Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 28 October 2016

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவ குறுந்தகடு தயார் !

அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே ! ,
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகம் முழுவதும் காணொளி வடிவில் தயார் செய்யப்பட்டுள்ளன. பாடத்தின் முதல் வரி தொடங்கி கடைசி வரி வரை அனைத்தும் [கணிதம் நீங்கலாக] ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் உள்ளன. இது மாணவர்களின் இனிமையான கற்றலுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. ஆசிரியர்களின் பணியை பெருமளவு எளிதாக்குகிறது. வார்த்தைகளால் விளக்க முடியாத பல கருத்துகள் வீடியோ மூலம் எளிதாக விளக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் படித்தல் திறனில் மட்டும் கவனம் செலுத்தும் ஆசிரியர்களுக்கு இந்த DVD  தேவைப்படாது. மாறாக படித்தல் திறனுடன் பாடக் கருத்துகளையும் விளக்க நினைக்கும் ஆசிரியர்களுக்கு இது அரிய பொக்கிஷமாக இருக்கும்.
                        இக்குறுந்தகடு, திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியத்தை சேர்ந்த இடைநிலை ஆசிரியர் குருமூர்த்தி என்பவரால் கடந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மணிநேர உழைப்பில் உருவானது.
இரண்டாம் பருவ DVD-யின் விலை ரூ.300. [முதல் பருவ DVDs  ரூ.400 , மூன்றாம் பருவ  DVDs ரூ.300 ]. DVD பெற விரும்புவோர் 9791440155 என்ற குருமூர்த்தி ஆசிரியரின் எண்ணுக்குத் தொடர்புகொள்ளவும். DVD Professional courier ல் அனுப்பிவைக்கப்படும்.
இக்குறுந்தகடுகளைப் பெற்று மாணவர்களின் சிறப்பான கற்றலுக்கு வழிவகுப்பீர் !

தமிழகத்தில் சுற்றுலா 'கைடு' தகுதி அடிப்படையில் தேர்வு

தகுதியும், திறமையும் உள்ள சுற்றுலா கைடுகளுக்கு மட்டும் இந்த ஆண்டு முதல் உரிமம் வழங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.சுற்றுலாத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா கைடுகளுக்கான உரிமம் புதுப்பித்து கொடுப்பது வழக்கம்.

பல இடங்களில் இந்த கைடுகளின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை. இது தொடர்பாக வௌிநாட்டு பயணிகள் தங்களது அதிருப்திகளை தெரிவித்துள்ளனர். இதனை தொடந்து தகுதியும், திறமையும் உள்ள நபர்களுக்கு மட்டும் உரிமம் வழங்கினால் போதும் என அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் இது தொடர்பாக நேர்காணல்கள் நடத்தப்படுகிறது. தென்மாவட்ட அளவில், 110 கைடுகள் பங்கேற்கும் நேர்காணல் நேற்று மதுரையில் நடந்தது.

இதில் அவர்களின் மொழி அறிவு மற்றும் சுற்றுலா தலங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. இதன் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டு, உரிமம் வழங்கப்படும்.

TNTET:ஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம் : புதிய அரசாணை எதிர்பார்ப்பு.

பணியில் உள்ள ஆசிரியர்கள், தகுதித்தேர்வை முடிப்பதற்கான அவகாசம், நவம்பரில் முடிவதால், கால அவகாசத்தை நீட்டித்து, அரசாணை வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.தமிழகத்தில், 2011ல், ஆசிரியர் தகுதித்தேர்வு அமலுக்கு வந்தது.
இதன்படி, அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, அரசு உத்தரவிட்டது. அரசு உதவிபெறும் பள்ளி கள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், 2011க்கு பின் நியமனம் செய்யப்பட்டவர்களும், ஆசிரியர் தகுதித்தேர்வை முடிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான கால அவகாசம், வரும் நவம்பருடன் முடிகிறது. ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வில், இட ஒதுக்கீடு சலுகை வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதனால், புதிதாக ஆசிரியர்தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. அடுத்த மாதத்தில் அவகாசம் முடிவதால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், தங்கள் வேலை பாதிக்கப்படுமோ என, கவலையில் உள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து, தமிழக அரசு தெளிவான வழிகாட்டுதல் வழங்காததால், பல இடங்களில், தகுதித்தேர்வு முடிக்காத ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை முடிப்பதற்கான கால அவகாசத்தை, 2020 வரை நீட்டித்து, அரசாணை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

TNTET:ஆசிரியர் தேர்வில் எவ்வித குளறுபடியும் நடைபெறவில்லை-தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்.

