Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 20 November 2016

இனி வருமான வரி கிடையாது ??? மாேடியின் அடுத்தடுத்த அதிரடி..!!!

வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளபாெது பட்ஜெட்டில் வருமான வரி ரத்துசெய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள்தொிவிக்கின்றன. 

பழைய, 500 - - 1,000 ரூபாய் நோட்டுகள்செல்லாது, என அதிரடி அறிவிப்பால்கறுப்புப் பணத்தை வெளிக்காெண்டு வரமுடியும் என பிரதமர் மோடியின் எண்ணமாகஇருந்தது.  இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.எதிர்க்கட்சிகள் இதைப் பெரிதாக்கிஅமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றநடவடிக்கைகள் முடக்கப்பட்டன.

     நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல, எதையும்செய்யத் தயாராக இருப்பதாக மோடிதிட்டவட்டமாக தொிவித்துளளாார்.சமீபத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, 'இன்னும் பல திட்டங்கள் என்மனதில் உள்ளன' என,சொல்லியிருக்கிறார்.

அது என்ன புது திட்டம்? அரசியல்வாதிகள்,அதிகாரிகள் வட்டாரங்களில் கூறப்படுவதுஎன்னவென்றால், வரும் பிப்ரவரி மாதம்அரசு சமர்ப்பிக்க உள்ள மத்திய பட்ஜெட்டில்,வருமான வரியை ரத்துசெய்யப்பாேவதாகவும்,  அதற்கு பதிலாகஇரண்டு வரிகள் அமலில்வரப்பாேவதாகவும் தகவல்கள்வெளியாகியுள்ளன.

இந்த திட்டங்கள் அமலில் வந்தவுடன், வங்கிமூலமாக வாங்கும் பொருட்களுக்கு வரி.-இதை, 'பேங்கிங் டிரான் சாக்சன்' வரிஎன்கின்றனர். இன்னொன்று: சரக்கு மற்றும்சேவை வரி. இந்த புதிய திட்டம்அமல்படுத்தப்பட்டால், பொருளாதாரத்தில்பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்பதோடு,வருமான வரி ஒழிந்தால் நடுத்தரவகுப்பினர் மிக சந்தோஷப்படுவர் என்பதேபிரதமரின் திட்டமாக உள்ளது எனகூறப்படுகிறது.

CLICK HERE- TO VIEW THE SOURCE

வரலாறு பட்டதாரி ஆசிரியர் நீண்டகால கோரிக்கை... விரைவில் தீரும்... வரலாறு பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை...வரலாறு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் 3 பங்கு அதாவது 75 சதவீதம் வெவ்வேறு பாடமாகப் பயின்றவர்களுக்கும்,
 
1 பங்கு அதாவது 25 சதவீதம் ஒரே பாடமாகப் பயின்றவர்களுக்கும் விகிதாச்சாரம் வழங்கப்பட்டுள்ளமையால், வரலாறு பாட பட்டதாரியாசிரியர்கள் நீண்ட நாட்களாகப் பதவி உயர்வு கிடைக்கப் பெறாமல் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகக் கருதி வரலாறு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் ஒரே பாடமாகப் பயின்றுள்ள வரலாறு பாட பட்டதாரி ஆரியர்களுக்கு மட்டுமே அதிக அளவில் விகிதாச்சாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் , அதற்குண்டான தீர்ப்பு பிறப்பிக்கும் வரையில் 2016-2017 ஆம் ஆண்டுக்கான வரலாறு முதுகலை ஆசிரியர் பாட பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்தக் கூடாது எனவும், தருமபுரி மாவட்டம் ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் (வரலாறு) பணியாற்றும் திரு.ப.நடராசன் அவர்களின் தலைமையில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த 8 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்ற நீதிமன்றத் தடையாணை கீழே...( இத்தடையாணையின் காரணமாகவே இவ்வாண்டு வரலாறு பாட முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது)

வாட்ஸ்-ஆப் வீடியோ காலிங் பயன்படுத்துவோர் கவனத்துக்கு

வாட்ஸ்-ஆப் வீடியோ காலிங்-ஐ ஆக்டிவேட் செய்ய இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள் என்று உங்கள் ஃபோனுக்கு குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருங்கள். ஏனென்றால், வாட்ஸ்-ஆப் நிறுவனம் அதை அனுப்பவதில்லை. உங்களிடம் இருந்து விவரங்களை திருட நினைப்பவர்கள் அந்த குறுஞ்செய்தியை அனுப்பி இருக்கலாம்.

