Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 2 November 2016

Puppet Making video

TNPSC:குரூப்-4 தேர்வுக்கு 12,75,000 நபர்கள் விண்ணப்பித்து உள்ளனர்

06.11.2016 அன்று நடைபெற உள்ள குரூப் - 4 தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் 12,75,000 நபர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

Tamilnadu Government Holidays 2017 - List & 2017 - Calendar

மாணவர்களுக்கு 11 விதிமுறைகளுடன் கல்வித்துறை அதிரடி உத்தரவு !

மாணவர்கள் முறுக்கு மீசை, காதில் கடுக்கன் அணிவது கூடாது. பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும்’ என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்லூரி மாணவர்களை போலவே, மேல்நிலை பள்ளி மாணவர்களும் முறுக்கு மீசை, காதில் கடுக்கன்,

‘லோ ஹிப்’ பேன்ட், சீரற்ற முறையில் முடிவளர்த்து பள்ளிகளுக்கு வர ஆரம்பித்தனர். மேலும், பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் 11 விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் இதனை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கல்வித்துறையின் 11 விதிமுறைகள்: 

* காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும். 

* லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’கள் அணிந்து வர அனுமதி இல்லை.

* அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது

* மாணவர்கள் அணியும் சட்டை நீளம் ‘டக் இன்’ செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும். 

* சீரற்ற முறையில் ‘இன்’ பண்ண கூடாது. கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும்.

* கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட (போலீஸ் கட்டிங்) வேண்டும். 

* மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை பாயும்.

* கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது. 

* பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும்.

* பைக், செல்போன், ஸ்மார்ட் போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறினால் பறிமுதல் செய்யப்படும். திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது. 

* பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும். 

இவ்வாறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘மாணவர்களின் ஒழுக்க நெறிமுறைகளை வளர்த்தெடுப்பதில் பள்ளிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இதற்கான 11 விதிமுறைகள் குறித்து ‘பிளக்ஸ் பேனர்’கள் பள்ளிகளில் வைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  துண்டு பிரசுரங்கள் மூலமும், பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

உணவு பாதுகாப்பு சட்டம் அமல் : ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வு!!

உணவு பாதுகாப்பு சட்டம், நேற்று முதல் அமலுக்கு வந்ததால், அதிகாரிகள், ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
தமிழக ரேஷன் கடைகளில், 1.91 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, இலவச அரிசி வழங்கப்படுகிறது. தமிழக அரசு, மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தை நேற்று முதல் அமல்படுத்தியது.

அதன்படி, நான்கு பேருக்கு கீழ் உள்ள குடும்பத்துக்கு, தற்போது ரேஷனில் வழங்கப்படும் அதே அளவில் இலவச அரிசி வழங்கப்படும்.

25 கிலோ இலவச அரிசி

ஐந்து பேர் உள்ள குடும்பத்துக்கு வழங்கப்படும், 20 கிலோ அரிசிக்கு பதில், 25 கிலோ இலவசம்; அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு
உறுப்பினருக்கும், தலா, ஐந்து கிலோ அரிசி, கூடுதலாக இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. இதையடுத்து,ரேஷன் கடைகளில், உணவுத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்து உள்ளதால், ரேஷன் கடைகளுக்கு கூடுதலாக அரிசி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அரசு நிர்ணயித்துள்ள அளவில், ஊழியர்கள், அரிசியை வழங்குகிறார்களா என்பதை கண்காணிக்க ஆய்வு செய்யப்படுகிறது. மொத்தமாக அரிசியை எடுத்து செல்ல முடியாதவர்கள், இரண்டு தவணைகளில் பெறலாம். இந்த சட்டத்தால், அரிசி மானியத்துக்காக, மாநில அரசுக்கு, 1,193 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

ரசீது வழங்க கருவி :

