Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 3 December 2016

இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.6% அதிகரிக்கும் !!

ஐ.நா. நாட்டில் ரூபாய் 500, 1000 நோட்டுகள் தடை செய்யப்பட்டு, பணப்புழக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘2016-2017 மற்றும் 2017-2018 ஆகிய நிதியாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவிகிதமாக உயரும்’ என்று ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது.

 

        இந்தியாவில் அடுத்த ஆண்டு (2017) பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பது குறித்து ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா-வின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வறிக்கையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி பற்றி கூறப்பட்டிருப்பதாவது, “2016-2017 மற்றும் 2017-2018 ஆகிய நிதியாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவிகிதமாக உயரும். பொருளாதாரச் சீர்திருத்தத்தின் காரணமாக முதலீடு வேகமாக அதிகரிப்பதோடு, உற்பத்தித்துறையும் வலுவடையும். தற்போது செயல்பாட்டில் உள்ள பொருளாதாரச் சீர்திருத்தங்களால் தனியார் முதலீடு அதிகரிக்கும். நடப்பு ஆண்டைப் பொருத்தமட்டில் நிதியாண்டின் முதல்கால் பகுதியில் நிரந்தர முதலீடு சுருங்கியதால் பொருளாதார நிலை நடுநிலையில் உள்ளது. அடுத்த ஆண்டில் இது மீட்சி பெறும். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையில் தொடங்கினாலும் பின்னர் நிலையான பருவமழையால் விவசாயத்தில் முன்னேற்றமும், சம்பள கமிஷனை மாற்றியமைப்பதால் நுகர்வில் மாற்றமும் ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சியில் மீட்சி உண்டாகும். அதே போல் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதன் மூலம் தனியார் துறையில் முதலீடு அதிகரித்து பொருளாதாரம் சீரான வளர்ச்சியை அடையும்” என்று அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமையாசிரியர் ’கை’யை கடிக்கும் CCE Worksheet தேர்வுகள்!!!

அரசு மற்றும் உதவிபெறும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (சி.சி.இ.,) தேர்வுகள் நடத்த தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்த பணம் செலவிடுவதால் அதிருப்தியில் உள்ளனர்.
      தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் சி.சி.இ., தேர்வுகள் நடத்த மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) உத்தரவிட்டுள்ளது. இதன்படி கடந்த இரண்டு வாரங்களாக திங்கள் - வெள்ளி மதியம் 3:00 மணிக்கு 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகின்றன. இன்னும் இரண்டு வாரம் நடக்கிறது. 
இத்தேர்வுகளுக்கான வினாத்தாள் (ஒர்க்சீட்) எஸ்.சி.இ.ஆர்.டி., இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதை பள்ளிகளில் ’டவுன்லோடு’ செய்து, ஒரு பள்ளியில் 500 மாணவர்கள் இருக்கும்பட்சத்தில் 500 நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளனர். இதற்கான செலவை தலைமையாசிரியர்கள் ஏற்க உதவி கல்வி அலுவலர்கள் வற்புறுத்துவதால் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது: 
வினாத்தாள் நான்கு பக்கம் உள்ளது. இதை நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்க நாள் ஒன்றுக்கு 700 ரூபாய்க்கு மேல் ஒரு  தலைமையாசிரியர் செலவிட வேண்டியுள்ளது. தற்போது பணம் எடுக்க கட்டுப்பாடு உள்ள சூழ்நிலையில் ஏ.டி.எம்.,ல் தினமும் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடிகிறது. 
இதில் குடும்ப செலவை பார்ப்பதா அல்லது நகலுக்கு செலவிடுவதா. சி.சி.இ., தேர்வு நடத்த உத்தரவிட்ட எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் இதற்கென தனியாக நிதி ஒதுக்க வேண்டும் அல்லது மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள் அனுப்ப வேண்டும். இதற்கு தலைமையாசிரியரை பலிகடா ஆக்கக்கூடாது. சில உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் இத்தொகை வசூலிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது, என்றார்.

சமச்சீர் கல்வி; உயர்நீதிமன்றம் அரசுக்கு நோட்டீசு!!!


தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வியை மேம்படுத்தி, தரமான கல்வி வழங்க நடவடிக்கை கோரியதை, தானாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை (நீதித்துறை) இளங்கோவன் தாக்கல் செய்த பொதுநல மனு: 
தமிழகத்தில் ஒன்று முதல் 10 ம் வகுப்புவரை நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வியை ஒழுங்குபடுத்தி, மேம்படுத்தி, தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு பதிவாளர் மனு செய்திருந்தார். தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.நாகமுத்து கொண்ட அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. 
நீதிபதிகள்: தமிழக கல்வித்துறை முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வி மற்றும் துவக்கக் கல்வி இயக்குனர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. 
இவ்விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவ நடுநிலை அறிவுரையாளராக மூத்த வழக்கறிஞர் ஐசக்மோகன்லாலை நியமிக்கிறோம். விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.

