Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 31 March 2017

குழந்தைகளை விரும்பும் புத்தகமில்லா காட்டுப் பள்ளி’ குக்கூ உருவான கதை..!

நம் காதுகளை நிறைக்கும் குயிலின் இன்னிசையே ‘குக்கூ’. குழந்தைகள் மனதில் அந்த இனிமையை உணர வைப்பதுதாம் குக்கூ காட்டுப்பள்ளியின் நோக்கம்...ஈரோடு அரச்சலூரை சேர்ந்த சிவராஜ்.. இவரது நண்பர்கள் பீட்டர், ராஜாராம், அழகேஸ்வரி என இந்த நட்பு வட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரங்கள் இணைய 'குக்கூ' பலப்பட்டது. ஒவ்வொருவரும் அவரவர் வாழும் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு ஓவியம், நாடகம் பயிற்சிப் பட்டறைகள், சிறந்த ரோல் மாடல் மனிதர்களை அறிமுகம் செய்வது..என குக்கூ தனது பயணத்தை துவங்கியது.

 

திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள நெல்லிவாசல் மலை கிராமத்தில் இவர்கள் நடத்திய நான்கு நாள் பயிற்சிப் பட்டறையில்... மலைக்கும் குழந்தைகளுக்கும் உள்ள மிக நெருங்கிய தொடர்பை புரிய வைத்தார்கள். இதுதான் குக்கூ தன்னார்வலர்களின் மனதில் காட்டுப் பள்ளிக்கான விதை விட்ட நேரம். மேற்கொண்டு பேசுகிறார் காட்டுப் பள்ளியின் தன்னார்வலரான அழகேஸ்வரி.

''தற்போது பள்ளிகளில் புத்தகம், மதிப்பெண் என்பதை நோக்கியே என்று குழந்தைகளை பயணிக்க அனுமதிப்பதால் அவர்களின்  அறிவுத் தேடலுக்கான வாய்ப்புகள் குறைகிறது. விளைவு... அவர்கள் மனதில் தாழ்வுமனப்பான்மையை விதைக்கிறோம். என்ன படித்தோம்? எப்படி வாழப்போகிறோம்? என்ற பதைபதைப்புடனான கேள்விகளுடன் பள்ளியை விட்டு வெளியில் வருகின்றனர் குழந்தைகள். அரசு பள்ளியை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் குறைந்த மதிப்பெண்ணுடன் வெளியில் வரும் காரணத்தால் கூலி ஆட்களாக மாற்றப்படுகின்றனர். இயல்பில் அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் திறமை வெளிப்படுத்த வாயப்பளிக்கப்படுவதில்லை. அவர்கள் மீது முட்டாள்கள் என்று முத்திரை குத்துவது எவ்வளவு அபத்தம். இதற்கான விடையைத் தேடத் துவங்கியதுதான் குழந்தைகள் மனதில் நாங்கள் பதிய காரணம். 

குக்கூவுக்கு என்று தலைமை, முதன்மை போன்ற பொறுப்பாளர்கள் இல்லை. ஒத்த கருத்தில் இணைபவர்கள், குழந்தைகளின் மகிழ்வுக்காக பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் எங்களோடு கரம் கோர்த்தனர். அப்படிதான் ஜவ்வாது மலை அடிவாரத்தில் புலியானூர் கிராமத்தின் ஐந்தரை ஏக்கர் தரிசு நிலத்தில் குக்கூ காட்டுப் பள்ளி உருவாகியது. இயற்கையை காயப்படுத்தாமல் பள்ளிக்கான கட்டடங்கள் அமைக்க முடிவு செய்தோம். இளம் ஆர்கிடெக்டுகளுடன் இணைந்தோம். இந்திய அளவில் உள்ள குழந்தைகள் பலரிடமும் இருந்து பெற்ற ஒரு பிடி மண்ணால் அஸ்திவாரத்தை எழுப்பினோம்.  

