Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 17 November 2016

2013-14 AEEO அலுவலகத்தில் தணிக்கைச் செய்து உறுதி செய்யப்பட்ட AlC Slip வைத்து P.F முன்பணம் பெறலாம் என்பதன் அரசு கடிதம்


தொடக்க கல்வி - பணிப்பதிவேட்டில் உடனுக்குடன் பதிவு செய்தல் அறிவுரை வழங்குதல் - இயக்குநர் செயல்முறைகள்..

DSE PROCEEDINGS- 2012-13 English BT Regularsation Order

CCE -WORK SHEET தேர்வு வரும் வாரங்களில் எப்போது நடைபெறும்?எவ்வாறு மதிப்பீடு செய்வது?

TIME TABLE 

🌻14.11.16 to 18.11.16-முதல் வாரத் தேர்வு. 

🌻 21.11.16 to 25.11.16- இரண்டாம்வாரத்தேர்வு. 

🌻 28.11.16 to 02.12.16 - மூன்றாம் வாரத்தேர்வு 

🌻 05.12.16 to 08.12.16 - நான்காம் வாரத்தேர்வு. 

ஒவ்வொரு வாரமும் 

ஒவ்வொரு நாளும் 

ஒவ்வொரு பாடத்தில் தேர்வு 

வினாத்தாட்களை ஒவ்வொரு வாரத்திற்கும் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் 

தேர்வு நேரம்: பி.ப.3.00 to 4.00 

விடைத்தாள்களை அப்பொழுதே திருத்தி உரிய படிவத்தில் வகுப்பு வாரியாக,பாட வாரியாக,ஒவ்வொரு கேள்விக்கும் தவறான விடையளித்தவர்கள் எத்தனை பேர் என்ற விபரங்கள் உடனே குறிக்கப்பட  வேண்டும். 

இதனை பார்வையிட குழு அமைக்கப்பட்டுள்ளது

ரயில்வேயில் 23,801 உதவி லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..!

இந்திய ரயில்வேயில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 23 ஆயிரத்து 801 உதவி லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் கிரேடு 3 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

விளம்பரம் எண்: 01/2016

அமைப்பின் பெயர்: ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் (ஆர்ஆர்பி)

பணி: உதவி லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் கிரேடு 3 (Assistant Loco Pilot (ALP) & Technician Grade 3)

மொத்த காலியிடங்கள்: 23,801

வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் இதர தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு வாரியம் வாரியான காலியிடங்கள் விவரம் மற்றும் இணையதள ஐடி:

கொல்கத்தா - 2038 (www.rrbkolkata.gov.in)

பெங்களூர் - 1172 (www.rrbbnc.gov.in)

அஜ்மீர் - 771 www.rrbajmer.org)

அகமதாபாத் - 546 www.rrbahmedabad.gov.in)

அலகாபாத் - 1527 www.rrbald.gov.in)

புவனேஸ்வர் - 1538 www.rrbbbs.gov.in)

போபால் - 326  www.rrbbpl.nic.in)

பிலாஸ்பூர் - 1680 www.rrbbbs.gov.in)

சென்னை - 1666 www.rrbchennai.gov.in)

கோரக்பூர் - 78 www.rrbgkp.gov.in)

சண்டிகர் - 1161 www.rrbcdg.gov.in)

கவுகாத்தி - 538 www.rrbguwahati.gov.in)

ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் - 475 www.rrbjammu.nic.in)

மால்டா - 373 www.rrbmalda.gov.in)

செகந்திராபாத் - 2839 www.rrbsecunderabad.nic.in)

மும்பை - 4155 www.rrbmumbai.gov.in)

முசாபார்பூர் - 1153 www.rrbmuzaffarpur.gov.in)

சிலிகுரி - 345 www.rrbsiliguri.org)

ராஞ்சி - 2621 www.rrbranchi.org)

திருவனந்தபுரம் - 294 www.rrbthiruvananthapuram.gov.in)

பாட்னா RRB 1271 (www.rrbpatna.gov.in)

மேலும் இதுகுறித்து முழுமையான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை பல்கலை தேர்வு டிசம்பர் 10ல் துவக்கம்.

தொலைநிலை கல்வி தேர்வுகள், டிசம்பர், 10ல் துவங்கும்' என, சென்னை பல்கலையின் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பல்லை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, திருமகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளநிலை, முதுநிலை, தொழில் படிப்பு,டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள், டிச., 10ல் துவங்கும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், தேர்வுகள் நடக்கும்.டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புக்கு, சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். ஹால் டிக்கெட், டிச., 3ல், பல்கலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வுக்கான முழு கால அட்டவணை மற்றும் தேர்வு மைய விபரத்தை,www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..

CCE Worksheet Exam Guidelines Proceeding - 4 க்கு குறைவான விடையளித்த மாணவர்களுக்கு குறைதீர்கற்பித்தல் உறுதி செய்ய வேண்டும் !!