வாட்ஸ்-ஆப் நிறுவனம், கடந்த 15 ஆம் தேதி வீடியோ காலிங் வசதியை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்தது. ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமான வாட்ஸ்-ஆப், வாய்ஸ் காலிங்-ஐ அறிமுகம் செய்த போது, அதை ஆக்டிவேட் செய்ய குறுஞ்செய்திகளை அனுப்பியது. ஆனால், வீடியோ காலிங்-ஐ பொறுத்தவரை, ஏற்கனவே ஃபோனில் இருக்கும் வாட்ஸ்-ஆப் செயலியை, அப்டேட் செய்தாலே போதுமானது.

வீடியோ காலிங் அல்லது 'குரூப் வீடியோ காலிங்' ஆக்டிவேட் செய்ய குறுஞ்செய்தி வந்தால் அதை தவிர்ப்பது சிறந்தது எனக் கூறப்படுகிறது. காரணம், குறுஞ்செய்தியில் வரும் லிங்க்-ஐ கிளிக் செய்யும் பட்சத்தில், அது ஹேக்கர்களின் இணையதளத்துக்கு இட்டுச் சென்று, கடவுச்சொல் மற்றும் ஃபோனில் இருக்கும் பிற விஷங்களைத் திருடச் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. 

பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்: ‘தி இந்து - யங் வேர்ல்டு’ சார்பில் ஓவியப் போட்டி - முதல் சுற்றுக்கான கடைசி தேதி நவம்பர் 25

‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ‘யங் வேர்ல்டு’ இணைப்பிதழ் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டிகள் நடத்தப்படுவது வழக் கம். 2016-17ம் ஆண்டுக்கான போட்டி களுக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
இப்போட்டி யில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் www.thehindu.com/ywpainting என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களது விவரங்களைப் பதிவு செய்து, முன்பதிவு செய்துகொள்ள லாம். முன்பதிவு செய்யும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே அடை யாள எண் அவர்களது மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.7 முதல் 9-ம் வகுப்பு வரை சீனியர் பிரிவிலும், 4 முதல் 6-ம் வகுப்பு வரை ஜூனியர் பிரிவிலும் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளுக்கான தலைப்புகள் மேற் கண்ட இணையதளத்தில் உள்ளன.மாணவர்கள் 26x27 செ.மீ. அளவு தாளில் படங்களை வரைய வேண்டும்.

முன்பதிவின்போது மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட அடையாள எண்ணை, ஓவியம் வரையப்பட்ட தாளின் வலது மேல் ஓரத்தில் குறிப்பிட வேண்டும். ஓவி யம் வரையப்பட்ட தாளின் பின்பக்கத் தில், மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி, வீட்டு முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். ஓவியங்களுக்கு பள்ளி முதல்வர் அல்லது ஓவிய ஆசிரி யரிடம்சான்று பெற வேண்டும். இதில் ஏதேனும் ஒரு தகவல் விடுபட்டாலும், சம் பந்தப்பட்ட மாணவரின் விண்ணப்பம் ஏற்கப்படாது.ஓவியம் வரையப்பட்ட தாளை மடிக் காமல், அருகில் உள்ள ‘தி இந்து’ அலு வலகத்துக்கு அனுப்ப வேண்டும். ஓவியத்துக்கு இடப்படும் உறையின் மேல்புறத்தில் ‘THE HINDU YOUNG WORLD PAINTING COMPETITION 2016-17’ என்று குறிப்பிட வேண்டும். ஓவியங்கள் வந்து சேருவதற்கான கடைசி தேதி நவம்பர் 25.