ஆசிரியர் தகுதிகாண் தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கில் தமிழக அரசு முன்வைத்த வாதங்கள் இடம்பெற்ற மனு உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.தமிழக அரசு சார்பில் 2012-இல் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) நடத்தப்பட்டது.
இதில் குறைந்த நபர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, இடஒதுக்கீடு முறையின்படி தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் சலுகை அளிக்க ஓர் அரசாணையையும், பிளஸ் டூ, பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என மற்றொரு அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.இதையடுத்து, ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பாதிக்கப்பட்டதாகக் கூறி சுமார் 600 பேர் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகியவற்றில் வழக்குகளைத் தொடுத்தனர்.

இதில் இரு நீதிமன்றங்களும் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தன.இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் 423 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை இம்மாத தொடக்கத்திலும் கடந்த செவ்வாய்க்கிழமையும் விசாரித்தஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.அப்போது, நீதிபதிகள் தமிழக அரசு தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

இதன்படி, தமிழக அரசு தரப்பில் வியாழக்கிழமை எழுத்துப்பூர்வ வாதங்கள் அடங்கிய மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,"தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வில் எவ்வித குளறுபடியும் நடைபெறவில்லை. நடைமுறை விதிகள் எதுவும் மீறப்படவில்லை. எனவே, மனுதாரர்களின் மேல்முறையீட்டைத்தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது

பயிற்சிகளால் பதறும் ஆசிரியர்கள் பாடங்களை முடிக்க முடியாமல் திணறல்.

ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால், இரண்டாம் பருவப் பாடங்களை நடத்தி முடிக்க முடியாமல் பட்டதாரி ஆசிரியர்கள் திணறுகின்றனர்.அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,), ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் அரசு மற்றும் உதவிபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து பயிற்சிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அக்டோபரில் மட்டும், பல நாட்கள் பயிற்சி நடத்தப்பட்டுள்ளன. இதில் ஒரே பள்ளியை சேர்ந்த 4 ஆசிரியர்கள் கூட ஒரே நாளில் பங்கேற்க வலியுறுத்தப்படுகிறது. பயிற்சி தேதிகளை முன்கூட்டியேமுடிவு செய்யாமல் திட்ட இயக்குனர்களால் அறிவிப்பதே இப்பிரச்னைக்கு காரணம். இதனால் பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி துவங்கியது. இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தப்பட்ட நிலையில், ஆயுதபூஜை விடுமுறை வந்தன. அடுத்து எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., பயிற்சிகள் என அடுத்தடுத்துஐந்து நாட்கள் ஆசிரியர்களின் நேரம் பயிற்சியிலேயே கழிந்தன.

இதனால் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பாடங்களை உரிய காலத்தில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நவ., முதல் வாரத்திலும் இத்திட்டங்கள் மூலம் பயிற்சி வகுப்பு நடக்கவுள்ளது. இதிலும் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். இதனால் மாணவர்களுக்கு, மொத்தம் மொத்தமாக பாடம் நடத்த வேண்டியுள்ளது. இத்திட்டங்களின் இயக்குனர்கள், முன்கூட்டி திட்டமிட்டு பயிற்சி வகுப்புகளுக்கான தேதியை முடிவு செய்து அறிவித்தால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் அடையாள அட்டைகளில் இனி தேசிய இலச்சினை.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் அடையாள அட்டைகளில் தேசிய இலச்சினை இனிமேல் இடம்பெறுவதற்கான முன்மொழிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அரசுப் பணியாற்றி முடித்த பின் ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் அடையாள அட்டைகளை வழங்குவது தொடர்பான முன்மொழிவை மத்திய பணியாளர் பயிற்சித் துறை பரிசீலித்து வருகிறது. முன்னதாக, அவ்வாறு வழங்கப்படும் அடையாள அட்டைகளில் தேசிய இலச்
சினை இடம்பெறத் தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
பின்னர் அது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் அண்மையில் கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும், மாதாந்திர ஓய்வூதியம் பெறுவோருக்கும் தேசிய இலச்சினையுடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்குவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அரசுப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அடையாள அட்டைகளை வழங்கும்போது தேசிய இலச்சினையை இடம்பெறச் செய்வதை அனைத்து மத்திய அமைச்சகங்களும் பின்பற்றலாம்.
எனினும், தன்னாட்சி அமைப்புகள் போன்றவற்றில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

