Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 22 December 2016

B.Ed Part Time Programme 2016-2019 (PERIYAR UNIVERSITY) Application Notification

பகுதி நேர ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி - தகவல் திரட்டும் பணி துவக்கம்

பத்து ஆண்டுகாலத்திற்கு முன்னர் கல்வித்துறைச் செயலராகப் பணியாற்றியவர் கிரிஜா வைத்தியநாதன்!!

தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் இவர் பத்து ஆண்டுகாலத்திற்கு முன்னர் கல்வித்துறைச் செயலராகப்
பணியாற்றியவர் என்பதில் பெருமையும் மகிழ்சியும் கொள்வோம்..

பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கக் கோரிக்கை

பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பகுதிநேரப் பயிற்றுநர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் வெளியிட்டுள்ள
அறிக்கை:
 
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில், ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர பயிற்றுநர்கள் 2012ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். 2014ஆம் ஆண்டில் இவர்களுக்கான ஊதியம்
ரூ.2 ஆயிரம் உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாதத்துக்கு 12 அரைநாள் என தொகுப்பூதியத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் பண்டிக்கைகால போனஸ் கூட வழங்கப்படுவதில்லை. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பணியின்போது
உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடோ, பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பலனோ வழங்கப்படுவதில்லை.
எனவே, தொகுப்பூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள ரூ.51.30 கோடியை, அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின்கீழ் உறுதியளித்துள்ளதால் அதனடிப்படையில் நடவடிக்கை எடுத்து, பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வும், நிலுவைத் தொகையும் வழங்க வேண்டுமென அதில் வலியுறுத்தியுள்ளார்..

TNPSC உறுப்பினர்களாக 11 பேர் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு கடந்த ஜனவரி 31ம் தேதி 11 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக அதிமுக அனுதாபிகள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பாமக, திமுக,புதிய தமிழகம் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் 11 பேர் நியமனம் ரத்து என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ''அரசியல் சாசன சட்டத்தின்படி டிஎன்பிஎஸ்சி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பு. ஆனால், தமிழக அரசு பரிந்துரையின் பேரில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக ஆர்.பிரதாப்குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி.பாலுச்சாமி, எம்.மாடசாமி, வி.ராமமூர்த்தி, பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்பிரமணியன், என்.பி.புண்ணிய மூர்த்தி, எம்.ராஜாராம் ஆகிய 11 பேர் நியமிக்கப்பட்டனர்.

இப்பதவியில் நியமிக்கப்படுபவர்கள் 6 ஆண்டுகளுக்கு எந்த குறுக்கீடும் இல்லாமல் பதவி வகிக்கலாம். இப்பதவியில் நியமிப்பதற்கு அரசியலமைப்பு சட்டத்தின் படி அரசியல் சார்பின்றி வெளிப்படையான பல்வேறு சிறப்பு தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி மற்றும் அதன் செயல்பாடுகள் என்ன என்பதை அறியாதவர்களை, கொஞ்சம் கூட அனுபவம் இல்லாத இளம் வயதினரை இதன் உறுப்பினர்களாக தற்போது நியமித்துள்ளனர். இதில் பெரும்பான்மையானவர்கள் அதிமுக அனுதாபிகளாகவும், அரசு வழக்கறிஞர்களாகவும், அதிமுக வழக்கறிஞர் அணியில் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர். மேலும், இவர்கள் அனைவரும் ஒரே குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
பெண்கள் ஒருவர் கூட இப்பதவியில் அமர்த்தப்படவில்லை. டிஎன்பிஎஸ்சி வரலாற்றிலேயே இப்போதுதான் இத்துறைக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வின் மூலம் அதிமுக அரசு தனது பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளது.
அதிமுகவினரான நவநீத கிருஷ்ணன், நட்ராஜ் போன்றவர்கள் டிஎன்பிஎஸ்சி தலைவர்களாக நியமிக்கப்பட்டு, அதன் பிறகு இப்போது அதிமுகவில் அங்கம் வகிக்கின்றனர். எனவே இந்த 11 பேரின் நியமனத்தையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அதில் கோரியிருந்தார்.