அந்த நிலத்தில் உள்ள மண்ணில் செங்கற்களை உருவாக்கி சுடாமல் வெயிலில் காய வைத்து கட்டடம் கட்டும் பணிகள் ஆரம்பித்தது. குழந்தைகள் தங்கிக் கொள்ள சிறு குடில் அமைப்புகள் உருவாக்கப்பட்டது. பழமையான கோயில்கள், சிதலம் அடைந்த கட்டடங்கள், உதவாத தூண்கள், சேர்கள், நிலைப்படிகள், சுரைக்காய், தூக்கணாங்குருவிக் கூடு, பறவையின் உதிர்ந்த சிறகு எல்லாம் இணைந்து அறைகளை அலங்கரித்தது. 


மீதமிருந்த வெற்று நிலத்தில் மரக்கன்றுகள் நடுவதும், கட்டடப் பணிகளும் நடந்தது. உபயோகமற்ற பொருட்களில் இருந்து விளையாட்டுப் பொருட்கள் உருவாக்குவது, பேப்பர் எப்படி உருவாகிறது, வட்டப்பாத்திகளில் காய்கறித் தோட்டம் போடுவது என பயிற்சி முகாம்கள் நடத்தினோம். வானம் பார்த்த பூமியில் பறவைகளோடும், நாய்க்குட்டிகளோடும் குழந்தைகள் விளையாடலாம். பூனைக்குட்டிகளை மடியில் அமர்த்தி நலம் விசாரிக்கலாம். ஓடையில் குளிக்கலாம். குளித்த ஈரத்தை வெயிலில் உலர்த்தலாம். ஓடிப்பிடித்து விளையாடலாம். இசைக்கலாம்... குழந்தைகள் தனக்கு பிடித்ததெல்லாம் செய்தபடியே வாழ்வைக் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பளித்தால் எந்த உயரத்தையும் தொட முடியும். மாற்றுத் திறன் குழந்தைகளோடு பெற்றோரும் இந்த பயிற்சி பட்டறைகளில் குழந்தைகளோடு குழந்தைகளாகின்றனர். இப்படியொரு வாய்ப்பை நம்  குழந்தைகளுக்கு வழங்கினோம்.

வழக்கமான அட்மிஷன், அட்டண்டன்ஸ் என எந்த அழுத்தமும் இங்கு உள்ள குழந்தைகளுக்கு இல்லை. இந்தப் பள்ளியை துவங்கி வைத்து குழந்தைகளிடம் ஒப்படைத்தார் அரவிந்த் குப்தா. குழந்தைகளுக்காக பல்வேறு தளங்களில் இயங்கி கொண்டிருக்கும் தன்னார்வலர்களே இங்கு வந்து பயிற்சியளிக்கிறார்கள். குழந்தைகளுக்கு இங்கு வாழ கற்றுக் கொடுக்கப்படுகிறது" என்று செவிகளில் மகிழ்ச்சியை இறைக்கிறார் அழகேஸ்வரி.

TNTET - 2017 Exam Tips for Tamil

டெட் வெற்றி - கட்டுரை - பிரதீப்  பட்டதாரி ஆசிரியர் வேலூர்

" பாட வாரியான வழிகாட்டல் தொகுப்பு"

இன்று _ தமிழ்:

30 மதிப்பெண்: 10 செய்யுள் + 10 உரநடை + 10 இலக்கணம்

எனவே மூன்று பிரிவுகளையும் சம விகிதத்தில் முக்கியத்துவம் கொடுத்து படிக்கவும்

செய்யுள் :

*பாடல்
*பாடலாசிரியர்
*பாடல் பாக்கள்
*பொருள்
*ஆசிரியர் குறிப்பு
*செய்யுள் குறிப்பு
*ஆசிரியர் பிற நூல்கள்
*செய்யுள் தொடர்புடைய நூல்கள்
*சிறப்பு பெயர்கள்
*ஊர்கள் / மாவட்டம் | நாடு
*பிறந்த வருடம்
*விருதுகள் / பரிசுகள்
*பாடலில் உள்ள கருத்துகள்
*மேற்கணக்கு, கீழ்கணக்கு
*சிற்றிலக்கியம்
*காப்பியம்
*சமய நூல்கள்
*ஆழ்வார், நாயன்மார்கள்

