Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 26 December 2016

ஆதிதிராவிடர் நலப்பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை

இரயில்வே துறை தேர்வுகளில் வெற்றிப்பெற எளிய வழிமுறைகள்:

TNPSC தேர்விற்கு அல்லும், பகலும் படித்து தேர்வு எழுதிவிட்டு வேலை கிடைக்காதா ? என்று ஏங்கும் தமிழ்நாடு போட்டி தேர்வாளர்களே சற்று உங்கள் பார்வையை RRB(Railway Recruitment Board)பக்கம் திருப்புங்கள்.

        1000 GroupD  பதவிகளுக்கு கூட 10 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துவிட்டு TNPSC மூலமாக ஒரு வேலை வாங்க முடியாதா என ஏங்குகிறோம். மிகவும் சிரமப்பட்டு படிக்கிறோம். நமக்கு நாமே போட்டியை ஏற்படுத்திக்கொள்கிறோம்.

 ஆனால், எந்தவித கடினமும்  இல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு பணிகளையும் வட மாநிலத்தவர்கள் தட்டிச் செல்கிறார்கள்.இதற்கு காரணம் நம்மிடையே RRB, SSC, UPSC, IBPS, SBI, SAIL, IOCL, BHEL, BEL, BEML, INDIAN POSTAL DEPARTMENT, BANKING EXAM, DEFENCE FACTORY, ISRO...... இன்னும் இது போன்ற பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே.

     இவற்றை பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.இத்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கான விளம்பரம் வரும்போது விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இத்தேர்வில் வெற்றிப்பெற பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.   
    இரயில்வே தேர்வுகளில் வெற்றிப்பெறுவது மிகவும் எளிது. அதுவும் TNPSC போட்டி தேர்விற்காக படிப்பவர்களுக்கு இது இது மிக மிக எளிது. வடஇந்திய மாநிலத்தவர்கள் அதிகமானோர் தெற்கு ரயில்வேயில் பணிப்புரிகிறார்கள். இதற்கு காரணம் நாம் நம்முடைய எதிர்ப்பு தெரிவிக்காததே. நம்முடைய எதிர்ப்பு என்பது ரயில்வே தேர்வுகளில் வெற்றிப்பெறுவது மூலமாக காட்ட வேண்டும். அனைத்து இரயில்வே தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். அதில் நாம் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று பணிக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் வட இந்திய இளைஞர்களின் வருகை தானாக குறையும்.

      இரயில்வே துறை தேர்வுகளில்
வெற்றிப்பெற எளிய வழிமுறைகள்:

1.ஏற்கெனவே நடந்து முடிந்த தேர்வுகளின் வினாத்தாள்களின் தொகுப்பை (கடந்த 5-10 ஆண்டுகள்) படித்தாலே நமது வெற்றி 60% உறுதி செய்யப்பட்டு விடும்.

மீதியுள்ள 40%
2.6முதல் 10 வகுப்பு வரையுள்ள கணிதம், அறிவியல், சமூகவியல்  புத்தகங்களை மேலோட்டாமாக படித்தாலே போதுமானது.

3.நடப்பு நிகழ்வுகள்.
    இதில் விளையாட்டு, மத்திய  மாநில துறை அமைச்சர்கள், துறை தலைவர்கள், செயலர்கள், கூட்டமைப்பு, உலக அமைப்புகள், மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் சம்மந்தமான கேள்விகள் இடம்பெறும்.

4.Mental Ability Questions.
5.இரயில்வே துறை சம்பந்தமான கேள்விகள் 1 அல்லது 2.(இது NTPC தேர்வுகளுக்கு மட்டும் பொருந்தும்)

இம்முறையில் படித்தாலே RRB  தேர்வுகளில் எளிதாக வெற்றிப்பெறலாம்.

(இத்தகவல்  தமிழகத்தில் அரசு வேலை தேடும் அனைவருக்கும் சென்று சேர்ந்து SOUTHERN RAILWAY RRB ல் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். )

ரயில்வே தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்

ரயில்வே வாரிய பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர், கட்டாயம் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.அனைத்து வகையிலும், அரசு பணிகளுக்கு ஆதார் எண் பயன்படுத்தும் முறை அறிமுகமாகிறது.
இதன்படி, மத்திய அரசின் நுழைவுத்தேர்வான, ஜே.இ.இ., - மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு மற்றும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட தேர்வுகளுக்கு, ஆதார் எண் கட்டாயமாகி உள்ளது. இந்த வரிசையில், ரயில்வே வாரியம் நடத்தும், பணியாளர் நியமன தேர்வுகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.'அடுத்து அறிவிக்க உள்ள, ரயில்வே வாரிய தேர்வுகளுக்கு, விண்ணப்பதாரர்கள், ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். அதற்கு இப்போதே, ஆதார் எண் பெற்றுக்கொள்ள வேண்டும்' என,ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

ஐம்பத்து மூன்று வயதைக் கடந்து பதவி உயர்வு பெற்ற உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி ரத்து - தமிழக அரசு உத்தரவு.

