Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 15 November 2016

Find All India Code with single app : • PNR Number(IRCTC) • STD Codes • IFSC, MICR Code • Pincode (india post) • Radio Stations • Trace vehicle number • Mobile Numbe Tracker

Find All India Code with single app :

• #SEARCH #ATM WHICH HAS CASH(மூலம் பணம் இருக்கும் ஏடிஎம்களை தெரிந்துகொள்ளலாம்!ATMKARO.in)
• #PNR Number(#IRCTC)
• #STD Codes
• #IFSC, MICR Code
• #SWIFT CODE
• #PASSPORT STATUS
• KNOW YOUR #PAN
• #Pincode (india post)
• #Radio Stations
• Trace #vehicle number
• Mobile Numbe Tracker
• National Voter's Service Portal
• Right to Information #RTI
• Indian Courts - Cause Status
• Status of Copyright Application
• Central Pension Accounting Office
• #AADHAR STATUS
• National Train Enquiry System

FORWARD TO YOUR FRIENDS AND GROUPS

#share more as much as you can

To Download This App Click the link Bellow

https://play.google.com/store/apps/details?id=code.india

To Download This App Click here

சிறப்பான சாதனை புரிந்த 31 குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது !! தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரும் விருது பெற்றனர்.

புதுடெல்லிபல்வேறு துறைகளில் சிறப்பான சாதனை புரிந்த 31 குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கினார். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 குழந்தைகளும் அடங்குவர்.தங்க பதக்கம்

கல்வி, கலாசாரம், கலை, விளையாட்டு, இசை போன்ற துறைகளில் சிறப்பான சாதனை புரிந்த குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் குழந்தைகள் தினத்தையொட்டி ஜனாதிபதி விருதுகள் வழங்கி வருகிறார்.5 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் இந்த விருதுக்கு தகுதி உடையவர்கள் ஆவர். ஒரு குழந்தைக்கு தங்க பதக்கமும், சான்றிதழும், ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்படும். மீதி 30 குழந்தைகளுக்கு வெள்ளி பதக்கமும், சான்றிதழும், ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்படும்.ஜனாதிபதி வழங்கினார்

அதுபோல், இந்த ஆண்டும் 31 குழந்தைகள் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். குழந்தைகள் தினத்தையொட்டி, நேற்று அவர்களுக்கு டெல்லியில் விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தியும் கலந்து கொண்டார்.பாராஒலிம்பிக் வீராங்கனையான 16 வயது ரேவதி நாய்கா, விளையாட்டு துறையில் சிறப்பான சாதனை புரிந்ததற்காக, தங்க பதக்கம் பெற்றார். செஸ் விளையாட்டில் சாதனை புரிந்த 9 வயதான தேவ் ஷா, இவ்விருது பெற்ற மிக இளவயது குழந்தை ஆவார்.தமிழக குழந்தைகள்

விருது பெற்ற குழந்தைகளில், தமிழ்நாட்டை சேர்ந்த 3 குழந்தைகளும் அடங்குவர். டேபிள் டென்னிஸ் வீராங்கனை சி.ஆர்.ஹம்சவர்த்தினி, செஸ் வீராங்கனை ரக்ஷிதா ரவி, வேளாண் அறிவியல் மற்றும் என்ஜினீயரிங்கில் சிறப்பான சாதனை புரிந்த சிறுவன் சா.சிவசூர்யா ஆகியோர்தான் விருது பெற்ற தமிழக குழந்தைகள் ஆவர்.ஹம்சவர்த்தினி, 1998–ம் ஆண்டு நவம்பர் 10–ந் தேதி பிறந்தார். தனது 13–வது வயதில், மத்திய அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றார். தற்போது, இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளார்.தெற்கு ஆசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டியிலும், எல் சல்வடார், கவுதமலா ஆகிய நாடுகள் மற்றும் மும்பையில் நடந்த போட்டிகளிலும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.செஸ்