ரேஷன் கடைகளில், உணவு பொருட்கள் வாங்கும் போது, காகித ரசீது வழங்கப்படுகிறது. இதில், முறைகேடுநடப்பதால், நவீன கருவியில், ரசீது போட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, தற்போது, ரேஷன் கடைகளில், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டுள்ளது. அதில், ரசீது போடும் போது, அந்த விபரம் கார்டுதாரருக்கு,
எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படும். நேற்று முதல், அனைத்து ரேஷன் கடைகளிலும், கருவி மூலம் ரசீது போடும் முறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், 34 ஆயிரத்து, 776 ரேஷன் கடைகள் உள்ளன; அதில், 70 சதவீத கடைகளில், அக்., 1 முதல், பாயின்ட் ஆப் சேல் கருவியில் ரசீது போடப்பட்டது. நேற்று முதல் அனைத்து கடைகளிலும், கருவி மூலம் தான் ரசீது போடப்படும். எனவே, ரேஷன் கார்டுதாரர்கள், தங்கள் மொபைல் போன் எண்ணை, ரேஷன் கடைகளில் உடனே பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

NAMAKKAL CEO PROCEEDINGS- பள்ளிக்கல்வி- வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கைபேசிகளை உபயோகிக்கக்கூடாது என்பது கட்டாயம் அமல் செய்தல் சார்பு

NTSE 2016 - Hall Ticket Download revised Instructions

பள்ளி மாணவரை ஆதார் மூலம் பின்தொடர மத்திய அரசு முடிவு.

நாடு முழுவதிலும் பள்ளி மாணவர் களை ஆதார் எண் மூலம் தீவிர மாகப் பின்தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், மாணவர்கள் படிப்பை பாதியில் விடுவதைத் தடுக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. நாடு முழுவதிலும் அரசு மற்றும் தனியார் நிர்வாகத்தின் கீழ் சுமார் 15 லட்சம் பள்ளிகள் உள்ளன. 
இவற்றில் சுமார் 26 கோடி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்களில் பலருக்கு படிப்பை பாதியில் விடவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதை மத்திய, மாநில அரசுகளால் கண்காணித்து தடுக்க முடியாமல் உள்ளது. இந்த நிலையை போக்க மத்திய அரசு அவர்களின் ஆதார் எண்களைப் பதிவு செய்து 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கண்காணிக்க முடிவு செய்துள்ளது. இதில் ஆதார் எண் இல்லாத குழந்தைகளுக்கு அதை அவர்கள் பெறும் வரை 18 இலக்கம் கொண்ட சிறப்பு எண் அளிக்கப்பட உள்ளது. இந்த எண்ணைப் பதிவுசெய்து குழந்தைகளைத் தீவிரமாகப் பின்தொடரும் பணியை, கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் (National University of Educational planning and Administration) செய்ய உள்ளது. இதற்கு, 'கல்விக்கான ஒருங்கிணைந்த - மாவட்ட தகவல் முறை (Unified -District Information System for Education (U-DISE)' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள்  கூறும்போது, 'தற்போது, பள்ளியில் சேரும் குழந்தைகள், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் உட்பட சில தகவல்கள் மட்டுமே மத்திய அரசால் தொகுக்கப்பட்டு வருகிறது. இந்தப் புள்ளி விவரங்களில் பள்ளியை பாதியில் விடும் குழந்தைகளின் விவரம் துல்லியமாக இருப்பதில்லை. எனவே இந்த விவரம் மற்றும் பிற குறைபாடுகளையும் புதிய திட்டத்தின் மூலம் அறிந்து அதை போக்கும் நடவடிக்கைகளை எடுப்பது எங்கள் திட்டம் ஆகும். அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது" என்று தெரிவித்தனர்.

