Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 18 December 2016

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 01. 07. 2016 முதல் அகவிலைப்படி உயர்வு சார்பான அரசாணைHow To Use Paytm App, Add Money In Wallet & Transfer Balance..!!

We all know about Paytm but there are many peoples who don’t know about Paytm.  So today we are

share step by step guide to know how to use Paytm , how make your life style easy. Paytm is online way where any one can make mobile, Data card, Dth recharge. 
Electricity, landline/broadband, postpaid mobile , gas bill payments,  book bus tickets. Online shopping from 5000+ products at Paytm. Today we learn how to use Paytm.

How To Use Paytm App All Step By Step Guide

1. First visit www.Paytm.com  / Download Paytm App
2. If you have Smartphone then download Paytm app for better experience
3. Install & Open Paytm app
4. Register or login
5. You can register with your any email address

6. After successfully register make login to Paytm
7. To use Paytm features you have to add some Paytm wallet Money
8. Use any given payment method to add money in wallet
1) Debit card
2) Credit card
3) Net banking
4) ATM
5) IMPS
How To Add Money In Paytm Wallet All Steps

1. Open Paytm app or site

2. Login on Paytm
3. Click on “ADD MONEY” Icon at Home page of Paytm App
5. Enter amount which you want to add


6. Click on “Add Money” option
7. Apply promo code if you have any in promotional/voucher field
Note – You can see All Paytm Promo Code Using Above Given Paytm Promo Code Link


8. If you have not promo code then leave field blank and click on “Proceed to pay Rs.”
9. Choose suitable  method to pay amount, complete  payment process
10. your amount will be credited instantly in your Paytm wallet.

Steps To Use Paytm Wallet Cash : How To Use Paytm Promo Code

1. You can use Paytm for below listed transaction

– Recharge mobile phones
– Data cards Recharge
– Dth Recharge
– Electricity bill payment
– Landline/broadband bill payment
– Gas bill payment
– Postpaid mobile bill payment
– Book bus tickets
– Online shopping from 5000+ products


2. Select any one to make online transaction through Paytm
~ You want to make recharge on your mobile no. then make click on recharge option in side Paytm site / app fill all details about your recharge. Proceed to pay using your Paytm wallet online, your recharge will be done instantly.www.ednnet.in

How To Send Money From Paytm
1. Open your Paytm app & login
2. Click on “PAY” & select option “SCAN CODE”,  “MOBILE NO.”, “SHOW CODE”, as you want to send money or make merchants payment.
3. Follow Instruction and make payment.
For Mobile To Mobile Send Money (Paytm Wallet to Another Paytm Wallet)

Select Mobile No. option
Enter mobile number (enter the number of receiver)

29ம் தேதி முதல் ATM அனைத்தும் இயங்கும் -RBI

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு வரும் திங்கள்கிழமை முதல் தீரும் என சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
புதிய ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் மிஷின்களில் வைப்பதற்கு செய்யவேண்டிய பணிகள் நிறைவடைந்துவிட்டன எனவே அன்றிலிருந்து அனைத்து ஏடிஎம்களும் முழு அளவில் இயங்கும் என்றும், ₹500 நோட்டுகள் தாரளமாக புழக்கத்திற்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

TNPSC DEO EXAM CERTIFICATE VERIFICATION WILL BE HELD ON 27.12.2016

TNPSC DEO EXAM CERTIFICATE VERIFICATION WILL BE HELD ON 27.12.2016 | TNPSC DEO தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் அடங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான 11 காலிப்பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 06.08.2015 மு.ப, 07.08.2015 மு.ப. மற்றும் 08.08.2015 மு.ப ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது.

   அதில் 2432 தேர்வர்கள் பங்கேற்றனர். இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆசிரியர் பிரிவில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அழைக்கப்பட்ட 15 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்-II தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு 27.12.2016 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

 The Main Written Examination for the 11 vacancies relating to the post of District Educational Officer in Tamil Nadu School Educational Service was held on 06.08.2015 FN, 07.08.2015 FN 08.08.2015 FN. 2432 candidates had appeared for the Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification for the said Recruitment, a list of register numbers of 15 Candidates (List-II) those who have admitted provisionally to Certificate Verification to verify their eligibility under Teacher Category against thevacancies in Physics and Chemistry subjects is hosted at the Commission'sweb-site"www.tnpsc.gov.in".Thecertificateverificationwillbeheldon27.12.2016attheOfficeoftheTamilNaduPublicServiceCommission,FrazerBridgeRoad,Chennai- 600 003.V.SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TRB REGULARISARTION -REG

TRB REGULARISARTION -REG
TRB English 

TNPSC Department Exam December 2016-துறை தேர்விற்கான நுழைவு சீட்டு வெளியீடு

CLICK HERE  

அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்கள் 3.50 லட்சம் அதிகரிப்பு!

