Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 9 December 2016

மாணவர்களுக்கு ரொக்கம் இல்லா வரவு-செலவு விழிப்புணர்வு : மத்திய அரசு ஏற்பாடு !!

ரொக்கம் இல்லா வரவுசெலவு பரிவர்த்தனைகளை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு
செய்து உள்ளது.இந்தியா முழுவதும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பண தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மக்களிடம் பணப்புழக்கம் வெகுவாக குறைந்து உள்ளது. .
இதனை தவிர்க்க மக்கள் தங்களது தேவைகளுக்கு ரொக்கம் இல்லா வரவுசெலவுகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முதல் கட்டமாக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:நாட்டில் ரொக்கம் இல்லா வரவுசெலவுகளை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில் நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மத்தியில் ரொக்கம் இல்லா வரவுசெலவு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்ட உள்ளது.டிசம்பர்-12ந்தேதி தொடங்கும் இந்த விழிப்புணர்வு பிரசாரம் ஒரு மாத காலம் நடைபெறும்.இதையொட்டி நேற்று 670 துணை வேந்தர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கில் ஆதரவு கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.
10 பேரை இணைக்க வேண்டும்
பல்வேறு கல்வி நிறுவனங்களை ஒரு டிஜிட்டல் வளாகத்திற்குள் ஒருங்கிணைக்கும் முயற்சியின் சிறிய தொடக்கம் தான் இது.ஒவ்வொரு மாணவரும் டிஜிட்டல் தளத்தில் சேர்ந்து தனது குடும்பத்தினர் உள்பட 10 பேரை ரொக்கம் இல்லா பரிமாற்றத்தில் இணைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

IGNOU தொலைதூரக்கல்வி படிப்புக்கு டிச.30 வரை விண்ணப்பிக்கலாம்.

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
இக்னோ தொலைதூரக் கல்வி படிப்புகளில் (2017 மாணவர் சேர்க்கை) சேர விண்ணப்பிப்பதற் கான கடைசி தேதி டிசம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.முதுகலை, இளங்கலை, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளில் சேர எந்த விதமான நுழைவுத்தேர்வும் கிடையாது. இந்தப் படிப்புகளில் சேர ஆன் லைனிலும் (www.onlineadmission.ignou.ac.in) விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மண்டல அலுவலகத்தை 044-24312766, 24312979 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், இக்னோ இணையதளத்திலும் (www.ignou.ac.in) விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இனி உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு.

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற முடியாது.

 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு: 
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசர் திரு. சத்தியநாராயணன் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இத்துணை நாட்களாக எடுத்த எடுப்பிலேயே அடுத்த வாரம் என்ற அளவில் குறுகிய கால அளவில் ஒரு தேதியினைக் குறிப்பிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்ப்ட்டு வந்தது. ஆனால் இன்று நடந்த விவாதத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பாக உள்ள பத்துக்கும் மேற்பட்ட அனைத்து வழக்குகளும் ஒன்றாக சேர்த்து இறுதி விசாரணையாக விசாரிக்கப்படும். இறுதி விசாரணை வரை தற்போதுள்ள தடையாணை உள்ளபடியே தொடரும். இதற்குப் பெயர் Stay resolution order என்பதாகும். இதன் மூலம், புதிதாக தடையாணை ஏதும் இவ்வழக்கில் பெற இயலாது. அதே சமயம், இருக்கின்ற தடையாணையை யாராலும் நீக்க முடியாது. இனி ஒரே ஒரு விசாரணை மட்டும்தான். அது இறுதி விசாரணை மட்டுமே. ஏற்கனவே இருந்ததைப் போல் வார வாரம் லிஸ்ட் வராது. மீண்டும் விசாரணைக்கு வர சில மாதங்கள் ஆகும். இன்னும் சொல்லப் போனால், மார்ச் ஏப்ரல் கூட ஆகிவிடும்.இதுதான் தற்போதைய நிலை. தங்கள் உண்மையுள்ள, ப.நடராசன், மாநில தலைமை நிலையச் செயலாளர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் ,தருமபுரி மாவட்டம்.

 High Court today has given judgment to give Promotiononly to BTs not to Promoted PG Teachers as HighSch HM.thanks to our Senior Advocate Mrs.Thatchayani Reddy. We also thank the Promoted BTs who helped us as petitioners in this case & Mr.Annamalai Special President of BT Promotive Assn.. Manivasagan.

