Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 25 October 2016

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு

தீபாவளியையொட்டி அரசு ஊழியர்களுக்கு வரும் 28-ம் தேதி ஊதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு மாத இறுதி நாளில் அல்லது அடுத்த மாத முதல் நாளில் மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 29-ம் தேதி வருவதால், இந்த முறை முன்கூட்டியே மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் கோரி இருந்தது. இதை ஏற்று தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் மாத ஊதியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ஆளுநரின் ஆணைப்படி  தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் மாத ஊதியம் 28-ம் தேதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருவூல அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

G.O.NO:277- தீபாவளி முன்னிட்டு அக்டோபர் மாத சம்பளம் 28.10.2016 அன்று கிடைக்கும் - அரசு உத்தரவு

கல்வி வளர்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை!!!

கல்வி வளர்ச்சிக்கு அரசு போதிய நிதி ஒதுக்குவதில்லை, என, இந்திய அறிவியல் சார் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் கணேஷ் பேசினார்.
வேலூர் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில், பாலிமர் அறிவியல் குறித்த, மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கம் நடந்து வருகிறது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் தலைமை வகித்தார்.

இந்திய அறிவியல் சார் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் கணேஷ், கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது:

கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியை அரசு புறக்கணிக்கிறது. கல்வியும், சுகாதாரமும் முன்னேற்றமடைந்தால் தான், நாடு நல்ல வளர்ச்சி பெறும். ஆனால், கல்வி வளர்ச்சிக்கு போதிய நிதியை அரசு ஒதுக்குவதில்லை.

இதனால் தான் நிறைய மாணவர்கள் உயர் கல்வி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், உயர் கல்வியில், கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் தான் நல்ல மாணவர்களை உருவாக்க முடியாமல் போகிறது.

இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கு மலரை வி.ஐ.டி., பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் வெளியிட்டார். கருத்தரங்கில் போர்ச்சுகல், பாரீஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்திருந்த அறிவியல் விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

ரிலையன்ஸ் ஜியோ: இலவச 4ஜி சேவையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீட்டிக்க முடிவு.

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ரிலையன்ஸ் அறிமுகப்படுத்திய ஜியோ சிம், தொலைத்தொடர்பு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் ஏராளமான சலுகைகளை வழங்கி ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஜியோ சிம்மால்மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கலக்கமடைந்தன.
அத்துடன், ஜியோவின் இந்த அறிவிப்புகளை எதிர்த்து மேல் முறையீடு செய்தன. கடந்த வாரம் இதனை விசாரித்த டிராய், ஜியோவின் இலவச வாய்ஸ் கால் சலுகை டிசம்பர் 3 வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவித்தது.

இந்நிலையில் ஜியோ தன்னுடைய பயனாளர்களை மேலும் அதிகரிக்கும் வகையில் இலவச 4ஜி சேவையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலவச சேவைக்கான கால அவகாசம் மூன்று மாதங்கள் மட்டுமே என டிராய் அறிவித்துள்ளதால் வெல்கம் ஆபர் என பெயரை மாற்றி இந்த சேவையை தொடர ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், ஜியோவின் டேட்டா சேவைகள் ஜிபி ஒன்றிற்கு ரூ.130-140 வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்​நாடு செய்​தித்​தாள் மற்​றும் காகித நிறு​வ​ன பணிக்கு 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்​நாடு செய்​தித்​தாள் மற்​றும் காகித நிறு​வ​னத்தில் 38 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 38
​பணி:​ Semi skilled ​(welder)​ - 04
சம்பளம்: மாதம் ரூ.26,960
பணி: Semi skilled ​(Ac&​Refgn)​​ - 02
சம்பளம்: மாதம் ரூ.26,960
பணி: Semi skilled ​(Sanit​ation)​​ - 01
சம்பளம்: மாதம் ரூ.37,200
பணி: Centr​al Control Room oper​ator​ - 03
சம்பளம்: மாதம் ரூ.23,450
5.​ Semi skilled Tr​ainee​ - 28
மாத உதவித்தொகை: முதல் ஆண்டு மாதம் ரூ.8,500, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.9,400
வயது வரம்பு:​ 30 - 35க்​குள் இருக்க வேண்​டும்.​
விண்​ணப்​பிக்​கும் முறை:​ தகு​தி​வாய்ந்த நபர்​கள் விண்​ணப்​பத்​து​டன் தேவை​யான சான்​றி​தழ்​ நகல்க​ளை இணைத்து Gen​ar​al Man​ager ​(HR)​,​​ Tamil Nadu Newsprint and Papers Limited,​​ Kagith​apur​am -​639 136,​ Karur Distri​ct,​​ Tamil​N​adu என்ற முக​வ​ரிக்கு 31.10.16 -ஆம் தேதிக்​குள் கிடைக்​கும்​படி அனுப்ப வேண்​டும்.​
மேலும் முழுமையான விவ​ரங்​கள் அறியhttp://www.tnpl.com/Careers/hr%20advt%2017oct2016.pdf  என்ற இணை​ய​த​ள லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு பெயர் சூட்டப்பட்டது

