Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 7 November 2016

அரசுப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் *சர் C.V.இராமன் பிறந்தநாள் முன்னிட்டு 800 சதுர அடியில் அறிவியல் அறிஞர் C.V.இராமன் அவர்களின் பிரமாண்ட ஓவியம் வரைந்து சாதனை

வேலூர் மாவட்டம், குடியாத்தம் R.வெங்கடாபுரம், அரசுப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் *சர் C.V.இராமன் பிறந்தநாள் முன்னிட்டு 800 சதுர அடியில் அறிவியல் அறிஞர் C.V.இராமன் அவர்களின் பிரமாண்ட ஓவியம் வரைந்து சாதனை.*

இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற பெருமை நம் நாட்டின் இயற்பியல் அறிஞர் திரு சர் *C.V.இராமன்* அவர்களின் பிறந்த தினம் *07-11-2016* இன்று. இந்நாளை முன்னிட்டு *குடியாத்தம், R.வெங்கடாபுரம், அரசு ஆ தி ந ஆரம்பப்பள்ளியில்* ஐந்தாம் வகுப்பு மாணவர்கள், பள்ளி மைதானத்தில் சுமார் *800 சதுர அடியில் பிரமாண்ட ஓவியம்* வரைந்தனர்.

நன்றியுடன்
*ஜானகிராமன் தேவராசன்*

மகப்பேறு விடுப்பு 9 மாதமாக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியீடு!! - தற்போது 6 மாத விடுப்பில் இருப்பவர்கள் 9 மாத மகப்பேறு விடுப்பை துய்க்கலாம்

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கு: பள்ளி கல்வி துறை செயலாளர் நேரில் ஆஜர்.

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 746 பள்ளிகளை மூடக் கோரிய வழக்கில், பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் சபீதா இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 746 பள்ளிகளை மூடக் கோரி மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் ஏ.நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் தமிழகத்தில் உள்ள 746 பள்ளிகள் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விதிமுறைகளைக் கூட கடைபிடிக்கவில்லை. இந்த பள்ளிகளுக்கு, கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தாற்காலிக அங்கீகாரத்தை பள்ளிக் கல்வித்துறை வழங்கி வருகிறது.

எனவே, இந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தாற்காலிக அங்கீகாரத்தை நீட்டிக்க கூடாது.  சம்பந்தப்பட்ட பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும். அங்கீகாரம் பெறாத இந்த பள்ளிகளின் விவரங்களை பொது மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக விளம்பரப்படுத்த அரசுக்கு  உத்தரவிட வேண்டும் என்று அந்த  மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் உரிய ஆவணங்களுடன் முதன்மை செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தனர். அதன்படி இன்று பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் சபீதா  சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

TNPSC குரூப் 4 தேர்வு கற்றுத் தந்த பாடம் என்ன?

பல லட்சக்கணக்கான இளைஞர் கள், பெற்றோர் ஆர்வத்துடன் எதிர்பார்த்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, நடந்து முடிந்து இருக்கிறது. ஐயாயிரத்து சொச்சம் பணியிடங்களுக்கு 15 லட்சம் விண்ணப்பங்கள். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்கிற பதவிக்கு, பட்டதாரிகளும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் முண்டியடித்துக்கொண்டு போகி றார்கள் என்றெல்லாம் விமர்சனங் கள் வைக்கப்பட்டாலும், டிஎன்பிஎஸ்சி என்கிற அமைப்பின் மீது இத்தனை லட்சம் பேர்நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதே நல்ல செய்திதான்.
பயிற்சி மையங்கள், இலவச வகுப்புகள், பாதையோரப் புத்தகக் கடைகள், நாளேடுகள், தொலைக் காட்சி, வழிகாட்டிக் குறிப்புகள் என்று கடந்த சில வாரங்களாக அமர்க்களப்பட்டது. இது நல்ல முன்னேற்றமே. பெருவாரியான எண்ணிக்கையில் இளைஞர்களை, மீண்டும் படிப்பின் பக்கம் திசை திருப்பிவிட்டது என்கிற வகையில் தொடர்ந்து இதுபோன்ற தேர்வு களை வரவேற்கலாம். அது சரி... தற்போது நடந்து முடிந்துள்ள இத் தேர்வு எத்தன்மையதாய் இருந்தது?டிஎன்பிஎஸ்சியைப் பொறுத்த வரை பொதுவாக, இளநிலைப் பதவிக்கான (எழுத்தர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பணிகள்) தேர்வுகளில், பெரும்பாலான கேள்விகள் பாடப் புத்தகங்களில் இருந்து நேரடியாகக் கேட்கப்படும். இந்த முறை இது, வெகுவாக மாறி இருக்கிறது. பாடத்திட்டத்தின் படி, கணிதம்/ திறனறிப் பகுதி போக, 75 வினாக்கள் பொதுப்பாடத்தில். இவற்றில் இந்த முறை 45 வினாக் கள் வரை நடப்பு நிகழ்வுகள் சார்ந்த வினாக்களே இடம்பெற்றுள்ளன.

