Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 31 October 2016

வருகின்ற 05-11-2016 அன்று குறுமைய அளவிலான கூட்டத்தில் நடைபெற இருக்கின்ற " பொம்மலாட்ட வழி கல்வி கற்பித்தல் " பயிற்சிக்கு பயன்படும் வீடியோ

இந்த வீடியோ ஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவத்தில் வரும் பெண் கல்வி பாடலை ஒரு விழிப்புணர்வு நாடகமாக (பொம்மலாட்டத்தில்) நடத்தப்பட்டது.இந்த வீடியோ பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.சரியாக 30 நிமிடங்கள் ஓடக்கூடியது......
Click Here

Primary CRC க்கு பயன்படும் "தெருவிளக்கு கோபிநாத்" அவர்களின் பொம்மலாட்ட பாடல்

1941 முதல் 2050 வரை.. 110 ஆண்டுகளுக்கு தேதியை கூறினால் கிழமையை சொல்லும் மாற்றுத்திறன் மாணவி


தான் வாங்கிய விருது, சான்றிதழ்களுடன் பிரியங்கா.

110 ஆண்டுகளில் எந்த தேதியை கூறி கிழமை கேட்டாலும் 3 விநாடிகளில் பதில் சொல்லி அசர வைக்கிறார் திருச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறன் மாணவி பிரியங்கா.

திருச்சி தீரன் நகரைச் சேர்ந்தவர் கண்ணன். ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி பானு. தனியார் பள்ளியில் சிறப்புக் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் ‘கேர் டேக்கர்’ஆக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் பிரியங்கா(15). சிறுவயதிலேயே மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்.

மாறுகண், செயல்பாடில்லாத இடது கை, தெளிவில்லாத பேச்சு என மாற்றுத்திறன் சிறப்புக் குழந் தையான இவர், திருச்சி உறையூர் சிவானந்தா பாலால யாவில் தேசிய திறந்தவெளி பள்ளி(என்ஐஓஎஸ்) மூலம் பிளஸ் 2 படித்து வருகிறார்.

இவர், 1941-ம் ஆண்டு முதல் 2050-ம் ஆண்டு வரை 110 ஆண்டு களில் எந்த தேதியை சொன்னாலும் , அதற்குரிய கிழமையை அடுத்த 3 விநாடிகளில் சொல்லி அசர வைக்கிறார். அதேபோல, ஒரு குறிப்பிட்ட ஆண்டில், குறிப்பிட்ட மாதத்தில், ஒரே கிழமையில் வரும் தேதிகள் என்னென்ன, எந்தெந்த ஆண்டுகள் ஒரே மாதிரியான தேதி, கிழமைகளில் வருகின்றன என்பதையும் கூறுகிறார்.

உதாரண மாக, வரும் 2017-ம் ஆண்டுக்கு ரிய காலண்டரும், இதற்கு முன் இருந்த 1950, 1961, 1978, 1995, 2006, 2023, 2034, 2045 ஆகிய ஆண்டுகளுக்குரிய காலண்டரும் ஒரே மாதிரியான காலண்டர்களைக் கொண்டவை என்கிறார்.

பேச்சுப் பயிற்சி

இவருக்கு எப்படி இந்த அசாத் திய திறமை வந்தது என அவரது தாய் பானுவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

ஒரு வயதாகும்போதுதான், பிரியங்காவுக்கு ஏதோ குறை இருப்பதை உணர்ந்தோம். மருத்துவர்களிடம் காண்பித்த போதுதான், அவர் சிறப்புக் குழந்தை என்று தெரியவந்தது. இதனால் எங்களுக்கு மனவருத்தம் இருந்தாலும், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பிசியோ தெரபி, பேச்சுப் பயிற்சி அளித்து வந்தோம்.

புத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தோம். மேலும், ஒரு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ராஜாத்தி, வீட் டுக்கு வந்து காலண்டரை காட் டித்தான் எண்களைச் சொல்லித் தந்தார்.

அப்போது, எல்லா மாதங்களையும் பார்த்து மனப்பா டம் செய்துகொண்டதுடன் எந்த தேதியைச் சொன்னாலும் கிழ மையைச் சொல்லி அசத்தினார். தொடர்ந்து, 2011 முதல் 2014 வரை உள்ள காலண்டர்களை கொடுத்து பயிற்சி கொடுத்தோம்.

இவரது திறமையைப் பார்த்த, எங்களுக்குத் தெரிந்த ஒருவர் 1941 முதல் 2050 வரை உள்ள காலண்டர்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, புத்தகம்போல தைத்துக் கொடுத்தார்.

