Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 12 November 2016

அரசு பள்ளிகளுக்கு வர்த்தக பிரிவுக்கான மின் கட்டணம் வசூலிப்பதா?- உயர் நீதிமன்றம் கண்டனம்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தக் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் தாக்கல் செய்த பதில் மனு மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மாநில அரசு சுகாதாரம், கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை. கழிப்பறை இருந்தால் அது பயன்பாட்டில் இல்லை. மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறைகளை பூட்டி வைத்து ஆசிரியர்கள் பயன்படுத்தி வருகி ன்றனர்.

அரசு பள்ளிகளில்கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுக்கு மத்திய அரசு 60 சதவீத நிதி வழங்குகிறது. மாநில அரசு 40 சதவீத நிதி வழங்காவிட்டால் எந்தப் பணியும் நடைபெறாது. கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஏதாவது செய்தால் அரசை பாராட்டலாம். எதுவும் செய்யாமல் இருந்தால் எப்படி பாராட்டுவது?துப்புரவுப் பணியாளர்களைப் பெற்றோர்-ஆசிரியர்கள் கழகம் நியமனம் செய்கின்றனர் என அரசு சொல்கிறது. பெற்றோர்-ஆசிரியர் கழகத்துக்கு எங்கிருந்து நிதி வருகிறது. துப்புரவுப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.750 முதல் ரூ.1500 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்திற்கு இந்த காலத்தில் யார் வேலைக்கு வருவர்.மின்சார கட்டணம் செலுத்த ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.1500வழங்குவதாக அரசு கூறுகிறது.

கட்டணம் அதிகமாக வந்தால் தலைமை ஆசிரியர் சரி செய்து கொள்வார் என்கின்றனர். தலைமை ஆசிரியர் பணத்துக்கு எங்கு போவார். ஒவ்வொரு பள்ளிக்கும் இரு மாதத்துக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் வருகிறது. அரசு பள்ளிகளுக்கு வர்த்தகப் பிரிவில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. பள்ளி என்ன தொழிற்சாலையா? பள்ளிகளுக்கு வீட்டுக்கான மின் கட்டணம் நிர்ணயம் செய்தால் என்ன ஆகி விடும்.வழக்கறிஞர்கள் குழு பள்ளிக ளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி நாப்கின் வழங்கும் இயந்திரம் செயல்படவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் பதில் மனுவில் நாப்கின் இயந்திரம் செயல்படுகிறது எனக் கூறப் பட்டுள்ளது. இது நம்பும்படியாக இருக்கிறதா? என்றனர்.

அப்போது கூடுதல் அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, பள்ளிகளில் படிப்படியாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் நாப்கின் இயந் திரத்தை பயன்படுத்த மாண விகள் தயங்குகின்றனர்.இதனால் அந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்றார்.இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து குறைபாடுகளும் களையப்பட வேண்டும் என்றனர். பின்னர் விசாரணையை நவ.18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

DIGITAL SR : டிஜிட்டல் பணிக்கு செல்லும் முன் நம் பணிப்பதிவேட்டில் நாம் சரிபார்க்கப்பட வேண்டியவை.

1) நம் சுய விவரம் மற்றும் புகைப்படம்
2)பணிநியமன ஆணையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட விவரம்
3)பணி வரன்முறை
4)தகுதிகாண் பருவம்
5)அனைத்து கல்வி விவரங்கள்
6)கல்வித்தகுதிகளின் உண்மைத் தன்மை
7)துறைத்தேர்வு தேர்ச்சி விவரங்கள்
8)FBF
9)SPF
10)GPF/CPS
11)பணிக்காலம் சரிபார்ப்பு
12)உயர் கல்வி பயில முன் அனுமதி
13)பதவி உயர்வு சார்பான பதிவுகள்
14)பணியிட மாறுதல் சார்பான விவரம்
15)ஊதிய நிர்ணயம் மற்றும் கால முறை ஊதிய நிர்ணயம் பற்றிய விவரம்
16)ஊக்க ஊதியம்/உண்மைதன்மை பெற்றதன் விவரம்
17)தேர்வு நிலை விவரம்
18)சிறப்பு நிலை விவரம்
19)சரண் விடுப்பு விவரம்
20)ஈட்டா விடுப்பு விவரம்
21)மருத்துவ விடுப்பு விவரம்
22)மகப்பேறு விடுப்பு விவரம்
23)கருச்சிதைவு விடுப்பு விவரம்
24)ஈட்டிய விடுப்பு இருப்பு விவரம்
25)ஈட்டா விடுப்பு இருப்பு விவரம்
26)அசாதாரணவிடுப்பு விவரம்
27)குடும்ப விவரங்கள்
28)SPF, FBF,GPF/CPS, DCRG, போன்றவற்றிற்கு வாரிசு நியமிக்கப்பட்ட விவரம்.