உணவை செய்தி தாள்­களில் வைத்து கொடுக்க தடை!!!

‘செய்தித் தாள்­களில், உண­வு­களை, ‘பேக்’ செய்­வதால் ஏற்­படும் ஆரோக்­கிய பாதிப்பு குறித்து, மக்­க­ளிடம் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்த வேண்டும்’ என, இந்­திய உணவு தரக் கட்­டுப்­பாட்டு அமைப்பு, அனைத்து மாநி­லங்­களின் உணவு பாது­காப்பு அமைப்­பு­க­ளுக்கு கடிதம் எழு­தி­யுள்­ளது.

அதன் விபரம்:செய்தித் தாள்­களில் பயன்­ப­டுத்தும், ‘மை’ உடல் நல­னுக்கு ஊறு­வி­ளை­விக்கும். அதில், வண்ணம் உள்­ளிட்ட பிற ரசா­யனப் பொருட்­களின் சேர்க்கை உள்­ளது. உணவுப் பொட்­ட­லங்­க­ளுக்கு, இத்­த­கைய செய்தித் தாள்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக, உணவு தொழிலில் உள்ள, அமைப்பு சாரா துறை­யினர், உணவை பொட்­டலம் கட்ட, செய்தித் தாள்­களை உப­யோ­கிக்­கின்­றனர்.
அது போல, தின்­பண்­டத்தில் உள்ள எண்­ணெயை உறிஞ்­சவும், பலர் செய்தித் தாள்­களை பயன்­ப­டுத்­து­கின்­றனர். இதனால், தின்­பண்­டங்­களில், ரசா­யனப் பொருட்கள் கலந்து, அவற்றை உண்­போரின் ஆரோக்­கியம் பாதிக்­கப்­ப­டு­கி­றது. இத்­த­கைய அபா­ய­க­ர­மான பயன்­பாட்டை குறைக்க, உணவு தயா­ரித்து விற்­பனை செய்வோர் மற்றும் நுகர்­வோ­ரி­டையே விழிப்­பு­ணர்வு பிர­சா­ரங்­களை, மாநில மற்றும் யூனியன் பிர­தேச உணவு பாது­காப்பு அமைப்­புகள் மேற்­கொள்ள வேண்டும். செய்தித் தாள்­களில், உண­வுகள், தின்­பண்­டங்கள் உள்­ளிட்­ட­வற்றை மடித்துக் கொடுக்கும் வழக்­கத்தை, அறவே நீக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

TET எப்போது ?? தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்

NEET - நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு தமிழில் நடத்தப்பட்டும் : மத்திய அரசு

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2017-ல் நீட் தேர்வு தமிழ், அசாம், வங்கம்,மராத்தி தெலுங்கு மொழிகளில் நடக்கும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் அறிவித்தார். 

நீட் தேர்வுநாள் மாநிலங்களின் இட ஒதுக்கீடு பாதிக்கப்படாது என அமைச்சர் உத்தரவாதம் அளித்தார்.

மேலும் மருத்துவ இளம், முதுகளைப் படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டை மாநில அரசு முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

வங்கிகளிலிருந்து வாரம் ரூ.24,000 பணம் எடுக்கும் வாக்குறுதியை காப்பாற்றுக: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

மக்கள் நியாயமாக சம்பாதித்த பணத்தை எடுக்கும் விதமாக வாரம் ரூ.24,000 வரை எடுக்கும் வாக்குறுதியை 
காப்பாற்றுமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்நடவடிக்கையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்த விசாரணையின் போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், அரசுதரப்பு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கியிடம் கூறியபோது, “வாரம் ரூ.24,000 வரை பணம் எடுக்கலாம் என்று அரசே கூறியிருந்தது. மக்களுக்கு இந்தத் தொகையை அளிக்க வங்கிகள் மறுக்கக் கூடாது என்ற உத்தரவாதத்தை அரசு வழங்குமா? வாரம் ரூ.24,000 எடுக்கலாம் என்று கூறிய பிறகே அரசு தன் வாக்குறுதியை காப்பாற்றுவது அவசியமாகிறது” என்றார். 

