Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 28 December 2016

கடலூர் மாவட்டத்திற்கு 11.1.2017 அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

RTI - மூலம் தகவல் பெறுபவர் மற்றும் பெறப்படுபவரின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடக் கூடாது

TNPSC நேர்முகத் தேர்வுகள் தள்ளிவைப்பு.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை உயர் நீதிமன்றப் பணிகளில் அடங்கிய நீதிபதி களுக்கான நேர்முக உதவியா ளர், பதிவாளர்களுக்கான நேர்முகஉதவியாளர் மற்றும் துணைப் பதிவாளர்களுக்கான நேர்முக எழுத்தர் ஆகிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 14,15 மற்றும் டிசம்பர் 7, 14, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அப்பதவிகளுக்கான நேர் காணல் தேர்வு ஜனவரி 10 முதல் 12-ம் தேதி வரை நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, நிர்வாகக் காரணங் களுக்காக நேர்காணல் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் பின்னர்அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் 11 பேரின் நியமனத்தைசென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் ரத்துசெய்தது. உறுப்பினர்கள் தலைமையில்தான் நேர்முகத் தேர்வு குழுக்கள் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 01.12.2016 அன்றைய நிலைப்படி உதவி / கூடுதல் / மழலையர் / அறிவியல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.

TET சிலபசில் மாற்றம் வருமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு !

ஆசிரியர் தகுதித்தேர்வு சிலபஸ் படி, பாட வாரியாக அளிக்கும், மதிப்பெண் முறைகளில், மாற்றம் கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மத்திய அரசு உத்தரவுப்படி, கடந்த 2010 ஆகஸ்ட் 23ம் தேதி, ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்), கட்டாயமாக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு, தமிழக அரசு,2011 நவ., 11ம் தேதியில் தான், அரசாணை வெளியிட்டது.ஆனால், டெட் தேர்வுக்கான விதிமுறைகள், மத்திய அரசு அறிவித்த தேதியில் இருந்து பின்பற்றப்படும் என, அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு அறிவிப்புபடி, ஒரு ஆண்டில், குறைந்தபட்சம் ஒரு தகுதித்தேர்வாவது நடத்த வேண்டும்.அரசாணை வெளியான பின், ஆசிரியப்பணியில் சேர்ந்தவர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பணியில் தொடர முடியும்.

 இதனால், 2011 ஆக., 23ம் தேதிக்கு முன்பு, சீனியாரிட்டி அடிப்படையில், காலிப்பணியிடம் நிரப்ப, சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகள் முடித்தவர்களுக்கு, டெட் தேர்வில் இருந்துவிலக்கு அளிக்கப்பட்டது.இதற்கு பின் பணியில் சேர்ந்த, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், டெட் தேர்வு எழுத வேண்டியது அவசியம். ஆனால் தமிழகத்தில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக,தேர்வு நடக்கவில்லை. இதனால், நிபந்தனை காலம் முடிந்தும், டெட் தேர்வு எழுத முடியாமல், ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:டெட் தேர்வு வினாத்தாள் படி, சமூக அறிவியல் பாடத்திற்கு மட்டும் 60 மதிப்பெண்களும், மற்ற பாடவாரியான பகுதிகளுக்கு, 30 மதிப்பெண்கள் மற்றும் உளவியல் பாடத்திற்கு, 30 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன.

இதற்கு பதிலாக, ஆசிரியர்கள் தேர்வு செய்யும், முதன்மை பாடத்திற்கு, 60 மதிப்பெண்களும், மற்ற பாடங்களுக்கு 30 மதிப்பெண்களுக்கும், கேள்விகள் இடம்பெறும்படி, வினாத்தாள் திட்ட முறையை, மாற்றியமைக்க வேண்டும். மேலும், டெட் என்பது, தகுதியை நிரூபிக்கும் தேர்வு தான்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, நுாறு சதவீத தேர்ச்சி அளித்துள்ளோம்.டெட் எழுதாத காரணத்தால், வளர் ஊதியம், ஊக்க ஊதியம், மருத்துவ விடுப்பு உள்ளிட்ட, எந்த சலுகையும் கிடையாது. தேர்வு தாமதத்தால், பணிச்சலுகைகள் முற்றிலும் புறக்கணிக்கப்படும் நிலை தொடர்வது தவறான முன்னுதாரணமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தனியார் பள்ளியை மிஞ்சிய அரசுப் பள்ளி!