அதை ஒவ்வொரு பக்கமாக புரட்டிய பிரியங்கா, அனைத்தையும் கிரகித்துக்கொண்டார். அதன்பின், 110 ஆண்டுகளில் எந்த தேதியைச் சொன்னாலும், கிழமையை கூறினார். 1941-க்கு முன்பும், 2050-க்கு பின்பும் உள்ள தேதியை கேட் டாலும் கிழமை சொல்கிறார். ஆனால், அந்த ஆண்டுகளுக்கு ரிய காலண்டர் கிடைக்காததால் எங்களால் உறுதிப்படுத்த முடிய வில்லை என்றார் பானு.

விருது

பிரியங்காவின் தந்தை கண் ணன் கூறியபோது, “என் மகளின் திறமைக்காக மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில், கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தலைசிறந்தவர்களுக்கான விருது வழங்கும் விழாவில், பிரியங்கா வின் நினைவாற்றல் திறமையைப் பாராட்டி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்கி கவுரவித்தார்.

உறையூர் சிவானந்தா பாலா லயாவில் தேசிய திறந்தவெளி பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு சேர்ந்துள்ளார். அதற்கு ரூ.26 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். போதிய நிதி வசதி இல்லாததால், அந்த கட்டணத்தைக்கூட இன்னும் செலுத்த முடியவில்லை. அரசு உதவி செய்தால் அது, என் மகளை ஊக்கப்படுத்துவதாக அமையும்” என்றார்.

“படித்து முடித்து, தன்னைப் போலவே உள்ள சிறப்புக் குழந்தைகளுக்கு கேர் டேக்கராக இருக்கவே ஆசைப்படுகிறேன்” என்கிறார் பிரியங்கா

TRB:2011-12 To 2014-15 Appointment Tamil BT's Regularisation order.


TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. தென்னாட்டு பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணா
2. தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு. வரதராசனார்
3. நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்
4. நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்

5. தமிழ்நாட்டின் மாப்பசான் - ஜெயகாந்தன்
6. புரட்சி கவிஞர், இயற்கை கவிஞர் - பாரதிதாசன்
7. கவிமணி - தேசிய விநாயகம் பிள்ளை
8. குழந்தைக் கவிஞர் - அழ. வள்ளியப்பா
9. தொண்டர் சீர்பரவுவார் - சேக்கிழார்
10. கவிச்சக்ரவர்த்தி - கம்பன்
11. விடுதலைக்கவி , தேசியக்கவி - பாரதியார்
12. தமிழ்த்தென்றல் - திரு.வி.க.
13. ஆளுடை நம்பி - சுந்தர்ர்
14. ஆட்சி மொழிக் காவலர் - இராமலிங்கனார்
15. கிருத்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை
16. இரா. பி. சேதுபிள்ளை - சொல்லின் செல்வர்
17. மூதறிஞர் - இராஜாஜி
18. பேரறிஞர் - அண்ணா
19. பகுத்தறிவுப் பகலவன் - பெரியார்
20. செக்கிழுத்த செம்மல் - வ.உ.சி.
21. தசாவதானி - செய்குத் தம்பியார்
22. இசைக்குயில் - எம்.எஸ். சுப்புலட்சுமி
23. மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாசர்
24. பாவலர் ஏறு - பெருஞ்சித்தரனார்
25. கல்வியிற் பெரியவர் - கம்பர்
26. சிறுகதை மன்னன் - புதுமைபித்தன்
27. திருவாதவூரார் - மாணிக்க வாசகர்
28. முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ. விசுவநாதம்

கன்னியாகுமரி மாவட்டத்திற்குநாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கேரள மாநிலத்திருந்து கன்னியாகுமரி மாவட்டம் மொழிவாரியாக பிரிக்கப்பட்டு தமிழகத்துடன் இணைந்து 61 ஆண்டு ஆகியதை முன்னிட்டு நாளை அம்மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று வெளியிட்டார்.

November 2016 diary

November 2016 diary:

5  -  Grievance day

*RL*
2  -   All souls day  
14 - Gurunanak Jeyanthi

*CRC*
5    -  Primary CRC
12 -  Upper Primary CRC

*BRC Level Training*
7 & 8  -  Science training for Primary Teachers

19 - Saturday School working day.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவ.,5-ல் உள்ளூர்விடுமுறை.

திருச்செந்தூரில் வரும் 5-ம் தேதி கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறஉள்ளது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்பத்தை மேம்படுத்த அண்டை மாநிலம் முடிவு 

தொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணைச் செயல்பாடுகள் சார்பான ஆசிரியர் கையேட்டினை அ.க.இ. சார்பில் வழங்கப்படும் பள்ளி மான்யம் மூலம் பெற்று பயன்படுத்திட உத்தரவு.