கணக்குக்கு இனி இல்லை பிணக்கு!:அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்.

பூஜ்ஜியத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு மதிப்புண்டு என, உலகத்திற்கு உரக்க சொன்னவர்கள் தான் நம் முன்னோர்கள்.ஆனால் இன்று, சிறுவண்டுகளுக்கு சின்ன வாய்ப்பாட்டில் கூட, எக்கச்சக்க திணறல். 3*2 என்றால் கூட, விரல் விட்டு எண்ணி, பதில் சொல்றாங்க.இப்படியிருக்கும் நிலையில், 'கணக்கு பார்முலா வர்றதுக்கு, ஸ்பெஷல் மில்க் ரிடிங்ஸ் எல்லாம் குடிக்கதேவையில்ல.
எளிய முறையில், அடிப்படை தகவல்களை சொல்லி கொடுத்தாலே போதும். சதம் அடிப்பது எளிது' என, அசால்ட்டாய் சொல்கிறார்,கோவை தீத்திப்பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ரகோத்தமன். வகுப்பறைக்குள் நுழைந்ததும், தலையை குனிந்தபடி, ஏதோ போர்டுக்குள் மூழ்கியிருந்தனர் மாணவர்கள். கூட்டல், கழித்தலில், எவ்வளவு பெரிய எண்களை கூறினாலும், கண் இமைக்கும் நேரத்தில், கோரஷாக பதில் வந்தது. ஆச்சரியத்துடன் பார்த்த போது, கணித ஆசிரியர் ரகோத்தம்மன் கூறியதாவது:தொடக்கப் பள்ளிகளில் இருந்தே, கணிதம் சார்ந்த புரிதல்ஏற்படுத்துவது அவசியம். ஏனெனில், கணிதம் இல்லாமல், அன்றாட பிழைப்பை நகர்த்துவது கடினம். படிக்காத பாட்டிகூட, கூட்டல், கழித்தல் தெரிந்து வைத்திருப்பார். ஏனெனில், கணிதம் வாழ்க்கை கல்விக்கு தொடர்புடையது.இதை எளிமையாக, மாணவர்களுக்கு புரியும் விதத்தில் சொல்லி கொடுக்க, 'பெக் மேட்' என்ற, செயல்வழி கணித போர்ட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதைப் பயன்படுத்தி, ஒற்றை எண், இரட்டை எண் வேறுபாடு, பகு எண், பகா எண், காரணிகள், மீ.பொ.வ., - மீ.சி.ம., என, பல்வேறு அடிப்படை விசயங்களை அறியலாம்.

 பத்து நாணயங்கள் கொடுத்து, வேறுபாடுகளை அறிய சொன்னால், எளிதில் விளங்கிவிடும். இதேபோல், கூட்டல், கழித்தலை போர்டிலே செய்யலாம்.வட்டம், சதுரம், செவ்வகம் என, வடிவங்கள், அதன் தன்மை, அளவுகளை சொல்லி கொடுக்க லாம். என்னதான் கரும்பலகையில்வரைந்து சொல்லி கொடுத்தாலும், ரப்பர் பேண்டு கொண்டு, மாணவர்களே போர்ட்டில், வடிவங்கள் உருவாக்கும் போது, நிறைய கற்றுக் கொள்வர்.நான்கு புறமும் சமமாக இருந்தால் சதுரம் என, நீளமாக நீட்டி முழக்கி, சொல்லி கொடுப்பதற்கு பதில், செய்ய பழக்கினால், மனதில் பதிந்துவிடும்.

இதுமட்டுமல்ல, பத்தாம் வகுப்பு வரை,தேற்றங்கள், வரையறை என, கணிதம் சார்ந்த அனைத்து பார்முலாக்களுக்கும், கற்பித்தல்கருவிகள் உள்ளன.மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், கணித கற்பித்தல் உபகரணங்களை, அனைவருக்கும்இடைநிலை கல்வி திட்டம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இது, மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளதால், மற்ற பள்ளிகளுக்கும் வளங்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

TN திறந்த நிலை பல்கலையில் 24ல் பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின், ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, வரும், 24ல் நடக்கிறது.இது தொடர்பாக, பதிவாளர், எஸ்.விஜயன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின், ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, வரும், 24, காலை, 11:00 மணிக்கு, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நடக்கிறது.

