Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 30 December 2016

G.O Ms.No. 122 Dt: December 28, 2016 -RESTRICTED HOLIDAYS - Inclusion of MAHALAYA AMAVASAI in the list of Restricted Holidays - Orders - Issued.

TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் Duplicate certificate பெறுவது எப்படி TRB அதற்கான வழிமுறைகளை கூறியுள்ளது. பயன்படுத்தி கொள்ளவும்..விமான நிலையங்களில் நுழைவுசீட்டு பெற ஆதார் அட்டை கட்டாயம் - 2017 ஜனவரி 1 முதல் அமல் !!

இம்முறை நியூ இயர் 12 மணிக்கு இல்லை... 'லீப் செகண்ட்' அதிசயம்

இந்த 2016 பலருக்கும் ஒரு நீண்டஆண்டாக இருந்திருக்கும்,கவலை வேண்டாம்!,அது இன்னும் நீளப்போகிறது.இம்முறை புத்தாண்டுக்கு10,9,8... கவுண்ட்டவுனுக்கு பதில் 11,10,9... என இருக்கவேண்டும். ஏனென்றால் எப்போதும் 12 மணிக்கு கொண்டாடப்படும் புத்தாண்டு
இவ்வாண்டு 12 மணி 1 வினாடிக்கு கொண்டாடப்படுமாம். ஏன் என்று தெரியுமா?

இந்த டிசம்பர் 31ம் தேதி அனைத்து நேரகாப்பாளர்களும் 'லீப் செகண்ட்' என அழைக்கப்படும் ஒரு வினாடியை தங்களது கடிகாரங்களில் கூட்டுவர்.லீப் இயர் நாம் அறிந்ததே,பூமி சூரியனை சுற்றிவர சரியாக 365.25 நாட்கள் ஆகும். மீதம் இருக்கும் 0.25 நாள் 4 வருடங்களில் 1 நாள் ஆவதே லீப் இயர்,அந்த நாள் தான் பிப்ரவரியில் சேர்க்கப்படும் 29ம் தேதி. அதே போல் நேரத்தை பூமியின் சுழற்சியுடன் சரிவர இருக்க சேர்க்கப்படுவதே லீப் செகண்ட்.அதாவது பூமி ஒரு சுழற்சிக்கு சரியாக 24 மணிநேரம் எடுப்பதில்லை, அது 86400.002 வினாடிகள் எடுக்கும்.அந்த 0.002 விநாடிகள் தான் சேர்ந்து இப்போது 'லீப் செகண்ட்'டாக சேர்க்கப்படவுள்ளது.
இப்போது உலகளாவிய நேரநிலையான கோஆர்டிநேட் யூனிவேர்சல் டைம்மில்(UTC) இந்த டிசம்பர் 31ம் தேதி 23:59:59லிருந்து 23:59:60க்கு சென்றபிறகு தான் 00:00:00க்கு செல்லுமாம் UTC யின் கடிகாரம்.இந்த லீப் செகண்ட் சேர்க்கும்முறை 1972ல் செயல்படுத்தப்பட்டது அதில் 27 ஆண்டுகளில் லீப் செகண்ட் சேர்க்கப்பட்டுள்ளது.

லீப் நொடியால் பாதிப்பா?

1972ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வரும் இந்த லீப் நொடி, கடைசியாக கடந்த 2012ம் ஆண்டு ஜூன் 30ம் தேதியோடு சேர்க்கப்பட்டது. அந்த நாளில் பல பெரிய பாதிப்புகள் நிகழ்ந்தன. மிகப்பெரிய நிறுவனங்களான மொஸில்லா, ரெடிட், ஃபோர் ஸ்கோயர், யெல்ப், லிங்க்டுஇன் மற்றும் ஸ்டெம்பிள்டன் ஆகிய நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகி முடங்கிபோயின. லினெக்ஸ் செயல்பாடுகள் முடங்கிபோனது பாதிப்புக்கு காரணமாகின. மேலும் சில ஜாவாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் நிறுவனங்கள் முடங்கின.
2015ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி இந்த லீப் செகண்ட் வந்தபோது பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்தது. அப்போது கூகுள், இந்த ஒரு நிமிடத்தை கடக்க புதிய திட்டத்தை வைத்துள்ளதாக கூறியது. இதன் மூலம் 20 மணி நேரத்துக்கு முன்னதாக கூகுளின் அனைத்து சர்வர்களும் இணைய துவங்கும். இந்த செயல்பாடு முடியும் போது லீப் நொடி கடக்கப்பட்டிருக்கும் என கூகுள் கூறியது.