இறுதிப் போட்டிக்கான இடம், நாள் குறித்த தகவல் மின்னஞ்சல், குறுஞ் செய்தி வாயிலாக தெரியப்படுத்தப் படும். இறுதிப் போட்டிக்கான இடங்கள் மற்றும் போட்டி குறித்த கூடுதல் விவரங் களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பை, சான் றிதழ் வழங்கப்படும். ஆறுதல் பரிசாக பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ் கள் வழங்கப்படும்.

EMIS' விபரங்கள் மாயம் : ஆசிரியர்கள் கோபம்

தமிழகத்தில், அனைத்து மாணவர்களுக்கும், தனித்தனி அடையாள எண் கொடுக்கப்பட்டு, அதையே பொதுத் தேர்வு சான்றிதழ்களிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

இதற்காக, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., சார்பில், 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு அமைப்பு கொண்டு வரப்பட்டது.

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, மாணவ, மாணவியரின், பெயர், முகவரி மற்றும், 'ஆதார்' எண் விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆண்டு சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் விடுபட்டவர்களுக்கான, ஆதார் எண்களை சேர்த்து, இம்மாத இறுதிக்குள் அறிக்கை தர, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: பல உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு, இன்னும் தொலைபேசி வசதி இல்லை; இதில், தொடக்கப் பள்ளிகளின் நிலை மிக மோசம். அதேபோல், இணையதள வசதியும், பல பள்ளிகளில் இல்லை. எனவே, இணையதள மையங்களில், ஆசிரியர்கள் பல மணி நேரம் காத்திருந்து, எமிஸ் திட்டத்தில், விபரங்களை பதிவு செய்கிறோம். இந்த திட்டத்தால், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை விட்டு, இதற்கு நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. மேலும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாணவர் விபரங்கள், 'ஆன்லைனில்' திடீரென மாயமாகி விடுகின்றன. அதை தேடி எடுக்க, பல நாட்கள் ஆகின்றன. எனவே, எமிஸ் எண்ணுக்கு பதில், ஆதார் எண்ணை பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆசிரியர் பதவி உயர்வில் கல்வித்துறையில் முடிவுக்கு வருகிறது 'கிராஸ் மேஜர்', 'சேம் மேஜர்' பிரச்னை.

முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வில் வரலாறு, புவியியல் பாடப்பிரிவுகளில் 'கிராஸ் மேஜர்,' 'சேம் மேஜர்' பிரச்னையால் சிலர் பாதிக்கப்பட்டனர். இதனை தீர்க்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் டி.ஆர்.பி., தேர்வு மூலமாகவும், மீதம் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பதவி உயர்வு மூலம் நிரப்புவதில் வரலாறு, புவியியல் பாடங்களுக்கு முதுநிலை ஆசிரியர்கள் கிடைப்பதில் பற்றாக்குறை இருந்தது.இதையடுத்து 2000 அக்., 18 ல் இளநிலையில் ஏதாவதொரு பட்டத்தை முடித்து, முதுநிலையில் வரலாறு, புவியியல், பாடப்பிரிவுகளை படித்தோர் (கிராஸ் மேஜர்) 3 பங்கும், இளநிலை, முதுநிலை இரண்டிலும் ஒரே பாடப்பிரிவை எடுத்து படித்தோர் (சேம் மேஜர்) ஒரு பங்கும் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டது.தற்போது அந்த பாடங்களில் 'சேம் மேஜர்' முடித்தோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலும் பழைய அரசாணைப்படியே

முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் நடக்கிறது. இதனால் 'சேம் மேஜர்' முடித்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதனை கண்டித்து பாதிக்கப்பட்டோர் போராடி வந்தனர். இதையடுத்து முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வில் 1:3 என்ற விகிச்சார முறையை மாற்றியமைக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான விபரங்களை நவ., 30 க்குள் அனுப்பி வைக்க பள்ளி கல்வித்துறை முதன்மைக் கல்வி அலுவலர்களை கேட்டு கொண்டுள்ளது.

தமிழ்நாடு வரலாறு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் கூறியதாவது: 'கிராஸ் மேஜர்,' 'சேம் மேஜர்' பிரச்னையால் பலர் பதவி உயர்வு கிடைக்காமலேயே ஓய்வு பெற்றனர். 15 ஆண்டுகள் போராட்டத்திற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது, என்றார்.