இதற்கு என்ன பொருள்.? இனி யும் இளைஞர்கள், உலக நடப்பைத் தெரிந்துகொள்ளாது, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதுஇயலாது. இளநிலைப் பணியாக இருந்தாலும், செய்திகளைப் படித்து தெரிந்துகொள்ளல் மிக முக்கியமாகிவிட்டது. நாள்தோறும் செய்தித்தாள் வாசிக்கிற வழக்கம் இருக்கிற இளைஞர்கள், எளிதில் தேர்ச்சி பெற்று அரசுப் பணிக்குச் செல்ல முடியும்; இவ்வழக்கம் இல்லாதவர்கள், தேர்ச்சி பெறுதல் கடினம் என்கிற நிலை இப்போது ஏற்பட்டு இருக்கிறது. இது, முழு மனதுடன் நாம் வரவேற்க வேண் டிய ஆரோக்கியமான மாற்றம்.நேரடியாக திரைப்படத் துறை யில் இருந்து வினாக்கள் தவிர்க் கப்பட்டு இருப்பதும், விளையாட்டுத் துறையில் 4 வினாக்கள் கேட்கப் பட்டு இருப்பதும், இளைஞர்களின் பார்வை எந்தத் திசையில் திரும்ப வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட்டு இருப்ப தாகவே தோன்றுகிறது.பல வினாக் கள் மிக நேர்த்தியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன.

தேர்வர்களில் பலருக்கும், அறிவியல், பொதுக் கணிதப் பகுதிகள் கடினமானதாக இருந்திருக்க சாத்தியங்கள் உண்டு. எதிர்பார்க் கக்கூடியதுதான். ஆனால், கிராமப் பகுதியினரின் வலுவான பகுதி யாகிய பாடங்களில் கேள்விகள் குறைக்கப்பட்டு, பிற பகுதிகளில் கூடுதல் முக்கியத்துவம்தரப்படுவது சில அச்சங்களை எழுப்பத்தான் செய்கிறது. இந்தத் தேர்வு, பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்தவர் களுக்கு சாதகமாகவும், ஏதோ ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில்தானாகவே சுயமாகப் படித்து வெற்றி பெற நினைக்கிறவர்களுக்கு பாதக மாகவும் அமைந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்படத்தான் செய்கிறது.இதில் இருந்து விடுபட ஒரே வழி, கிராமப்புற தேர்வர்கள் செய்தித் தாள்/ செய்தி தொலைக்காட்சிகள் பக்கம் திருப்புவதுதான்.

ஒவ்வொரு கிராமத்திலும் நூலகங்கள் சீரமைக் கப்பட்டு, அவசியமான தரமான செய்திகள் அவர்களைச் சென்று சேரும் வழியை உறுதி செய்தாக வேண்டும். இதனை முதலில் செய்த பிறகு, தேர்வுக்கான கேள்விகளில் மாற்றம் கொண்டு வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. தேர்வு முடிவுகள் வெளியாகிறபோது, நமது அச்சம் எந்த அளவுக்கு நியாமானது என்பது தெரிய வரும்.இளைஞர்களே... நாள்தோறும் தவறாமல் செய்தித்தாள் வாசியுங் கள். இதுவன்றி, போட்டித் தேர்வு களில் தேர்ச்சி பெறுவதும் அரசுப் பணியில் நுழைவதும் சாத்தியம் இல்லை. இளைஞர்கள், குறிப்பாக கிராமத்து இளைய தலைமுறை யினர் விழித்துக் கொள்வது, நம் சமுதாயத்துக்கே மிக நல்லது.

