Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 6 November 2016

TNPSC:குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு நவ., 9ம் தேதி வெளியீடு : டி.என்.பி.எஸ்.சி தலைவர் தகவல்

குரூப்-1  தேர்வுக்கான அறிவிப்பை நவம்பர் 9-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி வெளியிடும் என்று சென்னை திருவல்லிக்கேணி தேர்வு மையத்தை ஆய்வு செய்த டி.என்.பி.எஸ்.சி தலைவர் அருள் மொழி பேட்டி  அளித்துள்ளார்.

முன் எப்போது இல்லாத அளவு 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தேர்வு  எழுதுகின்றனர். ஜூன் மாதத்துக்கு பிறகு டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.

தொடக்கக் கல்வி - வகுப்பில் கை பேசிக்குத் தடை!- தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

மணக்கோலத்தில் குரூப்-4 தேர்வெழுதிய பொறியியல் பட்டதாரி

விழுப்புரத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை மணக்கோலத்தில் பொறியியல் பட்டதாரி பெண் எழுதினார். தமிழகம் முழுவதும் 5,451 காலியிடங்களுக்கு 301 மையங்களில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-4 தேர்வு இன்று நடைபெற்றுவருகிறது.


விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் மேநிலைப்பள்ளியில் தட்டச்சர் பதவிக்கு மணக்கோலத்தில் பெண் ஒருவர் தேர்வு எழுதினார்.

இவரைப் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

விழுப்புரம் அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்துவருபவர் சுப்பிரமணியன். இவரது மகள் அகிலாண்டேஸ்வரிக்கும், மேல் தணிக்கலாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் என்கிற பிரதீப்பிற்கும் இன்று காலை விழுப்புரத்தில் திருமணம் முடிந்தது.

திருமணம் முடிந்த கையோடு அகிலாண்டேஸ்வரி போட்டித் தேர்வு எழுத புறப்பட்டார். அவருக்குத் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து அனுப்பிவைத்தனர். தேர்வு எழுதும் அகிலாண்டேஸ்வரி பி.இ.(இ சி இ) முடித்துள்ளார். இவரது கணவர் பிரதீப் என்கிற தமிழரசன் தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள மேம்ஸில் பணியாற்றிவருகிறார்

டெல்லி காற்றை சுவாசிப்பது 40 சிகரெட் குடிப்பதற்கு சமம் : ஆய்வில் அதிர்ச்சி

உலகிலேயே அதிக மாசு கொண்ட நகரமாக டெல்லி இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

நுண்ணிய துகள்கள் அடங்கிய அதிக நச்சுத்தன்மையை கொண்ட காற்றை டெல்லியில் வசிக்கும் மக்கள் அதிகம் சுவாசிக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் கூறியுள்ளது.

அதாவது சீன தலைநகர் பெய்ஜிங்கை விட டெல்லியில்தான் அதிகமாக காசு மாசு பட்டிருக்கிறது. சீனாவில் தற்போது சுத்தமான காற்று விற்பனை செய்யப்படுகிறது. அந்த நிலைமை விரைவில் இந்தியாவிற்கு வந்துவிடும் என்பது டெல்லியை பார்க்கும் போது புரிகிறது.

மக்கள் நெருக்கம், வாகன புகை, தொழிற்சாலை புகை என பல வழிகளில் அங்கு காற்று மாசடைந்து வருகிறது. அங்குள்ள காற்றை அளவீடு செய்து பார்த்ததில், அந்த மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் தினமும் 40 சிகரெட் புகைத்ததற்கு சமம் என்று அதிர்ச்சி செய்தி தெரியவந்துள்ளது.

இதனால், டெல்லியில் வசிக்கும்  மக்களின் ஆயுட்காலம் 6.4 ஆண்டுகள் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

எனவே, காற்றை வடிகட்ட நிறைய மரங்கள் வளர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்திற்கு நவம்பர் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை.

மாமன்னர் ராஜராஜசோழனின் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு நவம்பர் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாமன்னர் ராஜராஜசோழனின் 1031 வது சதய விழா வரும் 8,9 தேதிகளில் நடைபெற உள்ளதால் உள்ளூர் விடுமுறை என தகவல்.