உரைநடை :
*பாட கருத்துகள்
*சிறப்பு பெயர்கள்
*புகழ் வாய்ந்த மனிதர்
*வருடங்கள்
*தமிழ் மொழி | நாடு சிறப்புகள்
*அறினர்கள் குறிப்புகள்
*மேற்கோள் வரிகள் - நூல்கள்
*அடைமொழி
*சிறப்பு பெயர் - வழங்கியவர்

இலக்கணம் :

* எழுத்திலக்கணம்
முதலெழுத்து + சார்பெழுத்து
வகைகள், விளக்கம், உதாரணம்

* சொல் இலக்கணம்
பதம்-பகுபதம், பகா பதம்
கிளவி - இரட்டை கிளவி
மொழி-தனி, பொது

* பொருள் இலக்கணம்
அகம், புறம்
வகை
பொருள்
நிலம், கரு பொருள், உரிபொருள்

* அணி இலக்கணம் :

அணியின் வகைகளை தொகுக்க
தற்குறிபேற்றம், உயர்வு நவிற்சி, உவமை, உருவகம் ... போன்றவை

* யாப்பிலக்கணம்
* அசை
* சீர்
* தளை
* அடி
* தொடை
* பா வகை

இவை தவிர்த்து,

மொழி திறன் பயிற்சி :

* பிற மொழி சொற்கள்
* மரபு பிழை
* மயங்கொலி பிழை
* ஒற்று மிகும் இடம்

பாட பகுதி :

வகுப்பு 3 முதல் 10 வரை
தெளிவான புரிதலோடு படித்தல்

தொடர் பாட பகுதி :

தொடர்பு உடைய ஆசிரியர், நூல் குறிப்புகள்

தொடர்புடைய இலக்கணமும் வகுப்பு 11, 12 வகுப்பில் படித்தல் முழு வெற்றி பெற்று தரும்

TRB : அடிப்படை தகவல் இல்லாத டி.ஆர்.பி., இணையதளம்

அடிப்படையான எந்த தகவலும் இல்லாமல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் செயல்படுவதால், பணி நியமன தகவல்கள் கிடைக்காமல், பட்டதாரிகளும், ஆசிரியர்களும், அவதிக்கு ஆளாகின்றனர். 
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்ய, டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்படுகிறது. பதினோரு அடுக்கு மாடி கட்டடத்தில், பயன்படுத்தப்படாத கிடங்கு போல, ஆள் அரவமற்ற நிலையில், இந்த அலுவலகம் செயல்படுகிறது. இங்கு செல்லும் பட்டதாரிகள், எந்த தகவல்களை கேட்டாலும், 'இணையதளத்தை பாருங்கள்; பத்திரிகைகளை பாருங்கள்' எனக்கூறி அனுப்பி விடுகின்றனர். இணையதளமோ, அடிப்படை தகவல்கள் ஏதுமின்றி, வெறும் அறிவிப்புகள் மட்டுமே, ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளன.

டி.ஆர்.பி., வரலாறு, செயல்பாடு, அதிகாரிகள், உறுப்பினர்கள் விபரம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் யாரை அணுக வேண்டும், அவர்களின் பெயர் மற்றும் முகவரி, 'டெட்' தேர்வை அறிமுகம் செய்த அரசாணை, 'டெட்' தேர்வின் முந்தைய அறிவிப்புகள், வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியல் போன்ற விபரங்கள் இல்லை. பொது அலுவலருக்கான தொடர்பு எண், செய்தி தொடர்பாளர் யார், அவரது தொலைபேசி எண்ணும் இல்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, ஒரு இணையதளத்தில், எந்தெந்த அடிப்படை தகவல்கள் இருக்க வேண்டுமோ, அவை அனைத்தும், இதில் இல்லை.விதிகளின் படி, இணையதளத்தையே பராமரிக்க தெரியாத, டி.ஆர்.பி., அதிகாரிகள், வருங்கால சந்ததிகளை உருவாக்கும், ஆசிரியர்களின் பணி நியமனத்தை எந்த அளவுக்கு தரமாக நடத்த முடியும் என, ஆசிரியர்களும், பெற்றோரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தமிழை மறந்த அவலம் : தமிழகத்தில், அரசாணை மற்றும் அறிவிப்புகளை, தமிழில் வெளியிடுவது கட்டாயமாகும். ஆனால், டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில், தமிழ் மொழி மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பல ஆயிரம் பேரை பணி நியமனம் செய்யும், டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தை பார்த்தாவது, டி.ஆர்.பி., கற்றுக்கொள்வது நல்லது.