செஸ் வீராங்கனை ரக்ஷிதா ரவி, 2005–ம் ஆண்டு ஏப்ரல் 24–ந் தேதி பிறந்தவர். இவர், டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். உலக இளைஞர் பிளிட்ஸ் செஸ் போட்டியில் வென்று உலக சாம்பியன் ஆனார். கிரீஸ் நாட்டில் நடைபெற்ற 10 வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டியில் தங்க பதக்கம் பெற்றார்.சா.சிவசூர்யா, 2001–ம் ஆண்டு ஜூலை 24–ந் தேதி பிறந்தவர். இவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முன்பு, ‘எரிமலை வெடிப்பு’ பற்றிய தனது கண்டுபிடிப்பை செய்து காட்டினார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறையில் அவரது கண்டுபிடிப்புக்காக தமிழக அரசிடம் முதல் பரிசு பெற்றார்.‘இளம் விஞ்ஞானி’, ‘வருங்கால கலாம்’ ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். ரஷிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால், 10 நாள் பயிற்சி வகுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

CRC level science exhibition topics !!

1. உடல்நலம்
2. தொழில்துறை
3. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
4. நிலையான சுற்றுச்சூழலுக்கான புதுப்பிக்கத் தக்க வளங்களைக் கண்டுபிடித்தல்
5. உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பில் புதுமைகள்

6.அன்றாட வாழ்வில் கணிதம் அடிப்படையிலான தீர்வுகள்

Primary level - 2 models or 2 projects

Upper primary level -2 models or 2 projects.

CRC level prizes.
1st prize - 400
2 nd prize- 300
3 rd prize - 200

Best school performance - 500

வந்துவிட்டது #Whatsapp Video Call!

வாட்ஸ்அப் தனது புதிய வீடியோ காலிங் சேவையை சில நாட்களுக்கு முன்பு பீட்டா பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியது. சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இன்று அனைத்து பயனாளர்களுக்கும் மொத்தம் 180 நாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் மற்றும் விண்டோஸ் ஆகிய மூன்று இயங்குதளங்களிலும் இந்த வீடியோ கால் வசதி இயங்கும். உங்கள் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்துவிட்டால் போதும். இந்த வசதியை நீங்கள்பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு 4.1 வெர்ஷன் முதலே இது இயங்கும்.வழக்கம்போலவே நீங்கள் பேச விரும்பும் நபரை, கான்டேக்ட் லிஸ்டில் தேர்வு செய்து, கால் செய்யலாம். அப்போது வாய்ஸ் கால் அல்லது வீடியோ கால் என இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும். அதில் வீடியோ கால் ஆப்ஷனை தேர்வு செய்தால் போதும். வீடியோ கால் சென்று விடும். அதே சமயம் நீங்கள் அழைக்கும் நபரும், தனது வாட்ஸ்அப்பை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் நீங்கள் கால் செய்யும் போதே, அதனைகாட்டிவிடும். அத்துடன் நீங்கள் கால் செய்யும் நபரின் மொபைல், வீடியோ காலிங் வசதிக்கு சப்போர்ட் செய்ய வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் ஓகே என்றால், வீடியோ காலிங் ரெடி. உங்கள் நெட்வொர்க் இணைப்பை பொறுத்து வீடியோ காலின் தரம் இருக்கும்.கூகுள் டுயோ, ஐ.எம்.ஓ, ஸ்கைப், ஃபேஸ்டைம் போலவே, பெரிய வித்தியாசம் எதுவும் இல்லாமல் இருக்கிறது வாட்ஸ்அப் வீடியோ கால். வாட்ஸ்அப் சாட் போலவே இதுவும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டது.

வீடியோகால் பேசிக் கொண்டிருக்கும் போதே, முன் மற்றும் பின் கேமராவை மாற்றிக் கொள்ளவும், ஒலி அளவை மியூட் செய்யவும் முடியும். அதே சமயம் பல போன்களில் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்து வைத்திருந்தாலும் கூட, 'இந்த போன் வீடியோ காலிங் வசதிக்கு சப்போர்ட் செய்யாது' எனக் காட்டுவது எரிச்சல். இதற்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் கருத்துக்களை அடுத்து இன்னும் இதனை மேம்படுத்துவோம் எனவும் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. பார்ப்போம்!சாதாரண இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்பாக இருந்த வாட்ஸ்அப், அடுத்து வாய்ஸ் காலிங் வசதியை வெளியிட்டது. தற்போது வீடியோ காலிங் ஆப்ஸ்களுக்கு வரவேற்பு பெருகிவரும் நிலையில் அதனையும் இணைத்துள்ளது. ஏற்கனவே வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு கூடுதல் ஆப்ஷன். அதேசமயம் மற்ற போட்டியாளர்களை சமாளித்து வீடியோ காலிங் ஸ்பெஷலிஸ்ட்டாக வாட்ஸ்அப் மாறுமா என்பது சந்தேகம்தான்.

