Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 30 June 2017

கடந்த 24.06.2017 குறுவளமைய CRC பயிற்சியில் பங்கெடுக்காத ஆசிரியர்களுக்கு மீண்டும் பயிற்சி, CL,ML எவருக்கும் அனுமதிப்படமாட்டாது என வேலூர் முதன்மை கல்வி அலுவலர் ஆணை 

தமிழகத்தில் 7வது ஊதியக்குழு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு - அரசாணை வெளியீடு

G.O.Ms.No.189 Dt: June 27, 2017   OFFICIAL COMMITTEE – Constitution ofan Official Committee to examine the revision of Pay scales / Pension to the State Government employees and pensioners following the decisions of the Central Government on the recommendations of the Seventh Central Pay Commission extension to 30.9.2017 –Ordered.


மாற்றுத்திறனாளிகள் 50% மானியவிலையில் பெட்ரோல்/டீசல் பெறலாம்.


மாணவர்களுக்கு வேன் வசதி: ஆசிரியர்கள் அசத்தல்

திருக்கழுக்குன்றம் அருகே, முடையூர் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வேன் ஏற்பாடு செய்து, மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.

திருக்கழுக்குன்றம் அடுத்த, மாம்பாக்கம் ஊராட்சி, முடையூர் கிராமத்தில், அரசு உதவி பெறும், ஜார்ஜ் வேணுகோபால் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி, 1950ம் ஆண்டு தொடக்கப்பள்ளியாக ஏற்படுத்தப்பட்டு, 1954ல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

எண்ணிக்கை குறைவு 

இப்பள்ளியில் வழுவதுார், காட்டூர், கிளாப்பாக்கம், தத்தளூர், நரப்பாக்கம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்தனர். தற்போது அந்த கிராமங்களில், புதிய தொடக்கப்பள்ளிகள் வந்துள்ளதால், இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

வரவேற்பு

இப்பள்ளியின் மாணவர்களை தக்க வைக்கும் விதத்தில், தலைமையாசிரியர் தலைமையில், ஆசிரியர்கள் அனைவரும், வீடு வீடாக சென்று, பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி, துண்டு பிரசுரம் கொடுத்தனர்.ஒரு வழியாக, 45 மாணவர்கள் சேர்ந்தனர். அவர்களை தங்கள் பள்ளியில் தக்க வைக்க, பள்ளி வந்து செல்ல, வாகன வசதியை ஏற்படுத்த முடிவு செய்தனர்.

இதற்காக ஆசிரியர்கள் தங்கள் வருமானத்தில், 10 சதவீதத்தை ஒதுக்கி, மாருதி வேன் மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்; பாதுகாப்பாக திரும்ப வீடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.மாணவர்களை பள்ளியில் தக்க வைக்க, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் வரவேற்பு உள்ளது.பழைய விலைக்கு, மாருதி வேனை, விலை கொடுத்து வாங்கியுள்ள தலைமையாசிரியர், அதற்கான, டீசல் மற்றும் பராமரிப்பு செலவை, ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

தொகுப்பூதியத்தில் பரிதவிக்கும் SSA பணியாளர்கள் : திட்ட மானியமும் குறைக்கப்பட்டதால் பாதிப்பு

கடந்த 12 ஆண்டாக நிரந்தர பணியில்லாமல் 'சர்வ சிக் ஷா அபியான்' (எஸ்.எஸ்.ஏ.,)திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பரிதவிக்கின்றனர். அரசின் மானியமும் குறைக்கப்பட்டதால் குறைந்த ஊதியத்தில் சிரமப்படுகின்றனர்.

மாநிலத்தில் சர்வ சிக் ஷா அபியான்' திட்டத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சிகள், மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன. இதில் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர், கண்காணிப்பாளர் தவிர்த்து, வட்டார கணக்காளர், பள்ளி கணக்காளர், கணினி 'புரோகிராமர்', கணிணி பயிற்றுனர், கட்டட பொறியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் 1,500 பேர் பணிபுரிகின்றனர்.