வங்கக் கடலில் விசாகப்பட்டினம் அருகே உருவாகியுள்ள புயலுக்கு கியான்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் தமிழகத்துக்கு மிக அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி வடமேற்காக நகர்ந்து சென்று தற்போது உருவாகியுள்ள புயலுக்கு கியான்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதனால் இந்தியாவின் ஒடிசா உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புயல் வியாழக்கிழமை இரவு முதல் சனிக்கிழமைக்கு இடைப்பட்ட நேரத்தில் பூரி - காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக் கடலில் உருவாக இந்த புயலுக்கு மியான்மரின் கியான்ட் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு

சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு பாதி விலைக்கு சாம்சங் கேலக்சி நோட் 8 போன் வழங்குவதாக சாம்சங் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. 
இதன் மூலம் சாம்சங் கேலக்சி நோட் 7 மாடலால் வாடிக்கையாளர்களிடம் இழந்த மதிப்பை திரும்பப் பெற சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. சாம்சங் கேலக்சி நோட் 7 போனை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு 88.39 டாலர் இழப்பீட்டுத் தொகையை அந்நிறுவனம் ஏற்கனவே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

செட்' தேர்வு: 14 சதவீதம் பேர் தேர்ச்சி

பேராசிரியர் பணி தகுதிக்காக, தமிழக அரசு நடத்திய, 'செட்' தேர்வில், 14 சதவீதம் பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள கல்லுாரிகள் மற்றும்பல்கலைகளில், பேராசிரியர் பணியில் சேர்வதற்கான, செட் தேர்வு, பிப்ரவரியில் நடந்தது. 
இதன் முடிவை, தேர்வை நடத்திய, அன்னை தெரசா பல்கலை நேற்று வெளியிட்டது.தேர்வு எழுதிய, 53 ஆயிரத்து, 803 பேரில், 23 ஆயிரத்து, 271 பேர், நிர்ணயித்த, 'கட் - ஆப்' மதிப்பெண்பெற்றனர். அதில், பல்கலை மானியக்குழு விதிகளின்படி, பொதுப்பிரிவில், 3,704 பேர்; பாட வாரியான பிரிவில், 3,832 பேர் என, 7,536 பேர் மட்டுமே, பேராசிரியர் பணியில் சேர தகுதி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியோரில்,இது, 14 சதவீதம்.                                                         இது குறித்து, செட் தேர்வு குழு உறுப்பினர் செயலர், பேராசிரியர் கலா கூறுகையில், ''தேர்வர்களின் மதிப்பெண், கட் - ஆப் மதிப்பெண், தேர்ச்சி உள்ளிட்ட அனைத்து தகவல்களும், அவரவரின் தேர்வு முடிவு அறிக்கையில், குறிப்பிடப்பட்டு உள்ளது. விடைத்தாள் நகல், வினாத்தாள், விடைக்குறிப்புபோன்ற அனைத்தும், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன,'' என்றார்.நெட், செட் சங்க தலைவர் நாகராஜன் கூறுகையில், ''அனைத்து தேர்வர்களின் மதிப்பெண் பட்டியலையும், இணையதளத்தில் வெளியிட வேண்டும்,'' என்றார்.தேர்வர்களுக்கு மட்டும் 'ரிசல்ட்' : பல்கலையின் இணையதளத்தில், பதிவு எண், வரிசை எண், மொபைல் போன் எண், தேர்வு எழுதிய பாடம், தேர்வு மையம், இ - மெயில் முகவரி ஆகியவற்றை பதிவு செய்த, தேர்வர்களுக்கு மட்டும், ஆன்லைனில் முடிவுகள் அனுப்பப்பட்டன.பதிவு எண், வரிசை எண்ணை மறந்தோர், தெரசா பல்கலைக்கு, இ - மெயில் அனுப்பி,மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.