திமுக மனு விபரம்

இதனிடையே, இதே கோரிக்கையை வலியுறுத்தி திமுக சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மனு தாக்கல் செய்தார்.
அதில், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி தற்போது அதிமுக அனுதாபிகள் 11 பேரை டிஎன்பிஎஸ்சிக்கு உறுப்பினர்களாக முதன்மை செயலாளரின் பரிந்துரையின்பேரில், கவர்னர் நியமித்துள்ளார். இப்பதவிக்கு நிர்வாகத்திறன் இல்லாத வழக்கறிஞர்களை நியமிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை மீறி நியமிக்கப்பட்டுள்ள இந்த 11 பேரின் நியமனத்தை செல்லாது என அறிவித்து, அந்த நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று டி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு 11 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

TNPSC:வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையோடு நிற்கிறதுஅரசு பணியாளர் நியமனங்களுக்கான அறிவிப்புகள்: போட்டித் தேர்வுக்கு படிக்கும் இளைஞர்கள் ஏமாற்றம்.

தொழிலாளர் அதிகாரி, சுற்றுலா அலுவலர், ஜெயிலர், குரூப்-2 அதிகாரிகள் என பல்வேறு நேரடி நியமனங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படாமல் வெறு மனே வருடாந்திர தேர்வு கால அட்ட வணையோடு நிற்பதால், போட்டித் தேர்வுகளுக்குப் படித்து வரும் இளை ஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் எந்தெந்த அரசு பணிகளுக்கு என்னென்ன போட்டித் தேர்வுகள் எப்போது நடத்தப்படும், அதற் கான அறிவிப்புகள் எப்போது வெளியா கும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந் திர தேர்வுக்கால அட்டவணையை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் 2016-2017-ம் ஆண்டுக்கானஅட்டவணையும் வெளியிடப்பட்டது.ஆனால், அந்த அட்டவணையின்படி ஓரளவுக்காவது குறிப்பிட்ட தேதியில் நியமனம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு குறிப்பிட்ட காலத்தில் தேர்வு நடத்தாததால் போட்டித் தேர்வுக்குப் படித்து வரும் தமிழக இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொழிலாளர் அதிகாரி, சுற்றுலா அதிகாரி, ஜெயிலர் உட்பட பல்வேறு நேரடி நியமனங்களுக் கான அறிவிப்புகள், அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, தொழிலாளர் அலுவலர் நியமனத்துக்கான அறிவிப்பு ஜூன் முதல் வாரத்திலும், சுற்றுலா அதிகாரி நியமனத்துக்கான அறிவிப்பு ஜூலை முதல் வாரத்திலும், ஜெயிலர் பணிக்கான அறிவிப்பு பிப்ரவரி கடைசி வாரத்திலும், குரூப்-2 பணிகளுக்கான அறிவிப்பு செப்டம்பர் முதல் வாரத்திலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். தேர்வுக் கால அட்டவணையில் அறிவிக்கப்படும் தேதி விவரம் தோராயமானது என்றா லும் பல மாதங்கள் ஆகிவிட்டதே என்பது தான் தேர்வுக்குப் படிப்பவர்களின் ஆதங் கம். அதிலும் 2016-17-ம் ஆண்டு அட்ட வணையில் இடம்பெற்ற நியமன அறி விப்புகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், 2017-18-ம்ஆண்டுக்கான தேர்வுக்கால அட்டவணையை தயாரிக் கும் பணியில் டிஎன்பிஎஸ்சி இறங்கி யுள்ளது வேடிக்கை என்று தேர்வுக்கு படிக் கும் பலர் கூறுகின்றனர். 2017-ம் ஆண்டுக் குரிய காலஅட்டவணை வரும் ஜனவரி மாதம் வெளியிடப்பட வேண்டும்.