அரையாண்டுத் தேர்வு:பிளஸ் 2 கால அட்டவணை

டிசம்பர் 7 புதன்கிழமை - தமிழ் முதல் தாள்

டிசம்பர் 8 வியாழக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்

டிசம்பர் 9 வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 10 சனிக்கிழமை -ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 14 புதன்கிழமை - கணிதம், நுண்ணுயிரியல்,விலங்கியல், சத்துணவியல், ஆடை வடிவமைத்தல், உணவு மேலாண்மை- குழந்தை நலன், வேளாண்மை செயல்முறைகள், அரசியல் அறிவியல், செவிலியத்துறை (தொழில்பிரிவு), செவிலியத்துறை (பொது), கணக்கியல்-தணிக்கையியல்.

டிசம்பர் 15 வியாழக்கிழமை - வணிகவியல், மனையியல்,புவியியல்

டிசம்பர் 16 வெள்ளிக்கிழமை -தகவல் மேலாண்மை ஆங்கிலம்,இந்தியப் பண்பாடு, கணினி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்புத் தமிழ், புள்ளியியல்.

டிசம்பர் 19 திங்கள்கிழமை - இயற்பியல், பொருளியல்,பொது இயந்திரவியல், மின்னனு சாதனங்கள், கட்டட வரைவாளர், மின் இயந்திரங்களும் சாதனங்களும், ஆட்டோ மெக்கானிக், நூற்பாலை தொழிற்நுட்பம், அலுவலக மேலாண்மை

டிசம்பர் 21 புதன்கிழமை -வேதியியல், கணக்கு பதிவியல்

டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை - உயிரியல், தாவரவியல்,வரலாறு, வணிகக் கணிதம்

செய்முறை தேர்வு: இத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 1.15 மணி வரையில் நடைபெறும். இதில் பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவு, தட்டச்சு(தமிழ், ஆங்கிலம்) உள்பட செய்முறை தேர்வுகள் அனைத்தையும் அரையாண்டு தேர்வுக்கு முன்னரே நடத்தப்படவேண்டும்.

10 ஆம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை

*டிசம்பர் 9 வெள்ளிக்கிழமை -தமிழ் முதல் தாள்

*டிசம்பர் 10 சனிக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்

*டிசம்பர் 14 புதன்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

*டிசம்பர் 15 வியாழக்கிழமை -ஆங்கிலம் இரண்டாம் தாள்

*டிசம்பர் 17 சனிக்கிழமை - கணிதம்

*டிசம்பர் 19 திங்கள்கிழமை -அறிவியல்

*டிசம்பர் 21 புதன்கிழமை -விருப்ப மொழி

*டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை - சமூக அறிவியல்

தரம் உயர்த்திய பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லையே : கல்வியாளர்கள் கவலை'

'தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும்,'' என பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார். திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:
பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இருந்தால்தான் நிர்வாகம் சரிவர இயங்கும். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் 37 துவக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. மூன்று ஆண்டு முடிவடையும்போது அப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமிப்பர். நடப்பு கல்வியாண்டில் மூன்றாண்டு முடிந்து, ஆறுமாதங்களாகியும் அப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது கவலையளிக்கிறது.

பணிகள்பாதிப்பு: இதனால் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது, பதிவேடுகள் பராமரிப்பு, வகுப்பாசிரியர் நியமனம், ஆசிரியர் பணி ஒதுக்கீடு என பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு கற்பிக்கும் பணியும் பாதிப்படைகிறது.

மேலும், 65 கல்வி மாவட்டங்களில் உள்ள 104 உயர்நிலைப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்பினால்தான் மாணவர்கள் முறையான கல்விபெற முடியும். இதுகுறித்து அமைச்சர், தலைமைச் செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளோம், என்றார்.

மத்திய அரசு பணியில் இருந்த ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர் !!