பள்ளிகளில் 4,000 -க்கும் அதிகமான ஆய்வக உதவியாளர் பணி நியமனம் எப்போது?

அரசுப் பள்ளிகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 34 முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள், 30 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்ற எதிர்பார்ப்பு பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது.

7 லட்சம் மாணவர்களை தொழிலதிபர்களாக்க இலக்கு; மத்திய அரசு புதிய திட்டம்!

மத்திய அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 7 லட்சம் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து,தொழிலதிபர்களாக உருவாக்கும் நோக்கில், ‘பிரதான் மந்திரி யுவ யோஜனா’ என்ற புதியதிட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

 டில்லியில், நேற்று முன்தினம், திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவு துறைஅமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தலைமையில், ‘தரமான ஆற்றல்’ என்ற தலைப்பில், மாநாடுநடைபெற்றது.

பெரும்பான்மை மாநில அரசு பிரதிநிதிகள்பங்கேற்ற இந்த மாநாட்டில், இளைஞர்கள்,மாணவர்கள் ஆகியோருக்கான தொழில்முனைவோர் பயிற்சித் திட்டத்தை, ராஜீவ்பிரதாப் ரூடி அறிவித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:

இளைஞர்களுக்கு தொழில் முனைவோர்பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தின் கீழ்,அடுத்த ஐந்து ஆண்டுகளில், 7 லட்சம்மாணவர்களுக்கு, தொழில் முனைவோர்பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, 499.94கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மாநில அரசுகளுடன் இணைந்து, 3,050 கல்விமையங்களில், இந்த பயிற்சி திட்டம்செயல்படுத்தப்படும். இதற்காக,என்.ஐ.இ.எஸ்.பி.யு.டி., மற்றும் ஐ.ஐ.இ.,பயற்சி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுஉள்ளன. இவை, 125 நாடுகளைச் சேர்ந்த, 2,600 பேர் உட்பட, 7 லட்சத்திற்கும்அதிகமானோருக்கு, தொழில் முனைவோர்பயிற்சியை வெற்றிகரமாக வழங்கியுள்ளன.

இதையொட்டி, உள்நாட்டில்இளைஞர்களுக்கு, மேலும் அதிகவேலைவாய்ப்புகளை உருவாக்கும்நோக்கில், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 2,200 கல்லுாரிகள்,பல்கலைகள், 300 பள்ளிகள், 500 இந்தியதொழிற்கல்வி மையங்கள், 50தொழில்முனைவோர் மேம்பாட்டுமையங்கள் ஆகியவற்றின்மாணவர்களுக்கு, வலைதளம் வாயிலாகதொழில் முனைவோர் பயிற்சிவழங்கப்படும்.

அத்துடன், தொழில் விபரங்கள், தொழில்முன்னோடிகளின் ஆலோசனைகள் உட்பட,தொழில் துவங்குவதற்கான அனைத்துஉதவிகளையும், இளைஞர்கள் பெறலாம்.தேசிய மற்றும் சர்வதேச தரத்திலானதொழில் முனைவோர் கல்விப் பயிற்சி,இளைஞர்களுக்கு வழங்கப்படும்.

அமைச்சகம், 2020க்குள், ஒரு கோடி பேருக்குதிறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க இலக்குநிர்ணயித்துள்ளது. இதற்காக, பிரதமர்திறன் மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து, 3,000 கோடி ரூபாய், மாநில அரசுகளுக்குஒதுக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, மாநிலங்களில் அமைக்கப்படும்திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள்,ஆய்வுக்கூடங்கள் மற்றும் பயிற்சிசாதனங்களின் தரம் உள்ளிட்டவைதொடர்பான வழி­காட்டு நெறிமுறைகள்,தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. மத்தியஅரசின் திட்டங்கள், அதகளவில், முதல்தலைமுறை தொழில் முனைவோரைஉருவாக்க உதவும். இவ்வாறு அவர்கூறினார்.