10 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாட்களுக்கான In-service -KRP Training - ஏற்காட்டில் நடைபெற்றது

அனைவருக்கும் இடை நிலைக் கல்வித்திட்டத்தின் (RMSA) வழியாக , 9 மற்றும் 10 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாட்களுக்கான பாடப் பொருள் சார்ந்த பணியிடைப் பயிற்சி (In-service -Training), இரண்டாம் கட்டமாக வழங்கப்பட இருக்கின்றது.

அதன் முதல் பணியாக Key Resource Persons பயிற்சி ஏற்காட்டில் நடைபெற்றது.அங்கு கணக்கு,அறிவியல் பாடங்களுக்காகப் பயிற்சி எடுத்து வந்தவர்களை முதன்மைக் கருத்தாளர்களாகக் கொண்டு,மாநிலம் முழுவதும் 8 மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் 4 /5 மாவட்டங்கள் இணைத்து , ஒவ்வொரு கல்வி மாவட்டத்தில் இருந்தும் கணக்கு,அறிவியல் பாடம் கற்பிக்கும் 5,5 ஆக மொத்தம் 10 ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு 3 நாள் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியின் நோக்கம் ஆசிரியர்கள் தங்கள் பாடங்களில் பாடப்பொருளில் தெளிவாக புரிந்துகொண்டு, 6 முதல் 10 வகுப்பு வரை , பாடங்களுக்கு இடையேயுள்ள தொடர்பை அறிந்து, CONTOUR MAPPING and CONCEPT MAPPING செய்வதும் அதைத் தங்கள் மாணவர்களுக்கு திறம்பட கற்பித்து மாணவர்களைப் புரிதலோடு படிப்பதற்கு வழிகாட்டவும்,துணை நிற்கவும் ஆகும்.அதே போன்று அவர்களை சிந்திக்கத் தூண்டுவதாக, LOTS (lower Order Thinking Skill) questions , HOTS ( Higher Order Thinking Skill) questions இவற்றைத் தயார் செய்து,வெறும் பாடப் புத்தகப் பின்புறம் உள்ள வினாக்களை மட்டும் படித்து,தேர்வுக்குத் தயாராகும் மாணாக்கர்களாக இல்லாமல் வாழ்க்கையில் பயன்படுத்தும் நடைமுறைகளாக உணர்ந்து தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள ஏதுவாக உருவாக்கப்பட்டப் பயிற்சி இது.மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் கருத்து வரைபடங்கள் தயாரித்த பின்னர் அவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்திட்டங்கள் அல்லது செயல்பாடுகள் Activities அமைத்ததும் இப்பயிற்சியின் ஒரு பகுதியாகும். நம் தமிழக மாணவர்களை நாடு தழுவிய திறன் மேம்பட்ட மாணாக்கர்களாக உருவாக்க முன்னெடுத்த முயற்சியே இது. இது NCF-2005 இன் அடிப்படையில் ,NCERT Syllabus ,நமது சமச்சீர் கல்வி பாட SCERT Syllabus இரண்டையும் ஒப்பிட்டு தயாரித்த CONTOUR MAPPING and CONCEPT MAPPING,LOTS (lower Order Thinking Skill) questions ,HOTS ( Higher Order Thinking Skill) questions, Activities....ஆகும். அப்படிப் பார்க்கையில்,6 முதல் 10 வகுப்புகள் வரை கணக்கில் 6 தலைப்புகளே இடம் பெறுகின்றன. அவை , 
1.எண்ணியல், (Number System)
2.இயற்கணிதம், (Algebra)
3. வாழ்க்கைக் கணக்குகள்,(Life Maths) 
4.அளவியல்,(Mensuration)
5.வடிவியல் (Geometry)
6.புள்ளி விவரங்களைக் கையாளுதல் (Data Handling) ஆகியன.இவற்றை மையமாகக் கொண்டுதான் அனைத்து வகுப்புகளிலும் கணக்குகள் பிரித்து பாட வாரியாகத் தரப்பட்டுள்ளன.
அதே போன்று அறிவியல் பாடத்தை எடுத்துக் கொண்டால் மொத்தம் 7 தலைப்புகளின் கீழ் அனைத்துப் பாடங்களும் வந்து விடுகின்றன. அவை முறையே,
1.உணவு( Food)
2. இருப்பிடம்( Living World)
3. பருப்பொருள்கள்(Materials)
4.பொருள்களின் இயக்கம்( Motion)
5. மின்னோட்டவியல் (Electricity)
6. இயற்கை வளங்களும் அவற்றின் பாதுகாப்பும் (Natural Phenomena) 
7. Matters ஆகியன.இவற்றை மையமாகக் கொண்டுதான் அனைத்து வகுப்புகளிலும் அறிவியல் பாடங்கள் பாட வாரியாகத் தரப்பட்டுள்ளன.
இவற்றிற்கான திருப்பூர் மண்டல அளவிலானப் பயிற்சி ஈரோடு,நீலகிரி,திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 70 ஆசிரியர்களுக்கு (7 கல்வி மாவட்டங்கள்) நடைபெற்றது . பயிற்சியை நடத்தும் பொருட்டு நான் அவர்களோடே 3 நாட்களும் உடனிருந்து தொகுக்கப்பட்ட CONTOUR MAPPING and CONCEPT MAPPING,LOTS (lower Order Thinking Skill) questions ,HOTS ( Higher Order Thinking Skill) questions, Activities...இவற்றோடே திரும்பினேன்.நன்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் புரொபஷனல் கல்லூரி குழுவிற்கும்...

