Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 8 December 2016

வங்கிகளுக்கு மூன்று நாள் விடுமுறை

நாட்டில் இன்னும் போதிய பணப்புழக்கம் இல்லாமல் மக்கள் அவதிபட்டு வருகின்றனர். இந்நிலையில், வங்கிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதால், மக்கள் இன்னும் சிரமத்தை அனுபவிக்க நேரிடும். 

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு அறிவிப்பையடுத்து, மக்கள் தங்களிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கு வங்கிகளில் காத்து கிடக்கின்றனர். மேலும், செலவுக்காக பணம் எடுப்பதற்கு ஏடிஎம்களில் கால் கடுக்க நிற்கின்றனர். மேலும், வங்கிகளில் போதிய பணம் விநியோகிக்கப்படாததால், வங்கிகளும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன. மேலும், ஒரு வாரத்திற்கு ஒரு நபர் வங்கியிலிருந்து குறைந்தபட்சமாக 24,000 வரை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பணத்தட்டுபாட்டால் அதையும் செயல்படுத்த முடியாமல் வங்கி ஊழியர்கள் தவித்து வருகின்றனர். 
இந்நிலையில், வங்கிகளுக்கு வரும் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை தொடர்ந்து விடுமுறை வருகிறது. அதாவது சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை. திங்கட்கிழமை மிலாடி நபி வருவதால் தொடர்ந்து வங்கிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதனால், இன்று வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், வங்கியிலோ போதிய பணம் இல்லை. இது குறித்து வேப்பேரி கனரா வங்கி கிளை மேலாளர் கணேஷ் கூறுகையில், “நான் பணிபுரிந்து வருகிற வங்கியில் இன்று ரூ.15 லட்சம் கொடுக்கப்பட்டது. அதனால், நபருக்கு ரூ.10,000 என்ற விகிதத்தில் பணம் விநியோகிக்கப்பட்டது. மருத்துவச் செலவு, கல்லூரி, பள்ளி கட்டணம் என தேவைகளை முன்வைக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு எங்களால் முடிந்தளவுக்கு உதவ முயல்கிறோம்’’ என்று கூறினார். 

ஒரு நாள் 25 மணி நேரமாக மாறுகிறது!

ஒரு நாளில் எனக்கு 24 மணி நேரம் பற்றாக்குறையாக உள்ளது. இன்னும் சில மணி நேரம் இருந்தால் நிறைய வேலைகளைச் செய்து சாதனை புரிவேன்’ என்று சொல்பவர்களுக்கு எல்லாம் நற்செய்தி காத்துக்கொண்டிருக்கிறது.

 பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் 24 மணி நேரத்திலிருந்து 25 மணி நேரமாக தன்னை நீடித்துக்கொள்ள இருக்கிறது.

       பூமி ஒவ்வொரு நூற்றாண்டிலும் தன்னைத்தானே சுற்றி வருவதற்கு 2 மில்லி விநாடிகள் அதிகமாக எடுத்துக்கொண்டு வருகிறது என்று அமெரிக்க புவியியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமின்றி பூமி சுற்றிவரும் நேரத்தில் ஏற்படும் மாற்றங்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நிகழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். பூமி பல சுற்றுச்சூழல் மாற்றங்களை கண்டுவந்துள்ளது. அவற்றில் முக்கிய மாற்றம் காற்றின் அடர்த்தி கூடியது. தூசுகள், வாயுக்கள் காற்றில் அதிகரித்து வருவதால் காற்றில் அடர்த்தி அதிகரித்து பூமி சுற்றிவரும் நேரத்தின் அளவு அதிகரிக்கும் நிலையை எட்டியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். பூமி சுற்றும் நேரத்தின் அளவு கூடுவது தொடருமானால், இன்னும் 2 மில்லியன் நூற்றாண்டுகளில் பூமியின் சுற்றும் நேரம் 25 மணி நேரத்தை எட்டிவிடும் என்று உறுதியாகக் கூறுகின்றனர். மேலும், இந்த நிகழ்வுக்கு நிலவின் ஈர்ப்பு சக்தியும் காரணமாக இருக்கலாமா என்றும் ஆராய்ந்து வருகின்றனர்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு காட்டாயமில்லை: மத்திய அரசு அதிரடி