மத்திய அரசு பணியில் இருந்த ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பட்டியல் பின்வருமாறு
ஜானி டாம் வர்கீஸ் - கடலூர் உதவி ஆட்சியர்

ஜெயசீலன்- செங்கல்பட்டு சார் ஆட்சியர்

ஆகாஷ் - திண்டுக்கல் உதவி ஆட்சியர்

கிள்ளி சந்திசேகர் - மதுராந்தகம் சார் ஆட்சியர்

கார்த்திகேயன் - வேலூர்- திருப்பத்தூர் சார் ஆட்சியர்

பிரதீப் குமார் - கும்பகோணம் சார் ஆட்சியர்

சரவணகுமார் - திருப்பூர் உதவியாட்சியர்

தீபக் ஜேக்கம் - தூத்துக்குடி உதவி ஆட்சியர்

கிரேஸி - தாராபுரம் சார் ஆட்சியர்.

பள்ளிகளில் விளையாட்டை கட்டாய பாடமாக்க வேண்டும்: மத்திய மந்திரி பேச்சு

டெல்லியில் நடைபெற்ற மத்திய கல்வி வாரிய ஆலோசனை குழு கூட்டத்தில் விளையாட்டு துறை மந்திரி விஜய்கோயல் கலந்து கொண்டு பேசியதாவது:-

வளரும் தலைமுறையை சர்க்கரை வியாதி போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கவும், உடல் ஆரோக்கியத்தையும் பேணவும் விளையாட்டு முக்கியம். பள்ளிகளில் விளையாட்டை கட்டாய பாடமாக்க வேண்டும். அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை பொறுத்து மதிப்பெண்களும் வழங்க வேண்டும்.

அனைத்து பள்ளிகளும் அடிப்படை விளையாட்டுகளை கற்றுக் கொள்வதற்கான வசதிகளை செய்து கொள்ள வேண்டும். உடற் கல்வி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என்றார்.

ஏற்கனவே தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் சங்க பொது செயலாளர் டாக்டர் அய்யப்பன் விளையாட்டை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். தற்போது அமைச்சரின் அறிவிப்பு விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

GROUP 4 தேர்வு எழுதும் தோழர்களுக்கு...!

இத்தேர்வில் கவனத்தோடும், கருத்தோடும் எதிர் கொண்டு வெற்றிபெற வாழ்த்துக்கள்.

* இனி புதிதாக படிப்பது தேவையற்றது. ஏற்கனவே படித்தவற்றை பலமுறை அசைபோடுங்கள்.

* மக்கள் தொகை புள்ளிவிவரங்கள், பட்ஜெட், அரசு நலத்திட்ட்ங்கள், அரசு விருதுகள், பரிசுகள் உள்ளிடட நடப்பு விவரங்களில் எப்போதும் தெளிவாக இருங்கள்.


* படிக்கும் ஆர்வத்தில் சரியான உணவு, போதிய தூக்கம் ஆகியவற்றில் அசட்டையாக இருக்க வேண்டாம்.

* குறித்த நேரத்திற்கு முன்னரே மையத்திற்கு சென்று விடுங்கள். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, இரண்டு / மூன்று பந்துமுனை பேனா முதலியன எடுத்துவிடடீர்களா என உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.தவறாக எழுதிய விடையை அழிக்க முயற்சிக்க வேண்டாம். பிளேடு, ஒயிட்னர் பயன்படுத்த கூடாது. விடைத்தாள் செல்லாமல் போகலாம். முதலிலேயே சரியாக விடையளித்து விட வேண்டும்.

* பொது அறிவு பிரிவில் 100 வினாக்களும், பொது தமிழில் 100 கேள்விகளும் இருக்கும். முதல் பிரிவில் பொது அறிவில் 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்களும் இருக்கும்.

* பொது அறிவு அனைவரும் படிப்பர். எனவே "கட் ஆப்' மார்க்கில் உயர்ந்த இடத்தை பிடிக்க, திறனறி தேர்வு, நடப்பு கால நிகழ்ச்சி, பொது தமிழ் இவைகளில் கவனம் செலுத்தி படித்து அதிக பட்ச மதிப்பெண் பெற்றால் அரசு வேலை உறுதி.