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான திருத்திய வரையறை வெளியீடு: அருள்மொழி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கான வரையறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, திங்கள்கிழமை முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட உள்ளது என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அருள்மொழி கூறினார்.

இந்த திருத்திய வரையறைகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழக அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய 5,451 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. தமிழகம் முழுவதும் 5,296 மைங்களில் நடத்தப்பட்டத் இந்தத் தேர்வில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று தேர்வெழுதினர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி. மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைந்திருந்த தேர்வு மையத்தை அருள்மொழி ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:

தமிழகம் முழுவதும் 5,296 மையங்களில் நடத்தப்பட்ட இந்த குரூப்-4 தேர்வை எழுத, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவர்களில் 2,291 பேர் மாற்றுத்திறனாளிகள். இதில் 80 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், 5,296 தலைமை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 78,216 கண்காணிப்பாளர்கள், 566 பறக்கும்படை ஆகியோர் மேற்பார்வையில் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த வாரத்தில் டி.இ.ஒ. தேர்வு முடிவு:

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த 12 மாதங்களில் மட்டும் 15 எழுத்துத் தேர்வுகளும், 13 நேர்முகத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

2009, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கை செய்யப்பட்டு, பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த உடற்கல்வி இயக்குநர், மோட்டார் வாகன ஆய்வாளர், நூலகர் ஆகிய மூன்று போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள் இந்த 12 மாதங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

2014 இல் அறிவிக்கை செய்யப்பட்ட 11 காலிப் பணியிடங்களுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்துக்கானத் தேர்வு முடிவு மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வாரத்துக்குள் இந்த முடிவும் அறிவிக்கப்பட்டுவிடும்.

மேலும்,  2016 ஜூன் மாதம் வரை நடந்து முடிந்த மாவட்ட கல்வி அலுவலர் பதிவிக்கான தேர்வைத் தவிர, மற்ற அனைத்துத் தேர்வுகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இன்னும் 10 தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இவை அனைத்தும் 2016 ஜூன் மாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்டவையாகும்.

இந்த 10 தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கான பணிகளும், தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டு, முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன. வரும் 14, 15 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

திருத்திய வரையறை: 

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இதில் இப்போது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருத்திய வரையறை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் திங்கள்கிழமை (நவ.7) பதிவேற்றம் செய்யப்படும். இவற்றைத் தேர்வர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

தேர்வாணையத்தால் திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும், இந்த திருத்திய வரையறையே பின்பற்றப்படும்.

குரூப்-1 தேர்வு அறிவிக்கை:

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளில் 81 காலி இடங்களுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. 

இதற்கான அறிவிக்கை நவம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்றார் அவர்.

பள்ளி, கல்லூரிகளில் துப்புரவு பணியாளர்: காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவ., 15 கடைசி.

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவ., 15 கடைசி என பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் தனலிங்கம் தெரிவித்துள்ளார். 

அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி கள் விடுதிகளில் காலியாக உள்ள 2 பெண் முழு நேர துப்புரவு பணியாளர்கள், தலா 9 ஆண் பெண் பகுதிநேர துப்புரவு பணியாளர் பணியிடங் கள் சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளன. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 2016 நவ., 1 தேதியில் ஆதி திராவிடர் மற்றும் பழஙங்குடியினருக்கு 18 முதல் 35 வயதிற் குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபி னருக்கு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினர் 30 வயது மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பெயர் மற்றும் முகவரி, கல்வி தகுதி, ஜாதி, முன்னுரி மை விபரம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, குடும்ப அடடை முதலான நகல்கள் மற்றும் இரண்டு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு நவ., 15 க்குள் அனுப்ப வேண்டும். தகுதி யானவர்களுக்கு நேர்கானல் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 3975 குறுவளமையங்களில் அறிவியல் கண்காட்சி நடத்த உத்தரவு

ராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் திட்டம் சார்பில், தமிழ்நாட்டில் உள்ள 3975 குறுவளமையங்களில் அறிவியல் கண்காட்சி நடத்த அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு குறுவளமையத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.397.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் (RAA) திட்டமானது மாணவர்கள் அறிவியல் மற்றும் கணித கற்றலை மகிழ்ச்சியான கற்றலாக அமைப்பதற்கும், புதுமை செய்வதில் கவனம் செலுத்தவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திட்டத்தின் நோக்கத்தினை மாணவர்கள் பெறும் வகையில், அறிவியல் கண்காட்சிகள் குறுவளமைய அளவில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு இந்த கண்காட்சிக்கான தலைப்பு தேசிய வளர்ச்சியில் அறிவில், தொழில்நுட்பம் மற்றும் கணிதத்தின் பங்கு (Science, Technology and Mathematics for Nation Building) ஆகும்.

இத் தலைப்பில் உடல்நலம், தொழிற்துறை, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, நிலையான சுற்றுச் சூழலுக்கான புதுப்பிக்கத்தக்க வளங்களை கண்டுபிடித்தல், உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பில் புதுமைகள், அன்றாட வாழ்வில் கணிதம் அடிப்படையிலான தீர்வுகள் ஆகியவை உட்கருத்துப் பொருட்களை உள்ளடக்கிய அறிவியல் கண்காட்சிக்கான மாதிரிகள் (Models) மற்றும் திட்டங்களை (Projects) மாணவர்கள் தயார் செய்ய வேண்டும்.

குறுவளமையம் அமைந்துள்ள பள்ளியிலே அறிவியல் கண்காட்சி நடத்தப்படும். மாநிலத்தில் 3975 குறுவளமையங்களில் நடைபெறும் இக் கண்காட்சிக்கு பள்ளிக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.397.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 134 குறுவளமையங்களில் நவம்பர் 25-ம் தேதிக்குள் இந்த அறிவியல் கண்காட்சி நடத்தி முடிக்கப்படும்.

தொடக்கப் பள்ளிகள் (1 முதல் 5 வகுப்பு) 2 மாதிரிகளும், நடுநிலைப் பள்ளிகளில் (1-5 வகுப்பு 2 மாதிரிகளும் 6-8 வகுப்பு 2 மாதிரிகளும்) 4 மாதிரிகள் தயார் செய்ய வேண்டும். உயர்நிலைப் பள்ளி/மேல்நிலைப் பள்ளிகளில் 6-8 வகுப்பு மாணவர்கள் இரு மாதிரிகளும் தயார் செய்ய வேண்டும்.

பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் திட்டங்களின் எண்ணிக்கைத் தவிர்த்து, மாணவர்கள் தாங்களாக முன் வந்து செய்யும் மாதிரிகள் ஊக்குவிக்கப்படும். இதற்காக ஆசிரியர்கள் விலையில்லா மற்றும் விலைகுறைந்த பொருட்களைப் பயன்படுத்தி மாதிரிகள் செய்ய மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

மலரும் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாகவும், குறுவளமையம் அளவில் சிறந்த மூன்று மாதிரிகள் நடுவர் குழு தேர்வு செய்து முறையே ரூ.400, ரூ.300, ரூ.200 வழங்கும்.

சிறப்பாக பங்கேற்ற பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் படைப்பாற்றல், திறமை, ஈடுபாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த பள்ளியினை நடுவர் குழு தேர்வு செய்து அவர்களின் கூட்டு முயற்சிக்காக ரூ.500 மதிப்புள்ள கேடயம் பரிசாக வழங்கும்.

கண்காட்சியை கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் பார்வையிடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கணினி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி கிடைக்குமா?