குறைந்த மாதம் ஊதியம் பெறுபவர்களுக்கு இ.பி.எஃப். எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கட்டாயமில்லை என்ற அதிரடியான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. 
இதன்படி அமைப்பு சார்ந்த தொழில் துறைகளில் 15,000 ரூபாய்க்கும் குறைவாக மாதம் சம்பளம் பெறுபவர்கள் வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பது கட்டாயமில்லை. ஆனால் வேலை அளிக்கும் நிறுவனம் தனது பங்கை செலுத்த வேண்டும் என்பது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் இருந்தே இதற்கான தொகையை பிடித்தம் செய்வதால் அவற்றிற்கு எந்த பாதிப்பும் இல்லை. மத்திய அரசின் இந்த முடிவால் ஓய்வு பெறும் தொழிலாளர்களின் சேமிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அத்துடன் 60 ஆண்டுகால இ.பி.எஃப். முறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளதாக இந்த முடிவு அமைந்துள்ளது என தொழிற்சங்க பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் முடிவால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி  சட்டபூர்வ அந்தஸ்தை இழக்கிறது. வருங்கால வைப்பு நிதிக்கான குறைந்தபட்ச பங்களிப்பை 12 சதவிதத்தில் இருந்து குறைப்பதற்கான சட்டத்திருத்தத்தை மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயார் செய்து வைத்துள்ளது. ஆனால் அரசியல் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்றத்தில் அதை தாக்கல் செய்ய முடியாமல் மோடி அரசு நிலுவையி்ல் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு மடங்கு வேகம், நான்கு மடங்கு தூரம் : ப்ளூடூத் 5 அறிமுகம்

உலகில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வயர்லெஸ் தொழில்நுட்பமான ப்ளூடூத் 4.2 சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ப்ளூடூத் தொழில்நுட்பத்தின் புதிய அப்கிரேடு சில காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. பயனர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக ப்ளூடூத் 5 அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. 

அடுத்த தலைமுறை வயர்லெஸ் தொழில்நுட்ப தளமாகவும், இனி வரும் பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தவும் ப்ளூடூத் 5 தயார் நிலையில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ப்ளூடூத் 5 தொழில்நுட்பத்தில் நீண்ட தூரம், அதிக வேகம் மற்றும் அதிகளவு பிராட்காஸ்ட் மெசேஜ் திறன் போன்றவை முக்கிய மேம்படுத்தல்களாக இருக்கின்றன. சிறப்பம்சங்களை பொருத்த வரை இரு மடங்கு அதிகமான, தரவு பரிமாற்ற வேகமும், நான்கு மடங்கு பரப்பளவு தூரமும் வழங்கப்பட்டுள்ளது. இதோடு வழக்கத்தை விட எட்டு மடங்கு அதிகளவு பிராட்காஸ்ட் மெசேஜ்களையும் அனுப்ப முடியும். 

ப்ளூடூத் 5 பெற்றிருக்கும் சிறப்பம்சங்களை பொருத்த வரை ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் அணியக்கூடிய சாதனங்களான ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பல்வேறு இதர பயன்பாடுகளுக்கு ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'வளர்ந்து வரும் IoT தலைமுறையில் ப்ளூடூத் 5, மற்ற வயர்லெஸ் தொழில்நுட்பங்களுடன் எவ்வித சிரமமும் இன்றி இணைந்து வேலை செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது,' என ப்ளூடூத் நிர்வாக இயக்குனர் மார்க் பாவெல் தெரிவித்துள்ளார்.

ரூ.2000 வரை டெபிட்- கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் சேவை வரி கிடையாது: விரைவில் அமல்

ரூ.2000 வரையிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கு டெபிட்/கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தினால் சேவை வரி கிடையாது என்ற அறிவிக்கையை அருண் ஜேட்லிநாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யவுள்ளார். 

பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அடுத்து ரொக்கமற்ற பொருளாதாரத்தை நோக்கிய நகர்வுக்காக இந்த சேவை வரி விலக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

நாட்டில் பணத்தட்டுப்பாடு உள்ளதை அருண் ஜேட்லி ஒப்புக் கொண்டுள்ள அதே வேளையில், நிபுணர்களோ மக்களிடமிருந்து திரும்ப பெற்ற நோட்டுகளுக்கான புதிய நோட்டுகளை அச்சடித்து விநியோகம் செய்யும் நடவடிக்கைக்கு மாதங்கள் சில ஆகும் என்று கூறுகின்றனர். 

வியாழனன்று இந்த சேவை வரி விலக்கு அறிவிக்கையை அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். 

இதற்கிடையே ரூ.2000 வரையிலான ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு பயனாளர்கள் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி வியாழனன்று தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இன்று அறிவித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மூன்று நாள் துக்கம் அனுசரித்து பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்றுடன் மூன்று நாள் நிறைவு பெறுவதையடுத்து நாளை பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில் திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இன்று அறிவித்துள்ளது. 

200 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த சீனப்பெண்மணி

சீனா நாட்டைச் சேர்ந்தவர் லி சிங்-யோன்.இவர்தான் உலகிலேயே அதிக வயது வரை வாழ்ந்தவராக கருதப்படுகிறார்.  இவரின் பிறப்பை பற்றி இன்று வரையும் சரியான தகவல்கள் எதுவும் கிடைக்கப்படாமலே உள்ளது.லி சிங்-யோன் அவர்கள் 1736-ம் ஆண்டு பிறந்தார் எனவும், ஆனால் வரலாற்றின்படி பார்க்கும் போது இவர் 1677-ம் ஆண்டிலேயே பிறந்திருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.லி சிங்-யோன் எந்த ஆண்டில் பிறந்திருந்தாலும் இவரது வயது 197 அல்லது 256 ஆக இருக்க வேண்டும்.சீன அரசின் வரலாற்று கோப்புகளில், லீயின் 150வது மற்றும் 200வது பிறந்த நாட்களுக்கான வாழ்த்து தெரிவித்த விஷயங்கள் உள்ளது. இதை தான் சீனாவின் செங்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் வூ என்பவர் ஊர்ஜிதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.டைம் பத்திரிக்கையில் இவர் 197 வயது வரை வாழ்ந்து, இவரின் பத்தாவது வயதில் இருந்தே கன்சூ, ஷான்ஷி, திபெத், சியாம் மற்றும் மஞ்சூரியா போன்ற பகுதிகளுக்கு பயணம் செய்து, நிறைய மூலிகைகளை தன் 100 வயது வரை சேகரித்துள்ளார். பின் இவர் மூலிகைகள் மற்றும் அரிசி ஒயின் சாப்பிட்டே உயிர் வாழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.சீன இராணுவ அதிகாரி லீ தன்னுடைய 250 வயதில் இறந்த பிறகும் கூட நல்ல கண் பார்வை, விறுவிறுப்பான உடல் திறன், ஏழடி உயரம், நீளமான நகங்கள், சிவந்த நிறம் ஆகிய தோற்றத்தை கொண்டிருந்ததாக கூறுகின்றார்கள்.இவ்வளவு ஆண்டுகள் லி சிங்-யோன் உயிர் வாழ்ந்ததற்கான ரகசியங்களாக கூறப்படுவது:-  * லி சிங்-யோன் தன்னுடைய பத்து வயதில் மூலிகையாளராக தன் துறையை தேர்ந்தெடுத்தார். இதனால் இவர் நாற்பது வருடங்கள் goji berries, lingzi, wild ginseng, he shou wu, gotu kola, மற்றும் அரிசி ஒயின்  போன்ற மூலிகை உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் தான் நூறு வயதிற்கு மேல் வாழ்ந்ததாக கூறுகிறார்.  * பின் இவர் 1749-ம் ஆண்டில் தனது 71வது வயது இருக்கும் போது சீன இராணுவத்தில் தற்காப்பு கலை பயிற்றுவிக்கும் நபராக சேர்ந்தார்.   * லி சிங்-யோன் தன்னுடைய வாழ்வில் 23 திருமணங்கள் செய்துள்ளார். இதனால் இவருக்கு 200 குழந்தைகள் உள்ளது. ஒருநாள் இவரின் வாழ்வில் 500வருடங்கள் வாழ்ந்த நபர் ஒருவரை சந்தித்ததாக கூறியுள்ளார்.    * 500 ஆண்டுகள் வாழ்ந்த அந்த நபர் தான் லி-க்கு Qigong பயிற்சி மற்றும் சிறப்பு மூலிகை டயட் கற்பித்துள்ளார். இதனால் தான் இவர் நீண்ட ஆயுள் வரை வாழ முடிந்தது என்று கூறியுள்ளார்.    * லீ-யிடம் அவரது ஆயுள் இரகசியம் பற்றி கேட்டப்போது, அதற்கு அவர் ஆமை போல அமர்ந்து, புறா போல நடந்து, நாய் போல உறங்க வேண்டும். மேலும் இதயத்தை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார்.