இவர்கள் தங்களின் ஊதிய தொகையை, திட்டப் பணிகளுக்கான 100 சதவீத மானியத்தில் இருந்து பெற்று வந்தனர். ஆனால் சமீபகாலமாக திட்டத்திற்காக மத்திய அரசு, மாநில அரசு பங்களிப்பு தொகை மானியம் குறைத்து வழங்கப்படுவதால், இவர்களுக்கான ஊதியமும் சொற்பமாகவே கிடைக்கிறது. இதனால், அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தங்களை பணி அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அனைவருக்கும் கல்வி திட்ட தொகுப்பூதிய பணியாளர் கூட்டமைப்பு சார்பில் அரசு, பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

சங்கத்தின் மதுரை மண்டல நிர்வாகி ராஜா கூறியதாவது:மாநிலத்தில் 1,500 பேர் வேலைவாய்ப்பு பதிவு மூப்பை இழந்து நிரந்தரமின்றி பணிபுரிந்து வருகிறோம். ஏற்கனவே நடக்கும் திட்டப் 

பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. எனவே அரசு அனைவருக்கும் கல்வித்திட்ட பணியாளர்களை நிரந்தரமாக்க முன் வர வேண்டும்,' என்றார்.

மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் : விபரங்கள் நிரப்ப முடியாமல் திணறல்

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களில் கேட்கப்பட்ட விபரங்களை நிரப்ப, போதிய இடம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

'நீட்' தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. அரசு, சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்களுக்கு விண்ணப்பம் வினியோகம் நடக்கிறது. மதுரை உட்பட 22 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இந்த விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. 

சில பகுதிகளில் வழங்கப்பட்ட விண்ணப்பங்களில், ஓ.எம்.ஆர்., படிவம் மற்றும் எவ்வாறு நிரப்ப வேண்டும் என்ற விபரங்கள் கொண்ட புத்தகம் கடந்தாண்டுக்கு உரியவை.வயது தகுதியாக, 'டிச.,31, 2017ன்படி 17 வயது பூர்த்தியானவர் இதற்கு விண்ணப்பிக்கலாம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால், ஓ.எம்.ஆர்., ஷீட்டில் மாணவர் பிறந்த தேதியை குறிப்பிட கட்டங்களை கறுப்பு நிறத்தில் நிரப்பும்போதும் ஆண்டு குறிப்பிடும் இடத்தில், 2000 மற்றும் அதற்கு மேல் பிறந்தவர் ஆண்டை குறிப்பிட முடியவில்லை. 1999 வரை பிறந்தவர் மட்டுமே குறிப்பிடும் வகையில் கட்டங்கள் இடம் பெற்றுள்ளன. '2', '0' ஆகிய எண்களை குறிப்பிட வழி இல்லை.

அதேபோல், விண்ணப்பத்தில் 10 இலக்கம் கொண்ட பதிவு எண் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், படிவத்தில் 'ரெஜிஸ்டர்/ரோல் நம்பர்' என குறிப்பிட்டு எட்டு இலக்கம் எழுதுவதற்கு மட்டும் இடம் உள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:இந்த ஆண்டு மருத்துவ படிப்பு, மாணவர்களுக்கு கடும் சோதனையாக மாறிவிட்டது. 'நீட்' தேர்வு குறித்த தமிழக அரசு நிலைப்பாட்டால் கடைசி வரை குழப்பம் தான் ஏற்பட்டது. கணினி நடைமுறை மூலம் தான் விண்ணப்பம் ஏற்கப்படும்.

அப்போது ஓ.எம்.ஆர்., படிவத்தில் சிறு பிழை இருந்தாலும் கூட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இப்பிரச்னை குறித்து சுகாதாரத்துறை செயலர் கவனிக்க வேண்டும். சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீடுக்கான விண்ணப்பங்களும், தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!