Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 2 December 2016

SSA - BASIC SKILLS DEVELOPMENT IN TAMIL LANGUAGE @ PRIMARY LEVEL REG PROCEEDING...

அகஇ - தொடக்கக் கல்வி - வட்டார மைய அளவில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "தமிழ் கற்பித்தலில் அடிப்படை திறன்களை வளர்த்தல்" என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் பயிற்சி (டிசம்பர் 8,9 மற்றும் 14,15) இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

TNPSC - VAO counselling shedule 19-12-16 to 23-12-16

click here

G.O NO.562 DATED :28.10.1998 - 30 ஆண்டுகாலம் பதவி உயர்வு இல்லாமல் ஒரே பணியில் இருந்தால் Bonus increment பெறலாம்

தொடக்கக் கல்வி - சிறுபான்மையினர் நலம் - கிராமபுறங்களில் வசிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களின் விவரங்களை 06.12.2016க்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு.

தொடக்கக் கல்வி - விருது - சிறந்த பொது நிர்வாகத்திற்கான "பிரதமர் விருது" - 2015-16ஆம் ஆண்டுக்கான தகுதியுடையோர் விண்ணப்பங்கள் அனுப்ப கோரி இயக்குனர் உத்தரவு

TRB:1,260 கலையாசிரியர் பணியிடம் விரைவில் நிரப்ப அரசு திட்டம்'

'ஆசிரியர் தேர்வு வாரியத்தால், 1,260 கலையாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும்,'' என, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், கண்ணப்பன் தெரிவித்தார்.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், தையல், இசை உள்ளிட்ட, கலைப் பாடப் பிரிவுகளுக்கு, 1,260 பணியிடங்கள் காலியாக உள்ளன; நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ளன. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில்,''அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, கலை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப, ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

''அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,260 கலையாசிரியர் பணியிடங்களை நிரப்ப, இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும். இத்தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்,'' என்றார்.

திருவாரூர் மாவட்ட அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.

அரசு பள்ளி மாணவர்களுக்கு துணிந்து நில் பயிற்சி!!!

FESTIVAL ADVANCE FORM

கனமழை - காரணமாக நாளை (2.12.2016) கீழ்கண்ட 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

கனமழை - காரணமாக நாளை (2.12.2016) கீழ்கண்ட 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

1.விழுப்புரம்(பள்ளிகளுக்கு விடுமுறை)
2.சென்னை (பள்ளிகளுக்கு விடுமுறை)
3.திருவள்ளூர் (பள்ளிகளுக்கு விடுமுறை)
4.காஞ்சிபுரம் (பள்ளிகளுக்கு விடுமுறை)

5.நாகை (பள்ளிகளுக்கு விடுமுறை)
6.கடலூர்  (பள்ளிகளுக்கு விடுமுறை),
7.நாகப்பட்டினம்

கணக்கில் காட்டப்பட்ட பணத்தில் வாங்கிய நகைகளுக்கு வரி கிடையாது: மத்திய அரசு

புதிய வரி மசோதா குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதையடுத்து கணக்கில் காட்டப்பட்ட பணத்தில் வாங்கிய தங்கம் உள்ளிட்ட நகைகளுக்கு வரி கிடையாது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. 

அதாவது பரம்பரை நகைகள் உட்பட தங்க நகைகள் மீது வரி உண்டு என்று வதந்திகள் பரவ, மத்திய அரசு விளக்கம் அளிக்கும் போது, “கணக்கில் காட்டப்பட்ட பணத்தில் வாங்கும் தங்கம் மற்றும் நகைகள், குடும்பத்தில் வழிவழியாக வந்த நகைகள் ஆகியவை ஏற்கெனவே உள்ள சட்டவிதிகளின் படியோ அல்லது தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டத்திருத்த விதிகளின் படியோ வரி கிடையாது என்று தெளிவுறுத்துகிறோம்” என்று அறிக்கை ஒன்றில் மத்திய அரசு கூறியுள்ளது. 

மேலும், “சட்டபூர்வமாக எந்த அளவுக்கு நகை வைத்திருந்தாலும் அதற்கு வரி கிடையாது” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால் வரியை நிர்ணயிக்கும் அதிகாரியின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, “இது தொடர்பான அதிகாரி ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் அந்தஸ்து, அதன் பாரம்பரியம், பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், அந்த குடும்பம் சார்ந்த சமூகப் பிரிவு மற்றும் சில விவரங்களை பரிசீலித்து அந்த குடும்பத்திற்குச் சொந்தமான பெரிய அளவிலான நகைகளை பறிமுதல் செய்வதா அல்லது இல்லையா என்பதை முடிவெடுக்கலாம். சோதனைக்கு உத்தரவிடும் வருமான வரி ஆணையர்/இயக்குநருக்கு சோதனை அறிக்கை அளிக்கும் போது இந்த விவரங்களை அளிக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை எண்: 233 நாள் : 01.12.2016 தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் ஆணை வெளியீடு!!

புதுக்கோட்டை CEO திரு. இல.வெங்கடாஜலபதி அவர்கள்

தொடக்க கல்வி இயக்குநர் அலுவலகத்தில் துணை இயக்குனர் (DD) ஆகவும், 

திருச்சி CEO திருமதி சாந்தி அவர்கள் மீண்டும் புதுக்கோட்டை CEO ஆகவும் மற்றும் திருச்சி பொறுப்பு CEO ஆகவும் நியமனம்.

திருவள்ளூர் மாவட்ட CEO ஆக திரு. ராஜேந்திரன் அவர்களும்நியமனம்.

