Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 9 November 2016

OLD 500,1000 EXCHANGE SLIP ANNEX 5 FORM

சனி ,ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை -வங்கிகள் செயல்படும் .குரு நானக் ஜெயந்தி விடுமுறை ரத்து வங்கிகள் இயங்கும் என அறிவிப்பு

வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் இயங்கும் & திங்கட்கிழமை -வங்கிகள் செயல்படும் .குரு நாக் ஜெயந்தி விடுமுறை ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 500 மற்றும் 
ரூபாய் 1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள வசதியாக ரிசர்வ் வங்கி இந்த ஏற்பாட்டினை செய்துள்ளது..

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 11-ம் தேதி வரையில் கட்டணம் கிடையாது.

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 11-ம் தேதி நள்ளிரவு வரையில் கட்டணம் கிடையாது என்றுஅறிவிக்கப்பட்டு உள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலை 11 தேதி நள்ளிரவு வரையில் வசூலிப்பதை ரத்து செய்ய முடிவுசெய்யப்பட்டு உள்ளது என்று மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறைமந்திரி நிதின் கட்காரி அறிவித்து உள்ளார். 
வாகன போக்குவரத்து தடையின்றி நடக்க ஏதுவாக தற்காலிகமாக சுங்கக்கட்டணம் ரத்து செய்ய்யப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்து உள்ளார் நிதின் கட்காரி.இன்று முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்தார். புதியதாக புதுவடிவத்துடன் ரூ. 2,000 மற்றும் 500 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது. இருப்பினும், 72 மணி நேரத்துக்கு, அதாவது, 11-ந் தேதி நள்ளிரவு வரையில் சில இடங்களில் இந்நோட்டுகளை பயன்படுத்த விலக்கு அளிக்கப்பட்டது.

* மருத்துவமனைகள்*மருந்து கடைகள் * பெட்ரோல் விற்பனை நிலையங்கள் * ரெயில் நிலைய முன்பதிவு கவுண்ட்டர்கள் * பஸ் நிலையங்கள் * விமான நிலையங்கள் * உடல் எரியூட்டும் இடம்* கூட்டுறவு சங்கங்கள்* மாநில அரசு நடத்தும் பால் நிலையங்கள் ஆகிய இடங்களில் ரூ. 500, 1000 நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று அறிவித்ததை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி ஏற்பட்டது. மேலும் வாக்குவதாங்களும் நேரிட்டது. இந்நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

TNTET தீர்ப்பு -ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த 2 அரசாணைகள் செல்லும்: உச்சநீதிமன்றம்


தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஆசிரியர் தேர்வுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை உறுதி செய்தது.

இரு நீதிமன்றங்களும் இருவேறு தீர்ப்பை அளித்ததால், ஆசிரியர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 % மதிப்பெண் தளர்வு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 % மதிப்பெண் தளர்வு அரசாணையினை ரத்து செய்த மதுரை உயர்நீதீமன்றத்தின் தீர்ப்பும் ரத்தாகிறது.

இந்த வழக்கு காரணமாக கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

*TNPSC Group 1 தேர்வுக்கு தயாராகி வருகிறீர்களா இதோ உங்களுக்காக ஒரு அப்ப்ளிகேஷன் டவுன்லோட் செய்து, படித்து TNPSC Group 1 தேர்வை பாஸ் செய்யுங்கள்.

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இனி செல்லாது!

நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற டிசம்பர் 30 ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக வரும் 9 மற்றும் 10 ம் தேதி ஆகிய இரு நாட்களும் வங்கி ஏ.டி.எம். செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள், இடுகாடுகள் ஆகிய இடங்களில் மட்டும் வரும் நவம்பர் 11ம் தேதி வரை ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும், 2005 க்கு முன்பு வரை அச்சிட்ட நோட்டுக்களை மட்டும் மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ரூபாய் 500,100 நோட்டுகள் செல்லாது : நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியதும், செய்ய வேண்டியதும்...!

1. நவம்பர் 9-ம் தேதி அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும். 

2. நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் ஏ.டி.எம் செயல்படாது.

3. நீங்கள் கையில் வைத்திருக்கும் ரூபாய் 500, 1000 நோட்டுகளை உங்கள் வங்கி அல்லது தபால் நிலையம் சேமிப்புக் கணக்கில் வைப்பு வைதிருக்க வேண்டும்.


4. வங்கியிலிருந்து நீங்கள் ஒரு நாளைக்கு 10000 ரூபாய் அல்லது ஒரு வாரத்திற்கு 20,000 தான் எடுக்க முடியும்.

5. காசோலைகள், வரைவோலைகளை, டெபிட் அல்லது கிரெடிட் அட்டைகள் மற்றும் மின்னணு நிதி பரிவர்த்தனைகளுக்கு எந்த தடையும் இல்லை.