முதன் முதலாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா வாய்ப்பாடு.இம்மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு

அரசு பள்ளிகளில் படிக்கும் 3–வது வகுப்பு, 4–வது வகுப்பு, 5–வது வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு வாய்ப்பாடு புத்தகம், விலை இன்றி முதல் முதலாக வழங்கப்படுகிறது. இந்த புத்தக வினியோகம் தொடங்கியது. இந்த மாத இறுதிக்குள் கொடுத்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பாடு

தமிழக அரசு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்பட 14 வகையான கல்வி கற்க தேவையானவற்றை விலை இன்றி தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் 3–வது, 4–வது, 5–வது வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு வாய்ப்பாடு புத்தகம் விலை இன்றி வழங்க முடிவு செய்யப்பட்டது.

அந்த வாய்ப்பாடு புத்தகத்தில் பெருக்கல் வாய்ப்பாடு, கூட்டல் வாய்ப்பாடு, கழித்தல் வாய்ப்பாடு, பெருக்கல் அட்டவணை, வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், அறுகோணம், உருளை, கனச்சதுரம், கனச்செவ்வகம், கூம்பு ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் அடிப்படை அளவுகள், கொள்ளளவு, நிறுத்தல் அளவு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் வருடத்திற்கு எத்தனை நாட்கள், லீப் வருடத்திற்கு எத்தனை நாட்கள், வருடத்திற்கு எத்தனை மாதங்கள், எத்தனை வாரங்கள், வாரத்திற்கு எத்தனை நாட்கள் உள்ளிட்ட காலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வாய்ப்பாடு புத்தகங்கள் அரசு பள்ளிகளில் 3–வது, 4–வது, 5–வது படிக்கும் மாணவ–மாணவிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. அதற்காக அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 7 லட்சத்து 70 ஆயிரம் வாய்ப்பாடு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அவை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

பணி தொடங்கியது

அனுப்பப்பட்ட பள்ளிகளில் இந்த வாய்ப்பாடு கொடுக்கும் பணி தொடங்கி உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் நடுநிலைப்பள்ளியில் நேற்று வாய்ப்பாடு வினியோகம் தொடங்கியது. அனைவருக்கும் கல்வி திட்ட உதவி அதிகாரி லட்சுமிபதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.பரமேஸ்வரி, பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சாவித்ரி ஆகியோர் வழங்கினார்கள்.
அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் வாய்ப்பாடு புத்தகம் வழங்கப்பட்டு விடும் என்றார்.

இந்திய அளவில் முதல்முறையாக அரசுப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் 800 சதுர அடியில் வரைபடம் வரைந்து கொண்டாடிய *உலக மோல் தினம்*.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் R.வெங்கடாபுரம் அரசு ஆ தி ந ஆரம்பப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மூலம் 800 சதுர அடியில் பிரமாண்ட ஓவியம் மூலமாக உலக மோல் தினம் கொண்டாடப்பட்டது.

அறிவியலில் முக்கியப் பிரிவான வேதியியல் பாடத்தில் முக்கிய எண்ணாக பயன் படும் அவகாட்ரோ எண்ணான *(6.022 × 10²³ )*AMEDEO AVOGADRO NUMBER, இதனை உருவகமாக வைத்து உலகம் முழுதும் ஆண்டுதோறும் அக்டோபர் 23 ஆம் தேதி உலக மோல் தினம் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்தினத்தை எங்கள் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவர்களும் பிரமாண்ட ஓவியம் மூலம் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஜவ்வாது அரசுப்பள்ளிக்கு உதவிய தி இந்து வாசகர்கள்

தனியார் பள்ளிகள் எனும் அதிகார பீடங்கள்

தனியார் பள்ளிகளில் மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

நடுத்தர வயதைச் சேர்ந்த அவர் பதற்றத்தோடு காத்திருந்தார். அவருடைய உடையையும் தோரணையையும் பார்த்தாலே ஏதோ ஒரு பெருநிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள அதிகாரி என்பதைச் சொன்னது. பக்கத்தில் அவர் மனைவி. இருவரும் பொறுமை இல்லாமல் அரை மணிநேரம் காத்திருந்த பிறகு அவர்கள் அந்த அறைக்குள் அழைக்கப்பட்டார்கள். வெளியே வர 15 நிமிடங்கள் ஆயின.