தமிழக அரசு துறைகளில், தொடர்ந்து காலிப் பணியிடங்கள் அதிகரித்து வரும் சூழலில், வரும் நிதியாண்டில், மேலும் ஒரு லட்சம் பணியாளர்கள் ஓய்வு பெற உள்ளனர்.

இதன் மூலம்,
அரசு நிர்வாகத்தில், காலி பணியிடங்களின் எண்ணிக்கை, 3.50 லட்சமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, பணிச் சுமையால் அவதிப்படும்
அரசு ஊழியர்கள், ஓய்வு பெற உள்ள ஒரு லட்சம் பேரால், மேலும், பணிச் சுமைக்கு
ஆளாக நேரிடும் சூழலுக்கு தள்ளப்பட உள்ளனர்.

தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில், 14 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசு பணி கனவில், லட்சக்கணக்கான இளைஞர் கள், வேலைவாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்து, பணிக்காக காத்திருக்கின்றனர்.

ஆனால், அரசு பணிக்கு ஆட்கள் எடுப்பது குறைவாகவே உள்ளது. காலிப் பணியிடங் களை நிரப்ப, அரசு தயக்கம் காட்டுவதால், காலியிடங்களின் எண்ணிக்கை, ஆண்டு
தோறும் அதிகரித்து வருகிறது. பணியாளர் பற்றாக்குறை காரணமாக, பணியில் உள்ள ஊழியர்களுக்கு, கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது.

எனவே, அனைத்து அரசு ஊழியர் சங்கங்க ளும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
என,அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றன. தற்போதைய நிலையில், வருவாய், ஊரக வளர்ச்சி, வணிக வரி, சமூக நலம் என, அனைத்து துறை களிலும் சேர்த்து, 2.50 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்நிலை யில், வரும் நிதி யாண்டில், ஒரு லட்சம் பணி யாளர்கள், ஓய்வு பெற உள்ளனர். இதனால், காலிப் பணியிடங் களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும். அரசு, உடனடி யாக பணியிடங்களை நிரப்பாவிட்டால், அரசுபணி கள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என, அரசு ஊழியர் சங்கங்கள், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

இது குறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலை வர், தமிழ்ச்செல்வி கூறியதாவது:கடந்த, 1977 முதல், 1983 வரை, தற்காலிகமாக பணியில் சேர்க் கப்பட்ட ஊழியர்கள் அனைவரும், 1986ல், நிரந்தரம் செய்யப்பட்டனர். அவர்களில் பெரும் பாலானோர், அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளனர். 1996ல், அரசு வெளியிட்ட அறிக்கை யின்படி, 1.86 லட்சம் பணி யிடங்கள் காலியாக இருந்தன. தற்போது, 2.50 லட்சம் பணியிடங்கள் காலி. அடுத்த ஆண்டு, ஒரு லட்சம் பணியிடங்கள் வரை, காலியாகும் நிலை உள்ளது.

அரசு, உடனடியாக காலியிடங்களை நிரப்பா விட் டால், நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படும். இவ்வளவு காலியிடங்கள் ஏற்படுவதற்கு, அரசு நிர்வாக குளறு படியே காரணம். உதாரணமாக, 100 இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது என் றால், அதில், 55 சதவீதம், நேரடி தேர்வு மூலம் நிரப்பப்படும்.

மீதமுள்ள, 45 சதவீத பணியிடம்,பதவி உயர்வின் மூலமாகவும், கருணை அடிப்படையிலும் நிரப்பப் படும். ஆனால், இந்த பணியிடங்கள் நிரப்பப்படு வதே இல்லை. இதனால், ஆண்டுதோறும் காலி யிடங்கள் அதிகரித்து வருகின்றன.வணிக வரித் துறை யில் மட்டுமே, பதவி உயர்வு மூலம், 3,000 பணியிடங்கள் நிரப்ப வேண்டி உள்ளன. அதை நிரப் பாமல், காலியாகவே வைத்துள்ளனர். நியாயமான
முறையில், காலியிடங்களை நிரப்பாததால், பலர் நீதிமன்றம் செல்கின்றனர்.

