Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 24 October 2016

ஊருக்காக, ஆசிரியர் பணியைத் துறந்தவர்!!

பொது சேவையில் ஈடுபடுவதற்காக தன் ஆசிரியை பணியைத் துறந்திருக்கிறார் இங்கொருவர். சென்னை அண்ணாநகர், மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் நிர்மலா (38). இவரது கணவர் நந்தகுமார், தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு கதிரொலி என்ற மகளும், கோவிந்தராஜன் என்ற மகனும் உள்ளனர்.

நிர்மலா சென்ற வருடம் வரை சென்னையில் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். வெகுநாளாக இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதனால் ஆசிரியை பணியை துறந்து, சமூக சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

இதையடுத்து கடந்த 26ஆம் தேதி அம்பத்தூர் ஏரிக்குச் சென்று, ஏரியில் செடி, கொடிகள் அனைத்தும் தண்ணீர் செல்ல வழியில்லாமல் அடைத்து இருப்பதை கண்டார். உடனே, நிர்மலா யோசிக்காமல் ஏரியில் இறங்கி செடி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இவரது சேவையைக் கண்ட பொதுமக்களும் அதிகாரிகளும் ஆதரவு அளித்ததோடு நிர்மலாவைப் பாராட்டி உள்ளனர்.

இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் தஞ்சைக்கு சென்றுள்ளார். அங்கு பெரிய கோயிலில் கொடிமரத்து மூலையில் உள்ள அகழி வெங்காயத் தாமரைகளால் மூடி இருப்பதை கண்டு, உடனே அகழியைச் சுத்தப்படுத்தும் பணியில் தனியாக இறங்கினார். இவருடைய செயல், அப்பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. இதுகுறித்து நிர்மலா கூறுகையில், “ஆசிரியர் பணியாற்றி கொண்டிருக்கும்போதே பொது சேவையில் ஈடுபட வேண்டும் என்று பல நாட்களாக நினைத்து வந்ததால் அப்பணியை விட்டு வந்தேன். வீடும் ஊரும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். சுத்தமின்மையால்தான் பல நோய்கள் பரவுகின்றன. குறிப்பாக நீர்நிலைகள் சுத்தமாக இருந்தால்தான் தண்ணீர் மாசடையாது. அதனால் முதல்முயற்சியாக குப்பைகளால் நிறைந்து இருந்த அம்பத்தூர் ஏரியை சுத்தப்படுத்தினேன். மேலும், தஞ்சைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது, கொடிமரத்து மூலையில் உள்ள அகழி, வெங்காயத் தாமரையால் மூடிக்கிடப்பதை பார்த்து என் மனம் வேதனை அடைந்தது. உடனே பேருந்தை விட்டு இறங்கி அகழியைச் சுத்தப்படுத்தினேன். இந்த சேவை எனக்கு மனநிறைவைத் தருகிறது” என்கிறார் நிர்மலா.

ஜியோவிற்கு இணைப்பு கொடுக்க மறுத்த ,ஏர்டெல் ,வோடாபோன் ,நிறுவனங்களுக்கு 3150 கோடி அபராதம் !!!

நேரில் வந்தால் போதும்; உடனே வேலை' !!!