SSA - 6 - 8 ஆம் வகுப்பு களில் Techno Club ஏற்படுத்துதல் மற்றும், சிறந்த கணினி இயக்கம் அறிந்த மாணவர்களுக்கு ஒன்றிய அளவிலும் மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்துதல் சார்ந்த செயல்முறைகள்

SSA - Professional Development Programme of Primary and upper Primary School Teachers in Teaching English - State level Training for Master Trainers - Reg Proceeding...

மாணவர்களின் ஆதார் எண் பதிவு டிச., 20 வரை கெடு.

மாணவர்களின் ஆதார் எண்ணை, டிச., 20க்குள் பதிவு செய்ய, பள்ளிகளுக்கு, 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது. அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கும், ஆதார் எண் பதிவு செய்து, அதை பள்ளி ஆவணங்களில் குறித்து வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 
இதற்கான பணிகள், இரு ஆண்டுகளாக நடந்து வருகின்றன. பல காரணங்களால், பல லட்சம் மாணவர்களுக்கு, இன்னும் ஆதார் எண் கிடைக்கவில்லை.எனவே, ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்ட, மின்னணு கல்வி மேலாண்மை திட்டமான, எமிஸ் திட்டத்திலும், மாணவர்களின் விபரங்களை, முழுமையாக பதிவேற்ற முடிவதில்லை.

இந்நிலையில், அனைத்து பள்ளி மாணவர்களும் ஆதார் எண் பெறும் வகையில், பள்ளிகளில், தமிழ்நாடு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. யாரும் விடுபடாமல், டிச., 20க்குள், ஆதார் எண் பதிவு செய்ய, பள்ளிகளுக்கு, 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகளில் 'டெக்னோ கிளப்'

மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், அறிவியல் அறிவை வளர்க்க பள்ளிகளில் 'டெக்னோ கிளப்' துவக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், அறிவியல் அறிவை வளர்க்கும் வகையில் தொழில் நுட்ப கழகம் எனும் 'டெக்னோ கிளப்' துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அறிவியல், கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களில் ஆர்வம் உள்ள மாணவர்கள் ஐந்து பேர் உறுப்பினர்களாகவும், எட்டாம் வகுப்பு மாணவர் கிளப் தலைவராகவும் நியமிக்கப்படுவார். கிளப்பை வழி நடத்துபவர்களாக கம்ப்யூட்டர் ஆசிரியர் அல்லது அறிவியல் ஆசிரியர் நியமிக்கப்படுவர்.

போட்டி : சிறப்பாக செயல்படும் 'டெக்னோ கிளப்'களுக்கு இடையே தேர்வு போட்டி நடத்தப்படும். போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வட்டாரம், மாவட்டம், மாநில போட்டிகளில் பங்கேற்பர்.

கட்டாய கல்வி உரிமை--- சட்டம் : மாணவர்களுக்கு போட்டிகள்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பெண் கல்வி, கட்டாய கல்வி உரிமை சட்டம், சுகாதாரம் குறித்து எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி,
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை போட்டிகளும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகளும் நடத்தப்படுகிறது.போட்டிகள் பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் என, மூன்று கட்டமாக நடக்கிறது. பள்ளி அளவில் முதல் மூன்று இடம் பேறுவோருக்கு சான்றிதழ் மட்டும் வழங்கப்படும். வட்டாரம், மாவட்ட அளவில் போட்டிகளில் வெல்பர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. டிச., இறுதிக்குள் போட்டிகளை நடத்தி முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வீட்டு சிலிண்டர் விலை மீண்டும் ரூ.55 உயர்வு.

வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, மீண்டும், 55 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள், வீடு, 14.20 கிலோ; வணிகம், 19 கிலோ என, இரு வகையான, சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.

55 ரூபாய் உயர்ந்து

இவை, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதந்தோறும், சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.சென்னையில், நவம்பரில், 538.50 ரூபாய்க்கு விற்ற வீட்டு சிலிண்டர், தற்போது, 55 ரூபாய் உயர்ந்து, 593.50 ரூபாயாக விற்கப்படுகிறது. 1,137 ரூபாயாக இருந்த, வணிக சிலிண்டர் விலை, 94.50 ரூபாய் உயர்ந்து, 1,231.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:சிலிண்டர் விலை மாறுதலுக்கு ஏற்ப, வீட்டு வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில், மானியம் வரவு வைக்கப்படும். நவம்பரில், வீட்டு சிலிண்டர் விலை, 39.50 ரூபாய்; வணிக சிலிண்டர் விலை, 80.50 ரூபாய் உயர்ந்தது. தற்போது, மீண்டும் அவற்றின் விலை முறையே, 55 ரூபாய், 94.50 ரூபாய் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர்கூறினார்.

பள்ளிகளில் விளையாட்டு மைதானம் கட்டாயம்.. மத்திய அரசு திட்டவட்டம்.

பள்ளிகளில் விளையாட்டு மைதானமும், உடற்கல்வி ஆசிரியரும் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.மக்களவையின் கேள்வி நேரத்தில் பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் இதனைத் தெரிவித்தார்.
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பள்ளிகளில் விளையாட்டு மைதானமும், உடற்கல்வி ஆசிரியரும் கட்டாயம் இடம்பெற வேண்டும்.என்று கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சிபிஎஸ்சி அமைப்பு இதற்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில்,‌ மாநில அரசுகளின் கல்வி வாரியங்களும் இதை செயல்படுத்த வேண்டும் என்று மத்தியஅரசு எதிர்பார்ப்பதாக விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.

CCE WORKSHEET 4th Week Question paper

CCE - 4th Week Question (05.12.2016 - 09.12.2016)

Tamil - EVALUATION 4th Week  Question paper 

English  - EVALUATION 4th Week  Question paper 

Maths - EVALUATION 4th Week Question paper 

Science  - EVALUATION 4th Week Question paper

Social science  - EVALUATION 4th Week Question paper

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!