நீதிமன்றம் கூறுவதை கேட்காமல், மேல் முறையீடு செய்கின்றனர். நிர்வாக ரீதியான பணியிடங்களை கண்டறிந்து நிரப்புவதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்படுவது வழக் கம்; யாரும் நியமிக்கவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

5 ஆண்டுகள் பணிசெய்தால் நிரந்தரம்!

தமிழக அரசு பணியாளர் சங்க மாநில பொதுச் செயலர், ரவீந்தரன் கூறியதாவது:கடந்த, 1990 க்கு பின், பணி நியமனம் அதிகளவில் மேற் கொள்ளவில்லை. 1980களில் நியமிக்கப்பட்ட வர்கள், இன்று, 58 வயதை நெருங்கியுள்ளனர். 2017 - 18ல், ஓய்வு பெறுபவர் பட்டியலில் மட் டும், ஒரு லட்சம் பேர் இடம் பெற்றுள்ளனர்.

இப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுபவர் களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், தற் காலிக பணியாளர்களை, நிரந்தர பணியாளர் களாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

காலவரையற்ற போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை

''பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான, அரசு உத்தரவை வெளியிடாவிட்டால், ஜனவரியில் நடைபெறும் மாநில மாநாட்டில், காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்,'' என அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி தெரிவித்தார்.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் சங்கம் சார்பில் திருமங்கலத்தில் நடந்த ஓய்வூதியர் தின விழாவில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 2003ம் ஆண்டிற்கு பின்னர், அரசு ஊழியர் சங்க அமைப்புகளின் சார்பில் வலுவான போராட்டம் நடத்தப்படவில்லை.

அரசு ஊழியர்களையும், பெண் ஊழியர்களையும், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களையும் ஒன்று திரட்டுவதில் பிரச்னையும், பலகீனமும் உள்ளது.

அரசு நிர்வாக பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்களின் உண்மை நிலை மற்றும் கோரிக்கை குறித்து முறையாக ஆட்சியாளர்களிடம் கொண்டு செல்வதில்லை. அவர்கள் ஆட்சியாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடைவெளி ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையை மாற்ற நாம் முன்பு போல் ஒன்று திரள வேண்டும். நமக்குள் கூட்டு சக்தியை உருவாக்க வேண்டும்.

பெண் ஊழியர்கள் உட்பட அத்தனை அரசு ஊழியர்களும் சென்னையில் ஒன்று திரண்டால், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்து விடலாம். 3.5 லட்சம் தொகுப்பூதிய பணியாளர்களும் ஒன்று திரண்டால் தொகுப்பூதிய முறையை மாற்றி விடலாம்.

புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகளில் 20 சதவீதம் உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்குவது, தொகுப்பூதிய திட்டத்தை ஒழிப்பது, மீண்டும் நிர்வாக தீர்ப்பாய சிறப்பு குழு அமைப்பது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

இவை நிறைவேறாவிட்டால், திருவண்ணாமலையில் ஜனவரி 6, 7, 8, தேதிகளில் நடக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில், காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பாரதியார் பல்கலை தொலைதூர கல்வி மைய அங்கீகாரத்தில் சிக்கல்.

கோவை பாரதியார் பல்கலை நிர்வாகம், தொலைதுார கல்வி மையத்தின், 2016 - 17ம் ஆண்டிற்கான அங்கீகாரத்தை, புதுப்பிக்காமல் மெத்தனமாக இருப்பதாக, அதிருப்தி எழுந்துள்ளது.
நடப்பு, 2016 - 17ம் கல்வியாண்டில், தொலைதுார கல்வி மையங்கள் நடத்த, நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்ற பல்கலைகள் பெயர் பட்டியல், யு.ஜி.சி., இணையதளத்தில்

வெளியாகி உள்ளது. இதில், கோவை பாரதியார் பல்கலையின் பெயர் இல்லை.