நேரில் வந்தால் போதும்; உடனே வேலை' என, சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கு, தமிழக அரசு, சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது; 414 டாக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழக அரசு மருத்துவமனைகளில், எம்.பி.பி.எஸ்., படித்த டாக்டர்கள் புதிதாக சேர்க்கப்பட்டாலும், எம்.எஸ்., - எம்.டி., 
என்ற முதுநிலை பட்டம் பெற்ற, அறுவை சிகிச்சை சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் போதிய அளவில் இல்லை. அதனால், சிறப்பு பிரிவு டாக்டர்களை, கூடுதலாக தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மயக்கவியல் - 91; பொது மருத்துவர் - 30; மகப்பேறு மருத்துவர் - 130, ரேடியாலஜி - 22 பேர் உட்பட, 414 சிறப்பு பிரிவு, உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை தற்காலிக பணியில் நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. எம்.ஆர்.பி., எனப்படும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.'போட்டி தேர்வுகள் இல்லை; நேரில் வந்தால் போதும், வேலையில் சேரலாம். இதற்கு, நவ., 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:உயர் சிறப்பு மருத்துவம் படித்தோருக்கு, தனியார் மருத்துவமனைகளில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. எதிர்பார்த்ததை விட சம்பளமும் கிடைக்கிறது; இதனால், அரசு பணியில் ஆர்வம் காட்டுவது குறைந்துள்ளது. எனவே, நிலைமையை உணர்ந்த அரசு, நேரில் வந்தால் வேலை என, சிவப்புக் கம்பளம் விரிந்துள்ளது. இதற்கு உரிய பலன் கிடைக்குமா என, பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.

இதுதவிர, முதுநிலை மருத்துவம் படித்து, அரசு மருத்துவமனைகளில் நிபந்தனை அடிப்படையில் பணியாற்றி வரும், 1,800 டாக்டர்களையும், அரசு பணி வரன்முறை செய்யஉள்ளது.

ஊருக்காக, ஆசிரியர் பணியைத் துறந்தவர்!!

பொது சேவையில் ஈடுபடுவதற்காக தன் ஆசிரியை பணியைத் துறந்திருக்கிறார் இங்கொருவர். சென்னை அண்ணாநகர், மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் நிர்மலா (38). இவரது கணவர் நந்தகுமார், தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு கதிரொலி என்ற மகளும், கோவிந்தராஜன் என்ற மகனும் உள்ளனர்.

நிர்மலா சென்ற வருடம் வரை சென்னையில் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். வெகுநாளாக இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதனால் ஆசிரியை பணியை துறந்து, சமூக சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

இதையடுத்து கடந்த 26ஆம் தேதி அம்பத்தூர் ஏரிக்குச் சென்று, ஏரியில் செடி, கொடிகள் அனைத்தும் தண்ணீர் செல்ல வழியில்லாமல் அடைத்து இருப்பதை கண்டார். உடனே, நிர்மலா யோசிக்காமல் ஏரியில் இறங்கி செடி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இவரது சேவையைக் கண்ட பொதுமக்களும் அதிகாரிகளும் ஆதரவு அளித்ததோடு நிர்மலாவைப் பாராட்டி உள்ளனர்.

இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் தஞ்சைக்கு சென்றுள்ளார். அங்கு பெரிய கோயிலில் கொடிமரத்து மூலையில் உள்ள அகழி வெங்காயத் தாமரைகளால் மூடி இருப்பதை கண்டு, உடனே அகழியைச் சுத்தப்படுத்தும் பணியில் தனியாக இறங்கினார். இவருடைய செயல், அப்பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. இதுகுறித்து நிர்மலா கூறுகையில், “ஆசிரியர் பணியாற்றி கொண்டிருக்கும்போதே பொது சேவையில் ஈடுபட வேண்டும் என்று பல நாட்களாக நினைத்து வந்ததால் அப்பணியை விட்டு வந்தேன். வீடும் ஊரும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். சுத்தமின்மையால்தான் பல நோய்கள் பரவுகின்றன. குறிப்பாக நீர்நிலைகள் சுத்தமாக இருந்தால்தான் தண்ணீர் மாசடையாது. அதனால் முதல்முயற்சியாக குப்பைகளால் நிறைந்து இருந்த அம்பத்தூர் ஏரியை சுத்தப்படுத்தினேன். மேலும், தஞ்சைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது, கொடிமரத்து மூலையில் உள்ள அகழி, வெங்காயத் தாமரையால் மூடிக்கிடப்பதை பார்த்து என் மனம் வேதனை அடைந்தது. உடனே பேருந்தை விட்டு இறங்கி அகழியைச் சுத்தப்படுத்தினேன். இந்த சேவை எனக்கு மனநிறைவைத் தருகிறது” என்கிறார் நிர்மலா.

