Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 13 December 2016

Flash News:புயல் பாதிப்பு - பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

புயல் பாதிப்பு காரணமாக - பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (14.12.2016) விடுமுறை


1.சென்னை(பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)
2.திருவள்ளூர்(பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)
3.காஞ்சிபுரம்(பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை)

2 nd term Question

சென்னையை 7 மணிநேரமாக இடைவிடாமல் சூறையாடிய வர்தா புயல் கரையை கடந்து வழுவிழந்தது!

சென்னை: சென்னை துறைமுகம் அருகே அதிதீவிர வர்தா புயல் கரையை கடந்து வழுவிழந்தது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான வர்தா புயல் நேற்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணிக்குள் சென்னை துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. புயல் கரை கடக்கும்போது மணிக்கு 110 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

பின்னர் அது படிப்படியாக குறைந்து புயல் வலுவிழந்து 60 முதல் 70 கிமீ வேகத்தில் வீசத் தொடங்கியது. அப்போது காற்றுடன் சேர்ந்து பலத்த மழையும் பெய்தது. காற்றின் வேகத்தில் வீடுகளின் கூரைகள் பறந்தன. கடைகள், வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள், பேனர்கள் அனைத்தும் காற்றில் அடித்து செல்லப்பட்டன. சாலைகளில் சுமார் 20 ஆயிரம் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன.

இதில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். மரங்கள் விழுந்ததால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், சென்னையில் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

மின்சார ரயில் தடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் ரயில்களும் நிறுத்தப்பட்டன. விமான சேவையும் ரத்து செய்யப்பட்டன. நகரில் அனைத்து வகையான போக்குவரத்தும் முடங்கியதால் மக்கள் எங்கும் செல்ல முடியாமல் திணறினர். சென்னை மற்றும் புறநகரில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. நேற்று காலை முதல் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

புயல் கரையை கடந்ததையடுத்து சென்னையில் காற்றின் வேகமும், மழையும் குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை நீடிக்கும் என்றும், அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்தா புயல் கரையை கடந்த போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசியது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய கல்விக் கொள்கையை வகுக்க விரைவில் குழு அமைப்பு: ஜாவடேகர்

தேசிய கல்விக் கொள்கையை வகுக்க 10 நாள்களில் குழு அமைக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
தில்லியில் திங்கள்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
தேசிய கல்விக் கொள்கையை வகுப்பது தொடர்பாக மாநில அரசுகள், கல்வி நிலையங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள் உள்பட அனைத்துத் தரப்பினருடனும் ஏற்கெனவே விவாதம் நடத்தப்பட்டுள்ளது. டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு அளித்த பரிந்துரைகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
தேசியக் கல்விக் கொள்கையை வகுக்க கல்வியாளர்கள் அடங்கிய குழு அடுத்த 10 நாள்களில் அமைக்கப்படும். இதற்காக பல்வேறு பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இப்பணியில் ஈடுபட அவர்கள் விருப்பதுடன் உள்ளார்களா? என்பதையும் கேட்டுள்ளோம். ஏனெனில், இப்பணி முடிய மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆகும் என்றார் அவர்.
தங்கள் குழு அளித்த பரிந்துரையை பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் மத்திய அரசு வெளியிடவில்லை என்று சுப்பிரமணியன் குறைகூறியுள்ளது குறித்த கேள்விக்கு, "இப்போதைய தேசியக் கல்விக் கொள்கையை மதிப்பீடு செய்வதற்குத்தான் சுப்பிரமணியன் குழு அமைக்கப்பட்டது.
எனினும், அனைத்துத் தரப்புக் கருத்துகளும் புதிய தேசியக் கொள்கையை வகுக்கும்போது பரிசீலிக்கப்படும்' என்று ஜாவடேகர் பதிலளித்தார்.

ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் தெரியுமா?

வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கு வசதியாகவே ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர்கள் கொடுக்கப்படுகின்றன.
மேலும் புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.
புயல் சின்னம் உருவாகும் போது எல்லாம் அதற்கு ஒரு பெயர் சூட்டும் வழக்கம் 20 நூற்றாண்டில் முற்பகுதியில் உருவானது. பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகவும், புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை இதன்மூலம் தவிர்க்கலாம் என்பதற்காக மனிதர்களை போல புயல்களுக்கும் பெயர் சூட்ட தொடங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியா தான் இந்த பழக்கத்தை முதன் முதலில் தொடங்கியது. பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி. இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953-இல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு, ஓமன் ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் பெயர் சூட்டி வருகின்றன. புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000-ஆம் ஆண்டில் தொடங்கியது. தில்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004-ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.
வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன. இதில் இந்தியா கொடுத்து ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள்), லெஹர் (அலை). மேக், சாகர், வாயு. இந்த 8 பெயர்களுமே பஞ்ச பூதங்களை குறிப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக சென்னையைத் தாக்கிய "நடா' புயலுக்கு ஓமன் அப்பெயரைச் சூட்டியிருந்தது.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தையும், தென் பகுதி ஆந்திரத்தையும் தாக்கியுள்ள "வர்தா' புயலுக்கு பாகிஸ்தான் அப்பெயரைச் சூட்டியுள்ளது. உருதுச் செல்லான வர்தாவுக்கு தமிழில் சிவப்பு ரோஜா என்று பொருளாகும்.

பெட்ரோல் பங்க்குகளில் மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு சலுகை இன்று முதல் அமல்

புதுடில்லி : ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, பெட்ரோல் பங்க்குகளில் மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு 0.75% சலுகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

0.75% தள்ளுபடி :

கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் பெறுபவர்களுக்கு 0.75 சதவீதம் விலை தள்ளுபடி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இச்சலுகை இன்று (டிச.,13) முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, பொதுத்துறை பெட்ரோல் பங்குகளில் இச்சலுகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மொபைல் வேலெட், பிரீபெய்டு லாயல்டி கார்டுகளிலும் இச்சலுகை வழங்கப்படவுள்ளது.