முதல் தலைமுறையினர்:

சிறப்பாக செயல்படும், 30 வயதிற்கு உட்பட்ட,முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு, 2017 ஜன., 16ல், மத்தியஅரசின் தொழில்முனைவோர் விரு­துகள்வழங்கப்படும் என, மத்திய திறன் மேம்பாட்டுஅமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வங்கிகளில் நேற்று ஒருநாளில் ரூ.1,150 கோடி டெபாசிட்

சென்னை: தமிழகம் முழுவதும் வங்கிகளில் நேற்று ஒருநாளில் ரூ.1,150 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ரிசர்வ் வங்கியில் கடந்த 2 நாட்களில் 3 ஆயிரம் பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 

7 லட்சம் மாணவர்களை தொழிலதிபர்களாக்க இலக்கு; மத்திய அரசு புதிய திட்டம்!

மத்திய அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 7 லட்சம் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து,தொழிலதிபர்களாக உருவாக்கும் நோக்கில், ‘பிரதான் மந்திரி யுவ யோஜனா’ என்ற புதியதிட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

 டில்லியில், நேற்று முன்தினம், திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவு துறைஅமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தலைமையில், ‘தரமான ஆற்றல்’ என்ற தலைப்பில், மாநாடுநடைபெற்றது.

பெரும்பான்மை மாநில அரசு பிரதிநிதிகள்பங்கேற்ற இந்த மாநாட்டில், இளைஞர்கள்,மாணவர்கள் ஆகியோருக்கான தொழில்முனைவோர் பயிற்சித் திட்டத்தை, ராஜீவ்பிரதாப் ரூடி அறிவித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:

இளைஞர்களுக்கு தொழில் முனைவோர்பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தின் கீழ்,அடுத்த ஐந்து ஆண்டுகளில், 7 லட்சம்மாணவர்களுக்கு, தொழில் முனைவோர்பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, 499.94கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மாநில அரசுகளுடன் இணைந்து, 3,050 கல்விமையங்களில், இந்த பயிற்சி திட்டம்செயல்படுத்தப்படும். இதற்காக,என்.ஐ.இ.எஸ்.பி.யு.டி., மற்றும் ஐ.ஐ.இ.,பயற்சி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுஉள்ளன. இவை, 125 நாடுகளைச் சேர்ந்த, 2,600 பேர் உட்பட, 7 லட்சத்திற்கும்அதிகமானோருக்கு, தொழில் முனைவோர்பயிற்சியை வெற்றிகரமாக வழங்கியுள்ளன.

இதையொட்டி, உள்நாட்டில்இளைஞர்களுக்கு, மேலும் அதிகவேலைவாய்ப்புகளை உருவாக்கும்நோக்கில், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 2,200 கல்லுாரிகள்,பல்கலைகள், 300 பள்ளிகள், 500 இந்தியதொழிற்கல்வி மையங்கள், 50தொழில்முனைவோர் மேம்பாட்டுமையங்கள் ஆகியவற்றின்மாணவர்களுக்கு, வலைதளம் வாயிலாகதொழில் முனைவோர் பயிற்சிவழங்கப்படும்.

அத்துடன், தொழில் விபரங்கள், தொழில்முன்னோடிகளின் ஆலோசனைகள் உட்பட,தொழில் துவங்குவதற்கான அனைத்துஉதவிகளையும், இளைஞர்கள் பெறலாம்.தேசிய மற்றும் சர்வதேச தரத்திலானதொழில் முனைவோர் கல்விப் பயிற்சி,இளைஞர்களுக்கு வழங்கப்படும்.

அமைச்சகம், 2020க்குள், ஒரு கோடி பேருக்குதிறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க இலக்குநிர்ணயித்துள்ளது. இதற்காக, பிரதமர்திறன் மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து, 3,000 கோடி ரூபாய், மாநில அரசுகளுக்குஒதுக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, மாநிலங்களில் அமைக்கப்படும்திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள்,ஆய்வுக்கூடங்கள் மற்றும் பயிற்சிசாதனங்களின் தரம் உள்ளிட்டவைதொடர்பான வழி­காட்டு நெறிமுறைகள்,தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. மத்தியஅரசின் திட்டங்கள், அதகளவில், முதல்தலைமுறை தொழில் முனைவோரைஉருவாக்க உதவும். இவ்வாறு அவர்கூறினார்.

முதல் தலைமுறையினர்:

சிறப்பாக செயல்படும், 30 வயதிற்கு உட்பட்ட,முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு, 2017 ஜன., 16ல், மத்தியஅரசின் தொழில்முனைவோர் விரு­துகள்வழங்கப்படும் என, மத்திய திறன் மேம்பாட்டுஅமைச்சகம் அறிவித்துள்ளது.