அத்தகைய தன்னாட்சி அமைப்புகள் தங்களின் இலச்சினையை சம்பந்தப்பட்ட அடையாள அட்டைகளில் விதிகளுக்கு உட்பட்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது 58 லட்சம் மத்திய அரசுப் பணியாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் முறையில் கல்வி சான்றிதழ்களை பராமரிக்க தேசிய களஞ்சியம்

கல்வி சான்றிதழ்கள் மற்றும் கல்வி விருதுகளை டிஜிட்டல் வடிவத்தில் பராமரித்து வைப்பதற்காக, 'தேசிய கல்வி களஞ்சியம்' என்ற டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

டிஜிட்டல் வடிவம்:

பள்ளி, கல்லூரிகளின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் கல்வி விருதுகளை டிஜிட்டல் வடிவத்தில் பராமரித்து வைப்பதற்காக, 'தேசிய கல்வி களஞ்சியம்' என்ற டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

3 மாதங்களில் அமைப்பு:

இன்னும் 3 மாதங்களில், இந்த அமைப்பு உருவாக்கப்படும். கல்வி சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், இந்த களஞ்சியத்தில் பதிவேற்றம் செய்யலாம். வேலை அளிக்கும் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான மாணவரின் கல்வி சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை களஞ்சியத்தை அணுகி பரிசோதித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதன்மூலம், போலி சான்றிதழ்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணிக்கான மாதிரி வினா-விடை - 38: ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் அறிவோம் !!

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. இவைத்தவிர மேலும் சில எழுத்துக்களும் தரப்பட்டுள்ளன. தெரிந்து தெளிவு பெறுங்கள்.

ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர்.
உதாரணமாக தை.. இந்த "தை" என்ற எழுத்தானது தமிழ் மாதங்களில் வரும் மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து "தைத்தல்" "பொருத்துதல்" என்ற பொருளிலும் வரும்.

இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதே ஒரேழுத்து ஒரு மொழியாகும்.
ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள்
அ - சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
ஆ - பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
இ - சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
ஈ - பறக்கும் ஈ, தா, குகை, தேனீ, கொடு.
உ - சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்
ஊ - இறைச்சி, உணவு, ஊன், தசை
எ - வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஏ - அம்பு, உயர்ச்சிமிகுதி
ஐ - அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை, ஐந்து, வியப்பு
ஒ - மதகு, (நீர் தாங்கும் பலகை), வினா.
ஔ - பூமி, ஆனந்தம்
க - வியங்கோள் விகுதி
கா - காத்தல், சோலை
கி - இரைச்சல் ஒலி
கு - குவளயம்
கூ - பூமி, கூவுதல், உலகம்
கை - உறுப்பு, கரம்
கோ - அரசன், தந்தை, இறைவன்
கௌ - கொள்ளு, தீங்கு
சா - இறத்தல், சாக்காடு, மரணம், பேய், சாதல்
சீ - லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல், திருமகள்
சு - விரட்டுதல், சுகம், மங்கலம்
சே - காலை, எருது, அழிஞ்சில் மரம்
சை - அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்
சோ - மதில், அரண்
ஞா - பொருத்து, கட்டு
தா - கொடு, கேட்பது
தீ - நெருப்பு , தீமை
து - உண் கெடு, பிரிவு, உணவு, பறவை இறகு
தூ - வெண்மை, தூய்மை
தே - கடவுள், நாயகன், தெய்வம்
தை - தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
நா - நான், நாக்கு
நி - இன்பம், அதிகம், விருப்பம்
நீ - முன்னிலை ஒருமை, நீக்குதல்
நூ - யானை, ஆபரணம், அணி
நே - அன்பு, அருள், நேயம்
நை - வருந்து, நைதல்
நோ - துன்பப்படுதல், நோவு, வருத்தம்
நௌ - மரக்கலம்
ப - நூறு
பா - பாட்டு, கவிதை, நிழல், அழகு
பூ - மலர்
பே - மேகம், நுரை, அழகு, அச்சம்
பை - கைப்பை, பாம்புப் படம், பசுமை, உறை
போ - செல், ஏவல்
ம - சந்திரன், எமன்
மா - பெரிய, சிறந்த, உயர்ந்த, மாமரம்
மீ - மேலே , உயர்ச்சி, உச்சி, ஆகாயம், உயரம்
மூ - மூப்பு, முதுமை, மூன்று
மே - மேல், மேன்மை
மை - கண்மை (கருமை), அஞ்சனம், இருள்
மோ - மோதல், முகர்தல்
ய - தமிழ் எழுத்து என்பதின் வடிவம்
யா - ஒரு வகை மரம், யாவை, இல்லை, அகலம்
வ - நாலில் ஒரு பங்கு "கால்" என்பதன் தமிழ் வடிவம்
வா - வருக, ஏவல், அழைத்தல்
வி - அறிவு, நிச்சயம், ஆகாயம்
வீ - மலர் , அழிவு, பறவை
வே - வேம்பு, உளவு
வை - வைக்கவும், கூர்மை, வைக்கோல், வைதல், வைத்தல்
வௌ - வவ்வுதல், கௌவுதல், கொள்ளை அடித்தல்
நொ - நொண்டி, துன்பம்
ள - தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு - நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
று - எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

