Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 23 November 2016

2016 - 2017 ஆம் கல்வியாண்டில் புதிதாக துவக்கப்பட உள்ள 5 துவக்கப்பள்ளிகளின் பட்டியல்

G.O : 202 - மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு - 5 புதிய துவக்கப்பள்ளிகள் மற்றும் அப்பள்ளிகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் - அரசாணை வெளியீடு

G.O Ms : 114 - அரசு ஊழியர்கள் மற்றும் குடும்பத்தார் PASSPORT பெற/புதுப்பிக்க துறை அனுமதி பெறவேண்டும் - அரசாணைமற்றும் படிவங்கள் வெளியீடு

CLICK HERE - GOVT.SERVANT PASSPORT APPLY/RENEWAL NEW RULES

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்விற்கான 560 பக்கங்களைக் கொண்ட பயிற்சி புத்தகம் (2016 மறுபதிப்பு)

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்விற்கான 560 பக்கங்களைக் கொண்ட பயிற்சி புத்தகம் (2016 மறுபதிப்பு- கூடுதல் பயிற்சி வினாக்களோடு) ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் திரு மோகன் அவர்கள் தயாரித்து விற்பனை செய்கிறார். புத்தகத்தின் விலை ரூ 210 (பார்சல் செலவு தனி). புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
97 15 160005
Mohan B.T.Asst
Kadaladi block
Ramnad Dt.

பள்ளிகள் விளையாட்டு போட்டிக்கு ரூ.10 கோடி

பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு ரூ.10 கோடியை பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கியுள்ளது. மாநிலத்திலுள்ள 67 கல்வி மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளிலும் ஆண்டுதோறும் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பின் கல்வி மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் விளையாட்டு போட்டிகள் நடக்கும். அதில் பங்கேற்று வெற்றி பெரும் மாணவ - மாணவிகள் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

நிதிஒதுக்கீடு: குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.2 கோடியே 64 லட்சத்து 9 ஆயிரத்து 300ம், கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.79 லட்சத்து 83 ஆயிரத்து 50 ஒதுக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலான போட்டிகளை நடத்துவதற்கு ரூ.2 கோடியே 58 லட்சத்து 12 ஆயிரத்து 600 ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மாவட்ட குடியரசுதின,பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்த ரூ.2 கோடி 16 லட்சத்து 4 ஆயிரத்து 300 ஒதுக்கப்பட்டுள்ளது.இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும் செலவினங்களுக்காக ரூ.ஒரு கோடியே 96 லட்சத்து 30 ஆயிரத்து 690 என மொத்தம் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வங்கியில் பணம் எடுக்கும் வரம்பு: இன்று கடைசி

வங்கிகளில் அதிகபட்சம் ரூ.24,000 பணம் எடுப்பதற்கான இந்த வார வரம்பு கெடு புதன்கிழமை (நவ.23) நிறைவடைகிறது. பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது முதல் வங்கி, ஏடிஎம் பண பரிவர்த்தனையில் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு செய்து வருகிறது.

அதன்படி வங்கி சேமிப்புக் கணக்கில் வாரத்துக்கு அதிகபட்சம் ரூ.24,000, ஏடிஎம் மையங்களில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.4,500 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இந்த வரம்பு ரூ.2,000 என குறைக்கப்பட்டது. இந்நிலையில், வங்கி சேமிப்புக் கணக்கில் ஒருவர் கடந்த வியாழக்கிழமை தொடங்கி ஒரு வாரத்தில் இதுவரை ரூ.20,000 வரை எடுத்திருந்தால், புதன்கிழமையன்று (நவ.23) மீதித் தொகை ரூ.4,000 மட்டுமே எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒருவரது வங்கி சேமிப்புக் கணக்கைப் பொருத்தவரை, அவர் ஏடிஎம் மையத்தில் எடுக்கும் பணத்தையும் கணக்கில் கொண்டே மீதித் தொகை மட்டுமே காசோலைக்கு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 வங்கிகளில் தொடரும் பண பற்றாக்குறை: வங்கிகளுக்கு போதிய பணத்தை ரிசர்வ் வங்கி தராமல் இருப்பதால், நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தொகையை (ரூ.24,000) அளிக்க முடியாமல் வங்கிகள் திணறி வருகின்றன. இந்த வாரம் தொடங்கிய திங்கள்கிழமையன்று (நவ.21) ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சம் ரூ.5,000-மும் செவ்வாய்க்கிழமையன்று (நவ.22) அதிகபட்சம் ரூ.10,000 மட்டுமே வங்கிகள் அளித்தது குறிப்பிடத்தக்கது

