகை வந்திடும். ஏதோ சொந்தக் குழந்தையைப் பிடுங்கிட்டு போற மாதிரி இருக்கும். நாங்க பெற்றோர்கிட்ட கெஞ்சுவோம். வாதாடுவோம்.

ஆனா, ஆங்கில மோகத்துக்கு முன்னாடி எதுவும் எடுபடலை. இத்தனைக்கும் ‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் கீழ் செயல்படுகிற பள்ளிக்கூடம்ங்க இது. ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு ஆசிரியர் வீதம் ஆறு ஆசிரியர்கள் இருக்காங்க. அதுல நாலு பேரு முதுநிலை பட்டதாரிகள். சுத்துவட்டாரத்திலேயே பெரிய வளாகம் எங்க பள்ளிக்கூடம்தான்.

கடந்த மூணு வருஷமா அறிவியல் கண்காட்சியில் தொடர்ந்து ‘இன்ஸ்பையர்’ விருது வாங்கிட்டு வர்றோம். தரமான கட்டி டங்கள் இருக்கு. தனித்தனி வகுப்பறைகள் இருக்கு. நூலகம் இருக்குது. சத்துணவுக் கூடம் இருக்கு. அதுக்கு காஸ் இணைப்பு இருக்கு. விதவிதமாக மதிய உணவு கொடுக் கிறோம். பஞ்சாயத்து சார்பில் கழிப்பறை சுத்தமாக பராமரிக்கிறாங்க. ஓடியாட மைதானம் இருக்கு. என்னங்க எங்க பள்ளிக்கு குறைச்சல்? ஆனா, தீப்பெட்டியாட்டம் இருக்குற தனியார் பள்ளியை நோக்கி பெற்றோர்கள் ஓடுறாங்க.

அரசுப் பள்ளியை சூழ்ந்த ஆபத்து!

இந்த சூழல்லதான் போன ஜூன் மாசம் திடீர் ஒரு தகவல் இடி மாதிரி வந்து இறங்குது. போதுமான எண்ணிக்கையில மாண வர்கள் இல்லாததால் எங்க பள்ளியை தொடக்கப் பள்ளியாக தரம் குறைக்க போறதா தகவல் வந்துச்சு. ஆசிரியர்களை யும் குறைச்சிடுவாங்களாம். என்ன செய்யற துன்னு தெரியாம தவிச்சு நின்னோம். இந்தத் தகவல் பஞ்சாயத்துத் தலைவர் சிங்கதுரைக் கிட்ட போனது. நேரடியா பள்ளிக்கூடத் துக்கே வந்தவர், எல்லாத்தையும் பொறுமையா கேட்டுக்கிட்டார். ‘கவலைப்படாதீங்க. பள்ளிக்கூடத்துக்கு நான் குழந்தைகளைக் கூட்டியாறேன். என்னை நம்புங்கன்னார். மறுநாளே தனியார் பள்ளிக்கூடத்து சீருடை யோட ரெண்டு குழந்தைகளைக் கூட்டியாந்தார். ரெண்டு மாசத்துல 10 பேரை சேர்த்துட்டார். தேவையான அளவு எண்ணிக்கையும் கூடுச்சு. தரம் குறைக்கறதுல இருந்து எங்க பள்ளிக் கூடம் தப்பிடுச்சு” என்கிறார்கள் ஆசிரியர்கள்.

உயர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை!

அரசுப் பள்ளிக்கு வரவழைக்க அப்படி என்ன செய்தார் சிங்கதுரை? கிராம சபைக் கூட்டத்தை கூட்டினார். மக்களை வரவழைத்தார். நமது குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை எடுத்துச் சொன்னார். குழந்தைகள் தாய்மொழியில் கற்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். குழந்தைகள் சுமையில்லாமல் சுதந்திரமாக படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனாலும், மக்கள் மனம் மாறவில்லை. இதனால் அதிரடியாக ஒரு திட்டத்தை அறிவித்தார்.

அரசுப் பள்ளியில் தங்களது குழந்தையைச் சேர்ப்பவர்களுக்கு அந்தக் குழந்தையின் பெயரில் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும் என்றார். இரண்டே மாதங்களில் 10 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்கு இடம்பெயர்ந்தார்கள். சொன்னபடியே பணத்தை குழந்தைகள் பெயரில் முதலீடு செய்தார். படிப்படியாக அரசுப் பள்ளியில் குழந்தைகள் சேரத் தொடங்கினார்கள். பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 52-ஆக உயர்ந்திருக்கிறது. தொடக்கப் பள்ளியாக தரம் குறைக்கும் ஆபத்தும் நீங்கியது.