அன்பாசிரியர் 29: மணிமாறன்- களப்பயணக் கல்வியே இவர் பாடத்திட்டம்!

தன் மாணவர்களுடன் வேடமிட்டு வயலில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் மணிமாறன்

அரிய வகைத் தாவரங்களைத் தேடி மாணவர்களுடன் களப்பயணம், கிராமக் கல்விக் குழுக் கூட்டம், இந்தியப் பயிர்ப் பதன தொழில்நுட்பக் கழகப் பயணம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பள்ளியின் இலக்கிய மன்ற விழா துவக்கம், குட்டி ஆகாயம் இதழ் அறிமுகம், கிளிப்பாரி, புலிப்பாரி உள்ளிட்ட மரபு வழி விளையாட்டுகள், குழந்தைகளுக்கான கதை நிகழ்வு, யோகா பயிற்சி, எழுது திறன் பயிற்சி, தளிர்த் திறன் திட்ட செயல்பாடுகள், ஜூனியர் ரெட் கிராஸ் அறிமுகக் கூட்டம், காற்றாலை எரிசக்தி பயிற்சி- இவையனைத்தும் திருவாரூர், மேலராதாநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மணிமாறன், தன் மாணவர்களுடன் இணைந்து ஒரு மாதத்தில் செய்த நிகழ்வு.

அன்பாசிரியர் மணிமாறனின் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்...

''மருத்துவம் கிடைக்காததால் ஆசிரியர் பயிற்சியில் இணைந்தவன் நான். ஆனால் இன்று ஒரு மருத்துவ மாணவனை உருவாக்க முடிந்ததை எண்ணி மகிழ்கிறேன். 19 வயதில் ஈராசிரியர் தொடக்கப் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தேன். இளம் வயதில், சிறு வகுப்பு மாணவர்களை நேரடியாகக் கையாள முடியவில்லை. ஒப்பனைகள் செய்து கோமாளியாக மாறி பாடம் நடத்துவதை வழக்கமாகக் கொண்டேன். என்னையே கோமாளியாகக் காண்பித்ததால் மாணவர்களுடம் நெருக்கம் அதிகமானது. இந்த மாற்றம், படிப்பில் முன்னேற்றமாக வெளிப்பட்டது. கதைகள் கூறியும் பாடம் நடத்துகிறேன். 4 முறை கதைத் திருவிழா நடத்தியிருக்கிறோம்.

வாசிப்புப் பழக்கம் இருந்ததால், கற்றல் செயல்முறைகளைத் தேடிப் பயணித்தேன். அப்போது மாணவர்களை வெளியே அழைத்துச் சென்று பாடம் சொல்லிக் கொடுப்பது அவர்களை ஈர்ப்பதைக் கண்டுபிடித்தேன். வயல்வெளிகள், குளம், ரயில் மற்றும் தபால் நிலையங்களுக்குச் சென்றோம். மாணவர்கள் அங்கிருந்து அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களைக் கற்றனர்.

திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று எலும்புக்கூட்டைப் பார்த்து அறிவியல் கற்கும் மாணவர்கள்

களத்தில் கற்பித்தல்

ஆரம்பத்தில் வயல், குளங்களுக்குச் சென்று பாடம் கற்பித்தோம். இப்போது பள்ளியின் இலக்கிய மன்றத் தொடக்கவிழாவை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தியுள்ளோம். வயலில், வேளாண்மைக் கல்லூரியில் கற்ற மாணவர்கள், இப்போது நெல் பதனிடு தொழில்நுட்ப மையத்துக்குச் சென்று பாடம் கற்கின்றனர். சொன்னால் நம்ப மாட்டீர்கள்., உணவு மண்டலம், செரிமான உறுப்புகள், சுவாச மண்டலம், இரைப்பை உள்ளிட்ட உடல் கூறியல் தொடர்பான பாடங்களை திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று நேரடியாகக் கற்பிக்கிறோம். உயிரற்ற உடல்களின் முகம், கால்களை மறைத்துவிடுவதால், அவற்றைக் கண்டு மாணவர்கள் பயப்படுவதில்லை.