விடைத்தாள் திருத்தும் பணி குளறுபடி தவிர்க்க கட்டுப்பாடு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி ஏற்படாமல் தவிர்க்க தேர்வுத்துறை புது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பத்தம் வகுப்பு தேர்வு மார்ச் 28 ல் முடிந்தது; இன்று பிளஸ் 2 தேர்வு முடிகிறது. 
இன்றே விடைத்தாள் திருத்தும் பணியும் துவங்குகிறது. கடந்த காலங்களில் பல குளறுபடிகள் அரங்கேறின.விடைக்குறிப்பின்படி வழங்கப்பட்ட அதிகபட்ச மதிப்பெண்ணை விட, விடைத்தாளில் கூடுதல் மதிபெண் கொடுத்தது, சில பக்கங்களை திருத்தாமலும், மதிப்பெண்ணை அதற்குரிய 'காலத்தில்' எழுதாமலும் விட்டது என பல தவறுகள் தெரியவந்தன. இதை சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்று ஊடகங்களில் வெளியிட்டனர். இதனால் தேர்வுத் துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டது.தற்போது, 'முதன்மைத் தேர்வர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விழிப்புடன் கவனிக்க வேண்டும்' என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஒரு முதன்மைத் தேர்வாளர் கட்டுப்பாட்டில், 10 உதவி தேர்வாளர்கள் மட்டுமே விடைத்தாள்களை திருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

NEET' தேர்வு எழுதுபவரா நீங்கள்? : 'தினமலர்' வழங்கும் மாதிரி வினா- - விடை

நீட்' - 'நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் டெஸ்ட்' என்பது, 2013ல் மத்திய அரசு அறிமுகம் செய்த, மருத்துவப் படிப்புக்கான, தகுதி மற்றும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு.

முக்கியத்துவம் :
நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு, 'நீட் யு.ஜி.,' - 2017 நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. சி.பி.எஸ்.இ., இந்த தேர்வை நடத்துகிறது. தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், இடம் ஒதுக்கப்படுகிறது. மாநிலங்களில் இருந்து, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.
வயது, கல்வி தகுதி : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், 17 முதல், 25 வயதிற்குள் இருத்தல் வேண்டும். பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை முதன்மையாக கொண்டு, குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண்களுடன், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான வேறு கல்வி தகுதி வேண்டும். மேலும், பிளஸ் 2 ஆங்கில பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள், 40 சதவீத மதிப்பெண்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள், 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருந்தால் போதும்.