மத்திய அரசின் உயர் அதிகாரிகளை நேரடியாக தேர்வுசெய்யும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமும் (யுபி எஸ்சி) ஆண்டுதோறும் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை வெளி யிட்டு வருகிறது. அட்டவணையின்படி, ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்பும் குறிப்பிட்ட தேதியில்வெளியிடப்பட்டு குறிப்பிட்ட தேதியில் தேர்வும் நடத்தப்பட்டு, குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவு களும் வெளியிடப்படுகின்றன. எனவே, யுபிஎஸ்சி-யைப் போல் டிஎன்பிஎஸ்சி-யும் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை யின்படி குறிப்பிட்ட தேதியில் தேர்வுகளுக் கான அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வுகளை நடத்த வேண்டும் என்று போட்டித் தேர்வுகளுக்குப் படித்துவரும் இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்.

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதனை, ஆளுநர் வித்யாசாகர் ராவ் நியமித்திருப்பதாக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த கிரிஜா வைத்தியாநதன், நில நிர்வாகத் துறை ஆணையராக பதவி வகித்தார்.

தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் கண்காணிப்பு ஆணையர் பதவிகளையும் அவர் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, கிரிஜா வைத்தியநாதன், புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மெட்ரிக் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வைத்த 'மாஸ் காப்பியிங்' முறைகேடு !

நூறு சதவீத தேர்வு, 200க்கு 200 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள், மாநில அளவில் முன்னிலை, மருத்துவம், பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங்கில் முன்னிலை என சில தனியார் பள்ளிகளே தொடர்ச்சியாக சாதனை படைக்க சொல்லப்படும் காரணங்களில் முதன்மையானது ஒரே பாடத்தை இரண்டு ஆண்டுகள் படிப்பது. அடுத்து 'மாஸ் காப்பியிங்'.

தனியார் பள்ளிகளில் ‘மாஸ் காப்பியிங்’ அடிப்பதன் மூலம் தான் அதிக மதிப்பெண்கள் பெற முடிகிறது. ஒரே பாடத்தை இரண்டு ஆண்டுகள் படிப்பது, காப்பி அடிப்பது ஆகிய காரணங்களால் தான் சில மாணவர்கள் மட்டும் 200/200 என மார்க் பெற்று மருத்துவம், பொறியியல் படிக்கின்றனர் என சொல்லப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மாஸ் காப்பியிங் முறை நடக்கிறதா என்பது உறுதிப்படுத்தப்படாமலே இருந்த நிலையில் ஈரோட்டில் உள்ள ஐடியல் மற்றும் ஆதர்ஷ் தனியார் மெட்ரிக் பள்ளியில் மாஸ் காப்பியிங் நடப்பதாக புகார் கிளம்பி, அது உறுதிப்படுத்தப்பட்டு இப்போது பள்ளியின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இயங்கி வரும் இந்த ஐடியல் மற்றும் ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகளில் இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடிப்பது வழக்கம். தமிழகத்தில் பிரபலமான பள்ளிகளில் இந்த பள்ளிகளுக்கு முக்கிய இடம் உண்டு.

இந்த பள்ளியில் மாணவர்கள் பொதுத்தேர்வில் 'மாஸ் காப்பிங்' எனப்படும் பிட் அடிக்கும் முறைக்கேட்டில் ஈடுபடுவதாக புகார்கள் கிளம்பியது. இதையடுத்து கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வின் போது தற்போதைய மெட்டிக்குலேசன் இயக்குநர் கருப்பசாமி இந்த பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆதர்ஷ் என்ற மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பிட் அடிப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் இயற்பியல், வேதியியல், கணக்கு ஆகிய பாடங்களில் இதே பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்கள் 200க்கு 200 மார்க் பெற்றிருப்பதும், அந்த விடைத்தாள்களில் கையெழுத்துகள் ஒரே மாதிரி இருப்பதை அரசுத்தேர்வுத்துறை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர். அதாவது 5 மாணவர்களின் தேர்வையும் ஒரே மாணவர் எழுதி இருந்தது உறுதியானது. இதையடுத்து குறிப்பிட்ட அந்த 5 மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் அந்த பள்ளியில் பிளஸ் 2 தேர்வு கண்காணிப்பில் ஈடுப்பட்ட அரசு பள்ளி தலைமையாசிரியர் நசீர் உள்பட 4 அரசு ஆசிரியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ஈரோடு ஆதர்ஷ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மையத்திற்கான அங்கிகாரத்தை ரத்து செய்ய தேர்வுத்துறை இயக்குநர் வசுந்த்ராதேவி முடிவு செய்து அதற்கான உத்தரவை கடந்த வாரம் அந்த பள்ளிக்கு அனுப்பியுள்ளார்.