ஒரு நாள் விழிப்புணர்வு இல்லாமல் மூன்றாம் வகுப்பு மாணவியின் தந்தை கேன்சரால் இறந்துபோனார். அதிலிருந்து அரிமா சங்கத்தின் உதவியோடு, பெற்றோர்களுக்கான மருத்துவ முகாமை தொடர்ந்து நடத்தி வருகிறோம். சில மாதங்களில் ஆண்டு விழா வந்தது. செலவழிக்காமல் வைத்திருந்த என்னுடைய 5 மாத சம்பளத்தொகை 15 ஆயிரத்தை வைத்து விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம்.

அதைக் கேள்விப்பட்டு, ஊரில் மளிகைக்கடை வைத்திருந்த முஸ்லீம் சகோதரர் 100 மாணவர்களுக்கும் ரூ. 200 மதிப்புள்ள கடிகாரங்களைத் தனித்தனியாக வழங்கினார். அப்போதுதான் எந்த நல்ல விதையையும் ஊன்றினால் போதும்; அதுவாகவே வளர்ந்துகொள்ளும் என்று புரிந்தது.

கோயிலைச் சுற்றிய மாணவர்கள்

2009-ல் அருகிலுள்ள கமலாபுரம் தொடக்கப்பள்ளிக்கு மாற்றலானது. மாணவர்களிடையே கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்த எண்ணினேன். மாணவன், தன்னுடைய சக நண்பர்களுடனோ அல்லது ஆசிரியர்களுடனோ ஏதேனும் பிணக்கு ஏற்பட்டால் அதைக் கடிதம் வாயிலாக வெளிப்படுத்தலாம். ஆரம்பத்தில் அவர்கள் எழுதிய கடிதங்கள் அனைத்தும், 'அவன் என்னை அடிச்சிட்டான், குத்திட்டான்!' என்ற ரீதியிலேயே இருந்தன. நாட்கள் செல்லச்செல்ல அவர்கள் தங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தனர்.

காது கேட்காத, வாய் பேசாத மாணவி, அவரின் அப்பாவுடன் பேச வேண்டும் என்று எழுதியிருந்தார். எதற்காக என்று கேட்டபோது தனக்கு அல்வா பிடிக்கும் எனவும், அதை வாங்கிக்கொடுக்கச் சொல்ல வேண்டுமென்றார். நாங்கள் உடனே 10 கிலோ அல்வா வாங்கி, பள்ளியில் அனைவருக்கும் வழங்கினோம்.

ஒருமுறை தொண்டையில் எனக்குக் கட்டி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். பேச்சு வருமா என்பதே சந்தேகமாக இருந்தது. மாணவர்கள் தினமும், பள்ளிக்கு அருகில் இருந்த கோயிலை சுற்றி வந்து எனக்காகப் பிரார்த்தனை செய்தார்களாம். முக்கியமாக வாய் பேச முடியாத மாணவி விடுமுறை நாட்களில் கூட கோயிலைச் சுற்றி வந்திருக்கிறார். அவர்களின் அன்பு 18 நாட்களிலேயே என்னைப் பள்ளிக்குத் திரும்ப வைத்தது.

செயற்கை பேரிடர் மேலாண்மை

பொதுவாக எங்கள் ஊரில் அதிக தீ விபத்துகள், நிறைய தற்கொலைகள் அதிகம் நடக்கும். இதை எவ்வாறு குறைக்கலாம் என்று யோசித்தேன். விபத்து, மாரடைப்பு உள்ளிட்ட எதிர்பாராத சம்பவங்களின்போது எப்படி நடந்தகொள்ள வேண்டுமென்று மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தோம். ஆம்புலன்ஸ் குறித்த தகவல்கள், முதலுதவி கொடுப்பது பற்றி பயிற்சியாளர்கள் கற்றுக்கொடுத்தனர்.

தீயணைப்பு, முதலுதவி உள்ளிட்ட அத்தியாவசியப் பயிற்சிகளைக் கற்கும் மாணவர்கள்

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க, இரு நாட்களுக்கு குழந்தைகள் திருவிழா நடத்தப்பட்டது. அதில் திருக்குறள், மேஜிக், பேச்சு, பாடல், நாடகம் உள்ளிட்டவைகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. துறை வல்லுநர்களின் துணையோடு நடமாடும் கோளரங்கம் மற்றும் திறந்தவெளிக் கருத்தரங்குகளை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.