பணிப்பதிவேட்டை கருவூலங்களில் ஸ்கேன் செய்வதற்கு முன்பாக சரிபார்க்கப்படவேண்டிய பதிவுகள் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 22. 11. 2016

நாளைமுதல் பிக் பஜாரில் ரூ.2,000 பணம் எடுக்கலாம்

பணப் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால், அனைத்து பிக் பஜார் ஸ்டோர்களிலும் பொதுமக்கள் தங்களது வங்கி டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 2000 வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பிக் பஜார் ஸ்டோர்ஸின் தலைமை நிறுவனமான "ஃபியூச்சர் ஃபார்ம்' குழுமம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த வசதி, நாடு முழுவதும் நாற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 258 பிக் பஜார் ஸ்டோர்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வரும் வியாழக்கிழமை (நவ.24) முதல் அருகில் உள்ள பிக் பஜார் ஸ்டோருக்குச் சென்று தங்களது வங்கிக் கணக்குகளில் இருந்து டெபிட் கார்டுகள் மூலம் ரூ.2,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.
பணம் எடுப்பதற்காக, வங்கியிலோ அல்லது ஏடிஎம் மையம் முன்போ வரிசையில் காத்திருப்பதற்குப் பதிலாக, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினம் ஒரு கைப்பிடி 'வால்நட்' போதும் - இளைஞர்களின் மனநிலை மேம்படும்: புதிய ஆய்வில் ஆச்சரியமூட்டும் தகவல்

தினமும் ஒரு கைப்பிடி வால்நட் (அக்ரூட்) சாப்பிட்டால், இளை ஞர்களின் மனது மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களுடைய மனநிலை மேம்படும் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் நியூமெக்சிகோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி யாளர் பீட்டர் பிரிபிஸ், வால்நட் பற்றி ஆய்வு செய்துள்ளார். இது குறித்து பீட்டர் கூறியதாவது:

வால்நட்டில் பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதுபற்றி இதற்கு முன்னர் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உடலில் தேவையில்லாத கொழுப் புகளை கரைக்கவும், இருதய நோய், நீரிழிவு நோயை தடுக்கவும் வால்நட் மிகவும் பயன்படுகிறது என்று அந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டன.

இப்போது நாங்கள் மேற் கொண்ட ஆய்வு வேறு வகை யானது. வால்நட்டால் மனித அறிவாற்றல், மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தோம். அதற்காக 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட 64 மாணவ, மாணவிகளை தேர்வு செய்தோம்.

அதன்படி தினமும் ஒரு கைப்பிடி அளவுள்ள வால்நட்டை 8 வாரங்களுக்கு அவர்களை சாப்பிட செய்து ஆய்வு செய்தோம். அதன்பிறகு அவர்களுடைய மனநிலை மேம்படுவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக வால்நட் சாப்பிட்டு வந்த இளைஞர்களுக்கு மன அழுத்தத்தை சமாளிக்கக் கூடிய அளவுக்கு மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய மனநிலையும் (மூட்) மகிழ்ச்சியாக மாறி உள்ளது. உடல்நலத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆய்வில் பங்கெடுத்த வர்களை தினமும் 3 துண்டு என 16 வாரங்களுக்கு (சிலைஸ்) வாழைப்பழ பிரட் சாப்பிட சொன்னோம். இதில் 8 வாரங் கள் வாழைப்பழ பிரட்டுடன் வால் நட்டும், 8 வாரங்கள் வால்நட் இல்லாமல் வாழைப்பழ பிரட்டும் சாப்பிட்டனர். இதுபோல் சில மாற்றங்களை செய்து ஒவ்வொரு 8 வார முடிவிலும் மாணவர்களின் மனநிலையை அளவிட்டோம்.