* பொருத்துக, இணை தேர்வு, பொருந்தாது என சிக்கலான வினாக்கள் இருக்கும். எனவே இவற்றை கவனமுடன் படித்து, சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும்.

* நேர மேலாண்மை மிக முக்கியம். ஏனெனில் தெரியாத ஒரு கணக்கிற்காக மெனெக்கெட்டு பின்னர் நேரமின்மையால் பல வினாக்களை பதிலளிக்க முடியாமல் வர நேரிடலாம்.

* எனவே முதலில் தெரிந்த வினாக்களுக்கு விரைவாக பதிலளிக்கவும். பின்னர் இதுவா / அதுவா எனைத்தொன்றும் வினாக்களுக்கு சிந்தித்து பதிலளிக்கவும். கடைசியாக தெரியாத வினாக்களுக்கு ஏதாவது ஒரு விடையை இட்டு விடைத்தாளை ஒப்படைக்கலாம். இப்படி செய்தால் தெரிந்த வினாக்களுக்கு விடையளிக்கவில்லையே என வருத்தம் இருக்காது. நெகட்டிவ் மதிப்பெண் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பலராலும் சாதிக்க முடிந்தது உங்களாலும் முடியும்.

உங்களின் இல்டசியம் நிறைவேற, கனவுகள் நனவாக்க வாழ்த்துக்கள்...!

'குரூப் - 4' தேர்வில் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இன்று நடத்தும், குரூப் - 4 தேர்வில், 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அரசு துறையில், 5,451 காலியிடங்களுக்கு, குரூப் - 4 தேர்வு, இன்று நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும், 1,500க்கும் மேற்பட்ட மையங்களில், 15 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 1:00 மணி வரை நடக்கும் தேர்வுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அதன் விபரம்:

● மாணவர்களை தவிர, அவர்களின் உறவினர், பெற்றோர் என, வேறு யாருக்கும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதி இல்லை ● மொபைல் போன், கணினி சாதனங்கள், 'கால்குலேட்டர், ஸ்மார்ட் நோட் புக்ஸ், ஸ்மார்ட் வாட்ச்' மற்றும் மோதிரம், கைப்பை உள்ளிட்ட பொருட்கள், தேர்வறையில் அனுமதிக்கப்படாது.இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன

தேசிய இளைஞர் விழா : அரசு சார்பில் பங்கேற்கலாம்

'தேசிய இளைஞர் விழாவில், தமிழகம் சார்பில் பங்கேற்க விரும்புவோர், நவ., 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

ஹரியானா மாநிலம், ரோதக் நகரில், 21வது தேசிய இளைஞர் விழா, ஜன., 12 முதல், 16 வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க, நாட்டுப்புற நடனம், ஓரங்க நாடகம், சங்கீதம், பேச்சு போட்டி, பரத நாட்டியம், இசைக்கருவிகள் இசைத்தல் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும், 100 பேர், தமிழகம் சார்பில், அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.இதில், 'தகுதியுள்ள, 13 முதல், 25 வயதிற்குட்பட்ட, ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம்.

இதற்கான விண்ணப்பம், www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும், 15க்குள், ywtnadu@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்ப வேண்டும்' என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

குழந்தைகள் கல்வி: பெற்றோர் செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்!

படிப்பு, மதிப்பெண், ஸ்கூல், தேர்வு... இவைதான் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் தினமும் தவறாமல் பயன்படுத்தும் வார்த்தைகள். வாழ்க்கைக்கு வெறும் பள்ளி, தேர்வு சார்ந்த விஷயங்கள் மட்டுமே பிரதானம் என்ற கண்ணோட்டத்திலேயே பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கல்வி சார்ந்த விஷயங்களை கூறுகின்றனர். 


இதனால் படிப்பு, மதிப்பெண் போன்ற வார்த்தைகளை பெரும்பாலான மாணவர்கள் கசப்பாகவே நினைக்கின்றனர். இதுவே பெற்றோர் - பிள்ளை உறவினில் சுமூகமான சூழலை சீர்குலைக்கிறது.    