அடுத்த 72 மணிநேரங்களுக்கு கீழ்கண்ட இடங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செலுத்த முடியும் :


1. ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டர்கள், பஸ் மற்றும் விமான டிக்கெட்டுகள் பெற தற்போதைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைப்    பயன்படுத்தலாம்.

2. அரசு மருத்துவமனைகளில் பில் தொகைக்கு செலுத்த முடியும்.

3. மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட  பெட்ரோலிய நிறுவனங்களின் பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்களில் செலுத்த முடியும். 

4.  மத்திய மற்றும் மாநில அரசால் அனுமதிக்கப்பட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலைகளில் செலுத்த முடியும்.

5.  மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பால் பூத்களில் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லும்.

புதிய 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் புகைப்படம்

புதுடில்லி : புதிய 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் செயற்கைக் கோளை பெருமைப்படுத்தும் வகையில் அதன் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.

மங்கள்யான் :

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, 2013ம் ஆண்டு நவ., 5ம் தேதி, பி.எஸ்.எல்.வி.,-சி - 25 ராக்கெட் மூலம் ‛மங்கள்யான்' செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் இந்த சாதனைப் பயணத்தை அனைவரும் நினைவில் கொள்ளும் வகையில், புதிதாக வெளியாக உள்ள 2,000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. புதிய 500 ரூபாய் நோட்டில் டில்லி செங்கோட்டையின் படம் அச்சிடப்பட்டுள்ளது.

இதுவரை..

ரூ.50 - பார்லிமென்ட்

ரூ.100 - இமயமலை

பழைய ரூ.500 - காந்தியின் தண்டி யாத்திரை

பழைய ரூ.1000 - தொழில்நுட்ப வளர்ச்சி

புதிய நோட்டுகளில்..

புதிய ரூ.500 - டில்லி செங்கோட்டை

புதிய ரூ.2000 - மங்கள்யான்

இலவச செயல்முறை வகுப்பு நடத்தி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் பணி

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘பரிக் ஷன் அறக்கட்டளை’ எனும் அமைப்பு அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களிடையே பல்வேறு அறிவியல் செயல்முறை விளக்கங்களைச் செய்துகாட்டி, அவர்களிடையே அறிவியல் மீதான ஆர்வத்தைத் தூண்டி, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள உதவி வருகிறது.

சென்னையில் உணவுப் பொருள் தர நிர்ணய பரிசோதனைக் கூடம் நடத்தி வருபவர் பசுபதி. நுண்ணுயிரியல், விலங்கியல் மற்றும் உணவுப் பொருள் தரம் பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமார் 15 முனைவர் பட்டங்களை பெற்றுள்ள இவர், முறையான அறிவியல் ஆய்வுக்கூட வசதி இல்லாத அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த வேண்டும் என கருதினார்.

இதற்காக 2009-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில அரசுப் பள்ளிகளுக்குச் சென்று நம் அன்றாட வாழ்வில் நிகழும் சில அறிவியல் உண்மைகளை எளிய பரிசோதனைகள் மூலம் மாணவர்களிடம் விளக்கினார். மாணவர்களிடையே கிடைத்த வரவேற்பு மற்றும் ஆர்வத்தைப் பார்த்து இந்த செயல்பாட்டை தொடரவும், மேலும் விரிவுபடுத்தவும் விரும்பினார்.

சிலரது உதவியுடன், பரிச்சயம் என்ற பொருள் கொண்ட ‘பரிக் ஷன் அறக்கட்டளை’ உருவானது. இந்த அறக்கட்டளைக்கு 2 வேன்கள் வாங்கப்பட்டன. ‘விஞ்ஞான ரதம்’ எனும் பெயர் கொண்ட இந்த வேன் களில் ஒரு திட்ட இயக்குநர் மற்றும் 4 ஆசிரியர்கள் கொண்ட குழு கடந்த 7 ஆண்டுகளில் தமிழகத்தை கிழக்கு மேற்காகவும், வடக்கு தெற்காகவும் பயணம் செய்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 9 லட்சம் மாணவர்களைச் சந்தித்து அறிவியல் செயல்விளக்கங்களைச் செய்து காண்பித்துள்ளது.

இந்த வேனில், அறிவியல் உபகரணங்களுடன் ஜெனரேட்டர், திரைப்படங்களை காட்சிப்படுத்தும் திரைகளுடன் கூடிய புரொஜெக்டர் கருவி, கூடாரம் ஆகியவையும் உள்ளன. கிராமப்புற பள்ளிகளில் கிடைக்கும் வசதியைக் கொண்டு திறந்தவெளியில்கூட செயல்முறை வகுப்புகளை இவர்கள் நடத்து கின்றனர்.

அன்றாட வாழ்வில் நிகழும் பல் வேறு நிகழ்வுகளை எளிமையான அறிவியல் சோதனைகள் மூலம் நேரடியாக செய்து காட்டி மாணவர்களுக்கு விளக்குகின்றனர்.