How to Create Own Website for You?

How to Create Own Website for You?

1.கூகுளில் புதிய கணக்கு ஒன்றை தொடங்குங்கள்.

2.அதனுள் சென்று மேலே வலது பக்கம் உள்ள 6 புள்ளியை க்ளிக் செய்யுங்கள்.

3. கீழே more என்ற வார்த்தையை க்ளிக் செய்யுங்கள்.

4. ஆரஞ்சு நிற சின்னத்தோடு Blogger என்பதை க்ளிக் செய்யுங்கள்.

5.create your blog என ஆங்கிலத்திலுள்ளதை க்ளிக் செய்யுங்கள்.

6,create a new blog கீழ் Title என்னுமிடத்தில் எந்த தலைப்பின் கீழ் நீங்கள் செயல்பட விரும்புகிறீர்கள் என கொடுக்கவும். (இது இணைய முகவரி அல்ல.தலைப்பு மட்டுமே)

7.Address என்ற பகுதியில் வழங்க விரும்பும் முகவரியை கொடுக்கவும்.(இதுதான் நீங்கள் அனைவருக்கும் பகிரப் போகும் உங்களது ப்ளாக்கர் முகவரி. எல்லாம் small letters இடைவெளியின்றி தர வேண்டும்.என்ன வார்த்தை கொடுத்தாலும் அதன் பின் .blogspot.com என்பது default ஆக வரும் Example: (www.rkkalvisiragukal.com). எனவே மிக எளிதாகத் தரவும்.

8.Template(எப்படி தோன்ற வேண்டும்) என்பதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.

9.create blog என்பதை க்ளிக் செய்யவும்.

10.இடது மூலையில் தென்படும் new post ஐ க்ளிக் செய்யவும். 

11.எழுதப் போகும் பதிவிற்கான தலைப்பை post title என்ற பகுதியில் கொடுக்கவும்.

12.compose பகுதியில் கீழ் தெரியும் பெரிய தாள் போன்ற பகுதிக்குள் மேல் கொடுத்த தலைப்பு தொடர்பான படைப்பை பதிவு செய்யவும்.

13.பதிவில் எழுத்துகளை பெரிதாக்க,சிறிதாக்க,தடித்த,சாய்ந்த எழுத்துகளை பயன்படுத்த, அவற்றின் நிறத்தை மாற்ற, அடிக்கோடிட, படங்களை,வீடியோக்களை இடைச் செருக, ஒரு  இணைப்பை வேறொரு பக்கத்திலிருந்து இங்கே வழங்க- இது போன்ற செயல்களுக்கு நீங்கள் எழுத ஆரம்பிக்கும் இடத்திற்கு மேலே உள்ள விருப்பங்களிலிருந்து தெரிவு செய்து கொள்ளலாம்.

14.பதிவை முடித்த பிறகு பதிவு சார்ந்த குறிப்பினை வழங்க வலது பக்கம் தோன்றும் lables என்பதை க்ளிக் செய்ததும் தோன்றும் சிறிய பெட்டிக்குள் குறிப்பினை கொடுக்கவும். பின்னர் கீழே உள்ள Done என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.

15,இறுதியாக Post Title க்கு வலது புறம் தோன்றும் Publish என்ற வார்த்தையை க்ளிக் செய்ய, உலகத்தின் எந்த இணைய இணைப்புள்ள ஒரு கணினியிலிருந்தும் உங்கள் ப்ளாக் முகவரி தெரிந்த எவரும் நீங்கள் எழுதியதை வாசிக்க முடியும்.

நன்றி
-முனைவர்.ஜெயபிரபு,பட்டதாரி ஆசிரியர்,தஞ்சாவூர்.

TRB-TET:66 இடைநிலை ஆசிரியர்கள் சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகளுக்கு தேர்வு:ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

சமூக பாதுகாப்புத் துறை உறைவிடப் பள்ளிகளுக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் பழைய மெரிட் பட்டியலில் இருந்து தேர்வுசெய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் உமா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சமூக பாதுகாப்புத் துறையின்கீழ் இயங்கும் உறைவிடப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள 66 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை கடந்த 2012, 2013 நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மெரிட் பட்டியலில் இடம்பெற்றவர்களைக் கொண்டு நிரப்ப முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த நியமனம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளின் (தகுதித்தேர்வு, வெயிட்டேஜ் மதிப்பெண் நியமன முறை) இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வுசெய்யப் பட்டவர்களின் பட்டியல் பதிவெண், பெயர், பிறந்த தேதி, வெயிட்டேஜ் மதிப்பெண், ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகிய விவரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in)வெளியிடப்பட்டு இருக்கிறது.

