Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 19 November 2016

ஆசிரியர் சம்பளத்தை மாணவர்களிடம் வசூலிக்கலாமா? – நீதிமன்றம் காட்டம்!

அரசு பள்ளிகளில் போதிய கழிவறை வசதி ஏற்படுத்தக் கோரிய வழக்கில், ஆசிரியர்களின் சம்பளத்தை மாணவர்களிடம் வசூலிக்கலாமா என உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.மேலும், கல்விச் செயலரின் அறிக்கையையும் நிராகரித்துள்ளது.

மதுரையை சேர்ந்த ஆனந்தராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2014ஆம் ஆண்டு தாக்கல்செய்த மனுவில், ‘‘தமிழகத்திலுள்ள 5,720 அரசு பள்ளிகளில் போதிய கழிவறை வசதி இல்லையென மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் சரிவர நடக்கவில்லை. இன்னும், கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்கள் திறந்தவெளியைத்தான் பயன்படுத்துகிறார்கள். எனவே, பள்ளிகளில் போதிய கழிப்பறை, தண்ணீர் வசதிகளை செய்து தர உத்தரவிடவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் விசாரித்தனர். அப்போது பள்ளி கல்வித்துறை இணைச்செயலர் நரேஷ், செயலர் சபிதாவின் அறிக்கையை தாக்கல் செய்தார். அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள்,செயலரின் அறிக்கையில் எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை. இந்த அறிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்தனர். அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் மின் கட்டணம் போதுமானதாக இல்லை. வணிக பயன்பாட்டு மின்சாரம் யூனிட் ரூ.5, பள்ளிக்கான கட்டணம் ரூ.5.75 என வசூலிக்கப்படுகிறது. வணிக பயன்பாட்டை விட பள்ளிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கிறீர்கள். இதை ஏன் இன்னும் சரி செய்யவில்லை? இதனால், ஒதுக்கீடு செய்யும் நிதி போதுமானதாக இல்லாததால், பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடமிருந்து செலுத்தப்படுகிறது. வேண்டுமானால் ஆசிரியர்களின் சம்பளத்தையும் மாணவர்களிடமே வசூலித்து கட்டலாமா? நீதிமன்றத்தில் உண்மை தகவல்களை தெரிவிக்கும் அரசு ஊழியர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள். இந்த நீதிமன்றத்தில் அரசு அதிகாரிகள் பயமில்லாமல் தைரியமாக தகவல்களை தெரிவிக்கலாம்.செயலரின் அறிக்கையில் உண்மைத்தன்மை இல்லை. அதை படிக்கும்போது சோர்வும், கண்ணீரும்தான் வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகளாகியும் திறந்தவெளியில் கழிவறையை பயன்படுத்தும் நிலை உள்ளது’’ என்று நீதிபதிகள்

இதனைத் தொடர்ந்து இந்த மனுவின் விசாரணையை வரும் நவம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கற்றலில் குறைபாடு:டிச.2 -இல் தேசிய மாநாடு.

கற்றலில் குறைபாடு (டிஸ்லெக்ஸியா) குறித்த தேசிய மாநாடு சென்னையில் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. 

 மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தின் சார்பில் சென்னை ஐஐடியில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. கற்றலில் குறைபாட்டை சிறு வயதிலேயே நிர்வகிப்பது, பள்ளி, கல்லூரி கல்வி, கற்றலில் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெரியோர்களை நிர்வகிப்பது, அவர்களின் திறனை வளர்ப்பது, தொழிற்பயிற்சி அளிப்பது, கற்றலில் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், குடும்பத்தினருக்கான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. 

ஆர்கிட்ஸ் அமைப்பின் தலைவர் டாக்டர்.கீத் ஓபராய், செகந்தரபாத் தேசிய மூளை வளர்ச்சி குறைபாடு உடையோர் தேசிய நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநர் டாக்டர் ஜெயந்தி நாராயண் உள்ளிட்ட பல வல்லுநர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் கலந்து கொள்ள பதிவு செய்வதற்கு 98411 10588 என்ற எண்ணில் அழைக்கலாம்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி காண் பருவம் முடித்தலுக்கான படிவம் மற்றும் தேவையான ஆவணங்கள்

CLICK HERE TO DOWNLOAD

மதிப்பு மிகு ஆசிரியர்கள்

அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் !!