பத்திரப்பதிவு சட்ட திருத்தத்தை அமலாக்க அரசாணை:அங்கீகாரமில்லா மனைகளுக்கு அக்.20 முதல் தடை

அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனையை தடை செய்யும் வகையில், பத்திரப்பதிவு சட்டத்தில், எட்டு ஆண்டுகளுக்கு முன் சேர்க்கப்பட்ட, '22 அ' பிரிவை அமல்படுத்தும் அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.

விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை, தடுக்கக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனையை பதிவு செய்ய, செப்., 9ல், தடை விதித்தது. இது தொடர்பான வழக்கு, அக்., 21ல் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அங்கீகாரம் இல்லாத மனைகள் விற்பனையை தடை செய்யும் வகையில், பத்திரப்பதிவு சட்டத்தில், '22 அ' என்ற, புதிய பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது. புதிய சட்ட திருத்தத்தை, அக்., 20 முதல் அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது' என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும், அரசாணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. தற்போது, அதன் நகல் வெளியாகி உள்ளது. அதில், 'பத்திரப்பதிவுக்கான, 1908ம் ஆண்டு சட்டத்தில், '22 அ' பிரிவைச் சேர்ப்பதற்கான சட்ட திருத்தத்தை, 2016 அக்., 20 முதல் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசிதழ் அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனை பதிவை தடை செய்யும், இந்த சட்ட திருத்தம், 2008ல் நிறைவேற்றப்பட்டது. எட்டு ஆண்டுகளாக, அமலாக்கம் தேதி குறித்து, அரசாணை பிறப்பிக்கவில்லை. தற்போது மனை விற்பனை பதிவில், நீதிமன்றம் தடை விதித்ததால், வேறு வழியின்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குழப்பம் நீடிக்கும்:இது குறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அரசாணைப்படி, 2016 அக்., 20க்கு பின் அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்ய முடியாது. அதற்கு முன், வீட்டு மனையாக பதிவு செய்யப்பட்ட மனைகளின் அடுத்தடுத்த விற்பனைக்கு தடை இருக்காது.இந்த அரசாணையை, நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதா; எப்படி அமல்படுத்துவது என, பதிவுத்துறை தலைவர் தான் நிர்வாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்; அது வரை குழப்பம் நீடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் எழுத, படிக்கத் தெரியாத இளைஞர்: திருக்குறளை வெள்ளித் தகட்டில் செதுக்கி சாதனை

‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு’ என்ற பாரதியின் வரி களுக்கு மேலும் வலுசேர்க்கும்

வகையில் வள்ளுவருக்கும், திருக் குறளுக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார் நகை வடி வமைப்புத் தொழில் செய்துவரும் சூர்யவர்மன் (29).

தமிழ் மொழியை எழுத, படிக்கத் தெரியாத நிலையிலும் வள்ளு வர் மீதும், அவர் படைத்த திருக்குறள் மீதும் கொண்ட பற்றின் காரணமாக, திருக்குறளின் முதல் 10 அதிகாரங்களில் உள்ள 100 குறள் வெண்பாக்களை வெள்ளித் தகடுகளில் செதுக்கி அசத்தியுள்ளார் சூர்யவர்மன்.