வங்கியில் அதிகாரி பணி

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 'சிறப்பு அதிகாரி-ஐ.டி.' பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 19 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

23 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு, கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். என்ஜினீயரிங்/ தொழில்நுட்ப பாடங்களில் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை படிப்புகளை படித்தவர் களுக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. விருப்பம் உள்ளவர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 9-11-2016.

தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஹால்டிக்கெட்: நாளைமுதல் பதிவிறக்கம் செய்யலாம்.

10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு உதவித்தொகை வழங்கு வதற்காக தேசிய அளவில் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.முதலில் மாநில அளவிலும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய அளவிலும் தேர்வு நடைபெறும். அந்த வகையில்,
முதல்கட்ட தேர்வான மாநில அளவிலான தேர்வு, நவம்பர் 5-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டை பள்ளி தலைமை ஆசிரியர்கள் http://www.tngdc.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 1 (நாளை) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கடந்த ஆண்டு வினாத்தாள்களை, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.மாநில அளவிலான திறனாய்வுத் தேர்வை தமிழகம் முழுவதும் ஏராளமான மையங்களில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். அவர்களில் 232 பேர் அடுத்த கட்ட தேர்வான தேசிய அளவிலான திறனாய்வு தேர்வுக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள்.

செயல்படாத பி.எப். கணக்கில் உள்ள பணத்துக்கு 8.8 சதவீத வட்டி மத்திய அரசு அறிவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) கணக்கில், தொடர்ந்து 36 மாதங்களாக பணம் செலுத்தப்படாமல் இருந்தால், அந்த கணக்கு செயல்படாத கணக்கு ஆகி விடும். இப்படி செயல்படாமல் போன கணக்குகளில் ரூ.42 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் உள்ளது.
2011–2012–ம் நிதி ஆண்டில் இருந்து அத்தகைய கணக்குகளுக்கு வட்டி அளிப்பதை மத்திய அரசு நிறுத்திவிட்டது. இந்நிலையில், செயல்படாத பி.எப். கணக்குகளுக்கு 8.8. சதவீத வட்டி அளிக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.இதுகுறித்து ஐதராபாத்தில் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:–

தொழிலாளர் நலன் காக்கும் அரசு என்று கூறிக்கொண்ட முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, செயல்படாத பி.எப். கணக்கில் உள்ள பணத்துக்கு வட்டி அளிப்பதை நிறுத்தியது. ஆனால், நாங்கள் அந்த பணத்துக்கு வட்டி அளிக்க முடிவு செய்துள்ளோம். பிரதமர் மற்றும் மத்திய நிதி மந்திரியுடன் ஆலோசனை நடத்திய பிறகு தொழிலாளர் நல அமைச்சகம் இம்முடிவை எடுத்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் பாட வீடியோ 'சிடி:' அரசு உதவி பள்ளிகளுக்கு இந்த வார இறுதிக்குள் வழங்கப்படும்

கல்விச்சிறகுகளின் செய்தியில் இன்று காலை தமிழ் பாட வீடியோ 'சிடி:' அரசு உதவி பள்ளிகளுக்கு மறுப்பதாக செய்தி வெளியிட்டு இருந்தோம். அந்த செய்தியை பார்த்த அரசு அதிகாரி ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 'அரசு உதவி பள்ளிகளுக்கு இந்த வார இறுதிக்குள் சிடி வழங்கப்படும்' என உறுதியளித்தார்.

2020: இந்தியாவில் 100 கோடி மொபைல் சந்தாதாரர்கள்!!

வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மொபைல் சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஒரு பில்லியனாக உயரும் என்று ஜி.எஸ்.எம். அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகளவில் உள்ள மொபைல் ஆபரேட்டர்களின் நலனுக்காக கடந்த 1995ஆம் ஆண்டு ஜி.எஸ்.எம். (குரூப் ஸ்பெஷல் மொபைல்) அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த 
அமைப்பில் உலகளவில் உள்ள சுமார் 800 ஆபரேட்டர்களும் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த அமைப்பு வெளியிட்டுள்ள, ‘இந்தியா 2016: மொபைல் பொருளாதாரம்’ அறிக்கையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் 616 மில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. உலகளவில் மொபைல் சந்தையில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மொபைல் சேவைகளை அதிகரிப்பது, மொபைல் கட்டணத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனாக உயரும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பிராட்பேண்ட் சேவை முன்னெப்போதும் இல்லாதளவுக்கு உயர்ந்து வரும் சூழலால் வரும் 2020க்குள் இந்தியாவில் பிராட்பேண்ட் இணைப்புகளின் எண்ணிக்கை 670 மில்லியனாக உயரும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, அடுத்ததாக இந்தியாவில் உள்ள மொபைல் வாடிக்கையாளர்கள் அதிகளவில் 3G சேவையில் இருந்து 4G சேவைக்கு தங்களை மாற்றி வருகின்றனர். இதையடுத்து வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 280 மில்லியன் மொபைல் வாடிக்கையாளர்கள் 4G சேவையைப் பயன்படுத்த உள்ளதாகவும், கடந்த 2015ஆம் ஆண்டு முடிவில் இந்தியாவில் 4G சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மூன்று மில்லியன் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஜி.எஸ்.எம். அமைப்பின் இயக்குநர் மாட்ஸ் கூறுகையில், ‘இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவலும் இந்தியாவில் அடுத்து வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவின் மொபைல் சந்தை மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் சந்தை அதிகரிப்பதன் மூலம் அனைவரையும் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு இது உதவும்’ என்றார்.

தமிழ் பாட வீடியோ 'சிடி:' அரசு உதவி பள்ளிகளுக்கு மறுப்பு

ஐந்தாம் வகுப்பு வரையுள்ள, தமிழ் பாட புத்தகத்தின் வீடியோ, 'சிடி'யை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இலவசமாக வழங்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

 சமச்சீர் கல்வியில், தமிழ் பாடத்தை எளிதில் கற்றுக்கொடுக்க, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடங்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில், வீடியோ பாடங்களாக தயாரிக்கப்பட்டுள்ளன. 

'தாயெனப்படுவது தமிழ்' என்ற, இந்த வீடியோ தொகுப்பு, இணையதளத்தில், 'யூ டியூப்'பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மாணவர்களின் நடனத்துடன், தமிழகத்தின் பல ஊர்களில், 40 பாடங்களும், பாடல்களாக படமாக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ தொகுப்பு, 'சிடி'யை, 35 ஆயிரம் தொடக்க பள்ளிகளுக்கு, இலவசமாக அனுப்ப, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு, வீடியோ, 'சிடி'யை இலவசமாக தர, மாவட்ட அதிகாரிகள் மறுத்துள்ளனர். 'தமிழகத்தின் பல கிராமங்களிலும், அரசு தொடக்க பள்ளிகளை விட, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தான், ஏழை மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர். அவர்களுக்கு பலன் தரும் வகையில், பாடல், 'சிடி'யை இலவசமாக வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பிளஸ் 2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு:2017 பொதுத்தேர்வில் புதுமை இருக்காது

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ளது. 

 2017 மார்ச் பொதுத் தேர்வில் புதுமைகள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு, தமிழக பள்ளிக் கல்வி துறையின் அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. 

இதில், எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களின் உயர் கல்வி எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால், அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் போட்டி போட்டு, பொதுத் தேர்வை எதிர்கொள்ள, தங்கள் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தருகின்றன. இந்நிலையில், 2017 மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளுக்கு, வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ளது. பல்வேறு வகை வினாத்தாள்கள் பாட வாரியாக பெறப்பட்டுள்ளன. 

இதில், ஐந்து வகை வினாத்தாள் பட்டியல் தயாரிக்கப்படும். டிசம்பர் இறுதி யில், இந்த பட்டியலுக்கு அரசின் அனுமதி கிடைத்ததும், அச்சிடப்பட உள்ளது. இந்த வினாத்தாளில், எந்தவித மாற்றமும் இன்றி, முந்தைய ஆண்டுகளின் படியே வினாக்கள் இடம் பெறும் என, தெரிகிறது. இதுகுறித்து, தேர்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வி துறை அதிகாரிகள், விரைவில் சுற்றறிக்கை வெளியிட உள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

(NATIONAL UNITY DAY) HEADMASTERS ARE INSTRUCTED TO PLEDGE TAKING CEREMONY @ 11.00AM ON 31ST OCTOBER 2016. (PLEDGE ATTACHED WITH THE LETTER)

தேசிய உறுதி ஏற்பு நாள் பள்ளிகளுக்கு உத்தரவு!

பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி சாம்பியன்

இந்தியா-பாகிஸ்தான்  ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றிக்கோப்பயை கைப்பற்றியுள்ளது.

 தென்கொரிய அணியை வீழ்த்தி இறுதிப் பொட்டியில் நுழைந்த  இந்திய அணி , அசத்தலாக விளையாடி இன்று இறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில்  பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. 

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!