இது குறித்து, தமிழ்நாடு பல்கலை பேராசிரியர்கள் சங்க மாநில தலைவர் பசுபதி கூறியதாவது:

நடப்பு கல்வியாண்டிற்கான அங்கீகாரத்தை, பாரதியார் பல்கலை புதுப்பித்து கொள்ளாமல் இருப்பது, அதிருப்தியை உருவாக்கியுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில், பல்கலை நிர்வாகிகள் மெத்தனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. பல்கலை மானியக்குழு வெளியிட்ட அங்கீகார பட்டியலில், தமிழகத்தில், நான்கு பல்கலைகளின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது வேதனைக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

பாரதியார் பல்கலை நிர்வாகிகள் கூறுகையில், 'தொலைதுார கல்வி மற்றும் தேர்வு மையங்கள் அமைப்பில், யு.ஜி.சி.,யின், வரையறையை எதிர்த்து அனைத்து பல்கலைகளும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. எனவே, இது பாரதியார் பல்கலைக்கு மட்டுமான சிக்கல் கிடையாது. தமிழகத்தில், பெரும்பாலான பல்கலைகள் இப்பிரச்னையை எதிர்கொண்டு வருகிறது' என்றனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் புறக்கணிப்பா?

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் தேர்வுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, விடுமுறை இன்றி தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், பிற பாடங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், தமிழுக்கு கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 
அதை நிரூபிக்கும் வகையில், தமிழ் பாடங்களுக்கு விடுமுறை இன்றி, தேர்வு நடத்தப்படுகிறது. அரசு தேர்வுத் துறை, நேற்று முன்தினம் அறிவித்த அட்டவணை படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, தமிழ் பாடத்தில், இரு தாள்களுக்கு, தேர்வு நடக்கிறது. இதில், இரு தாள்களுக்கும் இடையே, படிப்பதற்கு கால அவகாசமின்றி, தொடர்ந்து இரு தினங்கள் நடத்தப்படுகின்றன. மற்ற தேர்வுகளுக்கு, இரு நாட்களுக்கு மேல், படிக்க அவகாசம் தரப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழாசிரியர்கள் கூறியதாவது: தமிழக அரசின் தேர்வுத் துறை நடத்தும் தேர்விலேயே, தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்காவிட்டால், வேறு யார் முக்கியத்துவம் அளிப்பர். அதனால் தான், உயர் கல்வியில் மாணவர்கள், தமிழ் பாடத்தில் பட்டம் பெறவோ, அதில் ஆராய்ச்சி மேற்கொள்ளவோ தயங்குகின்றனர்.

ஆசிரியர்கள் நியமனத்திலும், அனைத்து பாடங்களுக்கான ஆசிரியர் காலியிடங்களை நிரப்பிய பின், தமிழ் பாடத்திற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்; இது துரதிருஷ்டவசமானது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆங்கிலேயர் காலத்தில் தமிழ் எண்கள் : மாணவி கண்டுபிடிப்பில் தகவல்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும், தமிழ் எண்கள் எழுதும் வழக்கம் இருந்துள்ளதை, ராமநாதபுரம், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி, விசாலி கண்டுபிடித்துள்ள ஓலைச்சுவடியின் மூலம் தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம், கல்வெட்டு, ஓலைச்சுவடிகளை வாசிக்கவும், படி எடுக்கவும், 9ம் வகுப்பு மாணவி, விசாலி கற்றார். பின், அவற்றை தேடி சேகரிக்கும் முயற்சியில் இறங்கினார். சமீபத்தில், தன் வீட்டில் இருந்த, தாத்தா காலத்தில் எழுதப்பட்ட, ஓலைச்சுவடியை கண்டுபிடித்து ஆய்வு செய்தார்.

இதுகுறித்து, மாணவி விசாலி கூறுகையில், ''நான் கண்டுபிடித்த ஓலைச்சுவடி, பிச்சைப் பண்டிதர் பெண்சாதி குட்டச்சி என்பவரின் ஈமச்சடங்கில் செய்யப்பட்ட மொய் குறிப்பு. அதில், பிங்கள ஆண்டு, அற்பிசை மாதம், 23ம் நாள் வியாழக்கிழமை என, எழுதப்பட்டுள்ளது. அதில், அனைவரும், தலா, ஒரு ரூபாய் மொய் அளித்துள்ளனர்,'' என்றார்.