இப்படி ஒரு வினாடியை தொடர்ந்து சேர்த்துக் கொள்வதா வேண்டாமா என்பது உலக அளவில் பிரச்சினையாகியிருக்கிறது. சேர்த்துக் கொள்வதால் பிரச்சினை ஏற்படுகிறது. ஆகவே "கூடாது, இதை நிறுத்த வேண்டும்" என்று அமெரிக்கா தலைமையிலான நாடுகள் எதிர்க்கின்றன. ஒரு வினாடியை சேர்த்துக் கொள்வதை நீடிக்க வேண்டும் என்று பிரிட்டன் தலைமையிலான நாடுகள் வற்புறுத்துகின்றன. லீப் வினாடியைச் சேர்க்கும் ஏற்பாடு இல்லாமல் போனால் கால வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே போகும். 500 ஆண்டுகளில் இது ஒரு மணி நேரமாக அதிகரித்து விடும்.

தானாக அப்டேட் ஆகிக்கொள்ளும் மொபைல்களும்,கம்ப்யூட்டர்களும் நேரத்தை மாற்றிகொள்ளும்.மத்த கடிகரங்களில் நீங்களே மாற்றலாம், ஆனால் நமது தேவைக்காக 5,10 நிமிடங்கள் கூடவும்,குறையவும் வைக்கும் நமக்கு ஒரு வினாடி பெரியவிஷயம் இல்லையே!

ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ் சான்றிதழை 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் வருங்கால வைப்புநிதி கழகம் அறிவிப்பு.

ஓய்வூதியம் பெறுபவர்கள் உயிர் வாழ் சான்றிதழ், மறுமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வருகிற ஜனவரி மாதம் 15-ந் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுஉள்ளது. 
வங்கியில் நெரிசலை தவிர்க்கும் வகையில் ஓய்வூதியர்கள் 'ஜீவன் பிரம்மான் போர்ட்டல்'என்ற இணையதளம் வழியாக சமர்ப்பிக்கலாம். இந்த வசதியை பொது சேவை மையம், அரசின் இ-சேவை மையங்கள் வழியாகவும் பெறலாம். பி.எப். அலுவலகத்தையும் அணுகலாம். இந்த மையங்களுக்கு செல்லும்போது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஓய்வூதிய வழங்கு ஆணை, செல்போன் ஆகியவற்றை கொண்டு செல்லவேண்டும்.

மேற்கண்ட தகவல்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழக மண்டல ஆணையாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் ஜனவரி4-ந் தேதி கடைசி நாள் | வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள். 
நேரடித் தனித்தேர்வர்கள் அனைவரும் முதல் மொழித்தேர்வாக தமிழ் மொழித்தேர்வை எழுதவேண்டும். வெளிமாநிலங்கள் அல்லது சி.பி.எஸ்.இ. முறையில் படித்தவர்கள் உரிய கல்வி அலுவலரின் மேலொப்பத்துடன் மாற்றுச்சான்று வைத்து விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேராமல் விடுபட்ட தனித்தேர்வர்கள் ஜனவரி 3-ந் தேதி வரை அறிவியல்செய்முறை பயிற்சி வகுப்பில் பதிவு செய்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்படும் தேர்வு மையத்தில் தான் தேர்வு எழுதவேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வோடஃபோன் 4ஜி சேவை அறிமுகம்...

வோடஃபோன், தனது 4ஜி சேவைகளை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியா முழுக்க ஜியோ 4ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வோடஃபோன், தனது 4ஜி சேவைகளை விரிவுப்படுத்தி வருகிறது.
ஏற்கனவே
கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், அசாம் மற்றும் டெல்லி, மும்பை,கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் வோடஃபோன் 4ஜி சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் முகற்கட்டமாக 'Vodafone Supernet 4G' என்ற பெயரில் புதிய சேவைகளை நேற்று கோவை, திருப்பூரில் மட்டும் அறிமுகம் செய்துள்ளது. தொடர்ந்து கோவா, பஞ்சாப், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2400 நகரங்கள் மற்றும் 17 வட்டாரங்களில் அடுத்த ஆண்டு (2017) மார்ச் மாதத்திற்குள் 4ஜி சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வோடஃபோன் தெரிவித்துள்ளது. அறிமுக சலுகையாக வாடிக்கையாளர்கள் அப்கிரேடு செய்யும் புதிய 4ஜி சிம் கார்டுகளுடன் அதிவேக 4G இண்டர்நெட் மற்றும் அனைத்து அப்கிரேடுகளுக்கும் 2 ஜிபி இலவச டேட்டாவும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