 இந்த முறையை சண்டீகர் மற்றும் சில மாநிலங்கள் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கிவைத்து தங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதைத் கவனத்தில் கொண்ட மத்திய அரசு நாடு முழுவதிலும் தனது நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் பள்ளியை பாதியில் விடும் குழந்தைகள் விவரம், அவர்களின் பின்னணி, பள்ளிகளின் குறைபாடு உட்பட அனைத்து விவரங்களையும் தொகுத்து உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் படிப்பை பாதியில் விடுவதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். மத்திய அரசின் 2014-15 கல்வியாண்டு கணக்கெடுப்பின்படி தற்போது, நாடு முழுவதிலும் பள்ளியைப் பாதியில் விடும் குழந்தைகள் எண்ணிக்கை 18 சதவீதமாக உள்ளது. சுமார் 13 லட்சம் அரசுப் பள்ளிகள் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக உள்ளன. சுமார் 5 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது இதற்கு காரணம் ஆகும். பிளஸ் 2-க்கு பிறகு தற்போது 25 சதவீத மாணவர்கள் மட்டுமே உயர்கல்வியில் சேருகின்றனர். 

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரியது எல்காட் நிறுவனம்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2011-12, 12-13ம்ஆண்டு களில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், கலை, அறிவியல் கல் லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து 2013-14 நிதியாண்டு முதல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாண்டு படிக்கும் மாணவர் களுக்கும் இத்திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத் துறையின் கண்காணிப்பில், 2011 முதல் 2016 வரை 33 லட்சம் மடிக்கணினிகள் எல்காட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடந்த மே மாதம் நடந்தது. இதையொட்டி அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக அரசு பொறுப்பேற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.

இதற்காக 5 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்யும் பணியில் எல்காட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.முதல்கட்டமாக இதற்கான ஒப்பந்தத்தை எல்காட் நிறு வனம் கோரியுள்ளது. தகுதி யான நிறுவனங்கள் தரும் மடிக்கணினிகள் அரசு வகுத்துள்ள வரம்புக்குள் இருக்கும்பட்சத்தில், அவை கொள்முதல் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என சிறப்புத்திட்ட செயலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.

TRB - 38 ஏ.இ.இ.ஓ. விரைவில் நேரடி நியமனம்

தொடக்கக் கல்வித்துறையில் உதவி தொடக்கக் கல்விஅலு வலர் (ஏ.இ.இ.ஓ.) பணியிடங்கள் 60 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 40 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படு கின்றன.

அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுமூலமாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆகின்றனர். சம்பளப்பட்டியல் தயாரிப் பது, பள்ளிகளில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது, ஆசிரியர் களுக்கு விடுமுறை, ஈட்டுவிடுப்பு சரண்டர், வங்கிக் கடன்,பொது வருங்கால வைப்புநிதி கணக்கில் (ஜிபிஎஃப்) முன்பணம்போன்றவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது முதலான பணிகளை அவர்கள்மேற்கொள்கிறார்கள்.

நேரடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நியமனமுறை முதல்முறையாக 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தஆண்டு 67 பேரும் தொடர்ந்து 2011-ல் 34 பேரும் நேரடியாக உதவிதொடக்கக் கல்வி அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 5ஆண்டுகளாக நேரடி நியமனம் எதுவும் இல்லை. 

இந்த நிலையில், 38உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களை நேரடியாக தேர்வு செய்ய,ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பதாகதொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார். நேரடிஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியைப் பொருத்த வரையில்சம்பந்தப்பட்ட பாடத்தில் இளங்கலை பட்டமும், பிஎட் பட்டம் பெற்றவர்கள்இதற்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 35ஆகும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு 40 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்/அரசு ஊழியர்களின் SERVICE REGISTER (SR) டிஜிட்டல் மயமாகிறது

நிலுவையில் உள்ள பதிவுகளை விரைந்து பதிவு செய்ய அரசு முதன்மை செயலாளர் உத்தரவு.
கருவூலச்செய்தி;
அனைத்து  அரசு ஊழியர்கள்-  ஆசிரியர்களுடைய   SR ஐ தயார் நிலையில் வைக்க வேண்டும்..SR கள் அனைத்தும்  கருவூலத்தில்  SCAN செய்து பதிவு செய்யப் பட உள்ளது