செயல்முறை வடிவில் விளக்கப் படுவதால் விஷயங்களை அறிவி யல்பூர்வமாக எளிதில் புரிந்து கொள்வதுடன், மக்களுக்குப் பய னுள்ள எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் எனும் ஆர்வம் மாணவர்களிடம் உண்டாகிறது.

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் பரிக் ஷன் திட்ட இயக்குநர் அறிவரசன் கூறியபோது, “எங்களிடம் சுமார் 1,200 அறிவியல் செயல்முறை விளக்க சோதனைகள் உள்ளன. மேலும், இது தொடர்பான ஏராளமான ஒளிப்படங்களும் உள்ளன. ஏப்ரல், மே ஆகிய 2 மாதம் சென்னையில் அறிவியல் பயிற்சி முகாம் நடத்துகிறோம். இதற்கு கட்டணம் உண்டு. இந்த முகாம் மூலம் வசூலாகும் தொகையைக் கொண்டு வருடத்தில் 10 மாதங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக செயல்முறை பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம்.

நவீன உபகரணங்களுடன் கூடிய ஆய்வக வசதி கொண்ட தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அரசுப் பள்ளிகளைத் தேடிச்சென்று இலவச செயல்முறை வகுப்புகளை நடத்தி வருகிறோம். இதன் மூலம், மக்களுக்கு பயனுள்ள எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை மாணவர்களிடம் தூண்டுவதே எங்கள் நோக்கம்” என்றார்

ஆசிரியர்களுக்கு பணி : CBSE., தடை

ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், நிர்வாக பணிகளில் ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து உள்ளது. இது தொடர்பான புகார்கள் குறித்து, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 
இதையடுத்து, 'ஆசிரியர்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியல் ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், பள்ளி வாகனங்களில், ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என்ற விதியையும், சி.பி.எஸ்.இ., நிர்வாகம் திருத்தியுள்ளது.

அதன்படி, பள்ளி வாகனங்களில், உதவியாளர் ஒருவருடன், ஆசிரியருக்கு பதில், பெண் ஊழியர் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

18 ஆயிரம் பள்ளிகளுக்கு CBSE, உத்தரவு

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், நவ., 30க்குள், உட்கட்டமைப்பு வசதி குறித்த பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட இணைப்பில், கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் வித்யாலயா மற்றும் ராணுவ பள்ளிகள் செயல்படுகின்றன. 
10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., வாரியம் நேரடியாக

நடத்துகிறது. மேலும், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு, உயர்கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கான ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு உள்ளிட்ட, பல தேர்வுகளையும் நடத்துகிறது.

இந்த தேர்வுகளுக்கு, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தான், தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. சில தேர்வு மையங்களில், குடிநீர், பெஞ்ச், மின் விசிறி, கழிப்பறை போன்ற வசதிகள் இல்லை என, புகார் எழுந்தது. சில பள்ளிகளில், நர்சரி குழந்தைகள் அமரும் பெஞ்சுகள் தான், தேர்வர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகின. எனவே, பள்ளிகளின் உட்கட்டமைப்பை, 100 சதவீதம் உறுதி செய்ய, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது.

தேர்வர்களுக்கு, அவர்களின் வசதிப்படியும், மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் பள்ளியில் இருந்து, 8 கி.மீ.,க்குள் தேர்வு மையம் அமைக்கவும் முடிவு செய்துள்ளது.

அதனால், 18 ஆயிரம் பள்ளிகளும், தங்கள் உட்கட்டமைப்பு விபரங்களை, புகைப்பட ஆதாரத்துடன், 'ஆன்லைனில்' பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, நவ., 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

20,558 அங்கன்வாடி மையங்களுக்கு 'மிக்சி'

தமிழக அரசு, 1.75 கோடி குடும்பங்களுக்கு, இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி அல்லது, மின் அடுப்பு வழங்கியுள்ளது. இவற்றை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து, கொள்முதல் செய்தது; தமிழகத்தில், 54 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் உள்ளன.
இந்த மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, சத்து மாவு, மதிய உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்களில், உணவு சமைக்க, 9,000 மையங்களுக்கு, மிக்சி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 20 ஆயிரத்து, 558 மையங்களுக்கு, மிக்சிகள் வழங்கப்பட உள்ளன. நுகர்பொருள் வாணிப கழகமே, இதற்கான மிக்சிகளையும் கொள்முதல் செய்ய உள்ளது.

ஏற்கனவே, வீடுகளுக்கு வழங்கிய இலவச பொருட்கள், பழுதடைந்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பல வீடுகளில், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தற்போது, தரமான மிக்சிகள் வாங்க, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது' என்றார்.