இது தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியரைப் பெற்றோர்கள் சந்திக்கும் காட்சி. இந்தச் சந்திப்பு எப்போது நடக்க வேண்டும் என்று முடிவுசெய்வது பள்ளி நிர்வாகம். தேர்வுக்குப் பிந்தைய சந்திப்பு என்றால் முன்கூட்டியே தகவல் கொடுப்பார்கள். புகார் அல்லது அதுபோன்ற பிரச்சினை என்றால் திடீர் அழைப்பு வரும். இப்போது வர இயலாது என்னும் பதிலைப் பள்ளி நிர்வாகங்கள் பெரும்பாலும் ஏற்பதில்லை. குழந்தையின் கல்வி அல்லது மனநிலை தொடர்பான பிரச்சினை என்பதால் பெற்றோர் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு விழுந்தடித்துக்கொண்டு ஓடுவார்கள். பள்ளியின் முதல்வர் விடுக்கும் அழைப்பு கிட்டத்தட்ட நீதிமன்ற அழைப்புபோலத்தான்.

பள்ளி முதல்வரைப் பெற்றோர் எதிர்த்துப் பேச முடியாது. தங்கள் தரப்பை எடுத்துச் சொல்வதாக இருந்தாலும் மிகவும் கவனமாகத்தான் பேச வேண்டும். நிர்வாகத்துக்கு எதிராக இவர்கள் எழுப்பும் ஒவ்வொரு குரலும் ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் குழந்தை மீது திரும்புவதற்கான சாத்தியம் அதிகம். குழந்தையை நடத்தும் விதத்திலிருந்து, மதிப்பெண், விளையாட்டு, கலை முதலான துறைகளில் கிடைக்கும் வாய்ப்புகள் எனப் பல விதங்களிலும் பாதிப்பு இருக்கலாம். எனவே பெற்றோர் எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும்கூட கூடியவரை பள்ளி நிர்வாகத்தை எதிர்த்துப் பேச மாட்டார்கள்.

தனியார் பள்ளிகளைப் பற்றிப் பேசும்போது அவற்றின் 'கட்டணக் கொள்ளை' பற்றிப் பேசப்படும் அளவுக்கு அவை தரும் கல்வியின் தரம் பற்றிப் பேசப்படுவதில்லை. பல தனியார் பள்ளிகளில் ஆண்டொறுக்குச் சராசரியாக ஒரு மாணவருக்கு 20000 முதல் 70000 வரை கட்டணம் வசூலிக்கும் நிலையில் அதுபற்றிப் பேசாமல் இருக்க முடியாது. ஆனால், கல்வித் தரம்?

தனியார் பள்ளிகளின் பெருவாரியான மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்கள், பொது அறிவு, ஆங்கில மொழி அறிவு, போட்டித் தேர்வுகளிலும் நுழைவுத் தேர்வுகளிலும் செயலாற்றும் விதம், தன்னம்பிக்கையின் அளவு ஆகியவை அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களைவிடவும் அதிகமாக இருப்பதைப் பொதுவாகக் காண முடிகிறது. ஆனால், இவற்றை வைத்துக்கொண்டு மட்டும் இந்தப் பள்ளிகள் தரமான கல்வியை வழங்குவதாகச் சொல்லிவிட முடியுமா?

தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் ஆங்கில வழிப்பாடம் இருப்பதாலும் ஆங்கிலத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தாலும் ஆங்கில அறிவு ஓரளவு நன்றாகக் கிடைத்துவிடுகிறது. ஆனால், மற்ற பாடங்களைப் பொறுத்தவரை மாணவர்களின் குடும்ப, சமூகப் பின்புலங்களில் இருக்கும் வலுவான ஆதாரங்கள்தாம் அவர்களை நன்றாகப் படிக்கவைக்கின்றன. வீட்டிலும் தாங்கள் சார்ந்த நடுத்தர வர்க்கச் சூழலிலும் இருக்கும் நெருக்கடிகள், பள்ளியில் கொடுக்கப்படும் நெருக்கடி, அடுக்கடுக்காக வைக்கப்படும் தேர்வுகள், தேர்வுகளுக்கான பயிற்சிகள் ஆகியவற்றால் இந்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்குகிறார்கள்.