வங்கிகளில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தனி அதிகாரி வேண்டும் - ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

பள்ளிக் கல்வி - டிசம்பர் - 7 கொடிநாள் கொண்டாடுவது குறித்த இயக்குனர் செயல்முறைகள்!!

SSA - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் NON - RESIDENTIAL TRAINING - இயக்குனர் செயல்முறைகள்NMMS-ONLINE- -ல் பதிவேற்றம் செய்யும் போது Phone No., Mobile No., Email – ID அவசியம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.ஏற்கனவே வழங்கப்பட்ட USER ID/PASSWORD-ஐ பயன்படுத்தி 14.12.2016-குள் ONLINE-ல் பதியவும் -இயக்குநர் அறிவுரை


ஜன.,1 முதல் வங்கிகளில் பண பரிவர்த்தனைக்கு ஆதார் அவசியம்.

ஜன.,1 முதல் வங்கிகளில் பண பரிவர்த்தனைக்கு ஆதார் அவசியம்.
வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பண பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பண பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனையிலும் ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும். ஆதார் அடையாளங்களை உறுதி செய்யும் கருவிகளைவங்கிகளில் பொருத்த வேண்டும். வங்கிகள் - வாடிக்கையாளர்கள் இடையிலான கே.ஒய்.சி திட்டத்திற்கு மாற்றாக ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும்.வாடிக்கையாளர்களின் பல்வேறு அட்டை பயன்பாடுகளுக்கு பதிலாக புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை முழுமை யாக வங்கி கணக்குகளுடன் இணைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்படப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் சலுகைக்கு...இதே போன்று, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி முதல், ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்கள் சலுகைகள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் சமர்பிக்க வேண்டும் எனரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரேஷன் கார்டில் மீண்டும் உள்தாள் : ஆறு மாதம் நீட்டிக்க முடிவு!!!

ரேஷன் கார்டில், மீண்டும் உள்தாள் ஒட்டி, செல்லத்தக்க காலத்தை நீட்டிக்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், நேற்றைய நிலவரப்படி, 2.03 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அவற்றின் செல்லத்தக்க காலம், 2009ல் முடிவடைந்தது. பின், ஆண்டுதோறும், ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்டி,

செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
பழைய ரேஷன் கார்டுக்கு பதில், இம்மாதத்துக்குள், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்தது.ஆனால், பலர், 'ஆதார்' விபரம் தராததால், அந்த பணி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், வழக்கம் போல, ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட, உணவு துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடையில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், ரேஷன் கார்டு எண், ஆதார் எண் பதிவு செய்யப்படுகிறது.எனவே, உள்தாள் ஒட்டாமல், அந்த எண்ணை பதிவு செய்து, பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், பொங்கலுக்கு, இலவச வேட்டி, சேலை உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இதற்காக, ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட வேண்டியுள்ளது. உள்தாளில், ஓராண்டு என குறிப்பிடாமல், ஆறு மாதங்களுக்கு என, இருக்கும். ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, ஆதார் விபரம் வாங்கும் பணி, 2017 ஜன., மாதம் முடிக்கப்படும். பிப்., முதல், அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரமும் வழங்கிய குடும்பங்களுக்கு, ஸ்மார்டு கார்டு தரப்படும். அதற்குள், ஆதார் தராதவர்களுக்கு, தீவிர ஆய்வுக்கு பின்னரே, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

திருவாரூர் மாவட்ட அனைத்து ஆசிரியர்களின் பணிவரன் முறை தகுதி கான் பருவம் சிறப்பு முகாம்.

All teachrs camb details...

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 05.12.2016 அன்று விசாரணைக்கு வர உள்ளது..

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான  வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில்  வருகின்ற திங்கட்கிழமை 05.12.2016 அன்று காலை 11.30 மணி அளவில் 9ஆவது நீதிமன்றத்தில் நீதியரசர் சத்திய நாராயணன் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது..

ப.நடராசன்
மாநில தலைமை நிலையச் செயலாளர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், தருமபுரி.
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்
அரசு அங்கீகார எண் 125/2001,  பதிவு எண் 100/92

2017 ல் வார இறுதி நாட்களுடன் மகிழ்விக்க வரும் விடுமுறைகள்.

