Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 7 December 2016

வங்கக்கடலில் மீண்டும் புதிய புயல் சின்னம்.

வங்கக் கடலில் அந்தமான் அருகே, புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. வங்கக் கடலில், நவ., 30ல் உருவான, 'நடா' புயல், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை தாண்டி, அரபிக் கடலுக்கு சென்றது.
இப்புயல், நேற்று காலை, கடலிலேயே கரைந்தது. இந்நிலையில், வங்கக் கடலில் அந்தமான் அருகே, இரு தினங்களுக்கு முன், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, விசாகப்பட்டினத்தில் இருந்து, 1,260 கி,மீ., ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து, 1,310 கி.மீ., தெற்கு நிகோபாரிலிருந்து, 260 கி.மீ., தொலைவில், நேற்று மாலை மையம் கொண்டிருந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயல் சின்னமாக உருவாகும்; இன்னும் இரு தினங்களில், விசாகப்பட்டினத்தை நோக்கி நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி வடக்கு கடலோர மாவட்டங்களில், டிச., 9 முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி காலமானார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சோ.ராமசாமி (82) மாரடைப்பு காரணமாக  இன்று காலை 5 மணி அளவில் காலமானார்.
இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். சோ ராமசாமி  1934 அக்டோபர் 5-ல் சென்னையில் ஸ்ரீநிவாசன், ராஜம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார்.

இவர் 1999 முதல் 2005 வரை மாநிலங்களவை உறுப்பின‎ராக  பணியாற்றியுள்ளார். பத்திரிக்கை ஆசிரியர்,  வழக்கறிஞர், நகைச்சுவை நடிகர், திரைப்பட இயக்குநர் என பன்முக தன்மை கொண்டவர்.

பத்திரிக்கை துறையின் சிறந்த சேவைக்காக 1985 இல் 'மஹாரான மேவார்' வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998 இல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றுள்ளார்.

வங்கக்கடலில் மீண்டும் புதிய புயல் சின்னம்.

வங்கக் கடலில் அந்தமான் அருகே, புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. வங்கக் கடலில், நவ., 30ல் உருவான, 'நடா' புயல், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை தாண்டி, அரபிக் கடலுக்கு சென்றது.
இப்புயல், நேற்று காலை, கடலிலேயே கரைந்தது. இந்நிலையில், வங்கக் கடலில் அந்தமான் அருகே, இரு தினங்களுக்கு முன், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, விசாகப்பட்டினத்தில் இருந்து, 1,260 கி,மீ., ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து, 1,310 கி.மீ., தெற்கு நிகோபாரிலிருந்து, 260 கி.மீ., தொலைவில், நேற்று மாலை மையம் கொண்டிருந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயல் சின்னமாக உருவாகும்; இன்னும் இரு தினங்களில், விசாகப்பட்டினத்தை நோக்கி நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி வடக்கு கடலோர மாவட்டங்களில், டிச., 9 முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஜெ.,யின் நிறைவேறாத உயர் பாடத்திட்ட கனவு.

அரசு பள்ளி மாணவர்கள், சர்வதேச அளவில் புகழ் பெற, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை விட, உயர்ந்த பாடத்திட்டத்தை வழங்கும் தன் கனவு, நனவாகும் முன், ஜெயலலிதா மறைந்தது, அரசு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழகத்தில், 2001ல், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. இக்குழு பரிந்துரைத்த பாடத்திட்டம், 2006ல், அமலானது. இதை தொடர்ந்து, தி.மு.க., ஆட்சியில், பல வகை பாடத்திட்டங்களை ஒருங்கிணைத்து, சமச்சீர் பாடத்திட்டம் அறிமுகமானது. இத்திட்டம், 2011 - 12ல், அமலுக்கு வரும் போது, மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது. 'சமச்சீர் பாடத் திட்டத்தை படித்தால், தமிழக மாணவர்கள், தேசிய மற்றும் சர்வதேச அளவில் தேர்வுகளில் போட்டி போட முடியாது' என, கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர். உடனே, புதிய பாடத்திட்டத்தை உருவாக்க, ஜெயலலிதா குழுவை அமைத்தார். பொதுநல வழக்கில், சமச்சீர் திட்டமே தொடர வேண்டும் என, சென்னை, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், பள்ளிக்கல்வி அமைச்சராக பாண்டியராஜன் பொறுப்பேற்றதும், '10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்காவது, தேசிய அளவில், உயர்ந்த பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும்' என, ஜெயலலிதா, தன் கனவுத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டார். அதன்படி, தனியாக குழுக்கள் அமைக்க, கல்வித் துறை முயற்சி மேற்கொண்ட நிலையில், ஜெயலலிதா மறைந்து விட்டார்.