அங்கன்வாடி மைய குழந்தைக்கும் இனி 'ஆதார்' எண்பெறலாம்.

அங்கன்வாடி மையங்களில் படிக்கும், 5 வயதுக்கு உட்பட்டகுழந்தைகளுக்கும் இனி, 'ஆதார் ' பதிவுகளை மேற்கொள்ள வசதியாக, அதற்கான முகவர்களை நியமிக்க, 'டெண்டர்' கோரப்பட்டு உள்ளது.இது குறித்து, தகவல் தொழில் நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், ஆதார் அட்டை பதிவு பணிகளை, அக்., முதல், தமிழக அரசு ஏற்றுள்ளது.
அதற்கு முன் வரை, பள்ளிகளில், ஆதார் பதிவை மேற்கொண்டு வந்த மத்திய அரசு நிறுவனமான, 'பெல்' அப்பணிகளை நிறுத்தியது. அதனால், மீதமுள்ள மாணவர்களுக்கு, ஆதார் பதிவை மேற்கொள்ளும் பணிகள், சமீபத்தில் துவங்கின. இந்நிலையில், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கும், ஆதார் பதிவு செய்வது பற்றிய கருத்து, முன் வைக்கப்பட்டது. அதனால், பள்ளிகளில் விடுபட்ட மாணவர்களுக்கான ஆதார் பணி, அங்கன்வாடி மையங்களுடன் சேர்த்து நடத்தப்பட உள்ளது. இனி, அங்கன்வாடி மையங்களில் உள்ள, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், புதிதாக சேரும் குழந்தைகள் என, 50 லட்சம் குழந்தைகளுக்கு, தொடர்ச்சியாக ஆதார் பதிவு மேற்கொள்ளப்படும்.

இதற்கு தகுதியுடைய, யு.ஐ.டி.ஏ.ஐ., அங்கீகாரம் பெற்ற மற்றும் ஆதார் நிறுவனத்தின் சான்று பெற்ற முகவர்களை தேர்வு செய்ய, அரசு டெண்டர் கோரியுள்ளது. இதற்கான ஆவணத்தை, www.tnega.in என்ற இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்து, டிச., 13க்குள் முகவர்களை சமர்ப்பிக்கலாம். அதன்பின், தமிழகத்தில், பிறந்த குழந்தை முதல் அனைத்து வயதினருக்கும், ஆதார் கிடைத்துவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

2017-18 ஆண்டு 10ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு நடைபெறும்: பிரகாஷ் ஜவடேகர்

10ம் வகுப்பிற்கான சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்திற்கான பொதுதேர்வு 2017-2018 ம் கல்வியாண்டில் கட்டாயம் நடைபெறும் என மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற நவ.24 அவகாசம் நீட்டிப்பு!!!

பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை அரசு அறிவித்துள்ள இடங்களில் பயன்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசம் நவம்பர் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரூ.500, 1000 நோட்டுக்களை அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள், டோல்கேட்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்திக் 
கொள்வதற்கான அவகாசம் 2வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே போன்று வங்கிகளில் இருந்து எடுப்பதற்கான தொகையின் அளவும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.


புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம்:


* புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.500 நோட்டுக்களை மத்திய அரசு நேற்று (நவ.,13) அறிமுகம் செய்தது. இந்த நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்த பிறகு வங்கிகளில் ஏற்பட்டுள்ள பண தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* ஏடிஎம்.,களில் நாள்தோறும் எடுத்துக் கொள்ளும் தொகையின் அளவு ரூ.2000 லிருந்து ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான அளவும் ரூ.4000 லிருந்து ரூ.4500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வாரத்திற்கு வங்கிகளில் இருந்து எடுத்துக் கொள்ளும் பணத்தின் அளவையும் ரூ.20,000 லிருந்து ரூ.24,000 ஆக உயர்த்துமாறு மத்திய அரசை வங்கிகள் கேட்டுள்ளன. பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு வங்கிகளில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* கறுப்பு பணம் மற்றும் வரிஏய்ப்பை ஒழிப்பதற்காக ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெற்ற விவகாரம் தொடர்பாக நேற்று நள்ளிரவில் பிரதமர் மோடி, அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

* வாபஸ் பெறப்பட்ட பழைய நோட்டுக்களை மாற்றி கொள்வதற்கும், அதற்கு இணையான தொகையை பெற்றுக் கொள்வதற்கும் டிசம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த போதிலும் கடந்த வாரம் வங்கிகள் மற்றும் ஏடிஎம்., முன் நீண்டவரிசையில் மக்கள் காத்திருந்தனர். 80 சதவீதத்திற்கும் அதிகமாக புழக்கத்தில் இருந்த ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதன் மூலம் பலரும் கையில் பணம் இல்லாமல் தவித்து வந்தனர்.

* நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் ஏடிஎம்.,கள் உள்ளன. ஆனால் 60 சதவீதம் ஏடிஎம்.,களில் மட்டுமே பணம் எடுக்க முடிகிறது. பலவற்றில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.2000 நோட்டுகளுக்கு ஏற்றவாறு இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

* ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் எடுக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது. நேற்று மாலை வரை எஸ்பிஐ.,யில் மட்டும் ரூ.75,945 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

* கோவாவில் நேற்று பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ஊழலுக்கு எதிராக போராடவே நாட்டு மக்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதற்காக உயிருக்கு ஆபத்தான சூழலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என்றார். எனக்கு எதிராக சக்திகளை பிரயோகிப்பார்கள். என்னை அவர்கள் வாழ விட மாட்டார்கள் என எனக்கு தெரியும். அவர்கள் என்னை அழிக்கவும் நினைக்கலாம். ஏனெனில் 70 ஆண்டுகளாக கொள்ளையடித்த அவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆனால் நான் எதற்கும் தயாராக உள்ளேன் என உணர்ச்சி பூர்வமாக பேசினார்.

* ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. காங்., அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர், பிரதமர் மோடி சாமானிய மக்களை துன்புறுத்துவதாக தெரிவித்தனர். ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்ட விவகாரத்தை பார்லி.,யில் எழுப்புவது தொடர்பாக காங்கிரஸ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆகியன இன்று கூடி ஆலோசிக்க உள்ளன. இது தொடர்பாக சிபிஎம்., கட்சியின் சீத்தாராம் யெச்சூரியிடமும் மம்தா நேற்று பேசி உள்ளார்.

* ஆனால் நிபுணர்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். மக்கள் இதனால் சிறிது காலம் கஷ்டப்படுவார்கள், புதிய நோட்டுக்கள் முழுமையாக புழக்கத்திற்கு வந்து விட்டால் இந்த கஷ்டங்கள் சரியாகி விடும் என தெரிவித்துள்ளனர். அதே சமயம் ஜிடிபி.,யை நீண்ட காலம் இந்த செயல்திட்டம் ஊக்குவிக்கும் என தெரிவித்துள்ளனர்.

CCE - 5TH TO 10 TH STD WORKSHEET TAMIL ANSWER KEY..

ஈடு செய் விடுப்பு விவரம் 2016-17

CCE - WORK SHEET SCHEDULE..


அரசுப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் சாதனை *1000 சதுர அடியில் பிரமாண்டமான நேருவின் ஓவியம் வரைந்து சாதனை

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், R.வெங்கடாபுரம் அரசு ஆதிந ஆரம்பப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இன்று *(14-11-2016) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு* நம்முடைய பாரதத்தின் முன்னாள் மற்றும் முதல் பிரதமர் திரு *ஜவஹர்லால் நேரு* அவர்களின் ஓவியம் *1000 சதுர அடியில் பிரமாண்டமான* வகையில் வரைந்து சாதனை புரிந்தனர்.