தமிழக அரசு பணியில் உள்ள பதவி உயர்வு பெற்றுள்ள உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள
உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:–

அரசுக்கு பரிந்துரை
2003–ம் ஆண்டு பணியில் சேர்ந்த இளநிலை உதவியாளர்கள் மற்றும் 2007–ம் ஆண்டு பணியில் சேர்ந்த தட்டச்சர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக தேர்வு செய்யப்பட்டு, 53 வயதை கடந்த நிலையில் உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

அவர்கள் இதுவரை பணியாற்றிய அனுபவமே போதுமானது என்பதாலும், பயிற்சி முடித்துவிட்டு குறைந்தது 5 ஆண்டுகள் கூட பணியாற்ற முடியாமல் போவதால் அரசுக்கு பண விரயம் உண்டாகும் எனவும், 53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர் பதவியில் இருந்து உதவியாளராக பதவி உயர்வு பெற்றவர்கள் பவானிசாகரில் அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைவிடப்பட்டிருந்தது. இவர்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்று பயிற்சி துறைத்தலைவர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

விலக்கு அளிக்கப்படுகிறது
தமிழ்நாடு அரசு தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தர்கள் சங்கத்தின் கோரிக்கை மற்றும் பயிற்சி துறைத்தலைவரின் பரிந்துரை ஆகியவற்றை அரசு கவனமாக பரிசீலித்தது. இந்த பரிந்துரையை ஏற்கலாம் என்று முடிவெடுத்து உள்ளது.

அதன்படி 53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் உதவியாளர்களாக பதவி உயர்வு பெறும்போதும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தால் நடத்தப்பெறும் அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பாதிரியார் கன்னியாஸ்திரி சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்யக்கூடாது -ஐகோர்ட் தீர்ப்பு

டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்வது எப்படி? டிஜிட்டல் பண பரிவர்த்தனை பாதுகாப்பும் வழிமுறைகளும்.

டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்வது எப்படி?

டிஜிட்டல் பண பரிவர்த்தனை பாதுகாப்பும் வழிமுறைகளும்

கடந்த நவம்பர் 8 அன்று மத்திய அரசு மேற்கொண்ட பணசீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பின்பு, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை அதிக அளவில் மேற்கொண்டு வருகிறோம். வருங்காலத்தில் பணமில்லா பரிவர்த்தனைகள் அதிக அளவிலோ அல்லது முழுமையாகவோ மேற்கொளள வேண்டிய நிலை வரும். எனவே அது தொடர்பான விபரங்களை தெரிந்து கொண்டு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நமது பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்க்கொள்ள முடியும்.

இரண்டு வங்கி கணக்குகள் தொடங்குங்கள். பிரதான வங்கி கணக்கில் முழு பணத்தினை வைத்திருங்கள். அதற்கான டெபிட் அட்டையை எங்கும் பயன்படுத்த வேண்டாம். அடுத்த வங்கி கணக்கிற்கு அவ்வப்போது தேவையான பணத்தினை மாற்றம் செய்து அதற்கான அட்டையை எங்கும் பயன்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் பிரதான கணக்கு பணம் பத்திரமாக இருக்கும்.

முடிந்தவரை கிரெடிட் கார்டு பயன்படுத்துங்கள். உங்கள் கிரெடிட் கார்டுகள் தவறாக பயன் படுத்தும்போது வங்கி அப்பணத்தினை பயன்படுததப்பட்ட இடத்திலிருந்து திரும்பபெறும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறது. டெபிட் கார்டு பயன்பாட்டின்போது பொறுப்பு நம்மிடமே உள்ளது. தற்காலத்தில் ரூ 25,000 வங்கி டெபாசிட் கிரெடிட் கார்டு வாங்க போதுமானது என்பது குறிப்பிடத்தக்கத

நீங்கள் பயன்படுத]தும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் சிப் பொறுத்தபட்டவை என்றால் மிக பாதுகாப்பானது. தகவல் திருட்டு தடுக்கப்படும். உங்களிடம் இல்லா விட்டால் வங்கியை அணுகவும்.

தற்போது கையடக்க POS ( Point of sale ) கருவிகள் பயன்பாடு அதிகம் என்றால் அவற்றை உங்கள் கண்முன் மட்டுமே பயன்படுத்துங்கள.; மறைவான இடங்களுக்கு அவற்றை கொண்டு செல்ல அனுமதிக்காதீர்கள்.