திருவள்ளுவர் மீது பற்று

இதுதொடர்பாக அவர் கூறிய தாவது: “நான் தமிழ்நாட்டுக்காரன் தான். ஆனால், பிறந்து வளர்ந்தது ஹைதராபாத்தில். எனக்கு சுத்த மாக தமிழ் எழுதவும் படிக்கத் தெரியாது. நகை வடிவமைப்புத் தொழிலில் 12 ஆண்டுகள் அனுப வம் கொண்ட எனக்கு, கேள்வி ஞானத்தின் மூலம் உலகப் பொது மறையான திருக்குறளின் மீதும் திருவள்ளுவரின் மீதும் பற்று ஏற்பட்டது. குறிப்பாக திருக்குறளின் சிறப்புகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பட்டிமன்றம், இலக் கிய நிகழ்ச்சிகள் மூலம் அறிந்து கொண்டேன். திருக்குறளை இன் னும் பெருமைப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற ஆசை எழுந்தது. எனக்குத் தெரிந்த கைத்தொழில் மூலமே அதை செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அந்த அடிப்படையில்தான் திருக்குறளை வெள்ளித் தகடுகளில் செதுக்க ஆரம்பித்தேன்.

இதன் முதல் முயற்சியாக, திருக்குறளில் உள்ள முதல் 10 அதிகாரங்களில் இருக்கும் 100 குறள்களை வெள்ளித் தகட்டில் செதுக்கியுள்ளேன். சுத்தமான வெள்ளியை உருக்கி தகடுகளாக மாற்றிக்கொண்டேன். அதில் தமிழ் எழுத்துகளை சரியான அளவில் செதுக்கி தனியாக வெட்டி எடுத்து, அதற்காக செய்த மரப் பலகையில் ஒட்டிவிடுவேன். பாலீஷ் செய்த பிறகு பார்த் தால் எழுத்துகள் எல்லாம் பளபள வென்று காணப்படும். இதனை அருங்காட்சியகங்களில் பார் வைக்கு வைக்கலாம். பொக்கிஷ மாகவும் வைத்து பாதுகாக்கலாம்.

ஒவ்வொரு திருக்குறளையும் வெள்ளித் தகட்டில் செதுக்கி முடிக்க 4 மணி நேரம் செலவிட வேண்டும். எனது வாழ்வாதாரமாக இருக்கும் நகைத் தொழிலையும் கவனிக்க வேண்டிய நிலையிலும் திருக்குறளுக்காக பல பகல், இரவுகளை செலவிட்டுள்ளேன்.

வெள்ளித் தகட்டில் 100 திறக்குறளை செதுக்குவதற்காக 400 கிராம் வரை சுத்தமான வெள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 மாத கடும் உழைப்பில் இது சாத்தியமாகியுள்ளது. இது போலவே அனைத்து திருக்குறளை யும் செதுக்கிட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அனைத்துக் குறள்களையும் செய்து முடிக்க குறைந்தது 4 கிலோ வரை வெள்ளி தேவைப்படும். அன்புடையோர் யாரேனும் உதவி செய்தால் இந்த இலக்கை எட்ட முடியும் என்றார் உறுதியுடன்.

CPS பற்றி ஆராயும் வல்லுநர் குழு அறிக்கையை, அரசிடம் சமர்ப்பிக்கும் தேதியையும், இது வரை எத்தனை பக்க அறிக்கையை தயார் செய்துள்ளது கேள்விக்கு RTI - நிதித்துறை பதில்TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. விளையாட்டுத் துறை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் விருது - துரோணாச்சாரியா விருது
2. ஐக்கிய நாடுகள் தபையின் முதல் பெண் தூதவர் - விஜயலட்சுமி பண்டிட்
3. பிரிட்டனில் நிழல் பிரதமர் என்றழைக்கப்படுபவர் - எதிர்க்கட்சித் தலைவர்
4. மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை - 639