சம்மந்தப்பட்ட ஈரோடு ஆதர்ஷ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை அருகிலுள்ள வேறு பள்ளியில் வைத்து எழுத வைக்க அரசுத்தேர்வுத்துறை ஏற்பாடுகள் செய்து வருகிறது.

ஈரோடு ஆதர்ஷ் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள் சேர்க்கைக்கு லட்சக்கணக்கில் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தரமான கல்வி வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பில்தான் பெற்றோர்கள் லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி தங்களது பிள்ளைகளை இங்கே சேர்க்கின்றனர். ஆனால் அதிக பணம் கொடுத்து இங்கே படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை இந்த பள்ளியில் எழுத முடியாது. ஏதாவது வேறு அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிக்கு போய் எழுத வேண்டிய அவலம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக ஈரோடு ஐடியல் மற்றும் ஆதர்ஷ் பள்ளியின் தாளாளரான சிவலிங்கம் தரப்பில் விசாரித்தோம். "எங்கள் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் கடந்த 7 ஆண்டுகளாக பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகளில் தேர்வு மையங்களாக செயல்பட்டு வருகின்றன. எங்கள் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் எங்கள் பள்ளியிலேயே பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளை இதுவரை எழுதினர்.

கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிப்பது போன்ற முறைகேட்டில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர் என்று எங்கள் மீது குற்றம் சாட்டினர். ஆனால் அது உண்மை இல்லை. முறைகேடு தொடர்பாக அரசு தேர்வுத்துறை விளக்கம் கேட்டது. எங்கள் தரப்பு நியாயத்தை அவர்களுக்கு எடுத்து சொன்னோம். ஆனால் அரசு தேர்வுத்துறை உயர் அதிகாரிகள் அதை காதில் வாங்கவில்லை.  பள்ளிக்கல்வித்துறையில் உயர் அதிகாரிகளுக்குள் நடக்கும் ஈகோ மோதலில் எங்கள் பள்ளியை பலிகடாவாக்கி விட்டனர். 35 ஆண்டுகால கல்விப்பணியில் சிறந்து விளங்கிய எங்கள் பள்ளி மீது கரும்புள்ளியை ஏற்படுத்தி விட்டனர். பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுக்கான தேர்வு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

இதற்கு மாற்று ஏற்பாடாக ஈரோடு, பவானி போன்ற இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் எங்கள் மாணவர்களை தேர்வு எழுத அனுமதிப்பதாக தேர்வுத்துறையினர் கூறியுள்ளனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை பஸ் மற்றும் வேன்களில் பாதுகாப்பாக அழைத்துச் சென்று தேர்வு எழுத வைப்போம்," என்றனர்.

ஆள் மாறாட்டம்,  மாஸ் காப்பியிங் நடப்பதை எல்லாம் தமிழகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது இந்த பள்ளி. இது போன்ற ஊழலையும், முறைகேடுகளையும் முழுமையாய் ஒழிக்க வேண்டும். அதற்கு, கழிவறை வசதியில்லை, குடி தண்ணீர் வசதியில்லை, சுற்றுச்சுவர் வசதி இல்லை, பரிசோதனைக்கூடம் கூட இல்லை என பல 'இல்லை'களுடன் இயங்கும் அரசு பள்ளிகளை மேம்படுத்தி தரமான கல்வியை தர வேண்டியது அவசியம்.

நன்றி
              - விகடன் எம்.கார்த்தி

இணையவழி பணப்பரிமாற்றத்துக்கு கட்டணம் ரத்து.