வழக்கத்தில் இருந்து மறைந்தே போன நாய் - எலும்புத் துண்டு விளையாட்டு, குரங்கு வால் விளையாட்டு, கிளிப்பாரி புலிப்பாரி விளையாட்டு, சப்த விளையாட்டு, பாயும் புலி விளையாட்டு உள்ளிட்ட மரபு வழி விளையாட்டுகளை மீட்டெடுத்து அவற்றை விளையாடுகிறோம்.

குழந்தைகள் தினத்தன்று பத்தாயிரம் ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் கிடைத்தன. அதைக் கொண்டு ஊரில் இருக்கும் ஐந்து தெருக்களிலும் நூலகம் ஒன்றை அமைத்தோம். தற்போது பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் அதை நிர்வகிக்கின்றனர். இதன்மூலம் மாணவர்கள் தாண்டி பெற்றோர்களிடமும் வாசிப்பு பரவ ஆரம்பித்திருக்கிறது.

இன்னும் என் பள்ளியின் உள்கட்டமைப்பில் எந்த நவீன வசதியையும் செய்யவில்லை என்பது வேதனையளிக்கிறது. யாராவது உங்கள் பள்ளிக்கு வந்து பார்க்கலாமா என்று கேட்டால் சங்கடத்துடன் மறுக்கும் சூழ்நிலையில் இருக்கிறோம். மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வகம் அமைக்க வேண்டும். சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். நடமாடும் கோளரங்கம் அமைத்ததற்காக நாசா பாராட்டுக் கடிதம் அனுப்பியது. வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் எங்களோடு பேச எண்ணியவர்களிடம், கணினி வசதிகள் இல்லை என்று எப்படிச் சொல்வது?

கதை சொல்லிக் கற்பிப்பது, களப்பயணம் சென்று பாடம் சொல்வது, மாணவர்களின் உளவியல் நுட்பத்துக்கு ஏற்ப நடந்துகொள்வது, மாற்றுக்கல்விக்கான போராட்டங்களிலும், கருத்தரங்குகளிலும் ஒரு செயல்பாட்டாளராகக் கலந்துகொள்வது என சொல்லிலும் செயலிலும் ஒரே நேரத்தில் பங்குகொள்ள என் ஆசிரியப் பணி கைகொடுக்கிறது'' என்று புன்னகைக்கிறார் அன்பாசிரியர் மணிமாறன்.

SG Teacher to BT Promotion - 750 pp Court Case Judgement Copy


இதுவரை வங்கிகளில் 'டிபாசிட்' ஆன தொகை...ரூ.6,00,000 கோடி!:நிலைமையை கண்காணிக்க குழுக்கள் அமைக்கிறது அரசு

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில், 10 நாட்களில், ஆறு லட்சம் கோடி ரூபாய், 'டிபாசிட்' குவிந்துள்ளது. இதற்கிடையில், பொது மக்களின் பாதிப்பை அறியவும், நிலைமையை கண்காணிக்கவும், 27 குழுக்களை, மத்திய அரசு அமைக்கிறது. உச்ச நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, '8ம் தேதி நள்ளிரவு முதல், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. அந்த நோட்டுகளை வங்கிகளில், டிச., 30 வரை மாற்றிக் கொள்ளலாம்' என்ற, அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். பின், வங்கிகணக்கில் பணம் எடுப்பதற்கும், ஏ.டி.எம்., களில் பணம் எடுப்பதற்கும், உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. 

கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காகவும், பதுக் கல் பணத்தை வெளியே கொண்டு வருவதற் காகவும், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. இதனால் சுதாரித்த மக்கள், தங்களி டம் இருக்கும் பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து, புதிய நோட்டுகளை பெற்று வருகின்றனர். 