சொல்லித்தருவதன் மூலம் அதிக மதிப்பெண்கள் என்பது ஒரு சில பள்ளிகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். பெரும்பாலான பள்ளிகள் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியே மாணவர்களைப் படிக்கவைக்கின்றன. கற்பித்தல் (Teaching) என்பதைவிடப் பயிற்றுவித்தல் (coaching) என்பதுதான் இந்தப் பள்ளிகளில் அதிகம். அதாவது, மதிப்பெண் பெறும் இயந்திரங்கள் இங்கே தயாரிக்கப்படுகின்றன. இந்த மதிப்பெண்ணையே அளவீடாக பெற்றோரும் எண்ணுவதாலேயே தாங்கள் எல்லா விதத்திலும் சரி எனும் முடிவுக்கு வந்துவிடுகின்றன தனியார் பள்ளி நிர்வாகங்கள்.

கணிதம், அறிவியல் முதலானவற்றில் கோட்பாடுகளைப் புரியவைக்கும் கற்பித்தல் முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. தனியார் பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்களிடம் அவர்கள் கல்வி பற்றி உரையாடியிருக்கிறேன். அந்த உரையாடல்களில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் படிப்பதெல்லாம் சொற்களைத்தான். கோட்பாடுகளையோ அடிப்படைகளையோ புரிந்துகொண்டு படிப்பதில்லை. கேட்டால், அதையெல்லாம் யாரும் சொல்லித்தருவதில்லை என்றே சொல்லியிருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில்கூட, சரளமாகப் படிக்கவும் பேசவும் பயிற்றுவிக்கும் அளவுக்கு இலக்கணம் சொல்லித்தரப்படுவதில்லை. ஆங்கிலத்திலேயே புழங்குவதால் மாணவர்கள் அம்மொழியை இயல்பாகக் கற்றுக்கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் தடுமாறுவதையும் இதோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்.

மாணவர்களில் பலர் பொது அறிவு, அறிவியல், தொழில்நுட்பம் முதலானவற்றைப் புரிந்துகொள்ளும் திறன் அதிகம் பெற்றிருப்பதன் காரணம் பெரும்பாலும் அவர்களுடைய இயல்பான ஆர்வமும், குடும்பச் சூழலும், சொந்த முயற்சியும்தான்.

பள்ளி முதல்வரும் ஆசிரியர்களும் தங்கள் பள்ளியைப் பற்றியும் தங்களது அலாதியான அணுகுமுறைகள் பற்றியும் பேசும் பகட்டுப் பேச்சுகளே பெற்றோர் – ஆசிரியர் கூட்டங்களை ஆக்கிரமித்திருக்கும். இதையெல்லாம் கேட்கும் பெற்றோர்கள், கல்வி, குழந்தைகளை நடத்தும் விதம் என்று தங்களுக்குத் தெரிந்த எதையாவது பகிர்ந்துகொண்டாலோ, அதை வைத்துக் கேள்வி எழுப்பினாலோ, எல்லாமே தங்களுக்குத் தெரியும் என்ற ரீதியில் பதில் வரும். அதோடு, இந்தக் கேள்வியின் தாக்கம் குழந்தையின் மீது எதிரொலிக்கும்.

நண்பர் ஒருவர், தன் பையன் படிக்கும் பள்ளியில், மாணவர்கள் தூக்கும் பையின் எடை பற்றி பேசியிருக்கிறார். செய்தித்தாளில் வந்திருந்த தகவலை ஆதாரமாகக் காட்டி, இவ்வளவு எடையை ஒரு குழந்தை தூக்கக் கூடாது என்றிருக்கிறார். முகம் சிவந்துபோன முதல்வர், நாங்கள் அப்படித் தூக்கச் சொல்வதில்லையே என்று சொல்லி அந்த விவாதத்தை முடித்துக்கொண்டுவிட்டார். ஆனால், மறுநாள் வகுப்பில் அந்தக் குழந்தையிடம் இதுபற்றி ஆசிரியைகள் குத்தலாகப் பேசியிருக்கிறார்கள். கடும் மன உளைச்சலுக்கு ஆளான அக்குழந்தை, “நீங்க ஏன் எங்க டீச்சர்கிட்ட என் பையைப் பத்தி கேட்டீங்க?” என்று நண்பரிடம் கேட்டு அழுதிருக்கிறது. கேள்வி எழுப்பினால், அது மீண்டும் தன் குழந்தையின் தலையில்தான் வந்து விடியும் என்பதையே நம்முடைய பள்ளிகள் நமக்குச் சொல்கின்றன.