அரையாண்டுதேர்வுகள் ஒத்திவைப்பு.

முதல்வர் ஜெயலலிதா மறைவால் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றும்,
6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 9ம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா ேநற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் காலமானார். இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று நடக்க இருந்த அரையாண்டு தேர்வு வருகிற 9ம் தேதியும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிப் பருவத்தில் சிறந்த மாணவி ஜெயலலிதா.. பிஷப் காட்டன் பள்ளி முதல்வர் பெருமிதம் !

பெங்களூர்: மறைந்த ஜெயலலிதா பள்ளிப் பருவத்தில் சிறந்த மாணவியாகவும், நல்ல தடகள வீராங்கனையாகவும் திகழ்ந்தவர் என்று அவர் படித்த பெங்களூர் பிஷப் காட்டன் பள்ளியின் முதல்வர் லாவண்யா மித்திரன் கூறியுள்ளார்.

கடந்த 1948 பிப்ரவரி 24-ல் மைசூரில் பிறந்தார் ஜெயலலிதா. தனது இரண்டு வயதில் தந்தையை இழந்தார். பின்னர் அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார். 1952 முதல் 1958 -ம் ஆண்டு வரை பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார். இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு அவர் பயின்ற பிஷப் காட்டன் பள்ளியில் இன்று காலை இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜெயலலிதாவின் மறைவு குறித்து பிஷப் பள்ளியின் முதல்வர் லாவண்யா மித்திரன் கூறுகையில், மறைந்த ஜெயலலிதா இந்த பள்ளியில் தான் ஆரம்ப கல்வி பயின்றார். பள்ளியில் படித்த போது மிகச்சிறந்த மாணவியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா, படிப்பு மட்டுமின்றி விளையாட்டிலும் சிறந்த மாணவியாக விளங்கினார். பின்னாளில் அவர் முதல்வராக பதவியேற்ற போது அந்த விழாவில் இரண்டு முறை கலந்துகொண்டேன் என நினைவு கூறினார். மேலும் ஜெயலலிதா நான்காம் வகுப்பு படித்த போது சக மாணிவிகள், ஆசிரியருடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்

எம்.ஜி.ஆர் போல் கைக்கடிகாரத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த 1987, டிசம்பர் மாதம் 24 -ம் தேதி அதிகாலை எம்.ஜி.ஆர் மறைந்ததாக செய்தி வெளியிடப்பட்டது. பின்னர் அவரது உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடமும் எழுப்பப்பட்டது. அதன் பிறகு நினைவிடத்திற்குச் சென்ற மக்களுக்கு யாரோ ஒருவர், எம்.ஜி.ஆரின் கைக்கடிகார ஓசை இன்னுமும் கேட்கிறது என்று கூறியுள்ளார்.


எம்.ஜி.ஆர் எப்போதும் அணிந்திருந்த அந்த பெரிய 'Rado' கைக்கடிகாரம் அவருடனேயே புதைக்கப்பட்டதாகவும் அது இன்னும் ஓடிக்கொண்டிருப்பதாகவும் சமாதியின் மீது காது வைத்துக் கேட்கும்போது அது ஓடும் சத்தம் காதில் விழுவதாகவும் சொல்லப்பட்ட அந்த செய்தியை தாங்கள் எம்.ஜி.ஆரின் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பால் மக்கள் நம்பினார்கள்.

என்ன அதிசயமோ அது, இந்தச் செய்தி தென் தமிழகம் முழுவதும் பரவி கடிகார ஒலியைக் கேட்பதற்காகவே மக்கள் எம்ஜிஆர் நினைவிடத்துக்கு சுற்றுலா வரத்துவங்கினர். இன்றும் எம்.ஜி.ஆர் சமாதியின் மீது லட்சக்கணக்கான பேர் காதுகொடுத்துக் கேட்க முயற்சிக்கிறார்கள், இருப்பினும் எம்.ஜி.ஆரை தகனமேடையில் வைத்தபோது, தலையில் தொப்பி, கண்ணாடி, வலது கையில் ஒரு கடிகாரம், கைவிரலில் ஒரு மோதிரம் ஆகியவற்றுடனே நல்லடக்கம் செய்தனர்.