சபாஷ் தலைமை ஆசிரியை !!!! தனியார் பள்ளியை மிஞ்சிய அரசுப் பள்ளி! (நமது கிருஷ்ணகிரி மாவட்டம்)

`அரசுப் பள்ளியில் அடிப் படை வசதிகள் மற்றும் ஆசிரியர் கவனிப்பு குறைவாக இருக்கும்’ என்ற பொதுக்கருத்தை மாற்றிக் காட்டியிருக்கிறது, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி! காரணம், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை பத்மாவதி. தன் சக ஆசிரியர்களுடன் கைகோத்தும், பல தரப்பிடம் இருந்து உதவித்தொகை பெற்றும் நூலகம், கலையரங்கம், கணினி ஆய்வகம், சிசிடிவி கேமராக்கள் என இந்த மாற்றத்தை இங்கு மலர்த்தியிருக்கிறார்!

‘‘இந்தப் பள்ளிக்கு,2012-ம் ஆண்டு பணி மாறுதலில் தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றபோது, போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. மழைபெய்தால் வகுப்பறைக்குள் நீர் ஒழுகும்; தரை குண்டும் குழியுமாக இருக்கும். கணினி, நூலகம் போன்ற கல்வி வெளிச்சங்கள் இல்லை என பலவும் இங்கே இல்லை. அதேசமயம், மாணவர்களின் திறமைக்கும் குறைவில்லை. அவர்களின் ஆர்வத்துக்கும், வேகத்துக்கும் இன்னும் தீனி கிடைக்க வேண்டும் என்று தோன்றியது. அதேபோல, ‘எம்புள்ள நல்லா படிக்கிறானா?’ என்று கேட்கும் அந்த ஏழைப் பெற்றோருக்கு, செயலால் பதில் சொல்லும் பொறுப்பையும் நான் உணர்ந்தேன்.

தனியார் பள்ளிகளுக்கு இணையான வகையில் தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்று நானும், ஆசிரியர்களும் உறுதியேற்றோம். அதன் முதல்படியாக, பள்ளியில் பணியாற்றும் 28 ஆசிரியர்களும் தலா ஐந்தாயிரம் செலவு செய்து, பள்ளி அலுவலகம் மற்றும் இரண்டு வகுப்பறைகளுக்கு டைல்ஸ் ஒட்டினோம். பிறகு, நகராட்சியின் உதவியால் மற்ற எல்லா வகுப்பறைகளுக்கும் டைல்ஸ் ஒட்டி, கட்டடங்களை புனரமைத்தோம்’’ என்றவர், தொடர்ந்து சேவை அமைப்புகளை அணுக ஆரம்பித்திருக்கிறார்.

‘‘‌அனைவருக்கும் கல்வித்திட்டம் மூலமும், பல்வேறு அமைப்புகளிடமும் நிதியைப் பெற்றும் 350 பேர் அமரும் வகையிலான ஆடிட்டோரியம் கட்டினோம். சுற்றுவட்டார மாவட்டத்தில், எந்த ஒரு அரசுப் பள்ளியிலும் இதுபோன்ற ஆடிட்டோரியம் இல்லை. முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, அவர்கள் மூலம் உதவியும், பல தொண்டு நிறுவனங்களின் தொடர்பையும் ஏற்படுத்திக்கொண்டோம். அது, பள்ளியின் முன்னேற்றத்துக்கு பேருதவியாக அமைந்தது.
‘தயா’ அறக்கட்டளையின் தலைவர் சீனிவாசன் ராகவனிடம், பள்ளிக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கும்படி கேட்டேன். அவர், சுமார் 2,500-க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய நூலகம், கம்ப்யூட்டர் லேப், அறிவியல் ஆய்வகம், வட்ட வடிவ மேஜைகள் என்று பல லட்சங்களை செலவழித்து அமைத்துக் கொடுத்தார் ’’ எனும் பத்மாவதி, இப்படி பல்வேறு தரப்பினரிடமும் உதவிபெற்று 30 லட்சம் செலவிலான பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை, மூன்று ஆண்டுகளில் நிகழ்த்தியுள்ளார்.

`‘இதையெல்லாம் மாணவர்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள வைப்பதில் ஆசிரியர்கள் அனைவரும் அக்கறையுடன் செயல்படுகிறோம். கம்ப்யூட்டர் மூலமாகவும் பாடங்
களை நடத்துகிறோம், ஆங்கில மொழித்திறனுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கிறோம். நூலகத்தில் படிக்கும் புத்தகத்தில் இருந்து கிடைக்கும் கருத்துகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும், இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் மாணவர் குழுவிடம் சொல்லலாம். அதை அந்தக் குழு, ஆசிரியரிடம் கொடுப்பார்கள். இதனை, எங்கள் பள்ளியில் வெளியிடப்படும், ‘பால் வீதி’ என்ற பத்திரிகையில் வெளியிடுவோம்.

