Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 11 December 2016

சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளது வர்தா புயல்: சேதம் அதிகமாக இருக்கும் என தகவல்.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதாவும் வட தமிழகத்தில் இதனால் கனமழை பெய்யும் என்றும் தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வர்தா புயல் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 440 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல்  சென்னைக்கு மிகவும் அருகே கரையை கடக்கும் எனவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சேதம் அதிகமாக இருக்கும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வர்தா புயல் கரையை கடக்கும் போது  மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் இரண்டாம் பருவத்தேர்வு மற்றும் SLAS தேர்வு கால அட்டவணை

சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரட்டை பதவி உயர்வு

புதுச்சேரி,: சிறப்பாக பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு இரட்டை பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என, முதல்வர் நாராயணசாமி பேசி னார்.
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட் டம், லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. கல்வித் துறை இயக்குனர் குமார் வரவேற்றார்.

அமைச்சர் கமலக்கண்ணன் தலைமைத் தாங்கினார். துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு செயலர் அருண் தேசாய் வாழ்த்தி பேசினர்.முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:அரசு பள்ளிகளில் கல்வித் தரம் சரியில்லை. இது ஆசிரியர் களின் மனசாட்சிக்கும் நன்கு தெரியும்.நம்முடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறோம்.
மற்றவர்களின் பிள்ளைத்தான் அரசு பள்ளிகளில் சேர்க்கிறோம். இதுதான் நிதர்சனமான உண்மை. அரசு பள்ளிகளில் சிறந்த கட்டமைப்பு மற்றும் தரமான வசதிகள் உள்ளன. திறமையான ஆசிரியர்களும் உள்ளனர்.கணிப்பொறி ஆய்வகங்களும் உள்ளன.

ஆனால், அவற்றை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்வதில்லை.வகுப்புக்கு செல்லும்முன் ஆசிரியர்கள் முன் தயாரிப்புடன் பாடம் எடுக்கச் செல்வதில்லை. முன் தயாரிப்புடன் போனால், மாணவர்களும் ஆர்வமுடன் கற்பார்கள். அகில இந்திய அள வில் 24 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரம் உள்ளது. புதுச்சேரியில் 14 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது.கல்வியில் பின்தங்கிய மாநிலங்களான பீகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட் ஆகியவை தரமான கல்வியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன.

அங்கெல்லாம் 10 முதல் 15 சதவீதம் வரை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உருவாகி வருகின்றனர். நாமும் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிப்பது முக்கியம்.தேர்வில் 100 சதவீத வெற்றி என்பது சாதனை அல்ல. மாணவர்கள் எதைக் கற்றுக் கொண்டனர் என்பதே முக்கியம். இதுவரை நடந்தவற்றை விட்டுவிட்டு, இனிமேல் கல்வித் தரத்தை மேம்படுத்த பொறுப்புணர்வோடு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினால் விருதுகள், பதக்கங்கள் கொடுக்கிறோம்.

மேலும், சிறப்பாக பணியாற்றினால் இரட்டை பதவி உயர்வு வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து கூட்டத் தில் கலந்து கொண்ட ஆசிரியர்களும், 16 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். கல்வித் தரத்தை மேம்படுத்துவது குறித்து விவாதித்து பரிந்துரை அளித்தனர். அந்த பரிந்துரைகளில் தேவையாவற்றை அரசு நிறைவேற்றும்.இதேபோன்ற கலந்துரையாடல் கூட்டங்கள், அனைத்து பிராந்தியங்களிலும் நடத்தப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் மார்ச் 2017 வரை இல்லாமல் மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை:

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் இலவச சேவைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, இந்த சேவைகள் மேலும் நீட்டிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஜியோவை எதிர்கொள்ள போட்டி நிறுவனங்கள் புதிய சலுகைகளை அறிவித்து வருவதால் ஜியோவும் தனது இலவச சேவைக்கான வேலிடிட்டியை நீட்டிக்கலாம் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். 