சென்னையில் 8 இடங்களில் வருமான வரிசோதனை ரூ 90 கோடி , 100 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னைகடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்ததையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொண்டனர். இவ்வாறு ரூபாய் நோட்டு மாற்றிக்கொடுக்கப்பட்டதில் பல இடங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் புகார்கள் வருகின்றன இதை தொடர்ந்து வருமான வரி துறையினர் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து சென்னையில் இன்று தி.நகர் உள்பட 8 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். தேனாம் பேட்டை, அண்ணா நகர், தி.நகர் உள்பட 8 இடங்களில் இந்த் சோதனை நடைபெற்றது.சீனிவாச ரெட்டி, சேகர் ரெட்டி, பிரேம் ஆகிய தொழில் அதிபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றது.இந்த சோதனையில் மொத்தம் ரூ 90 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  இதில் ரூ.70 கோடி ரூபாய் புதியதாக வெளியிடப்பட்ட ரூ. 500, 2 ஆயிரம் நோட்டுகளாகும். மேலும் 100 கிலோ தங்கமும் பிடிபட்டது.

டிசம்பர் 10ம் தேதிக்கு பிறகு ரயில் பேருந்துகளில் பழைய ரூ.500 நோட்டு செல்லாது

புதுடெல்லி,ரயில், பேருந்து நிலையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் டிசம்பர் 10ம் தேதிக்கு பின் ஏற்கப்படாது என -மத்திய அரசு அறிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந் தேதி ரூ-500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி களில் டிசம்பர் 31-ந் தேதி வரை கொடுத்து மாற்றிக் கொள் ளலாம் என்று அவகாசம் அளிக்கப் பட் டுள்ளது. அதன் பிறகும் அந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கியில் மார்ச் மாதம் வரை கொடுத்து மாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே பொது மக்களின் இயல்பு வாழ்க்கை யில் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பழைய 500 ரூபாய் நோட்டு களை அத்தியாவசிய சேவை களுக்கு மட்டும் பயன்படுத்த மத்திய அரசு விலக்கு அளித்தது. அதன்படி மருத் துவ மனைகள், பெட் ரோல் பங்குகள், விமான நிலை யங்கள், உள்ளிட்ட அத்தி யாவசிய சேவைகளில் பழைய 500 ரூபாய் நோட்டு கள் பெறப்பட்டன.போன் கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரி செலுத்துபவர்களும் இந்த சலுகையால் சற்று நிம்மதி பெரு மூச்சு விட்டனர். 9,10,11,-ந் தேதிகளில் இந்த விலக்கு இருந்த நிலையில் பழைய ரூ.500 நோட்டுகளை அத்தியாவசிய பணிகளுக்கு பயன்படுத்த மேலும் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. அதை ஏற்று நவம்பர் 24-ந் தேதி வரை பழைய ரூ-500 நோட்டுக்களை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு கால நீட்டிப்பு செய்தது.