பள்ளி வளாகத்தில் இயற்கை முறையில் மாணவர்களே விவசாயம் செய்கிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் காய்கறிகளை, சத்துணவு தயாரிக்கப் பயன்படுத்துகிறோம். தவிர, பள்ளிக்காக ஒவ்வொரு ஆசிரியரும் இரண்டாயிரம் ரூபாய் என 56 ஆயிரம் ரூபாயை  வங்கியில் டெபாசிட் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வட்டியைக் கொண்டு, பள்ளியின் துப்புரவுப் பணிகளுக்கும் பராமரிப்புக்கும் ஆட்களை நியமித்துள்ளோம்!’’

- இப்படி ஆச்சர்யங்களை அடுக்கிக்கொண்டே போனார் மாநில நல்லாசிரியர் விருது வாங்கியிருக்கும் பத்மாவதி.
‘‘வரும் கல்வியாண்டில் பள்ளியில் மாடித்தோட்டமும், மூலிகைத் தோட்டமும் அமைப்பது எங்கள் திட்டம்!’’
- மாணவர்களும், மற்ற ஆசிரியைகளும் உற்சாகக் குரலில் கூற, பூரித்து நிற்கிறார் பத்மாவதி!
இந்தப் பள்ளியை முன்மாதிரிப் பள்ளி என  அரசு அதிகாரிகளும், மற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களும் வந்து பார்வையிடுகின்றனர். ஒவ்வொரு ஊரிலும் உள்ள உதவும் உள்ளங்கள் இதுபோல முன்வந்தாலே, அனைத்து அரசுப் பள்ளிகளும், தனியார் பள்ளிக்கு இணையாக மாறிவிடும்!

நீங்களும் உதவலாம் IncomeTax ரெய்டுக்கு | Public Can HeLp IncomTax Department

நீங்களும் உதவலாம் IncomeTax ரெய்டுக்கு | Public Can HeLp IncomTax Department | blackmoneyinfo@incometax.gov.in | Govt Creates Email-id For Tip-Offs On Black Money Hoarders

வெளிநாட்டு நிதியுதவி பெற 20,000 என்ஜிஓ-க்களுக்குத் தடை!!!

வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற, 20,000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு (என்ஜிஓ) தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
விதிகளை மீறி அந்த நிறுவனங்கள் செயல்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்ஜிஓ-க்கள் செயல்பட்டு வந்தன. அவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடையாக வழங்கப்படுவதாகவும், அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதற்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சம்பந்தப்பட்ட என்ஜிஓ அனுமதி பெற வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டன. இதற்காக வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறைச் சட்டம் (எஃப்சிஆர்ஏ) அமல்படுத்தப்பட்டது.
இருப்பினும், அந்த விதிகளை மீறி தன்னிச்சையாக பெரும்பாலான என்ஜிஓ-க்கள் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது.
அதன் முடிவில், 20,000 என்ஜிஓ-க்கள் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வெளிநாட்டு நிதியுதவி பெறுவதற்காக அவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்தது. தில்லியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், இதுகுறித்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 13,000 என்ஜிஓ-க்களுக்கு மட்டுமே வெளிநாட்டு நிதியுதவி பெறுவதற்கான உரிமம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்

7 வது ஊதியக்குழு ,CPS நீக்கம் போன்றவைகளை உடனடியாக அமுல்படுத்த அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல் !!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இயக்கங்கள் நடத்திய கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்...7 வது ஊதியக்குழு ,CPS நீக்கம் போன்றவை
...https://app.box.com/s/lylvmsgzlgcgsc72p562r764dd4enkio

2017-ல் வாட்ஸ் அப் எப்படி இருக்கும் தெரியுமா?


தொழில்நுட்ப உலகில் மாற்றம் ஏற்பட்டு வரும் வேகத்தைப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. 
      அதிலும் குறிப்பாக செல்போன் சார்ந்து நிகழும் மாற்றங்கள் இன்னும் வேகமாக, இன்னும் மலைப்பாக இருக்கின்றன‌. சில ஆண்டுகளுக்கு முன்வரை,  செல்போன் என்றால் நோக்கியா என்றிருந்தது. உயர் ரகப் பிரிவில் பிளாக்பெர்ரி ஆதிக்கம் செலுத்தியது. இன்றோ நோக்கியா இருந்த இடம் தெரியவில்லை. பிளாக்பெரி ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்தப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஸ்மார்ட் போன்களுக்கான இயங்குதளம் என்றால் ஆண்ட்ராய்டும், ஐ.ஓ.எஸ்., ஆகியவை மட்டுமே என்றாகியிருக்கிறது.

