Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 24 November 2016

குறிப்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இயற்கை உணவுத் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், குறிப்பேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று 24/11/2016 பிற்பகல் இயற்கை உணவுத் திருவிழா நடைபெற்றது..இதில் கேரட் சாலட், காய்கறிகள் சாலட், பழக்கலவை, முளைகட்டிய பச்சைப்பயறு,  வேர்க்கடலை,  மூலிகைச்சாறு, அவல் உணவு, கறிவேப்பிலை சாதம், பருப்பு சாதம், எள்ளுருண்டை, முந்திரி, திராட்சக மற்றும் பாதாம் கொட்டைகள், நலதானிய சுண்டல், கேழ்வரகு தோசை, முசுமுசுக்கை தோசை, போன்ற பல்வேறு உணவுகள் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியை திருமதி. நிறைமதி, ஆசிரியர் சங்கர் மற்றும் சமையலர் அமுதா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டு உணவை சுவைத்து மகிழ்ந்தனர்..மாணவர்களிடம் சத்தான உணவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..

செல்லாத ரூபாய் நோட்டுகளை தபால் நிலையங்களில் 'டிபாசிட்' செய்யலாம்

செல்லாத ரூபாய் நோட்டுகளை தபால் நிலையங்களில் 'டிபாசிட்' செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சேமிப்புக் கணக்கில்.. :

செல்லாத ரூபாய் நோட்டுகளை, சிறு சேமிப்பு கணக்கில் முதலீடு செய்ய பயன்படுத்த முடியாது என, அறிவித்துள்ள மத்திய அரசு, 'தபால் நிலையங்களில் உள்ள சேமிப்புக் கணக்கில் செலுத்தலாம்' என, விளக்கம் அளித்துள்ளது.  

'டிபாசிட்' :

செல்லாத ரூபாய் நோட்டுகளை, சிறு சேமிப்பு கணக்கில் முதலீடு செய்வதற்கு பயன்படுத்த முடியாது என, மத்திய அரசு, நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில், தபால் நிலையங்களில் உள்ள சேமிப்புக் கணக்குகளில், இந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை, 'டிபாசிட்' செய்யலாம் என, நேற்று விளக்கம் அளித்துள்ளது.

IGNOU HALL TICKET DOWNLOAD DEC-2016 EXAM

IGNOU HALL TICKET DOWNLOAD click here ...

NMMS-ஸ்காலர்ஷிப்' தேர்வு அறிவிப்பு

எட்டாம் வகுப்பு மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற, தேர்வு நடத்தப்படுவது வழக்கம். வெற்றி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை, மாத உதவித்தொகை, அரசால் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தேர்வு, 2017 ஜன., 28ல் நடத்தப்படுகிறது. விண்ணப்பங்களை,
வரும், 23 முதல், டிச., 2 வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். டிச., 5க்குள், விண்ணப்பிக்க வேண்டும்.

வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது

புதுடில்லி:'சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், நேற்று அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: 

சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர் களுக்கு, ஆண்டு சம்பள உயர்வை நிறுத்தும்படி, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது; இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது.

அதன்படி, மத்திய அரசு ஊழியர்களின் பணித் திறன் கணக்கிடப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டாத ஊழியர்களின் ஆண்டு சம்பள உயர்வு நிறுத்தப்படும்.இவ்வாறு அதில் 
கூறப்பட்டுள்ளது.

PG TRB:முதுநிலை ஆசிரியர் நியமனம்: ஒரு வாரத்தில் அறிவிப்பு.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வி வாரியமான, டி.ஆர்.பி., மூலம், 1,500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு, ஒரு வாரத்தில் வெளியாக உள்ளது.
தமிழகத்தில், அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, பாடம் எடுக்கும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களில், 1,500 இடங்கள் காலியாக உள்ளன. 'விரைவில் நேரடி நியமனம் நடக்கும்' என, மார்ச்சில், டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால், இதுவரை நியமன பணிகள் துவங்கவில்லை.இதுகுறித்து, பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகளிடமிருந்து,டி.ஆர்.பி.,க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், முதுநிலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., ஒரு வாரத்தில் வெளியிடும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

HSC NR ONLINE UPLOAD | நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் www.tngdc.gov.in என்ற இணையதள முகவரியில், தமது User ID, Password ஐ கொண்டு வருகிற 24.11.2016 முதல் 30.11.2016 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அரசு தேர்வுத்துறைகள் அறிவுறித்தியுள்ளது.

நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் www.tngdc.gov.in என்ற இணையதள முகவரியில், தமது User ID, Password ஐ கொண்டு வருகிற 24.11.2016 முதல் 30.11.2016 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அரசு தேர்வுத்துறைகள் அறிவுறித்தியுள்ளது.
நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணியின் முதற்கட்டமாக, அரசுத் தேர்வுத் துறை இணையதள வழியே அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பெயர்ப்பட்டியலை Offline-ல் தயாரித்திட உதவக்கூடிய வெற்று மென்பொருளை பதிவேற்றம் செய்து, அனைத்து பள்ளிகளும் அவரவர் User ID, Password ஐ பயன்படுத்தி 07.10.2016 முதல் 26.10.2016 வரையிலான நாட்களுக்குள் பதிவிறக்கம் செய்து, உறுதிமொழிப் படிவங்களின் அடிப்படையில் Offline-ல் பெயர்ப்பட்டியலை தயாரித்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

 தற்போது அப்பணிகளின் தொடர்ச்சியாக, Offline-ல் தயாரிக்கப்பட்ட பெயர்ப்பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் www.tngdc.gov.in என்ற இணையதள முகவரியில், தமது User ID, Password ஐ கொண்டு வருகிற 24.11.2016 முதல் 30.11.2016 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்திட வேண்டும். பெயர்ப்பட்டியலை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர் திருத்தங்கள் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படமாட்டாது என்பதால் மாணவர்களது விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கு முன்னரே அனைத்து விவரங்களையும் சரிபார்த்து பிழைகளின்றி பதிவேற்றம் செய்திட அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை பதிவிறக்கம் செய்து தவறாது "Print"எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்வது தொடர்பான வழிமுறைகள் 

அரசு ஊழியர்கள் வாகனம் வாங்க வட்டியில்லா முன்பணம் ரத்து: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

ஏழாவது மத்திய ஊதியக் குழு பரிந்துரையின்படி, அரசு ஊழியர்களுக்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் வாங்குவதற்கு வட்டியில்லா முன்பணம் வழங்கலை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன், "ஏழாவது மத்திய ஊதியக் குழு அமலாக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் வாங்குவதற்கு முன்பணம் வழங்கும் நடைமுறை ஒழிக்கப்பட்டுள்ளதா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மாநிலங்களவையில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் எழுத்துப்பூர்வமாக புதன்கிழமை அளித்துள்ள பதில் வருமாறு:
ஏழாவது மத்திய ஊதியக் குழு பரிந்துரைகளின்படி, அரசு ஊழியர்களுக்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் வாங்குவதற்கு முன்பணம் வழங்கப்படும் முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவ்வப்போது வாகனங்கள் வாங்குவதற்கான சில திட்டங்கள் சந்தையில் நடைமுறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு வாகன முன்பணம் வழங்குவதை ரத்து செய்யுமாறு ஊதியக் குழு பரிந்துரை செய்திருந்தது. இப்பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்று அமைச்சர் அதில் தெரிவித்துள்ளார்.

Instructions on How to use Shaala Siddhi Web Portal

ShaalaSiddhi - Video on How to use/operate Shaala Siddhi Web Portal - Part 1

ShaalaSiddhi - Video on How to use/operate Shaala Siddhi Web Portal - Part 2

Shaala Siddhi Web Portal

அரசு ‘லேப் டெக்னீசியன்’ – விண்ணப்ப விநியோகம்!

மருத்துவத்துறையில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். போன்ற படிப்புகள் மட்டுமல்லாமல், 23 பட்ட மருத்துவ படிப்புகளும், 29 டிப்ளமோ படிப்புகளும் உள்ளன. இதனை தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும்

சிறந்த வேலை வாய்ப்பினை பெறலாம். இந்நிலையில், மருத்துவம் சார்ந்த பல்வேறு டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

டிப்ளமோ மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், சென்னை, கிண்டி, கிங் நோய்த்தடுப்பு நிலையத்திலும் கிடைக்கும். விண்ணப்ப விநியோகம் நாளை முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, உரிய ஆவண நகலுடன், ‘செயலர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை – 10’ என்ற முகவரிக்கு, டிசம்பர் 3ஆம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

கார்டியோ சோனாகிராபி டெக்னீசியன், இசிஜி - டிரெட்மில் டெக்னீசியன், பம்ப் டெக்னீசியன், கார்டியாக் கேத்தரைட்டேஷன் லேப்டெக்னீசியன், எமர்ஜன்சி கேர் டெக்னீசியன், ரெஸ்பிரேட்டரி தெரபி டெக்னீசியன், டயாலிசிஸ் டெக்னீசியன், அனஸ்தீசியா டெக்னீசியன், தியேட்டர் டெக்னீசியன், ஆர்த்தோபீடிக் டெக்னீசியன், ஆடியோமெட்ரி, ஹியரிங் லாங்க்வேஜ் அண்ட் ஸ்பீச், கிளினிக்கல், தெரப்டிக், நியூட்ரிஷன் அண்ட் ஃபுட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட், மல்டி பர்ப்பஸ் ஹாஸ்பிடல் ஒர்க்கர் கோர்ஸ், இஇஜி - இஎம்ஜி கோர்ஸ் ஆகியவற்றில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் சேர விரும்புவோர் பிளஸ்-2 தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவுகளை எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்களும் இந்தச் சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

சராசரியாக 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினர் 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தின் விலை ரூபாய் 300. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. மேலும், விவரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்..

தொடக்கக் கல்வி - டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 125 ஆவது பிறந்த நாள் முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் (6 - 8 ) வரை பயிலும் மாணவர்களுக்கு இணைய வழி மூலம் வினாடி வினா நடத்துதல் சார்ந்த இயக்குநர் செயல்முறைகள்!!

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!