இந்த ஓவியம் *இந்திய வரைபடத்தில்*வரைந்து அசத்தினார்கள். உடன் பத்து பள்ளி மாணவர்கள் *நேருவின் முகமூடி அணிந்து வந்தும் அசத்தினார்கள்*.

நன்றியுடன்
ஜானகிராமன் தேவராசன்.

2017-ம் ஆண்டில் 22 நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு

விரைவில் 'TET' - தேர்வுக்கு புது வினாத்தாள் பல்கலைகளை ஈடுபடுத்த திட்டம்


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சிக்கல் தீர்ந்து விட்ட நிலையில், பி.எட்., கல்லுாரிகள் மூலம் புதிய வினாத்தாள் தயாரிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. 

ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு, 2013க்கு பின் நடக்கவில்லை. தேர்வுக்கு பின், தேர்ச்சி மதிப்பெண்ணில் மாற்றம் கொண்டு வந்ததும், சாதி, மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வந்ததும் சிக்கலை ஏற்படுத்தியது. தேர்வு எழுதியோர், உச்ச நீதிமன்றம் வரை சென்றதால், மூன்று ஆண்டுகளாக, 'டெட்' தேர்வு நடத்தப்படவில்லை.

இந்நிலையில், 'டெட்' தேர்வு வழக்கு, கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும், 'வெயிட்டேஜ்' முறை செல்லும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் விரைவில், 'டெட்' தேர்வை, எவ்வித குழப்பமுமின்றி நடத்த, தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆங்கிலத்தில் பேசுதல், எழுதுதல் மற்றும் மாணவர்களுக்கு அவற்றை சரளமாக பேச சொல்லித் தருவதில் சிக்கல் உள்ளது. எனவே, இனி வரும் காலங்களில், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, இந்த சிக்கல் இருக்கக் கூடாது; தனியார் பள்ளி ஆசிரியர்கள் போல் இருக்க வேண்டும் என, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, புதிய தரமான வினாத்தாள் தயாரிப்புக்காக, பி.எட்., கல்லுாரிகள் மற்றும் பல்கலை மூலம் கமிட்டி அமைக்க, கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. 

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தினமும் பரீட்சை: பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு

குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:  

பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் அறிவியல் மற்றும் கணித பெட்டகம் (Science Kit, Maths Kit) வழங்கப்படும்.  மேலும், இன்றிலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த 1 முதல் 9ம் வகுப்பு வரையில் பயிற்சித் தாள்(Work Sheet) பள்ளிகளுக்கு தினமும் இணைய தளம் மூலம் அனுப்பப்படும்.

அதன் மூலம் அந்த மாணவர்களின் கற்றல் திறன் சோதிக்கப்படும். இந்த பயிற்சித் தாளில் 10 கேள்விகள் இடம் பெறும். இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. 

தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 1 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி(All Pass) என்பது தொடரும். 

தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு எழுதிய மாணவர்கள்...தவிப்பு:பல ஆண்டுகளாக உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிப்பு

தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தவிக்கின்றனர். மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க மத்திய அரசு தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வு நடத்தி உதவித்தொகை வழங்குகிறது. 

இத்தேர்வை எழுத 7 ம் வகுப்பில் எஸ்.சி.,-எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள், மற்றவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 6,695 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 8 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தலா ரூ.6 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.24 ஆயிரம் வழங்கப்படும். இந்த தொகை வழங்குவதற்காக மாணவர்களிடம் வங்கி சேமிப்பு கணக்கு எண் பெறப்பட்டது. 

சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் தேர்ச்சி பெற்ற பல மாணவர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தவிக்கின்றனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலையும், அவர்களது சேமிப்பு கணக்கு எண்ணையும் அனுப்பி விடுவோம். அவர்கள் நேரடியாக மாணவர்கள் கணக்கில் உதவித்தொகைக்குரிய பணத்தை செலுத்திவிடுவர். உதவித்தொகை வராதது குறித்து எங்களுக்கு தெரியாது, என்றார்.