         இந்தப் பின்னணியில்தான் வாட்ஸ் ஆப் சேவையில் நிகழவிருக்கும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் ஆப் வசதியைத் தொடர்ந்து பெற வேண்டும் என்றால், உங்கள் போனை மாற்றிக்கொள்ளுங்கள் எனச் சொல்லும் அளவுக்கு வாட்ஸ் ஆப் செல்வாக்கு மிக்கதாக மாறியிருப்பதும் இந்த மாற்றங்களின் முக்கிய அம்சம்.

       பழைய மாடல்களுக்கு ‘குட்பை’ பழைய போன் மாதிரிகள் மற்றும் பழைய இயங்குதளங்களைக் கொண்ட போன்களில் எல்லாம் இந்தச் சேவை 2016-ம் ஆண்டுக்குப் பிறகு செயல்படாது எனும் தகவலை நீங்கள் அறிந்திருக்கலாம். கடந்த பிப்ரவரி மாதம் வாட்ஸ் ஆப் தனது வலைப்பதிவில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு நவம்பர் மாதம் வெளியான‌ ஒரு அறிவிப்பு இதை உறுதி செய்தது.

        இதன்படி நோக்கியா, பிளாக்பெர்ரி, விண்டோஸ், ஆண்ட்ராய்டு ஆகியவற்றின் பழைய மாடல்களில் வாட்ஸ் ஆப் சேவை செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ள‌து. ஐ.ஒ.எஸ். இயங்குதளத்தின் பழைய வடிவங்களுக்கும் இது பொருந்தும். எனினும் இந்த முதல் கட்டப் பட்டியலிலிருந்து பிளாக்பெர்ரி மற்றும் நோக்கியா சிம்பயான் போன்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நீட்டிப்பும்கூட 2017 ஜுன் மாதம் வரைதான். அதன் பிறகு வாட்ஸ் ஆப் செயல்படக்கூடிய புதிய போன் அல்லது இயங்குதளத்திற்கு மாறியாக வேண்டும்.

        ஆண்ட்ராய்டு 2.2, ஐ.ஓ.எஸ். 6 மற்றும் விண்டோஸ் போன் 7 உள்ளிட்ட பழைய ரகங்களில் இந்த ஆண்டுக்குப் பிறகு வாட்ஸ் ஆப் சேவையைப் பயன்படுத்த இயலாது. வாட்ஸ் ஆப் விஷயத்தில் இப்படிக் காலாவதியாகும் பழைய போன் மாதிரிகளை வைத்திருப்பவர்கள் தங்கள் செல்போன்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

        ஒரு செயலிக்காக போனை மாற்ற வேண்டும் என்பது கொஞ்சம் விநோதமானதுதான். வாட்ஸ் ஆப்பின் செல்வாக்கு அப்படி என்றாலும், இந்த மாற்றத்திற்கான காரணம் அதுவல்ல. வாட்ஸ் ஆப் தொடர்ச்சியாகப் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒரு சேவையாகத் தனது பயன்பாட்டுத்தன்மையைத் தக்க வைத்துக்கொள்ள வாட்ஸ் ஆப்பிற்கு இந்தப் புதுப்பித்தல் அவசியம்.இதன் பக்கவிளைவுதான், பழைய இயங்குதளங்கள் மீது கவனம் செலுத்த முடியாத நிலை.

புதிய வசதிகள் என்ன?

          இதற்கு வாட்ஸ் ஆப்பைக் குற்றம் சொல்லவும் முடியாது. ஏனெனில் வாட்ஸ் ஆப் அறிமுகமான காலத்தில், பிளாக்பெர்ரியும் ஐபோனும் நோக்கியா சிம்பயான் போன்களுமே ஸ்மார்ட் போன் பரப்பில் பரவலாகப் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் அதன் பிறகு ஆண்ட்ராய்டு அலை வீசத் தொட‌ங்கி, ஐபோன் ஆதிக்கமும் வலுப்பெற்றது. இந்தப் போக்குகளுக்கு ஈடு கொடுத்து வளர்ச்சி அடைந்த வாட்ஸ் ஆப், முன்னணிச் செயலிகளில் ஒன்றாக இருப்பதோடு, வீடியோ காலிங் உள்ளிட்ட வசதிகளை அறிமுகம் செய்திருக்கிறது. மேலும் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது.