தேர்வு முறை : நடப்பு, 2017ம் ஆண்டுக்கான நீட் தேர்வு, மே, 7ல் நாடு முழுவதும், ஒரே கட்டமாக நடக்கிறது. அடிப்படை அறிவியல் அறிவை பரிசோதிக்கும் வகையிலான, 180 கேள்விகள் இடம்பெறும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து, தலா, 45 கேள்விகள் என மொத்தம், 180 கேள்விகள் இடம் பெறும். காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை தேர்வு நடக்கும். ஒவ்வொரு கேள்விக்கும், நான்கு மதிப்பெண்கள் என, மொத்தம், 720 மதிப்பெண். தவறான ஒவ்வொரு விடைக்கும், தலா, ஒரு மதிப்பெண் வீதம் பிடித்தம் செய்யப்படும். இந்த ஆண்டு நீட் தேர்வு ஹிந்தி, ஆங்கிலம், அசாமி, தமிழ், வங்காளம், குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, ஒடிசா, கன்னடம் உட்பட, 10 மொழிகளில் நடக்கிறது. இந்த தேர்வுக்கான கேள்விகள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பின் மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., - என்.சி.ஆர்.டி., - சி.ஓ.பி.எஸ்.இ., தரத்திலான பாடத் திட்டங்களில் இருந்து கேட்கப்படும். தேர்வுக்கு கூடுதல் பயிற்சி பெறுவது, வாய்ப்புகளை பிரகாசமாக்கும்.
சேர்க்கை விபரம் : தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மருத்துவக் கல்லுாரியை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படும். அதாவது, 'ரேங்க்' பட்டியலில், மாணவர்களின் முன்னிலையை பொறுத்தே, கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.
தேர்வு மையங்கள் : நடப்பு, 2017ம் ஆண்டிற்கான நீட் தேர்வுக்கு, நாடு முழுவதும், 11 லட்சத்து, 35 ஆயிரத்து, 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது, 2016 உடன் ஒப்பிடும் போது, 41.2 சதவீதம் அதிகம்.

இந்தியா முழுவதும், 103 நகரங்களில் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, நாமக்கல், வேலுார் ஆகிய, எட்டு இடங்களில் தேர்வு நடக்கிறது. 'ஏப்., 15ல் ஹால் டிக்கெட் வெளியிடப்படும்; தேர்வு முடிவு ஜூன் 8ல் அறிவிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த முழுமையான விபரங்களை தெரிந்து கொள்வதற்கு http://cbseneet.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
மாணவர்கள் பயன்பெறும் வகையில், நீட் தேர்வுக்கு ஆலோசனை நிகழ்ச்சிகளை, 'தினமலர்' நாளிதழ் ஏற்கனவே நடத்தியது. நாளை முதல் மாதிரி வினா- விடை வெளியிடுகிறது.

அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறைக்கு அரசு புதிய திட்டம்

தமிழகத்தில், 2016, அக்., 20க்கு முன் உருவான அங்கீகாரமில்லா மனைகளை, ஆறு மாத காலத்திற்குள் வரன்முறை செய்யும், அரசின் புதிய திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரமில்லா மனைகள் விற்பனை பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையில் சில பகுதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் பின்னணியில், அங்கீகாரமில்லா மனைகளை வரன்முறை செய்யும் திட்டத்தை, தமிழக அரசு இறுதி செய்து உள்ளது. இதன்படி, பதிவு சட்டத்தில், 22 - ஏ பிரிவு திருத்தத்தை அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட, 2016 அக்., 20ஐ, தகுதி நாளாக கொண்டு, வரன்முறை திட்டம் செயல்படுத்தப்படும். இந்த தேதிக்கு முன் உருவான அங்கீகாரமில்லா மனைகள், தகுதி அடிப்படையில் வரன்முறை செய்யப்படும்.

 இது குறித்து, நகரமைப்புத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
●அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து, ஆறு மாதத்திற்குள் மனை உரிமையாளர்கள், ஆன்லைன் முறையில், விண்ணப்பிக்க வேண்டும்
●மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்களே வரன்முறை செய்யும் வகையில், விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன
●சென்னையில், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலரும், பிற பகுதிகளில் நகரமைப்புத்துறை இயக்குனரும், வரன்முறை பணிகளை மேற்பார்வையிடுவர்
●பரிசீலனை கட்டணம் மனைக்கு, 500 ரூபாய்; வரன்முறை கட்டணம் மாநகராட்சிகளில், ஒரு சதுர மீட்டருக்கு, 110 ரூபாய், நகராட்சிகளில், 65 ரூபாய், பேரூராட்சி, ஊராட்சிகளில், 40 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது
●வளர்ச்சி கட்டணம், மாநகராட்சிகளில் ஒரு சதுர மீட்டருக்கு, 700 ரூபாய், நகராட்சிகளில், 400 - 500 ரூபாய், பேரூராட்சி, ஊராட்சிகளில், 250 ரூபாய்.
● ஓ.எஸ்.ஆர்., எனப்படும், திறந்தவெளி இடம் ஒதுக்காத மனைகளுக்கான கட்டணம், மொத்த பரப்பளவில், 10 சதவீத அளவுக்கு, பதிவுத்துறையின் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், கட்டணம் செலுத்த வேண்டும்
● இதில், 2012 மார்ச், 31க்கு முன் பதிவு செய்யப்பட்ட மனைகளுக்கு, 2007 ஆக., 1ல் அமலுக்கு வந்த வழிகாட்டி மதிப்பும், அதற்கு பிந்தைய மனைகளுக்கு, தற்போது நடைமுறையில் இருக்கும் வழிகாட்டி மதிப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்
●விண்ணப்பங்களை ஆய்வு செய்வது, மனைகளின் தகுதியை கள ஆய்வு செய்வது என, வரன்முறை பணிக்கும், வழிகாட்டி விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அரசின் இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த விதிமுறைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