2017-ம் ஆண்டில் 22 நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு

அடுத்து வரும் 2017-ம்ஆண்டுக்கு 22 நாட்கள் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 6 அரசு விடுமுறை தினங்கள் திங்கட்கிழமைகளில் வருகின்றன.மத்திய அரசின் செலாவணி முறிச்சட்டத்தின் படி, ஆண்டு தோறும் அரசு விடுமுறை தினங்களை, தமிழக அரசு அறிவிக்கிறது. 
இதன்படி இந்தாண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் தொடர்பான அரசாணை திங்கட்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் சிஎச். வித்யாசாகர் ராவின் ஒப்புதல் பெற்று, தமிழக தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.இதில் கூறியிருப்பதாவது: செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் வரும் 2017-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதன் படி, ஏப்ரல் 1-ம் தேதி முழு ஆண்டு வங்கிக்கணக்கு முடிவு நீங்கலாக, அனைத்து சனிக்கிழமைக்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அறிவிக்கப்பட்ட பாது விடுமுறை தினங்களில்அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலங்களும் மூடப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வரும் 2017-ம் ஆண்டை பொறுத்தவரை, மேதினம் உள்ளிட்ட 6 விடுமுறை தினங்கள் திங்கட்கிழமைகளில் வருகின்றன. இதன் மூலம், சனி, ஞாயிறு, திங்கள் என தொடர் விடுமுறை 6 முறை வருகிறது.தமிழ்ப்புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, மிலாடிநபி ஆகியவை வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. அடுத்தடுத்த நாட்களும் விடுமுறை என்பதால், தொடர் விடுமுறை வருகிறது. இது தவிர, ஜனவரி மாதம் 14,15,16, செப்டம்பரில்29,30 மற்றும் அக்டோபர் 1,2 தேதிகள் தொடர் விடுமுறையாக வருகின்றன. இவை தவிர, 8 அரசு விடுமுறைகள், வழக்கமான விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.

நவ.24 நள்ளிரவு வரை 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகும்: மத்திய அரசு அறிவிப்பு.

வரும் 24-ஆம் தேதி வரை பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அரசு மருத்துவமனை, சுங்கச்சாவடிகள், பெட்ரோல் பங்குகளில்  பெற்றுக் கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் நவம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவு 12 மணியோடு செல்லுபடியாகாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். அதே நேரம், கடந்த வெள்ளிக்கிழமை வரை பெட்ரோல் பங்குகள், அரசு மருத்துவமனைகள், சுங்கச்சாவடிகளில் அவை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது. பிறகு இது இன்று இரவு (நவம்பர் 14) நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள் மத்தியில் இன்னமும் பணப் புழக்கம் அதிகரிக்காததால், இம்மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு வரை அரசு மருத்துவமனை, சுங்கச்சாவடிகள், பெட்ரோல் பங்குகளில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த் தாஸ் இன்று காலை தில்லியில் அறிவித்தார்.

நாட்டில் நிலவும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பிரச்னை குறித்து மத்திய ‌அமைச்சர்கள்‌ மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். நேற்று நள்ளிரவு நடத்தப்பட்ட அவசர ஆலோசனையின்போது, இந்த முடிவு எட்டப்பட்தாக தெரிகிறது.

அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், சுங்கச்சாவடிகளில் பழைய ‌‌ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதற்‌‌கான அறிவிப்பு இன்று இரவுடன் காலாவதியாக‌ இருந்‌த நிலையில் அது மேலும் 10 நாட்களுக்கு (நவ 24) நீட்டிக்கப்படுவதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

இதன் மூலம் மின்சார கட்டணம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரிகள் உள்ளிட்டவற்றை பழைய 500, 1000 ரூபாய் ஆக செலுத்தவும் 10 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கி தொடர்பாளர்களின் பணக் கையிருப்பு வரம்பு 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு பணம் கிடைப்பது எளிதாகும் என்று கூறினார். நடப்புக் கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் ஒரே நேரத்தில் 50 ஆயிரம் ரூபாயை வங்கியில் இருந்து எடுக்கவும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!