மற்ற போட்டி நிறுவனங்கள் 4ஜி சேவைகளின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் செய்து வருவதால் ஜியோ இலவசங்கள் மார்ச் 2017 என்ற காலக்கெடுவை கடந்து மேலும் சில மாதங்களுக்கு கூடுதலாக நீட்டிக்கப்படலாம் என தொலைத்தொடர்பு சந்தை வல்லுநர் ராஜீவ் ஷர்மா தெரிவித்துள்ளார். ஏர்டெல் நிறுவனத்தின் புதிய வாய்ஸ் திட்டங்கள் ஜியோ சலுகைகளை போன்றே அமைந்திருக்கிறது என ஷர்மா தெரிவித்துள்ளார். ஜியோ சேவைகள் இன்னும் கட்டண முறையில் துவங்கப்படாத நிலையில் ஏர்டெல் துவங்கியிருக்கும் இப்போட்டி மிக விரைவில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பாரதி ஏர்டெல் அறிவித்த இரண்டு புதிய டேட்டா திட்டங்கள் குறைந்த வருவாய் கொண்டிருக்கும் பயனர்களுக்கென அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற திட்டங்கள் ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களும் அறிவித்திருக்கின்றன. இந்நிறுவனங்கள் அனைத்தும் தங்களது புதிய திட்டங்களை பிரீபெயிட் பயனர்களுக்கு மட்டும் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவன சேவைகள் அனைத்தும் ஜியோ இலவசங்கள் மார்ச் வரை நீட்டிக்கப்பட்ட பின் அறிவிக்கப்பட்டது. 

ஜியோவுடனான போட்டியை சமாளிக்க புதிய சேவை திட்டங்களை அறிவித்திருக்கும் ஏர்டெல் நிறுவனம், வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து பெறும் லாபத்தின் அளவினை குறைத்திருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 4ஜி சந்தையில் ஏற்பட்டிருக்கும் புதிய போட்டி நிலை காரணமாக இந்திய 2ஜி பயனர்களில் பெரும்பாலானோர் ஆரம்பகால 4ஜி சேவைகளை பயன்படுத்த துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மும்பையில் 172 மாநகராட்சி பள்ளிகளில் தானியங்கி நாப்கின் எந்திரங்கள் ரூ.1.93 கோடி நிதி ஒதுக்கீடு

மும்பை, மும்பையில் 172 மாநகராட்சி பள்ளிகளில் தானியங்கி நாப்கின் எந்திரங்களை வைக்க மாநகராட்சி ரூ.1 கோடியே 93 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.தானியங்கி நாப்கின் எந்திரம்

மும்பை மாநகராட்சியின் கீழ் 1,000–க்கும் அதிகமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 100–க்கும் அதிகமானவை உயர்நிலை பள்ளிகள் ஆகும். இதேப்போல மாநகராட்சி உதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சி சார்பில் ஏற்கனவே மாணவர்களுக்கு கையடக்க கணினி உள்ளிட்ட பல கல்வி உபயோக பொருட்கள் வழங்கப்படுகின்றன.இந்தநிலையில் மாநகராட்சி பள்ளிகளில் மாணவிகளின் வசதிக்காக தானியங்கி நாப்கின் எந்திரங்களை வைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.ரூ.1.93 கோடி ஒதுக்கீடு

இந்த திட்டத்திற்கு மாநகராட்சி நிலைக்குழு ஒப்புதல் அளித்தது. முதல் கட்டமாக நாப்கின் தானியங்கி எந்திரங்கள் 172 மாநகராட்சி பள்ளிகளில் வைக்கப்பட உள்ளன. மாணவிகள் அதில் இருந்து தேவையான நாப்கின்களை எடுத்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு ரூ.1 கோடியே 93 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகளே படிக்கின்றனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் நாப்கின் பயன்படுத்துவதில்லை. எனவே ஏழை மாணவிகளும் நாப்கின் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தனியார் வங்கிகளுக்கு முக்கியத்துவம் - ஆர்பிஐ மீது புகார்!

பழைய ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகளை பெற்றுக்கொண்டு புதிய ரூபாய் நோட்டுகள் கொடுப்பதில் தனியார் வங்கிகளுக்குதான் ஆர்பிஐ முக்கியத்துவம் கொடுக்கிறது’ என்று புகார் எழுந்துள்ளது.

கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு கடந்த மாதம் 8ஆம் தேதி மோடி வெளியிட்ட அறிவிப்பை அடுத்து நாட்டில் 
பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. அறிவிப்பு வெளியாகி ஒரு மாத காலமாகியும் பெரும்பாலான இடங்களில் இயல்புநிலை திரும்பவில்லை. புதிய ரூபாய் 500 நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்தும் இதுவரை ரூ.2000 புதிய நோட்டை மட்டும்தான் பெற முடிகிறது. எனவே சில்லறை தட்டுப்பாட்டால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மத்திய அரசு கூறியபடி நடந்து கொள்வதில்லை என உச்சநீதிமன்றமும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பழைய ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகளை பெற்றுக்கொள்வதில் தனியார் வங்கிகளுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறது; தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடம் மெத்தனம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. அதுபோன்று பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு புதிதாக ரூபாய் 2000, 500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய ரூபாய் 2000 நோட்டுகள் பரவலாக எல்லா வங்கிகளிலும் கிடைக்கின்றன. ஆனால், புதிய 500 ரூபாய் நோட்டு தனியார் வங்கிகளில் மட்டும்தான் கிடைக்கிறது என்றும் கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி தினமும் பணத்தைப் பெற்றுக் கொள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை அழைக்கிறது. அதற்கான டோக்கன்களும் வழங்கப்படுகின்றன. ஆனால், ரிசர்வ் வங்கி முதலில் டோக்கன் வழங்கியவர்களுக்குப் பணத்தை கொடுக்காமல், தனியார் வங்கிகளுக்குப் பணத்தைத் தருகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த செயல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை வீழ்த்தி, தனியார் வங்கிகளின் வளர்ச்சிக்குக் காட்டுவது போல் தெரிகிறது என தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ரூ.15 கோடியில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம்: அரசாணை வெளியீடு!!!

பதினைந்து கோடி ருபாய் செலவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

உடல்நலக் குறைபாடு காரணமாக இரண்டரை மாதங்களாக அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி இரவு 11.30 மணி அளவில் மரணமடைந்தார். மறுநாள் மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் கடற்கரையில் அமைந்துள்ள  எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில நல்லடக்கம் செய்யப்பட்டது. 
        இந்நிலையில் ஜெயலலிதாவிற்கு பதினைந்து கோடி செலவில் நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தகவல் தெரிவித்தார்.

ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா: தமிழக அமைச்சரவையில் தீர்மானம்!!!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத  ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசினை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு: 

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத  ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசினை வலியுறுத்த வேண்டும். 
நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவிற்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை 
ரூ.15 கோடி செலவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பதற்கான அரசாணை 
சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் பெயரை மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இன்றைய அமைச்சரவை கூட்டடத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மெக்கானிக் விண்கலம் தயாராகிறது!

விண்வெளி குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள உலக நாடுகள் தங்களின் சார்பில் பல விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். 

 டெக்னாலஜியின் வளர்ச்சி பெரிய கட்டத்தை எட்டிவரும் நிலையில் பல விண்கலங்கள் வானில் சுற்றி விண்வெளி குறித்த பல அரிய விஷயங்களை விண்கலங்கள் கண்டுபிடித்து வருகின்றன. 
அதில் பழுதானவை மற்றும் பழுதாகதவைகள் என இரண்டு வகையிலும் இருக்கின்றது. பழுதான விண்கலங்கள் பெரும்பாலும் வானிலேயே சுற்றிக்கொண்டிருக்கும். பழுதாகி சுற்றிக் கொண்டிருக்கும் விண்கலம் அதிக அளவில் பயன்படாதவைகளாகவே இருக்கும். ஆனால், சில சமயங்களில் உபயோகத்தில் இருக்கும் விண்கலங்கள் பழுதடைந்து செயலற்று விண்ணில் சுற்றும் போது ஆராய்ச்சி கூடத்தில் இருந்தபடியே விண்கலத்தை பழுது நீக்கிவிடலாம் என்றாலும் அதனை மேலும் எளிதாக்கும் நோக்கில் Restore-L என்ற விண்கலத்தினை தயாரிக்க இருக்கின்றனர் நாசா ஆராய்ச்சியாளர்கள். 
இந்த மூலம் விண்ணில் பழுதாகும் விண்கலத்தை விண்ணிலேயே பழுது பார்த்து இயங்க வைத்துவிடலாம். இதற்கு Restore-L விண்கலம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 2020ஆம் ஆண்டின் இறுதியில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டிருக்கும் நாசா தற்போது இதனுடைய ஆரம்பக்கட்டத்தில் தான் இருக்கிறது. பழுதடைந்த நிலையில் விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்கலங்களின் மீது எரிகற்கள் விழுந்து உடைந்தால், அவை ஒவ்வொன்றாகச் சென்று மற்ற விண்களங்களை மோதக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இப்படி ஒரு முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்கள்.

வேலைவாய்ப்பு:ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியிடங்கள்!

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:112 
பணியின் தன்மை: கஸ்டமர் ஏஜென்ட் 
வயது வரம்பு: 30-35 

தேர்வு முறை:நேர்முக தேர்வு 
தேர்வு நாள்: 6.12.2016 
மேலும் விவரங்களுக்கு http://airindia.in/writereaddata/Portal/career/3991Advertisement-Customer-Agent.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!