''படிப்பும் மதிப்பெண்களும் அவசியம்தான். ஆனால் அதுமட்டுமே வாழ்க்கையைத் தீர்மானித்துவிடாது. இன்றைய            பெற்றோர் - குழந்தைகள் உறவில் அதீத பிரச்னைகளை ஏற்படுத்தும் பிள்ளைகளின் படிப்பு, மதிப்பெண் சார்ந்த விஷயங்களில் உண்மையான சிக்கல்களை பெற்றோர்கள் கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை காண வேண்டும்'' எனக் கூறும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, இப்பிரச்னை குறித்த பல்வேறு ஆலோசனைகளையும் கூறுகிறார்.

* ''ஒவ்வொரு மாணவ/மாணவிக்கும் திறன் அளவு மாறுபடும். அவர்களின் திறனையும் தாண்டி அதிக மதிப்பெண்கள் எடுக்கச் சொன்னால், அவர்களால் என்ன செய்ய முடியும்? மனஉளைச்சலுக்கு ஆளாகி, சமயங்களில் தவறான முடிவுகளைக்கூட எடுக்கத் தோன்றும். அதற்குப் பெற்றோர்களும், பள்ளிகளும்தான் பொறுப்பேற்க வேண்டும். தங்கள் பிள்ளை குறைவான மதிப்பெண் எடுத்தாலோ, அல்லது தேர்வில் தோல்வியடைந்தாலோ அவர்கள் அந்தச் சூழலை எதிர்கொள்ள பெற்றோர்தான் தன்னம்பிக்கை தரவேண்டும். 

* கிரிக்கெட்டில் பல உலக சாதனைகளைப் படைத்த சச்சின் டெண்டுல்கரே, பல முறை டக் அவுட் ஆகியிருக்கிறார். பல தோல்விகளைக் கடந்துதான் இன்று உலகம் புகழும் விளையாட்டு வீரராகச் சாதித்திருக்கிறார். அதோடு விஞ்ஞானிகள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் என பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள்தான் பின்னாளில் வெற்றியாளர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். அதனால், தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானிக்காது என பெற்றோர்கள் புரிந்துகொள்வதுடன், அதைப் பிள்ளைகளுக்கும் சொல்லி, அவர்கள் தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்தால் அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற அவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும். 

* ஒவ்வொரு கல்வியாண்டிலும் துவக்கத்தில் இருந்தே பெற்றோர்  தங்கள் பிள்ளைகளிடம் அன்போடு பேசி, அவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் வரும்படிச் செய்ய வேண்டும். மேலும் முதல் டெர்ம், காலாண்டுத் தேர்வு போன்ற ஆரம்பகட்ட தேர்வு சமயங்களில் மதிப்பெண் குறைவாக எடுத்தால், அப்போதே எதனால் மார்க் குறைந்தது, படிப்பதில் என்ன சிரமம் இருக்கிறது, படித்தது ஏன் மறந்து போகிறது என அவர்களுடன் பேசி தீர்வு காண வேண்டும். இது பிள்ளைகள் அடுத்தடுத்த தேர்வுகளை சிறப்பாக எதிர்கொள்ள வைக்கும். 

                                  


* பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் பிள்ளையிடம் தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அன்றைய நிகழ்வுகள் குறித்து பெற்றோர் பேச வேண்டும். 'இன்னைக்கு புதுசா என்ன கத்துகிட்ட? பாடம் எல்லாம் புரிஞ்சுதா? அது எதனால புரியல?' எனக் கேட்டால், எதாச்சும் பிரச்னைகள் இருந்தால் பிள்ளைகளும் கூறுவார்கள். அத்துடன் மாணவர்களின் அறிவியல் சிந்தனைகளை வளர்க்கும் கேள்விகளைக் கேட்க வேண்டும்.  தங்களுக்குத் தெரிந்ததை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதோடு, அவர்கள் வாயிலாக பெற்றோர்களும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். பிள்ளைகளிடம் நண்பர்களாக மனம்விட்டுப் பேசி, பழக வேண்டும். மாறாக, பள்ளி முடிந்து பிள்ளை வீட்டுக்குள் நுழைந்ததுமே, 'நாளைக்கு உனக்கு கணக்கு டெஸ்டாமே?' என பள்ளியில் இருந்து வந்திருந்த எஸ்.எம்.எஸ் தகவலை சொன்னால், பிள்ளைகளுக்கு கல்வி மீது வெறுப்புதான் வரும். 