அதேபோல் அவரை அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டு அரசியல் வாழ்வில் மகுடம் சூடிய ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் போது, கைகளில் வளையல் கைக்கடிகாரம், காதில் கம்மல் அணிந்த நிலையில் அவரது உடல் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா இந்த மண்ணுலகத்தை விட்டு மறைந்தாலும் அவரது புகழ் மக்கள் மனதை விட்டு மறையாது என்பது நிச்சயம்.

NMMS ONLINE ENTRY !!

மாணவர் விவரம் mobile no,email, * உள்ள விவரங்கள் இது போன்ற  விவரங்களை தயார் செய்து கொண்டு ONLINE ENTRY செய்தால் சுலபமாக இருக்கும்.

*www.tngdc.gov.in*  என்ற வலைதளத்திற்கு சென்று
*Welcome to ONLINE PORTAL*  ஐ CLICK செய்தால்
EXAMINATION DETAILS OPEN ஆகும்.

அதில் *NMMS* CLICK செய்தவுடன் *USERNAME & PASSWORD* கேட்கும்.
அதை உரிய இடத்தில் பதிவு செய்யவேண்டும்.

 *NMMS : Vellore  District*
---------------------------------------------
 User Name : *D30E30*   Password : *DEE30P030*
------------------------------+++-+-----
பின்னர் *ONLINE NMMS APPLICATION OPEN* ஆகும்

அதில் கேட்கப்படும் *Students information* மற்றும் *PARENTS information* ஐ தவறில்லாமல் Type செய்து
இறுதியில் *Submit* கொடுத்தால் Application ஏற்றுக்கொள்ளப்படும்.

ரூ.10 லட்சம் கோடி புதிய நோட்டுகள் தேவை! - எஸ்.பி.ஐ !!

வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்களின் கூட்டத்தை குறைப்பதற்கு குறைந்தது ரூ.10 லட்சம் கோடி புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தால்தான் நிலைமை சரியாகும் என்றும், அதிகளவிலான ரூ.500 நோட்டுகள் விநியாகிக்கப்பட வேண்டும் எனவும் எஸ்.பி.ஐ. வங்கியின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு முதல் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்த மதிப்பிழந்த இந்த நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டு வருகின்றன. மறுபுறம் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் வங்கிகளால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வங்கிகளிலும் ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் கூட்டம் இன்னும் குறையவில்லை. இதுகுறித்து இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (எஸ்.பி.ஐ) நிர்வாக இயக்குநர் ராஜ்னிஷ் குமார் கூறுகையில், “தற்போதைய நிலையில் மக்களின் பணத் தட்டுப்பாடைக் குறைக்க, குறைந்தது ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வர வேண்டும். இதில் பெரும்பாலான நோட்டுகள் ரூ.500 நோட்டுகளாக இருக்க வேண்டும். ஏனெனில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பல்வேறு சிரமங்கள் மக்களுக்கு ஏற்படுகிறது. மக்களின் சிரமங்களைப் போக்கும் வகையில் எங்களது எஸ்.பி.ஐ. வங்கியின் 49,000 ஏடி.எம்-களில் சுமார் 43,000 ஏ.டி.எம்-களை புதிய நோட்டுகள் வழங்குமாறு மாற்றியமைத்துள்ளோம். எங்களது ஏ.டி.எம்-களில் தினசரி சராசரியாக ரூ.17,000 கோடி முதல் ரூ.19,000 கோடி வரையில் எடுக்கப்படுகின்றன” என்றார்.

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கெஹரை நியமிக்க தாகூர் பரிந்துரை!!!

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கெஹர் நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

அதன் பின்னர் நீதிபதி ஜே.எஸ்.கெஹர் ஜனவரி 4,2017 அன்று ஜனாதிபதி 
பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அவர் ஜனவரி 4-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி 2017- வரை அந்த பதவியில் நீடிப்பார். இவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும் முதல் சீக்கியர் ஆவார். புதிய உச்சநீதிமன்ற 44 வது தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் என்பது குறிப்பிடத்தக்கது

வேலைவாய்ப்பு: யு.பி.எஸ்.சியில் பணியிடங்கள்!

யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி.) காலியாக உள்ள மேலாளர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:13

பணியின் தன்மை: மேலாளர் (கிரேடு-1)

வயது வரம்பு:35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி டிப்ளமோ(Degree in Business Management / Material Management)

விண்ணப்பக் கட்டணம்:ரூ.25/-

சம்பளம்: ரூ. 15600/- 39100/

தேர்வு முறை: கணினி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசி நாள்: 15.12.2016

மேலும் விவரங்களுக்கு https://upsconline.nic.in/ora/Detail.php?post=668&case=1262&id=1 என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 15 வரை ரூ. 500 செல்லும்!

நாட்டில் பணத்தட்டுபாடு அதிகளவில் ஏற்பட்டு இருப்பதால், அதை சமாளிக்கும் முயற்சியாக மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டை டிசம்பர் 15 ஆம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் செலுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக,பண மதிப்பிழப்பு அறிவிப்பை கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி அறிவித்தது. அதிலிருந்து, உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அறிவித்தது. அதன்பிறகு, ஒரு சில இடங்களில், அதாவது பெட்ரோல் பங்க், சுங்க சாவடி போன்ற இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லும் என அறிவிக்கப்பட்டது. பின்பு, டிசம்பர் 2ஆம் தேதி வரை பழைய 500 ரூபாய் நோட்டு செல்லும் என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இன்னும் நாட்டில், பணப்புழக்கமும், சில்லறைத் தட்டுப்பாடும் சீராகாத காரணத்தால், காலக்கெடு வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும்,டெபிட்,கிரெடிட் கார்டை வைத்து ஸ்வைப் இயந்திரம் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15 ஆம் தேதி வரை சுங்க சாவடிகளில் 500 ரூபாய் செல்லும் என்ற அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது விடுமுறைப் பட்டியலில் மாண்புமிகு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் இறந்த தினம் 06.12.2016 சேர்க்கப்பட்டது. !

அமைச்சரவை ஒதுக்கீடு விவரம் !!

1. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்- பொது, இந்திய ஆட்சிப்பணி, வனப்பணி, பொது நிர்வாகம்,

2. திண்டுக்கல் சீனிவாசன் -வனத்துறை

3.எடப்பாடி பழனிச்சாமி- பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள்,

4.செல்லூர் ராஜூ- கூட்டுறவு துறை,

5. பி தங்கமணி- மின்சரத்துறை மற்றும் மதுவிலக்கு

6. எஸ்.பி வேலுமணி: நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை,

7. டி. ஜெயக்குமார்- மீன் வளத்துறை அமைச்சர்

8. சிவி சண்முகம்- சட்டம் நீதி சிறைத்துறை

9. கேபி அன்பழகன்- உயர் கல்வித்துறை

10. சரோஜா- சமூக நலத்துறை, சத்துணவு திட்டடம்

11. எம்.சி சம்பத்- தொழில்துறை

12. கேசி கருப்பன் சுற்றுச்சூழல் துறை

13. பி.காமராஜ் - உணவுத்துறை, சிவில் சப்பிளைஸ்,

14. ஓ.எஸ் மணியன் -கைத்தறித்துறை,

15. உடுமைலை ராதாகிருஷ்ணன் -வீட்டு வசதி, ஊரக வளர்சித்துறை

16. வேளாண் துறை -துரைக்கண்ணன்

17. விஜய பாஸ்கர் - சுகாதாரத்துறை, குடும்ப நலம்

18. ஆர்.துரைக்கண்ணு- விவசாயம்,

19. கடம்பூர் ராஜு- தகவல் தொடர்பு துறை

20. ஆர்.பி உதயகுமார்- வருவாய்துறை அமைச்சர்

21. வெல்லமணி நடராஜன் -சுற்றுலாத்துறை

22. கேசி வீரமணி- வணிக வரித்துறை

23. கே பாண்டியராஜன் - பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு இளைஞர் நலன்

24. கேடி ராஜேந்திர பாலாஜி -பால் வளத்துறை

25. நிலோபர் கபில்-தொழிலாளர் நலதுறை

26. போக்குவரத்து துறை -எம்.ஆர் விஜயபாஸ்கர்

27. பாஸ்கரன் -கதர் துறை

28. எம்.மணிகண்டன் -தகவல் தொழில்நுட்ப துறை

29. ராஜலட்சுமி- ஆதிதிராவிட நலத்துறை

30. வளர்மதி -பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலத்துறை

31. செவ்வூர் ராமச்சந்திரன்- இந்து சமய அற நிலையத்துறை

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!