PIN நம்பரை மறைத்து பழகுங்கள். ATM,POS என எங்கு உங்கள் கார்டுகளை பயன்படுத்தினாலும் ரகசிய எண்ணை கைகளால் மறைத்து பயன்படுத்துங்கள். குறிப்பிட்ட கால இடைவெளிகளில] PIN எண்ணை மாற்றுங்கள்.

உங்கள் வங்கி பரிவர்த்தத்தனைகளை மேற்கொள்ள தனியாக ஒருசெல்போனை பயன்படுத்துங்கள். அதில் தேவையற்ற APP என எதையும் டவுன்லோட் செய்ய வேண்டாம். APP மற்றம் சமூக ஊடகங்களை வேறு செல்போனில் பயன்படுத்தவும்.

வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் உங்கள் வீட்டு மற்றும் அலுவலக கணிணிகளில் தரமான, நேரடியாக நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் APP மட்டுமே பயன்படுத்தவும். மலிவான மற்றும் போலியான APP மற்றும் Software கள் விபரத் திருட்டுக்கு வழி வகுக்கும்.

கணிணியின் தரத்தை அவ்வப்போது update செய்து வாருங்கள்.

Amazon, Flip cart offer only for three days என வரும் செய்திகளை திறக்க வேண்டாம். உங்களுக்கு பொருள் வாங்க வேண்டும் என்றhல் அந்த தளத்திற்கு சென்று பாருங்கள். Link open செய்ய வேண்டாம்.

பணபரிவர்த்தனைகளை எக்காரணம் கொண்டும் உங்கள் செல்போன் மற்றும் கணிணி தவிர வேறு எந்த சாதனத்திலும் மேற்கொள்ள வேண்டாம்.

வங்கி பண பரிவர்த்தனைகளுக்கான பாஸ்வேர்டை 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும். வங்கிக்கான பாஸ்வேர்ட்டை வேறு எங்கும் ( பேஸ்புக். ஈமெயில்) என எங்கும் பயன்படுத்த வேண்டாம். மேலும் அது பெயர் மற்றும் எண் ஆகியவற்றின் கலவையாக இருக்கட்டும்.

சினிமா தியேட்டர், மால், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் என எங்கு கேட்டாலும் உங்கள் செல்போன் மற்றும் ஈ மெயில் முகவரிகளை கொடுக்க வேண்டாம். கட்டாயம் கொடுக்க நேரிட்டால் அதற்காக தனி எண், தனி முகவரி பயன்படுத்தவும்,

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்ள மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் உங்களுக்கு உதவும்.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர் கள் டிசம்பர் 26-ம் தேதி முதல் விண்ணப் பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
மார்ச் 2017-ல் நடைபெறவுள்ள பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் டிசம்பர் 26-ம் தேதி முதல் 2017 ஜனவரி 4-ம் வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நேரடி தனித் தேர்வர்கள் அனைவரும் பகுதி 1-ல் மொழிப்பாடத்தில் தமிழ்மொழிப் பாடத்தை மட்டுமே முதல் மொழிப்பாடமாக கண்டிப்பாக தேர்வெழுதுதல் வேண்டும்.

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட் டுள்ள அரசு தேர்வு சேவை மையங்களின்விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு கட்டணம், ஆன்லைன் பதிவுக் கட்ட ணத்தை பணமாக செலுத்த வேண்டும். பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோருக்கு தேர்வு கட்டணம் செலுத்து வதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2017 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல்பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேரத் தவறிய தனித்தேர்வர்கள், 26.12.2016 முதல் 03.01.2017 சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களை அணுகி, பதிவுக்கட்டணமாக ரூ.125/- ஐச் செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனஅரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறித்தியுள்ளது.

மார்ச் 2017 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல்பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேரத் தவறிய தனித்தேர்வர்கள், 26.12.2016 (திங்கட்கிழமை) முதல் 03.01.2017 (செவ்வாய்கிழமை) (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) வரை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களை அணுகி, பதிவுக்கட்டணமாக ரூ.125/- ஐச் செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். 
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை- 600 006 மார்ச் 2017 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல்பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்தல் தொடர்பான செய்திக் குறிப்பு நடைபெறவுள்ள மார்ச் 2017 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத விரும்பும் நேரடித் தனித்தேர்வர்களுள், இவ்வியக்ககத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேரத் தவறிய தனித்தேர்வர்கள், 26.12.2016 (திங்கட்கிழமை) முதல் 03.01.2017 (செவ்வாய்கிழமை) (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) வரை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களை அணுகி, பதிவுக்கட்டணமாக ரூ.125/- ஐச் செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்குச் சென்று அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்படுகிறது.