மாணவர்களுக்கு கவுன்சலிங் தர மாவட்டத்துக்கு 100 ஆசிரியர்கள்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் முழு ஆண்டுத்தேர்வில் தோல்வி அடைந்தாலோ, மதிப்பெண் குறைந்தாலோ தற்கொலையில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை, சமூக பாதுகாப்புத்துறை இணைந்து ஆசிரியர்கள் மூலம் பள்ளி அளவில் மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முடிவு செய்துள்ளனர். 

இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா நூறு ஆசிரியர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க உள்ளனர்.  தேர்வு செய்யப்பட்டுள்ள 100 ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்டத்திலேயே, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைப்பது எப்படி, தற்கொலை எண்ணம் வராமல் தடுக்கும் வழிமுறை குறித்து மனவளக்கலை பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி பெறும் ஆசிரியர்கள் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு கவுன்சலிங் அளிப்பர். ஆசிரியர்களுக்கான பயிற்சி விரைவில் அளிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு ''வாட்ஸ் அப்'' வரமா.... சாபமா

அலைபேசியில் அனுப்பும் குறுந்தகவலுக்குப் பதில் காணொலி, கேட்பொலி மற்றும் உருப்படிமங்களை எளிமையாகத் தடையின்றி அனுப்புவதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது 'வாட்ஸ் ஆப்' செயலி. அமெரிக்காவைச் சார்ந்த ஜேன் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் ஆகியோரின் முயற்சியால் 2009 பிப்., 24ம் தேதி சிலிகான் பள்ளத்தாக்கில் 55 பணியாளர்களைக் கொண்டு 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் துவங்கப்பட்டது. அதன் மூலம் 'வாட்ஸ் ஆப்' செயலி உருவாக்கப்பட்டது.

ஜான், பிரைன் இருபதாண்டுகளாக 2007 செப்., வரை யாஹூ நிறுவனத்தில் கணினி சார்ந்த வேலைகளைச் செய்தனர். பின் 'பேஸ்புக்' நிறுவனத்தில் வேலையில் சேர முயற்சித்தனர். அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. மனம் தளராத இருவரும், வரும் காலங்களில் மக்கள் 'ஸ்மார்ட் போன்' உபயோகிப்பர் என கணித்து, 'வாட்ஸ் ஆப்' செயலியை உருவாக்கியதுதான் இன்றைய அவர்களின் இமாலய வெற்றிக்குக் காரணம். 'வாட்ஸ் ஆப்' நிறுவனர்களான ஜான் மற்றும் பிரைன் ஆகியோரை வேலைக்கு எடுக்காத 'பேஸ்புக்' நிறுவனம், ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு 2014 பிப்., 19 'வாட்ஸ் ஆப்' நிறுவனத்தைத் 1600 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

மைனர்களுக்கு தடை 

'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துபவர்கள், தங்கள் சொந்தத் தகவல்களை வெளியிடுவதற்கு மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும். பதினாறு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அதைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்துவது தெரிந்தால் உடனடியாக 'வாட்ஸ் ஆப்' குழுவிலிருந்து நீக்கப் படுவர் என்பதை 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் விதிமுறையாக குறிப்பிட்டது. ஆனால் நடைமுறையில் இந்த விதிமுறை எவ்வளவுதுாரம் காப்பாற்றப்பட்டுள்ளது என தெரியவில்லை.

80 கோடி பேர்

உலகில் 80 கோடி நுகர்வோர் 'வாட்ஸ் ஆப்' செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். மாதம் லட்சத்திற்கும் அதிகமான புதிய பயனாளர்கள் உருவாகின்றனர். 'வாட்ஸ்ஆப்' பயன்படுத்துபவர்களில் உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.