மாணவர் சரியாகப் படிக்கவில்லை என்றால் பெற்றோர் அழைக்கப்பட்டுக் கிட்டத்தட்ட எச்சரிக்கப்படுகிறார்கள். பதறிப்போகும் பெற்றோர் மேலும் பணம் செலவுசெய்து தனிப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். போதாக்குறைக்குத் தாங்களும் சொல்லிக்கொடுக்கிறார்கள். மிகவும் புகழ்பெற்ற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் கணிதம் முதலான பாடங்களுக்குத் தனிப் பயிற்சி வகுப்புக்குச் செல்கிறார்கள் என்றால் இந்தப் பள்ளிகளின் கல்வித் தரத்தைப் பற்றி என்ன சொல்ல?

பொதுவாக, எங்கே நாம் அதிகமாக விலை கொடுக்கிறோமோ அங்கே கேள்வி கேட்கும் உரிமை நமக்கு அதிகமாகக் கிடைக்கிறது. பெரிய உணவகங்களிலும் கடைகளிலும் வாடிக்கையாளருக்கு ஒப்பீட்டளவில் அதிக மரியாதை கொடுக்கப்படுவதைப் பார்த்திருப்போம். ஆனால், கல்வி விஷயத்தில் இதற்கு நேர்மாறாக நடக்கிறது. அதிகமாகப் பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் பெற்றோர்கள் நிர்வாகத்தைக் கேள்வி கேட்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

இது அதிகாரப் போக்கு மட்டும் அல்ல; நுண்ணுணர்வற்ற தடித்தனமும்கூட. அதிகார போதை ஏறிய இந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சிப் பணி

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஒரு அங்கமான விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் 109 பட்டதாரி பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 109
தகுதி: ஏரோநாட்டிக்கல், கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எல்க்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, புரொடக்சன், லைபரரி அண்ட் இன்பர்மேசன் சயின்ஸ் போன்ற பிரிவுகளில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.sdcentre.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 05.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.vssc.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பட்டாசு வெடிப்பது எப்படி: மாணவர்களுக்கு அறிவுரை

'பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்கான வழிமுறைகள் குறித்து, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்' என, பள்ளிக் கல்வி இயக்குனர், கண்ணப்பன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கவனக் குறைவாக பட்டாசு வெடிப்பதால், தீ விபத்து ஏற்பட்டு, உயிர் மற்றும் பொருள் சேதங்கள் ஏற்படுகின்றன. மாணவர்களுக்கு தீக்காயங்களும், சில நேரங்களில் பார்வை இழப்புகளும் ஏற்படுகின்றன.

எனவே, பட்டாசு வெடிக்கும் போது, பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டியது கடமை. பட்டாசு கொளுத்தும் போது, எளிதில் தீப்பற்றும் ஆடைகள் அணியக் கூடாது. ஒரு வாளியில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும். பட்டாசுகளை கையால் வெடிக்கக் கூடாது. 

கூட்டமான பகுதிகளிலும், தெருக்களிலும், சாலைகளிலும் பட்டாசு வெடிக்க வேண்டாம். பட்டாசு கடை, மருத்துவமனை, முதியவர்கள் அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது. விலங்குகள் பயப்படும் வகையில், பட்டாசு வெடிக்கக் கூடாது. இரவு, 10:00 முதல் காலை, 6.00 மணி வரை பட்டாசு வெடிக்காதீர்கள். அதிக சத்தமான பட்டாசுகளை வெடித்தால், அவை உடலையும், மனநிலையையும் பாதிக்கும்; காதுகள் செவிடாகும் அபாயம் உள்ளது. பாதுகாப்பு விதிகளை மாணவர்கள் கடைபிடிக்க, பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில், ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' : மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: பட்டாசு வெடிக்கும் போது, அதன் ஒலி, 120 டெசிபல் அளவுக்குள் இருக்கும் வகையில், தயாரிக்க வேண்டும் என, பட்டாசு ஆலைகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை மீறிய ஆலைகள் கண்டறியப்பட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இரவு, 10:00 மணியில் இருந்து, காலை, 6:00 மணி வரை, ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. உத்தரவை மீறுவோர் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் ஒலி, காற்று மாசு அதிகம் ஏற்படாத பட்டாசுகளை வெடித்து, சுற்றுச்சூழலை பாதிக்காத தீபாவளியை கொண்டாட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!