பத்தாம் வகுப்பு - பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்பட்டியலை தயாரிப்பதை விரைந்து முடிக்கவேண்டும் !!

Dear teachers kindly fill this form..

 Teachers Happy to share with all of you that I am attending UNESCO international meet from 31st October to 4th November. I wish to showcase all the teachers collaborative work and varied interest of teachers for that I need all the details of hard and smart working teachers like you kindly fill in this form.

 ஐ.  நா. மன்றம் UNESCO   31.10.2016 முதல் 4.11.2016 வரை  நடத்தும் பன்னாட்டு   கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அக்கருத்தரங்கில் எனக்கு பேச 10  நிமிடங்கள் அளிக்கப்பட்டுள்ளது.அவ்வமயம் வகுப்பரையில் மாணவர்களின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கும் அனைத்து ஆசிரிய்ரகளைப் பற்றியும் எடுத்துரக்கலாம் என உள்ளேன். அதற்கு இந்த விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் பூர்த்தி செய்யுங்கள். ஆசிரியர்களின்  திறமை  உலகறியச் செய்வோம்.
 CLICK HERE TO VIEW FORM..

TNTET:ஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம் : புதிய அரசாணை எதிர்பார்ப்பு.

பணியில் உள்ள ஆசிரியர்கள், தகுதித்தேர்வை முடிப்பதற்கான அவகாசம், நவம்பரில் முடிவதால், கால அவகாசத்தை நீட்டித்து, அரசாணை வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.தமிழகத்தில், 2011ல், ஆசிரியர் தகுதித்தேர்வு அமலுக்கு வந்தது.
இதன்படி, அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, அரசு உத்தரவிட்டது. அரசு உதவிபெறும் பள்ளி கள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், 2011க்கு பின் நியமனம் செய்யப்பட்டவர்களும், ஆசிரியர் தகுதித்தேர்வை முடிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான கால அவகாசம், வரும் நவம்பருடன் முடிகிறது. ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வில், இட ஒதுக்கீடு சலுகை வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதனால், புதிதாக ஆசிரியர்தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. அடுத்த மாதத்தில் அவகாசம் முடிவதால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், தங்கள் வேலை பாதிக்கப்படுமோ என, கவலையில் உள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து, தமிழக அரசு தெளிவான வழிகாட்டுதல் வழங்காததால், பல இடங்களில், தகுதித்தேர்வு முடிக்காத ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை முடிப்பதற்கான கால அவகாசத்தை, 2020 வரை நீட்டித்து, அரசாணை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

EMIS பதிவு குளறுபடி : ஆசிரியர்கள் திணறல்

பள்ளி மாணவர்களுக்கு, ஒருங்கிணைந்த அடையாள எண் வழங்கும், 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை திட்டத்தில், மாணவர் மற்றும் பள்ளி பெயர்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு நிதியுதவியுடன், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மூலம், 'எமிஸ்' கல்வி மேலாண்மை தொழில்நுட்ப திட்டம், அமலுக்கு வந்துள்ளது. 
இத்திட்டத்தில், மாணவர்களின் பெயர், படிக்கும் பள்ளி, வகுப்பு, முகவரி, பெற்றோரின் மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இப்பதிவில், மாணவர்களின் ஆதார் எண் இணைப்பு, புதிய மாணவர்களின் விபரங்களை சேர்த்தல், பள்ளிமாறிய மாணவர் விபரங்களை மாற்றுதல் போன்ற பணிகளுக்கு, பள்ளிகளுக்கு இம்மாத இறுதி வரை கெடு விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பெரும்பாலான தொடக்க, நடுநிலை பள்ளிகள் இந்த பணிகளை முடிக்கவில்லை.