ஆனால் 24-ந் தேதிக்கு பிறகும் மக்களிடம் பண புழக்கத்தில் சகஜ நிலை ஏற்படவில்லை. இதை கருத்தில் கொண்டு பழைய ரூ-.500 நோட்டுக்களை டிசம்பர் 15-ந் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு பொது மக்கள் பயன்படுத்தலாம் என்று மேலும் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பழைய  500 ரூபாய் நோட்டு களை பயன்படுத்தும் கால அவகாசத்தில் மத்திய அரசு இன்று திடீரென மாற்றம் செய்ததுபழைய 500 ரூபாய் நோட்டுகளை அத்தியாவசிய சேவைகளுக்கு டிசம்பர் 15-ந் தேதி வரை பயன்படுத்தலாம் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 2- ந்தேதி வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.கடந்த 3-ம் தேதி (சனிக்கிழமை) முதல் பழைய 500 ரூபாய் நோட்டுகள் எங்குமே செல்லுபடி ஆகாது. டிசம்பர் 31-ந் தேதி வரை அவற்றை வங்கிகளில் மட்டுமே செலுத்த முடியும்.  “டிசம்பர் 3-ந் தேதி முதல் பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி  பெட்ரோல், டீசல் நிரப்ப இயலாது, விமான நிலையங்களில் டிக்கெட் பெற இயலாது என்று கூறப்பட்டது.இந்நிலையில் ரயில், மெட்ரோ ரயில்,பேருந்துகளில் பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் டிசம்பர் 10ம் தேதிக்கு பின் ஏற்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.வரும் 15-ம் தேதி வரை பழைய ரூ.500 நோட்டுகள் செல்லும் என்ற அறிவிப்பில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.

மிலாடி நபிக்கான பொது விடுமுறை டிசம்பர் 13-ம் தேதிதான்; டிசம்பர் 12 அல்ல - அரசு அறிவிப்பு

தமிழக அரசின் பொது விடுமுறை தினங்களில் மிலாடி நபிக்கு டிசம்பர் 12-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது டிசம்பர் 13-ம் தேதி மிலாடி நபி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

இதுதொடர்பாக கவர்னரின் உத்தரவின்பேரில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 12-ம் தேதி (திங்கட்கிழமை) பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழக அரசின் தலைமை காஜி எழுதிய கடிதத்தில், ரபியுல் அவ்வல் பிறை நவம்பர் 30-ம் தேதி தெரிந்ததால் மிலாடி நபி டிசம்பர் 13-ம் தேதி கொண்டாடப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி டிசம்பர் 13-ம் தேதியை மிலாடி நபிக்கு பொது விடுமுறை தினமாக அறிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். 

அதனை பரிசீலனை செய்த அரசு, டிசம்பர் 13-ம்தேதியை மிலாடி நபி பொது விடுமுறையாக அறிவிக்க முடிவு செய்தது. அதன்படி டிசம்பர் 12-ம் தேதிக்குப் பதில், டிசம்பர் 13-ம் தேதி செவ்வாய்க்கிழமை மிலாடி நபி பொது விடுமுறை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் டிசம்பர் 13ஆம் தேதி தான் விடுமுறை - தமிழக அரசு

மிலாடி நபி முன்னிட்டு 13  ஆம் தேதி அன்று அரசு விடுமுறை  தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு டிசம்பர்.12 ஆம் தேதியை மிலாடி நபி என அறிவிக்கை வெளியிட்டது. 

இந்நிலையில் டிசம்பர் 13 ஆம் தேதி அன்று   மிலாடி நபி - அரசு விடுமுறை என  தமிழக அரசு அறிவித்துள்ளது

NMMS-2017 Application Form

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!