JAN 2017 CRC : PRIMARY 21.01.2017 & UPP.PRIMARY 28.01.2017


உங்களது ஊதியம் பற்றி முழு விவரம் அறிய வேண்டுமா?

நீங்கள் அரசு ஊழியரா... உங்களது ஊதியம் கருவூலத்தில் இருந்து வங்கி மூலமாக, எந்த தேதியில், எவ்வளவு தொகை, உங்களது வங்கிக் கணக்கில்,எப்போது வரவு வைக்கப்படும் என்று அறிய வேண்டுமா... ஒரே ஒரு Click மட்டும் போதும்.

நீங்கள் அரசு ஊழியரா...

💶 உங்களது ஊதியம் கருவூலத்தில் இருந்து வங்கி மூலமாக, எந்த தேதியில், எவ்வளவு தொகை உங்களது வங்கிக் கணக்கில் எப்போது வரவு வைக்கப்படும்.

💷 உங்களது Bill ன் தற்போதைய நிலை என்ன..? என்று அறிய வேண்டுமா...

💵 ஒரே ஒரு Click மட்டும் போதும்.

💷 உங்களது GPF / CPS No. தெரிந்து இருந்தால் மட்டும் போதும்.

வங்கியில் ஊதியம் செலுத்தப்படும் 

விவரம் அறிய - Click Here

SLAS Test Valuation Starts - கற்றல் அடைவுத்தேர்வு: மதிப்பிடும் முறை துவக்கம்

கற்றல் அடைவுத்தேர்வு விடைத்தாள், ஆன்-லைன் மூலம், மதிப்பிடும் பணிகள் துவங்கின.
        தமிழகத்தில், 37 ஆயிரத்து 797 அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களின், கற்றல் திறன் பரிசோதிக்க, 'அனைவருக்கும் கல்வி இயக்ககம்' சார்பில், கற்றல் அடைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

        கடந்த 19- 24ம் தேதி வரை, பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு நடத்தப்பட்டது.இத்தேர்வில், தமிழகம் முழுக்க படிக்கும், மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களின் விடைத்தாளை, வட்டார வாரியாக உள்ள, ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம், ஆன்-லைனில் மதிப்பிடும் பணிகள், நேற்று முன்தினம் துவங்கின.இதன் முடிவுகள், ஜன., இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.அதிகாரிகள் கூறுகையில், 'அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியாக, மதிப்பெண் குறியீடுவழங்கப்படும். பாடவாரியாக பின்தங்கிய மாணவர்களின் எண்ணிக்கை கண்டறிந்து, உரிய ஆசிரியருக்கு, புதுவிதமான முறையில் கற்பித்தல் பயிற்சி அளிக்கப்படும். 'குறிப்பிட்ட பள்ளியில், மாணவர்கள் அதிகளவில் தோல்வியை தழுவும் பட்சத்தில், பாட ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும்' என்றனர்.

ஊழியர்களுக்கு சம்பளத்தை வங்கிக்கணக்கில் மட்டுமே வழங்கும் சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் !!

ஊழியர்களுக்கான சம்பளத்தை ரொக்கமாக வழங்காமல் வங்கிக்கணக்கில் தான் வரவு வைக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
சம்பளத்தை காசோலை அல்லது வங்கிக்கணக்கில் மட்டுமே வழங்கும் சட்டத்திற்கு குடியரசு தலைவர் பிரணாப் முஜர்ஜி ஒப்புதல் வழங்கினார்.