வங்கியில் உள்ள பணத்தை இணையவழியில் (நெட் பேங்கிங்) பரிமாற்றம் செய்வதற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை ரத்து செய்யுமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) இப்போதைய விதிகளின்படி என்இஎஃப்டி முறையில் ரூ.10,000 வரையிலான பரிமாற்றத்துக்கு ரூ.2.50, ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான பரிமாற்றத்துக்கு ரூ.5, ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான பரிமாற்றத்துக்கு ரூ.15, ரூ.2 லட்சத்துக்கு அதிகமான பரிமாற்றத்துக்கு ரூ.25-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனுடன் கூடுலாக சேவை வரியும் உண்டு. ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு உடனடியாக பணத்தை பரிமாற்றம் செய்யும் ஐஎம்பிஎஸ் முறைக்கு இதைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரொக்கமற்ற பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் மற்றொரு நடவடிக்கையாக வங்கியில் உள்ள பணத்தில் ரூ.1000-க்கு மேல் இணையவழியில் பரிமாற்றம் செய்வதற்கான கட்டணத்தை ரத்து செய்யுமாறு பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி என்இஎஃப்டி, ஐஎம்பிஎஸ், யுபிஐ, யுஎஸ்எஸ்டி உள்ளிட்ட இணையவழி மின்னணு பணப்பரிமாற்றத்துக்கான கட்டணத்தை பொதுத்துறை வங்கிகள் ரத்து செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NET Exam : தேர்வறை நுழைவுச் சீட்டை டிச.28 முதல் பதிவிறக்கம் செய்யலாம்

நெட்' தேர்வுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டை வரும் 28 -ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறவும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகைக்கான தகுதி பெறவும் ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.

 அதன்படி, 2016 டிசம்பர் மாதத்துக்கான "நெட்' தேர்வு, அடுத்த மாதம் 22 -ஆம் தேதி(ஜன.22) நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 நகரங்கள் உள்பட நாடு முழுவதும் 90 நகரங்களில் நூற்றுக்கணக்கான மையங்களில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தேர்வறை நுழைவுச் சீட்டை வரும் 28 -ஆம் தேதி முதல் www.cbsenet.nic.in   என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

காசோலைகள் மூலம் ஊதியம் வழங்குவதற்கான அவசரச் சட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

காசோலைகள் அல்லது வங்கிக் கணக்கில் மின்னணுப் பரிமாற்றம் மூலம் ஊழியர்களுக்கு தொழில் நிறுவனங்கள் ஊதியம் வழங்குவது தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

1936-ஆம் ஆண்டைய ஊதியங்கள் வழங்கும் நடைமுறைச் சட்டத்தில், தொழில் நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களுக்கான ஊதியத்தை நாணயமாகவோ அல்லது ரூபாய் நோட்டுகளாகவோ அல்லது இரண்டும் சேர்த்தோ வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் 1975-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் மூலம், ஊழியர்களின் ஒப்புதல் பெற்று, அவர்களுக்கு காசோலை மூலமாகவோ அல்லது வங்கிக் கணக்குகளிலோ ஊதியத்தை செலுத்தும் நடைமுறை சேர்க்கப்பட்டது.
இதனிடையே, அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா "2016-ஆம் ஆண்டைய ஊதியம் வழங்கும் நடைமுறை (சட்டத் திருத்த) மசோதா'வை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் 1936-ஆம் ஆண்டு சட்டத்தின் 6-ஆவது பிரிவில், தொழில் நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு காசோலை அல்லது வங்கிக் கணக்கில் மின்னணு முறை மூலம் ஊதியத்தை டெபாசிட் செய்யும் வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, ரூ.500, ரூ.1,000 ஆகிய உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அந்த மசோதா மீது விவாதம் நடத்தவோ அல்லது அதை நிறைவேற்றவோ இயலவில்லை.
இந்நிலையில், தில்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு காசோலைகள் மூலமாகவோ அல்லது வங்கிக் கணக்குகளில் நேரடியாக மின்னணுப் பரிமாற்ற முறையிலோ ஊதியம் வழங்குவதற்கு வழியேற்படுத்தும் வகையில் அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசரச் சட்டத்தில், ஊழியர்களுக்கு ரொக்கமாகவும் ஊதியத்தை வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போதைய நடைமுறைப்படி, அவசரச் சட்டம் என்பது 6 மாத காலத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் நாடாளுமன்றத்தில் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!