தாராளமாக

இது தவிர, தங்களிடம் உள்ள பழைய நோட்டு களை, வங்கிகளில் டிபாசிட் செய்து வருகின் றனர். டிபாசிட் செய்வதற்கு உச்சவரம்பு இல்லா ததால், தங்களிடம் உள்ள பழைய நோட்டு களை, வங்கிக் கணக்குகளில் செலுத்தி வருகின்றனர். இதுவரை, ஆறு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, டிபாசிட் செய்யப்பட்டு உள்ளதாக, வங்கி துறையினர் மதிப்பிட்டு உள்ளனர். 

எனினும், வங்கிக் கணக்குகளை, வருமான வரித்துறை கண்காணித்து வருவதால், பண முதலை கள், வேறு வழிகளில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க, முயன்று வருகின்ற னர். இந்திய வங்கிகள் சங்கத்தின் மூத்த நிர்வாகிகூறியதாவது:

நாட்டின் பெரிய வங்கியான, பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரான அருந்ததி பட்டாச் சார்யா, '10 முதல், 18ம் தேதி வரை, 1.34 லட்சம் கோடி ரூபாய் டிபாசிட் கிடைத்துஉள்ளது' என, தெரிவித்திருக்கிறார். நாட்டில் கிடைக்கும் மொத்த டிபாசிட் தொகையில், 20 - 22 சதவீதம், அந்த வங்கியினுடையது. 

அந்த தொகை, நேற்று அதிகரித்துஇருக்கும். மேலும், பெரிய தனியார் வங்கியான, ஐ.சி.ஐ. சி.ஐ., தரப்பில், 18ம் தேதி வரை, 33 ஆயிரம் கோடி ரூபாய் டிபாசிட் கிடைத்திருப்பதாக, தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அனைத்து வங்கிகளிலும் சேர்த்து, 14ம் தேதி, மொத்த டிபாசிட் தொகை, நான்கு லட்சம் கோடி ரூபாயை கடந்தது. அதனடிப்படையில் பார்த் தால், நேற்று வரை ஆறு லட்சம் கோடி ரூபாய் வந்திருக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இணை செயலர்கள்

இதற்கிடையில், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டதால், உருவாகி யுள்ள களநிலவரத்தை ஆய்வு செய்வதற்காக, அனைத்து மாநிலங்களுக்கும், அதிகாரிகள் குழுவை அனுப்ப,மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 27 குழுக்களை, மத்திய பணியா ளர் நிர்வாகம் மற்றும் பயிற்சி துறை அமைக்க உள்ளது. 

குழுவின் தலைவர்களாக, நிடி ஆயோக் அமைப்பின் கூடுதல் செயலர்கள் இடம் பெறுவர். பல்வேறு அமைச்சகங்களின் துணை, இணைச் செயலர்கள், உறுப்பினர்களாக இருப்பர். 

குழுவினர், சிறிய கிராமங்கள் மற்றும் நகரங் களுக்கும் சென்று, மக்களின் கருத்துக் களை கேட்டறிவர். பின், அது பற்றிய அறிக்கையை, மத்திய பொருளாதார விவகாரத் துறையிடம் அளிப்பர். தமிழகத்தின் களநிலவரத்தை அறிய, டி.ஜேக்கப் - நிர்வாகத் துறை, பிரவீன் குமார் - உயர்கல்வித்துறை, எம்.ஜானகி - நகர்புற வளர்ச்சித்துறை ஆகியோர் இடம்பெற்ற மூவர் குழு வருகிறது.

தமிழகத்தில் எவ்வளவு?

தமிழகத்தில், நேற்று முன்தினம் வரை, பாரத ஸ்டேட் வங்கியில், 5,530 கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. நேற்று, 6,000 கோடி ரூபா யாக, அது அதிகரித்து இருக்கலாம். சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள இந்தியன் வங்கியில், 18ம் தேதி வரை, 11 ஆயிரம் கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியன் வங்கிக்கு, நாடு முழுவதும், 2,400 கிளைகள் உள்ளன; அதில், 1,000 கிளைகள் தமிழகத்தில் உள்ளன. எனவே, அதன் மொத்த டிபாசிட் தொகையில், 40 சதவீதம் அதாவது, 4,400 கோடி ரூபாய், தமிழகத்தில் கிடைத்தி ருக்கும். அது நேற்று, 4,500 கோடியாக உயர்ந் திருக்கலாம் என, இந்தியன் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.