 மேலும், பயிற்சி வகுப்பிற்கு பதிவுசெய்த பின்னர், மாவட்டக் கல்வி அலுவலரால் வழங்கப்படும் பயிற்சி வகுப்பில் சேர்ந்ததற்கான விண்ணப்ப அத்தாட்சி சீட்டைப் பெற்று அவரவர் கல்வி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வு சேவை மையத்தில் சமர்ப்பித்த பின்னர், மார்ச் 2017 எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்விற்கு 26.12.2016 (திங்கட்கிழமை) முதல் 04.01.2017 (புதன்கிழமை) வரை அறிவியல் பாடம் கருத்தியல் உட்பட விண்ணப்பிக்கத் தகுதியான பாடங்களுக்கும் (அனைத்து / தவறிய பாடங்கள்) அச்சேவை மையங்களின் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்26.12.2016 முதல் 03.01.2017 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாள் மற்றும் மையம் போன்ற முழுவிவரங்களை அறிய அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வங்கிகள், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு 30-ந் தேதிக்கு பிறகும் நீடிக்கும்?

தேவையான அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்காததால் வங்கிகள், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் 30-ந் தேதிக்கு பின்னரும்நீடிக்கும் என தெரியவந்துள்ளது. ஈடுகொடுக்க முடியவில்லை 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் வங்கிகள், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 
இப்போது வங்கிகளில் வாரம் ரூ.24 ஆயிரமும், ஏ.டி.எம்.களில் ஒரு நாளைக்கு ரூ.2,500 வரை மட்டுமே எடுக்க முடியும். புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் அச்சகங்கள், ரிசர்வ் வங்கி ஆகியவற்றால் புதிய ரூபாய் நோட்டுகள் தேவையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. நவம்பர் 9-ந் தேதியில் இருந்துடிசம்பர் 19-ந் தேதி வரை ரூ.15.4 லட்சம் கோடி செல்லாத நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கி இந்த காலத்தில் ரூ.5.92 லட்சம் கோடி தான் வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கியுள்ளது.

புத்தாண்டிலும் தொடரும் மத்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு எப்போது விலக்கப்படும் என்றுஅறிவிக்கவில்லை. நிதித்துறை செயலாளர் அசோக் லாவசா சமீபத்தில், டிசம்பர் 30-ந் தேதிக்கு பின்னர் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும் என்றார். பிரதமர் நரேந்திர மோடியும் 50 நாட்கள் 'கெடு'வழங்குங்கள் என்று கூறியிருந்தார். அந்த கெடுவும் நெருங்கிவிட்டது. ஆனால் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் புதிய ஆண்டிலும் தொடரும் என வங்கிகள்தரப்பில் கூறப்படுகிறது. பணத்தட்டுப்பாடு காரணமாக அரசு அறிவித்தபடி இப்போது வங்கிகளில் ஒரு வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் கூட வழங்க முடியவில்லை. பணம் கையிருப்பை பொறுத்து குறைவாகத் தான் வழங்க முடிகிறது. படிப்படியாக தளர்த்த வேண்டும் பெரும்பாலானோர் நினைப்பதுபோல, ஜனவரி 2-ந் தேதியில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கப் படாது. புதிய ரூபாய் நோட்டு சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று ஒரு பொதுத்துறை வங்கி அதிகாரி கூறினார். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள், சிறு, குறு தொழில் முனைவோர், பெரிய கம்பெனிகள் ஆகியோரின் பெரிய அளவிலான பணத்தேவையை பூர்த்தி செய்வதற்கு வங்கிகள் கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

 எனவே படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவது தான் ஏற்புடையதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். சில காலம் தொடரும் பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவும் சமீபத்தில், வங்கிகளுக்கு அதிகமான அளவில் பணம் வழங்காமல், பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்க முடியாது என்று கூறியிருந்தார். வங்கி ஊழியர்கள் சங்கமும் கட்டுப்பாடுகளை ஒரே நடவடிக்கையில் நீக்கிவிட முடியாது, வங்கிகள் நலன் கருதியும், அதிகமான அளவில் கூடும் வாடிக்கையாளர்களின் நலன் கருதியும் இன்னும் சில காலத்துக்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று கருத்து தெரிவித்துள்ளன.

வியாபாரிகள் காத்திருக்கிறார்கள் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஹர்விந்தர் சிங் கூறும்போது, 'புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் நிலை குறித்து அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க ஜனவரி 2-ந் தேதி கட்டுப்பாடுகளை நீக்குவது கடினம். சிறு, குறு தொழில் முனைவோரும், சிறு வியாபாரிகளும் தங்களுக்கு தேவையான பணத்தை எடுப்பதற்காகஅந்த நாளுக்காக காத்திருக்கிறார்கள்'என்றார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!