'எமிஸ்' இணையதளத்தில் ஏகப்பட்ட தகவல் 'மிஸ்'

'எமிஸ்' இணையதளத்தை முறையாக பராமரிக்காமல், மாணவர்களின் தகவல்களை அடிக்கடி அனுப்புமாறு உத்தரவிடுவதால், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

      பொதுத்தேர்வு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர, ஆதார் எண் சேகரிக்குமாறு, அரசுத் தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதை, இம்மாத இறுதிக்குள் சேகரித்து, தகவல் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவால், ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாக புலம்புகின்றனர். மேலும், பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை மையம் (எமிஸ்) என்ற திட்டம், கடந்த, 2012ல் துவங்கப்பட்டது.இதில், அரசுப்பள்ளி மாணவர்களின் பெயர், வயது, ரத்த வகை, ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதிவேற்ற உத்தரவிடப்பட்டது. 

 

         இதற்கு, பள்ளி வாரியாக பிரத்யேக, பயனர் பெயர், கடவுச்சொல் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்களை, கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமே, ஒருங்கிணைத்து பார்வையிட முடியும். ஆனால், ஆன்லைன் பதிவேற்றம் செய்வதில் உள்ள குளறுபடிகளால், மாணவர்களின் தகவல்கள் முழுமையாக திரட்டுவதில் சிக்கல் நீடிக்கிறது.இதனால், அனைத்து கல்வி சார் செயல்பாடுகளுக்கும், மாணவர்களின் தகவல்களை அளிக்குமாறு, அடிக்கடி கல்வித்துறை சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. இதை திரட்டி அனுப்ப, ஆசிரியர்கள் படாதபாடு படுகின்றனர்.

         தற்போது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும் 14ம் தேதி, முன் அரையாண்டு தேர்வுகள் துவங்கவுள்ளன. இதற்கு பின், டிச., 7ம் தேதி, அரையாண்டு தேர்வு நடக்கிறது.தேர்வுப்பணி, விடைத்தாள் திருத்துதல் என, ஆசிரியர்கள் 'படுபிசி'யாக சுழன்று கொண்டிருப்பர். இந்நேரத்தில், ஆதார் எண் சேகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.இதுகுறித்து, அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:மாணவர்களின் ஆதார் எண், எமிஸ் இணையதளத்தில் உள்ளது. இதை, கல்வித்துறை அதிகாரிகள் முறையாக, 'அப்டேட்' செய்யாததால், பள்ளிகளில் இருந்து அடிக்கடி தகவல் அளிக்க உத்தரவிடுகின்றனர்.

         தேர்வு நேரத்தில், ஆதார் எண் சேகரித்தல், அட்டை இல்லாத மாணவர்களுக்கு முகாம் நடத்துதல் என, புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.இணைய வசதியில்லாத பள்ளிகளில், தனியார் பிரவுசிங் சென்டர்களை தேடி சென்று, தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. இதுபோன்ற தகவல் சேகரிப்பு பணிகளை, கல்வியாண்டு துவங்கும் போதே, முறையாக திட்டமிடாமல், அவசரகதியில் குறுகிய கால அவகாசத்தில் செய்வதால், பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இனிவரும் காலங்களிலாவது, ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத பணிகளை திணிக்காமல் இருக்க, நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நின்று கொண்டே பாடம் நடத்த வேண்டுமா? - மனிதநேயமற்ற செயல் - VIKATAN

திருப்பூர் அரசுப் பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர், வகுப்பறைக்குள் செல்போனை பயன்படுத்தி வந்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்புக்கு உள்ளானது. இதனை அடுத்து,  இனி பள்ளிக்கு செல்போன் எடுத்துவரக்கூடாது எனவும் மீறி எடுத்து வந்தால் அந்த போனை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தப் பிறகே வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்' எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