வரும் கல்வியாண்டில் பள்ளிக் கூடத்தின் மாணவர்கள் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்துவதாக உறுதியளித் திருக்கிறார் சிங்கதுரை. இவ்வாறு சேர்க் கப்படும் குழந்தைகளுக்கு சீருடை, காலணி, இலவசம். தனியார் பள்ளிகள் வேன்கள் மூலம் குழந்தைகளை அழைத்துச் செல்வதை கவனித்தவர், அரசுப் பள்ளிக்கும் வாடகை வேனை அமர்த்தியிருக் கிறார். வேனில் குழந்தைகளைப் பொறுப்புடன் ஏற்றி அழைத்துச் செல்ல பெண்மணி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். காலையும் மாலையும் குழந்தைகளின் வீடு தேடி வருகிறது அரசுப் பள்ளி வேன். மகிழ்ச்சியோடு வருகிறார்கள் குழந்தைகள்

தமிழக ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தேவை சி.பி.எஸ்.இ. பயிற்சி குழுவினர் பேட்டி

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தேவை என்று சி.பி.எஸ்.இ. பயிற்சி குழு நிபுணர் தெரிவித்தார்.கல்வித்தரம்உலகத்தரத்திற்கு கல்வித்திட்டங்கள் இருக்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. நிறுவனத்தின் குழு இந்தியாவில் பல்வேறு நகரங்களில் உள்ள சி.பி.எஸ்.இ. மற்றும் மாநில அரசு பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.சென்னையிலும் நேற்று இந்த பயிற்சி நடந்தது. அடுத்து கோவை, ஈரோடு, மதுரை ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி குறித்து அந்த குழுவை சேர்ந்த நிபுணர் சித்ரா ரவி கூறியதாவது:-பதற்றத்தை குறைக்கவேண்டும்தேர்வுகளால் ஆசிரியர்களும், மாணவர்களும் பதற்றப்படுகிறார்கள். அந்த பதற்றத்தை குறைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் பள்ளிகளில் குறிப்பாக தொடக்கப்பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுத் தேர்வுகளைவிட மாணவர்களின் வளர்ச்சியையும், குறைபாட்டையும் தெரிந்துகொள்வதே ஆசிரியரின் கடமை.ஆசிரியர்களுக்கு கற்பித்தல் முறையில் மாற்றம் தேவை. வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் பாடத்தினால் மாணவர்கள் அடைய இருக்கும் கற்றல் வெளிப்பாட்டை தெரிந்திருக்க வேண்டும். இது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, பள்ளிகளுக்கும், பெற்றோருக்கும் பயன்தரும்.தேர்வு முறையில் மாற்றம்இதுவரை 123 பள்ளிகளில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. வருங்காலத்தில் கற்றல் முறையை மேம்படுத்தும் தேர்வுகள் இடம்பெற வேண்டும். பருவத்தேர்வுகள் மறைந்து ஒவ்வொரு வகுப்பறையிலும் உருவாக்க தேர்வுகள் நடக்கவேண்டும். பாடத்தை மையப்படுத்தும் தேர்வு முறை ஒழிந்து மாணவர்களின் கற்றல் திறன் வெளிப்பாட்டை மையப்படுத்தும் தேர்வு நடக்கவேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசு ஊழியர் அகவிலைப்படி தீபாவளிக்கு முன் அறிவிப்பு?

ஆண்டு அகவிலைப்படி உயர்வு, தீபாவளிக்கு முன் அறிவிக்கப்படுமா' என, அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள், ஜூலையில் அமலுக்கு வந்தன; ஜனவரியிலிருந்து கணக்கிடப்பட்டு, பணப்பலன்கள் வழங்கப்பட்டன.

இதே போல், தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும், சம்பள குழு நியமிக்கப்பட வேண்டும்; ஆனால் இல்லை. ஆண்டுதோறும், ஜனவரி மற்றும் ஜூலையில், 5 - 7 சதவீதத்திற்குள், அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். இந்த ஆண்டு, ஜனவரியில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது; ஜூலைக்கான உயர்வு இன்னும் வரவில்லை. தீபாவளி பண்டிகைக்கு முன், அறிவிப்பு வருமா என, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!