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி தரத்தை மேம்படுத்த அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியால்

இணையதளம் கற்றல் மற்றும் கற்பித்தலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலக்கட்டத்துக்கு அவசியமானதாகவும், தவிர்க்க இயலாததாகவும் இணைய வழி கல்வி இருக்கிறது. 2017 - 2018ஆம் ஆண்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இணைய வழி கல்வி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள 3,354 அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வகுப்பறைகளை நேற்று அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் கடியம் ஸ்ரீஹரி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தரக ராம ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பஞ்சாரா மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இந்த தொடக்க விழா நடைபெற்றது. அப்போது பேசிய கடியம் ஸ்ரீஹரி, “தெலங்கானா அரசு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்றல் திறனை மேம்படுத்தவுள்ளது. எனவே வரும் காலங்களில் அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விழாவில் கலந்து கொண்ட பெகா சிஸ்டம்ஸ் நிறுவன இயக்குநர், "இத்திட்டம் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு தொடக்கமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் வகுப்பறைகள் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். இதன் மூலம் கற்பித்தல் மற்றும் கற்றல் முறை எளிமையாகும்.

கடந்த மாதம், தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் நடுநிலை பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், அதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5 Days Inservice Training for Maths Teachers

5 நாட்கள் பணியிடைப்பயிற்சி அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் - ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி பாட வாரியாக வெளியீடு.

பள்ளிகளில் தினந்தோறும் தேர்வு நடத்த உத்தரவு: செலவு அதிகரிப்பால் ஆசிரியர்கள் அவதி

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவுப்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தினந்தோறும் தேர்வுகளை நடத்த ஆகும் நிதிச் செலவுகளை யார் ஏற்பது என்பதில் ஆசிரியர்களிடையே குழப்பம் அதிகரித்து வருகிறது.

அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தினந்தோறும் ஒரு பாடத்துக்கு தேர்வு நடத்த வேண்டும் எனவும், இதற்கான வினாத்தாள் தமிழகம் முழுமைக்கும் சேர்த்து சென்னையில் தயாரிக்கப்பட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள், குறுவள மையங்கள் மூலமாக பள்ளிகளுக்கு அனுப்பப்படும் எனவும் அண்மையில் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வுகள் நவம்பர் 14 முதல் நடத்தப்பட வேண்டும், மாணவர்களுக்கு இத்தேர்வுகளை நடத்தி, அதன் நகலை உயர் அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்யும்போது காண்பிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து அந்தந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்டது.
அதில், அனைத்து குறுவள மையப் பொறுப்பாளர்களுக்கும் அந்த வாரத்துக்கான வினாத்தாள்கள், ஒரு குறுவள மையத்துக்கு ஒன்று வழங்கப்பட்டு அவற்றை நகல் எடுத்து அவர்களுக்குக் கீழ் உள்ள பள்ளிகளுக்கு அளித்து மாணவர்களுக்கு தனித்தனியாக தேர்வுகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

குறுவள மையங்களின் கீழ், பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ள நிலையில், அதன் பொறுப்பாளர்களிடம் வினாத் தாள்களைப் பெற்றுக் கொண்ட தலைமை ஆசிரியர்கள் அதை நகலெடுத்து மாணவர்களுக்கு வழங்க பள்ளியில் 50 மாணவர்கள் எனும் நிலையில் தினமும் இரு பக்கம் கொண்ட அந்த வினாத்தாளை நகலெடுத்து வழங்க ஆகும் செலவை யார் ஏற்பது எனக் கேட்கின்றனர்.

இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
பள்ளியின் கரும்பலகையில் எழுதித் தேர்வுகளை நடத்துங்கள் என கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஒரு பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள நிலையில், இரு ஆசிரியர்கள் பள்ளிகளில் இரு கரும் பலகைகளில் ஐந்து வகுப்புகளுக்கான வினாக்களை எழுதித் தேர்வு நடத்துவது எப்படி எனக் கேட்கின்றனர். ஒரு சில பள்ளிகளில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களை குழுவாக அமரச் செய்து ஒருவரிடம் வினாத்தாளை அளித்து, அதை மற்ற மாணவர்கள் பார்த்து எழுதிக் கொள்ளச் செய்கின்றனர்.