5. ஐ.நா.சபை தொடங்கப்பட்ட ஆண்டு - 1945
 6. இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்றத்தின் பெயர் - நெஸட்
7. இண்டர்போல் அமைப்பின் இந்தியப் பிரதிநிதி - சிபிஐ
8. பாரத ரத்னா விருது பெற்ற வெளிநாட்டுத் தலைவர்கள் - "எல்லைக் காந்தி" கான் அப்துல் கபார்கான் மற்றும் நெல்சன் மண்டேலா
9. மனித மூளையின் எடை - 1.4 கிலோ
10. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எத்தனை ஆண்டுகலுக்கு ஒரு முறை நடைபெறுகிறது - நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை
11. மிக நீண்ட ஆயுள் உடைய விலங்கு - ஆமை
12. இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் - அன்னை தெரஸா (1979)
13. ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்மணி - பாது அத்தையா
14. பேங்க் என்ற சொல் பெஞ்ச் என்று பொருள்படும் - இத்தாலிய வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
15. நோபல் பரிசளிக்கும் பொறுப்பு யார் வசமுள்ளது - நோபல் பவுன்டேஷன் ஆஃப் ஸ்வீடன்
16. ஜப்பானின் மற்றொரு பெயர் - நிப்பான்
17. ஒளவை பாடிய நூல்கள் - பன்னிரென்டு
18. சிவாஜி ஹாக்கி ஸ்டேடியம் அமைந்துள்ள இடம் - புதுதில்லி
19. உலக அரிசி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள நாடு - பிலிப்பைன்ஸ்
20. கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசுநாதர் உயிர் வாழ்ந்த ஆண்டுகள் - 33
21. காமன்வீல் என்ற பத்திரிக்கையை தொடங்கி நடத்தியவர் - அன்னிபெசன்ட் அம்மையார்.
22. ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் உள்ள இடம் - டோக்கியோ
23. இந்தியாவின் நவீன ஓவியங்களின் தந்தை என அழைக்கப்படுபவர் - நந்தலால் போஸ்
24. உலகின் மிகப்பெரிய திரையரங்கம் - நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம்
25. திருக்குரானில் உள்ள மொத்த அதிகாரங்கள் - 114
26. உலக மனித உரிமைகள் சட்டம் ஐ.நா.சபையால் இயற்றப்பட்ட வருடம் - 1948
27. உலகின் மிகப்பெரிய சிலை - அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலை
28. புதுதில்லியை வடிவமைத்து உருவாக்கியவர் - சர் எட்வின் லுட்யென்ஸ் என்பவர்
29. உலகில் முதன் முதலில் மறுமலர்ச்சி தோன்றிய நாடு - இத்தாலி
30. முதன் முதலில் தேசியக் கொடியை அறிமுகப்படுத்திய நாடு - டென்மார்க்
31. ராய்ட்டர்ஸ் என்ற செய்தி நிறுவனம் உள்ள இடம் - இங்கிலாந்து
32. ஆரோக்கியமான மனிதனின் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு - 6 லிட்டர்
33. தலைமுடியின் கருமை நிறத்திற்குக் காரணம் - அதில் உள்ள மெலனின் என்ற பொருள்.
34. மெர்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ள இடம் - ஆஸ்திரேலியா
35. இந்தியாவில் முதல் பெண்கள் காவல்நிலையம் தொடங்கப்பட்ட மாநிலம் - கேரளா
36. மோகினியாட்டம் என்னும் நடன வகைக்குப் புகழ்பெற்ற இந்திய மாநிலம் - கேரளா
37. அர்ஜெண்டினா எந்த கண்டத்தில் அமைந்துள்ள நாடு - தென் அமெரிக்கா
38. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையகம் உள்ள இடம் - ஜெனீவா
39. ஐக்கிய நாடுகள் டபை செயலாளரின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
40. பந்த் நடத்துவதை முதன் முதலில் தடை செய்த மாநிலம் - கேரளா
41. தமிழகத்தில் தமிழுக்கு அடுத்தப்படியாக அதிகம் பேசப்படும் மொழி - தெலுங்கு
42. ஐ.என்.எஸ். ராஜாளி கப்பல் படைத்தளம் எங்கு அமைந்துள்ளது - அரக்கோணம்
43. கட்டாயக் கல்வித் திட்டத்தை முதன் முதலில் அறிமுகம் செய்த மாநிலம் - தமிழ்நாடு
44. மைக் விட்னி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் - கிரிக்கெட்
45. இந்தியாவின் மிக நீண்ட இதிகாசம் - மகாபாரதம்
46. அடகாமா பாலைவனம் எந்த நாட்டில் உள்ளது - சிலி
47. சீனக் குடியரசின் முதல் தலைவர் - சன்யாட்சென்
48. ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியர் - மிகிர் சென்
49. இந்தியாவின் ஹாலிவுட் நகரம் என்று வர்ணிக்கப்படுவது - மும்பை
50. உலக தொலை தொடர் தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மே 17