இதனை அடுத்து தற்போது வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பில், ஆசிரியர்கள் இனி நின்று கொண்டுதான் பாடம் நடத்த வேண்டும்; வகுப்பு நேரங்களில் அமர்ந்து பாடம் நடத்தக்கூடாது எனவும், உட்காரவேண்டிய தேவை இல்லாததால் வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நாற்காலிகளை அகற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். " உடல் நலப்பிரச்னைகளால் பாதிக்கப்பட்டோர், மாதவிடாய் காலங்களில் இருக்கும் ஆசிரியைகள் என பலரும் இதனால் பாதிக்கப்படுவர். ஏனெனில், ஒரு பாடவேளை என்பது 45 நிமிடங்கள் ஆகும். 45 நிமிடங்களும் ஆசிரியர்கள் நின்று கொண்டே பாடம் நடத்தினால், ஒவ்வொரு பாடவேளைக்கும் எவ்வளவு நேரம் நிற்க வேண்டும் என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தாலே நாளொன்றுக்கு ஒரு ஆசிரியர் சராசரியாக எவ்வளவு நேரம் நிற்க வேண்டும் என்பது தெரியும். இது மனிதநேயமற்ற செயல்" என ஆசிரியர்கள் என வேதனை தெரிவித்துள்ளனர்.

துணைத்தேர்வு விடைத்தாள் இன்று நகல் பெறலாம்

அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதி, விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தோர், இன்று காலை, 10:00 மணி முதல், scan.tndge.in என்ற இணையதளத்தில், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம். 

நகல் பெற்றவர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு, இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை, பதிவிறக்கம் செய்து, நவ., 14 முதல், 15 வரை, மாலை, 5:00 மணிக்குள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது

சொத்து பத்திரங்களில் 'ஆதார்' எண்: அடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்

கறுப்பு பணம், கள்ள நோட்டு பிரச்னைக்கு தீர்வாக, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்த மத்திய அரசு, அடுத்த அதிரடியாக, சொத்து பத்திரங்களில், 'ஆதார்' எண் இணைப் பதற்கான வழிமுறைகளை ஆராய துவங்கி உள்ளது.

கறுப்பு பணம், கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. அடுத்தகட்டமாக, தங்க நகை விற்பனை, சொத்து பரிமாற்றத்திலும் அதிரடி கட்டுப்பாடுகள் வரலாம் என கூறப்படுகிறது.

சொத்து பத்திரங்களில் ஆதார் எண் சேர்ப்பதை கட்டாயமாக்கி, யார் பெயரில் எவ்வளவு அசையா சொத்து உள்ளது என்பதை கண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக 
கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் சட்ட அமலாக்கத் துக்காக உருவாக்கப்பட்ட, வரைவு விற்பனை பத்திர நகலில், விற்பவர், வாங்குபவர் இருவரும், ஆதார் மற்றும் பான் எண்களை குறிப்பிடுவது கட்டாயமாக் கப்பட்டு உள்ளது.

பரிமாற்றத்துக்கு வரும் சொத்துக்கள், யார் பெயரில் இருந்து யார் பெயருக்கு செல்கிறது என்பது, இதனால் வெளிச்சத்துக்கு வந்துவிடும். 

இதேபோல பரிமாற்றத்துக்கு வராமல், ஒரே நபர் பெயரில் நீண்ட காலமாக இருக்கும் சொத்துக்களின் பத்திரங்களி லும், ஆதார் எண்களை சேர்ப்பதற்கான கட்டுப்பாடு களை விதிக்க, மத்திய அரசு தயாராகி வருகிறது.

விற்பவர், வாங்குபவரின் நிலவரத்தை ஆதார் எண்ணை பயன்படுத்தி கண்காணிக்க இது உதவ லாம். மேலும் விற்பனைக்கு வராத சொத்துக்களை, கணக்கில்கொண்டு வரும் முயற்சியாக, அதிலும் ஆதார் எண் சேர்ப்பதை கட்டாயமாக்க போவதாக தெரிகிறது.

இதுகுறித்து, சட்ட வல்லுனரும், கேரள அரசின் ஆலோசகருமான ஷியாம் சுந்தர் கூறியதாவது:

சொத்து பத்திரங்களில் ஆதார் எண் சேர்ப்பதில்,சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. ஆனாலும், 

ஒவ்வொரு சொத்துக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்குவது, அரசின் நோக்கத்தை நிறைவேற்றும். சார் பதிவாளர் அலுவலகம், கிராமம், பகுதி, பதிவு செய்யப் பட்ட ஆண்டு ஆகியவற்றை உள்ளடக்கியதாக, பிரத்யேக எண் இருக்க வேண்டும்.

கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில், இத்திட்ட பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஆர்வம் காட்டாதது, முறைகேடுகளுக்கு வழிவகுப்ப தாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Service Record verification form for digitalization of SR

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!