ஆசிரியர் பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்காமல், கணினி அறிவியல் பட்டதாரிகள், வேலைவாய்ப்பு இல்லாமல் திணறுகின்றனர்.தமிழக அரசு பள்ளிகளில், 1992ல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், கணினி அறிவியல் பாடங்கள் அறிமுகமாகின. 
அப்போது, கணினி பட்டப்படிப்பு இல்லாததால், கணினி பற்றி அடிப்படை தகவல்கள் தெரிந்தவர்களை ஆசிரியர்களாக அரசு நியமித்தது. பின், கணினி அறிவியல் பாடத்தில், பி.எஸ்சி., -எம்.எஸ்சி., மற்றும் பி.எட்., படிப்புகள் துவங்கப்பட்டன. இதில், இதுவரை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பி.எஸ்சி., - பி.எட்., பட்டம் பெற்று, ஆசிரியர் வேலை இன்றி,திணறி வருகின்றனர்.கணினி அறிவியல் படிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. அதனால், 'டெட்' என்ற ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியாமல், ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாமல், கணினி பட்டதாரிகள் தவிக்கின்றனர்.

'அரசு விரைந்து முடிவு எடுத்து, கணினி பட்டதாரிகளுக்கு, அரசு பணி வழங்க முன்வர வேண்டும்' என, கணினி பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

10 தேர்வுகளுக்கான முடிவுகள் விரைவில் வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்பட்ட 10 தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.தமிழக அரசு துறைகளில் இளநிலை உதவியாளர், வரைவாளர், நிலஅளவர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய பிரிவுகளில் காலியாகவுள்ள 5,451 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. 
இதில், தமிழகம் முழுவதும் 5,296 மைங்களில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வெழுதினர்.இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி. மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைந்திருந்த தேர்வு மையத்தை அருள்மொழி ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:-இந்தத் தேர்வை எழுத, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவர்களில் 2,291 பேர் மாற்றுத்திறனாளிகள். விண்ணப்பித்தவர்களில் 80 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், 5,296 தலைமை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 78,216 கண்காணிப்பாளர்கள், 566 பறக்கும்படை ஆகியோர் மேற்பார்வையில் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த வாரத்தில் டி.இ.ஒ. தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த 12 மாதங்களில் மட்டும் 15 எழுத்துத் தேர்வுகளும், 13 நேர்முகத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.2009, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கை செய்யப்பட்டு, பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த உடற்கல்வி இயக்குநர், மோட்டார் வாகன ஆய்வாளர், நூலகர் ஆகிய மூன்று போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள் மாதங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன.2014-இல் அறிவிக்கை செய்யப்பட்ட 11 காலிப் பணியிடங்களுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்துக்கானத் தேர்வு முடிவு மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வாரத்துக்குள் இந்த முடிவும் அறிவிக்கப்பட்டுவிடும்.

10 தேர்வுகளுக்கான முடிவு:

மேலும், 2016 ஜூன் மாதம் வரை நடந்து முடிந்த மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வைத் தவிர, மற்ற அனைத்துத் தேர்வுகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இன்னும் 10 தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இவை அனைத்தும் 2016 ஜூன் மாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்டவையாகும்.இந்த 10 தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கான பணிகளும், தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே, உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டு, முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன. வரும் 14, 15 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.திருத்திய வரையறை இன்று வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இதில் இப்போது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருத்திய வரையறை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் திங்கள்கிழமை (நவ.7) பதிவேற்றம் செய்யப்படும். இவற்றைத் தேர்வர்கள்பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

இனி அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும், இந்த திருத்திய வரையறையே பின்பற்றப்படும்.நவம்பர் 9-இல் குரூப்-1 தேர்வு அறிவிக்கை: துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளில் 81 காலி இடங்களுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிக்கைநவம்பர் 9-இல் வெளியிடப்பட உள்ளது என்றார் அவர்

TNPSC:Group -IV தேர்வு ஆறு மாதத்தில் முடிவு வெளியாகும் என அறிவிப்பு

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 5,451 பணியிடங்களை நிரப்புவதற்கான, 'குரூப் - 4' தேர்வு நேற்று நடந்தது. இந்தத் தேர்வில், 10ம் வகுப்பு முதல், இன்ஜினியரிங் படித்தவர்கள் வரை,12.60 லட்சம் பேர் பங்கேற்றனர்.தேர்வின் முடிவுகள், ஆறு மாதங்களில் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு துறைகளில், இளநிலை உதவி யாளர், தட்டச்சர், வரிவசூலிப்பாளர், நில அளவையாளர், வரைவாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உட்பட, ஏழு விதமான பணியிடங்க ளில், 5,451 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான, குரூப் - 4 எழுத்துத் தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய மான, டி.என்.பி.எஸ்.சி., ஆக., 9ல் அறிவித்தது. தேர்வில் பங்கேற்பதற்கான அடிப்படை கல்வித் தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். 18 முதல், 35 வயதுக்கு உட்பட்டோர்,தேர்வுக்கு,செப்., 9க்குள் விண்ணப்பிக்கலாம்என, அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இணையதளத்தில் ஏற்பட்ட பிரச்னையால், ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர்.

இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளி யானதும், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு,செப்., 14 வரை நீட்டிக்கப்பட்டது. திட்டமிட்டபடி, நேற்றுகாலையில், எழுத்துத் தேர்வு நடந்தது. 10ம் வகுப்பு முதல், பட்டப் படிப்பு, பிஎச்.டி., மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் வரை, மொத்தம், 15.64 லட்சம் பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர்; அவர்களில், 80.5 சதவீதமாக, 12.60 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
* சென்னை உட்பட, 301தாலுகாக்களில், 5,296 தேர்வு அறைகளில் தேர்வு நடந்தது. முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வுக்கூட ஆய்வு அதிகாரிகள், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் என, மொத்தம், 88 ஆயிரத்து, 810 பேரும்; பறக் கும் படை அதிகாரிகள், 218 பேரும், தேர்வை நடத்தும் பணியில் ஈடுபட்டனர்* தேர்வுக்கு வந்தவர்களுக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், கைப்பை உள்ளிட் டவை, தேர்வறையில் அனுமதிக்கப் படவில்லை.

'ரிசல்ட்' எப்போது?

சென்னையில் தேர்வு நடைபெற்ற மையங் களை,டி.என்.பி.எஸ்.சி.,தலைவர் அருள்மொழி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகி யோர் பார்வையிட்டனர். பின், அருள்மொழி அளித்த பேட்டி:டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஓராண்டில், 15 எழுத்துத் தேர்வுகளும், 13 நேர்முகத் தேர்வு களும் நடத்தப்பட்டு; 22 முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. ஜூன், 16 வரை நடந்த அனைத்து தேர்வுகளுக்கான முடிவுகளும்அறிவிக்கப் பட்டு விட்டன. மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு, வரும் வாரத்தில் வெளியாகும்.சப் - கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட, உயர் பதவிகளில் காலியாகஉள்ள, 85 பணிஇடங் களை நிரப்புவதற்கான, 'குரூப் - 1' தேர்வு, வரும், 9ல், அறிவிக்கப்படும். தேர்வாணையத் தின் திருத்தப்பட்ட அறிவுரைகள், இன்று வெளியிடப்படும். இந்த விதிகள், அடுத்து வரும் தேர்வுகள் அனைத்துக்கும் பொருந்தும். 'குரூப் - 4' தேர்வு முடிவுகள், ஆறு மாதங்களுக் குள் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வில் புதுமண தம்பதி

தர்மபுரியைச் சேர்ந்த மணமக்கள் மணிமாறன் - சித்ரா ஆகியோர், நல்லம்பள்ளி அரசு பள்ளி மற்றும் தர்மபுரி குட்ஷெப்பர்டு மேல்நிலைப் பள்ளியில், மணக்கோலத்தில் தேர்வு எழுதினர்.மணமகன் மணிமாறன் கூறியதாவது:பி.இ., படித்த எனக்கும், எம்.எஸ்சி., - பி.எட்., படித்த சித்ராவுக்கும், திருமணம் நிச்சயம் செய்யும் முன்னரே, இருவரும், 'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பித்துஇருந்தோம். தேர்வு நாளில், எங்கள் திருமணத்தை நடத்த, பெரியோர்கள் முடிவு செய்தனர்.அதனால், அதிகாலை, 5:00 மணிக்கு திருமணம் முடிந்ததும்,இருவரும் அவரவர் தேர்வு மையத் தில், தேர்வில் பங்கேற்றோம்; தேர்ச்சி பெற்று, இருவரும் அரசு வேலையில் சேருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!