டி.எஸ்.தாக்குர், கன்வில்கர் மற்றும் சந்திராசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு மேலும் கூறும்போது, “பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு நோட்டுத்தட்டுப்பாடு இருந்தால் அரசு அதனை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மக்கள் ரூ.24,000 எடுக்கலாம் என்று வங்கிகளுக்குச் சென்றால் ரூ.2,000, அல்லது 5000 அல்லது 8000 மட்டுமே கிடைக்கிறது. குறைந்தது ரூ.10,000 தொகையை உச்ச வரம்பாக நிர்ணயித்தால் நலல்து” என்று அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

மூத்த வழக்கறிஞர் சிதம்பரம் கூறும்போது, “ஒவ்வொரு வங்கியும் எவ்வளவு தொகை எடுக்கலாம் என்பதை தாங்களாகவே நிர்ணயித்துக் கொள்கின்றனர். டெல்லி போன்ற நகரங்களில் ரூ.2000 வைத்துக் கொண்டு ஒரு குடும்பம் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்? இதில் பாகுபாடு இருக்கக் கூடாது” என்றார்.

இதற்கு பதில் அளித்த ரோத்கி, “ஒவ்வொரு குடும்பமும் ரூ.24,000 வாரத்திற்கு பணம் எடுக்கலாம், ஒரு குடும்பத்திற்கு அதற்கு மேலா செலவு இருக்கப்போகிறது?” என்றார். 

இதற்கு பதிலடி கொடுத்த சிதம்பரம், “குடும்பத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் வங்கிக் கணக்கு வைத்துக் கொள்வதில்லை. 5 பேர் கொண்ட குடும்பத்தில் ஒரேயொரு வங்கிக் கணக்குள்ள சந்தர்ப்பங்களும் உள்ளன. வங்கிகளில் அரைநாளில் பணம் தீர்ந்துவிடுகிறது. 35% ஏடிஎம்களில் ஏதோ கொஞ்சம் பணம் இருக்கிறது. 7 வடகிழக்கு மாநிலங்களில் 5,000 ஏடிஎம் மையங்களே உள்ளன. ஏழை குடும்பங்கள் தங்கள் சொந்தப் பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும்” என்றார்.

இப்படியே வாதம் நீடிக்க ஒரு நேரத்தில் அட்டர்னி ஜெனரல் ரோத்கி, ‘எந்த ஏழை மக்கள் பணமதிப்பு நீக்கத்தை எதிர்த்து கோர்ட்டிற்கு வந்துள்ளனர்?’ என்றார். வழக்கறிஞர்கள், கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் தொடர்ந்த வழக்குகள்தான் நடைபெறுகின்றன என்றார் ரோத்கி.

இதற்கு எதிர்தரப்பிலிருந்து ‘91 பேர் இதுவரை பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு இந்தக் காரணத்தினால் பலியாகியுள்ளனர்” என்று கூறப்பட்டது. 

இதற்கு ரோத்கி, “பணம் இல்லாததால் 91 பேர் இறக்கவில்லை” என்றார். 

வழக்கறிஞர் சிதம்பரம் மேலும் கூறுகையில், “ரூ.2000 நோட்டுத்தான் ஒரே பணமாக உள்ளது. பணமதிப்பு நீக்கம் பெற்ற ரூ.500, 1000 நோட்டுகள் ரூ.12 லட்சம் கோடி வரை வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளது, ஆனால் புதிய நோட்டுகளோ ரூ.3 லட்சம் கோடி வரைதான் புழகத்திற்கு விடப்பட்டுள்ளது. எனவேதான் பணம் எடுப்பதற்கு ரேஷன் கொண்டு வர மத்திய அரசு நிர்பந்திக்கப்பட்டுள்ளது. ஆர்பிஐக்கு சொந்தமான பணம் அச்சடிக்கும் இடம் 2, அரசுக்குச் சொந்தமான நோட்டு அச்சகங்கள் இரண்டு, இதில் மாதமொன்றிற்கு ரூ.3 கோடியே அடிக்கும் திறனே உள்ளது, எனவே நோட்டுக்கு நோட்டு பதிலி அடைவதற்கு 6 மாதங்கள் ஆகும் என்கிறார். 

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறும்போது, “தினக்கூலி வாங்குபவர்களிடம் கறுப்புப் பணம் இல்லை. இவர்கள் எப்படி பிழைப்பு நடத்துவார்கள்? கோர்ட் இந்த விவகாரத்தை உடனடியாக கவனிக்க வேண்டும். வங்கிகள் தங்களிடம் பணம் இல்லை என்கின்றனர். சட்டபூர்வமான பணத்தை சட்டபூர்வமாக வங்கியிலிருந்து எடுக்க அரசு எப்படி கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்? இது உண்மையில் நம்பிக்கை துரோகமே.