பிறக்கவிருக்கும் 2017 ம் ஆண்டில் அனைத்து விடுமுறை நாட்களும் வார இறுதி நாட்களை ஒட்டியே வருவது பலரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மொத்தம் 14 விடுமறை நாட்கள் வார இறுதி நாட்களுடன் சேர்ந்து வருகிறது. 
அதிலும் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை வருவது கூடுதல் 'ஜாக்பாட்'
செய்தி.ஜனவரி : 26 ம் தேதி குடியரசு தினம் வியாழக்கிழமை வருகிறது. சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் வெளியூர்களில் தங்கி வேலை செய்வோர் வெள்ளிக்கிழமையும் விடுமுறை எடுக்க வாய்ப்புள்ளது.பிப்ரவரி : 24 ம் தேதி வெள்ளிகிழமை மகாசிவராத்திரி. மார்ச் :11, 12 ஆகிய நாட்கள் சனி,ஞாயிறு இதைத் தொடர்ந்து 13 ம் தேதி திங்கள்கிழமை ஹோலி பண்டிகை விடுமுறை.

25, 26 சனி,ஞாயிறு. 28 ம் தேதி கூடி பட்வா (வடமாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகை) விடுமுறைஏப்ரல் :1, 2 சனி,ஞாயிறு, இதைத் தொடர்ந்து 4ம் தேதி ராம நவமி விடுமுறை.13 ம் தேதி வைஷாகி பண்டிகை, 14ம் தேதி அம்பேத்கார் ஜெயந்தி மற்றும் புனிதவெள்ளி. ஏப்ரல் 14ம் தேதி தென்னிந்தியாவில் தமிழ் புத்தாண்டு தினமாகவும், சித்திரை விஷூவாகவும் கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து 15, 16 ஆகிய நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை.

16ம் தேதி ஈஸ்டர் தினம் விடுமுறையாகவே கருதப்படுகிறது.29, 30 சனி, ஞாயிறு விடுமுறை. இதனைத் தொடர்ந்து மே 1 ம் தேதி விடுமுறை.ஜூன் : 24, 25 சனி, ஞாயிறு. இதைத் தொடர்ந்து 26ம் தேதி திங்கள்கிழமை ரம்ஜான்.ஆகஸ்ட் : 12,13 சனி,ஞாயிறு. 14ம் தேதி கிருஷ்ணஜெயந்தி.

15ம் தேதி சுதந்திர தினம். மீண்டும் ஆகஸ்ட் 17 ம் தேதி வியாழக்கிழமை பார்சி புத்தாண்டு. 19 மற்றும் 20 சனி,ஞாயிறு விடுமறை. இதனால் இடையில் வரும் 16 மற்றும் 18 ஆகிய தேதிகள் விடுமுறை எடுத்தால் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.ஆகஸ்ட் 25 ம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி.

இதைத் தொடர்ந்து 26, 17 சனி,ஞாயிறு விடுமுறைஅக்டோபர் : செப்டம்பர் 30, அக்டோபர் 1 சனி,ஞாயிறு. தொடர்ந்து அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி விடுமுறை. 14, 15 சனி,ஞாயிறு. அக்டோபர் 16 திங்கள் கிழமை தசரா.

17 ம் தேதி நரக சதுர்த்தி. 18 ம் தேதி புதன்கிழமை தீபாவளி. 19 ம் தேதி பலிபிரதிபதா பண்டிகை. 20 ம் தேதி பாய்துஜ் பண்டிகை.

தொடர்ந்து 21 மற்றும் 22 சனி,ஞாயிறு விடுமுறை.டிசம்பர் :டிசம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை மிலாடி நபி. 2,3 சனி,ஞாயிறு விடுமுறை. டிசம்பர் 23,24 சனி,ஞாயிறு. டிசம்பர் 25 திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை.

தமிழக அரசுப்பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்.

இங்கே வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு.
தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம்.

சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?
பெயர் மாற்றம்
செய்வதற்கான  தகுதிகள்:
தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.
தேவையான  ஆவணங்கள் :

பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும்.
பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.
பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/
வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.
தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்
தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.
மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.
கட்டணம்:
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.
தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் & அஞ்சல் கட்டணம் ரூ.65.

செலுத்தும் முறை :
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.
அஞ்சல் மூலம்  செலுத்த :
உதவி இயக்குநர் (வெளியீடுகள்),
எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,
சென்னை-600 002
என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.
பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.
விண்ணப்பிக்கும்  முன்
கவனிக்க  வேண்டியவை :
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.
பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.
பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும்.
அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.
பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே.
அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.
நிபந்தனைகள் :
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.
பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.
இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எப்படி  பெறுவது ?
அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.
தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது.
இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.
விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:
சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும்.
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும்.
பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.
கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.