இதுகுறித்து, பள்ளி ஆசிரியர், ராஜகுரு கூறியதாவது: அது, 1917ம் ஆண்டு, நவம்பர், 8ம் தேதி எழுதப்பட்டுள்ளது. அதில் உள்ள, பண்டிதர் என்ற சொல், முடி திருத்துவோர் சமூகத்தை குறிக்கிறது. ஒரு ரூபாய் மொய், அக்குடும்பத்தின் பொருளாதார சிறப்பையும், அப்போதைய மருத்துவ சமூக அந்தஸ்தையும் உணர்த்துகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும், தமிழ் ஆண்டு, தமிழ் மாதம், தமிழ் எண்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இறப்பு நிகழ்ந்த நேரத்தை மணி, திதி, நட்சத்திரம்

ஆகியவற்றால் குறித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி : பின்னலாடை துறையினர் முடிவு

திருப்பூர்: அரசு பள்ளிகளுக்கு, கழிப்பறை வசதி செய்து கொடுக்க, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:
ஆயத்த ஆடை நிறுவனங்கள், பெறும் லாபத்தில், 2 சதவீதத்தை, தனித்தனியே சிறிய அளவிலான பயன்பாடுகளுக்கு செலவிடுகின்றன. அனைத்து நிறுவனங்களில் இருந்தும் இந்த தொகையை பெற்று, சமூக பயன்பாட்டு நிதியாக சேமிக்கப்படும். வளர்ச்சி திட்டங்களுக்கான செலவினங்கள் அடிப்படையில், 'பையர்'கள், பையிங் ஏஜன்சிகளிடம் இருந்தும், நிதியுதவி பெறப்படும். திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கு தொழிலாளர்கள் முதுகெலும்பாக உள்ளனர். அனைத்து தேவைகளுக்கும் அரசு உதவியை நாடுவதை விட, தொழில் துறையினர் இணைந்தால், சில வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில், சுகாதாரத்துக்கு முதல் முக்கியத்துவம் அளித்து, அரசு, மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரப்படும். கல்வித்துறை வாயிலாக, கழிப்பறை இல்லாத பள்ளிகள் விபரங்கள் சேகரிக்கப்படும். வரும் ஜன., முதல், இந்த பணியை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நாடு முழுவதும் ஒரே விதமான ஓட்டுனர் உரிமம் விரைவில் அறிமுகம்.

நாடு முழுவதும் உள்ள, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், புதிய மென்பொருளை பயன்படுத்தி, இணையதளம் வாயிலாக, ஒரே மாதிரியான ஓட்டுனர் உரிமம் வழங்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. 'தமிழகத்தில் கூடுதலாக, 12 ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், மேம்படுத்தப்பட்ட புதிய மென்பொருள், இந்த மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும்' என, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: தமிழகம் உள்ளிட்ட, 14 மாநிலங்களில் உள்ள, 175 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், 'வாகன், சாரதி' என்ற, மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாகன் மென்பொருள், வாகனங்களை பதிவு செய்யவும், 'சாரதி'யானது, ஓட்டுனர்களின் பதிவுகளை கையாளவும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வழங்கி வருகிறது. தேசிய தகவலியல் மையமான, என்.ஐ.சி., பொறியாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு, மென்பொருள் செயல்பாடு குறித்த பயிற்சி அளித்தனர். ஆனாலும், சோதனை முயற்சியாக, தமிழகத்தில், 12 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மட்டுமே, இந்த மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இம்மாதத்தில் கூடுதலாக, 12 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், இந்த மென்பொருள்கள், புதிய அம்சங்களுடன் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 'சாரதி, 4.0 வெர்ஷன்' மூலம், ஓட்டுனர் உரிமம் வழங்குதல், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளும், 'வாகன்' மென்பொருள் மூலம், வாகன பதிவு உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும். இவற்றில் உள்ள தகவல்கள், டில்லியில் உள்ள, என்.ஐ.சி., சர்வரில் பாதுகாக்கப்படும். இது, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் உள்ள, கம்ப்யூட்டர் தகவல்களை, இணையதளம் வாயிலாக இணைக்கும். இதனால், ஒரு மாநிலத்தின் வாகனம் மற்றும் வாகன ஓட்டியின் தகவல்களை, மற்ற மாநிலங்களிலும் சரிபார்க்க முடியும். போலி வாகனம், போலி ஓட்டுனர் உரிமத்தை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