தமிழ்நாடு தபால் வட்டத்தில் 310 தபால்காரர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தபால் வட்டத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 310 தபால்காரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பத்தாம் வகுப்பு முடித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 310

பணியிடம்: தமிழ்நாடு

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Postman - 304

பணி: Mail Guard - 06

தகுதி: இரு பணிக்கும் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 15.11.2016 தேதியின்படி 18 - 27-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு மட்டும் ரூ.400.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2016

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 18.11.2016

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 2016, ஜனவரி 2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://dopchennai.in/PDF/Notification-1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆறு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்

மடிக்கணினி எல்லாம் கொடுத்து அரசுப்பள்ளி மாணவர்களை ஹைடெக்காகமாற்ற நினைக்கும்அரசு பாராட்டுக்குரியதுதான். ஆனால்,மாணவர்களுக்குக் கணினி கொடுத்த அரசு கணினிவழிக் கல்வியைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது ஏன்?இதனால், கணினிவழிகல்வி போதிக்கும் பல பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்க்கைகேள்விக்குறியாகி இருக்கிறது என்று வேதனையுடன் கூறுகிறார்கள் கணினி வழிக்கல்வி ஆசிரியர்கள்.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளி மாணவர்களும் உயரவேண்டும் என்று சமச்சீர் கல்வி முறையை 2011ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது அரசு.அதில்,ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் புத்தகங்கள்கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு வருடம் மட்டும் புத்தகங்கள்கொடுக்கப்பட்டு, அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால், கடந்த ஆறு வருடங்களாககணினி அறிவியலில் பி.எட். படித்தஆசிரியர்களை பணிநியமனம் செய்யவில்லை.கடந்த 15ஆண்டுகளாக கணினி அறிவியல் பட்டதாரிகள் பலர் வேலையில்லாமல் தவிக்கின்றனர்.இந்தப் பட்டதாரிகள் ஒருங்கிணைந்து 2014-ஆம் ஆண்டு கணினி அறிவியல்வேலையில்லாபட்டதாரிகள் சங்கத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.