# மேலும் #விவரங்களுக்கு:
உதவி இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்
http://www.stationeryprinting.tn.gov.in/
servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.

http://
www.stationeryprinting.tn.gov.in/
forms.htm
விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.
தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:
சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.
சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும்.
இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்

சத்துணவு தூய்மையாக சமைக்கப்பட வேண்டும்; பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு தூய்மையாக சமைக்கப்பட வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர்
ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஓரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தூய்மையாக சமைக்கவேண்டும்

* மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முற்றிலும் தூய்மையாக சமைக்கப்பட வேண்டும்.

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் சமைக்கும் முன்னதாக தூய்மையான நீரில் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

* சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஒவ்வொரு நாளும் சுத்தப்படுத்துதல்.

* உணவு தயார் செய்யும் சமையல் கூடம் சுத்தமாக பராமரிக்கப்படுதல் வேண்டும்.

* சமையலர், சமையல் உதவியாளர்கள் தூய்மையான முறையில் சமையல் செய்தல்.

* மாணவர்கள் உணவு அருந்தும் இடம் சுத்தமாக வைப்பதுடன் உணவு அருந்தும்போது பறவைகள், நாய்கள் அருகில் வராமல் இருக்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.

கெடாத முட்டை

* சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டை வழங்கப்படும் போது, முட்டை கெடாமல் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

* மதியம் உணவு இடைவேளை விடப்பட்டவுடன் மாணவ, மாணவியர்களை வரிசைப்படுத்தி உணவு வழங்க வேண்டும்.

* கொதி நிலையில் உள்ள சாம்பார், உணவு வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அருகில் மாணவர்கள் சென்று விடாமல் இருக்க வேண்டும்.

* பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் உதவி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில் நாள்தோறும் இப்பணியினை கண்காணித்தல்.

கை கழுவ வேண்டும்

* மாணவர்கள் உணவு சாப்பிடும் முன்பாக தங்களின் கைகள், சாப்பாட்டு தட்டு, குடிநீர் குடிக்கும் டம்ளர் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துதல்.

* பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள கடைகளில் சுகாதாரமற்ற திண்பண்டங்களை வாங்கி உண்ணக்கூடாது.

தரமான உணவா?

* பள்ளி ஆண்டு விழா, சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா போன்ற நாட்களில் தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு போன்ற உணவு பொருட்கள் அளிக்கும் நிகழ்வுகளில் பள்ளிக்கு வெளியில் சமைத்து எடுத்து வரப்படும் உணவுப் பொருட்களின் தரத்தினை நன்கு சோதித்தப் பின்னரே பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

மேற்குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தங்கள் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பின்பற்ற தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலி சான்றிதழ்களை தடுக்க புகைப்படம், ரகசிய பார்கோடுடன் சாதி சான்றிதழ் அறிமுகம்.

தமிழகம் முழுவதும் இ சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும் சாதி சான்றிதழ்களில் விண்ணப்பதாரரின் பெயர், மாவட்டம், தாலுகா, கிராமம், எந்த வகுப்பை சேர்ந்தவர், தந்தை பெயர் மற்றும் முகவரியுடன் அரசின் முத்திரை பதித்து வழங்கப்பட்டு வருகிறது. 
இவ்வாறு வழங்கப்படும்
சான்றிதழ்களில் போலியான சான்றிதழ்களும் வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

குறிப்பாக சான்றிதழ் அவசரத்துக்காக தாலுகா அலுவலகங்களில் நடமாடும் இடைத்தரகர்கள் கையில் பணத்தை கொடுத்து ஏமாந்துவிடுகின்றனர். இடைத்தரகர்கள் தாங்கள் போலியாக தயாரித்து வைத்துள்ள அரசின் முத்திரையுடன், வருவாய்த்துறை அதிகாரிகளின் கையெழுத்தையும் தாங்களே போட்டு சான்றிதழ்களை வழங்குகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இனி, ரகசிய பார்கோடு எண்ணுடன் சம்பந்தப்பட்டவரின் புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ்கள் இ சேவை மையங்களில் வழங்கப்படும்.

தமிழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறை அடுத்த வாரம் அல்லது ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான சுற்றறிக்கை தமிழகத்தில் எல்லா இ சேவை மையங்களுக்கும் நேற்று வந்துள்ளது. அதில், ‘சாதி சான்றிதழ்களை வழங்குவதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து வருபவர்களிடம் ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்றிதழ், மாணவர்களாக இருந்தால் பள்ளியின் மாற்றுச்சான்றிதழ் நகல்களுடன் கட்டாயமாக உரியவர்களின் புகைப்படம் கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!