பின்னர் அவர்கள் ஒவ் வொருவரிடமும் சில கேள்விகள் கேட்டு ஆய்வு செய்தோம். பதற்றம், மன அழுத்தம், கோபம், சோர்வு, சுறுசுறுப்பு, குழப்பம் ஆகிய மனநிலைகள் குறித்து ஆய்வு செய் தோம். கேள்விகளுக்கு அளிக் கப்பட்ட பதிலின் அடிப்படையில் மதிப்பீடுகள் செய்யப்பட்டன.

இந்த ஆய்வில் வால்நட் சாப்பிட்ட இளைஞர்களின் மன நிலை, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது தெரிய வந்தது. அதேவேளையில் இளம் பெண்களின் மனநிலையில் எந்த முன்னேற்றத்தையும் எங்களால் பார்க்க முடியவில்லை. அது ஏன் என் றும் எங்களுக்கு தெரிய வில்லை.

இவ்வாறு பீட்டர் கூறியுள்ளார்.

வால்நட்டில் ஆல்பா லினோ லெனிக் ஆசிட், விட்டமின் இ, மெலடோனின் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை மனநிலையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் என தெரியவந்துள்ளது.

இண்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுக்கு சேவை வரி ரத்து: ரயில்வே அறிவிப்பு

டெல்லி: ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இன்று முதல் இந்தாண்டு இறுதி (டிசம்பர் 31) வரை சேவை வரி ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு பண பரிவர்த்தனையை குறைத்து ஆன்லைன் அல்லது டெபிட் கார்டு மூலம் பரிவர்த்தனை நடத்த ஊக்குவிக்கிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு புதன்கிழமை முதல் சேவை வரியை ரத்து செய்கிறது. இந்த சலுகை டிசம்பர் 31-ந் தேதி வரை வழங்கப்படும் என ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுவரை இணையதளம் மூலம் ரயிலில் தூங்கும் வசதி டிக்கெட் முன்பதிவுக்கு ரூ.20-ம், ஏ.சி. வசதி ரயில் டிக்கெட்டுக்கு ரூ.40-ம் சேவை வரியாக வசூலிக்கப்பட்டது. இனி டிசம்பர் 31-ந் தேதி வரை இந்த கட்டணம் வசூலிக்கப்படாது. முன்னதாக வரும் 24ம் தேதி வரை ரயில் நிலையத்தில் பழைய ரூ.500, 1000 நோட்டுகளை பயணிகள் கொடுத்து டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது

சோலார் டிராக்டர் - தமிழக மாணவருக்கு இளம் விஞ்ஞானி 2016 விருது!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவன் சோலார் டிராக்டரைக் கண்டுபிடித்து ஜனாதிபதியிடம் விருது பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதி நகரைச் சேர்ந்தவர் சாரதி சுப்புராஜ். அவருடைய மனைவி செண்பகவல்லி. இவர்களுக்கு 
சிவசூர்யா என்னும் மகன் உள்ளார். சிவசூர்யா கோவில்பட்டியில் உள்ள காமராஜ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கிறார். சிவசூர்யா இளம் வயதிலேயே எட்டு புதுமைகளை கண்டுபிடித்து இந்தியாவின் ‘இளம் விஞ்ஞானி 2016’ என்ற விருதினை பெற்றுள்ளார்.
ஆண்டுதோறும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் குழந்தைகள் 30 பேரை தேர்வு செய்து தேசிய விருது வழங்கப்படும். இந்த விருது ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும். அந்த விருதில், ரூபாய் 10,000 பணம், ரூபாய் 3,000க்கான மதிப்புள்ள புத்தகங்கள், வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். அதன்படி, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகள் பிரிவில் மாணவன் சிவசூர்யாவுக்கு ‘இளம் விஞ்ஞானி 2016’ விருதினை பிரணாப் முகர்ஜி வழங்கி கௌரவப்படுத்தினார்.
சிவசூர்யா விவசாயிகளுக்கு உதவும் வகையில் சூரிய ஒளியில் இயங்க கூடிய டிராக்டரைக் கண்டுபிடித்துள்ளார். புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான இன்ஸ்பயர் போட்டியில் சிவசூர்யா பங்கேற்றார். சூரிய ஒளி மூலம், ரிமோட்டால் இயக்கப்படும் டிராக்டரை வடிவமைத்திருந்தார். இந்த கண்டுபிடிப்பால் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்தார். அதன்மூலம் இளம் விஞ்ஞானி விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டார்.
இதுகுறித்து சிவசூர்யா, “இந்த டிராக்டரை சூரிய ஒளியில் செல்பேசி மூலம் இயக்க முடியும். இதனை ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் எளிதில் இயக்க முடியும். இதன் மூலமாக மிகக் குறைந்த செலவில் எளிதில் உழவு செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், ஸ்பேஸ் கிட்ஸ் என்ற அமைப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1,500 மாணவர்களை அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகளில் பங்கேற்க செய்தது. அதில் 150 மாணவர்களை தேர்வு செய்யப்பட்டனர். முதல் மூன்று மாணவர்களை தேர்வு செய்ததில் சிவசூர்யாவும் ஒருவராக வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, ரஷ்யாவில் விஞ்ஞானிகள் மூலம் அவருக்கு 10 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

CEO TRANSFER !!

கன்னியாகுமரி CEO ஜெயக்குமார் - திருவண்ணாமலை CEO

புதுக்கோட்டைCEO  சாந்தி - திருச்சி

IMS விருதுநகர் விஜயராணி - கன்னியாகுமரி CEO

பெரம்பலூர் DEO - புதுக்கோட்டைCEO

ஆதார் மையத்தில் வேலை வாய்ப்பு

சென்னை: ஆதார் சேர்க்கை மையங்களில் பணியாற்ற விரும்பும், 'டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள்' வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், தமிழகம் முழுவதும், 486 இ - சேவை மையங்களை அமைத்து, அரசு துறைகள் சார்ந்த சேவைகளை, வழங்கி வருகிறது.

கூடுதலாக, 339 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து, புதிதாக ஆதார் சேர்க்கை பணிகளை, மேற்கொண்டு வருகிறது.தற்போது, ஆதார் சேர்க்கைக்கு, அதிக மக்கள் வருவதால், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளது.

இதில், 'டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்' ஆக, சேர விரும்புவோர், www.tavtv.in இணையதளத்தில், வரும், 30ம் தேதிக்குள், பதிவு செய்ய வேண்டும். மேலும், விபரங்களை, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்

டிப்ளமோ' மருத்துவம் : விண்ணப்பம் வரவேற்பு

மருத்துவம் சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகளுக்கு, மாணவ, மாணவியரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

 விண்ணப்ப படிவங்கள், அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், சென்னை, கிண்டி, கிங் நோய்த் தடுப்பு நிலையத்திலும், 24 முதல் டிச., 2 வரை வழங்கப்படும்.

  பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், ஆவண நகலுடன், 'செயலர், தேர்வுக் குழு, மருத்துவ கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை - 10' என்று முகவரிக்கு, டிச., 3க்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்ப படிவத்தின் விலை, 300 ரூபாய். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்களுக்கு, விண்ணப்ப கட்டணம் கிடையாது. மேலும் விண்ணப்பங்களை,www.tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்தும், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

CCE -SECOND WEEK MATHS TENTATIVE ANSWER KEY IN SINGLE PAGE FOR 1 to 10th Std

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!