சான்றிதழ்களில் பாதுகாப்பு அம்சம் : ஆதார் எண் இணைக்க அறிவுரை

பல்கலைகள், கல்லுாரிகளின் பட்ட சான்றிதழ்களில், ஆதார் எண் உட்பட பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற வேண்டும்' என, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், போலி சான்றிழ்கள், போலி அரசாணைகள், போலி உத்தரவுகள் மூலம், வேலையில் சேர்வது அதிகரித்துள்ளது. அதேபோல், சான்றிதழ்களில் மதிப்பெண் உள்ளிட்ட விபரங்களும் திருத்தப்படுகின்றன. இதை தடுக்க, ஒவ்வொரு கல்வி நிறுவனமும், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன.
இந்நிலையில், அனைத்து கல்லுாரி, பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து அனுப்பிய சுற்றறிக்கை: தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேறும் நிலையில், சான்றிதழ்களில் பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்வது அவசியம்.

சான்றிதழ் குறித்த முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள வேண்டும். எனவே, மதிப்பெண் சான்றிதழ், பட்ட சான்றிதழ் போன்றவற்றில், வாட்டர் மார்க், தனி குறியீடு, ஆதார் எண், ஒருங்கிணைந்த சிறப்பு எண் போன்ற பல்வேறு வசதிகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி.. டூவீலர் விலையில் வரலாற்று வீழ்ச்சி.. இச்சலுகை 2 நாட்கள் மட்டுமே!

பாரத் ஸ்டேஜ் -4 (பி.எஸ்.4) விதிமுறைகளை பூர்த்தி செய்யாத வாகனங்களை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அந்த பைக்குகள் விலை கிடுகிடுவென குறைந்துள்ளது.

நாட்டில் புகை மாசுவை கட்டுப்படுத்த சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம், வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை வரையறுத்து விதிமுறைகள் வகுத்து வெளியிட்டு வருகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுத்து, பாரத் ஸ்டேஜ் (பி.எஸ்) 3 என்ற விதி முறை ஏற்கனவே அமலில் இருந்தது.
இதன் பிறகு, கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாகன இன்ஜின் தயாரிக்கும் வகையில் பி.எஸ்-4 விதிமுறை, 2010முதல் நாடு முழுவதும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் உற்பத்தியைதான் அந்த அறிவிப்பு குறிக்கிறது, ஏற்கனவே உற்பத்தி செய்த வாகனங்களை விற்பனை செய்யவோ, ரிஜிஸ்டர் செய்யவோ வலியுறுத்தவில்லை என கருதின மோட்டார் வாகன நிறுவனங்கள்.