1000 ரூபாய்க்கு ஜியோ ஸ்மார்ட்போன்; அடுத்த ஆஃபர் ரெடி


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த அதிரடி ஆஃபராக 1000 ரூபாய் விலையில் அன்லிமிடட் வீடியோ காலிங் மற்றும் வாய்ஸ் காலிங் வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளது.

குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சிம்மை கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. 3 மாதங்களுக்கு இலவசமாக 4ஜி இன்டர்நெட் சேவையை மற்றும் வாய்ஸ்கால்களை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டதால் ஜியோ சிம் வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர். இதனால், அந்நிறுவனம் குறுகிய நாட்களுக்குள்ளாகவே 25 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றது.

ஜியோவின் வருகை தொலைதொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இது போட்டி நிறுவனங்களுக்கு கடும் சவாலாக அமைந்தது.

அன்லிமிடட் காலிங்

இந்நிலையில், ஜியோவின் அடுத்த அதிரடி ஆஃபராக 1000 ரூபாய் விலையில் அன்லிமிடட் வீடியோ காலிங் ம்ற்றும் வாய்ஸ் காலிங் வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மாட் போன் VOLTE வசதியை கொண்டுள்ளதால் இந்த போன் மூலம் செய்யப்படும் அனைத்து கால்களும் இன்டர்நெட் வழியாகவே செல்லும் இதனால் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங்களுக்கு தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை.

100 மில்லியன் வாடிக்கையாளர்கள்

மேலும் இந்த நிறுவனம் 1500 விலையில் மற்றொரு ஸ்மாட் போனையும் அறிமுகப்படுத்த போவதாக தெரிகிறது. இந்த இருபோனிலும் உள்ள ஹார்ட்வேர் அம்சங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. ஏற்கனவே இந்நிறுவனம் 25மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்ற நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள 4ஜி போன் மூலம் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை கைபற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017 ல் வெளியிடு

இந்த போனை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் லாவா மற்றும் ஒரு சீன நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த போன் 2017 ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் செல்போன் மார்கெட்டில் மீண்டும் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என பேசப்படுகிறது

ஆதார் அட்டை: உதவி எண் அறிவிப்பு

ஆதார் அட்டை தொடர்பாக சந்தேகங்களுக்கு 1947 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு மக்கள் விளக்கம் பெறலாம் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

 நெட் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த நவம்பர் 24ம் தேதி கடைசி நாளாகும் என சி.பி.எஸ்.இ தகவல் தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் : முதல்வருக்கு கோரிக்கை

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையில்  மாத ஊதியத்தை வங்கி கணக்கில் வரவு வைக்காமல், ரொக்கமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் ஜெ.கணேசன் நேற்று முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:

மத்திய அரசு கடந்த வாரத்தில் அறிவித்த திட்டத்தால், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் வசமுள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகளில் தவம் கிடக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் வெகுவாக அலுவலக பணியும் பாதித்துள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குடியிருப்பதற்கு போதிய அரசு வாடகை குடியிருப்புகள் இல்லாததால், பெரும்பான்மையோர் தனியார் வீடுகளில்தான் குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளுக்கான வாடகையானது ஒவ்வொரு அரசு ஊழியரின் ஊதியத்திலும் ஏறத்தாழ 25 சதவீதம் அளவிற்கு உள்ளது.  

இதைத்தவிர, மாதந்தோறும் தங்களது குழந்தைகளுக்கான கல்வி கட்டணம், வீட்டிலுள்ள பெரியவர்களுக்கான மருத்துவ செலவு, வீட்டு மளிகை பொருட்களை வாங்குவதற்கான செலவு உள்ளிட்ட செலவுகளை செய்ய இயலாமல் உள்ளனர். தற்போது, சம்பளம் உள்ளிட்ட அனைத்து பணப்பட்டுவாடாக்களும் ஊழியர்களின் வங்கி கணக்கில்தான் வரவு வைக்கப்படுகின்றன. 

தற்போதுள்ள வங்கி கட்டுப்பாடுகளால், மத்திய அரசின் வருமான வரித்துறைக்கு கணக்குக்களை முறையாக சமர்ப்பித்து, ஊதியத்தை பெற்றுவரும் ஊழியர்கள் தங்களது பண இருப்பை பெற இயலாமல் போகும் நிலை உருவாகி உள்ளது.  இந்த சூழ்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையில் மாத ஊதியத்தை வங்கி கணக்கில் வரவு வைக்காமல், ரொக்கமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.

கபீர் புரஸ்கார் விருது விண்ணப்பம் வரவேற்பு

சமூக, வகுப்பு நல்லிணக்கத்திற்காக, தமிழக அரசால் வழங்கப்படும், 'கபீர் புரஸ்கார்' விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 இதற்கான விண்ணப்பங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்,www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு, வரும், 30க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!