          இந்நிலையில், புதிய வசதிகளுக்கு ஈடு கொடுக்க ஏற்றதாக இல்லாத பழைய இயங்குதளங்களுக்கான ஆதரவை நிறுத்துக்கொள்வது தவிர வேறுவழியில்லை என வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது. நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் உறவு கொள்வதற்கான மேம்பட்ட வழிகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க இது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது. எதற்கும் பழைய போன் வைத்திருப்பவர்கள் வாட்ஸ் ஆப் சேவை செயல்படக்கூடிய போன்களின் பட்டியலைப் பார்த்துக்கொள்வது நல்லது. இந்த முழுப் பட்டியலை இந்த இணைப்பில் காணலாம்: http://bit.ly/2hYKk1m
வரும் காலத்தில் வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறப்படும் புதிய அம்சங்களில் சிலவற்றைப் பார்க்கலாம். செய்திகளைப் பகிர்ந்து கொண்ட பின் திரும்பப் பெறும் வசதி மற்றும் திருத்தம் செய்யும் வசதிகள் அறிமுகம் ஆக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எடிட், டெலிட் செய்யலாம்

       இப்போதைக்கு வாட்ஸ்ஆப்பில் ஒரு செய்தியை அனுப்பிவிட்டு, பின்னர் அதை விலக்கிக்கொள்ள நினைத்தால் அதற்கான வழியில்லை. ஆனால், ஜிமெயிலில் இருப்பது போலவே அனுப்பியவுடன், அந்தச் செய்தியைத் திரும்பப் பெற விரும்பினால் அதைச் சாத்தியமாக்கும் வசதி அறிமுகமாக உள்ளது.

Paytm-க்கு செக் வைத்த எஸ்.பி.ஐ !!

Paytm வாலட் மூலமான பண பரிவர்த்தனைக்கு எஸ்.பி.ஐ தடை விதித்துள்ளது*. எஸ்.பி.ஐ. வங்கி கணக்கு உள்ளவர்கள், Paytm-ல் பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்தனர். இதுகுறித்து எஸ்.பி.ஐ ட்விட்டரில், 'Paytm மூலமான பரிவர்த்தனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக State Bank Buddy mobile ஆப்பை

பயன்படுத்துங்கள்' எனக்கூறியுள்ளது. இதனால் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். சில வாடிக்கையாளர்கள், Paytm அளவுக்கு உங்களது ஆப்பை முன்னேற்றி விட்டு பின், இந்த நடவடிக்கையை எடுங்கள் எனக்கூறியுள்ளனர்.

இந்நிலையில் Paytm நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா, எஸ்.பி.ஐ. தங்களது ஆப்பை பிரபலப்படுத்தவே, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், எஸ்.பி.ஐ. வங்கியின் கிளை ஒன்றின் முன் Paytm மற்றும் *State Bank Buddy mobile*ஆப் இரண்டையும் ஒப்பிட்டு, வைக்கப்பட்ட விளம்பரம் ஒன்றின் படத்தையும் அவர் ஷேர் செய்துள்ளார்.

100 ரயில்வே ஸ்டேசன்களில் இலவச வைபை வசதி!!!

கூகுள் நிறுவனம் மற்றும் ரயில்வே துறை இணைந்துல 100 ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி செய்துள்ளன.

இலக்கு:

இது தொடர்பாக ரயில்வேத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ரயில்வே சார்பில், இந்த வருட இறுதிக்குள் மக்கள் நெரிசல் அதிகமுள்ள 100 ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி ஏற்பாடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி முதலாவதாக மும்பை ரயில் நிலையத்தில் இலவச வைபை வசதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, 100வதாக கேரள மாநிலம் கொல்லம் ரயில் நிலையத்தில் இலவச வைபை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வேயில்இலக்கு நிறைவேறியுள்ளது. மும்பையை தொடர்ந்து, புவனேஸ்வர், பெங்களூரு, ஹவுரா, கான்பூர், மதுரா, அலிகார்க், பெய்ரேலி, மற்றும் வாரணாசி உள்ளிட்ட பல ரயில் நிலையங்களுக்கும் இலவச வைபை வசதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த வருட இறுதிக்குள், 400 ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி செய்யப்படும் என்றார்.

இந்த ரயில் நிலையங்களை தினமும்,, ஒரு கோடி மக்கள் பயன்படுத்துவதாக ரயில்வேத்துறையின் புள்ளி விபரம் கூறுகிறது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!