 இச்சங்கத்தின்மாநிலப் பொதுச்செயலாளர் குமரேசன் கூறுகையில், 1992-ஆம் ஆண்டுல இருந்தேகம்ப்யூட்டர் சயின்ஸ் பி.எட். இருக்கு. நான் படிச்சது பி.எட். ஆனா,டெக்ஸ்டைல்ல வேலை பாத்துட்டு இருக்கேன். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 39,019கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் வேலை இல்லாமஇருக்காங்க.ஒரு படிப்புனுஇருந்தா அதுக்கான வேலை வாய்ப்பு இருக்கணும். வருஷாவருஷம் ஆயிரக்கணக்கான பேர்படிச்சுட்டு வெளியே வராங்க. ஆனா,ஏற்கெனவே படிச்சு வேலைவாய்ப்பு அலுவலகத்திலபதிவு செய்திருக்கிறயாருக்குமே வேலை இல்லை. பின்ன ஏன் இந்தப்படிப்பஇன்னும்வச்சிருக்காங்கன்னு புரியல" என்று குமுறுகிறார்.கம்ப்யூட்டர் சயின்ஸ்ல பி.எட்.படிச்ச நாங்க பலவகையில நசுக்கப்பட்டவங்க. மற்ற ஆசிரியர்பயிற்சி முடித்தவர்கள்கலந்துகொள்ளும்  டெட், டிஆர்பி எக்ஸாம் போன்றவற்றில் கூட கலந்துகொள்ளஎங்களுக்கு அனுமதி கிடையாது" என்று விரக்தியுடன் பேசுகிறார்கள் கணிப்பொறிஆசிரியர்கள்.2006-ஆம் ஆண்டுக்குப் பிறகுதரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிகள்எதிலும் கணிப்பொறி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.கடந்த வருடத்தில் கூட 407பள்ளிகள்தரம் உயர்த்தப்பட்டதாக எம்.எல்.ஏ பெஞ்சமின் கூறியிருக்கிறார்.ஆனால்அந்தப் பள்ளிகள் எதிலும் கணிப்பொறிவழிக் கல்வி கிடையாது.கம்யூட்டர் சயின்ஸ்டீச்சர் இல்லாமல்தான் பல பள்ளி மாணவர்கள் தானாகவே கற்றுக்கொள்கிறார்கள்.2011 இல் சமச்சீர் கல்வி கொண்டு வந்தார்கள் அதில் கணினி அறிவியல் பாடத்திட்டம்இருந்தது.ஆனால்,அந்தபுத்தகங்களும் அரசு அலுவலகங்களில் கிடப்பில்போடப்பட்டிருக்கிறது.மாணவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.பட்டதாரிஆசிரியர்களுக்கும் வேலை வழங்கவில்லை.வருடந்தோறும் மத்திய அரசு கோடி கணக்கில்நிதி ஒதுக்கி வருகிறது.வருடத்திற்க்கு 250 கோடி ரூபாய் வருகிறது.2011-இல்முதல்கட்டமாக 43கோடி ரூபாய் கொடுத்தார்கள்.ஆனால் எதையும் செயல்படுத்தாமல்வீணாக்குகிறார்கள்"என்று மாநில செயலாளர் குமரேசன் வருத்தத்துடன் பேசுகிறார்.

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டமும் போராட்டமும்நடத்தியிருக்கிறோம்.ஒவ்வொரு மாவட்ட ஆட்சியிர் அலுவலகத்திலும் கருணை மனுகொடுத்திருக்கிறோம்.47முறை சென்னைக்கு வந்து மனு செய்திருக்கிறோம்.அரசு அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து எங்கள் கோரிக்கையைமுன்வைத்திருக்கிறோம்.எல்லா இடங்களிலும் சொல்லி வைத்தது போல் அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டதுஎன்ற பதில்தான் வருகின்றது.தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புமுதலே கணினி வழிக்கல்வி இருக்கிறது.அதைஇன்னும் மேம்படுத்த அரசும் ஊக்குவிக்கிறது.ஆனால் அரசுப் பள்ளிகளில் ப்ளஸ்ஒன்,ப்ளஸ் டூக்கு மட்டுமே அதுவும் பாதி பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாமல்படிக்கிறார்கள்" என்கிறார் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் வேல்முருகன்.****படித்தது கணினி அறிவியல் பிடிப்பது கசாப்புக் கத்தி!"2010இல் பி.எட் முடிச்சேன். அப்ப் கூட வாரத்துல ஒருநாள் மட்டன் கடையில் வேலைபாக்குறேன்.எனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கு.இப்ப வரைக்கும் எவ்வளவோபோராட்டம் பண்ணிருக்கோம்.எத்தனையே இடத்துல மனு கொடுத்தும் ஒண்ணும்நட்க்கல.நாங்க நாற்தாயிரம் ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருக்கிறோம்.அங்குபள்ளிகளில் பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் இல்லை.ஸ்கூலுக்கு ஒரு டீச்சருக்கு வேலைகிடைச்சிருந்தாலும் படிச்சவங்க பாதிபேரு வேலைக்குப் போயிருக்கலாம்என்றுஆதங்கப்படுகிறார் தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள்ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத்துணைத்தலைவர் கார்த்திக்.