இதனால் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசே வினாத்தாள்களை தயாரித்து வாரந்தோறும் பள்ளிகளுக்கு வழங்கினால் ஆசிரியர்கள், தேர்வுகளை நடத்த எளிதாகும் என்கின்றனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், இத்திட்டம் அருமையானத் திட்டம் எனவும், தனியார் பள்ளிகளில் நடைபெறும் இதுபோன்ற கற்றல் கற்பித்தல் முறைகளை அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்தும் தமிழக அரசின் இத்திட்டம் பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்தனர்.
எனவே அரசு உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆசிரியர்களுக்கான பொருளாதார சுமையைக் குறைத்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

G.O.No.289 Dt: November 14, 2016 COMMITTEE - Expert Committee on the Demand for Continuing Old Pension Scheme – Extension of Term of the Expert Committee – Orders – Issued.

பள்ளிக்கல்வி - EMIS பதிவுகள் சரியாக உள்ளது என ஒவ்வொரு மாணவரிடமும் கையொப்பம் பெற வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்

அரசு பள்ளிகளில் கழிப்பறை... அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற் படுத்த தாக்கலான வழக்கில், 'மேலும் அவகா சம் தேவை' என்ற அரசுத்தரப்பு பதிலை ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 'ஏன் போர்க்கால நடவடிக்கை எடுக்கக்கூடாது?' என கேள்வி எழுப்பி விசாரணையை ஒத்தி வைத்தது.

மதுரை ஆனந்தராஜ் 2014ல் தாக்கல் செய்த மனு:

'தமிழகத்தில் 5720 பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை' என 2014 ஆக.,8 தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. திறந்தவெளியை கழிப் பிடமாக பயன்படுத்துவதால், மாணவர்களுக்கு தொற்று நோய் பரவுகிறது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும். பயனற்ற கழிப்பறைகளை பயன் பாட்டிற்கு கொண்டுவர மத்திய, மாநில அரசு களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.

உயர்நீதிமன்ற உத்தரவுபடி மதுரை,திண்டுக்கல், தஞ்சாவூர் மாவட்டங்களில் சில அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி களில் வழக்கறிஞர் கமிஷனர்கள் ஆய்வு செய்தனர். 

அவர்கள், 'மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கழிப்பறைகள், தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். பயன்பாட்டில் உள்ள கழிப்பறைகள் மோசமான நிலையில் உள்ளன. போதிய துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்' என்பன உட்பட பரிந்துரைகளை அறிக்கையாக தாக்கல் செய்தனர்.

'இக்குறைகளை நிவர்த்தி செய்யவும், பள்ளிக ளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் எத்தகைய உறுதியான நடவடிக்கை 

மேற்கொள்ளப்படும் என்பது பற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என நவ.,2ல் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நவ.,11ல் முதன்மைச் செயலரின் அறிக்கையை படித்த நீதிபதிகள், 'அறிக்கை ஒரே கதையாக உள்ளது. திட்டம் மற்றும் அதை நிறைவேற்று வதற்கான நிதி ஆதாரம் பற்றி எதுவும் குறிப்பிட வில்லை. அதை நிராகரிக்கிறோம்' என அதிருப் தியை வெளிப்படுத்தினர்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், 'பள்ளிகளில் கழிப்பறைஅமைக்க தேவையான நிதியை எவ்வாறு பெறுவது, எவ்வளவு காலத்திற்குள் நிறைவேற்றுவது என்பது பற்றிய தெளிவான, திடமான திட்ட அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் நவ.,18ல் தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.

நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, டி.கிருஷ்ணகுமார் கொண்ட அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது. முதன்மைச் செயலரின் அறிக்கையை அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் (ஏ.ஏ.ஜி.,) சமர்ப்பித்தார். இதை படித்து அதிருப்தி அடைந்த நீதிபதிகள், 'அறிக்கை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை,' என்றனர்.

மேலும் நடந்த விவாதம்:

நீதிபதிகள்: அரசுப் பள்ளிகளுக்கு மின்கட்டணமாக (சிறப்பு பயன்பாடு) யூனிட்டிற்கு 5.75 ரூபாய் வசூலிக் கப்படுகிறது. இது வணிக பயன்பாட்டிற்குரிய கட்டணத்தைவிட அதிகம். இதற்கு அரசு போதிய நிதி ஒதுக்குகிறதா?

அரசுப் பள்ளிகளில் 28 லட்சத்து 25 ஆயிரம் மாணவர் கள் படிக்கின்றனர். 20 பேருக்கு ஒன்று வீதம் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 288 கழிப்பறைகள் தேவை. ஆனால் சிறுநீர் கழிக்கக்கூடிய 66 ஆயிரத்து 610 கழிப்பறைகள்தான் உள்ளன. எவ்வளவு காலத்திற் குள் தேவையான கழிப்பறைகளை அரசு அமைக்கும்?