'நெட்' தேர்வு விண்ணப்பம் : நவ., 15ல் முடியுது அவகாசம்

பேராசிரியர் பணி தகுதிக்கான, 'நெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. கல்லுாரி மற்றும் பல்கலைகளில், பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 
மத்திய அரசின் உதவித்தொகையில், பல்கலைகள், கல்லுாரிகளில் முழுநேர ஆராய்ச்சி மாணவராக சேரவும், இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். ஆண்டுக்கு இரு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில், அடுத்த தேர்வு, ஜன., 22ல் நடக்கிறது. அதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, அக்., 15ல் துவங்கியது. விண்ணப்பிக்கும் அவகாசம், நவ., 15ல் முடிகிறது. இதற்கு, ஒரு வாரமே உள்ளது. ஜூலையில் நடந்த, 'நெட்' தேர்வுக்கான முடிவுகள் இன்னும் வெளியாகாததால், பட்டதாரிகள் பலர், அடுத்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதா; வேண்டாமா என, குழப்பத்தில் உள்ளனர். 'இந்த வார இறுதிக்குள், தேர்வு முடிவு வெளியாகும்' என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கவுன்சில் கெடு.

இன்ஜி., கல்லுாரிகள் பேராசிரியர்கள் விபர பட்டியலை, வரும், 20ம் தேதிக்குள் திருத்தம் செய்ய, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., 'கெடு' விதித்துள்ளது.

இன்ஜி., கல்லுாரிகளில், 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற ரீதியில், மாணவர், ஆசிரியர் விகிதத்தை கடைபிடிக்க வேண்டும்.
ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., விதிகளின்படி, பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு மற்றும் நெட் தேர்வு முடித்தவர்களையே, பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும். ஆனால், பல கல்லுாரிகளில் வெறும், பி.இ., - பி.டெக்., முடித்தவர் கள், தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை தொடர்ந்து, அனைத்து கல்லுாரிகளின் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, தகுதியான ஆசிரியர்கள் உள்ளனரா என ஆய்வு செய்ய, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு கல்லுாரியும், மாணவர்கள் எண்ணிக்கை, நிரந்தர பேராசிரியர்கள் எண்ணிக்கை, நுாலக, ஆய்வக வசதி உள்ளிட்ட விபரங்களை, ஆன்லைனில் பதிவு செய்துள்ளன. அவற்றில் திருத்தம் செய்ய வேண்டும் எனில், நவ., 2ல்க்குள் செய்து கொள்ளலாம் என, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.

அதிவேக இணைய திட்டம் : முகவர்கள் நியமனம் தீவிரம்

அதிவேக இணைய இணைப்பு தரும் திட்டத்தில், முகவர்களை சேர்ப்பதில், அரசு கேபிள், 'டிவி'

நிறுவனம், தீவிரம் காட்டி வருகிறது. அரசு கேபிள் நிறுவனம், 'பிராட் பேண்ட்' என்ற, அதிகவேக இணைய இணைப்பு திட்டத்தை, மாவட்ட தலைநகரங்களில் செயல்படுத்தி வருகிறது; அதை, அனைத்து நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த உள்ளது. 
அதற்காக, முகவர்களாக சேர விரும்புவோர், www.tactv.in, இணையதளத்தில் மனுக்களை பதிவிறக்கம் செய்து, 15க்குள் அனுப்பலாம் என, அரசு கேபிள் நிறுவனம் அறிவித்தது; இதுவரை, 6,000த்திற்கும் மேற்பட்டோர், பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தவர்களை மட்டுமின்றி, இணையதளத்தை பார்த்தவர்களையும் விடாமல், முகவர்களாக சேரும்படி, அரசு கேபிள் ஊழியர்கள் கூறி வருகின்றனர். சென்னையில் உள்ள, கேபிள், 'டிவி' அலுவலகத்தில், இதற்காகவே ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'பி.எஸ்.என்.எல்., கட்டணத்தை விட குறைவாக நிர்ணயித்துள்ளோம். இத்தொழிலில், நல்ல எதிர்காலம் உள்ளது; இளைஞர்கள் நம்பி வரலாம்' என்றனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிப்பு.

ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு மற்றும் வெயிடேஜ் முறையினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.அது தொடர்பான விசாரணை வெகு நாட்களாக நடந்து முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கின் தீர்ப்பானது கோர்ட் எண் 11-ல் வழக்கு எண் 1-ல் முதல் வழக்காக  (09.11.2016) வெளியிடப்படுகிறது.

தீர்ப்பு எவ்வாறு இருக்கும்:

தமிழக ஆசிரியர்கள்அனைவரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் தீர்ப்பு நாளை வெளியிடப்படுகிறது.தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை பொருத்தே பலரது வாழ்க்கையானது ஏற்றம் பெரும்.நல்ல தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிகையுடன் காத்திருப்போம்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!