*ரங்கநாயகி, அந்தியூர்*

பி.எட் முடிச்சிட்டு ஒரு பனியன் கம்பெனிக்கு வேலைக்குப் போய்ட்டிருக்கேன்சூப்பர்வைசரா இருந்தாலும் எல்லா வேலையும் பாக்காணும்.படிச்சபடிப்புக்கேத்தவேலையில்லாம,குறைஞ்ச கூலிக்கு கிடைத்த வேலையைச் செஞ்சிட்டிருக்கேன்.பொண்ணுப்பாக்க வர்றவங்க பி.எட் கம்ப்யூட்டர் சயின்ஸ்னா வேலை கிடைக்கிறதுகஷ்டம்னு சொல்லிட்டு போய்டுறாங்க

.*ஆரிஃபா, ஈரோடு*

எங்க வீட்ல அஞ்சு பொண்ணுங்க.பி.எட் முடிச்சிட்டு ஒரு கம்பெனிக்கு வேலைக்குப்போய்ட்டு இருக்கேன்.எங்கப்பாவால வேலை செய்யமுடியாது.நாங்க வேலை செஞ்சுதான்குடும்பத்தக் காப்பாத்தானும்.வேலை கிடைக்காததால கல்யாணம் தள்ளிப்போய்ட்டுஇருக்கு.

*லலிதா, கொள்ளிமலை*

அம்மாவோட கூலி வேலைக்குப் போய்டுருக்கேன்.வீட்டில இருக்கிற ஆடு மாடு அப்பாபாத்துக்கிறாங்க.இவ்ளோ தூரம் படிச்சிட்டு கூலி வேலைக்குப் போறது ரொம்ப கஷ்டமஇருக்கு.பி.எட் படிச்சிருந்த வேலை வாங்கித் தந்துடுவோம்னு சொல்லி பொண்ணு பாக்கவந்தாங்க .கம்ப்யூட்டர் சயின்ஸ்னு தெரிஞ்சதும் அதுக்கு எப்போ கிடைக்கிறதுனுரிஜெக்ட் பண்ணிட்டாங்க....

*கிருத்திகா, கோவை*

எனக்கு குடும்பத்தில பல சிக்கல்.அரசு வேலைதான் என்னை மீட்டெடுக்காணும்என்னுடைய ரெண்டு பெண் குழந்தைகளோட  எதிர்காலம் பத்தி ரெம்பக் கவலையாஇருக்கு.வாழ்க்கைய நகர்த்துறதுறதே பெரிய போராட்டம இருக்கு...****

*சாய்  ஜானு , கரூர்*

நான் ஒருகல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்கிறேன்.என்க்கு சில கேள்விகள் இருக்கு.
--->வேலைகேட்டு போராடும்போது அரசுக் கொள்கை முடிவுக்கு உட்பட்டதுன்னுசொல்றாங்க.அப்படினா அரசு கொள்கை பி.எட் முடிச்சவங்களுக்கு வேலை தரக்கூடாதுஎன்பதா?
--->அரசு வேலைக்கு எடுக்க முடியாத நிலையில் ஏன் இந்தப் படிப்ப நீக்காமவைச்சிருக்கங்கா?
--->சபீதா மேடம் மத்திய அரசு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டுத்துக்காக கொடுத்தபணத்தை ஏன் திருப்பிக் கொடுத்தார்கள்?இதுக்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறது அரசு ?என கேள்விகளை அடுக்குகிறார் சாய்ஜானு.சுமார் 40,000 வேலையில்லா பட்டதாரிகள் 27,000 பேர் பெண்கள்.இவர்களின்வாழ்க்கைக் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.தாயுள்ளம் கொண்ட தமிழக இவர்களின்மீது கருணை கண் காட்டுமா??

திரு வெ.குமரேசன்,
9626545446,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!