* பிள்ளை ஒரு பாடத்தில் 50 மதிப்பெண் பெறுகிறார் எனில் அவரை 55, 60, 65 என படிப்படியாக அதிக மதிப்பெண் பெற ஊக்கப்படுத்தலாம். அதைவிடுத்து, 'அடுத்த தேர்வில் கட்டாயம் 80-90 மார்க் எடுத்தே ஆக வேண்டும்' எனச் சொன்னால் பிள்ளைகளுக்கு படிப்பின் மீது ஆர்வமின்மையும், மன அழுத்தமும்தான் அதிகமாகும். பாடங்களைப் புரிந்து படிக்கும் குழந்தைகள், 45 மதிப்பெண்கள் எடுத்தாலும் வாழ்வில் எப்படியும் முன்னேறிவிடுவார்கள், பிரச்னையான சூழல்களைத் தைரியமாக எதிர்கொள்ளவார்கள். ஆனால், மனப்பாடம் செய்து 90-100 மதிப்பெண்கள் எடுத்தாலும், அது எதிர்கால வேலைச்சூழலுக்கு உதவாது என்பதுடன், அவர்கள் சிறு பிரச்னையைக்கூட பெரிய பிரச்னையாக நினைத்து கவலைப்படுவார்கள்.

* 'நம் பிள்ளை குறைவான மதிப்பெண்கள் எடுத்தாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ சமூகத்தில் அவமானமாகிவிடும்' என்ற எண்ணம் வேண்டாம். இந்தச் சமூகம் நமக்கு சோறு போடப்போவதில்லை. ஆறுதல் கூறப்போவதில்லை. பல வருடம் பள்ளியில் படித்து ஒரு மாணவன் தோல்வி அடைந்தால் சம்பந்தப்பட்ட பள்ளியும், அரசும்தான் சரியாக செயல்படவில்லை என அர்த்தம். அதனால் அவர்கள்தான் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

* அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை எழுத, பட்டம் பெற்றிருந்தால் போதும். எனவே, குழந்தைகளின் பள்ளி நாட்களில் மதிப்பெண் பந்தயத்தில் மட்டுமே குறியாக அவர்களை ஓடவைக்காமல், போட்டித் தேர்வுக்கான பயிற்சிகளுக்கு அவர்களை தயார்படுத்தலாம். உங்கள் பிள்ளைக்கு எதிர்கால ஆசை என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற படிப்பை படிக்க வையுங்கள். 


                                  

* படிப்பு பாதிக்கப்படும் என, உறவினர்கள் திருமணம், திருவிழா என எந்த நிகழ்ச்சிகளுக்கும் பிள்ளைகளை அழைத்துச் செல்லாமல் இருக்கும் பழக்கத்தை மாற்றுங்கள். உறவினர், நண்பர்களைச் சந்திப்பதும்,  இரண்டு நாட்கள்  அவர்களுடன் சந்தோஷமாகக் கழிப்பதும், படிப்பு தரும் மனச்சுமையில் இருந்து அவர்களை மீட்கும், மனவளம் தரும். தொடர்ந்து வரும் நாட்களில், ஃப்ரெஷ் மைண்டுடன் படிப்பார்கள். எப்போதும் புரிந்துகொள்ளாமல் படித்துக்கொண்டே இருப்பதால், மனப்பாடத்திறமை மட்டும்தான் அதிகமாகும்; கல்வி அறிவு வளராது. தினமும் குழந்தைகளை குறிப்பிட்ட நேரம் விளையாடவிடுங்கள்.

தனியார் கோழிப்பண்ணை போன்ற சூழலை வீட்டிலும் ஏற்படுத்தாதீர்கள்.''

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!