ஆசிரியர்களுக்கு பொம்மலாட்ட பயிற்சி அளிக்கும், எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள், கணினியை இயக்கவும், மாணவர் விபரங்களை பதியவும் பயிற்சி அளிக்கவில்லை என, ஆசிரியர்கள் குமுறுகின்றனர். பயிற்சி அளிக்காமல், எமிஸ் திட்டத்தில் மாணவர் பெயர்களை பதிவு செய்ததால், பல மாவட்டங்களில், மாணவர்களின் பெயரும், அவர்கள் படிக்கும் பள்ளியும் மாறி, மாறி பதிவாகி உள்ளது. அதனால், ஆசிரியர்கள், தனியார் கணினி மையங்களை அணுகி உள்ளனர். கட்டண அடிப்படையில், அங்குள்ள ஊழியர்கள், கல்வித் துறையின் இணையதளத்தில், பெயர்களை பதிவு செய்கின்றனர். வரும் காலங்களிலாவது, இது போன்ற பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5ம் வகுப்பு முதல் கட்டாய தேர்வு : 'ஆல் பாஸ்' திட்டம் ரத்து.

ஐந்தாம் வகுப்பு முதல், கட்டாயமாக ஆண்டுஇறுதி தேர்வு நடத்தவும், 'ஆல் பாஸ்' திட்டத்தை நீக்கவும், மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, தேர்வின்றி ஆல் பாஸ் செய்வது அமலில் உள்ளது. 
இதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்புகள் உள்ளன. மத்திய அரசு நடத்திய ஆய்விலும், இத்திட்டத்தால், பல மாணவர்கள், அடிப்படை கல்வியே தெரியாமல், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறுவது தெரிய வந்தது. எனவே, ஆல் பாஸ் திட்டத்தை, நான்காம் வகுப்போடு நிறுத்தி, ஐந்தாம் வகுப்பு முதல் கட்டாய தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. டில்லியில், சமீபத்தில் நடந்த, மாநில கல்வி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், ஆல் பாஸ் திட்டத்திற்கு, சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், ஐந்தாம் வகுப்பில் தேர்வு வைக்கும் திட்டத்தை, மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என, மத்திய அரசின் கல்வி ஆலோசனைக் குழு, தெரிவித்து உள்ளது.

ஆல் பாஸ் திட்டம் ரத்தானால், ஐந்தாம் வகுப்பு, ஆண்டு இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, ஆறாம் வகுப்புக்கு மாணவர்கள் செல்ல முடியும். ஆறு, ஏழாம் வகுப்புகளில், பள்ளி அளவிலும், எட்டாம் வகுப்பிற்கு மாவட்டம் அல்லது மாநில அளவிலும் தேர்வு நடத்தப்படும்.தேர்ச்சி பெறாவிட்டால், துணை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால், மீண்டும் அதேவகுப்பில், ஓராண்டு படிக்க வேண்டும்.

CBSE., 10ம் வகுப்பு இரட்டை தேர்வு முறை ரத்து

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு நடத்தப்படும், இரட்டை தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது. கடந்த, 2010 முதல், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு இரண்டு வகையில், ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 1 தொடர விரும்புவோருக்கு, பள்ளி அளவில் மட்டும், 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும். 10ம் வகுப்புக்கு பின், பிற பாடத்திட்டத்தில் சேர விரும்புவோருக்கு, பொது தேர்வு நடத்தப்படும். ஆனால், பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,யில் பொது தேர்வு எழுதியவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தன. இதுகுறித்து, மத்திய அரசு அமைத்த சிறப்புக் குழு ஆய்வு செய்தது. அதில், பள்ளி அளவிலான தேர்வில் தரம் குறைவு என, தெரிய வந்தது.

எனவே, பள்ளி அளவிலான தேர்வுக்கு முடிவு கட்ட, தமிழகம் மற்றும் மஹாராஷ்டிர மாநில சி.பி.எஸ்.இ., பள்ளிகள் வலியுறுத்தின. பெரும்பாலான ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகிகளும், பள்ளி அளவிலான தேர்வு வேண்டாம் என, ஆய்வுக் குழுவிடம் தெரிவித்தனர். இதையடுத்து, பள்ளி அளவிலான தேர்வை ரத்து செய்ய, மத்திய அரசுக்கான கல்வி ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், அனைத்து மாணவர்களுக்கும், 10ம் வகுப்பில், பொது தேர்வு மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!