'ஸ்மார்ட் போனுடன் 'வாட்ஸ் ஆப்' வைத்திருப்போரை, இன்றைய நாகரிகக் குறியீடாக உருவாக்கி, அவர்களைத் தங்கள் மாய வலைக்குள் சிக்கவைக்கும் வேலையைப் பன்னாட்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. 

இந்த கவர்ச்சி வலையில் சிக்கிய மாணவர்கள், 'வாட்ஸ் ஆப்'க்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் மாணவர்கள் சுயமாகச் சிந்திக்கும் நேரத்தையும் கல்வி கற்கும் நேரத்தையும் இழக்க நேரிடுகிறது. இதைப் பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்கள் உணர்ந்து, அதைப் பயன்படுத்த முறையாக வரையறை செய்ய வேண்டும்.

அரட்டைக்காக பயன்படும் அவலம் 

'ஸ்மார்ட் போனுடன் வாட்ஸ் ஆப் பயன்படுத்தக் கூடிய மாணவர்களிடம், அவர்கள் கல்வி முறையில் ஏற்படக்கூடிய நன்மை மற்றும் தீமைகளை அறிய, தென்மாவட்ட தகவல் தொழில் நுட்ப இளைஞர்களை ஒருங்கிணைத்து வரும் 'மதுரை ஐடியன்ஸ்' அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. 

மதுரை மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகளிடம் ஆய்வு நடந்தது. அவர்களிடம் கலந்துரையாடல், அலைபேசி, மின்னஞ்சல், முகநுால், மற்றும் டுவிட்டர் வழியாகக் கேள்விகளை கேட்ட போது கல்வி, பொதுத் தகவல், அரட்டை, குடும்பம் போன்ற நான்கு நியாயமான காரணங்களுக்காக இதைப் பயன்படுத்துவதாகப் பெரும்பாலோர் தெரிவித்தனர்.

அவர்களிடம் பெற்ற தகவல்களைப் பகுப்பாய்வு செய்ததில், மாணவர்கள் அரட்டைக்காகவும், பொதுத் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், “வாட்ஸ்ஆப்'” பயன்படுத்துவதாக தெரிவித்தனர். 

மாணவிகள் பெரும்பாலும் குடும்பம் சார்ந்த தகவல்களை நண்பர்களிடம் தெரிவிக்கவும் அரட்டைக்காகவும் பயன் படுத்துவதாகத் தெரிவித்தனர்.

கல்விக்கான பயன்பாடு குறைவு 

மிக குறைந்த எண்ணிக்கையினரே கல்விக்காக பயன்படுத்துகின்றனர் என்பதைப் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது.கல்விக்காக -8, பொதுத் தகவலுக்காக -11, அரட்டைக்காக -72, குடும்பத்திற்காக -9 சதவீதம் பயன்படுத்தியுள்ளனர். 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்தியவர்கள் 72 சதவீதம் பேர் நடந்து முடிந்த தேர்வுகளில் மதிப்பெண் குறைவாக எடுத்ததையும் 

ஒப்புக்கொண்டனர். 

நுாறு பேர் கொண்ட குழுவாக இருப்பதால், அரட்டையடிப்பதிலேயே மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுவதாகவும், அதனால் கல்வியில் அதிகக் கவனம் செலுத்த நேரத்தை ஒதுக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதைப் பார்க்கும் போது வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும், வலிமை இழந்து போய்க் கொண்டிருக்கும் மாணவ மாணவியரின் பொன்னான நேரம் குறித்த விழிப்புணர்வை பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் ஏற்படுத்தித் தர வேண்டியது 

அவசியம் என்பது தெரிகிறது. 'வாட்ஸ்ஆப்' செயலியில் மாணவ மாணவியர் ஆங்கிலத்தில் மிகச் சுருக்கமாகவும், வேகமாகவும் எழுதிப் பழகுவதால் மொழிப் பயன்பாட்டில் நிறைய குழப்பங்களும் இலக்கணப் பிழைகளும் ஏற்படுகின்றன. இது தேர்வுகளிலும் அவர்களை அறியாமல், எழுத்துப் பிழை ஏற்படுத்த வைப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

பாதிக்கப்படும் 

கல்வியின் தரம் 

'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துவதால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, ஆம் என 76, பாதிப்பு இல்லை என 24 சதவீதத்தினரும் பதில் அளித்துள்ளனர். 