NMMS தேசிய திறனாய்வு தேர்வுக்கான பாடத்திட்டம்

தேசிய திறனாய்வு தேர்வுக்கான பாடத்திட்டம்

NMMS...MAT Heading

1.Number Series
2.Identifying The Wrong Number In The Series
3. Letter Series

4.Change Of Sign And Number
5. Substitution of Mathematical Symbol
6. Problem Solving Questions
7. Odd - Man-Out Figures
8. Numbers Figures And Their Relationship
9. Similarity
10. Shapes Identifiacation
11.Vendiagram
12. Number Matices
13.Numbers And Symbols
14.Inserted Pictures
15.Time Related Questions
16.Direction Related Questions
17.Relationship Related Questions
18.Puzzles
19.Number Coding
20.Pictures Similarity
21.Mirror Image
22.water reflection
23.Dice Related Sum
NMMS mat question type

SAT Syllables

கணிதம்
VII  I Term, II Term, III Term
VIII I Term, II Term Only

அறிவியல்

VII  I Term, II Term, III Term
VIII I Term, II Term Only

*சமூக அறிவியல்*

VII  I Term, II Term, III Term
VIII I Term, II Term Only

குழந்தைகளுக்கு வரலாற்றை கற்பிக்க வேண்டும் !!

சந்திரன், செவ்வாய் கிரகங்களை தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா செயற்கைகோள் சில மாதங்களில் விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடப்பதாக இஸ்ரோ விண்வெளி மைய இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

செங்குந்தர் பொதுநல அமைப்பு சார்பில், சங்க துவக்கவிழா நேற்று கணபதி சி.எம்.திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், தென்னிந்திய செங்குந்த மகாசன சங்க மாநிலத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.

இஸ்ரோ விண்வெளி மைய இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது:

விண்வெளித்துறையின் வளர்ச்சி விவசாயம், மீன்வளத்துறை, மழை பொழிவு, உட்பட பல்வேறு துறைகளின் நிலைப்பாட்டை கணித்து வளர்ச்சிக்கான செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

சந்திராயன், மங்கள்யான் மட்டுமல்லாது உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு, இந்தியா மாதத்திற்கு ஓர் செயற்கைகோளை விண்ணில் செலுத்தி வருகிறது.

சந்திரன், செவ்வாய் கிரகங்களை தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்ய, சில மாதங்களில் ஆதித்யா செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

எதிர்கால குழந்தைகளுக்கு நல்ல சமூக பழக்கவழக்கங்களை கற்றுத்தர வேண்டியது காலத்தின் அவசியம். பெற்றோர்கள், நம் மரபு, முன்னோர்களின் வரலாறு குறித்து கட்டாயம் கற்பிக்க வேண்டும். பொதுநலம் என்பது அனைவரின் எண்ணங்களிலும் விதைக்கப்படவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், செங்குந்தர் பொது நல அமைப்பு சுந்தரம், செயலாளர் ராமகிருட்டிணன், துணை செயலாளர் செல்லதுரை, எஸ்.இ.எஸ் மெட்ரிக் பள்ளி தலைவர் திருவேங்கடசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை கடந்தாண்டை விட கூடுதல்!!!

தமிழகத்தில் அரசு தேர்வுத் துறை இயக்ககம் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு 2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டமானது கடலுார் மற்றும் விருத்தாசலம் என, இரண்டு கல்வி மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.

கடலுார் மாவட்டத்தில் 202 அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 31 ஆயிரத்து 525 மாணவ, மாணவியர் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இது கடந்தாண்டைக் காட்டிலும் 1,626 மாணவ, மாணவியர்கள் கூடுதலாகும்.

தேர்வு எழுத வசதியாக கடலுார் கல்வி மாவட்டத்தில் 54 மையங்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 29 மையங்களும் என, மொத்தம் மாவட்டத்தில் 83 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை கடலுார் கல்வி மாவட்டத்தில் 252 பள்ளிகளில் பயிலும் 24 ஆயிரத்து 893 பேரும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 158 பள்ளிகளில் பயிலும் 12 ஆயிரத்து 377 பேரும் என மொத்தம் மாவட்டத்தில் 37 ஆயிரத்து 270 பேர் எழுதுகின்றனர். இவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் ஆன் லைனில் பதிவேற்றும் பணி நேற்று முடிந்தது.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 2017ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. கடந்தாண்டு தேர்ச்சியை காட்டிலும் இந்தாண்டு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு அரையாண்டு தேர்வு காலையில் முடிந்தவுடன் மதியம் அடுத்த நாள் தேர்வுக்குரிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

இந்த மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லாத நாட்களில் பள்ளிக்கு வரவழைத்து அடுத்த தேர்வுக்குரிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்!!!

வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கரையை கடந்தது

வங்க கடலில் உருவான வர்தா புயல் இன்று மதியம் 3 மணியிலிருந்து 5 மணி வரைக்குள் கரையை கடந்தது. கரையை கடக்கும் போது தரைக்காற்று மணிக்கு 100 கி.மீ., - 120 கி.மீ., வரை வீசியது. தற்போது மணிக்கு 70 கி.மீ., - 85 கி.மீ., வரை வீசுகிறது. காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 50 கி.மீ., வேகத்தில் வீசும்.

2 நாட்களுக்கு மழை தொடரும்

அதிதீவிர வர்தா புயலானது, வலு குறைந்து புயலாக மாறி உள்ளது. அது வலு இழக்கும். மழை படிப்படியாக குறையும். வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும். அடுத்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் கனமழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!