இதற்கு வசதியாக, நாடு முழுவதும் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், ஒரே மாதிரியான ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இம்மாதம்... : சென்னை தென்மேற்கு, செங்குன்றம், கிருஷ்ணகிரி, நாமக்கல் வடக்கு, விழுப்புரம், கரூர், புதுக்கோட்டை, மதுரை வடக்கு, சிவகங்கை, விருதுநகர், நாகர்கோவில், மயிலாடுதுறை ஆகிய, 12 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், இம்மாதம் வாகன், சாரதியின், 4.0 வெர்ஷனின் செயல்பாடு அமலுக்கு வருகிறது.

வருகிறது 'டிஜிட்டல் கரன்சி' மத்திய அரசு திட்டம்

செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 15 லட்சம் கோடி ரூபாய் முழுவதும், புதிய நோட்டுகளாக வெளியிடப்படாது; இதில் ஏற்படும் இடைவெளியை, 'டிஜிட்டல் கரன்சி' பூர்த்தி செய்யும்,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

டில்லியில் நேற்று, தொழில்துறை சம்மேளனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி பேசியதாவது:

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான, நவ., 8ம் தேதி வரை, 1,716 கோடி, 500 ரூபாய் நோட்டுகளும், 685 கோடி, 1,000 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருந்தன.

இவற்றின் மதிப்பு, 15.43 லட்சம் கோடி ரூபாய். அதிகளவில் பணப் புழக்கம் இருப்பது, வரி
ஏய்ப்பு, கறுப்புப்பணம் அதிகரிக்க வழி ஏற்படுத்தும். இத்தகைய பணம், கிரிமினல் நடவடிக்கைகளுக்கு அதிகளவில் பயன்படுத்தப் படுகிறது.

செல்லாத ரூபாய் நோட்டுகளுக்கு சமமாக இல்லா மல், குறைந்தளவில், புதிய நோட்டுகளை வெளியிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படு கின்றன. இதில் ஏற்படும் இடைவெளியை, 'டிஜிட் டல் கரன்சி'யால் பூர்த்தி செய்ய, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஐந்து வாரங்களாக, 'டிஜிட்டல்' முறை பரிவர்த் தனைகள் அதிகளவில் நடந்து வருகின்றன. மக்க ளின் பயன்பாட்டுக்கு, புதிய நோட்டுகள் முழுமை யாக வந்தபின், 70 ஆண்டாக இருந்த நிலை மாறி, புதிய இயல்பு நிலை உருவாகும்.

நம் நாட்டில், 70 ஆண்டாக நிலவி வந்த இயல்பு நிலை, ஒவ்வொரு குடிமகனுக்கும் பழகிப் போய் விட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாக, மிகப் பெரியளவில் ரொக்க பணப்புழக்கம் நிலவியது.

இதனால், சமூக, பொருளாதார சூழலில், பெரியள வில் தீமைகள் ஏற்பட்டன; முறையாக வரி செலுத் தாமல், ஏய்ப்புகள் நடந்தன. வங்கி நடைமுறைக் குள் வராமல், பணத்தை பதுக்கி வைத்து, குற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் நிலை காணப் பட்டது.இந்த நிலையை மாற்றும் நோக்கில்,
மத்தியஅரசு, துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

ஜி.எஸ்.டி., தாமதம்

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மேலும் கூறியதாவது: ஜி.எஸ்.டி., என்பது, பரிவர்த்தனை வரி; வருமான வரி அல்ல; எனவே, நிதியாண்டின் எந்த சமயத்திலும், ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்தலாம்.

அரசியல் சட்ட தேவையை பொறுத்து, ஏப்., 1 முதல், செப்., 16க்குள், ஜி.எஸ்.டி., அமலாகும் வாய்ப்பு உள்ளது. சில சிறிய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டி உள்ளதால், ஜி.எஸ். டி., அமலில் தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசு தேர்வுகள் இயக்ககம் -மேல் நிலை பொதுத் தேர்வு மார்ச் 2017-தனி தேர்வுகளுக்கான அறிவுரைகள்

CLICK HERE-2017 PRIVATE CANDIDATESINSTRUCTIONS

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!