“பணம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். எனவே பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது” என்றார் இதற்கு பதிலாக ரோத்கி. இதற்குப் பதில் கொடுத்த கபில் சிபல், “அப்போது, அரசின் செயல்பாடு நியாயப்படுத்த முடியாததே” என்றார். 

இந்த நிலையில் குறுக்கிட்ட தலைமை நீதிபதி தாக்கூர், ரோத்கியிடம், “எவ்வளவு பணம் வங்கிகளுக்குள் வரும், எவ்வளவு நோட்டுகள் அச்சடிக்கத் தேவை உள்ளது என்பது குறித்து அரசிடம் திட்டம் இருந்ததா, இருக்கிறதா? திட்டம் இருக்கிறதா அல்லது உந்துதலில் செய்யப்பட்ட நடவடிக்கையா இது?” என்றார். 

இதற்கு ரோத்கி “ஆம் திட்டமிருக்கிறது. ரூ.10 முதல் 11 லட்சம் கோடி வரை வங்கிகளுக்குள் வரும் என்று எதிர்பார்த்தோம்” என்றார். 

வாதம் கூட்டுறவு வங்கிகள் பற்றி திரும்பிய போது, ரோத்கி கூறியதாவது, “கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை அரசு தளர்த்த விரும்பவில்லை. சந்தேகத்திற்கிடமான நிர்வாகங்கள் நடத்தும் சங்கங்கள் இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளன” என்றார். 

இதற்கு குறுக்கிட்ட நீதிபதி தாக்கூர், “ஒன்றை முழுதும் நிறுத்துவது ஒரு விஷயம், புத்தி சாதுரியத்துடன் கட்டுப்படுத்தும் விஷயம் வேறொன்று. உங்களிடம், நாங்கள் நம்பும் வரையில் இந்த நிலைமைகளை சமாளிக்க அதிகாரிகள் இருக்கவே செய்கிறார்கள் என்று கருதுகிறோம். பணமதிப்பு நீக்கம் என்ற மிகப்பெரிய விஷயத்தைச் செய்த நீங்கள் இந்த சிறிய விஷயங்களை கவனிக்கலாம்” என்றார் ரோத்கியிடம். 

வழக்கறிஞர் சிதம்பரம் கூறும்போது, “கூட்டுறவு வங்கிகள்தான் கூட்டுறவுத்துறையின் முக்கிய அங்கமாகும். இதில் 97% தனி நபர் மற்றும் குழு கணக்குகளுக்கு கே.ஒய்.சி. உள்ளது” என்றார். கபில் சிபல் கூறும்போது, “கேரளாவில் உள்ள கூட்டுறவு வங்கிகளி மட்டும் 60 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இங்கு டெபாசிட்களும் செய்யக் கூடாது, பணம் எடுக்கவும் கூடாது என்றால் ஒட்டுமொத்த வங்கி நடைமுறைகளுமே சரிவடையும்” என்றார். 

இதனையடுத்து அரசு சிந்திக்கும் டிஜிட்டல் நடவடிக்கை முழுதும் நிறைவேற காலமாகும் என்ற நிலையில் பணத்தட்டுப்பாடு சூழலை விரைவில் தீர்க்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியதோடு, பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் கூட்டுறவு வங்கிகள் அமைப்பு நொறுங்காமல் காப்பாற்றாவும் அறிவுறுத்தி வழக்கை டிசம்பர் 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

‘15 நாட்களுக்குள் அனைத்துப் பிரச்சினையும் தீர்க்கப்படும்’

மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், ‘‘பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், அரசு வெறுமனே அமர்ந்து நிலைமையை வேடிக்கை பார்க்கவில்லை. உரிய நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. 10 அல்லது 15 நாட்களுக்குள் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விடும். பிரதமர் மோடிக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடனேயே நீதிமன்றங்களில் இவ்வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கும் முடிவு மிக ரகசியமாக மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக முன்கூட்டியே நோட்டுகள் அச்சடித்து வைக்கப்படவில்லை. புதிய நோட்டுகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பணம் பெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010-11 English BT's Regulation Order

SSA -SPD PROCEEDING- நாள்:8/12/16-அடைவுசோதனை(SLAS) நடத்துதல் -கள ஆய்வாளர்களுக்கான பயிற்சி நடத்துதல் சார்பு

NMMS - மாவட்ட வாரியாக USER NAME, PASSWORD

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!