வழக்கு
ஆனால், விற்பனைக்கும் தடை என்பதை தாமதமாக புரிந்து கொண்டன. எனவே, தங்களிடம் பிஎஸ் 3 விதிமுறைகளுடன் கூடிய 8 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாகவும் இத்தகைய வாகனங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

  அதிரடி உத்தரவு
இந்த மனுவுக்கு சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், 2005 மற்றும் 2010ல் இதேபோல முறையே பி.எஸ்.2 மற்றும் பி.எஸ்.3 என்ற புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஸ்டாக்கில் இருந்த பழைய வாகனங்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டது என கார் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இந்த வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல், 1ம் தேதி முதல் பி.எஸ்.3 வாகனங்களை பதிவு செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று அதிரடி உத்தரவை நேற்று பிறப்பித்தது.

வாகன நிறுவனங்களுக்கு நஷ்டம்
இதையடுத்து பெரும் நஷ்டத்தை நோக்கி வாகன உற்பத்தி நிறுவனங்கள் செல்ல தொடங்கியுள்ளன. 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வாகனங்களை இன்னும் 2 நாட்களில் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் அந்த நிறுவனங்களுக்கு. அதிலும் குறிப்பாக ஹீரோ நிறுவனம் மற்றும் ஹோண்டா நிறுவனம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே அவை தங்கள் டூவீலர் விலைகளை அதிரடியாக குறைத்துள்ளன.

  தள்ளுபடி
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பி.எஸ்.3 வகையில் தயாரான ஸ்கூட்டர்களுக்கு ரூ.12500 டிஸ்கவுண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது. பிரீமியம் வகை பைக்குகளுக்கு ரூ.7500 டிஸ்கவுண்டும், நுழைவு நிலையிலுள்ள மாஸ் மார்க்கெட் பைக்குகளுக்கு ரூ.5000 வரையும் டிஸ்கவுண்ட் தருவதாக அறிவித்துள்ளது.

  இரு நாட்கள்தான் கெடு
ஹோண்டா நிறுவனம் தனது ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை டிஸ்கவுண்ட் அளிப்பதாக அறிவதி்துள்ளது. மார்ச் 31 இரவுக்குள் முடிந்த அளவுக்கு பைக்குகளை விற்பனை செய்து தீர வேண்டிய கட்டாயத்தில் அந்த நிறுவனங்கள் உள்ளன.

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் இன்று 31/3/17 நண்பகல் 12 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது


Thursday, 30 March 2017

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் டாடா சார்பில் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்து இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது குறித்து கோரிக்கை மனு

30/03/2017தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் டாடா சார்பில் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்து இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது  குறித்து கோரிக்கை மனு  அளிக்கப்பட்டது.அப்போது மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஏழாவது ஊதிய குழு குறித்த ஆசிரியர்கள் சங்க கருத்து கேட்பு கூட்டம் அமைக்கப்படுவதாகவும், அப்போது அவசியம் நம் டாடா சங்கத்தையும்  அழைப்பதாகவும் உறுதியளித்தார்.

2.நிதித்துறை இணை செயலாளர் திரு தியாகராஜன் அவர்களிடம் இடைநிலை ஆசிரியர்களுக்கு  9300+4200 ஊதியக்கட்டில் வைக்க கோரி அளித்த இந்த கோரிக்கை மனுவினை முதலமைச்சர் தனிப்பிரிவிலும்  கொடுக்கப்பட்டுள்ளது.

இவண் .. ஆ.சபரிராஜ்,மாநில துணை தலைவர்,டாடா

PGTRB : 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு மூலம் நியமனம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. 
2,100 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 600 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் 3 முறை பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தகுதி தேர்வு இதையொட்டி 2,100 ஆசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் நியமிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வுவாரியம் தயாராக இருந்தது.

ஆனால் அதற்குள் ஆசிரியர் தகுதி தேர்வை விரைவில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துதேர்வு அறிவிப்பை நிறுத்தி வைத்து விட்டு, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து டி.பி.ஐ.வளாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- விரைவில் அறிவிப்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எழுத்து தேர்வுமூலம் நிரப்பப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறத்தேவை இல்லை.

தற்போது 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. அப்போது 1,000 பணியிடங்கள் கூடுதலாக உருவாகும். இதில் பதவி உயர்வு போக 500 பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நியமிக்கப்படும். இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!