பேராசிரியர் தகுதித்தேர்வு பட்டியல் தடை கோரிய வழக்கில் 'நோட்டீஸ்'

உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான, மாநில தகுதி தேர்வு பட்டியலை, வெளியிட தடை கோரிய வழக்கில், அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளைஉத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த செபாஸ்டியன் செல்வராஜ் தாக்கல் செய்த மனு: எம்.எஸ்சி., - -எம்.பில்., படித்துள்ளேன். கல்லுாரி உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான மாநில தகுதி தேர்வை, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை, பிப்., 21ல் நடத்தியது. கணித அறிவியல் பாடத்திற்கான தேர்வை எழுதினேன். தேர்வு முடிவு அக்., 24ல் வெளியானது.

எனக்கு, 190 மதிப்பெண் கிடைத்தது. பிற்பட்டோர் பிரிவிற்கான, 'கட்- ஆப்' 192. கணித அறிவியல் பகுதி, மூன்றுக்கான தாளில், ஐந்து வினாக்கள் மற்றும் அவற்றின் விடைகள் சம்பந்தமின்றி உள்ளன. 'கீ' பதில்களும் தொடர்பின்றி உள்ளன.அவ்வினாக்களுக்கு விடை அளித்திருந்தாலே, முழு மதிப்பெண் வழங்கி இருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், எனக்கு, 200 மதிப்பெண் கிடைத்திருக்கும்.மறு மதிப்பீடு செய்து, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்க கோரி, மாநில தகுதி தேர்வு உறுப்பினர் செயலருக்கு மனு அனுப்பினேன்; நடவடிக்கை இல்லை.

தேர்வில் தகுதியான வர்கள் பட்டியலை வெளியிட தடை விதிக்க வேண்டும். ஐந்து வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்கி, தகுதியானவர்கள் பட்டியலில் என் பெயரை சேர்த்து, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கஉத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார். மாநில தகுதி தேர்வு உறுப்பினர் செயலருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டார்.

தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு - தமிழக அரசு உத்தரவு.

தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு, மாதம், 20 முதல், 40 ரூபாய் வரை உயர்வு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும், அரசு அலுவலர்களுக்கு, ஜூலை, 1 முதல், அகவிலைப் படியை உயர்த்தி, அரசு உத்தரவிட்டுள்ளது. 
அதேபோல், தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு, தனி உயர்வு வழங்க, அரசு முடிவு செய்தது. அதன்படி மாதம், 600 ரூபாய் வரை, திருத்தப்பட்ட தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு, மாதம், 20 ரூபாய்; 600 ரூபாய்க்கு மேல் பெறுவோருக்கு, மாதம், 40 ரூபாய், தனி உயர்வு வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.

வீடில்லா குடும்பத்துக்கு நிலம் மத்திய அரசு உத்தரவு

வீடில்லாத குடும்பத்தின், பெண் உறுப்பினர் பெயரில், நிலம் ஒதுக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய கிராம மேம்பாட்டுத் துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ராம் கிருபால் யாதவ் கூறியதாவது: நம்
நாட்டில், 2022க்குள், அனைவருக்கும் வீடு கட்டிதர வேண்டும் என்பது, மத்திய அரசின் கனவு திட்டம். இதற்கான பணிகளை மத்திய அரசு துவங்கி விட்டது.

வீடுகள்இல்லாத குடும்பங்களை, மாநில அரசுகள் கணக்கெடுக்க வேண்டும். அந்த குடும்பத்தின் மூத்த பெண் உறுப்பினர் பெயரில், நிலம் ஒதுக்க வேண்டும்.

அந்த நிலத்தில் வீடு கட்ட, 1.20 லட்சம் ரூபாயை, அந்த பெண் உறுப்பினரின் வங்கி கணக்கில், மத்திய அரசு, நேரடியாக செலுத்தும்.கழிப்பறைகள் கட்ட, 12 ஆயிரம் ரூபாய் தனியாக வழங்கப்படும்.

மேலும், மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 90 நாட்கள் வேலையும் வழங்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கு, 18
ஆயிரம் ரூபாய் கிடைக்கும். வீடுகள் இல்லாத குடும்பத்தினருக்கு, நிலம் ஒதுக்கும் பணியை, மாநில அரசுகள் துவக்க வேண்டும். சில மாநிலங்களில், நிலம் ஒதுக்கும் பணி துவங்கி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

ஊழியர்களின் ரூ 5000 கோடி அம்போ !!

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!