ஏ.ஏ.ஜி: இரண்டு ஆண்டுகளுக்குள்அமைக்கப்படும்.

நீதிபதிகள்: 'அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி களில் போதிய,முழுமையான கழிப்பறைகள் உள்ளன. நபார்டு திட்டம் மற்றும் தொண்டு நிறு வனங்கள் மூலம் கூடுதல் கழிப்பறைகள் கட்டப் பட்டுள்ளன' என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், 

இந்நீதிமன்றத்தில் ஏற்கனவே தவறான அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 

இந்நீதிமன்றத்தை தவறாக நடத்தியுள்ளார். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் 

உள்ளது.இது பற்றிய ஆய்வு செய்யவே இந் நீதிமன்றம் வழக்கறிஞர்களை, கமிஷனர்களாக நியமித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், இயற்கை உபாதையை போக்க, இன்னும் மரத்திற்கு அடியில் மாணவிகள் ஒதுங்கும் நிலை உள்ளது.

இந்நீதிமன்றம், 'அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தண்ணீர் வசதியுடன் கழிப்பறை ஏற்படுத்த வேண்டும்.பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என 2014 ல் உத்தர விட்டது. 'பள்ளிகளில் கழிப்பறை வசதி ஏற்ப டுத்த வேண்டும்' என உச்சநீதி மன்றம் 2012 ல் 

உத்தரவிட்டது.

சுனாமி மற்றும் வெள்ள பாதிப்பின்போது அரசு உடனடி நிவாரண நடவடிக்கை மேற்கொள்கி றது. இவ்விவகாரத்தில் போர்க்கால அடிப்படை யில், நடப்பு நிதியாண்டிலேயே ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?

ஏ.ஏ.ஜி.,: நடப்பு நிதியாண்டில் சாத்தியமில்லை. அடுத்த நிதியாண்டில் 75 ஆயிரம் கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 22 ஆயிரம் கழிப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப் பட்டு, பணி நடக்கிறது.

நீதிபதிகள்: பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் நவ.,22 ல்தெளிவான அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு விவாதம்நடந்தது.

ஐடிபிஐ வங்கியில் 500 எக்ஸ்யூட்டிவ் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஐடிபிஐ வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 500 எக்ஸ்யூட்டிவ் பணியிடங்களுகான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 
நிறுவனம்: IDBI Bank Ltd
மொத்த காலியிடங்கள்: 500
பணி: Executive
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700. மற்ற பிரிவினருக்கு ரூ.150.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2016
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.01.2017
மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு மையங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.idbi.com/pdf/careers/Detailed-Advertisement-for-post-of-Executive-2016.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி - நெகிழ வைத்தது நேரு ஸ்டேடியம்

கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், பள்ளி மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் விளையாடினர்.மாவட்ட பள்ளிக்கல்வி துறை, அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் மாற்றத்திறனாளி மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தன.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் ஒலிம்பிக் ஜோதி ஏந்தி வந்தனர். ரோட்டரி சங்க தலைவர் ரத்தினம், கமலேஷ் ரகேஜா, திட்ட தலைவர் சுரேஷ்குமார், துணை தலைவர் சுவாமிநாதன், செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை வென்றவர்கள்:

பெண்கள்:14 வயது, டென்னிஸ் பந்து எறிதல்: சுப்புலட்சுமி, பிரியங்கா, பூஜா.14 வயது - 50 மீ., ஓட்டம்: யுவபிரியா, குன்னத்துார்புதுார், அரசு பள்ளி, ரஞ்சனி, சவுமியா செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி.17வயது, டென்னில் பந்து எறிதல்:மாலதி, திவான்சாபுதுார் பள்ளி பொள்ளாச்சி; ஜெயஸ்ரீ, கிருஷ்ணம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாரணி, சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளி.17 வயது, 50 மீ.,பி.எஸ்.ஜி., கன்யா குருகுலம், மேனகா தேவி.19 வயது,எஸ்தர் ரூபி, வித்யா, ராமகிருஷ்ணாபுரம், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி; திலகவதி, காளப்பட்டி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.19 வயது, நின்றபடி நீளம் தாண்டுதல்: சவுந்தர்யா; ஸ்ரீதேவி, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, செல்வபுரம்; பிரியங்கா.19 வயது, 50 மீ., ஓட்டப்பந்தயம்:தர்ஷிணி, சி.சி.எம்.ஏ., ராஜவீதி, பிரியா, சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கவுசல்யா, காரமடை, அரசு மேல்நிலைப்பள்ளி.ஆண்கள்:14 வயது - நின்றபடி, நீளம் தாண்டுதல்ஆனந்த்ராஜ்; பி.என்.புதுார், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சந்தோஷ்; தம்பு, தம்பு மேல்நிலைப்பள்ளி.14 வயது - 50 மீ., ஓட்டப்பந்தயம்: ரங்கராஜ், இடையர்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி; சக்திவேல், சி.எம்.எஸ்., மேல்நிலைப்பள்ளி, நீலிக்கோணாம்பாளையம்; மதன்குமார், இடிகரை, அரசு மேல்நிலைப்பள்ளி.17 வயது - நின்றபடிநீளம் தாண்டுதல்: ஜெபர்சன், ஜான்சன், செயிண்ட் ஆண்டனி மேல்நிலைப்பள்ளி; ஸ்ரீஹரி.17 வயது - 50 மீ., ஓட்டம்: சூரியபிரகாஷ், தேவாங்க மேல்நிலைப்பள்ளி, இந்திரஜித், சேத்துமடை, முகில்வேந்தன், புலியகுளம் அரசு பள்ளி.19 வயது - நின்றபடி, நீளம் தாண்டுதல்(காது கேளாதோர்)விக்னேஷ், மிதுன், டி.என்.ஜி.ஆர்., மேல்நிலைப்பள்ளி; பாலகுமார், முத்துக்கவுண்டன்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி.19 வயது - நின்றபடி, நீளம் தாண்டுதல்: சந்தோஸ்குமார், சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி; அஜீத்குமார், செயிண்ட் மைக்கெல்ஸ் மேல்நிலைப்பள்ளி; இயசாக், அரசு மேல்நிலைப்பள்ளி, குனியமுத்துார்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் குரூப் 1 தேர்வு புத்தகங்களுடன் இலவச பயிற்சி வகுப்புகள் : தமிழக அரசு அறிவிப்பு

குரூப் 1 தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர்  என்.சுப்பையன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 1 பணிகளான துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் (வணிகவரி), மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 85 பணி காலியிடங்களுக்கு முதனிலை தேர்வு வருகிற 19.2.2017 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் இத்தேர்வுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் துவங்கப்பட உள்ளது. பயிற்சியில் பாடவாரியான வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பெறும். பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். எனவே, இப்போட்டி தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அதேபோன்று, பணியாளர் தேர்வாணையத்தால், போஸ்டல் அசிஸ்டென்ட், டேட்டா எண்டரி ஆபரேட்டர், லோயர் டிவிஷன் கிளர்க், கோர்ட் கிளர்க் உள்ளிட்ட 5134 பணி காலியிடங்களுக்கான தேர்வானது வருகிற 7.1.2017 முதல் 5.2.2017 வரை நடத்தப்பட உள்ளது.இந்த தேர்வுக்காக புத்தகங்கள் மற்றும் இலவச பயிற்சி வகுப்பு அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் துவங்கப்பட உள்ளது. தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளில் புகார் பெட்டி : ஆசிரியர்கள் திறக்க தடை

பள்ளிகளில் மாணவ, மாணவியர், தங்கள் குறைகளை தெரிவிக்க, புகார் பெட்டி வைக்கப்படுகிறது. 'அந்த பெட்டியை, தலைமை ஆசிரியர் மட்டுமே திறக்க வேண்டும்; மாணவர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆனால், பல பள்ளிகளில், ஆசிரியர்களே திறந்து, புகார்களை படித்து விடுகின்றனர். இதனால், ஆசிரியர்கள் மீது புகார் கூறியிருந்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பான புகார்கள், இப்போது பெட்டிகளில் குவிய துவங்கி உள்ளன.

இதையடுத்து, பள்ளி கல்வித் துறை இயக்குனர், கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு: புகார் பெட்டிகளை, தலைமை ஆசிரியர் மட்டுமே திறந்து பார்த்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் திறக்கக் கூடாது. பள்ளிகளில் ஆய்வு நடத்த வரும் கல்வி அதிகாரிகள், இது குறித்து விசாரித்து, பெட்டியை வேறு யாராவது திறந்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!