மாணவர்களின் கல்வி மட்டும் பாதிக்கப்படாமல், ஒருவர் பொழுதுபோக்காகக் காணொலி, கேட்பொலி ஆகியவற்றை 'வாட்ஸ்ஆப்' பில் தடையின்றி அனுப்புவதால் அந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் அவை செல்கின்றன. 

அவற்றை விருப்பம் இல்லாமலும் பார்க்க வேண்டிய சூழல் அக்குழுவிலுள்ள அனைவருக்கும் ஏற்படுகிறது. ஒருவகையில் அதுவே அவர்களின் நேரத்தைச் சூறையாடத் தொடங்குகிறது.

'வாட்ஸ் ஆப்' போதை

உண்மையான தேவைக்குப் பயன்படவேண்டிய மின்சாரம் மற்றும் இணைய சேவையும் திசைமாறி வீணாகிறது என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. 

இதுவே தொடர்ந்து, கணவன் மனைவியாகிற நிலையில், அவர்களுக்குள் பேசி பகிர்ந்து கொள்ளுதல் என்ற பரஸ்பர உறவு நிலை மாறி 'வாட்ஸ்ஆப்' மூலம் பகிர்ந்து கொள்ளுதல் என்கிற நிலை மேலோங்கி, அவர்களின் நெருங்கிய உறவிற்கு தடையாகவும் அமைந்து விடும்.

'டிவி' மூலம் கால் நூற்றாண்டு களாக மாணவர் கிரிக்கெட் நோய்க்கு ஆட்கொள்ளப்பட்டார்களோ, அதைப்போல 'ஸ்மார்ட்போன்' உதவியுடன் 'வாட்ஸ்ஆப்' என்ற நோயால் இப்போது உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு வரு கின்றனர் என ஆய்வு முடிவு மூலம் அறிய முடிந்தது. 

எனவே இளம் தலைமுறையினர் வாழ்வை செம்மைப்படுத்தும் விதம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

எல்லா நல்லதற்குள்ளும் கெட்டதும் இருக்கிறது. எல்லாக் கெட்டதற்குள்ளும் நல்லதும் இருக்கிறது என்பது 'வாட்ஸ் ஆப்' செயல்பாடு தெரியப்படுத்துகிறது.-பெரி.கபிலன்

கணினி அறிவியல் பேராசிரியர்மதுரை. 98944 06111

மனஅழுத்தம் போக்க கல்வித்துறையில் யோகா

மாநில அளவில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மன அழுத்தம் போக்கும் சிறப்பு யோகா பயிற்சி வகுப்புகள் நவ.,7 பொள்ளாச்சியில் துவங்குகிறது.

ஆசிரியர்கள் மனஅழுத்தம் குறைய, திறன் மேம்பாடு, ஆளுமை திறன் அதிகரிப்பு, மாணவர் - ஆசிரியர் உறவு மேம்பாடு உட்பட பல்வேறு காரணங்களுக்கான சிறப்பு யோகா பயிற்சி நவ.,7 முதல் 2017 டிச., வரை 17 கட்டங்களாக பொள்ளாச்சி ஆழியார் மனவளக்கலை யோகா மையத்தில் நடக்கிறது.

இதில் அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் 950 பேர் பங்கேற்கின்றனர்.இதுகுறித்து கல்வி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதற்காக முதன்மை கல்வி அலுவலகங்கள் வாரியாக தலைமையாசிரியர் பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்," என்றார்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!